Like me

Saturday, March 17, 2012

ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னன்

                                              

                                      ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னனின் நினைவு நிகழ்வு!

கண்டியை தனது இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்த ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னனான கண்ணுச்சாமியின் 181ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு தமிழகம் வேலூரில் இடம்பெற்றுள்ளது.


சிங்களவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு 10.02.1815 அன்று பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் மன்னன் கண்ணுச்சாமி 30.01.1832 அன்று தமிழகம் வேலூர் சிறையில் சுகவீனமுற்று சாவடைந்தார்.

இவ் ஈழத்தமிழ் மன்னனின் 181ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வேலூரில் அமைந்திருக்கும் அவரது நினைவாலயத்தில் கடந்த 30.01.2012 அன்று அவரது உறவினர்களால் நினைவுகூரப்பட்டது.

1739ஆம் ஆண்டிலிருந்து கண்டி இராசதானியை ஆட்சி செய்த நான்கு தமிழ் மன்னர்களில் கடைசி மன்னனாக விளங்கிய கண்ணுச்சாமி அவர்கள் மதுரை நாயக்க வம்சத்தின் தமிழ்வழித் தோன்றல்களில் ஒருவர் ஆவார்.



18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய வன்னி மன்னன் பண்டாரவன்னியனுடனும், தமிழகத்தைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டப்பொம்மனுடனும் இவர் நல்லுறவைப் பேணி வந்தமைக்கான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

சிறீவிக்கிரம ராஜசிங்கன் என்ற முடிப்பெயருடன் கண்டியை ஆட்சிசெய்த இத் தமிழ் மன்னனின் கொடியை 1945ஆம் ஆண்டு தமது தேசிய கொடியாக வரித்துக் கொண்ட சிங்கள அதிகார வர்க்கம், 1951ஆம் ஆண்டு அக்கொடியின் நான்கு முனைகளிலும் காணப்பட்ட கூர்முனைகளுக்குப் பதிலாக பௌத்த மேலாதிக்கத்தை நிலைப்படுத்தும் அரசமர இலைகளைப் பொறித்துக் கொண்டது.
இம்மன்னனினதும், இவரது மூதாதையர்களினதும் ஆட்சியில் கண்டி இராசதானியின் அதிகாரபூர்வ மொழியாகத் தமிழ் மொழி விளங்கியிருந்தது.

ஈழத்தீவிற்கு இன்று சிங்களம் ஏகபோக உரிமை கோருகின்ற பொழுதும், மேலைத்தேய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தேறும் வரை ஈழத்தீவை – சிங்களப் பிரதேசங்கள் உட்பட – ஆட்சி செய்தவர்களாக தமிழர்களே திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நம்பிக்கை துரோகத்தால் சாகடிக்கப்பட்டவர்கள்.

   
திருடன் போலீஸ் விளையாண்ட சிறுவர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்பா அம்மா விளையாட்டு என்றால் என்னவென்றே அறியாமல் விளையாண்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர்.

கணவனோட பகிர்ந்து கொண்ட சுகத்தை காம வெரியங்கள் பகிர்ந்துகொண்டதால் தற்கொலை செய்துகொண்ட பெண்கள்.

குழந்தைகள் மார்புதைக்கும் பொது சுகமாக எண்ணி பொறுத்துக்கொண்ட தாயின் மார்பில் மிதித்து கொள்ளப்பட்டனர்.

போர்க்களத்தில் கூட புறமுதுகு கட்டாத ஆண்மகங்களை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் இலங்கையின் இனவெறியால் கொல்லப்பட்டவர்கள் அல்ல இந்தியாவின் நம்பிக்கை தொரோகத்தால் சாகடிக்கப்பட்டவர்கள். 

ஆண்மகன்

                           
                                                    ஆண்களின் பருவம்
           பாலன்,                1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1-7 years).
           மீளி,                     8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8 - 10 years).
           மறவோன்,         11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண் (Maravon, 11 to 14 years)
           திறவோன்,         15 வயது (Thiravon, 15 years)
           விடலை,            16 வயது (Vidalai, 16 years).
           காளை                 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17 to 30 years )
           முதுமகன்,          30 வயதுக்கு மேல் (Mudhumagan, after 30 years)

Tamil Literature Reference:

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
’’ 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
’’ 229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
’’ 230

‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
’’ 231

‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
’’ 232

‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
’’ 233

‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
’’ 234

‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
’’ 235
உங்களுக்குத் தெரியுமா?
 இவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. 

சாகா வரம் பெற்ற இந்தப் பனைமரங்கள்

                                     
          இதுதான் பனங்கிழங்கு! ஒரு பத்துக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டால் அது ஒருநேர             உணவுக்கு ஈடாகும்.

பனங்கிழங்கு மட்டுமல்ல. நுங்கு , பனம்பழம், பதனீர், கள்ளு, கற்கண்டு, கருப்பட்டி, இன்னும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பலவகை உணவுப்பொருட்கள் என ஒரு உணவுத் தொழிற்சாலையே அதில் அடங்கியுள்ளது. தவிர பனையில் பயன்படாத பகுதி எதுவும் இல்லை! 

நமது நாட்டில் பாசனவசதி இல்லாத நிலங்கள், பயனற்ற மேட்டுப்பகுதிகள், சாலையோரங்கள், ஏரி குளங்களின் கரைகள், கடற்கரை சார்ந்த பகுதிகள். இன்னும் வேறு பயிர் செய்ய இயலாத பாழ்நிலங்கள் போன்ற இடங்களில் மட்டும் எந்த வரட்சியிலும் சாகா வரம் பெற்ற இந்தப் பனைமரங்கள் நிறைந்திருப்பது உண்மையானால் நமது உணவுத் தேவையில் பாதியை இதுவே நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.

ஆனால் இருப்பதையும் அழித்தொழிப்பதை அனுமதிக்கும் அரசுகளை என்ன செய்வது?

ஒரு சென்ட் ஒரு லட்சத்துக்கு விலைபோகும் என்ற கனவில் நிலமனைத்தையும் வீட்டுமனைகளாகவே விற்கும் கனவில் இருப்பவர்களை என்ன செய்வது?
பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றைக் கிழிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்தப் பாழாய்ப்போன பொருளாதாரத்தை என்ன செய்வது 

கலை பயணம்.

   

Sundar Raman
கலை பொக்கிஷத்தை பாதுகாக்க ஒரு பயணம்.

ஆயிரக்கணக்கான நம் முன்னோர்கள் சேர்ந்து, நமக்காக கட்டிகொடுத்த கோவில். இதில் அதிக உழைப்பு, அயரில்லா தொண்டு, தெவிட்டாத கலைநயம் போன்ற அதனை சிறப்பம்சம் பொருந்திய பண்டைய கால பொக்கிஷம். நம் முன்னோர்கள் இதற்க்கு உழைத்த உழைப்பை விட நாம் காப்பாற்ற தேவைப்படும் உழைப்பு சிறிது தான். 

சோழர்களைப் பற்றி நாம் படித்த பல தகவல்கள் அனைத்தும், நம் மெய்சிலிர்த்துப் போனவயாய் இருந்துள்ளது. அப்படிப்பட்ட வம்சத்தில் வந்த மன்னன் கட்டிய செஞ்சி அருகில் உள்ள " தேவனூர் மகாதேவர் "
கோயில் இன்றைக்கு இப்படியொரு நிலையில் உள்ளது!. சென்ற வாரம் நாங்கள் இந்த இடத்தை சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இதை சுத்தம் செய்ய தீர்மானித்தோம். 
 அதற்க்கான முதற்கட்ட பணிகளை வரும் 17 மற்றும் 18 ஆம் தேதி தொடங்குகிறோம். தங்குவதற்கு, சாப்பாட்டிற்கு ஊரிலேயே ஏற்பாடு செய்து தருவதாக ஊர் தலைவர் உறுதி அளித்துள்ளார்.இதை அனைத்தும் எங்கள் அலுவலக வேலை செய்தது போக ,எங்களுக்கு கிடைக்கும் ஒய்வு நாட்களில் !அன்புள்ளம் கொண்ட உங்களில் யாரேனும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உங்களுடைய தொலைபேசி என்னை தெரியப்படுத்துங்கள், நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம்.

   


நம்மை விட குறைந்த பொருளுதவியும், வசதிகளும், தொழில்நுட்பமே இருந்தாலும், நம்மை விட அதிக கவனம் செலுத்தி இது போன்ற கலை பொக்கிஷங்களை எழுப்பியுள்ளனர்.இது நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற சொத்து, இதை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமை. ஒரு கல்லை சீர்செய்தாலும் அது நமது முக்திக்கு படியாக அமைந்து அந்த இறைவனிடம் நம்மை அழைத்துசெல்லும். மீண்டும் இது பழைய கம்பீரமான அழகை பெற்று காட்சியளிக்க உங்களுக்கு ஆசையாய் இல்லை 

யா ? இதை விட நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு வேறு என்னவாக இருக்க முடியும் ?

தேவனூர் இருக்கும் இடம் பற்றிய சிறிய வரைபடம் இதில் இணைத்துள்ளேன்

                                             

ஐரோப்பாவில் நூறு வருட பழமை வாய்ந்த தேவாலயங்களைக் கூட தூசி படாமல் பொத்திபொத்தி பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில் ,அந்த தூண்களில் உள்ள கலைநயத்தை பாருங்கள் வருடங்களைக்கடந்தாலும் அதன் அழகை அப்படியே வைத்திருக்கும் இடத்தின் இன்றைய அவலமான நிலை " செஞ்சி" அருகே உள்ள " தேவனூர் மகாதேவர் கோயில் " , நேற்றைக்கு உங்கள் பகுதியில் இதுபோன்ற ஏதாவது இருந்தால் புகைப்படங்களை அனுப்புங்கள் என நான் கூறி இருந்ததை பார்த்த ஒரு நண்பர் என் மின்னஞ்சலுக்கு அனுப்பினார் , இதற்கு தீர்வாக என் நண்பர்கள் அனைவரும் , அடுத்த வாரம் இந்த இடத்திற்கு சென்று பார்வை இட திட்டமிட்டுள்ளோம், இதை சுத்தப்படுத்த என்னென்ன பொருட்கள் தேவை ?, எத்தனை நாட்கள் தேவை ?, ஊரில் உதவுவதற்கு யார் உள்ளார்கள் ? உணவு, குடிநீர், போன்ற விடயங்களை ஆராய திட்டமிட்டுள்ளோம் ! அனைத்து ஏற்பாடுகளும் முடிந்ததும் அதன் மறுவாரமே சென்று சுத்தப்படுத்தி அந்த கிராமத்தினருக்கு இதன் அருமைகளை உணர்த்தி மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ! விரைவில் இதன் புதுப்பிக்கப்பட்ட படம் இதே முகநூளில் வெளியிடுகிறோம் ! . நன்றி!.
 —

கலை பயணம்.

              


கலை பொக்கிஷத்தை காக்கும் கலை பயணம்.


நம் முன்னோர்கள் விட்டு சென்ற கலை பொக்கிஷம் அழிவதை கண்டு, இதுவரை வருத்தம் மட்டும் தெரிவித்த நாம், இன்று அதை காக்கும் பொருட்டு எடுத்து வைக்கும் முதல் அடி...


இடம்: தேவனூர், செஞ்சி அருகில், மேல்மலையனுருக்கு மிக அருகில்.நாள்: பங்குனி 4 மற்றும் 5 (17, 18 - மார்ச்)

தேவனூர் குறிப்பு:

வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி தென்னிந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றாக செஞ்சிக்கோட்டை இருந்துள்ளது. இதன் ஆளுகையின் கீழ் இருந்த தேவனூரில் திருநாகேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பிற்கால சோழர்கள் சிறப்பாக கட்டிய இந்த கோவிலை பின்னர் ஆட்சி செய்த பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களும் தொடர்ந்து பராமரித்து வந்தனர். இந்த கோவிலுக்காக ஏராளமான நிலம், பசு, காளைகளை தானமாக வழங்கியது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவபெருமானை தேவனாக குறிப்பிட்டு இங்கு சிவன் கோவில் இருந்ததால் தேவனூர் என்று அழைத்துள்ளனர். 17ம் நூற்றாண்டு வரை இந்த கோவில் மிக சீரோடும் சிறப்போடும் இருந்துள்ளது.இதன் பிறகு செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கிற்கும், ஆற்காடு நாவாப்பிற்கும் ஏற்பட்ட உக்கிரமான போரின் போது ஆற்காடு நவாப்பின் பெரும் படையினர் இந்த கோவில் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்து சென்றனர்.

இதில் சிதிலமடைந்த கோவில் பின்னர் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, முகநூல் நண்பர்கள் துணை கொண்டு இந்த வரலாற்று பெருமைமிக்க கோவிலை புதுப்பிக்க முயற்சி செய்து, இதோ நாளை முதல் கட்ட வேலைகளை ஆரம்பிக்க உள்ளோம்.

ஏற்கனவே விருப்பம் உள்ள நண்பர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது வருகையை பதிவு செய்தனர். மேலும் மற்ற நண்பர்கள் விருப்பத்தின்பேரில் தங்களை இந்த பணியில் இணைத்துக்கொள்ளலாம்.

தேவனூர் கோவிலுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளவர்களும், வர விரும்புவர்களும் முன்பே தொடர்பு கொண்டு உறுதி படுத்தினால் உணவு மற்றும் தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். தொடர்புக்கான எண்கள் 98409 56955 , 90030 29459 , 95007 86979.


இதில் ஒரே ஒரு பெருமை என்னவென்றால், இதை கட்டிய சோழன் எந்த கலை நயத்துடன் கோவிலை கண்டானோ, அதே பார்வையுடன் இன்று நாம்!...



உங்கள் கையில்!


                            



நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ, அதை உன்னிலிருந்து தொடங்கு - மகாத்மா காந்தி !


இதோ நாங்கள் காண விரும்பிய மாற்றத்திற்கான முதல் படியை நாளை எடுத்து வைக்கிறோம் ! வெறும் முகநூலை வைத்து என்ன செய்ய முடியும் ? என சிந்தித்த பலருக்கு, இதை வைத்தும் மக்களை ஒன்றிணைத்து எதையும் செய்யலாம் என காட்டப்போகும் முதல் அனுபவம் ! தினம், தினம் ஆயிரம் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், பழங்காலத்தில் செய்த ஒன்றைக்கூட நாம் இன்று செய்ய முடியாது என்பது மறுக்கமுடியாத உண்மை.அந்த வகையில் பல வரலாறுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு ஆயிரம், ஆயிரம் வருட பொக்கிஷங்களாக கவனிப்பாறற்று நின்றுகொண்டிருக்கும் கோயில்களை மீட்டுக்கும் பணியை முதலில் நாங்கள் தொடங்கவிருக்கிறோம்.

நாகரீகம்,பண்பாடு,மொழி என அனைத்தையும் இன்றைக்கு தொலைத்து, அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாடு, இன்றைக்கு நாங்கள் ஆயிரம்,ஆயிரம் வருடம் பழமையானவர்கள் என ஆதாரத்துடன் நாம் கை நீட்டி காட்டக்கூடிய ஒன்றே ஒன்று நம் பாரம்பரிய கலை பொக்கிஷங்களான கோயில்கள். ஆனால், இன்றைக்கு அதுவும் சிதையத்தொடங்கிவிட்டது, இதை மத ரீதியாக அணுகாமல் , நம் கலை ரீதியாக அணுகலாம் என தோன்றியது. அதற்க்கான ஆயத்தப்பணிகளை நாளைக்கு தொடங்குகிறோம், இதை இந்த ஒன்றோடு நிறுத்திவிடாமல் மரம் நடுதல்,சீமக்கருவேலமரம் வெட்டுதல் போன்றவற்றையும் தொடரவிருக்கிறோம். இது அத்தனையும் இதுவரை நேரில் சந்திக்காத முக நூல் நண்பர்களை இணைத்ததே !
                        
வார நாள் முழுவதும் வேலை செய்து களைத்துப்போய் ஒரு நாளேனும் மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் சராசரி மனிதனாய் வாழாமல், தான் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னுடன் களமிறங்கி உள்ள திருமணமான நண்பர்களுக்கு கண்கள் கலங்கி இந்த நேரத்தில் நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன். இதுவரை என் முகத்தை கூட பார்க்காத பலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியது மட்டுமலாமல், தங்களால் இயன்ற உதவியை செய்கிறேன் என கூறிய போது இந்த பிறவிப்பலனை அடைந்தேன். அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! மேலும், வரலாற்றை புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமல்லாமல் அதை புணரமைக்க விரும்பும் நமது கல்லூரி தோழர்களுக்கும் நன்றிகள் பல! உங்கள் ஊரில் எதாவது செய்ய வேண்டுமா என ஒருமுறை நான் கூறி இருந்ததை பார்த்து தங்கள் ஊர் சுத்தமடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் முதன் முதலில் எனக்கு தங்கள் ஊரில் சிதைந்து கிடக்கும் வரலாற்று பொக்கிஷத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் மின்னஞ்சல் அனுப்பிய திரு " தமிழ்செல்வனுக்கும் " என் நன்றிகள்!


