- மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ? வேறு என்ன காரணம் ? தீர்வு என்ன ? ஓய்வு பெற்ற மின் பொறியாளர் திரு சா . காந்தி அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மின் வெட்டுக்கான காரணத்தை மற்றும் தீர்வு திட்டத்தை பற்றி விளக்குகிறார் . கேள்வி பதிலாக தொகுக்கப் பட்டுள்ளது.1. கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப்பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? துறைரீதியாக இதனைப் பட்டியலிட முடியுமா?தொடர்ச்சியாகவே இடைவெளி சுமார் 2500 மெகா வாட்டாக இருந்து கொண்டிருக்கிறது . இரவு நேரங்களில் மின் தேவை குறைவு. ஆனால் இப்பொழுது இரவில் கூட தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. இரவு நேரங்களில் உள்ள இந்தப் பற்றாக்குறை பெரும்பாலும் விவசாயத்துறையைப ் பாதிப்பதாக உள்ளது. தொழில்துறைக்கு பொதுவாக 30% பற்றாக்குறை உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து அறிவிப்பில்லாத மின்வெட்டு தனியார் மின் நிலையங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு ள்ளது. உற்பத்தித் திறன் இருந்தும் குறிப்பாக நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2. யார் அந்த நான்கு நிறுவனங்கள்? எதற்கு இந்த உற்பத்தி நிறுத்தம்? பிள்ளைப் பெருமாநல்லூர் (பி.பி.என் 330 மெகாவாட்) * ஜி.எம்.ஆர் வாசவி (196 மெகாவாட்) * மதுரை பவர் (106 மெகாவாட்) * சாமல்பட்டி (105.6 மெகாவாட்) மொத்தம் 737.6 மெகாவாட். மின்வாரியத்தில் இருந்து தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகைக்காகவே இந்த உற்பத்தி நிறுத்தம். இந்த நிலுவை தொகைகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட தமிழக மக்களைப் பிணை வைத்து மின்வாரியத்தை இக்கட்டிற்குத் தள்ளியிருக்கிறா ர்கள். இதில் கொடுமை என்னவென்றால் பிபிஎன் நிறுவனம் மின் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் இந்த நேரத்திலும் மின் வாரியம் தினமும் இந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் தந்தாக வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனம் அப்போல்லோ மருத்துவமனை முதலாளிகளுக்கு சொந்தமானது.3. மின் உற்பத்தி தொடர்ச்சியாகக் குறைந்து இருப்பதற்கான காரணம் என்ன? நடுவன் அரசின் மின்சாரக் கொள்கையே இதற்குக் காரணம். 1992 ஆண்டிற்குப் பிறகு எதிர்கால மின் உற்பத்தி அனைத்தையும் தனியார் மட்டுமே மேற்கொள்ளலாம் என்பது தான் அது. அனைத்து மின் வாரியங்களின் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மறுக்கப்பட்டன. அதன் விளைவையே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம ்.4.தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்க்கு பாதகமாகவும் நடந்து கொண்டதற்கான எடுத்துக்காட்டு களைக் கூறமுடியுமா? ஏராளமாகக் கூறமுடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியாருக்கும் மின்வாரியத்துக் கும் இடையிலான வழக்குகளில் தனியாருக்கு சாதகமாகவே ஒருதலைப்பட்சமாக ஆணையம் தீர்ப்பு வழங்கிவந்துள்ளத ு. இந்த வழக்குகளில்பெரும்பாலானவை நூறு கோடி ரூபாயிக்கு மேல் வாரியத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவை. மிகக் குறிப்பாக, ஜி.எம்.ஆர் வாசவிக்கு வழங்கப்பட்ட 484 கோடி ரூபாய்க்கு தீர்ப்பு, பிபிஎன் 189 கோடி ரூபாய் கேட்ட வழக்கில் 1050 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கச்சொல்லி வழங்கிய தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்துக ின்றன. இவை இரண்டும் உயர்நீதிமன்றத்த ின் தடையையும் மீறி சுய ஆர்வத்தின் அடிப்படையில் ஆணையம் வழங்கிய தீர்ப்புகளே. ஆணையத்தின் மீது எங்கள் அமைப்பு கடந்த ஜூலையில் ஒரு ஊழல் புகார் மனுவை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது . பிரச்சனையை அறிந்து மக்கள்தான் ஆணையத்தின் போக்குகள் குறித்து சிந்திக்க வேண்டும்.5. தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க கூடங்குளம் அணுமின் திட்டத்தால் மட்டுமே முடியும் என்ற கருத்து சமீப காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்து சரிதானா? பைத்தியக்காரத்தனமானது.