Like me

Saturday, September 15, 2012

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நாம் கேட்கவேண்டிய கேள்விகள்

                                  Photo: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மக்களாகிய நாம் கேட்கவேண்டிய கேள்விகள் கொஞ்சம்
இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு அவருக்கு பதில்
தெரியுமா என்று அவர்தான் சொல்லவேண்டும். இந்தக்
கேள்விகளை நீங்களும் அவரிடம் கேட்க விரும்பினால்,
இதை செராக்ஸ் எடுத்தோ ஸ்கேன் செய்தோ உங்கள்
கையெழுத்திட்டு
மாண்புமிகு முதலமைச்சர்,
தமிழ்நாடு அரசு,
புனித ஜர்ஜ் கோட்டை, சென்னை -600009 என்ற

முகவரிக்கோ cmcell@tn.gov.in என்ற
முகவரிக்கோ அனுப்புங்கள்.

1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம்
கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும்
2 சதவிகிதம்தான். காரணம் 52
உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும்
மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன்
என்பது உங்களுக்குத் தெரியுமா?

2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200
விபத்துகள் நடந்துள்ளன என்பதும்
ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல்
தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர்
இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால்
57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும்
சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம்
என்று அடையாறு புற்று நோய் நிலையம்
அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர்
சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய்
வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில்
சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத்
தெரியுமா ?

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம்
தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம்
போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன்
சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக்
கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம்
என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத்
தெரியுமா ?

6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில்
இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம்
என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும்
40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட
நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில்
ஐந்து சதவிகித மின்சாரம் கூட
தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட
உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல்
உற்பத்தி செய்வதில்லை என்பதும்
முப்பது வருடத்து கல்பாக்கம் 50
சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும்
உங்களுக்குத் தெரியுமா ?

8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும்
ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும்,
அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில்
40 சதவிகிதமான 400 மெகாவாட்தான்
உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48
மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும்,
மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70
மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280
மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில்
தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும்
கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான்
என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால்
மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட
பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில்
எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித்
துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத்
தெரியுமா ?

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும்
சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில்
சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9
மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக்
கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய
ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல்
குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும்
விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ்
கார்டன், கோபலபுரம் முதல்
பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும்
கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென்
மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும்
என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும்
தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள்
காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும்,
அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும்
தருவது கிடையாது என்பது உங்களுக்குத்
தெரியுமா ?

14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால்
அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும்
வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம்
இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள
முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர்
அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன்
சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

15. தமிழ்நாடு முழுவதும் சுமார்
ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல்
பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட்
மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில்
சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில்
சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல்
இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும்
சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன்
அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள்
குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள்
என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும்
சரியான முடிவு எடுக்காவிட்டால்…..பதில் உங்கள் கையில்.



தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மக்களாகிய நாம் கேட்கவேண்டிய கேள்விகள் கொஞ்சம்
இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியுமா என்று அவர்தான் சொல்லவேண்டும். இந்தக் கேள்விகளை நீங்களும் அவரிடம் கேட்க விரும்பினால், இதை செராக்ஸ் எடுத்தோ ஸ்க
ேன் செய்தோ உங்கள் கையெழுத்திட்டு


மாண்புமிகு முதலமைச்சர்,
தமிழ்நாடு அரசு,
புனித ஜர்ஜ் கோட்டை, சென்னை -600009 என்ற

முகவரிக்கோ cmcell@tn.gov.in என்ற முகவரிக்கோ அனுப்புங்கள்.

1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய  ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல்குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும் சரியான முடிவு எடுக்காவிட்டால்…..

பதில் உங்கள் கையில்.

கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்ந்தால்.........

                

கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்ந்தால், அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பாதிக்கப் படப் போகும் இடங்களைக் குறிக்கும் வரைபடம்.

கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் நூலிலிருந்து



                                               
வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலை செய்யப்பட்ட பத்தாவது நினைவு விழா தஸ்தக் தில்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேச விழாவாக கொண்டாடப்பட்டது. அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள் குறித்து மிக காத்திரமான பார்வையுடன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரது பேச்சுஅன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒரு செரிவான உரையாடலைச் சாத்தியமாக்கியது. அன்று மாலை ஒர் உரையாடலின்  போது என்.ராம் எனக்கு இவர் ஒரு தமிழர் பெயர் உதயகுமார் என்று அறிமுகம் செய்து வைத்தார். உதயகுமாருடனான நட்பு அந்த கணத்தில்தான் மலர்ந்தது .அப்பொழுது அவர் அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ள மினியஸோட்டா பல்கலைக்கழகத்தில் இனம் மற்றும் வறுமை Race and poverty பற்றிய ஆய்வுத்துறையில் பேராசிரியராக வந்தார். அவரது பல கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். இலங்கை பிரச்சினை தொடர்பான Intervention in srilanka: history and prospects ஸும் இந்திய ஹிந்துத்துவ அரசியல் தொடர்பான Presenting the past: the politics of hindu history writing in india வும் உலகம் வரலாறு சமூகம்சார் அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. அவர் இணையத்தில் அமைதிக்கான சமாதானத்துக்கான ஒரு படிப்பை நடத்தி வந்தார். பாஜக அரசு ஆட்சிக்கு வந்து இங்கு செய்த பல மோசடிகளை அவர் தன் வலைத்தளத்தில் WWW.bjpgovermentwatch.com எழுதி வந்தார். இந்த வலைத்தளம் சார்ந்த ஆலோசனைகளை என்.ராம் அவர்கள் வழங்கினார். இங்கு அவுட்லுக், இந்தியாடுடே என பல ஆங்கில பத்திரிக்கைகளில் தொடர்ந்து அவரது கட்டுரைகள் வெளிவந்தன. அவர் அமெரிக்காவில் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல இந்திய அறிவுஜீவிகளை அறிமுகம் செய்தார். ஆஷிஷ் நந்தி, என்.ராம், அட்மிரல் ராம்தாஸ், பிரபுல் பித்வாய், அஃசின் விநாயக், க்யான் பிரகாஷ், கே.என்.பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர் என பல எழுத்தாளர்களை, செயல்பாட்டாளர்களை அவர் அமெரிக்கா அழைத்துச்சென்று பல்கலைக்கழகத்தில் உரைகள் நிகழ்த்தச்செய்தார். அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் மிகவும் சுறுசுறுப்பான செயல்பாட்டாளராக அவர் திகழ்ந்தார். 2007 ல் வாஷிங்டன் டி.சியில் நடந்த விழாவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை அவரது பணிகளைப்பாராட்டி விருது கொடுத்து கௌரவித்தது. அவரது பிரியத்திற்குறிய பாட்டி புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு மரணம் அடைந்தார், அப்பொழுது அவரின் பெற்றோர் அந்த பாட்டிக்கு அருகில் அவரை பல ஆண்டுகள் அனுமதிக்கவில்லை. மெல்ல அவரது குடும்பத்தில் பலர் புற்றுநோயால் இறந்தனர். இந்த பிண்ணணியில்தான் கதிரியக்கம் ஏற்கனவே அதிகமாக உள்ள கன்னியாகுமரியில் அணு உலையைத் திறந்தால் இங்குள்ள மக்கள் மிக வேகமாக புற்றின் வலையில் விழுந்து மடிவார்கள் என்பதால் கூடங்குளம் உலையை பற்றி அரசு அறிவித்த நாள் முதல் அது சார்ந்து செயல்படத் தொடங்கினார். ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் அவர் இங்கு வரும் போது தன் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரத்தை விட, இந்த ஆபத்தை எப்படியும் விளக்கிவிட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் மத்தியிலும், நாகர்கோவில் வாழ் பெரியவர்களுடனும் செலவிட்டதுதான் அதிகம். சில விடுமுறைகளில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் தில்லியில் சந்தித்து அனைவருக்கும் இது பற்றிய எல்லா ஆதாரங்களையும் கொடுத்தாள்ளார். பின் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கே வந்து தங்கிவிட்டார். தொடர்ந்து இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் உள்ள அணு ஆயுத, அணு உலை எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறார். அமெரிக்காவில் வாழ்ந்தபின் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல். தன் தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விடுத்து தன் மனசாட்சியின் குரலைப் பின்தொடர்ந்து வந்த மிகச்சிலரில் முதன்மையானவர். *** 


கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் நூலிலிருந்து


திரு ஆ.முத்துகிருஷ்ணன..

