Like me

Sunday, May 20, 2012

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி

                                      
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி தக்ளச்சுடன் எதிர்க்கட்சித் தலைவர் சுசமா சுவராஜ்
                 
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி தக்ளச்சுடன் எதிர்க்கட்சித் தலைவர் சுசமா சுவராஜ்
                 

பாவங்கள் விடுவதில்லை - நன்றி தமிழுருவி மணியன் (ஜூனியர் விகடன்)

               

முள்ளிவாய்க்கால் நினைவில் உறுதி எடுப்போம்.

                                      

முள்ளிவாய்க்காலின் மூன்றாம்ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும்,திகைப்பையும்,பெரும் சோகத்தையும் கூறிவிடமுடியாது.எத்தனை காலமானாலும் அணைக்கமுடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய்க்கால்.இனம் ஒன்றின் நம்பிக்கைக்கூறுகள் கொலுகொலுத்து தகர்ந்த நாள் அது.சின்னஞ்சிறு குழந்தைகளையும்,தள்ளாத வயதினரையும்,உயிருக்காக ஓடிஓடி பதுங்குகுழிகளுக்குள் புகுந்தமக்களையும்கொன்றுகுவித்து அதன்மீது ஏறிநின்று இந்த சிங்களம் வெற்றிக்கொடியை நாட்டியபோது ஏற்பட்டஅதிர்ச்சியைவிட,அந்தகொடூரத்தை சர்வதேசம் மௌனமாக அங்கீகரித்து நின்ற குரூரம் இன்னும் அதிர்ச்சியை தந்தது.தந்துகொண்டும் இருக்கிறது.

முள்ளிவாய்க்காலின் மூன்றுஆண்டுகளுக்கு பின்பாக எங்கு நிற்கிறது எம் இனம்.தமிழீழம் முழுமையும் சிங்களதேசத்தின் படைகளின் கொடும் பிடிக்குள் விழுந்துகிடக்கிறது.பாரம்பரிய வாழ்விடம் என்ற சொற்தொடருக்குள் இருக்கும் தேசியஇனத்துக்கான அடையாளத்தைதுடைத்தெறிந்துவிட மிக மும்முரமாக தமிழர் அல்லாதோரை கொண்டுவந்து குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.எங்கள் நிலம் என்றும் எங்கள் மண் என்ற நினைப்பு இனி ஒருபோதும் தமிழர்களின் மனதில் தோன்றவே கூடாது என்பதற்காக பல் இன கலப்பு பிரதேசங்களாக வடக்கு-கிழக்கை மாற்றிவருகிறார்கள்.இது புறம் இருக்க..முள்ளிவாய்க்காலில் நடந்தது மாத்திரமே இனஅழிப்பு என்று நாம் உரத்து குரல் எழுப்பி வரும் இந்த மூன்றுவருடங்களில் இனஅழிப்பும் இனசுத்திகரிப்பும் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

இதற்கு எதிராக எழுப்பபடும் சிறிய முனகல்கூட உடனடியாகஅழிக்கப்பட்டு மர்மமரணம் என்றும் வாவிக்குள் பிணம் என்றும் பாழடைந்த கிணற்றுக்குள் பிரேதம் என்றும் பதியப்பட்டு முடிக்கப்படுகின்றன.புதைகுழிக்குள் மண்போட்டு மூடப்படுகின்றன.தமிழர் தாயகத்தின் மண்ணையும் கடலையும் நம்பி அதிலே தமது உழைப்பை தந்த மக்களின்நிலங்களும் கடலை அண்டிய பிரதேசங்களும் சிங்களஆயுதப்படைகளின் துணையுடன் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றன.இவை எல்லாவற்றையும்விட மரணம் எந்த நேரமும் யாருக்கும் எப்போதும் எப்படியும் நேரலாம் என்ற மரணஅச்சுறுத்தல் தமிழர்கள் அனைவருக்குள்ளும் புகுத்தப்பட்டுள்ளது.சிங்களநுகர்வு பொருட்களுடன் சிங்களகலாச்சாரம் பௌத்த திணிப்பு என்பன நிறைந்ததாகவே தமிழரின் தினசரி நுகர்வும் வாழ்வுத்திசையும் மாற்றப்பட்டுவருகின்றது.இந்த நிலைமைகள் இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஈழத்தமிழ்தேசிய இனம் என்பதே இல்லாது ஒழிக்கப்பட்டுவிடும் அபாயம் தெரிகிறது.