மாற்றத்திற்கான முதல் விதையை நாங்கள் இங்கே விதைக்கிறோம், அதை முளைக்க வைத்து விழுதுகள் பரப்பி ஆலமரமாக்குவதும், மண்ணோடு மண்ணாக மட்கச்செய்வதும் மறத்தமிழ் நண்பர்களாகிய உங்கள் கையில்!

வில்லில் இசை

                         
அரிசியின் வழி பாட்டுடன் தொடங்கியது இந்த கலை .
தமிழன் வில்லால் உலகை வளைத்து மட்டுமல்லாமல்
வில்லில் இசையையும் வடித்துள்ளான் .
வில்லு பாட்டு -நம் மண்ணின் பெருமையை சொல்லும் பாட்டு .
வில்லு பாட்டு என்றே பெயர் .பாடல் ,உரையாடல் ,பழ மொழிகள் ,வசன கவிகள் (இபோது சிறிது ஆங்கிலமும் )என அனைத்தும் கலந்து விறுவிறுப்பை ஏற்றியது அந்த தருணத்தை .
கிராமத்து சொல் வழக்குடன் .அந்த கலைஞ்சர்களின் கணீர் குரல் , அதிரும் உடுக்கை ,அதிரவைக்கும் வில்லு குடத்தின் ஒலி..இவற்றுடன்
நெல் மணிக்காக உழைத்த நம் உழைப்பாளிகளின் களைப்பை நீக்கும் வில்லின் மணி ஒலிகள் .காற்றும் காத்திருக்கும் போல ...இந்த ஒலிகளை எபோது கடத்துவது என்று .
கைகளால் மட்டுமே ஆடக்கூடிய ஒரு நடனம் தெரிந்திருகிறது அவர்களுக்கு .அவர்களின் கைகள் ஒரு நடனம் ஆடுகிறது .அது அவர்கள் அந்த கலையுடன் கலந்து விட்டதை காட்டியது .கலையை தெய்வமாக பார்க்கும் இது போன்ற மனிதர்களை நேற்று நான் கண்டேன் . 

வில்லுடன் வந்த இவர்களின் சொல்லுடன் பிறபெடுதார் சாஸ்தா(சாஸ்தா கதை ).
 — 

இலங்கை தூதர் வெளியேற்றப்படுவார் - ஆஸ்திரேலிய செனட்டர் லீ ரைனான்

                      
 இலங்கைப் போர்க்குற்றம் - சுயாதீனமான விசாரணை தேவை அன்றேல் இலங்கை 
                 தூதர்   வெளியேற்றப்படுவார் - ஆஸ்திரேலிய செனட்டர் லீ ரைனான்  

புதிய காணொளியை வெளியிட்ட சனால் - 4 ன் புதிய ஆதாரங்கள் குறித்து ஆஸ்திரேலிய அரசின் செனட்டர் லீ ரைனான் செய்தியாளர்களிடம் கூறியவை,இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட 54 நிமிட மனித உரிமை மீறல் காட்சிகள் ஆஸ்திரேலிய அரசை உலுக்கி உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் புதல்வன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் நால்வரும் சரணடைந்த வேளை, இலங்கை இராணுவத்தினால் ஆடை களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொன்ற காட்சிகள் போர்க்குற்ற ஆவணமாக காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காட்சிகளை புதிய போர்க்குற்ற ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் லீ. மேலும் கூறுகையில், சமீபத்தில் வெளியிட்ட போர்க்குற்றம் இரண்டாவது பாகம் என்ற ஆவணத்தில்,

ஐ.நா.வின் உணவு வழங்கும் குழுவினர் மீதும் குண்டுகளை வீசி, கொன்றும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள், அதோடு பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் என்று அறிவித்த பகுதிகளில் கொத்துக் குண்டுகளை வீசி அந்த வளையத்தில் இருந்த மக்களை அழித்துள்ளார்கள். இந்த செயல்களை செய்தவர்கள் அனைவரும் அதாவது போர்க்குற்றங்களை அரங்கேற்றியவர்கள் அனைவரும் இன்று இலங்கை அரசின் மிக உயர்ந்த பதவியில் அமர்ப்பட்டுள்ளனர் என்றார் லீ.

ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதர் டி.எஸ்.ஜி.சமரசிங்கே கூறியது போல இலங்கை அரசே நடத்திய L L R C யின் விசாரணை அறிக்கை போதுமானதாக இல்லை அதாவது நேர்மையற்றவையாக உள்ளன. தற்பொழுது உலகில் இவர்கள் கூறுகின்ற இந்த அறிக்கை பொய்களையும் புனை சுருட்டுக்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளன. இந்த தருணத்தில் ஆஸ்திரேலியாவின் ஜில்லார்ட் அரசு உலக அரங்கிற்கு அழைப்பு விட வேண்டும், ஐ.நா.வின் நிபுணர் குழு, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இன்டர்நேஷனல் கிரைசிஸ் குழு மற்றும் மனித உரிமை கண்காணிப்பு குழு போன்றவைகளை கொண்டு நேர்மையான சுதந்திரமான விசாரணை நடத்திட வேண்டிய தருணம் இது என்று கூறுகிறார் செனட்டர் லீ ரைனான்.

ஆஸ்திரேலியா அரசு உறுதியாக ஆதரிக்க வேண்டும் அமெரிக்க அரசு கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்த வார இறுதியில் நடைபெறும் மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் குறித்த ஆதரவு ஆஸ்திரேலியா அரசின் கடமைகளில் ஒன்று மேலும் சுயாதீனமான விசாரணைக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் வலியுறுத்துவதின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.
செனட்டர் லீ ரைனான் உறுதிபட கூறி வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜில்லார்ட் இலங்கை அரசிடம் கூற வேண்டும் இவ்வாறு, இலங்கை அரசை கூப்பிட்டு அய்யா, உங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள், சுதந்திரமான நேர்மையான சர்வதேச விசாரணைக் குழு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து முழு விசாரணை அறிக்கை அளிக்கும் வரையில் உங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்று கூற வேண்டும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் கூற வேண்டும் என்கிறார் லீ. இலங்கை அரசு இந்த உடன்பாட்டுக்கு, கோரிக்கையை ஏற்கவில்லையெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதர் அட்மிரல் டி.எஸ்.ஜி.சமரசிங்கே அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் செனட்டர் லீ ரைனான். 

இந்தியா காப்பாற்றுமா.....................?

         
             தெரியாமல் இராமர் தேரையைக் கொன்றார்! தெரிந்தே இந்தியா ஈழத் தமிழரைக் 
                                                      கொன்று குவித்தது! 
       இராமபிரான் ஆற்றில் நீராடுவதற்காகத் தன்னி டம் இருந்த அம்பை நிலத்தில் ஊன்றிவிட்டு நீரா டச் செல்கிறார். இராமர் அம்பை நிலத்தில் ஊன்றிய போது நிலத்தின் கீழ் இருந்த தேரையை அம்பு குத்தி விடுகிறது. நீராடிவிட்டு வந்த இராமர் நிலத்தில் தான் ஊன்றி வைத்த அம்பை இழுக்கிறார். அம்பின் நுனியில் குத்துண்ட தேரை துடிக்கிறது. நிலைமையைஅவதானித்த இராமர் ‘தேரையே நாம் அம்பை குத்தும் போது நீ கூப்பிட்டிருக்கலாம் அல்லவா? ’என்று கூறுகிறார்.

அம்பில் குத்துண்டு வலிதாங்க முடியாமல் துடிக்கும் தேரை இராமரை பார்த்து கூறுகின்றது. ‘இராமா! எனக்கு யார் துன்பம் செய்தாலும் நான் இராமா... இராமா... என்றுதான் உச்சாடனம் செய்வேன். அந்த இராமரே என்னைக் குத்தும் போது நான் யாரைக் கூப்பிடுவேன்.’ இவ்வாறு கூறியடியே தேரையின் உயிர் பிரிந்தது. இதுதான் ஈழத்தமிழர்களின் நிலையும். இலங்கை அரசுகள் தமிழ் மக்களுக்கு காலாகாலமாக பெரும் கொடுமைகள் செய்த போதெல்லாம் இந்தியா காப்பாற்றும் என்று இந்தியா... இந்தியா... என்று தமிழர்கள் உச்சாடனம் செய்தனர். ஆனால் அந்த இந்தியாவே ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தி சங்காரம் செய்துவிட்டது. என்ன செய்வது! இராமா... இராமா... என்று உச்சாடனம் செய்த தேரையை இராமர் அறியாமல் குத்தினார்.

ஆனால் இந்தியா... இந்தியா... என்று உச்சாடனம் செய்த தமிழர்களை இந்தியா திட்டமிட்டே கொன்றது. இப்போது கூட ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்ப்பதே இந்தியாவின் நிலைப்பாடு. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இப்போதும் இந்தியா... இந்தியா... என்று உச்சாடனம் செய்கிறது. ஐந்தறிவு படைத்த தேரையால் இராமரை புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால் ஆறறிவு படைத்த தமிழ்த் தேசியக் கூட் டமைப்பால் இன்னமும் இந்தியாவை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஓ! இந்திய தேசமே! எங்கள் நாட்டை சிதைத்துவிட்டு! எங்கள் உயிர்களைப் பறித்துவிட்டு! எங்கள் வீட்டை உடைத்து விட்டு! எங்களுக்கு நீ வீடுகட்டி கொடுப்பதாக உன் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதை விடச் சின்னத்தனம் வேறு எதுவும் இல்லை. இறைவா! ஜெனிவா தீர்மானத்தை இந்தியா எதிர்த்தால், இந்தியா எங்களுக்கு வீடுகட்டித் தரத்தேவையில்லை என்று கூறும் சக்தியை எம்மவர்களுக்குத் தா அது போதும்.
 

வரலாற்று அதிசயம்! இலங்கைக்கு எதிராக ஒன்று சோ்ந்த தமிழகம்

                
வரலாற்று அதிசயம்! இலங்கைக்கு எதிராக ஒன்று சோ்ந்த தமிழகம்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. தமிழக அரசியலில் அதிசயத்தில் அதிசயமாக அத்தனை கட்சிகளும் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று ஒருமித்த குரலாக எதிரொலிக்கின்றன.

ஜெயலலிதா: (அதிமுக)
ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்படாது’ என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த நடவடிக்கை, இலங்கைக்கு நேரடியான ஆதரவை இந்தியா தருவது போலாகி விடும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கருணாநிதி: ( திமுக)
இறுதிப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பை மத்தியில் ஆட்சியில் இருப்போர் ஒரு முறை பார்த்தாலே, தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படும் இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

விஜயகாந்த்: (தேதிமுக)
அமெரிக்காவின் தீர்மானம் முழுஅளவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இதை நிறைவேற்றுவதன் மூலம் சிங்கள இனவெறி அரசை உலக அரங்கின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும். நடுநிலை வகிப்பதையோ, தீர்மானத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதையோ இந்தியா மேற்கொண்டால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


வைகோ: (மதிமுக)
இலங்கைக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடிப் பணமும் அள்ளிக் கொடுத்து முப்படைத் தளபதிகளை அனுப்பியும் யுத்தத்தை நடத்தியது இந்தியா. இந்திய அரசின் துரோகம் அம்பலத்துக்கு வந்துவிட்டது. இதற்கு மேலும், ஐ.நா-வின் கவுன்சிலில் தமிழர்களுக்குத் துரோகம் விளைவித்தால், எந்தக் காலத்திலும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) :
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. இதுபற்றி மத்திய அரசும் இலங்கையை நிர்ப்பந்திக்கவில்லை. மனித உரிமை மீறல்கள் மீது, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேசத் தரத்திலான விசாரணை நடத்தப்பட்டு, போர்க் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராமதாஸ்: (பாமக)
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்):
இலங்கையின் குற்றத்தை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மகிந்த ராஜபக்சவை இன அழிப்புப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

திருமாவளவன்: (விடுதலைச்சிறுத்தைகள்)
மிகவும் நீர்த்துப்போன இந்தத் தீர்மானத்தைக்கூட இந்திய அரசு ஆதரிக்காமல், வழக்கம்போல சிங்கள இனவெறியர்களுக்குத் துணை போனால், அது கடும் கண்டனத்துக்கு உரியது.

ஞானதேசிகன் (காங்கிரஸ்):
இலங்கையில் கால் ஊன்றுவது குறித்து சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு நடந்து வரும் போட்டி காரணமாகவே, இந்தத் தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது. இருந்தாலும், இலங்கையில் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்து இருக்கின்றன என்பதால், அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.

பழ.நெடுமாறன்: (தமிழர் இயக்கம்)
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா நடந்து கொள்ள வேண்டும்.

சீமான்: (நாம் தமிழர் கட்சி)
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தயங்குவதற்குக் காரணம்… ‘இந்தப் போரை நடத்தியதே நீங்கள்தானே?’ என்று ராஜபக்ச கேட்பார் என்பதுதான்.

பொன்.ராதாகிருஷ்ணன் (பி.ஜே.பி):
இலங்கையில் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களுக்கு, மத்திய காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி உதவி செய்தது போலவே, ஐ.நா-விலும் உதவி செய்யும் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. இலங்கைக்கு ஆதரவு நிலையை மத்திய அரசு எடுத்தால், ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று தி.மு.க. அறிவிக்க வேண்டும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி):
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல் பட்டால், அது இனத்துரோகம். எனவே, அமெரிக்க தீர்மானத்தை காங்கிரஸ் அரசு வழி மொழிய வேண்டும்.


இப்படி தமிழகத்தில் தேசிய, திராவிட, கம்யூனிஸ, தமிழினக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துள்ளது. 
                  சோனியாவும் மன்மோகனும் என்ன செய்யப்போகிறார்கள்?
 

HATS..OFF......SACHIN

             
   CONGRATS...SACHIN...finally..reached..his..100th..century.....HATS..OFF.....to..the..great..legend

100's 100:

1) 119* vs ENG-Manchester-14 August 1990-Draw- Test 
2) 148* vs AUS-Sydney-6 January 1992-Draw-Test
3) 114 vs AUS-Perth-3 February 1992-Lost-Test
4) 111 vs SA-Johannesburg-28 November 1992-Draw- Test 
5) 165 vs ENG-Chennai-12 February 1993-Won-Test
6) 104* vs SL-Colombo-31 July 1993-Won-Test
7) 142 vs SL-Lucknow-19 January 1994-Won-Test 
8) 110 vs AUS-Colombo-September 9, 1994-Won-ODI
9) 115 vs NZ-Vadodara-October 28, 1994-Won-ODI
10) 105 vs WI-Jaipur-November 11, 1994-Won-ODI 
11) 179 vs WI-Nagpur-2 December 1994-Draw-Test 
12) 112* vs SL-Sharjah-April 9, 1995-Won-ODI
13) 127* vs KEN-Cuttack-February 18, 1996-Won-ODI
14) 137 vs SL-New Delhi-March 2, 1996-Lost-ODI
15) 100 vs PAK-Singapore-April 5, 1996-Lost-ODI
16) 118 vs PAK-Sharjah-April 15, 1996-Won-ODI 
17) 122 vs ENG-Birmingham-8 June 1996-Lost-Test
18) 177 vs ENG-Nottingham-5 July 1996-Draw-Test 
19) 110# vs SL-Colombo-August 28, 1996-Lost-ODI
20) 114# vs SA-Mumbai-December 14, 1996-Won-ODI 
21) 169# vs SA-Cape Town-4 January 1997-Lost-Test 
22) 104# vs ZIM-Benoni-February 9, 1997-Won-ODI
23) 117# vs NZ-Bangalore-May 14, 1997-Won-ODI 
24) 143# vs SL-Colombo-3 August 1997-Draw-Test
25) 139# vs SL-Colombo-11 August 1997-Draw-Test
26) 148# vs SL-Mumbai-4 December 1997-Draw-Test
27) 155* vs AUS-Chennai-9 March 1998-Test
28) 177 vs AUS-Bangalore-26 March 1998-Lost-Test 
29) 100 vs AUS-Kanpur-April 7, 1998-Won-ODI
30) 143 vs AUS-Sharjah-April 22, 1998-Lost-ODI
31) 134 vs AUS-Sharjah-April 24, 1998-Won-ODI
32) 100* vs KEN-Kolkata-May 31, 1998-Won-ODI
33) 128 vs SL-Colombo-July 7, 1998-Won-ODI
34) 127* vs ZIM-Bulawayo-September 26, 1998-Won- ODI
35) 141 vs AUS-Dhaka-October 28, 1998-Won-ODI
36) 118* vs ZIM-Sharjah-November 8, 1998-Won-ODI
37) 124* vs ZIM-Sharjah-November 13, 1998-Won- ODI
38) 113 vs NZ-Wellington-29 December 1998-Lost- Test 
39) 136 vs PAK-Chennai-31 January 1999-Lost-Test
40) 124* vs SL-Colombo-28 February 1999-Draw-Test 
41) 140* vs KEN-Bristol-May 23, 1999-Won-ODI
42) 120# vs SL-Colombo-August 29, 1999-Won-ODI 
43) 126*# vs NZ-Mohali-13 October 1999-Test
44) 217# vs NZ-Ahmedabad-30 October 1999-Draw- Test
45) 186*# vs NZ-Hyderabad-November 8, 1999-Won- ODI 
46) 116# vs AUS-Melbourne-28 December 1999-Lost- Test 
47) 122 vs SA-Vadodara-March 17, 2000-Won-ODI
48) 101 vs SL-Sharjah-October 20, 2000-Lost-ODI 
49) 122 vs ZIM-New Delhi-21 November 2000-Won- Test

50) 201* vs ZIM-Nagpur-26 November 2000-Draw-Test

51) 146 vs ZIM-Jodhpur-December 8, 2000-Lost-ODI 
52) 126 vs AUS-Chennai-20 March 2001-Won-Test 
53) 139 vs AUS-Indore-March 31, 2001-Won-ODI
54) 127* vs WI-Harare-July 4, 2001-Won-ODI
55) 101 vs SA-Johannesburg-October 5, 2001-Lost- ODI
56) 146 vs KEN-Paarl-October 24, 2001-Won-ODI 
57) 155 vs SA-Bloemfontein-3 November 2001-Lost- Test
58) 103 vs ENG-Ahmedabad-13 December 2001- Draw-Test
59) 176 vs ZIM-Nagpur-24 February 2002-Won-Test
60) 117 vs WI-Port of Spain-20 April 2002-Won-Test 
61) 105* vs ENG-Chester-le-Street-July 4, 2002-N/R- ODI
62) 113 vs SL-Bristol-July 11, 2002-Won-ODI 
63) 193 vs ENG-Leeds-23 August 2002-Won-Test
64) 176 vs WI-Kolkata-3 November 2002-Draw-Test 
65) 152 vs NAMI-Pietermaritzburg-February 23, 2003- Won-ODI
66) 100 vs AUS-Gwalior-October 26, 2003-Won-ODI
67) 102 vs NZ-Hyderabad-November 15, 2003-Won- ODI  
68) 241* vs AUS-Sydney-4 January 2004-Draw-Test 
69) 141 vs PAK-Rawalpindi-March 16, 2004-Lost-ODI 
70) 194* vs PAK-Multan-29 March 2004-Won-Test
71) 248* vs BAN-Dhaka-12 December 2004-Won-Test 
72) 123 vs PAK-Ahmedabad-April 12, 2005-Lost-ODI 
73) 109 vs SL-New Delhi-22 December 2005-Won- Test 
74) 100 vs PAK-Peshawar-February 6, 2006-Lost-ODI

75) 141* vs WI-Kuala Lumpur-September 14, 2006- Lost-ODI 
76) 100* vs WI-Vadodara-January 31, 2007-Won-ODI 
77) 101 vs BAN-Chittagong-19 May 2007-Draw-Test
78) 122* vs BAN-Mirpur-26 May 2007-Won-Test
79) 154* vs AUS-Sydney-4 January 2008-Lost-Test
80) 153 vs AUS-Adelaide-25 January 2008-Draw-Test 
81) 117* vs AUS-Sydney-March 2, 2008-Won-ODI 
82) 109 vs AUS-Nagpur-6 November 2008-Won-Test
83) 103* vs ENG-Chennai-15 December 2008-Won- Test 
84) 163* vs NZ-Christchurch-March 8, 2009-Won-ODI 
85) 160 vs NZ-Hamilton-20 March 2009-Won-Test 
86) 138 vs SL-Colombo-September 14, 2009-Won-ODI
87) 175 vs AUS-Hyderabad-November 5, 2009-Lost- ODI 
88) 100* vs SL-Ahmedabad-20 November 2009-Draw- Test
89) 105* vs BAN-Chittagong-18 January 2010-Won- Test
90) 143 vs BAN-Mirpur-25 January 2010-Won-Test
91) 100 vs SA-Nagpur-9 February 2010-Lost-Test 
92) 106 vs SA-Kolkata-15 February 2010-Won-Test 
93) 200* vs SA-Gwalior-February 24, 2010-Won-ODI 
94) 203 vs SL-Colombo-28 July 2010-Draw-Test
95) 214 vs AUS-Bangalore-11 October 2010-Won-Test
96) 111* vs SA-Centurion-19 December 2010-Lost- Test
97) 146 vs SA-Cape Town-4 January 2011-Draw-Test 
98) 120 vs ENG-Bangalore-February 27, 2011-Tied- ODI
99) 111 vs SA-Nagpur-March 12, 2011-Lost-ODI
===========100========
100* vs BAN-Mirpur-16 March,2012- (ODI) 

Wednesday, March 14, 2012

இலங்கை பிரமுகர்கள் சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் வரக் கூடாது’- ஜெயலலிதா…




இலங்கை பிரமுகர்கள் சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் வரக் கூடாது’- ஜெயலலிதா…

இனி தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் இலங்கைப் பிரமுகர்களை தமிழகத்திற்குள் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
மேலும் இலங்கைப் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதையும் மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
இலங்கைத் தமிழர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு நடந்து கொண்டு வரும் விதம் குறித்து தமிழக மக்கள் முழுமையாக அறிந்துள்ளனர். ஈழத் தமிழர்கள் கெளரவமாகவும், கண்ணியத்துடனும் வாழ இலங்கை அரசு வழி செய்யவில்லை என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். மேலும் சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்தை இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்கவில்லை என்பதும் தமிழகத்தின் கருத்தாகும்.
இந்தப் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் தனிப்பட்ட பயணமாக, மாநில அரசுக்கு எந்தவிதத் தகவலையும் கூட தராமல் அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு வருகையின்போது ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் என்பவர், 9.1.2012 மற்றும் 10.1.2012 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது அவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.
அவரது வருகை குறித்து இந்திய அரசிடமிருந்தோ, இலங்கை அரசிடமிருந்தோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளரும் எழுதியுள்ள கடிதம் எனது பார்வைக்கு வந்தது. அந்த கடிதத்தின் தொணி, அதில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகள், தேவையில்லாதது, நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது.
இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், விஐபிக்கள் மாநில அரசுக்குத் தகவல் கொடுக்காமல் வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் கடந்த 16.9.2011, 24.2.2012 ஆகிய நாட்களில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்கம் தரக் கூடாது, ஊக்குவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

நாம் போராடியே ஆக வேண்டும்

                   



நாம் போராடியே ஆக வேண்டும்- இல்லையேல் சிறிலங்கா என்ற நாட்டிற்குள் இருந்து நாம் அழிந்து விடுவோம்!..

மார்ச் 17! பிரான்சில் மாபெரும் ஒன்று கூடல்! 2ஆம் உலகப்போரின் உக்கரத்தில் இருந்து விடுபட்டு 64 வருடங்கள், அந்தப்போரின் உக்கரத்தில் உலகம் கண்ட அழிவுகள் – இனிமேல் இனங்களின் அழிவுகள் வேண்டாம் என்றும் நாடுகளுக்கு இடையே நல்லுறவு உருவாக்கு ஐக்கிய நாடுகள் சபை உருவானது. அதே ஐக்கிய நாடுகள் சபை மக்களின் உரிமையை பாதுகாக்க மனிதவுரிமை சாசனத்தை எழுதியது.

இந்த மனிதவுரிமை சாசனத்துக்கு அமைய மக்களும் தாம் வாழும் நாடுகளில் எல்லா மக்களையும் போல் தாங்களும் உரிமையுடன் வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

ஆனால் மக்கள் அடைந்தது ஏமாற்றமே! 64 வருடங்களாக தமிழர், பாலஸ்தீனர், திபெதினர், கூர்திச்தான் மக்கள், பயாப்ரா, ருவாண்டா, டார்பூர், ச்செனி, கம்போடிய, யூகோசொல்வேகிய, லிபியா, துனிசியா, அல்ஜெரியா, எகிப்து, சூடான், காங்கோ, லிபேரியா, இராக், ஆப்கானிஸ்தான், இன்று சிரியா என்று படுகொலைகளும், இனப்படுகொலைகளும் தொடரும் கதைகள்.

எதை வேண்டாம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதோ, அதையே ஐக்கிய நாடுகள் சபையை இயக்கும் பாதுகாப்பு சபை நாடுகளாகிய அமெரிக்க, ரஷ்யா, சீனா, பிரிந்த்தானியா, பிரான்சு, இந்த படுகொலைகள், இன அழிப்புகளை தடுக்க முடியாமல் அதற்கு துணை போவது போல செய்யும் செயல்பாடுகள், இந்த ஐக்கிய நாடுகளின் சபையை கேள்வி குறியாக ஆகி விட்டு நிற்கிறது.

இந்த இன அழிப்புகள் தொடராமல் இருக்க, மனிதவுரிமை சாசனத்தில் எழுதியது போல் சகல இன மக்களும் சுய நிர்ணய உரிமையுடன் எல்லா இன மக்களுக்கும் சமமாக வாழ பிரான்சில் பாரிஸ் நகரில் மார்ச் 17 மாலை 2h00 மணிக்கு பர்பஸ் (Barbes ligne 2-4) மெட்ரோவுக்கு அருகில் அணைத்து இன மக்களுடன் சேர்ந்து உலக மக்களின் சுய நிர்ணய உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் ஒன்றுகூடல்.

இன்று அமெரிக்க தமிழர்களின் உரிமைகளை காக்க சிறி லங்கா அரசின் ஆணைகுழு சமர்பித்த சில தீர்மானங்களை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி நிற்கும் நிலையில், 64 வருடங்களாக நடைபெற்ற இன அழிப்பை பற்றி அதில் இருந்து தமிழ் இன மக்களை மீட்க இந்த சர்வதேச நாடுகள் கற்று அறிய வேண்டியது நிறையவே இருக்கிறது என்று உலக சகல இன மக்களுடன் சேர்ந்து போராடுவோம்.

இன்று நாம் போராடியே ஆக வேண்டும்- இல்லையேல் சிறி லங்கா என்ற நாட்டிற்குள் இருந்து நாம் அழிந்து விடுவோம்.

இன்று போராட்டம் சர்வதேசத்தின் முன் நிற்பதால் தமிழ் இனமே சகல இனமக்களுடன் சேர்ந்து எல்லா இன மக்களின் விடுதலையை வலியுருந்துவோம் வாருங்கள்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று இந்த உலகத்திற்கு வலியுருதிடுவோம்.

மார்ச் 17 உலக மக்கள் சகல காலனித்துவ ஆட்சி முறையில் இருந்து விடுதலை தேடி நிற்கும் நாள்.

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

மனங்கள் மாறும்வரை............




ஆண்களின் மனங்கள் மாறும்வரை அடிமைத்தனம் என்றும் மாறிவிடாது !!!

சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும்.
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் அமைந்திருப்பது ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறமுடியும்.

இன்று சில பெண்கள் அடங்க மறுத்து அத்துமீறுதல் என்பது போல் கற்பு நெறி, பெரியவர்களை மதித்தல், குடும்பத்தைக் கட்டிக் காத்தல், கணவனை அனுசரித்தல் போன்ற எல்லாவற்றையும் பெண் விடுதலை என்ற பெயரில் சுக்கு நூறாக்கித் திரியும் தான்தோன்றித்தனமான தலைக் கர்வம்தான் பெண்ணியமா?


இல்லை ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?. இல்லை இஷ்டப்படி வாழ நினைப்பதுதான் பெண் விடுதலையா?


பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான் பெண்ணியமாகும். ஆதிகாலத்தி லிருந்து பெண்ணுக்கு மட்டுமே உரித்தானதாய் வரையறுக்கப்பட்ட, சில பழமையான அடிமைத் தனங்களிலிருந்து பெண்மையை மீட்பதுதான் பெண்ணியம்.


நாகரிக வளர்ச்சிகள் உச்சத்தைத் தொடப்போகும் இக்காலத்திலும் பெண்ணியம் பேசுவதன் அவசியம் மட்டும் மாறாமலிருப்பதன் மர்மம்தான் என்ன?


இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும், ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும், சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப் பொறுப்பலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின் சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது?


திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது (பெண்ணியம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் சேர்த்துதான்) நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? அப்படியென்றால் எங்கேயிருக்கிறது பெண்ணியத்தின் எதிரி? நமது கலாச்சாரத்திலா? சமூகத்திலா? இல்லை நம் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளுமா?


எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக் காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள். பெண்கள் கல்வியில் முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனா, இன்று பெண்கள் கல்வியில் முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை.


இன்றும் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கே றிக்கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு உண்டாகாத வரையில் பெண் விடுதலையும், பெண்ணியம் என்பதும் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கக்கூடும். பெண் என்றால் அவள் மீது விழும் சமூகப் பார்வை பெரும்பாலும் பாலியல் சம்பந்தப் பட்ட வக்கிர உணர்வாகவே இருப்பது இயற்கையாகவே உருவானாதா? இல்லை, வாழ்க்கைமுறை என்ற பெயரில் ஆணாதிக் கத்தால் உருவாக்கப்பட்டதா? அன்று முதல் இன்றுவரையிலும் திரைப்படங்கள், விளம் பரங்கள் போன்ற ஊடகங்களில் எல்லாம் பெண் என்பவள் வெறும் போகப் பொருளாகவே காட்டப்படும் நிலை மாறாதது ஏன்?


இன்று பெண்ணியம் பேசும் எந்தவொரு ஆணாவது உண்மையான மனதுடன் பெண் விடுதலையை ஆதரிப்பதாய் நம்ப முடியுமா? பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள், என்னதானிருந்தாலும் பெண் என்பவள் ஆணுக்குக் கீழேதான் குடும்பத்தில் சமைப்பது, துவைப்பது, பிள்ளைகளை வளர்ப்பது போன்ற பெண்ணுக்காய் வரையறுக்கப்பட்ட வேலைகளைப் பெண்ணே செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஆண்களின் மனதில் சிலரிடம் வெளிப்படையாகவும், பெண் விடுதலை பேசும் சிலரிடம் ஆழ் மனதிலும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.


ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள் விருப்பங்களைத் திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். பெண்ணடிமைத் தனம் என்பது நமது பரம்பரை வழியாக நம் புத்திக்குள் புரையோடிப் போயிருக்கும் சமுதாய நோயேயன்றி வேறேதுமில்லை.


வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்த நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும் பெண் விடுதலையும் பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள்கையில் மட்டுமேயில்லை, ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாயை, மனைவியை, மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும்.



சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாகவேண்டும். ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தில் ஆழ வேரூன்றியிருக்கும் பெண்ணடிமைத் தனத்தை ஒரே நாளில் ஒழித்து விட இயலாதுதான்.

கொலைகார மகிந்தாவிற்கு ஆசி வேண்டி .........

            


நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொலைகார மகிந்தாவிற்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட விசேட பிரார்த்தனை நிகழ்வு!..

இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து காப்பாற்றும் படி ஆசி வேண்டி தமிழ் மக்களின் முக்கிய இராசதானிகளில் ஒன்றான நல்லூரில் தமிழ் மக்களின் முக்கிய தலங்களில் ஒன்றான நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பு வேண்டி நடத்தப்பட்ட இந்த விசேட பிரார்த்தனை நிகழ்வு இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் நாகவிகாரையிலும் ஜனாதிபதியை பாதுகாக்கும் பொருட்டு விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. பெளத்த பிக்குகள் ஜனாதிபதியை காப்பாற்றும்படி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வை தமிழ் பௌத்த சங்கம், முப்படையினர் மற்றும் நாளைய இளைஞர் அமைப்பு என்பன ஏற்பாடு செய்திருந்தன. நல்லூர் கந்தன் ஆலயத்தில் காலையிலும் நாகவிகாரையில் மாலையிலும் இந்தப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இதன் பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணையிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும்படி பிதார்த்திக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் இலங்கை இராணுவத்தினரும் காவல்துறையினரும் பெருமளவில் தமிழ்மக்கள், அரச ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்கின்றது .......




தொடர்கின்றது சிங்களத்தின் கொலைவெறி..!!!


ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வுகளில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழ் மக்கள் குரல் எழுப்பிக்கொண்டிருந்த வேளையிலும் சிங்களக் கொடுங்கோல் இராணுவத்தினர் தமிழ் மக்களை சீண்டிச் சின்னாபின்னமாக்கி சூறையாடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட நிலைமை வர்ணிக்கமுடியாத கொடுமை.

நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா வயது 13 என்ற குறித்த மாணவி கடந்த 3ம் திகதி சனிக்கிழமை காலை கடைக்குச் சென்றபின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுமி நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் தலையில் பலமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது சடலத்திற்கு அருகில் வெற்று மதுப் போத்தல்களும் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் ஒட்டுக் குழுக்களும் நெருக்கமாக வாழும் நிலையில் இராணுவத்தினரே இந்த கொடுஞ்செயலைப் புரிந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து நெடுந்தீவு மக்கள் கடும் அச்சத்தின் மத்தியில் காணப்படுவது அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் 16வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை மதவாச்சிக்கு அழைத்துச் சென்று அங்கு நிராதரவாக கைவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 16 வயதுக்குட்பட்ட பெண்களை அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்தாலும் கூட அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. எனினும் இந்தச் சிப்பாய் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து பெற்றோர் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 27ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி உதயபுரம் கிழக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா சுப்பிரமணியம் (வயது 60) என்னும் நபரே கடத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய மேற்படிக் குடும்பஸ்தர், இறுதி யுத்தத்தின் பின்னர் இரகசிய தடுப்பு முகாங்களில் வைந்திருக்கப்பட்டு பின்னர், 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடத்தல் சம்பவம் நடைபெற்ற தினத்தில் இரவு 9 மணியளவில் வெள்ளைநிற வாகனத்தில் மேற்படிக் குடும்பஸ்தரின் வீட்டுற்கு முன்னால் வந்திறங்கிய இனம் தெரியாத குழுவினர், விலாசம் விசாரிப்பது போல் அக் குடும்பஸ்தரை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று வீட்டு வாசலில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினரால் வவுனியா மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான பல கடத்தல்கள், காணாமல் போதல்கள், பாலியல் வன்கொடுமைகள் நாளாந்தம் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களத்தினால் நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல உயிராபத்துகள் கருதி அச்சத்தில் மூடி மறைக்கப்பட்டுவருகின்றன.

இதனைச் சர்வதேசம் கவனத்தில் எடுக்கவேண்டியது மிகமிக அவசியமானது. இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று தமிழர்களுக்கு வதிவிட உரிமை மறுக்கும் நாடுகளே, உரிமை மறுத்து தமிழர்களை நாடுகடத்திவரும் நாடுகளே இலங்கையில் இன்றும் தமிழர்கள் மீது அரங்கேறிவரும் கொடுமைகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டவில்லையா?
உரியவர்களே விடை உங்களின் மனங்களில்தான். உலகெங்கும் வாழ் தமிழ் மக்களே நாம் சிந்திக்கும் நேரமல்ல இது ஒன்றுபட்டு செயற்படவேண்டிய நேரம்!



நன்றி : ஈழமுரசு

சர்வதேசத்தை நம்புவது.......

            


சர்வதேசத்தை நம்புவது.......

சிறிலங்காவை நோக்கிய அனைத்துலக பார்வைக்கள் மிக உன்னிப்பாக இருக்கின்றன. இந்தப் பார்வை சிறிலங்கா பேரினவாதத்திற்கு எதிரானவையா?அல்லது மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரானதா?


சிறிலங்கா மீதான அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் மஹிந்த குடும்பத்திற்கு எதிரானவையா அலல்து சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவையா?



சிறிலங்காவிற்கு எதிராக வரப்போகின்ற தீர்மானங்கள் ஆசியாவில் சீனாவின் ஆழுமைக்கு எதிரான, அல்லது சவால் விடுகின்ற ஓர் பொறிமுறையா? அல்லது சிறிலங்காவில் தமது செல்வாக்கை மையப்படுத்திய நகர்வா?



மேற்கூறப்பட்ட கேள்விகளுக்குள் தமிழர்கள் எங்கே? மேற்குலகிற்கு சீன சார்பு சிங்கள ஆட்சி அல்லது ஆட்சியில் சீன சார்பு தலைவர் இருப்பதே பிரச்சினை. இன்னும் சற்று கூடுதலாக பார்க்கப்போனால் மேற்கத்தைய நலனை புறக்கணிக்கும் ஆட்சியாளர்களே பிரச்சினையே தவிர சிங்கள இனவாதம் பிரச்சினை அல்ல.



ஆனால் ஒரே ஒரு விடயம் என்னவென்றால் சிங்களமும் சரி, சிங்கள பெளத்த பேரினவாதமும் சரி மத ரீதியாக, நட்பு ரீதியாக, நம்பிக்கை ரீதியாக சீன 100 விழுக்காடு சீன சார்பானதே. அதாவது சிங்கள பெளத்த பேரினவாதம் மேற்கினையோ அல்லது இந்தியாவையோ அடிப்படையில் நம்ப தயாராக இல்லை. இதனை மேற்குலகமும் நன்கு புரிந்து வைத்திருக்கும்.



இந்த அடிப்படையில் நீண்டகாலத்தில் இந்திய, மேற்குலக நலன்களை புறக்கணிக்காத ஓர் நம்பிக்கையான நிர்வாக அமைப்பு அங்கு தேவை எனில் அது தமிழர்களின் பிரதேசங்களாஅக்த்தான் இருக்கும். ஆனால் தற்காலிகமாக மேற்குலகத்திற்கு சிங்களத்தினை பயன்படுத்த தேவை தற்போதைய பூகோள, பொருளாதார நெருக்கடிகளில் தவிர்க்க முடியாது.



அனைத்துலகத்தினை நோக்கிய தமிழர்களின் போராட்டம் சில நொடிப்பொழுதுகளில் மாற இடமுண்டா? தமிழர்களை முற்று முழுதாக அனைத்துலகம் கைவிட்ட்டுவிடுமா என்ற கேள்வியும் தமிழ் மக்களிடையே தொக்கி நிற்கின்ற விடயம்தான்.



சிங்கள அரசு இந்தியா மற்றும் மேற்குலகம் சார் நலன்களுக்கும், அழுத்தங்களிற்கும் சரணாகதி அடைந்துவிட்டால் ( சிங்களத்திற்கு இது புதிது அல்ல) தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுவிடுவார்கள் என்பது புறக்கணிக்க கூடிய விடயம் அல்ல. ஏனென்றால் மஹிந்த அரசாங்கம் சாணக்கியம் மிகுந்தது. ஏன் சிங்கள ஆட்சியாளர்களும்தான். ஆகவே தமிழ் மக்களை வைத்து மேற்குலகம் நகர்த்தும் காய்களை தன் மூக்கு போனாலும் பரவாயில்லை என எண்ணும் சிங்களம் மேற்கிடம் சரணாகதி அடையலாம். அந்த சரணாகதியின் போது தமிழர்களுக்கு என்ன கிட்டும்.



மட்டுப்படுத்தப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை உள்ளிட்ட பஞ்சாயத்து திட்டமா? அல்லது சில இராணுவ முகாம்களை அகற்றி, சில இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்கப்படும் நடவடிக்கையா?



மஹிந்த மேற்குலகிடம் முற்றாக சரணாகதி அடைவதற்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று தனது கட்சியின் ஆட்சியை காப்பாற்றுவதா? அல்லது தன்னையும் குடும்பத்தினையும் காப்பாற்றுவதா?என்பதே ஆகும்



மேற்குலக நலன்களுக்கு அடி பணிந்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சியினை கைப்பற்ற அது ஏதுவாக அமைந்துவிடும். மேற்குலகிற்கு அடிபணியாவிட்டால் அது தனக்கும் குடும்பத்திற்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஆகவே மஹிந்த எல்லாவற்றையும் சமாளித்து செல்லவேண்டிய சூழலில் உள்ளார்.



ஆனால் தமிழ் மக்களைப்பொறுத்தவரை ஆட்சி, அதிகாரங்கள், கட்சி அரசியல், தனிப்பட்ட சுயசிந்தனைகள், பதவி ஆசைகள் என்பன கடந்த அல்லது அவைகள் இல்லாத ஒரே ஒரு நோக்கமே அதாவது எங்களின் விடுதலை.



எங்கள் இலட்சியத்தை, உரிமைப்போராட்டத்தினை கட்சி வேறுபாடுகள், சுய நலன்கள், பதவி ஆசைகள் என்பன பாதிக்க முடியாது, பாதிக்க கூடாது. உறுதியாக நாம் போராடிக்கொண்டு இருந்தால் இலக்கினை என்றோ ஒரு நாள் அடைவோம் என்ற வகையில் போராடுவோம்.



சர்வதேசத்தின் நலன்களுக்குள் நாம் சிக்குப்பட்டாலும், சர்வதேச நலன்களில் எங்கள் போராட்டத்தின் இலக்கும் அடிபடாமல் இருப்பதனை பார்த்துக்கொண்டாலே போதுமானது.



அதாவது மக்களிற்கு அதீத நம்பிக்கைகளை ஏற்படுத்தாது இலக்கி அடையும் வரை போராட்டம் தவிர்க்க முடியாது என்ற நோக்கிலேயே செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.கடந்த மாதம் சனிக்கிழமை (18/2/2012) வவுனியாவில் பேசிய கூட்டமைப்பு பிரதி நிதிகள் சிலர் சர்வதேசத்தின் மீது அதிக நம்பிக்கைகளை வைத்து பேசினர். உண்மையில் அது சிங்களவர்களை ஆத்திரமூட்டவா? அல்லது தமிழ் மக்களிற்கு தமது செயற்பாடுகள் பற்றி நம்பிகையினை ஏற்படுத்தவா? அல்லது மக்களுக்கு ஏதாவது ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவா? அல்லது சிங்களத்தை நம்பவேண்டாம் என்பதனை மக்களுக்கு எடுத்துக்கூறவா? என்ற பல நோக்கங்கள் இருந்தாலும்; மக்களிற்கு எதுவரை நம்பவேண்டும் என்ற வரையறைகளை கூறவேண்டும்.



நாம் சாத்வீக வழிகளில் போராடினோம்;பின்னர் ஆயுதபோராட்டமாக உரிமை போராட்டம் நகர்ந்தது, இப்போது சாத்வீக வழியினை முன் நிறுத்தி மீண்டும் போராட்டம் முனைப்பு பெறுகின்றது. அடுத்து எந்தவகையான போராட்டம் என சந்தர்ப்பங்களே தீர்மானிக்கும். இப்போது அந்த சந்தர்ப்பத்தினை தீர்மானிப்பவர்களாக சர்வதேசம் மாறியுள்ளதே தவிர சர்வதேசம் எமக்கான தீர்வினை சிங்களத்திடம் பெற்று தருபவர்களாக இருப்பார்கள் என்று இல்லை.



சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி போராடிக்கொண்டு இருக்கின்றது தமிழ்ழினம். சர்வதேச விசாரணையே மனித உரிமை மீறல்களிற்கு நீதியான தீர்மானத்தை தரும் என வாதிடுகின்றது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள். ஆனால் அமெரிக்காவோ சிங்கள அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு வலுவூட்டும் செயலில் இறங்கியுள்ளது. மனித உரிமை அமைப்புக்க|ளால், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அறிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்து, சர்வதேச விசாரணைகளை புறக்கணித்து மேற்கொள்ளும் தீர்மானம் உண்மையில் தமிழர்களிற்கு நீதியினை பெற்றுத்தருமா? அல்லது அமெரிக்காவின் பூகோள நலன்களை நிலை நாட்டுமா? என்பதே பெருத்த கேள்வி.

நடந்தது என்ன ???

                                  



நடந்தது என்ன ???

-------------------------------------------------------------------------------------------

சேனல் 4 வசம் பிரபாகரன் குறித்த ’பரபரப்பான’ வீடியோவும் சிக்கியுள்ளது?


லண்டன்: லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Sri Lanka’s Killing Fields என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப் படத்தை சேனல் 4 ஒளிபரப்பி உலகையே அதிர வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.

இதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தற்போது தகவல்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த புதிய வீடியோவில், உள்ள காட்சிகள் குறித்து இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் கூறுகையில், சேனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது.

அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உணர்கிறோம். இந்த வீடியோ காட்சி அதிகாரப்பூர்வமானதல்ல என்றும் நாங்கள் உணர்கிறோம்.

பிரபாகரனும், பாலச்சந்திரன் பாணியில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறோம். அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டுக் காயத்தைப் பார்க்கும்போது மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு ஆயுதப் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் தெரிகிறது. எனவே பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம்.

இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரிகிறது. நிச்சயம் அரசின் உயர்மட்டத்தின் அனுமதி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பது எங்களின் கருத்தாகும் என்றார்.

ஈழப் போர் முடிந்த ஓரிரு நாட்களில் இதுதான் பிரபாகரன் பிணம் என்று கூறி ஒரு வீடியோக் காட்சியையும், புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும், அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.

முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். பிறகு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். மேலும் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு தரவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சேனல் 4 பட வீடியோக் காட்சிகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அதைப் பார்த்த பிறகுதான் கூற முடியும்.

இந்த ஆவணப்படத்தை தயாரித்தவரான ஜான் ஸ்னோ கூறுகையில், புதிய ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் நாங்கள் தீவிர தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் உண்மையானவை, திரிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிய வந்தது.

இந்த மிகப் பெரிய போர்க்குற்றச் செயலில் இலங்கை அரசும், ராணுவமும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயல்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேக ஆகியோர்தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த படுகொலைகளை நடத்திய ராணுவத்தினர் அத்தனை பேருமே மிகப் பயங்கர கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ராணுவ அதிகாரிகள் முதல் அதிபர் வரை, அவரது தம்பிவரை அனைவருமே இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளது வியப்பளிக்கிறது.

ஒரு பத்திரிக்கையாளராக நடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது எங்களது கடமை. இனி ஐ.நா சபையும், சர்வதேச சமுதாயமும்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுதான் பரிதாபமாக உயிரிழந்து போன ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நியாயமானதாக அமையும்.

நாம் தற்போது சிரியாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். எனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் நாம் கண்டிப்பாக கவலைப்பட்டாக வேண்டும். அது முக்கியமானது என்றார்.

இந்த வீடியோ குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆசியா பிராந்தியத்துக்கான இயக்குநர் சாம் ஜாப்ரி கூறுகையில், இலங்கை ராணுவத்தின் உயர்ந்தபட்ச தலைவர் அதிபர் ராஜபக்சேதான். ராணுவத்தின் தலைமை கமாண்டரும் அவர்தான். அதேபோல ஈழப் போரின்போது ராணுவ உத்திகளை தான்தான் வகுத்து செயல்படுத்தியதாக அவரது சகோதரர் கோத்தபயா ராஜபக்சேவும் பலமுறை பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

எனவே நடந்த சம்பவங்கள் குறித்து குறிப்பாக பாலச்சந்திரன், பிரபாகரன் குறித்து இவர்கள் இருவரும் நிச்சயம் விசாரிக்கப்பட்டாக வேண்டும். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான மனிதப்படுகொலைகள் நடந்துள்ளன என்றார்.

ஸ்னோ தொடர்ந்து கூறுகையில், ஐ.நா. வின் பாதுகாக்கப்பட்ட ரகசிய அறிக்கையில் சில முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பு வளையப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை வேண்டும் என்றே திட்டமிட்டு குண்டு வீசிப் படுகொலை செய்தனர். இது அரசுக்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல பாதுகாப்பு வளையப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை பட்டினி போட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டாக வேண்டும் என்றார்.






இடுகை - ஒன்இந்தியா..........
 
 

இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது ‌

                 

இல‌ங்கை‌ அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது ‌- பிரணா‌‌ப் முக‌ர்‌ஜி

''இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திராக ஐ.நா.‌ ம‌னித உ‌ரிமை ஆணைய கூ‌ட்ட‌த்‌தி‌ல் அமெ‌ரி‌க்கா கொ‌ண்டு வரு‌ம் ‌தீ‌‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது'' எ‌ன்று ம‌த்‌திய ‌நி‌தியம‌ை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

‌ம‌க்களவை இ‌ன்று காலை கூடியது‌ம் இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திராக ஐ.நா‌.‌வி‌ல் கொ‌ண்டு வர‌ப்பட‌ம் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌‌தி.மு.க., அ.‌தி.மு.க. உ‌ள்‌ளி‌ட்ட த‌மிழக எ‌ம்.‌பி.‌க்க‌ள் வ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதையடு‌த்து இல‌ங்கை‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌ம் கு‌றி‌த்து ம‌க்களவை‌யி‌ல் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்த ‌‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி, இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌ம் கு‌றி‌த்து அரசு ‌வி‌ழி‌ப்பு‌ட‌ன் உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

ஜெ‌னீவா‌‌வில் ஐ.நா. ம‌‌னித உ‌ரிமை ஆணைய கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌தீ‌ர்மான‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌உ‌ள்ளது எ‌‌ன்று‌ம் இது ப‌ற்‌றி த‌மிழக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி ஆ‌கியோரு‌க்கு அரசு ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அவ‌ர்க‌ள் இருவரு‌ம் அர‌சி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டை தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளதாகவு‌ம் ‌பிரணா‌‌ப் கூ‌றினா‌ர்.

இ‌‌ப்‌பிர‌ச்சன‌ை‌யி‌ல் இ‌ன்னு‌ம் முடிவெடு‌க்க கால அவகாச‌ம் உ‌ள்ளது எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், சாதாரணமாக எ‌ந்த நா‌ட்டு ‌‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு‌ம் ஆதரவு அ‌ளி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்றா‌ர்.
ஆனா‌ல் இ‌ப்‌பிர‌ச்சனையை அரசு கவன‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ம் எ‌‌ன்று‌ம் இ‌ன்னு‌ம் கால அவகாச‌ம் உ‌ள்ளதா‌ல் ஆலோ‌சி‌த்து அரசு இறு‌தி முடிவு எடு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ‌பிரணா‌‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.