கூடங்குளத்தில்இருந்து நமக்கு கிடைக்கவிருப்பது 462 மெகாவாட்தான். இன்று நான்கு தனியார் மின் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது மூலமாக 737 மெகாவாட் இழப்பை ஏற்படுத்தியுள்ளர்கள். 2010ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டிய2700 மெகாவாட் மின்வாரிய உற்பத்தி நிலையங்களை நான்கு தனியார் மின் நிறுவனங்கள் கொண்டுவந்த செயற்கையான கடன் தொல்லையின் காரணமாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தமிழக மக்களைப் பிணைக்கதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை எதிர்க்காமல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனமானது.6. தடையற்ற மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் சாத்தியம்தானா? சாத்தியம்தான். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரச் சட்டத்தில் (2003) பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதாவது, மீண்டும் மாநில அரசிடம் மின்சாரத் துறை ஒப்படைக்க வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் முழுமையாக நீக்கப்படவேண்டும்.7. தமிழ்நாட்டின் மின்சார பிரச்சனையைத் தீர்க்க வழிதான் என்ன? திட்டமிடப்பட்டுள்ள அனைத்து மின்வாரிய உற்பத்தி நிலையங்களும் திட்டமிட்டகாலத்திற்குள்ளே செயல்பாட்டுக்கு க் கொண்டுவருவது தான் இதற்கான வழி.
நன்றி: திரு. சா. காந்தி ஓய்வுபெற்ற மின் பொறியாளர்
தலைவர் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள்
Saturday, September 15, 2012
மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ?
- மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ? வேறு என்ன காரணம் ? தீர்வு என்ன ? ஓய்வு பெற்ற மின் பொறியாளர் திரு சா . காந்தி அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மின் வெட்டுக்கான காரணத்தை மற்றும் தீர்வு திட்டத்தை பற்றி விளக்குகிறார் . கேள்வி பதிலாக தொகுக்கப் பட்டுள்ளது.1. கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப்பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? துறைரீதியாக இதனைப் பட்டியலிட முடியுமா?
பட்டாசு வெடிச்சதுக்கே FIRE SERVICE இல்லாத நாடே...........
பட்டாசு வெடிச்சதுக்கே FIRE SERVICE இல்லாத நாடே..
.
.
.
.
.
.
.
எம் மக்களுக்கு கூடங்குளம் அணுஉலை ஒரு கேடே.
நமக்கு மின்சாரம் வேண்டும்...! ஆனால் மக்களை அழித்து சுடுகாட்டில் விளக்குகள் எரியவேண்டாம்...!
கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்..!
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களையும், உதயகுமார் உள்ளிட்ட வழி நடத்தும் மக்கள் போராளிகளையும் தேசத் துரோகிகளாகவும், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்தடைக்கு இவர்கள் தான் காரணம் எனவும், இவர்களை சுட்டுக் கொன்று விட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும், அதன் பிறகு கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்டு தமிழகமே மின்வெட்டு
இருளிலிருந்து மீண்டுவிடும் என்பது போலவும் ஒரு "மூட நம்பிக்கை" நிலவிக் கொண்டிருக்கிறது.
அனைவரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கும், கூடங்குளம் போராட்டங்களுக்கு துளியும் தொடர்பு இல்லை. இது இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிறிதும் பெரிதுமாக நடைபெற்று வரும் ஒரு நெடிய போராட்டமாகும். கடந்த ஒரு வருடமாக இப்போராட்டம் மக்கள் எழுச்சிமிகு தொடர் போராட்டமாக மாறியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்...?
