Like me

Saturday, March 24, 2012

தடையில்லா மின்சாரம்!

                           

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!


அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?
பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.  

கூடங்குளம்

            

           


                

               


இலங்கைக்கு எதிராக மெரினாவில் ஒன்றுகூடல்

         March 18
                        மெரினாவில் ஐ நா சபையை இலங்கையின் மேல் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கைக்கு ஆதரவு தரும் இந்தியாவை கண்டித்தும் மாபெரும் ஒன்று கூடல் எழுச்சியுடன் நடைபெற்றது.

   



   

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

உங்கள சொல்லி தப்பு இல்ல ...

   
வெள்ளைக்காரன் கூட நமக்கு குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர் ..... ஆனா நம்ம ஊருல நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் அவர்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து கொண்டு "கட் ஆவுட்","பால் அபிஷேகம்" என்று என் தமிழ் இளைஞர்களை சீரழித்து கொண்டிருகின்றது .... எவனாச்சும் இந்த சிங்கள அட்டூழியத்தை கண்டித்து ஒரு பதில் பேசிருப்பனுங்க??? 
இந்த சேனல் - 4 காணொளி பாத்தேன் ரொம்ப கஷ்டமா இருந்திச்சி அப்படின்னுஎவனாச்சும் சொன்னனா ??
ஹம் ஹம் இல்லவே இல்லை

நம்ம விசய்(விஜய்) அவர்களோட ஒரு பரம விசிறி ஒரு காரியத்தை பன்னிருக்காறு... அடேங்கப்பா .... இவன் என்னைகாசும் தன்னோட அப்பன் பெற பெருமையா "நான் இன்னரோட மகன்னு" சொல்லிருப்பானா ??

எல்லா நடிகனும் இதே "குட்டையில ஊறின மட்டைங்க தான்"
உங்கள சொல்லி தப்பு இல்ல ... உங்களையும் சோறு போட்டு வளக்குறாங்க பாரு அவங்கள சொல்லணும்... 

கூடங்குளம் - எதிர்பார்ப்பும் கையில் கிடைக்க போவதும்

                                  
சரியாக படவில்லை!
உள்நாட்டு போரா இங்கு??
இல்லை ... முள்ளி வாய்கால் முன்னோட்டமா?? 
யார் உங்களை ஆயுதம் தாங்கி
இங்கு எதிர்த்தார்கள்?? 

கூடன் குளத்தை ,தமிழக பத்து மாவட்ட
போலீஸ் படை, தரை படை , கடற்படை
சூழ்வதும் , மாநில அரசின் உரிமையை காவு கொடுத்து
வேடிக்கை பார்க்கும்
திராணியும் சரியாக படவில்லை...

எதிர்பார்க்கும் மின்சாரமும் கையில் கிடைக்க போவதும் : TN Expected Electricity Vrs Actual 


கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2000MW .
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் = 1200 MW.
( கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது என்பதனை கவனத்தில் கொள்க)
(A) HOWEVER ASSUMING KK ACHEIVES 60% PRODUCTION TARGET= 1200 MW

இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் : 150 MW தேவை
(b) LESS : 150 MW

தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50%(என்று ஊடகங்கள் சொல்வது ) 525 MW (ஆனால் நடைமுறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே தரபடுகிறது )
(c ) LESS HOWEVER ASSUMING 50% = 525 MW

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 24% இழப்பிற்கு 126 MW
(d) LESS 126 MW

தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் = 399 MW.
(A) - (b)- (c) -(d) = 399 MW.


இதுவே கல்பாக்கம் போலவே கூடன்குளமும் 40% உற்பத்தி மட்டுமே செய்தால் மாநிலத்துக்கு 30% மட்டுமே கிடத்தால் வெறும் 83 MW தான்!!

அணு உலை அமைக்கும் 13000 crores INR. & Running cost 5000 Crores INR செலவில் அதிகபட்சம் கிடக்கப்போகும் 399 MW , அல்லது குறைந்த பட்சம் கிடக்கப்போகும் 83 MW காட்டிலும் வேறு என்னதான் செய்யலாம்* ? :

1)மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு=500mw +++ .இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2)மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 27% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=1575 mw.
3)உயிர்ம எரிபொருள்= 900 மெகாவாட்.உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .
4)வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்=5,000 மெகாவாட்.(தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.)

ங்கு ஒரு விஷயம் கவனத்தில் கொள்க நான் அணு உலையின் பாதுகாப்பு ** என்னும் விஷயத்திற்கு போகவே இல்லை !!

மண்ணில் முழங்கால் இட்டு 25,000
மக்கள் வாழ்வாதாரம் என்னும் ரொட்டிக்கு
இறைஞ்சுகிறார்கள் .., நீங்கள்
அதிகார அணிவகுப்பு காட்டி
அம்மக்களுக்கு உரிமையான அமைதியான போராட்டத்தையும்
பறிப்பதும், தன்னலம் மறந்து தன் நிலம்
காக்க எண்ணிய 25000
கோழிக்குஞ்சுகளை தின்று ஏப்பம் விட மாநில ,மத்திய
அனகோண்ட ராட்சச பாம்புகள் என
வரிசையாய் , வாய் பிளந்து ...சரியாக படவில்லை...

பொருளாதார ரீதியாக இது ஒரு குப்பை திட்டம் என்று சொல்லவே இந்த கட்டுரை . வெறுமனே Max 399 MW ~ MIN 83 MW தர போகும் , திட்டத்துக்கு 20000 Crores INR செலவழித்தும், பின் அதனை தூக்கி நிறுத்துவதற்கு முப்படை அணிவகுப்பு செலவுக்கும் , நாளை நமக்குதான் வரியாக போடுவார்கள் !

