Like me

Wednesday, March 14, 2012

உரிமை

         


வணக்கம் !புலம்பெயர் தேசத்து இணைய தள ஊடகவியாளருக்கு அன்பு மடல்!..


அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கும் எமக்கு இன்று மிக அதிகமாக மிஞ்சி இருப்பது இன வெறியர்களால் சிதைக்கப்பட்ட எமது உறவுகளின் நிர்வாண கோலங்கள் தான் என்பதை இன்று நெடுந்தீவு பிரதேசத்தில் ஒட்டுண்ணியால் மிகவும் கோரமாக படுகொலை செய்யப்பட சிறுமியின் உயிர் பறிப்பு முதல் அனைவரும் தெரிந்து கொண்ட விடையம்.
ஆனால் இன்று புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் சிலர் தம்மை “ஊடகவியலாளர்கள்” என்று கூறிக்கொண்டு “இணையங்களை” திறந்து வைத்துக்கொண்டு எமது தேசத்தின் விடுதலைக்காக இறுதிக் கணம் வரை களத்தில் நின்று போராடி மலரப்போகும் தமிழ் ஈழத்திற்காய் தம் உயிர்களை அர்ப்பணித்து, இரத்தத்தை உரமாக ஈழ மண்ணில் உறையவிட்டு வீரச்சாவடைந்த எம் உறவுகளின் வித்துடல்களின் புகைப்படங்களை வியாபாரப் பொருளாக கடைகளில் தொங்க விடப்படும் கவர்ச்சிப் பொருளாக இணையங்களில் விளம்பரம் செய்து அவர்களுக்கு புகழ்மாலை சூடியிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழ் ஊடக வியாபாரிகள் சிலர்.
போர்க்குற்ற படங்கள் என்று கூறிக் கொண்டு படங்களை வெளியிட்டுள்ள இவர்களிடம் ஒரு சில கேள்விகளைமட்டும் உரிமையுடன் கேட்க விரும்புகிறேன். அதற்கான பதிலை இந்த தேசப்பற்றுள்ள தேசிய ஊடகவியலாளர்கள் தருவார்களா??
*இனவெறியர்களால் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் படங்களை போர்க்குற்ற ஆதாரங்கள் என்று கூறி இணையங்களில் வெளியிட்ட இந்த இணைய ஊடகர்கள். அதே போர்க்குற்ற ஆதாரப் புகைப்படங்கள் தமது உடன்பிறந்த சகோதரிகளின் அல்லது தமது உறவினர்களின் படங்களாக இருப்பின் அவற்றை இவ்வாறு வெளியிட்டிருப்பார்களா?
*இறந்த உறவுகளின் உறவினர்கள் தம் உறவுகள் கொல்லப்பட்டதையும் விட இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தன்மையினைப் பார்த்து மிகவும் மனம் நொந்துபோய் உள்ளனர் என்பதை இந்த இணைய ஊடகர்கள், என்று கூறிக்கொள்பவர்கள் புரிந்துகொள்வார்களா?
*தமது இணையங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் ஊடாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களில் உணர்வுகளைத் தட்டி எழுப்பப் போகிறார்களாம் இது எவ்வளவுக்கு சாத்தியமானது?
*முள்ளிவாய்க்காலில் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமல் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புத் தேடி அலைந்து திரிந்த எமது மக்கள் மீது கொத்துக் குண்டுகளைப் போட்டு படுகொலை செய்தபோது வராத இனமான உணர்வுகள் இனி இந்த புலம்பெயர் தமிழர்களுக்கு வருமா? அப்படி வந்தாலும் இனி வரும் காலங்களில் எதனை சாதிக்கப் போகிறார்கள்? இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வையா?
*பல பத்தாயிரக் கணக்கில் ஜெனிவாவில் ஒன்றுகூடி நீதி கேட்ட மக்கள் தொகை இன்று நான்கு ஆயிரம், ஐந்து ஆயிரமாக மாறியுள்ளது இதுதான் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் விடுதலை உணர்வா? இவர்கள் தான் இந்த தியாகி திலீபன் அவர்களின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” இலச்சியக் கனவை நிறைவேற்றுபவர்கள்?
தமிழீழ விடுதலையை நேசிக்கும் ஒவ்வெரு தமிழரும் உண்மைகளைப் புரிந்து உண்மையாக செயற்பட வேண்டும் சுய விளம்பரத்திர்க்காகவும் சுயநல நோக்கத்திற்க்காகவும் செயற்படுவதை நிறுத்திவிட்டு இழந்த எமது உரிமைகளை மீட்பதற்காக அனைவரும் அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து எமது விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இதனை அனைவரும் புரிந்து செயர்ப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன்……
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.பார்த்தீபன்.