Friday, September 14, 2012

Singamparai in Tirunelveli District-627601 With 8.73828 Latitude and 77.51769 Longitude.




                         
                                        St.PAUL'S Shrine - Singam Parai Slideshow: TAMILSAHA’s                                               
                                                         trip to KINGS LAND " SINGAMPARAI " 




Singamparai is situated in Tirunelveli District , Tamil Nadu .
Singamparai Pincode is 627601 With 8.73828 Latitude and 77.51769 Longitude.

                                  

About 200 years ago the Catholic community converted by St. Francis Xavier and other Catholic community from Somantheperi came and settled in Mylapuram near Mukudal. The cash and conflicts between the two groups paved the way for the migration of the community and the creation of Singamparai. The Catholics from Somanthaperi bought the northern side of Mylapuram from a Muslim land-lord of Pettai and settled there with the help of Rev. Fr. Paul Nather, the visiting missionary. 

                                 
There after it was named as Singamparai. A small chapel was built here and the statue of St. Paul was installed in it, which was removed from the Church of St. Peter and Paul at Mylapuram. The origin of this new hamlet of Singamparai dates as far back as 1845. Till 1901 Singamparai was under the jurisdiction of Sendamaram during which period the Chapel was enlarged with a titled roof in 1894. Then it was included with Viravanallur, and Rev. Fr. Gabriel laid the foundation for the present Church in 1991. The construction of the Church was completed in 1929 by Rev. Fr. A. Couturier S.J. who also built up quarters for the priest. In 1931 Singamparai was made a separate parish and Rev. Fr. A. Couturier became the first parish priest. 


                                                  
He sowed the seeds for good education by starting schools for boys and girls separately. In 1938 the sister of the Immaculate conception were brought from Madurai and they did their best for the betterment of the Parish. Indeed Fr. Couturier uplifted the undeveloped parish in so many ways. Rev. Fr. T. Kurian S.J. Rev. Fr. S.A. Antony Metha S.J. and M.V. Diaz served under Fr. Courturier as Assistant Parish Priest. His amicable and amicable character won the hearts of his parishes, and he was respected to such an extend that they celebrated the Golden Jubilee of his entrance in to the Society of Jesus in 1938 in a grand manner. Fr. Couturier was succeeded by Fr. R. Visuvasam in 1941. The successors were also successful in many aspects. This old Parish celebrated its Golden Jubilee during the time of Rev. Fr. S.L. Arulappan. All priest, who served there took the interest in improving the standard of people life. So many developmental work had been carried out. The school which was only middle, was upgraded up to 12th Standard. Thus the Female Literary was encouraged.
                                            

Tuesday, September 11, 2012

முதல்வரிடம் இடிந்தகரை குழந்தைகள் மனு.....




மனசாட்சியுள்ள இதயங்களை இறுதியாக தட்டுகிறோம்! எங்களின் கூக்குரல் உங்கள் காதுகளில் விழுகிறதா?

குழந்தைகளின் வேண்டுகோள் :

போராட கற்றுத்தந்த அரசுக்கு நன்றி...

பாடப்புத்தகத்தை கையில் சுமந்து செல்லும் வயதில்.. இப்படி போராட்டத்திற்கான குறிப்பு புத்தகத்தை கையில் ஏந்த வைத்த அரசுக்கு நன்றி...

நீங்கள் சுதந்திரமாகவும்... சந்தோசமாகவும்...நோய் இல்லாமலும் அனுபவித்த.... அனுபவிக்க போகும் அந்த வாழ்க்கையை நாங்களும் அனுபவிக்க வேண்டாமா..???

எங்களிடமிருந்து இவை அனைத்தையும் பிடுங்கிவிட்டு நீங்கள் மட்டும் வாழ நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்...???