நேற்று:

உலக விடுதலைவரலாற்றில் ஒரு இனம் தனது விடுதலைக்காக இத்தனை தூரம் சென்றிருக்குமா என்று விழிவிரிய வைக்கும் தியாகங்களும் அர்ப்பணங்களும் நிறைந்ததாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டவரலாறு திகழ்கிறது.தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி பழைய பாராளுமன்றபோராட்ட தலைமை ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் எழுந்த பிள்ளைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்காக பயணித்தார்கள்.விடுதலைக்காக இந்த இனம் கொடுத்த விலைகள் மிகப்பெரியது.விடுலைக்காக இந்த இனம் சென்ற தூரம் மிகமிக கனமானது.மண்ணின் விடுதலைக்கான போராட்டத்தில் விண்ணிலும் ஏறிய இதன் விடுதலைவீரர்கள் இன்னொரு புறத்தில் நீருக்கும் கீழேயும் மூழ்கி விடுதலைக்காக சமராடினர்.

இந்த புள்ளிவரைதான் விடுதலைப்பாதை என்றும் இவ்வளவுதூரம்தான் விடுதலைக்கான பாதை என்று எதுவுமே வரையறுக்கப்பட்டு இருக்கவில்லை.விடுதலையை அடைவதற்கு எது எது சாத்தியமோ அத்தனையையும் செய்திருந்தது இந்த இனம்.எல்லாவிதமான முயற்சிகளையும் செய்திருந்தது.ஒற்றை மனிதன் ஒருவனின் நெஞ்சுக்குள் பிரவாகம் எடுத்த உறுதியுடனும் இலட்சிய தெளிவுடனும் ஆரம்பித்த இந்த விடுதலைப்போராட்டம் மனிதவரலாறு காணாத ஒரு முயற்சியை தமது மக்களின் விடுதலைக்காக எடுத்திருந்தது.வேட்டைத்துப்பாக்கியின் தோட்டாக்களை திரும்பவும் பாவிப்பதில் ஆரம்பித்த இதன் முயற்சியும் தேடலும் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே உரிய நீர்மூழ்கி தொழில்நுட்பத்தையும் விடுதலைக்காக கட்டிஅமைத்திருந்தது.

கைத்துப்பாக்கிகளே மிக அரிதாகவும் கைக்கு எட்டாமலும் இருந்த ஒரு காலகட்டத்தில் 70களின் இறுதியில் விமானஓட்டியாக பயில்வதற்காக ஒருவரை அனுப்பிய தலைமையின் தீர்க்கதரிசனமும் விடுதலைக்கனவும் கொண்டதாக இருந்த போராட்டம் இது.மரபுரீதியான படைக்கட்டுமானங்களையும் படைப்பிரிவுகளையும் அமைத்து அதன் உச்சமாக விமானப்படையையும் வானத்தில் வலம் வரவிட்டிருந்தது.வானத்திலும் விடுதலையின் ஆளுமைவீச்சை தெரிவித்திருந்தது.எதிரிகளின் படைச்சமல நிலைக்கு சமனான படைக்கட்டமைப்பு மட்டும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வுநிலையை உயர்த்துவதற்கான அனைத்து சமூககட்டமைப்புகளையும் அமைத்திருந்தது.பிறந்த ஒரு குழந்தையில் இருந்து மரணிக்கும் ஒரு முதியவர்வரை அனைவர்க்கும் தேவையான எத்தனையோ கட்டமைப்புகளையும் அதனூடான உதவிகளையும்வழங்கி ஒரு தேசமாகவே எழுந்து நின்றிருந்தது.

