Like me

Tuesday, January 3, 2012

கலக்கம் எதற்கு..????

 

சோதனைகள்... சாதனைகளின் தொடக்கம்.

வேதனைகள்... வெற்றியின் தொடக்கம்.


பூ உதிர்ந்தால் தான் காய் தோன்றும்.

இரவு வந்தால் தான் விடியல் வரும்.


முடிவு என்று எங்கும் இல்லை..

தெரிந்தும் மனிதா... கலக்கம் எதற்கு..????

பறக்கும்போதே................




பறக்கும்போதே உறங்குகின்ற அதிசயப் பறவைகள்.!!

 

 

                       அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய் (squid) மீன குறில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள இணையாக வாள்ணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை.
சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் Diomedeidae என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.
இவை கடல் பறவைகள். பூமியின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் பகுதிகளில்தான் ஆல்பட்ரோஸ்கள் வசிக்கின்றன. முட்டையைவிட்டு வெளிவந்து பறக்கத் தொடங்கிவிட்டால் பிறகு, இந்தக் கடற் பறவைகள் கரையில் இறங்குவதில்லை. கீழே இறங்காமல் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் தொடர்ந்து பறப்பதற்கு இவற்றால் முடியும். பறப்பதற்கிடையில்தான் இவை உண்கின்றன, உறங்குகின்றன.
இந்தப் பறவைகள் பெரிய இறக்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு பகுதி இறக்கை, ஏறத்தாழ மூன்று மீட்டர் நீளமுடையதாயிருக்கும். இந்த இறக்கைகளை இருபுறமும் விரித்தால், மணிக்கணக்காகவோ அல்லது நாட்கணக்காகவோ இவற்றால் ஆகாயத்தில் அப்படியே பறக்க முடியும். கடலில் உள்ள மீன்களும், சிறிய பிராணிகளும்தான் இவற்றின் உணவு. நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 640 கிலோ மீட்டர் தூரம் இவை பறப்பதுண்டு. மிக விரைவாகப் பறக்கும் திறமை உள்ள “ஸ்விப்ட்’ எனும் கடற் பறவையும் பறக்கும்போதுதான் உறங்கும்.

கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் ......




உலகசாதனை புத்தகம் உருவான கதை தெரியுமா


உலகசாதனை புத்தகம் உருவான கதை தெரியுமா?1ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார். எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை. அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார். தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.
உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.
இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம். சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.
இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும். கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அமைதி, சமாதானம், அன்பு

பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் அரிய சாதனைகள் செய்து உலக அளவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார்கள். அந்த வரிசையில் அம்பத்தூர் அன்னை வைலட் கலைக்கல்லூரியும், சேத்துப்பட்டு அரிமா சங்கமும் இணைந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் உலகிலேயே நீளமான பூ மாலை கோர்க்க முடிவு செய்தனர்.
இந்த சாதனை நிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. தொழில் அதிபர் என்.ஆர். தனபாலன், தலைமை தாங்கினார். மொத்தம் 2 டன் கேந்தி பூக்கள் கொண்டு வரப்பட்டது. 80 பேர் அதனை மாலையாக கோர்த்தனர்.

பின்னர் நேரு ஸ்டேடியத்தை சுற்றிலும் 6 சுற்றுகளாக பூ மாலையை வைத்திருந்தனர். காலை 9 மணிக்கு பூ மாலை கட்டும் பணி தொடங்கியது. 3 மணி நேரத்தில் கட்டி முடித்தனர். உலக அளவில் இதற்கு முன்பு அமெரிக்காவில் 3 கி.மீ. நீள பூ மாலை கட்டபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் மத தலைவர்கள் எஸ்ரா சற்குணம், மகாநமோ தியோரா, மாதாஜி யத்தீஸ்வரி, குமாரபிரியா, ஜியானி பிரதிபால்சிங், எஸ்.எம். இதயதுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி என்.ஆர். தனபாலன் கூறும்போது, உலகம் முழுவதும் குண்டுவெடிப்புகள், கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களால் ரத்த பூமி ஆகி கொண்டு இருக்கிறது. இதை தடுத்து அமைதி, சமாதானம், அன்பு ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார்.