நாங்கள் சாதிக்க வேண்டிய சாதனைகள் எவ்வளவோ காத்திருக்கிறது....எங்களை மருத்துவ அறையில் அமர்த்திவிட்டு நீங்கள் ஆட்சி அறையிலும்... உங்கள் குழந்தைகளை பள்ளி அறையிலும் அமர்த்த நினைப்பது ஏந்த விதத்தில் நியாயம்...????

எங்கள் பார்வையின் அர்த்தம் இன்னுமா உங்களுக்கு புரியவில்லை??? அது சொல்லுமே ஆயிரம் அர்த்தங்கள்....

உங்கள் குழந்தைக்கு சிறிய பிரச்சினை என்றால் துடிக்கும் உங்கள் மனது.... நாங்கள் அனுபவிக்கபோகும் கஷ்டங்களை நினைத்து எங்கள் தாயும் துடித்துபோவாள் என்று ஏன் நீங்கள் நினைக்கவில்லை..???

உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போது நீங்கள் அடைந்த வலியைதானே... என்னை பெற்றவளும் அடைந்திருப்பாள்...

எங்களை தெய்வத்துடன் ஒப்பிட்டு பேசிய நீங்கள்... இப்போது எங்களை மனிதர்களாககூட பார்க்காதது ஏன்???

இறந்த பின்பு உடல் உறுப்புகள் தானம் செய்யசொல்லும் நீங்கள்... அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட எங்கள் உறுப்புகளை நாங்கள் நினைத்தாலும் மற்றவருக்கு கொடுக்கமுடியாத நிலைமைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்....

தீ சுடும் என்று... அதில் கை வைத்ததினால் கற்றுக்கொண்டேன்... இனி அதில் ஒருபோது கை வைக்ககூடாது என்றும்... மற்றொன்றும் கற்றுக்கொண்டேன் இதை மற்றவருக்கும் கற்றுகொடுக்க வேண்டும் என்று...

அணுவின் பாதிப்புகள் பற்றி...எத்தனையோ எடுத்துக்காட்டுகளை சொல்லியும் நீங்கள் எதற்க்காக அதை ஏற்றுக்கொள்ள மறுக்குறீர்கள்...????

உங்கள் உடம்பில் வியர்வை துளிகள் வராமல் இருக்க... எங்கள் கண்களில் கண்ணீர் துளிகள் வர வேண்டுமா...????

நீங்கள் குளிர்க் காற்றை அனுபவிப்பதற்காக.... நாங்கள் குழிக்குள் போக வேண்டுமா....????

நீங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதற்கும்... தொலைபேசியியல் பேசுவதற்கும்... நாங்கள் தொலைந்து போக வேண்டுமா...???

சாப்பிடும் முன்பு கைகளை கழுவிய பின்பே சாப்பிட வேண்டும்... ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கிறது என்று சொல்லித்தந்த நீங்கள்.... அணுவிலிருந்து வரும் கதிர்வீச்சில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று உங்களால் சொல்லமுடியுமா.... ???? அப்படிப்பட்ட சத்துக்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா...???






















கூடங்குளம்

 கூடன்குள போராட்டத்தில் போலீஸாரின் கேவலமான செயலல் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பொதுமக்கள் மீது வீசியதோடு இல்லாமல் பொதுமக்களின் காலணிகளையும், கற்களையும் மக்கள் மீது வீசியுள்ளனர்.இது தழிழக மற்றும் இந்திய ஆட்சியளர்களின் ஒழுங்கற்ற ஆட்சி தன்மையை காட்டுகிறது. 
                  

அரசன் அன்று கொல்வான் .தெய்வம் நின்று கொல்லும்.