கைகோர்த்த திமுக மற்றும் அதிமுக.!..

                               
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க பாராளுமன்றத்தில் கைகோர்த்த திமுக மற்றும் அதிமுக.!..

இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியாவின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தியே ஆகவேண்டுமென்று, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பார்லிமென்டில் வலியுறுத்தின. போர்க்குற்றம் புரிந்த இலங்கையை, இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று இரு கட்சிகளின் எம்.பி.,க்களும் குரல் கொடுத்தனர். இதனால் கேள்வி நேரமும் ரத்தாகி, அடுத்தடுத்து ஒத்திவைப்புகளும் நடந்தன. நாள்பூராவும் ராஜ்யசபாவை ஒத்திவைக்க நேர்ந்தது.



இலங்கையில் நடந்த போரின்போது, தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், போர்முறை விதிமீறல்களில் இலங்கை ஈடுபட்டதாகவும், மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, ஐக்கியநாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. அமெரிக்கா தலைமையில், இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் குறித்து, நேற்று பார்லிமென்டிலும் பிரச்னை வெடித்தது. ராஜ்யசபாவில் கேள்விநேரத்தை எடுத்துக் கொள்ள சபைத் தலைவர் அன்சாரி முயன்றார். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தின் மீது, இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை அவையில் தெரிவித்தாக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர் தமிழக எம்.பி.,க்கள். கேள்விநேரம் முடிந்ததும் இதுபற்றிப் பேசலாம் என அன்சாரி கூறியதை, எம்.பி.,க்கள் ஏற்காததால், அமளியில் வேறு வழியின்றி கேள்வி நேரமே ரத்தானது.



தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா கூறியதாவது: இலங்கையில் நடந்த போரின்போது, தமிழ் மக்கள் மீது மிகப்பெரிய அளவில் போர்க்குற்றங்களில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதைக் கண்டித்து பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.,சபையில் தீர்மானம் கொண்டுவர உள்ளன. ஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். நியாயமாகப் பார்த்தால், இந்தியா கொண்டு வந்திருக்க வேண்டிய தீர்மானம் இது. ஆனால், மற்ற நாடுகள் கொண்டு வருகின்றன. இப்போதாவது இந்தியா இதை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் .



அ.தி.மு.க. எம்.பி., மைத்ரேயன் பேசும்போது,” போர்க் குற்றவாளி ராஜபக்ஷேயை தண்டிப்பதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கவும் அருமையான சந்தர்ப்பம். தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முன்வர வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் இப்போதே அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை இந்தியா கொண்டு வர வேண்டும்,’ என்றார்.



வெங்கையா நாயுடு (பா.ஜ.,) பேசும்போது, ” இலங்கையில் தமிழர்கள் பிரச்னை என்பது மிகவும் சர்வதேச அளவில் உணர்வுப்பூர்வமான, மிக முக்கிய பிரச்னை. இத்தீர்மான விஷயத்தில், மத்திய அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்,’ என்றார்.



காங்கிரசின் ஞானதேசிகன் பேசுகையில், ” எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தாலும், அது அங்குள்ள தமிழர்களை பாதிக்கும். மிகுந்த எச்சரிக்கையுடன் இவ்விஷயத்தில் அணுகுமுறை இருக்க வேண்டும் என்றார். இவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், எழுந்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல்,” ஐ.நா., சபையில் கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து, இன்னும் முழுவதுமாகத் தெரியவில்லை. இருப்பினும், வெளியுறவுத்துறை அமைச்சருடன் இது குறித்து உடனடியாகப் பேசுகிறேன். விரைவில் இது குறித்து விளக்கத்தை அரசு அளிக்கும்,’ என்றார். அமைச்சரின் இந்த பதில் எம்.பி.,க்களை திருப்திப்படுத்த வில்லை.



கூச்சல், அமளி: கூச்சல் அதிகமாகவே, வேறுவழியின்றி சபை ஒத்திவைக்கப்பட்டது. பின் கூடியபோதும் அதே சூழ்நிலை உருவானதாலும், உடனடியாக பிரதமர் விளக்கம் அளிக்க கோரிக்கை வைத்ததாலும், சபையை நடத்த முடியாமல் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

நாம் செய்யப்போவது என்ன?..