இந்திய, தமிழக அரசுக்கு வரி கட்டாமல் , அன்டர்டிகாவில் இருந்து சந்தோசமாய் காட்டு கத்து கத்தலாம் . உண்மை என்னமோ இங்கு வரி தொடர்ந்து கட்டும் கூறு கெட்ட கோமாளிகள் நாம் தானே ....

P.N :
1)*Alternative Energy Sources taken from TNEB Research articles
2)India 's Median Capacity Factor (%) of Nuke energy according to Governmental of India reply in parliament @ 2008 is 40% only. 
3) ** Author is Not Nuclear Scientist but Distinction holder in Quantitative methods in Business Application @ MBA 

இலங்கை கடற்படை வெறியாட்டம்

                        
இலங்கை கடற்படை வெறியாட்டம்- தாக்குதலில் 16 தமிழக மீனவர்கள் காயம்....

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 16 ராமேஸ்வரம் மீனவர்கள் காயமடைந்தனர். நடுக் கடலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சர்வதேச கடல் எல்லைக்கு அருகே, பாக் ஜலசந்தியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்களப் படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.

மரக் கட்டைகள், கற்கள், பாட்டில்களைக் கொண்டு சிங்களப் படையினர் இந்த இனவெறித் தாக்குதலை தொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் 25 வயது மீனவர் ஒருவரின் கால் முறிந்தது. மொத்தம் 16 பேர் படுகாயமடைந்தனர்.

கால் முறிவு ஏற்பட்டுள்ள மீனவர் மதியழகனை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மதியழகன் தாக்குதல் குறித்துக் கூறுகையில், இலங்கை கடற்படையினர் மிகக் கொடூரமாக தாக்கினர். எங்களது மீனவர்கள் 25 படகுகளில் இருந்தோம். எங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் பல படகுகள் சேதமடைந்தன. மீன்பிடி வலைகளையும் அறுத்தெறிந்தனர் என்றார்.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று தமிழக மீன்வளத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து வெறித்தனமாக தாக்கப்பட்டு வருவது குறித்து மத்திய அரசு கண்டு கொள்ளாமலேயே இருந்து வருவது தங்களை அதிக வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக மீனவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

மீனவர்கள் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், கேரள கடல் பகுதியில், இத்தாலியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவுடன் மத்திய அரசு பதறியடித்து செயல்பட்டது. இத்தாலி கப்பலை பிடித்தனர், 2 பாதுகாவலர்களையும் பிடித்தனர். அதேபோல சிங்கப்பூர் கப்பல் ஒன்று கேரள மீனவர்களின் படகை இடித்து விட்டுச் சென்ற சம்பவத்திலும் கேரளத் தரப்புக்கு மத்திய அரசு பெரும் உதவி புரிந்தது. இவ்வளவு துரிதமாக இதுவரை மத்திய அரசு மீனவர்கள் விஷயத்தில் செயல்பட்டதே இல்லை. ஆனால் இதுவரை இலங்கை கடற்படைக் காடையர்களால் 300க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை ஒரு உருப்படியான, துரிதமான நடவடிக்கை எதையும் இந்தியா எடுக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றனர்.
மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது...? 

மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன' - அம்னஸ்டி...

                                      
போர் முடிந்த பின்னரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன' - அம்னஸ்டி...
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அங்கு இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அம்னஸ்டி இண்டர் நாஷனல் அமைப்பு இன்று வெளியிடும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றி ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் மீண்டும் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெனிவாவில் அம்னஸ்டி இண்டர் நாஷனலின் இந்த அறிக்கை வெளியாகிறது.
போர் குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவதற்காக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருக்கிறது. 

கூடங்குளம் அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன் ?



                                     

கூடங்குளம் அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன் ?

இப்போதுதான் எதிர்க்கிறோம் என்பது தவறு. நானே 25 வருடங்களாக அணு உலைகளுக்கு எதிராக எழுதிவருகிறேன். எண்பதுகளிலிருந்தே கல்பாக்கத்தில் மருத்துவர் புகழேந்தியும் கோவையில் மருத்துவர் ரமேஷும் கள ஆய்வுகள் அடிப்படையில் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். பிரதமராக இருந்த இந்திரா காந்தி சோவியத் ரஷ்ய உதவியுடன் இந்த திட்டத்தை கேரளாவில் தொடங்குவதாக முதலில் சொன்னார். அங்கே கடும் எதிர்ப்பு வந்ததும் அது தமிழ்நாட்டின் மீது சுமத்தப்பட்டது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.