வாழ்வுரிமை
கூடங்குளம் அணு உலையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குள் 35 ஆயிரம் மக்களும், 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஒரு லட்சம் மக்களும் வாழ்கிறார்கள். அம்மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் என்பது தென்தமிழகம், கேரளா மற்றும் அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வசிக்கும் ஊருக்கு அருகில் அணுஉலை அமைக்கப்பட்டால், அதன் ஆபத்துகளை அறிந்தபிறகு அதை நாம் அனுமதிப்போமா...? எதிர்ப்போமா....? என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஜப்பானும், இந்தியாவும்
ஜப்பானில் கடந்த 11.03.2011 அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் "புகுஷிமா அணு உலை" பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு பரவியது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஜப்பானாலேயே இதைத் தடுக்க முடியவில்லை. சுமார் 20 ஆயிரம் ஜப்பானியர்கள் இறந்திருக்கலாம் என்றும், அதை ஜப்பானிய அரசு மறைப்பதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. அணுஉலை கசிவை, விபத்தை ஜப்பான் போன்ற வளர்ந்த - வல்லமை மிக்க நாடுகளாலேயே தடுக்க முடியவில்லை எனில், இந்தியா போன்ற தேசங்களால் என்ன செய்ய முடியும்...? தானே புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு முதலுதவி செய்யவே நமக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது. அணு உலை வெடித்தால், நமது அரசின் மீட்பு நிலை எப்படி இருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
14000 கோடியா...? உயிர்களா...?
14000 கோடிகளை முதலீடு செய்து அணுஉலை கட்டிய பிறகு, இப்போது அதை எதிர்ப்பது நியாயமா..? என சிலர் கேட்கிறார்கள். இந்த அணுஉலை அமைக்கப்பட்ட 1980களில் இதுகுறித்த விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. நம் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போகிறது, நமக்கெல்லாம் வேலைகளும், சலுகைகளும் கிடைக்கப் போகிறது என அரசின் ஏமாற்று பிரச்சாரங்களை அம்மக்கள் நம்பியிருந்தனர்.
இதுகுறித்து உதயகுமார் உள்ளிட்ட பலர் அப்போது எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த போது அதை அம்மக்கள் எதிர்த்தனர். ஜப்பான் - புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகே அப்பகுதி மக்கள் தங்களுக்கு நேரப்போகும் அபாயங்களை உணர்ந்தனர். அதன்பிறகே கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். உதயகுமார், புஷ்பராயன், ஏசுராஜ் போன்ற வழி நடத்தும் போராளிகளே தடுத்தாலும், அம்மக்கள் போராட்டங்களை கைவிடப் போவதில்லை என்பதே உண்மை.
14000 கோடி ரூபாய் வீணாகிறதே... என கவலைப்படும் "நல்லவர்கள் - தேசபக்தர்கள்" ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு ஒரு மணமகனை நிச்சயம் செய்து, திருமணம் ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்படும் என முடிவெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். திருமணம் நெருங்கும் தருணத்தில், மணமகனுக்கு "எய்ட்ஸ் நோய்" இருப்பதாகத் தெரியவருகிறது. அப்போது நிச்சயத்தை காரணம் காட்டி திருமணத்தை நடத்துவீர்களா...? அல்லது ரத்து செய்வீர்களா...? இதற்கு நீங்கள் தரும் பதில் தான் கூடங்குளம் போராட்டக்காரர்களின் கேள்விகளுக்கும் பொருந்தும்.
அணுஉலை மூலம் அதிக மின்சாரம் கிடைக்குமா...?
இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களில் நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் நிலையங்களிலிருந்து 65.10 சதவீதமும், புனல் மின் நிலையங்களிலிருந்து 21.22 சதவீதமும், சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05 சதவீதமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேசமயம், அணுஉலைகளிருந்து மொத்தமே 2.36 சதவீத மின்சாரத்தை மட்டுமே பெறப்படுகிறது.
கூடங்குளத்தில் அணு உலை இயக்கப்பட்டால் மொத்தமாக 15 நிமிடங்களுக்குத் தேவையான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்த உண்மைகளை மத்திய மாநில அரசுகள் மறைக்கின்றன.
மின்சார உற்பத்தியைப் பெருக்க அணுஉலைகளுக்கு பதிலாக கடல் அலை, நதிகள், அருவிகள், காற்றாலை, சூரிய ஒளி ஆகிய இயற்கை துறைகளிலிருந்தும் - தொழில்நுட்பங்களிலிருந்தும்
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த நாடுகளான ஜெர்மனி போன்ற பல நாடுகள் கூடங்குளத்தில் இருப்பது போன்ற அணுஉலைகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவும், ஜப்பானும் புதிதாக அணு உலைகளை தங்கள் நாடுகளில் நிறுவ தடை விதித்துவிட்டன.