                           
வெளிவரப்போகும் ‘தண்டிக்கப்படாத குற்றங்கள்’ நாம் செய்யப்போவது என்ன?..

சனல்-4 தொலைக்காட்சி புதிதாக வெளியிடவுள்ள தண்டிக்கப்படாத குற்றங்கள் எனும் ஆவணம் தொடர்பாக பல குழப்பகரமான செய்திகள் தமிழ் மக்களிடையே பரப்பிவிடப்பட்டுள்ளது.

இன்று இரவு பிரித்தானிய நேரப்படி 10.55 மணிக்கு இந்த ஆவணப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள சனல்-4, இதனைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற திரையிடலில் காட்சிப்படுத்தியிருந்தாகவும் தெரியவருகின்றது.
2013ம் ஆண்டு சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானிய கிரிக்கெட் அணியினர் சிறீலங்காவிற்கு சென்றிருக்கும் நிலையில் இந்தக் காணொளி வெளியிடப்படுவதாகத் தெரிவித்துள்ள ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே (Callum Macrae) இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐ.நாவோ மேற்குலகமுமோ இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்கக் காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் சர்வதேச சமூகத்தினால் தோல்வி காணப்பட்டதும் மறக்கப்பட்டதுமான தமிழினப் படுகொலையை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இது எனவும் கூறியுள்ளார்.
இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் தலைப்பில் வெளியிடப்படவுள்ள இந்த ஆவணப்படத்தில் பெண் போராளிகள் மீதான பாலியல் வன்முறை, கைது செய்யப்பட்டவர்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்டுப் படுகொலை, பாதுகாப்புப் பிரதேசம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பொது மக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் 12 வயது சிறுவன் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்படும் நேரடிக் காட்சி என்பனவற்றுடன் கண்கண்டவர்களின் சாட்சியங்கள், காணொளித் தடவியல் நிபுணர்களின் ஆதாரம் மற்றும் புதிய காணொளிகள், நிழற்படங்கள் என்பன அடங்கியுள்ளதாக சனல்-4 தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதற்கு, சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராஜதந்திர தகுதி வழங்கப்பட்டுள்ள இரண்டு இராணுவத் தளபதிகள் (ஜெகத் டயஸ், சவேந்திர சில்வா எனக் கருதப்படுகின்றது) உட்பட உயர்மட்டத் தளபதிகளின் உத்தரவே காரணம் என்று இந்த ஆவணப்படம் குற்றம்சாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவம் மிகமிக ஒழுக்கமானது, நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது, என்றும் போரைத் தாமே வழிநடத்தியதாகவும் ஜனாதிபதி மகிந்தவும், பாதுகாப்புச் செயலாளரும் தொடர்ச்சியாக உரிமை கோரி வந்துள்ளனர். பாதுகாப்பு வலயங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில், சிறீலங்காவின் உயர்மட்டக் கட்டளையின் பேரிலேயே போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதற்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்துள்ளனர் எனவும் கல்லம் மக்ரே குற்றம்சாட்டியுள்ளார்.
இவ் ஆவணப்படம் தொடர்பாக கல்லம் மக்ரே மேலும் தகவல் வெளியிடுகையில், சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களும் போராளிகளும் சிறீலங்காப் படைத்தரப்பினரால் நீதிக்குப் புறம்பான வகையில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போர்த்தவிர்ப்பு வலயத்தில் படைத்தரப்பினரால் பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா.சபை அதிகாரிகளால் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்றையும் சனல் 4 தொலைக்காட்சி முன்வைக்கவுள்ளது. போரில் சிக்குப்பட்டிருந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட கடைசி உணவுத் தொகுதி வாகனத் தொடர் அணியுடன் ஐ.நா. சபையின் இரண்டு மனிதாபிமான பணியாளர்கள் சென்றிருந்தனர். இவர்கள் அரசாங்கத்தினால் போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட உடையார்கட்டில் அமைந்திருந்த பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனை அருகே சிக்கிக்கொண்ட போது எறிகணைத் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள மக்களின் உதவியுடன் பதுங்குகுழிகளை அமைக்கத் தொடங்கினர்.
ஐ.நா. மனிதாபிமான பணியாளர்களில் ஒருவரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பீற்றர் மைக்கே தன்னிடமிருந்த ஜி.பி.எஸ். கருவி மூலம் தனது இருப்பிடத்தை தெரிவிக்கும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தகவலை அனுப்பினார். இதனையடுத்து தொடர்ந்து பல நாட்களாக தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இப்பிரதேசத்தில் இடம்பெற்றன.