                       


முற்றுகை நடைபெற்று கொண்டிருக்கும் போதே இடிந்தகரையில் போலீஸ் நுழைந்தது மேடையில் பெரியவர்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்தனர் இடிந்தகரையில் யாருமே இல்லாததால் அவர்களுடைய கட்டுபாட்டில் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை. மேரி மாதா ஆலயத்துக்குள் நுழைந்த போலிசார்... மாதா சிலையை உடைத்துவிட்டு..மாதாவினுடைய சேலையையும் உருவிசென்று உள்ளனர் அங்கே வைக்கப்பட்டிருந்த அணுஉலை எதிர்ப்பு பலகையை கிழித்துவிட்டு ஆலயத்துக்குள்ள
ேயே சிறுநீரும் கழித்துள்ளனர் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் பின் மக்கள் அனைவரும் முற்றுகை இடத்தில் இருந்து ஊருக்குள் வந்தஉடன் மக்களின் எதிர்ப்பு காரணமாக காவல்துறை வெளியேறினர் இப்போதய நிலைமை தண்ணீர் சுத்தமாக இல்லை பால் காய்கறி இல்லை மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகிஉள்ளனர் சிறுவர்கள் பதட்டத்தில் உள்ளனர் எந்த நேரத்திலும் காவல்துறை ஊருக்குள் வரலாம்


















Friday, September 7, 2012

TAMILSAHA


Tamilsaha Forever Slideshow: Ramesh’s trip to 3 cities including and Tiruchirappalli was created with TripAdvisor TripWow!

Tamilsaha Forever Slideshow Slideshow

Tamilsaha Forever Slideshow Slideshow:

TripAdvisor™ TripWow ★ Tamilsaha Forever Slideshow Slideshow ★
to KING'SLAND SINGAMPARAI
, SANKAR POLYTECHNIC COLLEGE (near Tuticorin) and Tiruchirappalli.

Stunning free travel slideshows on TripAdvisor

Sunday, September 2, 2012

உயிர் நீயே ..........

                                    

வெற்றி

                          
"தோல்வியா யார் சொன்னது !ஆயிரக்கணக்கான பொருட்கள் பயன்படமாட்டா என்று கண்டிருக்கிறேனே . அது தான் வெற்றி ! " என்று தோல்விகளில் வெற்றி கண்ட எடிசன் 

****
மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.

சிவில் உரிமைகளின் தாய்

                                 

வரலாற்றையே மாற்றிய ஒரு பேருந்து நிகழ்வு ! 


பெண்ணுக்கும், கரு நிறத்திற்கும் மதிப்பில்லாத காலம் அப்போது . வெள்ளையர்கள் ஏறி விட்டால், இருக்கையில் அமர்ந்துள்ள கறுப்பர்கள் அவர்களுக்கு எழுந்து இடம் தரவேண்டும்
. 1955களில் அமெரிக்காவில் இது நடந்தது.

ஒரு வெள்ளையர் பேருந்தில் ஏறியவுடன், கறுப்பர்கள் எழுந்துவிட்டனர். ஒர பெண் மட்டும் எழ மறுத்தார். “நீ எழ மறுத்தால், போலீசைக் கூப்பிடுவேன்” என்றார், ஓட்டுநர். “தாராளமாக செய்யுங்கள்” என்றார் அந்தப் பெண். போலீஸ் வந்தது. அந்தப் பெண்ணைக் கைது செய்தது.

உரிமைக்குக் குரல் கொடுத்த அந்தப் பெண்ணின் பெயர் தான் ரோசாபார்க்ஸ்.

இச்செய்தி கருப்பர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்த ,நீதி கிடைக்கும் வரை மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென புறக்கணிப்பு போராட்டத்தை நிகழ்த்தினர் .

நிறைய மிரட்டல்களுக்கு மத்தியின் ரோசா தொடர்ந்து பொறுமையாக போராடியதால் சிவில் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. சிவில் உரிமைகளின் தாய் என அழைக்கப்படுகிறார்.

"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது" என்பது கருப்பினத்தவர்களின் கூற்று.

ஒருவர் நினைத்தால் சரித்திரத்தை மாற்றலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்.

ANTS

                           

           Ants, like many animals on the Gulf Coast of the USA, have had their ability to survive severely tested in the wake of Hurricane Isaac. In this picture they’re displaying their fascinating team work skills by creating a living life boat on top of the flood waters in Florida. Worker ants make up the bulk of the raft, helping to keep it afloat while continuing to care for the larvae of the colony. The queen ant is safely sheltered in the centre of the bundle, while soldier ants scurry across the top on lookout for potential dangers such as predators...