Like me

Tuesday, January 3, 2012

விஞ்ஞான ரகசியம்!


நெற்றியில் பொட்டு வைப்பதன் விஞ்ஞான ரகசியம்!

பழையவர்கள் பொட்டு வைக்க சொன்ன காரணம் சரியான முறையில் கடத்தப்படவில்லை. இடையில் வந்தவர்கள் குங்குமத்தை ஒரு திருமண அடையாளப் பொருளாகத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் பொட்டு என்பது ஒரு முக்கியமான பொருளாகும். அதிலும் குங்குமம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் வசியம் பற்றி அறிந்திருப்பீர்கள். இதை மேற்கத்தியவர்கள் HYPNOTISM என்று அழைக்கிறார்கள். மனதை ஒரு முகப்படுத்தக் கூடிய ஒருவரால் இது சாத்தியப்படும்என்பது எல்லோருக்கும்தெரியும்.
சரி நெற்றிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் பார்ப்போமா? எமது கண்ணில் பெறப்படும் ஒளி சமிஞ்யை நரம்பின் மூலம் (OPTIC NERVES)  மூளைக்கு அனுப்பப்படும்.  வலக்கண்ணினுடைய சமிஞ்யை இடப்பக்க மூளையும், இடக்கண்ணினுடைய சமிஞ்யை வலப்பக்க மூளையும் பெற்றுக் கொள்ளும் இந்த நரம்புகள் சந்திக்கும் இடம் தான் முக்கியமான இடமாகும் இதை ஆங்கிலத்தில் (OPTIC CHAISMA)  என்று அழைப்பார்கள். இது சரியாக நெற்றிப் பொட்டுக்கு நேரே தான் இருக்கிறது.
எம்மூர் சந்திகளில் யாராவது விடுகாலிகள் நின்றால் குமருகள் போக  முடியாதது போல் தான் இந்த சந்தியில் ஏதாவது தடங்கல் வந்தால் பார்வை அம்பெல் தான். குறிப்பாக சொல்வதானால் இதற்கு மேல் தான் கபச்சுரப்பி இருக்கிறது. இதில் ஒரு சிறு வீக்கம் வந்தாலும் கண் பார்வையில் வித்தியாசம் தெரியும். நெற்றிப் பொட்டு என்பது ஒரு முக்கியமான இடம். ஒரு கராத்தே வீரரை கேட்டுப்பாருங்கள் ஒருவருக்கு நெற்றிப் பொட்டில் ஏற்படும் தாக்கத்தால் எவ்வளவு நிலை குலைவு ஏற்படும்.

விஞ்ஞானம்

சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள்: விஞ்ஞானிகள் தகவல்

சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள் அலைந்து திரிவதாகவும், அவர்களை நெருங்கி பார்க்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதற்கான ஆதாரங்களோ, அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர் என்பதற்கான ஆதாரங்களோ கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்திய வம்சா வழி விஞ்ஞானி உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாக நம்புகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இருவர் ஒபாமா நிர்வாகத்தின் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர். எங்களது ஆழமான விண்வெளி ஆராய்ச்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாசாவின் பயோனீர் மற்றும் வொயா ஜெர் விண்வெளி ஓடங்களை கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்தால் இது புலப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் இந்த கருத்தை “ஆக்டா” என்ற விண்வெளிக்கான அமைப்பு ஏற்றுக் கொண்டு அதன் இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளது.

ராக் எத்திக்ஸ் இன்ஸ்டியூட் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் ஹக் மிஸ்ரா, புவி மற்றும் சுற்றுச்சூழல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ரவிக்குமார் ஆகியோரும், வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர். வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடம் நமது சூரிய குடும்பத்தை சுற்றி வருவதை காண முடிகிறது. ஆனால் அதன் புறப்பகுதியை நெருங்கிச் சென்று பார்க்க முடியவில்லை. இன்னும் ஆழமாகச் சென்று நுணுக்கமான முறையில் ஆராய்ச்சி செய்தால் வேற்றுக்கிரக வாசிகளை நெருங்கிச் சென்று பார்க்க முடியும் என்று அவர்கள் உறுதிப்பட கூறி உள்ளனர்.