இந்த எறிகணைத் தாக்குதல்கள் ஐ.நாவின் மனிதாபிமான பணியாளர்கள் தங்கியிருந்த பதுங்குகுழிகளையும் தாக்கியிருந்தன. இதன்போது பலர் கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையாக காயமடைந்தனர். இச்சம்பவங்கள் எல்லாவற்றையும் ஐ.நாவில் மனிதாபிமான பணியாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை சிறீலங்காவின் அதிகாரபீடம் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அறிந்திருந்தது. இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் இலங்கையின் அதிகாரப் பீடத்திற்கு தொடர்பு உள்ளது என்பதற்கான முக்கியமான ஆதாரங்களாக இவை உள்ளன.
ஐ.நாவின் மனிதாபிமானப் பணியாளர்கள் தம்மிடம் இருந்த செய்மதித் தொலைபேசி மூலம் சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய தூதரகம் மற்றும் கொழும்பிலிருந்த ஐ.நா. அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு சிறீலங்காப் படைத்தரப்பினரிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இத்தகவல் அப்போதைய படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் படைத்துறை அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இத்தகவல் கிடைத்த சிறிது நேரத்தினுள் ஐ.நாவில் மனிதாபிமான பணியாளர்கள் மறைந்திருந்த பதுங்குகுழிக்குச் சற்றுத் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்தன. இவ்வாறு சிறீலங்கா அரசாங்கத்தினால் போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான பணியாளர்களில் ஒருவரான பீற்றர் மக்கே கூறுகையில், தாம் இருந்த இடத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும். அவர்கள் விரும்பியபோது இத்தகைய எறிகணைத் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம் என்பதை இவை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் அதிகாரம் பீடம் மீது மேற்கொள்ளக் கூடிய சட்ட நடவடிக்கைகளுக்கு இந்த ஆதாரங்கள் முக்கியமானதாக இருக்க வாய்ப்புள்ளது. போர்த்தவிர்ப்பு வலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதல்கள் குறித்து படைத்துறை அமைச்சர் மற்றும் படைத்தளபதி ஆகியோருக்கு நேரடியாகத் தெரிந்திருந்தது என்பதற்கு இது முக்கியமான ஆதாரமாகும்.
ஐ.நா. மனிதாபிமான பணியாளர்கள் பாதுகாப்புத்தேடி மறைந்திருந்த பதுங்குகுழியில் இருந்து சற்றுத் தொலைவில் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் படி உத்தரவிடப்பட்டதும் போர்த் தவிர்ப்பு வலயங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் பொதுமக்கள் அங்கு இலக்கு வைக்கப்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்களாக உள்ளன என Callum Macrae தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழீழ தேசியத் தலைவரின் தலைவர் 12 வயது மகன் பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பான வகையில் மார்பிலும் இடுப்பிலும் சுடப்பட்டு இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அவருக்கு அருகே 5 ஆண்களின் உடலங்கள் காணப்படுகின்றன. இவர்கள் பாலச்சந்திரனின் மெய்ப்பாதுகாவலர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவர்களை கட்டுவதற்காக பாவிக்கப்பட்ட உடைகளும் தரையில் காணப்படுகின்றன. இவர்களின் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான புதிய ஆதாரங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பில் அழுத்தங்களை அதிகரிக்கும்.
பாலச்சந்திரன் மற்றும் அவரின் மெய்ப்பாதுகாவலர்களின் உடலங்களை கொண்ட கிடைக்கப்பெற்ற தெளிவான ஆதாரங்களை தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்கள் கட்டப்பட்டிருந்த பாலச்சந்திரனின் மெய்ப்பாதுகாவலர்கள் பார்க்கும் வகையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக டெரிக் பௌண்டர் கூறியுள்ளார்.
எமக்கான விடுதலைக்காகப் போராடும் எம்மினத் தலைவர் மக்களோடு மக்களாகவே தனது பெற்றோரை விட்டிருந்தார். அதனைப்போலவே தனது பிள்ளையையும் விட்டிருக்கக்கூடும். மக்களிடமிருந்து தனது பிள்ளையைப் பிரித்துப்பார்க்காதத் தலைவரின் பிள்ளை கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி தமிழர்களுக்கு பேரதிர்ச்சியைத் தரக்கூடியதே.
ஆனால், சிறீலங்கா அரசு தனது கொடூரங்களை இவ்வளவிற்கு நடத்திவிட்டு, சர்வதேசத்திடம் மனிதாபிமானத்திற்கான போர் நடத்தியதாக முகம்காட்டி நிற்கின்றது. சில வல்லரசுகள் இதற்குத்துணை போயுள்ளன. போய்க்கொண்டும் இருக்கின்றன. இவர்களின் கொடூரங்களில் சில ஊடகங்களின் முயற்சியால் வெளிப்பட்டு நிற்கின்றன.
இவற்றைப் பார்த்துவிட்டு நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது ஒருமித்தகுரல் மட்டுமே சிறீலங்கா இனப்படுகொலை அரசின் முகத்தோற்றத்தைக் கிழிக்கும். எமக்கான விடுதலைக்காக விலை கொடுத்த மக்களின் உயிர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கவேண்டும்.
சர்வதேசம் பார்த்திருக்க மண்ணோடு மண்ணாக்கப்பட்ட மக்களுக்கு, இராணுவ வெறியாட்டத்தில் சித்திரைவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நாம் நியாயம்கேட்க மறுக்கலாமா? எமது எண்ணங்கள் செயல்கள் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை நாம் வெளிக்கொணர்வோம்.  