1984ல் இந்திரா கொல்லப்பட்டார். அதுவே தெரியாத நிலையில் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆட்சியை அதிகாரிகள்தான் நடத்திவந்தார்கள். கூடங்குளத்தில் அணு உலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து அங்கேயும் சென்னையிலும் வெவ்வேறு அமைப்புகள் குரலெழுப்பின. அணு எதிர்ப்பு இயக்கத்தில் சென்னையில் நான்,   நாகார்ச்சுனன், ரவி ஸ்ரீனிவாஸ், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆகியோர் ஓர் அமைப்பாக கருத்து பரப்பும் எழுத்து, பேச்சு பணிகளில் செயல்பட்டோம். ‘உங்களால் கரப்பான் பூச்சியாக முடியுமா?’ என்ற தலைப்பில் ஒரு பிரசாரப் படத்தை தயாரித்து வெளியிட்டோம். ஜூனியர் விகடன் இதழில் அணு சக்தியின் ஆபத்து பற்றி தொடர் வெளியிட ஆசிரியர் பாலசுப்ரமணியனுடன் மூன்று மணி நேரம் பேசி சம்மதம் பெற்றேன். எனக்கு அப்போது கடும் வேலை பளு இருந்ததால் என்னால் எழுத முடியவில்லை. பன்னீர்செல்வன் எழுதினார். மருத்துவர் செ.ந.தெய்வநாயகம் வீட்டில் இடதுசாரிகள், தமிழ் தேசிய இயக்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் கூடிப் பேசி வந்தோம். அவரவர் வழியில் பிரசாரத்தையும் களப் பணிகளையும் முன்னெடுத்துச் சென்றோம். தினமணி ஆசிரியராக அப்போது இருந்த ஐராவதம் மகாதேவன் அணு உலை வேண்டாம் என்று தலையங்கம் எழுதினார். சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பருகே பெரும் பலூன் கொத்துகளைப் பறக்கவிட்டும் பஸ் நிறுத்தங்களில் மனித சுவரொட்டிகளாக நின்றும் பிரசாரம் செய்தோம்.

தென் மாவட்டங்களில் தொண்டு நிறுவனம் நடத்திவந்த ஆண்டன் கோமஸ், ஒய் டேவிட் ஆகியோர் மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார்கள். செப்டம்பர் 22, 1987 அன்று இடிந்தகரையில் நடந்த மாபெரும் பேரணியில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மத்தியில் நானும் பேசினேன். இந்தியா முழுவதும் மீனவர்கள் மத்தியில் பணியாற்றி வந்த கேரளப் பாதிரியார் தாமஸ் கொச்சேரி ஏற்பாட்டில் கன்யாகுமரியில் பேரணி நடந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடந்தது.

1987-88 சமயத்தில் நான் தேசிய முன்னணிக்கு ஆதரவு நிலை எடுத்து முரசொலியில் ஞாயிறு மலரைத் தயாரிக்கும் வேலை செய்துவந்தேன். அப்போது தினசரி சந்திக்கும் முரசொலி மாறனிடம் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் எடுத்துச் சொன்னோம்.

அதையடுத்து அவர் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போடவைத்தார். அடுத்த சில மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. டெல்லி நிர்ப்பந்தம் காரணம் என்று மாறன் என்னிடம் சொன்னார். 1990ல் சோவியத் யூனியன் சிதறியது. திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பத்தாண்டுகள் கழித்துதான் திட்டம் மறு உயிர் பெற்றது.

இப்போதும் மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து நடந்தன. 2011ல் உலை கட்டுமானம் முடிந்து சோதனை ஓட்ட ஏற்பாடுகள் நடந்த சமயத்தில்தான் புகோஷிமா விபத்து நிகழ்ந்தது. 1987ல் இல்லாத அளவுக்கு இப்போது டி.வி பெட்டிகள் பெருமளவில் ஓட்டு அரசியலால் பெருகிய சூழலில், அணு உலை விபத்தின் முழு கோரத்தையும் தென் தமிழக மக்கள் அதில் பார்த்து உணர முடிந்தது. கூடங்குளம் நிர்வாகம், ஆபத்து ஏற்பட்டால் எப்படி சுற்றியுள்ள கிராமங்களை காலி செய்யவேண்டும் என்று ஒத்திகை நடத்த முறபட்டதும், இங்கேயும் புகோஷிமா போல நிகழக்கூடிய ஆபத்து உண்டு என்பது முழுமையாக மக்களுக்கு உறைத்தது. படித்து முனைவர் பட்டம் பெற்றவரான சுப.உதயகுமாரன் போன்ற பலரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து மக்கள் போராடிவருகிறார்கள்.
அன்புடன்

ஞாநி

கூடங்குளம்

                               

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. நில

நடுக்கத்தாலோ சுனாமியாலோ பாதிப்படையாது என்றும்
சரியான இடத்தை முறையான ஆய்வுக்குப் பின்னர்தான்
தேர்வு செய்ததாகவும் அப்துல் கலாம் முதல் அரசு
உயர்மட்டக் குழு வரை சொல்லுகிறார்களே ?

ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று
சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று
சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். “இந்தியாவில்
சுநாமிகள் வருவதில்லை.எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு
எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” என்று நவம்பர் 1986ல் கன நீர்
அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி
நிர்வாகம் சொல்லிற்று. ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கும்
கூடங்குளத்துக்கும் வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல. ஆனால் அதன்பிறகு கல்பாக்கம் சுனாமியிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதாக அணுசக்தி துறை சொல்லிவிட்டது.

கூடங்குளத்தில் ஆய்வு செய்யப்பட்டு முதல் அறிக்கை
தரப்பட்டது 1998ல். அப்போது தெரியவராத பல உண்மைகள்
2002ல் வெளியாகியிருக்கின்றன. கூடங்குளம் பகுதியில் கீழ்ப்புறம்
பழைய எரிமலைக் குழம்புகள் இறுகிய பாறையாக இருப்பதாகவும்
இவை நிலையற்றவை என்றும் கேரளப் பல்கலைக்கழகத்க்தை
சேர்ந்த டாக்டர் பிஜு, டாக்டர் ரமா சர்மா. ஆகியோரின் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இது பற்றிய கட்டுரை 2004ல் கரண்ட் சயன்ஸ் ஏட்டில் வெளியாகியுள்ளது. இந்த நிலவரத்தை உலை அமைப்பாளர்கள் கணக்கில் எடுக்கவே இல்லை. கூடங்குளம் பகுதியில் சுனாமி வராது என்ற நிலையையே எடுக்கிறார்கள். ஆனால் அரசின் ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்த நில நடுக்க இயல் நிபுணர் அருண் பாபட் 1998லேயே இப்பகுதியில் எதிர்காலத்தில் சுனாமி வரக் கூடும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் கருத்தை அரசு அப்போது ஏற்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி 2004ல் சுனாமி கூடங்குளத்தில் அணு உலை பகுதிக்கு வந்தது.

கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் புகோஷிமா மாதிரி விபத்துகள்
ஏற்பட்டால், முழு தமிழகமே பாதிக்கப்படும். கூடவே ஆந்திரமும்
கேரளமும் பாதிப்புக்குள்ளாகும். கல்பாக்கத்தில் முதல் இரண்டு
அணு உலைகளைக் கட்டி முடித்தது 1983ல். பின்னர் 1985ல் அதி
ஈனுலை. 1996ல் காமினி உலை. ரீபிராசசிங் எனப்படும் எரிபொருள்
மறுசுத்திகரிப்பு ஆலையும் உள்ளது. அணுக் கழிவுகள் கிடங்கும்
உள்ளது. கடல்நீரை நன்னீராகும் டிசாலினேஷன் ஆலை இருக்கிறது.
1997 வரையில் பயன்படுத்திய எரி பொருள் 125 டன் என்பது
கணக்கு. ஒரு டன்னில் 3 கிலோ புளுட்டோனியம் கிடைக்கும்.
இதுதான் அணுகுண்டுக்கான கச்சாப்பொருள். கல்பாக்கத்தில்தான்
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை தயாரிப்பதற்கான
கடற்படையின் ஆராய்ச்சி தளமும் உள்ளது. (முப்பது வருடமாகியும்
இதை இன்னமும் உருவாக்கி முடியவில்லை.)

கல்பாக்கத்திலிருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கே
வங்கக் கடலின் அடியில் எரிமலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி அணுசக்தி துறைவசம் எந்த ஆய்வும் இல்லை. ஜனவரி 20, 1757ல் இந்த எரிமலை பொங்கியதாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது என்று மருத்துவர் ரமேஷ் ஆய்வில் தெரியவந்தது.

சுனாமியால் கல்பாக்கம், கூடங்குளம் இரண்டுக்கும் எந்த
ஆபத்தும் இல்லை என்று அரசு சொல்லுகிறது.ஆனால் 2004 சுனாமி,
கூடங்குளத்தில் கடல் நீரை நன்னீராக்கும் டீசாலினேஷன் ப்ளாண்ட்டை நாசப்படுத்தியது. அப்போது அணு உலையின் இதர பகுதிகள் கட்டி முடியவில்லை. கல்பாக்கத்தில் சுனாமி அணு உலை ஊழியர் குடியிருப்பு, மருத்துவமனை, மத்திய காவல் படை அலுவலகம், புதிய அதிவேக உலை கட்டுமானம் ஆகியவற்றை சேதப்படுத்தியது. நான்கு விஞ்ஞானிகள் உட்பட 60 பேர் இறந்தனர். புதிய அணு உலைக்காக பூமிக்கடியில் 51 ஆடி ஆழத்துக்கு பெரிய வட்டமான குழி வெட்டி கட்டுமான வேலைகள் நடந்த இடத்தில் கடல் நீர் புகுந்தது. அங்கே பெரும்பாலும் வட இந்தியர்களான கட்டடத் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். குழியிலிருந்து வெளியே உடனே ஓடி வர முறையான படிக்கட்டு எதுவும் கிடையாது. கயிற்றேணிகள்தான்.

சுனாமி வரப் போகிறது என்ற முன் எச்சரிக்கையும் தரப்படவில்லை.
ஏனென்றால் கல்பாக்கம் அணு உலை வளாகத்தில் சீஸ்மோகிராஃப்
எனப்படும் நில நடுக்க அளவிடும் கருவியே கிடையாது. சுமார் 150
தொழிலாளர்கள் சிக்கி இறந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
நிர்வாகம் ஒரே ஒரு காந்தம்மாள்தான் இறந்ததாகக் கூறியது. இந்த
சம்பவம் பற்றி சுயேச்சையான விசாரணை எதுவும் நடக்கவில்லை.
கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கி 25 நாட்களாகியும்
மேலதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று தொழிற்சங்கப்
பிரதிநிதி சதாசிவம் என்பவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில்
சொல்லியிருக்கிறார்..

அடுத்து சுனாமி வந்தால் கூடங்குளம் பாதிக்கப்படாது
என்பதற்கு அரசு சொல்லும் காரணம் எல்லா கட்டுமானங்களும்
கடல்மட்டத்திலிருந்து 9.5 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருப்பதாகும்.
சென்ற சுனாமியில் கூடங்குளத்தில் சுனாமி அலை புகுந்த உயரம் 5
மீட்டருக்கு மேல். கல்பாக்கத்தில் பத்து மீட்டர். இதைக் கணக்கிட்டுதான் கூடங்குளம் பாதுகாப்பானது என்கிறார்கள். அடுத்த சுனாமி வந்தால் பழையபடி 5 மீட்டர் உயரம்தான் வரும், 10 மீட்டர் வராது என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமாக எந்த ஆய்வோ கணக்கிடுதலோ இல்லை. இது வெறும் ஆரூடம்தான்.