உலக யுரேனியத்தில் 23 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, தனது நாட்டில் இதுவரை ஒரு அணுஉலையைக் கூட கட்டவில்லை. தற்போது ரஷ்யாவின் துணையோடு கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை என்பது வி.வி.ஐ.ஆர். வகையைச் சார்ந்ததாகும். இந்த வகை அணுஉலைகள் கடற்கரைப் பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்டதில்லை. ரஷ்ய பொறியாளர்களுக்கு இதில் முன் அனுபவமும் இல்லை. அதை விட கவனிக்கத்தக்கது, இந்த வகை அணுஉலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல் முறையாக கடல் நீரைக் கொண்டு பரிசோதிக்க இருக்கின்றன.
நாம் கேட்பது என்னவெனில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் என்ன, பரிசோதனை எலிகளா...? உலகிலேயே இவர்கள்தான் ஊருக்கு இளைத்தவர்களா...?
ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்த பிறகு, ரஷ்ய அணுஉலைகளின் தரத்தை ஆராய ஒரு குழுவை அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அக்குழு, "சக்தி வாய்ந்த புகுஷிமா ஜப்பானிய அணுஉலை விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கான வலிமை ரஷ்ய அணு உலைகளுக்கு இல்லை' என அறிக்கை சமர்ப்பித்து விட்டது.
ரஷ்யாவில் "செர்னோபிலில்' தான் 1986 ஜூன் மாதத்தில் கதிர்வீச்சு வெளியேறி 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதில் 9 முதல் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட நூறு மடங்கு ஆபத்துகளை ஏற்படுத்தியது.
ரஷ்யாவின் துணையோடு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலைகள், புயல், சுனாமி, பூகம்பம் ஏற்படும் வாய்ப்புள்ள புவிக்கோட்டில் அமைந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.
தேசத்துரோகிகள் யார்....?
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுஉலைகள் முதலில் கேரளாவில் தான் அமைக்க திட்டமிடப்பட்டன. கேரள அரசும், மக்களும் விழித்துக் கொண்டதால் அது தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டுள்ளது.
"அணுஉலைகளை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்" என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.
மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் உள்ள சமூகப் பொறுப்புணர்வு தமிழர்களுக்கு இல்லையா...? உதயகுமார் போன்றவர்கள் தேசத்துரோகிகள் என்றால் கேரள, மேற்குவங்க அரசியல் தலைவர்கள் எல்லாம் யார்...?
அமெரிக்கா - ரஷ்யாவின் செல்லப் பிள்ளைகளான மன்மோகன் சிங்கும், மான்டேக் சிங் அலுவாலியாகவும் யார்...? மக்களுக்காகப் போராடும் உண்மையான தலைவர்களை எதிர்கால வரலாறு விளக்கத்தான் போகிறது.
அனைவரும் மதிக்கும் அப்துல் கலாம், கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறாரே...? எனலாம்.
அப்துல் கலாம் ஒரு அரசாங்க பிரதிநிதி. அவர் ஒரு ஏவுகணை விஞ்ஞானி தானே தவிர அணு விஞ்ஞானி அல்ல. அவரை நாமும் மதிக்கிறோம். ஆனால் தினமும் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காகவோ, தீண்டாமையால் அவதிப்படும் தலித்துகளுக்காகவோ, கலவரங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர்களுக்காகவோ என்றைக்காவது ஐயா அப்துல் கலாம் குரல் கொடுத்திருக்கிறாரா..? என்பதையும் கேள்விகளாக முன்வைக்கிறோம்.
காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை வரவேற்றவர்கள் கூட நேதாஜியின் நியாயங்களையும் ஏற்றார்கள் என்பதை "அறிவுஜீவிகள்' புரிந்துகொள்ள வேண்டும்.
அப்துல் கலாம் அவர்கள் இவ்விஷயத்தில் மக்களின் பக்கம் நிற்காமல் அரசு பக்கம் நிற்பது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது.
அணுமின் நிலையங்களின் உண்மை நிலை.
இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட அணுஉலைகள் எதுவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும்தான் செலவுகள் பன்மடங்காகின்றன. இன்னும் பல புதிய அணுஉலைகளைக் கட்டினாலும், 2050ல் கூட அணுஉலைகளின் மூலம் 5 சதவீத மின்தேவையைக் கூட எட்ட முடியாது என்பதே உண்மை.
உண்மையில் அணுஉலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறதா..? அல்லது மின்சாரம் என்ற பெயரில் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகிறதா...? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.
மக்களே...!!! சிந்திப்பீர்...!!!
அணுஉலைகளில் கசிவு என்பது தவிர்க்கவே முடியாததாகும். அவற்றின் கழிவுகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அது சேதமடைந்தால் அணுகுண்டுகளினால் ஏற்படும் பேராபத்தை விட மோசமாக இருக்கும்.
அப்பகுதிகளில் கடல்நீர் பாதிக்கப்பட்டு மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழியும். உணவு, குடிநீர், காற்று மாசுபடும். சுற்றுச்சூழல் கெடும். புற்றுநோய் பரவுவது தவிர்க்க முடியாதது என்றெல்லாம் உலக அனுபவங்கள் கூறுகின்றன. விஞ்ஞானிகளும் எச்சரிக்கிறார்கள்.
1984ல் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் "யூனியன் கார்பைட்' என்ற அமெரிக்க நிறுவனத்தில் விஷவாயு கசிந்ததில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததையும், இன்றுவரை அங்கு குழந்தைகள் ஊனமுற்றும், புற்றுநோயோடும் பிறப்பதையும் பார்க்கும் போது நெஞ்சம் வெடிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடுகள் இல்லை. இந்திய அரசு நம் மக்களை மறந்து விட்டு, அமெரிக்க கம்பெனிக்கு ஆதரவாக இன்று வரை செயல்படுவதைப் பார்த்த பிறகும், நீங்கள் கூடங்குளம் போராட்டத்தை எதிர்த்தால் அது உங்கள் மனசாட்சியைக் கொல்வதாகவே இருக்கும்.
நமக்கு மின்சாரம் வேண்டும்...! ஆனால் மக்களை அழித்து சுடுகாட்டில் விளக்குகள் எரியவேண்டாம்...!
-எம். தமிமுன் அன்சாரி.
வெளியீடு:-மனிதநேய மக்கள் கட்சி.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நாம் கேட்கவேண்டிய கேள்விகள்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மக்களாகிய நாம் கேட்கவேண்டிய கேள்விகள் கொஞ்சம்
இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியுமா என்று அவர்தான் சொல்லவேண்டும். இந்தக் கேள்விகளை நீங்களும் அவரிடம் கேட்க விரும்பினால், இதை செராக்ஸ் எடுத்தோ ஸ்க
ேன் செய்தோ உங்கள் கையெழுத்திட்டு
மாண்புமிகு முதலமைச்சர்,
தமிழ்நாடு அரசு,
புனித ஜர்ஜ் கோட்டை, சென்னை -600009 என்ற
முகவரிக்கோ cmcell@tn.gov.in என்ற முகவரிக்கோ அனுப்புங்கள்.
1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?
3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?
5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?
6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?
11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல்குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?
12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா?
13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?
15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும் சரியான முடிவு எடுக்காவிட்டால்…..
பதில் உங்கள் கையில்.
கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்ந்தால்.........
கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்ந்தால், அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பாதிக்கப் படப் போகும் இடங்களைக் குறிக்கும் வரைபடம்.
கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் நூலிலிருந்து
வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலை செய்யப்பட்ட பத்தாவது நினைவு விழா தஸ்தக் தில்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேச விழாவாக கொண்டாடப்பட்டது. அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள் குறித்து மிக காத்திரமான பார்வையுடன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரது பேச்சுஅன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒரு செரிவான உரையாடலைச் சாத்தியமாக்கியது. அன்று மாலை ஒர் உரையாடலின் போது என்.ராம் எனக்கு இவர் ஒரு தமிழர் பெயர் உதயகுமார் என்று அறிமுகம் செய்து வைத்தார். உதயகுமாருடனான நட்பு அந்த கணத்தில்தான் மலர்ந்தது .அப்பொழுது அவர் அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ள மினியஸோட்டா பல்கலைக்கழகத்தில் இனம் மற்றும் வறுமை Race and poverty பற்றிய ஆய்வுத்துறையில் பேராசிரியராக வந்தார். அவரது பல கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். இலங்கை பிரச்சினை தொடர்பான Intervention in srilanka: history and prospects ஸும் இந்திய ஹிந்துத்துவ அரசியல் தொடர்பான Presenting the past: the politics of hindu history writing in india வும் உலகம் வரலாறு சமூகம்சார் அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. அவர் இணையத்தில் அமைதிக்கான சமாதானத்துக்கான ஒரு படிப்பை நடத்தி வந்தார். பாஜக அரசு ஆட்சிக்கு வந்து இங்கு செய்த பல மோசடிகளை அவர் தன் வலைத்தளத்தில் WWW.bjpgovermentwatch.com எழுதி வந்தார். இந்த வலைத்தளம் சார்ந்த ஆலோசனைகளை என்.ராம் அவர்கள் வழங்கினார். இங்கு அவுட்லுக், இந்தியாடுடே என பல ஆங்கில பத்திரிக்கைகளில் தொடர்ந்து அவரது கட்டுரைகள் வெளிவந்தன. அவர் அமெரிக்காவில் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல இந்திய அறிவுஜீவிகளை அறிமுகம் செய்தார். ஆஷிஷ் நந்தி, என்.ராம், அட்மிரல் ராம்தாஸ், பிரபுல் பித்வாய், அஃசின் விநாயக், க்யான் பிரகாஷ், கே.என்.பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர் என பல எழுத்தாளர்களை, செயல்பாட்டாளர்களை அவர் அமெரிக்கா அழைத்துச்சென்று பல்கலைக்கழகத்தில் உரைகள் நிகழ்த்தச்செய்தார். அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் மிகவும் சுறுசுறுப்பான செயல்பாட்டாளராக அவர் திகழ்ந்தார். 2007 ல் வாஷிங்டன் டி.சியில் நடந்த விழாவில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை அவரது பணிகளைப்பாராட்டி விருது கொடுத்து கௌரவித்தது. அவரது பிரியத்திற்குறிய பாட்டி புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு மரணம் அடைந்தார், அப்பொழுது அவரின் பெற்றோர் அந்த பாட்டிக்கு அருகில் அவரை பல ஆண்டுகள் அனுமதிக்கவில்லை. மெல்ல அவரது குடும்பத்தில் பலர் புற்றுநோயால் இறந்தனர். இந்த பிண்ணணியில்தான் கதிரியக்கம் ஏற்கனவே அதிகமாக உள்ள கன்னியாகுமரியில் அணு உலையைத் திறந்தால் இங்குள்ள மக்கள் மிக வேகமாக புற்றின் வலையில் விழுந்து மடிவார்கள் என்பதால் கூடங்குளம் உலையை பற்றி அரசு அறிவித்த நாள் முதல் அது சார்ந்து செயல்படத் தொடங்கினார். ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் அவர் இங்கு வரும் போது தன் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரத்தை விட, இந்த ஆபத்தை எப்படியும் விளக்கிவிட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் மத்தியிலும், நாகர்கோவில் வாழ் பெரியவர்களுடனும் செலவிட்டதுதான் அதிகம். சில விடுமுறைகளில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் தில்லியில் சந்தித்து அனைவருக்கும் இது பற்றிய எல்லா ஆதாரங்களையும் கொடுத்தாள்ளார். பின் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கே வந்து தங்கிவிட்டார். தொடர்ந்து இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் உள்ள அணு ஆயுத, அணு உலை எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறார். அமெரிக்காவில் வாழ்ந்தபின் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல். தன் தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விடுத்து தன் மனசாட்சியின் குரலைப் பின்தொடர்ந்து வந்த மிகச்சிலரில் முதன்மையானவர். ***
கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் நூலிலிருந்து
திரு ஆ.முத்துகிருஷ்ணன..
Friday, September 14, 2012
Singamparai in Tirunelveli District-627601 With 8.73828 Latitude and 77.51769 Longitude.
St.PAUL'S Shrine - Singam Parai Slideshow: TAMILSAHA’s
trip to KINGS LAND " SINGAMPARAI "
Singamparai is situated in Tirunelveli District , Tamil Nadu .
Singamparai Pincode is 627601 With 8.73828 Latitude and 77.51769 Longitude.