சிறிலங்காவின் பறக்கும் படை !

                

                                                  சிறிலங்காவின் பறக்கும் படை ! 



ஐ.நா மனித உரிமைச் சபை தொடர்பில் சிறிலங்காவைச் சூழ்ந்துள்ள அச்சமேகத்தை போக்கும் நோக்கில், சிறிலங்கா அரச தரப்பினர் தொடர் பறப்புக்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சிறிலங்காவின் வெளிவிவாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சவுதி அரேபியாவூடாக அரபு நாடுகளை வளைத்துப் போடும் முயற்ச்சியாக தற்போது சவுதி அரேபியாவில் முகாமிட்டுள்ளார்.

மறுபுறம் இன்று செவ்வாய்கிழமை , சிறிலங்காவில் இருந்து ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி மகிந்த சமரசிங்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவொன்று ஜெனீவாவுக்கு புறப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, இந்தியாவில் இருந்து ஜெனீவா புறப்பட்டுள்ளார்.

பிந்திய செய்தியொன்றில் சவுதியில் இருந்து சிறிலங்கா திரும்பியுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிசும் ஜெனீவாவுக்கு செல்கின்றார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில் 120க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரப்பு பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சரிபாதி பேர் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் என நம்பகமான ஜெனீவாச் செய்திகள் தெரிவிப்பதோடு இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தமிழர்களை கண்காணிப்பதும் அவர்களின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதுமாக உள்ளதென அறியமுகின்றது. 

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை சுற்றிவளைத்த எட்டு நாடுகள் !

                
                  
                         ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை சுற்றிவளைத்த எட்டு நாடுகள் ! 

ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், நோர்வே, கனடா , பெல்ஜியம், அவுஸ்றேலியா , பிரித்தானியா, அயர்லாந்து ஆகியன சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய இறுக்கமான நிலைப்பாட்டினை முன்வைத்தன.

இதேவேளை சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பும் சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

இந்த விவாதத்தில், சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வள அறிஞர் குழுவின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

மனித குலத்தின் தேசிய இனத்துவ, சமய மற்றும் மொழி ஆகியனவற்றின் உரிமைகள் குறித்தான ஐ.நா பிரகடனம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றிருந்தது.

அமர்வில் பங்கெடுத்திருந்த 40 நாடுகளில் European Union, Pakistan on behalf of the Organization of Islamic Cooperation, Austria, Italy, China, Russian Federation, Hungary, Kuwait, Malaysia, Costa Rica, Angola, United States, Iran, Azerbaijan, Nepal, Slovenia, Ethiopia, Honduras, Romania, Greece, Ecuador, Norway, Latvia, Sri Lanka, Morocco, India ஆகிய நாடுகள் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தன.