1960களில் இந்தியாவில் அணுசக்தி அறிமுகமான சமயத்தில் உலக
அளவில் ஆண்டு தோறும் நடக்கக்கூடிய இயற்கை பேரழிவுகள்- நில
நடுக்கம், சுனாமி, பெருவெள்ளம் போன்றவை வெறும் 40. ஆனால் 2010ல் இது வருடந்தோறும் 350 முதல் 400 என்றாகிவிட்டது. பூகமபங்களின் எண்ணிக்கை மட்டுமே பத்து மடங்கு அதிகமாகியிருக்கிறது. எனவே இயற்கைப் பேரழிவுகளில் அணு உலைகள் சிக்கினால், விளைவுகள் படுமோசமாக இருக்கும். பாதுகாப்பான அணு உலை என்று உலகில் எதுவும் கிடையாது. இன்னும் தப்பித்து வருகிற அணு உலை என்றுதான் ஒவ்வொன்றையும் சொல்ல முடியும்.

ஒரு வாதத்துக்காக நில நடுக்கம், சுனாமி எதுவுமே வராது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அணு உலைகள் பத்திரமானவைதானே ?

இல்லை.புகோஷிமாவில்தான் சுனாமி. ஆனால் அதற்கு முந்தைய
மிகப்பெரிய விபத்தான சோவியத் யூனியனின் செர்னோபில் அணு
உலை விபத்து முழுக்க முழுக்க மனிதத் தவறுகளால் நடந்ததுதான்.
எந்த தொழிற்சாலையிலும் மனிதத் தவறுகள் நடக்கும் வாய்ப்பு
உண்டு. ஆனால் அதனால் விபத்து நடந்தால் ஏற்படும் பாதகமான
விளைவுகள் என்ன என்று பார்க்கவேண்டும். உலகத்திலேயே மிக
அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அணு உலை
விபத்துகள்தான். காரணம் அவற்றிலிருந்து வரக்கூடிய ஆபத்தான
கதிரியக்கம் பல தலைமுறைகளுக்கு மனிதர்களையும், நீர். நிலம்,
காற்று, விவசாயம் அனைத்தையும் பாதிக்கக்கூடியது.

செர்னோபில் விபத்தில் 2000 பேர் இறந்ததாக அப்போது சோவியத்
அதிபராக இருந்த கோர்பசேவே சொல்லியிருக்கிறார். ஆனால் அதில்
57 பேர் மட்டுமே இறந்ததாக ஹிந்து பத்திரிகையில் கூடங்குளத்தை
ஆதரித்து எழுதிய கட்டுரையில் கூசாமல் பொய் சொன்னார் அப்துல்
கலாம். 1986லிருந்து 2004 வரை செர்னோபில் விபத்துக் கதிர்வீச்சால்
நோயுற்று செத்தவர்கள் மொத்தம் ஒன்பது லட்சத்து 85 ஆயிரம் பேர்
! இன்னும் 20 ஆயிரம் வருடங்களுக்கு கதிர் வீச்சு நீடிக்கும் என்பதால்
தொடர்ந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் மெல்ல மெல்ல புற்று
நோய் போன்றவற்றால் இறந்துகொண்டிருப்பார்கள்.

உலையை சுற்றி ஒரு லட்சம் சதுர மைல் பரப்புக்கு அதாவது
சுமாராக முழுத் தமிழ்நாடு அளவுக்கு கதிரியக்கம் கடுமையாக
பதித்திருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு
இந்த பாதிப்பு இருக்கும். செர்னோபில்லின் கதிர்வீச்சுக்குள்ளானவை
ஐரோப்பாவில் 40 சதவிகித இடம், ஆசியாவில் எட்டு சதவிகிதப்
பரப்பு. இங்கெல்லாம் மொத்தமாக 40 கோடி மக்கள் கதிரியக்கத்துக்கு
உள்ளானார்கள். உலையை சுற்றி வெறும் 30 கிலோமீட்டர் பகுதியில்
இருந்த நான்கு லட்சம் பேரை உடனே வெளியேற்ற வேண்டியதாயிற்று. இன்னும் 5 கோடி பேர் ஒரு கோடி குழந்தைகள் உட்பட கதிரியக்க ஆபத்தான பகுதியில் இருக்கிறார்கள்.

1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில்
நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு
நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து. 

கூடங்குளம்


                               

ஆந்திரா மாநிலம் நாகார்சுனாசாகர் மற்றும் கேரளா மாநிலம் பூதான்கெட்டு பகுதியில் நிறுவப்பட உத்தேசித்திருந்த இந்த கூடங்குள அனு உலை அந்த மாநிலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பால் இடமாறி கூடங்குளத்தில் அமைக்கிறார்கள்

      2011 சூலை மாதம் ரஸ்யா பிரதமர் மெத்தவதே ரஸ்யா சுற்றுச்சுழல் அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து தந்த அறிக்கையில் தற்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் விவி,இ,ஆர் 1000 அனு உலையில் 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிகாட்டியுள்ளார்கள் அதைப்பற்றி  உங்களால் விளக்கமாக தமிழக மக்களுக்கு சொல்ல முடியுமா

     கூடங்குளத்தில் மிகப்பெரிய கொதிகளன்களின்மூலம் கடலில் 1300 டிகிரி பாரன்கீட்டுக்குமேல் வெப்பத்துடன் கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா?

      இதுபோல், கல்பாக்கத்தில் பாதுகாப்பு, ஒத்திகை  நடைபெற்றபோது அங்கிருந்த இரண்டு பஸ் இயங்கவில்லை. அதோடு வாக்கி டாக்கியும் செயல்படவில்லை. கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை. என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா
    மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளதும். கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளதும் இவற்றில் மருத்துவர்களும் செலிவியர்களும்  பாதிபேர் இல்லையென இங்கு இருக்கின்ற யுவராஜ் போன்றவர்களுக்கு தெரியுமா தெரியாதா
    கல்பாக்கத்தில்அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி ஒருவருக்காவது இருக்கிறதா  மருந்துகள் போதிய அளவு  உள்ளதா பாமர தமிழ்சாதியின் மேல் அக்கறை இல்லாத அம்மா ஜெ நீண்ட நாள் நலமுடன் வாழ தீச்சட்டி ஏந்திடும் நம் பெருமைமிக்க ஆளும் கட்சி மந்திரி எம், எல்,யேவுக்கு தெரியும் சொல்லுங்கள் பார்ப்போம்

     இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்பாக அம்பலப்பட்ட ஊழலை  வெளியிட்ட போது  உங்கள்மீதும் பலகோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பலபேருக்கு சந்தேகம் வந்துள்ளது உங்களுக்கு தெரியுமா கலாம் அவர்களே

    அணு உலைகளோடு வாழ்வது என்பது மடியில் அணுகுண்டைக் கட்டிக்கொண்டு இருப்பதற்கு நிகரானது என்று

    அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தெரியுமா தெரியாதா?

     1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

    கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் பொதுமக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை.  என்பது எத்தனைபேருக்குத்தெரியும்



(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.


    அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.

   இந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் விவரங்களை பாருங்கள்.

எண்

திட்டம்

மின் உற்பத்தி அளவு

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

(ரூபாய்)

மின் உற்பத்தி தொடக்க காலம்

1வட சென்னை படி – 22 * 600 = 1200 MW1200 MW4650 கோடிகள்முதலாவது சனவரி 2012
இரண்டாவது பிப்ரவரி 2012
2மேட்டூர் படி – 3600 MW600 MW3106 கோடிகள்மார்ச் 2012
3த.நா.மி.வா. – NTPC – வல்லூர்3 * 500 = 1500 MW1041 MW8444 கோடிகள்முதலாவது டிசம்பர் 2011
இரண்டாவது மார்ச் 2012
மூன்றாவது அக்டோபர் 2012
4த.நா.மி.வா. – NLC – தூத்துக்குடி2 * 500 = 1000 MW387 MW4910 கோடிகள்நவம்பர் 2012
5ஏழு சிறு நீர்மின் திட்டங்கள்90 MW90 MW1556 கோடிகள்டிசம்பர் 2011 -
மார்ச் 2012
6கூடங்குளம் அணுமின் நிலையம்2 * 1000 = 2000 MW925 MWநடுவண் அரசுமார்ச் 2012
7கல்பாக்கம் விரிவாக்கம்2 *250 = 500 MW167 MWநடுவண் அரசுமார்ச் 2012
8நெய்வேலி இரண்டாம் படி விரிவாக்கம்2 *250 = 500 MW230 MWநடுவண் அரசுமுதலாவது ஆகஸ்டு 2011
இரண்டாவது சனவரி 2012

மொத்தம்7390 MW4640 MW

இந்த அட்டவணையின் படி 2012 ஆம் ஆண்டு முடிவிற்குள் தமிழகத்திற்கு 4640 மெகாவாட் மின்சாரம் புதிதாக கிடைக்கத் தொடங்கிவிடும். இதற்கும் மேலாக இந்த 2012 ஆம் ஆண்டு கீழ்கண்ட திட்டங்களைத் தொடங்க அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1வட சென்னை படி – 2800 MW4800 கோடிகள்20122015
2வட சென்னை படி – 41600 MW9600 கோடிகள்20122016
3உடன்குடி1600 MW9600 கோடிகள்20122016
4எண்ணூர் விரிவாக்கம்600 MW3600 கோடிகள்20122015
5குண்டா (Kundah Pumped Storage)500 MW1200 கோடிகள்20122016

மொத்தம்5100 MW28800 கோடிகள்

இவையும் தவிர்த்து கீழ்கண்ட புதிய மின் உற்பத்தி திட்டப்பணிகளுக்கு அரசு அதிகாரிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1உடன்குடி – விரிவாக்கம்800 MW4800 கோடிகள்20132016
2உப்பூர் அனல் மின் நிலையம்1600 MW9600 கோடிகள்20132016
3எண்ணூர் – மாற்று திட்டம்600 MW3600 கோடிகள்20122016
4தூத்துக்குடி – படி 4800 MW4800 கோடிகள்20122016

மொத்தம்3800 MW22800 கோடிகள்

இதுவும் போதாது என்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 4000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை 18000 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறப்பு அமைப்பு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள் (M/s. Coastal Tamil Nadu Power Limited). இத்திட்டத்திற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் கருத்துக்கேட்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
காற்றாலை மின் உற்பத்தியிலும் தனியார் உதவியுடன் காற்றாலை மின்சாரத்தை மேலும் 10000  மெகாவாட் அதிகப்படுத்த  வாய்ப்பிருப்பதாக மின்சாரவாரிய அறிக்கை தெரிவிக்கிறது.


மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் திட்டங்களினால் வரும் சில ஆண்டுகளில் தமிழகத்திற்குக் கிடைக்க இருக்கின்ற மின்சாரம் 27540 மெகாவாட்.  இதில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க இருப்பதென்னவோ 925 மெகாவாட் மட்டுமே


இன்னும் பல விவாதங்களுடன் பல விமர்சனங்களுடன்
பதவு போட இருக்கும் உங்கள் அன்பு
சிகா,லெனின் 90747357920

Sunday, March 18, 2012

அணுஉலை கழிவுகள்

              


அணுஉலை கழிவுகள் பற்றிய பதிவு இது.....