மிக நீண்ட காலமாக அடிமைப்பட்டிருக்கும் ஒரு இனத்தில் இயல்பாகவே தோன்றக்கூடிய சமூககுறைபாடுகளையும் மூடத்தனங்களையும் உடைத்தெறிந்து விடுதலைக்கு அண்மித்த ஒரு இனமாக நிற்கவைத்தவர்கள் எமது வீரர்கள்.எல்லாவற்றிலும் மேலாக இதன் விடுதலைப்போராட்டவீரர்கள் தமது போர்ப்பாதையில் தியாகமும்அர்ப்பணமும் இதுவரை சொல்லாத தூரத்துக்கும்,; இதுவரை செல்லாததுமான தூரத்துக்கும் மிக அப்பால் சென்று தம்மை அர்ப்பணித்து விடுதலையை வென்றெடுக்க முயற்சித்தனர்.வரையறுக்கபட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான எத்தனையோ தேசங்களைவிட அழகானதும் நீதியானதும்,ஊழலற்றதுமான ஒரு தேசத்தை நிறுவி அதனை நடாத்தி காட்டியது தமிழரின் விடுதலைஅமைப்பு.நேற்று எங்கள் தேசம் சிதைக்கப்பட்டும் எமது மக்கள் சிதறடிக்கப்பட்டபோதும் உலகம் என்ன விதமாக நடந்துகொண்டது என்று பாருங்கள்.இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறிவேன் என்று பகிரங்கமாகவே பிரகடனம் செய்யும் ஈரானும்,எந்த நேரமும் ஈரானின் மீது அணுகுண்டை வீசிவிடுவேன் என சொல்லிக் கொண்டே இருக்கும் இஸ்ரேலும் சிங்களதேசத்துக்கு நேற்று எப்படி ஒன்று சேர்ந்து உதவினார்கள் என்று பாருங்கள்.

எப்போதும் பகைமுட்டிக் கிடக்கும் தென்கொரியாவும் வடகொரியாவும் நேற்று எப்படி சிங்களம் வெல்வதற்காக ஒருமித்து உதவினார்கள் என்று பாருங்கள்.காஸ்மீர் பிரச்சனைக்காகவும் புனித யுத்தத்துக்காகவும் அணுஆயுதங்களை கூர்தீட்டிக் கொண்டேயுத்தசங்கு முழங்க எந்தநேரமும் தயாராக இருக்கும் பாகிஸ்தானும் இந்தியாவும் நேற்று எப்படித்தான் ஒரு கோட்டில் சிங்களத்துக்கு உதவ ஒன்றாக நின்றார்கள் என்று பாருங்கள்.முதலாளித்துவ மேற்குலகும்,சோசலிசம் வாயளவில் பேசும் செஞ்சீனாவும் எப்படித்தான் ஓடிஓடிபோட்டி போட்டுக்கொண்டு சிங்களத்துக்கு உதவினார்கள் என்று பாருங்கள்.

நாளை:

இந்த முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வுகளின் பின் என்ன செய்ய போவதாக உத்தேசித்து இருக்கின்றோம்.அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவுவரை தூங்கியும் சோம்பியும் கிடக்க போகின்றோமா..இல்லை.இந்த நினைவுநாளிலேயே அதற்கான உறுதியை எடுக்க போகின்றோமா?பாரம்பரிய விடுதலைப்போராட்டங்களில் இருந்து மிகவும் வேறுபட்ட முறையிலான போராட்ட முறை ஒன்றை கைக்கொள்ள வேண்டிய தேவையை காலம் எல்லோர் கையிலும் திணித்துள்ளது.பேரினவாத சிங்களபேயரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தாயகத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஏதேனும் ஒரு விதத்தில் நிவர்த்தி செய்து அவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியபடியே போராட்டத்தையும் கையிலெடுக்க வேண்டிய இரட்டை பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

எந்த சர்வதேசத்தின் நாடுகளுக்கான இறையாண்மை வரையறைகளை தனது இனஅழிப்புக்காக சிங்களம் பாவித்ததோ அதே சர்வதேச சட்டங்களில் இனஅழிப்புக்கு,போர்க்குற்றததுக்கு என இருக்கும் சரத்துகளை கொண்டே சிங்களதேசத்தின் தமிழீழம் மேலான ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுவோம்.அப்படி செயற்படும் அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குவோம்.
முள்ளிவாய்க்காலில் உச்சமான இனஅழிப்பு என்பது அறுபதுவருட வரலாற்றை கொண்டது.இந்த அறுபதுவருட இனஅழிப்பில் அழிக்கப்பட்ட அனைத்து தமிழ்மக்களதும் பெயரால் முள்ளிவாய்க்கால் நினைவில் உறுதி எடுப்போம்.