American Association of Jurists; France Libertés; International Youth and Student Movement for the United Nations; Society for Threatened People; Canadian HIV/AIDS Legal Network; Human Rights House Foundation; Ligue internationale contre le racisme et l’antiracisme et l’antisémitisme; Asian Legal Resource Centre; Nonviolent Radical Party, Transnational and Transparty; Helsinki Foundation for Human Rights; International Movement Against all Forms of Discrimination and Racism; Asian Indigenous and Tribal Peoples Network; Centrist Democratic International; Regional Centre for Human Rights and Gender Justice “Corporacion Humanas”; Reporters Without Borders International; Physicians for Human Rights; Democracy Coalition Project; Lawyer’s Rights Watch Canada; Islamic Human Rights Commission; International Commission of Jurists; Freedom House; Organisation pour la Communication en Afrique et de Promotion de la Cooperation Economique Internationale; Human Rights Watch; World Alliance for Citizen Participation; Organization for Defending Victims of Violence; Union of Arab Jurists; Jubilee Campaign; International Islamic Federation of Student Organizations; Rencontre Africaine pour la Defense des Droits de l’Homme; Iranian Elite Research Centre; and the United Nations Watch. ஆகிய தன்னார்வ, மனித உரிமைகளுக்கான அமைப்புகளும் பங்கெடுத்திருந்தன.

இலங்கை, இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான உரிமைகள் குறித்து விவாதம் இருந்தது.

இதில் சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்டுள்ள விடயங்களாக….இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வினை வலியுறுத்தி பேசிய கனடா, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படல் வேண்டும் என தெரிவித்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவானது, போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக்கூறத் தவறிவிட்டதோடு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினையும் கவனிக்க தவறிவிட்டது என கனடா குற்றஞ்சாட்டியது.

சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக, இலங்கைத்தீவில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணையின் அவசியத்தையும் கனடா மீண்டும் ஒருதடவை அமர்வில் இறுக்கமாக தெரிவித்தது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பிலான விவாதத்துக்கு ஆதரவு தனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்த பிரித்தானியா, சிறிலங்காவின் நல்லிணக் க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

காணமல் போதல், ஊடக சுதந்திரம் குறித்தும் தனது கவலையைத் தெரிவித்த பிரித்தானியா, மனித உரிமைகள் தொடர்பில் காத்திரமான செயற்பாடுகளுக்கு, சிறிலங்கா உடனடியாக பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

சிறிலங்கவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை வரவேற்றுக் கொள்கின்றோம் என தெரிவித்த அயர்லாந்து, ஐ.நாவுடன் இணைந்த கூட்டுச் செயற்பாட்டுடன் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா செயலாற்ற வேண்டுமென சுருக்கமாக முடித்துக் கொண்டது.

இலங்கைத்தீவில் நடந்தேறிய சர்வதேச சட்டமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ,சிறிலங்கா காலதாமதமின்றி பதிலளிக்க வேண்டும்என தெரிவித்த நோர்வே, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல்வேண்டும் என கேட்டுக் கொண்டது.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையினை தாம் ஆதரிக்கப் போவதாகவும் நோர்வே தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கருத்துரைத்த டென்மாக் பிரதிநிதி, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த, மனிதஉரிமைகள் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல், பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு பதிலளித்தல் அவசியம் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறே பிரான்ஸ், அவுஸ்றேலியா ஆகியனவும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை; நடைமுறைப்படுத்துவற்கான அவசியத்தை வலியுறுத்தி நின்றன.

தொடர்ந்து கருத்தினை வெளியிட்ட சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பு, சிறிலங்கா தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

வாhத்;தைகள் வேண்டாம் இங்கு செயல்தான் முக்கியம் என சிறிலங்காவுக்கு கடும் தொனியில் வெளிப்படுத்திய ICJ ,1977ம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசானது பல ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளது என குற்றஞ்சாட்டியது.

காலவிரயம், திட்டங்கள், வரைகள் யாவும் கடந்துவிட்ட நிலையில், சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு பொறிப்பிருக்கின்றது என தெரிவித்த ICJ , சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்று, சிறிலங்கா தொடர்பில் அவசியம் என வலியுறுத்தியது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், சர்வதச சட்டங்கள் ஆகியனவற்றுக்கு புறம்பாக, சிறிலங்காவில் இடம்பெற்று வரும்
சட்டத்தக்கு புறம்பான கொலைகள் , அச்சுறுத்தல்கள் ,பிற குற்றங்கள் குறித்து தனது கடுமையான கண்டனத்தை ICJ தெரிவித்தது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது, கடந்த மூன்றாண்டுகளில் பொறுப்புகூறலில் இருந் தவறிவிட்டது என குற்றஞ்சாட்டிய ICJ , சிறிலங்கா தொடர்பிலான பிரேரணைக்கு நாடுகளின் ஆதரவின் அவசியத்தை வலியுறுத்தியது.

மேலும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையானது, சிறிலங்கா தொடர்பில் முதல்படியெனவும் ICJ தெரிவித்தது.

இவ்வாறு, பன்முனைகளிலும் இருந்து ஏவப்பட்ட கருத்துக்களுக்கு பதிலுரைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டிருந்தது.

சிறிலங்காவின் உள்நாட்டு விவாரங்களில் வெளியாரின் தலையீடு அவசியம் இல்லை என தெரிவித்த சிறிலங்கா, உள்நாட்டு விவகாரத்தை, உள்நாட்டிலேயே தாங்கள் தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்தது. 

தாய்

                             


                                   பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

                                  இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா.... 

மரணித்த 36 மணி நேரத்தில்

                            
                 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்

ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....


60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..


3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...


4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...


5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...


6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..


2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...



இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக...... மனிதனுக்கு

ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,

கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...??


அறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா......????
 
 

படிப்பிணை தரும் தகவல்

                      
                   பேருந்தில் தொங்கி கொண்டு செல்வது தான் வீரம் என்றால் இன்று ஆயுதம் ஏந்தி எல்லை ஓரத்தில் எந்த வீரனும் நிக்க மாடன்.. ஓடும் பேருந்தில் தான் தொங்கி கொண்டு இருப்பான். அசட்டு தனத்தை சாகசம் என்று எண்ணாமல் புத்திவுடன் செயல் படுவீர் மாணவ மணிகளே !

யார் இந்த சோழர்கள்?



                    


                                   யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?

சோழர் காலம்

தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.


சான்றுகள்

கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.


கல்வெட்டுகள்

சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.

மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.

அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.


நினைவுச் சின்னங்கள்:

சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.


நாணயங்கள்:

சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.


இலக்கியம்:

சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.


அயல்நாட்டு சான்றுகள்:

சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.


பிற்கால சோழ அரச குலம்:

பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வல மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.


முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன் இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.


இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.


முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014

இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர் சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று

மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’ நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசான ராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.


முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:

முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.


இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.



முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:

சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.


சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது
 

என்ன சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

                                                       
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.       

உடனடியாக ஏதேனும் செய்தாகவேண்டும்.

                        
ஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு!

திருவையாறின் ஐயாறப்பர் கோவிலின் சுவரோவியங்கள், உட்கருவறையை ஒட்டியுள்ள குறுகலான இரண்டாம் திருச்சுற்றின் சுவரில் காணப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் இரண்டு அடுக்குகளாக வரையப்பட்டுள்ளன. அவை 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால ஓவியங்கள். இருநூறு அடி தொடராக அமைந்த இந்த ஓவியங்கள் தலவரலாற்றினை விவரிப்பவை.

நம்முடைய வரலாறு அதிகமும் பதிவு செய்யப்பட்டது இது போன்றஓவியங்களிலும் புடைப்புச் சிற்பங்களிலுமே. ஏற்கனவே பட்டீஸ்வரத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன் வரை இருந்த ஓவியங்களை இன்று அதன் கும்பாபிஷேகத்திற்காக நடந்த புதுப்பித்தலில் இழந்துவிட்டோம்.

திருவையாற்றில் 1970-ல் ஆலயப்புதுப்பிப்பு என்ற பெயரில் நிறைய ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது எஞ்சியவற்றையும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இங்கு உள்ள கோவில்களில் புதுப்பித்தல் என்பது இந்த ஓவியங்களின் மீது கண் கூசும் வண்ணங்களைக் கொண்டு சாதாரண சுவரோவியர்கள் சம்பந்தமில்லா புதிய வடிவங்களைத் தீட்டிவிடுவதாகவே நடைபெறுகின்றது.

இவற்றை அழிப்பதால் நாம் இழப்பது சில ஓவியங்களை மட்டுமில்லை, நம்முடைய அழிவற்ற மரபையும் அதன் கலைச்செல்வங்களையும்தான். அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.

உடனடியாக ஏதேனும் செய்தாகவேண்டும். ஒரு கூட்டு மனு அனுப்பலாம். நீதிமன்றத்தடைகூடப் பெறலாம். இந்த ஆலயம் தருமபுரம் ஆதீனம் கட்டுபாட்டில் உள்ளது. சாதாரணக் கோரிக்கைகள் அவர்களைச் சென்று அடையாது.
                 

This is a true story


This is a true story, dates back to the British rule in India.

The Pamban Bridge is situated in Tamil Nadu, India. At the entrance of the bridge you can see a picture of a weeping man holding some human body parts close to his chest.

This bridge was built during the British rule in India and it was constructed in such a way that the center portion of the bridge could be lifted with the help of huge wheels, so that ships could easily pass under the bridge. On the bridge, roads and rail tracks are laid for trains and other vehicles to pass...

A middle aged man was appointed to roll the wheels up and down when ships arrive. Once he saw a train slowly approaching, while he was pulling back the bridge after a ship quietly passed beneath. He had to pull back quickly or else there would be a fatal accident and thousands would have died.

At that time his 9 year old son came with lunch. When he saw his father struggling with the wheels, he kept the lunch box down and started helping him to roll the wheels to put the bridge back. Suddenly his son's finger got caught inside the wheel and he started crying out. At this time if the father tries to save his son, the bridge could not be put back on time. He had no other option but to ignore his son's cry. With all his strength he kept on rolling the wheels to down the bridge. As the wheels rolled on, his son slowly started slipping away into the huge machine.

Tears rolled down his father's cheeks, but he ignored his son's cry. If he tried to save him, the train will surely fall into the sea and thousands of people will die. Slowly the boy's whole body fell into the machine and his father could hear his bones breaking one by one, until with a loud sound, his head cracked.

The train with thousands of passengers slowly rolled on the rails, without knowing what had happened there.

Though this man performed his duty honestly he lost his only loving son. With extreme lamentation, he pulled out his son's body parts from the machine and held it close to his chest and cried bitterly.

British Government honored him greatly and in memory of this incident they placed the picture at the entrance of the bridge...

There are selfless people still, only thing is we need to identify them.

கடலில் மூழ்கிய நகரம்

          
   
                                       கடலுக்கடியில் பூம்புகார்...



        பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக...் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.


            பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.



     வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”



                 இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?



        உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.



                தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?



              அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.



         இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்



2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு



3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு



4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்



5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )



1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.



2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.



3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.



4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.



5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.



             தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.



                         ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? # பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.



                  இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?



                  # இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?


                    # புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்                 

Tuesday, March 6, 2012

ஏன் இப்படி

                                         

ஏன் இப்படி அப்பாவி விவசாயிகளை கடுப்பேத்துரிங்க டாக்டர் மன்மோகன் சிங் ஜி ..!

மறுபடியும், பணக்கார ஜவுளி முதலாளிகளுக்கு பல்லாக்கும்... ஏழை விவசாயிகளுக்கு பாடையும் கட்டத் தயாராகிவிட்டது மத்திய அரசு. ஆம், வழக்கம்போல பருத்தி ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவு போட்டுள்ளது மத்திய அரசு.
இந்த ஆண்டு இந்தியாவில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்கிறது. இந்தியாவின் ஜவுளி உற்பத்திக்கு தேவையானதைவிடவும் கூடுதலாகவே விளைந்துள்ளது. இந்த நிலையிலும், அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவிக்க வேண்டும் என்கிற ஆசையோடு, மத்திய அரசை நிர்ப்பந்தித்து, பருத்தி ஏற்றுமதிக்கு தடை செய்ய வைத்துவிட்டனர் ஜவுளி ஆலை முதலாளிகள்!

'கடந்த ஆண்டும் இப்படி தடை விதித்ததால் பருத்தி விவசாயிகள் பாடு திண்டாட்டமாகிப் போனது. ஏகப்பட்ட நஷ்டம் அடைந்தனர் விவசாயிகள். மறுபடியும் தடை விதித்து அவர்களுடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறது மத்திய அரசு. பணக்கார முதலாளிகள் வாழ்க்கையை வளமாக்க, ஏழை விவசாயிகளை வதைப்பது அநியாயம். இப்படியொரு முடிவை எடுக்கும் முன்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்Õ என்றெல்லாம் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் சீறித் தள்ளியிருக்கிறார் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.

இப்படி விவசாயிகளுடைய வயிற்றில் அடிக்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்குக்குத்தான் சமீபத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளனர்.

'இந்தியா விவசாயிகளை சீக்கிரம் ஒழித்துக் கட்டிவிட்டு, மொத்த விவசாயத்தையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும். அதுதான் நமக்கு சரிப்பட்டு வரும்' என்று நீண்டகாலமாகவே காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்த நாட்டின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு சரியாக நிறைவேற்றுவதற்காகத்தான் டாக்டர் பட்டம் கொடுத்திருப்பார்களோ?
-ஜூனியர் கோவணாண்டி
Courtesy: Pasumai Vikatan