அணுஉலையே சர்ச்சையில் ஓடிகொண்டிருக்கும் போது நாம் ஏன் அணுஉலை கழிவுகளை பற்றி பேச வேண்டும் ???.....

கீழே படியுங்கள்

          அணுஉலை வேண்டும் வேண்டும் என்று தொண்டை தண்ணி வற்ற கத்தி கொண்டிருக்கும் நவீன விஞ்ஞானிகளே.... நீங்கள் எவ்ளோ சுயநலவாதிகள் என்பதை நீங்கள் என்றைக்காவது உணர்ந்துல்லீர்களா... நிச்சயமாக இல்லை.... சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் என்றல் நிச்சயம் நான் சொல்ல போகும் இந்த விஷயம் தெரிந்திருக்கும் .... உங்களுக்கு உங்கள் நாட்டில் மின்சாரம் இருந்தால் போதும் அதனால் நீங்க எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்துவீர்கள்.... அதனால் சொந்த மக்களுக்கே பிரச்சனை ஏறப்பட்டலும் உங்களுக்கு கவலை இல்லை.. ஏன் என்றால் நீங்க பாதிக்கப்படுவதில்லை... எவனோ ஒருவன் பாதித்தால் நான் என்ன செய்வேன் என்றே மனோபாவமே நம்மில் பலருக்கு அதிகம்....

           என் வீட்டில் மின்சாரம் வருகிறதா அது போதும் எனக்கு... மற்றவன் செத்தால் என்ன பிழைத்தால் நமக்கு என்ன ??

      மொத்தமாக நம் பூமியில் உள்ள இயங்கும் அணுஉலைகள் இவ்வளவு என்று தெரியுமா .... 440 அணுஉலைகள்..... இவ்வளவு அனுளைகளிளிருந்து வெளியேற்றப்படும் அனுக்கழிவுகள் என்ன ஆகின்றன ??... யாரவது யோசித்ததுண்டா ??? நானும் யோசிக்க வில்லை... இந்த கூடங்குளம் பிரச்சனை வந்த உடனே நானும் இதை பற்றி யோசிக்க தொண்டன்கினேன்... அதிர்ச்சிகரமான சில விஷயங்கள் என் கண்ணில் பட்டது....

அது தான் சோமாலியா ... இந்த ஊரு பெயரை உச்சரித்தாலே பஞ்சதிர்க்கும், பசிக்கும் இரையாகி எலும்பும் தோலுமாக இருக்கும் மனிதர்களையே ஞாபக படுத்தும்...

இந்த ஊரை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாத (சில உலக அரசுகளுக்கும் மட்டும் தெரிந்த) விஷயங்கள் இதோ... அணுஉலை கழிவுகள் உரிய முறையில் அழிக்கப்படுகின்றன என்று கூறுவது முற்றிலும் பொய்....உலகில் உள்ள அத்தனை அனுஉலை கழிவுகள் மொத்தமாக கொட்டும் குப்பைத்தொட்டி உலகில் ஒன்று உண்டு என்றால் அது சோமாலியா தான்

அங்கே தான் மொத்த கழிவுகளும் கொட்டப்படுகின்றன.... இதற்க்கு என்ன டா ஆதாரம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது... 2004 சுனாமி வந்ததே தெரியுமா ...அதில் அதிக சேதம் அடைந்த நாடுகளில் சொமளியாவும் ஒன்று .... அந்த மக்கள் நிவாரண பணிகளுக்கும் சென்ற ஊழியார்கள் யாருமே அவர்கள் பிணத்தை தொட கூட இல்லை ஏன் என்றால்... நம் உலக வல்லரசுகள் தங்கள் அனுக்கழிவுகள் கொட்டும் குப்பைதொட்டியாக வைத்து கொண்ட சோமாலியா கடல் சுனாமியால் பொங்கி எழுந்த போது அத்தனை கழிவுகளும் கண்டைனர்களில் மூலம் வெளியே அடித்து வரப்பட்டது... அந்த கண்டைனர்களில் இருந்து கதிர்வீச்சு அதிகமாக இருந்ததே இதற்க்கு காரணம்...

அந்த சோமாலியாவை மேலும் சீரழிக்க நம்ம ஊரும் தயாராகி வருகிறது.....

இப்போது சொல்லுங்கள் அணுஉலையை ஆதரிப்பவர்கள் சுயநலவாதிகளா ?? பொதுநலவாதிகளா ???

சிரியாவில் இன்னொரு இனப்படுகொலை

                                            

                  சிரியாவில் 47 பெண்கள்-குழந்தைகள் கழுத்து அறுத்து படுகொலை

இன்னொரு இனப்படுகொலை வேகமாக வளர்ச்சி பெற்று வருவது கண்கூடாக தெரிகிறது.... உலக நாடுகளே உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்.... தமிழர்களுக்கு இழக்கப்பட்ட கொடூரங்களை தான் இந்த உலக வல்லாதிக்க தேசங்களும் என் தேசமும் கை கட்டி வேடிக்கை பார்த்தது ... பாவம் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையாவது தடுத்து நிறுத்துங்கள்;.... தடுத்து நிறுத்தாட்டியும் பரவைல்லை... தயவு செய்து படுகொலைகளை செய்த அந்த நாட்டு ஆட்சியாளர்களை ஆதரிக்காதீர்கள்

எங்களை தான் மனிதர்களாகவே நினைக்கவில்லை (தமிழனாக பிறந்த பாவமோ என்னவோ) இவர்களையாவது காப்பாற்றுங்கள் .....
குழந்தைகள் கழுத்தை அறுத்து கொள்கின்றனர் ... அப்பாவி மழலைகள் உயிரை காப்பாற்றுங்கள்
இன்னொரு "இசைபிரியா"வின் கற்பபழிப்பை பார்க்க எனக்கு சக்தி இல்லை
                                                                                                                         சுமன் ராஜ்

நடுவண் அரசிற்கு சவுக்கடி ......

                                  


இந்திய நடுவண் அரசிற்கு ஜெயலலிதாவின் சவுக்கடி .......

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

"ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசின் அமைச்சர்களுடனோ, உயர்மட்ட அதிகாரிகளுடனோ நேரடிப்பேச்சு நடத்துவதை முதல்வர் விரும்பவில்லை" என்று தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்தார்.

"ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்தும், அது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் பற்றியும் விளக்கி அம்மா (ஜெயலலிதா) இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகனுக்கு அனுப்பினார். அந்த இரண்டு கடிதங்களுக்கும் உரிய பதில் அனுப்பப்படவில்லை. அவற்றை கிஞ்சித்தும் மத்திய அரசு கவனிக்கவில்லை. இந்த நிலையில், அதிகாரிகளைச் சந்திப்பது அர்த்தமற்ற செயல். இதனால்தான் மேனனின் கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தமிழக முதலமைச்சரின் இந்த நிராகரிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, மூத்த அமைச்சர் ஒருவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்து தீவிரமாக ஆராய்ந்ததாக அறியமுடிகின்றது.

செய்தி மற்றும் படங்கள் : George A Arul

சிறந்த சர்வதேச இளைஞன் விருது

                                
போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாழில் வழங்கப்படுகிறது.

அதற்காக டெல்லிக்கு வரும் ஜூனியர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என அவருக்கு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது 

தமிழக அழுத்தங்கள், இந்தியாவின் சிறந்த முடிவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது

                                    

தமிழக அழுத்தங்கள், இந்தியாவின் சிறந்த முடிவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது --- பிரசாத் காரியவசம்

தெரியாம தான் கேக்குறேன் இந்த ஆளு

"இந்தியாவிற்கான இலங்கை தூதுவரா" 


இல்ல "இலங்கைக்கான இந்திய தூதுவரா "

"பிரபாகரன்" என்ற ஒற்றைச் சொல்லில்,.........



இன்று முகநூலில் தென்பட்ட தலைவர் பிரபாகரன் தொடர்பான கருத்துக்கள் இவை....ஒரு பெயர் ஒரு இனத்தை எப்படி இயக்குகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது..

தமிழச்சி (Tamizachi)
'பிரபாகரன்' என்னும் ஒரு சொல்லில் இருக்கிறது அரசியல்.

'அவர் இறந்து விட்டார்' என்னும் சிங்கள அரசும், 'உயிரோடு இருக்கிறார்' என தமிழ் தேசியவாதிகளும் சூளுரைக்கும் அசட்டுவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் தலைவனுக்காக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் வல்லமையை பிரபாகரன் உருவாக்கி இருப்பதே தலைமையின் வலிமைக்கு உதாரணம்!

ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராட வைத்தான்" என்பதிலிருக்கிறது.


Kumaran Kathirgamar

இத்தனை வருடப்போராட்டத்தை நடத்துவதற்கு பிரபாகரன் மேடைகளில் வந்து முழங்கியதும் இல்லை,வாக்குறுதிகளை அள்ளி வீசியதுமில்லை,ஆடு,மாடு,கோழி,பணம் என்று ஐந்தாண்டுக்கு ஒரு முறை பிச்சை எடுத்ததும் இல்லை.பிரபாகரன் என்கிற ஒருபிம்பம் தான்,கண்ணுக்கு தெரியாத நிழல் தான் எங்களை ஆட்சி செய்தது,

கடைசி சிங்களவன் எங்கள் மண்ணை விட்டு ஓடும்வரை நாங்கள் அடிபடுவோம்.அதுவரை பிரபாகரன் என்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே தலைமை படைநடத்தும்.

தமிழகத்திலும் சரி,புலம்பெயர் நாடுகளிலும் சரி,தேசியத்தலைவரை பார்க்காமல்,அவரை ஒருநாள் பார்ப்போம் என்பதற்காகவே எந்த வகையான போராட்டத்துக்கும் தயாராக ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆக்கி வைத்திருப்பது அந்தப்பெயர் மட்டும் தான்.அது போதும்.அது வழிநடத்தும்,அது படை நடத்தும்.முற்றுகையை உடைத்து வெளிவரத்தான் பிரபாகரன் எங்களுக்கு பயிற்றுவித்துள்ளான்;உள்ளிருந்து அழுவதற்கல்ல.இப்போதும் இந்த முற்றுகையை உடைப்போம்.



Cartoonist Bala

இருந்தாலும்.. இல்லாவிட்டாலும்...
"பிரபாகரன்" என்ற ஒற்றைச் சொல்லில் தமிழர்களின் எழுச்சி அடங்கியிருக்கிறது.


Xavier Jeen 

"தமிழ்" - க்கு அடுத்தபடியாக உலகத் தமிழினத்தை இணைக்கும் சொல் "பிரபாகரன்".
 








தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை ஈழப்பிரச்சினையை கையாளும் வெளித்தரப்பு புரிந்து கொள்வது அவசியம்