Tamil genocide memorial day events - Kovai (Tamilnadu).

   

“சுவிஸ்ல் நடைபெற்ற சிவந்த மே முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு”





“பல களங்களை கண்ட மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்

   “பல களங்களை கண்ட மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் ”
வீரவணக்கம்
பிரிகேடியர் – பால்ராஜ்
வீரப்பிறப்பு 27 கார்த்திகை 1967
வீரச்சாவு 20 வைகாசி 2008
கந்தையா பாலசேகரம்
கொக்குத்தொடுவாய்,
முல்லைத்தீவு.
                                            











“லண்டன் முகதாசன் நினைவுதிடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 3ம் ஆண்டு வணக்க நிகழ்வு”

 


                                              


மாணவர் தகவல்

                                                

எலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றி ஆர்வம் உள்ள அனைவருக்கும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் ஓன்லைன் மூலம் எளிதாக உருவாக்குவதற்காக ஒரு தளம் வந்துள்ளது.தினமும் ஒரு சாதனை எலக்ட்ரிக்கல் துறையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் எலக்ட்ரிக்கல் துறையில் பல புதிய சாதனைகள் ஊக்குவிப்பதற்கு வசதியாக எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டு ஓன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இத்தளத்திற்கு சென்று Try it Free No Registration Required என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் New datasheets என்பதில் ஏற்கனவே இருக்கும் மொடலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உள்நுழையலாம் அல்லது http://www.dz863.com/index.php இந்த பக்கத்தை சொடுக்கி நேரடியாக புதிதாக நாமாக ஒரு சர்க்யூட் உருவாக்கலாம்.
எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கருவிகளும் இங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு கருவிக்கும் எந்த வகையான அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி எதை எதனுடன் சேர்க்க வேண்டும் என்பது வரை அத்தனையும் நாமே உருவாக்கலாம்.
எல்லாம் உருவாக்கி முடித்தபின் நாம் உருவாக்கிய சர்க்யூட் Diagram -ஐ JPG, PNG, GIF, or SVG கோப்புகளாக மாற்றலாம்.

shortcut keys Crome Google

                                                  


இணைய உலாவிகளில் மிக பிரபலமான இணைய உலாவியான கூகிள் குரோம் உலாவியில் பயன்படுத்த கூடிய குறுக்கு விசைகள் .


 இந்த குறுக்கு விசைகளை பயன்படுத்தி உங்கள் நேரத்தை மீதப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.


shortcut keys Crome Google Window and tab shortcut keys

Ctrl + N
Open a new window
Ctrl + Shift + N
Open a new window in incognito mode
Alt + F4
Close current window
Ctrl + T
Open a new tab
Ctrl + Shift + T
Reopen the last tab closed
Ctrl + 9
Switch to the last tab
Ctrl + Tab or Ctrl + Page Down
Go to the next tab
Ctrl + Shift + Tab or Ctrl + Page Up
Go to the previous tab
Ctrl + W or Ctrl + F4
Close the current tab or pop-up
Alt + Home
Goes to your homepage
Ctrl + O
To open a file from your computer in Google Chrome
Google Chrome features shortcut keys
Ctrl + B
Toggle bookmarks bar on or off
Ctrl + H
View the history page
Ctrl + J
Open the downloads pop-up
Shift + Esc
Open the task manager
Webpage shortcut keys
Ctrl + P
Print current page
F5
Reload current page
Esc
Stop loading page
Ctrl + F5 or Shift + F5
Reload current page and ignoring cached content
Ctrl + F
Open find-in-page box
Ctrl + G or F3
Find next match for your input in the find-in-page box
Ctrl + Shift + G or Shift + F3
Find previous match for your input in the find-in-page box
Ctrl + U
View page source
Ctrl + D
Bookmark current page
Ctrl + +
Make page larger
Ctrl + -
Make page smaller
Ctrl + 0
Return to normal page size

NICE

                                                   NICE




நன்னாரி - - > இயற்கை மருந்து


நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.
இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.
 இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
 நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
 நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.
ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.

மருத்துவ குணங்கள்:

1. மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...

*
 
2. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

*

3. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

*

4. சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.


*

5. நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.


*


6. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .


*


7. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.


*

8. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.