About 200 years ago the Catholic community converted by St. Francis Xavier and other Catholic community from Somantheperi came and settled in Mylapuram near Mukudal. The cash and conflicts between the two groups paved the way for the migration of the community and the creation of Singamparai. The Catholics from Somanthaperi bought the northern side of Mylapuram from a Muslim land-lord of Pettai and settled there with the help of Rev. Fr. Paul Nather, the visiting missionary.
There after it was named as Singamparai. A small chapel was built here and the statue of St. Paul was installed in it, which was removed from the Church of St. Peter and Paul at Mylapuram. The origin of this new hamlet of Singamparai dates as far back as 1845. Till 1901 Singamparai was under the jurisdiction of Sendamaram during which period the Chapel was enlarged with a titled roof in 1894. Then it was included with Viravanallur, and Rev. Fr. Gabriel laid the foundation for the present Church in 1991. The construction of the Church was completed in 1929 by Rev. Fr. A. Couturier S.J. who also built up quarters for the priest. In 1931 Singamparai was made a separate parish and Rev. Fr. A. Couturier became the first parish priest.
He sowed the seeds for good education by starting schools for boys and girls separately. In 1938 the sister of the Immaculate conception were brought from Madurai and they did their best for the betterment of the Parish. Indeed Fr. Couturier uplifted the undeveloped parish in so many ways. Rev. Fr. T. Kurian S.J. Rev. Fr. S.A. Antony Metha S.J. and M.V. Diaz served under Fr. Courturier as Assistant Parish Priest. His amicable and amicable character won the hearts of his parishes, and he was respected to such an extend that they celebrated the Golden Jubilee of his entrance in to the Society of Jesus in 1938 in a grand manner. Fr. Couturier was succeeded by Fr. R. Visuvasam in 1941. The successors were also successful in many aspects. This old Parish celebrated its Golden Jubilee during the time of Rev. Fr. S.L. Arulappan. All priest, who served there took the interest in improving the standard of people life. So many developmental work had been carried out. The school which was only middle, was upgraded up to 12th Standard. Thus the Female Literary was encouraged.
Tuesday, September 11, 2012
முதல்வரிடம் இடிந்தகரை குழந்தைகள் மனு.....

குழந்தைகளின் வேண்டுகோள் :
போராட கற்றுத்தந்த அரசுக்கு நன்றி...
பாடப்புத்தகத்தை கையில் சுமந்து செல்லும் வயதில்.. இப்படி போராட்டத்திற்கான குறிப்பு புத்தகத்தை கையில் ஏந்த வைத்த அரசுக்கு நன்றி...
நீங்கள் சுதந்திரமாகவும்... சந்தோசமாகவும்...நோய் இல்லாமலும் அனுபவித்த.... அனுபவிக்க போகும் அந்த வாழ்க்கையை நாங்களும் அனுபவிக்க வேண்டாமா..???
எங்களிடமிருந்து இவை அனைத்தையும் பிடுங்கிவிட்டு நீங்கள் மட்டும் வாழ நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்...???
நாங்கள் சாதிக்க வேண்டிய சாதனைகள் எவ்வளவோ காத்திருக்கிறது....எங்களை மருத்துவ அறையில் அமர்த்திவிட்டு நீங்கள் ஆட்சி அறையிலும்... உங்கள் குழந்தைகளை பள்ளி அறையிலும் அமர்த்த நினைப்பது ஏந்த விதத்தில் நியாயம்...????
எங்கள் பார்வையின் அர்த்தம் இன்னுமா உங்களுக்கு புரியவில்லை??? அது சொல்லுமே ஆயிரம் அர்த்தங்கள்....
உங்கள் குழந்தைக்கு சிறிய பிரச்சினை என்றால் துடிக்கும் உங்கள் மனது.... நாங்கள் அனுபவிக்கபோகும் கஷ்டங்களை நினைத்து எங்கள் தாயும் துடித்துபோவாள் என்று ஏன் நீங்கள் நினைக்கவில்லை..???
உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போது நீங்கள் அடைந்த வலியைதானே... என்னை பெற்றவளும் அடைந்திருப்பாள்...
எங்களை தெய்வத்துடன் ஒப்பிட்டு பேசிய நீங்கள்... இப்போது எங்களை மனிதர்களாககூட பார்க்காதது ஏன்???
இறந்த பின்பு உடல் உறுப்புகள் தானம் செய்யசொல்லும் நீங்கள்... அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட எங்கள் உறுப்புகளை நாங்கள் நினைத்தாலும் மற்றவருக்கு கொடுக்கமுடியாத நிலைமைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்....
தீ சுடும் என்று... அதில் கை வைத்ததினால் கற்றுக்கொண்டேன்... இனி அதில் ஒருபோது கை வைக்ககூடாது என்றும்... மற்றொன்றும் கற்றுக்கொண்டேன் இதை மற்றவருக்கும் கற்றுகொடுக்க வேண்டும் என்று...
அணுவின் பாதிப்புகள் பற்றி...எத்தனையோ எடுத்துக்காட்டுகளை சொல்லியும் நீங்கள் எதற்க்காக அதை ஏற்றுக்கொள்ள மறுக்குறீர்கள்...????
உங்கள் உடம்பில் வியர்வை துளிகள் வராமல் இருக்க... எங்கள் கண்களில் கண்ணீர் துளிகள் வர வேண்டுமா...????
நீங்கள் குளிர்க் காற்றை அனுபவிப்பதற்காக.... நாங்கள் குழிக்குள் போக வேண்டுமா....????
நீங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதற்கும்... தொலைபேசியியல் பேசுவதற்கும்... நாங்கள் தொலைந்து போக வேண்டுமா...???
சாப்பிடும் முன்பு கைகளை கழுவிய பின்பே சாப்பிட வேண்டும்... ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கிறது என்று சொல்லித்தந்த நீங்கள்.... அணுவிலிருந்து வரும் கதிர்வீச்சில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று உங்களால் சொல்லமுடியுமா.... ???? அப்படிப்பட்ட சத்துக்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா...???










கூடங்குளம்
கூடன்குள போராட்டத்தில் போலீஸாரின் கேவலமான செயலல் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பொதுமக்கள் மீது வீசியதோடு இல்லாமல் பொதுமக்களின் காலணிகளையும், கற்களையும் மக்கள் மீது வீசியுள்ளனர்.இது தழிழக மற்றும் இந்திய ஆட்சியளர்களின் ஒழுங்கற்ற ஆட்சி தன்மையை காட்டுகிறது.
அரசன் அன்று கொல்வான் .தெய்வம் நின்று கொல்லும்.

அரசன் அன்று கொல்வான் .தெய்வம் நின்று கொல்லும்.
முற்றுகை நடைபெற்று கொண்டிருக்கும் போதே இடிந்தகரையில் போலீஸ் நுழைந்தது மேடையில் பெரியவர்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்தனர் இடிந்தகரையில் யாருமே இல்லாததால் அவர்களுடைய கட்டுபாட்டில் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை. மேரி மாதா ஆலயத்துக்குள் நுழைந்த போலிசார்... மாதா சிலையை உடைத்துவிட்டு..மாதாவினுடைய சேலையையும் உருவிசென்று உள்ளனர் அங்கே வைக்கப்பட்டிருந்த அணுஉலை எதிர்ப்பு பலகையை கிழித்துவிட்டு ஆலயத்துக்குள்ள
ேயே சிறுநீரும் கழித்துள்ளனர் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் பின் மக்கள் அனைவரும் முற்றுகை இடத்தில் இருந்து ஊருக்குள் வந்தஉடன் மக்களின் எதிர்ப்பு காரணமாக காவல்துறை வெளியேறினர் இப்போதய நிலைமை தண்ணீர் சுத்தமாக இல்லை பால் காய்கறி இல்லை மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகிஉள்ளனர் சிறுவர்கள் பதட்டத்தில் உள்ளனர் எந்த நேரத்திலும் காவல்துறை ஊருக்குள் வரலாம்


Monday, September 10, 2012
KINGS LAND - SINGAM PARAI
Ramesh’s trip to KING'SLAND " SINGAMPARAI" was created with TripAdvisor TripWow!
KINGS LAND - LION ROCK
சிங்கம் பாறை-தமிழர்நாடு Slideshow: Ramesh’s trip to சிங்கம் பாறை-தமிழர்நாடு (near Puvar, Kerala) was created with TripAdvisor TripWow!
Subscribe to:
Posts (Atom)