*

9. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.


*


10. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.


*

11. குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.


*

12. சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.


*


13. வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.


*

14. விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.


*


15. கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

*

16. குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும்.


*

17. உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
18. குறிப்பு:

ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.thanks விக்கிபீடியா.

நன்னாரி--கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து
நன்னாரி


சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் 
துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும்குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது. `சப்போனின்' என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக்கூடிய முடக்கு வாதம், செதில் உதிர் தல் நோய் எனப்படும் சோரியா ஸிஸ், கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு, இது சிறந்த மருந்து. சிறுநீரக நோய்கள் உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் பால்வினை நோய் களுக்கு இது சிறந்த மருந்து.

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.
நன்னாரி பால்:1. நன்னாரி - 200 கிராம்

2. சுக்கு - 50 கிராம்

3. ஏலக்காய் - 25 கிராம்.

செய்முறை:- நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.

நன்னாரி சர்பத்:நன்னாரி - 200 கிராம்.

தண்ணீர் - ஒரு லிட்டர்.

சர்க்கரை - 1 கிலோ.

எலுமிச்சம்பழம் - 6 (சாறு எடுத்து கொள்ளவும்).

செய்முறை:

1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.

3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.

4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.

தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.இணையத்திலிருந்து திரட்டியவை

தன்னிகரில்லா தலைவன்

  

தமிழ் நாட்டை ஆள, இப்படி ஒரு
தன்னலமில்லா தலைவன்...

தன்னிகரில்லா தலைவன் இல்லாததன் விளைவு.

                                தமிழகமே இன்று "தள்ளாடி" கொண்டிருக்கின்றது.

பொருள் எந்த நாட்டுடையது



பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),


சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடுஎன்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan
 (JAN-13)50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

மரணம் தரும் மருந்து




காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமால் மாத்திரைதான் . இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் உயிரிழப்பு குறித்து எடின்பர்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.
ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Brain - Facts

                                        

Brain - Facts 

The brain is a monstrous, beautiful mess. Its billions of nerve cells - called neurons - lie in a tangled web that displays cognitive powers far exceeding any of the silicon machines we have built to mimic it. - William F. Allman in Apprentices of Wonder. Inside the Neural Network Revolution, 1989.

The brain is the most amazing and complex organ in this universe and its research continues to throw up new facts that surprise’s us. The brain is capable of being modified or improved even as we age. It is never used to its full capacity.

1. The human brain has about 100,000,000,000 or 100 billion neurons. From the age of 35 years about 7000 neurons are lost daily.

2. During early pregnancy the neurons in the fetus can multiply at a rate 250,000 neurons/minute.

3. Brain is composed of 75 to 80% water. Dehydration can affect proper functioning of brain.

4. Brain consists of 60% White matter and 40% Grey matter. White is the supporting matter and Grey is the thinking matter of the brain. If the brain was a computer the grey matter would be the computer itself and the white matter its cables.

5. Adult brain weighs about 3 pounds or 1300 to 1400 Grams. This is about 2% of the body weight if you weigh 150 pounds or 70 kgs. Sperm whale’s brain weighs 7800 gms.

6. Although the brain only accounts for 2 percent of our body weight but it consumes 20% of the oxygen that we breathe and roughly 20 percent of our daily calories.

7. 15-20% of all blood pumped out of the heart goes directly to the brain.

8. All the thinking in the brain is about electricity and chemicals. The brain is more active and thinks more at night than during the day.

9. The brain itself is incapable of feeling pain. Once the skull is opened it is possible to operate on the brain with the patient awake.

10. You can’t feel your own tickle either. The brain is smart enough to neutralize the sensation. The cerebellum sends a signal to rest of the brain of your intentions and as a result the sensation is ignored.

Is He only the Freedom Fighter ?

 

Is He only the Freedom Fighter ? 


I agree that Its not possible to prasie all Leaders in this manner 
but atleast we should honor some of them .

we knew its not possible at this stage to implement this changes but its is Not IMPOSSIBLE

Guys DARE TO SHARE this

Share this in such a way that it should reach the Revenue department and make them to think for a while

we are not aganist Gandhi*


   

குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்

                                                  

இளமையா இருக்க ஆசையா?


‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். 


குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.
‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!


சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது.