Like me

Sunday, October 28, 2012

திலீபன் - 25 ஆண்டுகள் கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேறவில்லை.


அகிம்சை இல்லாத காந்திய தேசம் இந்தியா
                                           


இலட்சிய பயணத்தில் இம்மியளவும் சறுக்காத வீரனை தாயகம் இழந்து  25 ஆண்டுகள் கடக்கின்றன. பட்டினியால் வாடி வதங்கிய உடல் இந்த உலகத்துக்கு விடை கொடுத்து ஆண்டுகள் பல கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேறவில்லை.

தனி ஈழம் அமைவதை வானத்திலிருந்து நட்சத்திரமாக தோழர்களுடன் பார்த்து மகிழ்வேன் என்று சொன்ன இலட்சிய வீரனின் கனவு இன்று வரையில் ஈழத்தவர்களால் நிறைவேற்றப்படவில்லை.

காந்திய தேசம், அஹிம்சாவாதிகளின் தேசம் என்று தங்களைத் தாங்களே மார் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் சுயரூபத்தை உலகுக்கே தோலுரித்துக் காட்டித் தன்னையே ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் விடைபெற்ற நாள் இன்று. நல்லூரில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் தமிழ் கடவுள் முருகனையே கண்ணீரில் மிதக்க வைத்தது திலீபனின் சாவு.

எம் தொப்புள் கொடி உறவுகள் என்று இந்தியாவுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு எப்போ துமே ஈழத் தமிழர்களுக்கு விருப்பம். இதனால்தான் இந்திய இலங்கை உடன்படிக்கையையும் வேறு வழியின்றி எம் தேசம் ஏற்றுக் கொண்டது. இந்தியர்கள் எமது உறவுகள் என்பதால் அவர்கள் எம்மைக் காக்க எதையாவது செய்வார்கள் என்பது ஈழத்தவர்களின் நம்பிக்கை.

இதற்குச் சான்று பகரும் விதமாக, 1987 ஆம் ஆண்டு “ஒபரேஷன் லிபரேஷன்’ இராணுவ நடவடிக்கையை இலங்கைப் படைகள் முன்னெடுத்திருந்த காலத்தில் ஈழத்தில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்தக் காலத்தில் வான் வழியாக தாயகப் பரப்புக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொட்டலங்களை அள்ளி, அள்ளிக் கொட்டின. இது ஈழத் தமிழர்கள் இந்தி யாவை முற்று முழுதாக நம்பக் காரணமாயிருந்தது.

இதன் பின்னரான காலப் பகுதியில் இலங்கை இந்திய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியத் துருப்புக்கள் தமிழீழ தேசத்தில் நிலை கொண்டிருந்தன. வந்திருப்பது பசுத்தோல் போர்த்திய புலி என்பதை ஈழத்தவர்கள் அறியவில்லை.

இந்த நேரத்திலேயே தியாக தீபம் திலீபனின் புதிய பயணம் ஆரம்பித்தது. இந்தியப் படைகளின் உண்மை முகத்தை தோலுரிப்பதற்கு சமராடப் புறப்பட்டான் திலீபன். கையில் “ஏ.கே 47′ இல்லை, வோக்கியும் இல்லை மனஉறுதி எனும் ஆயுதத்தைத் தரித்துக் கொண்டு அவன் புறப்பட்டான்.

காந்திய தேசம், வெள்ளையர்களுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தி சுதந்திரத்தை வென்றெடுத்தவர்கள். அஹிம்சையின் பிறப்பிடம் தாங்கள்தான் என்று வரலாற்று நூல்களில் கறுப்பு மையால் வாசகங்களை பதித்திருந்த இந்திய தேசத்துடன் சமராட திலீபன் எடுத்துக் கொண்டதும் அஹிம் சையைத்தான். முள்ளை முள்ளால் எடுப்பது இப்படித்தான்.

அஹிம்சையின் வழி நின்று உயரிய இலட்சியத்துடன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் தனது உண்ணா நோன்பினை 15.09.1987 இல் ஆரம்பித்தான். மக்கள் திரளின் ஆதரவுடன் தனது உண்ணா விரதத்தை நடத்திக் கொண்டிருந்தான். மறுபுறம் இந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியப் படையுடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

உண்ணாவிரதத்தில் ஒவ்வொரு நாளும் திலீபன் செத்துக் கொண்டிருக்க அதைப் பற்றி அக்கறை கொள்ளாத இந்திய அமைதிப்படை காந்திய தேசத்தின் புதல்வர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களைப் பறிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளும் நிறைவேற்றும் உறுதி மொழிகளை வழங்காது திலீபனின் உண்ணாவிரதத்தை தடுக்க முழுமூச்சாக இயங்கியது இந்திய அமைதிப்படை. இருந்தும் இலட்சியத்தில் சற்றும் தளராத திலீபன் இறுதி வரையில் கோரிக்கைகள் நிறைவேறாமல் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன் என்று உறுதியாக இருந்து விட்டான். ஒரு மனிதன் உண்ணாமல் நீராகாரம் கூட அருந்தாமல் எத்தனை நாள்கள் இருக்க முடியும்.

திலீபனின் அஹிம்சைப் போராட்டம், அஹிம்சாவாதிகள் என்று சொல் லிக் கொள்ளும் இந்திய தேசத்தால் 12 நாள்களின் பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறி அஹிம்சைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. மெழுகாக உருகி ஈழ தேசத்துக்காக தனது உயிரைத் திலீபன் ஆகுதியாக்கியதன் மூலமே முடிவு கட்டப்பட்டது.

நிறைவேறாத கோரிக்கைகளுடன் அந்த ஆன்மா இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டது. அஹிம்சாவாதி திலீபனின் முன்னால் காந்தியின் அஹிம்சை கூட தோற்றுப் போய்விட்டது.

இன்றும் இந்தியா தனது தொப்புள் கொடி உறவு என்று ஈழத் தமிழர்களுக்கு உதவுவதாகச் சொல்லிக் கொள்கிறது. வீட்டுத் திட்டம் முதல் வீதித் திருத்தம் வரையில் பல்வேறு வடிவில் இந்தியா ஈழத் தமிழர்களின் காயத்தை ஆற்றிக் கொள்ள முற்படுகின்றது.

அத்துடன் தமிழகத்தில் ஈழத்தின் உணர்ச்சிகள் பொங்கிப் பிரவகிக்கின்றன. சிங்களவர்களை கலைத்து கலைத்து விரட்டுவது முதல் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வருவது வரை தீர்மானங்கள் அனல் பறக்கின்றன.

மறுபுறத்தில் திலீபன் வழியில், இந்திய தேசத்தில் உண்ணாவிரதம் இருக்கிறான் ஈழத்தவன் செந்தூரன். அவன் ஒரு கோரிக்கையை முன் வைத்தே உண்ணாவிரதத்தில் இருக்கிறான். இந்தியாவில் ஈழ அகதிகளை தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுங்கள் என்று கோரியே அவனது உண்ணாவிரதம் தொடர்கின்றது.

செந்தூரன் ஈழத்தவன் ஆதலால் இன்று வரையில் தனது முடிவை மாற்றாமல் உண்ணாவிரதத்தில் இருக்கின்றான். ஒரு கட்டத்தில் தனது தேசத்தில் தனக்கே சவால் விடுகிறான் என்று ஈழத்தவனை தூக்கிச் சிறையில் போட்டார்கள்.

பிணையில் வெளியில் வந்தான். ஆனால் இலட்சியத்தை விடவில்லை. மீண்டும் தொடர்கின்றான் உண்ணாவிரதத்தை. அவனது கோரிக்கைகளை இன்றும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது இந்திய தேசம்.

ஓர் உயிர் ஈழத்தில் வைத்துப் பறிக்கப்பட்டு விட்டது. மற்றைய உயிர் இந்திய தேசத்தில் ஊசலாடுகின்றது.


வெட்கப்படவேண்டிய விடையம் !


ஏன் தமிழர்கள் உதவவில்லை ? 
                                   

    கடந்த வருடம் மார்ச் மாதம், தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றினுள் வைத்து துஷா என்னும் தமிழ்ச் சிறுமி, ஆபிரிக்கர்களால் சுடப்பட்டார். 2 முறை அவர் இருதயம் துடிப்பதை நிறுத்தியது. ஷாக் கொடுத்து அதனை மீண்டும் துடிக்கவைத்து, பரா மெடிக்ஸ் வைத்தியர்கள் அவரை வைத்தியசாலையின் தீவிரப் பிரிவில் அனுமதித்தனர். பல இருதய மற்றும் முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைக்கு துஷா உள்ளாக்கப்பட்டு, அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. பல மாதங்களின் பின்னர், இடுப்புக்கு கீள் இயங்காத நிலையில், அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். இந்த வழக்கை விசாரித்த சுமார் 6 பிரித்தானியப் புலனாய்வுப் பொலிசார், குற்றவாளிகள் மூவரையும் கைதுசெய்து, நீதிமன்றில் நிறுத்தி ஆயுள் தண்டனை பெற்றுக்கொடுத்தனர். அத்தோடு அவர்கள் தமது வேலை முடிந்தது என்று நின்றுவிடவில்லை ! அவர்கள் புரிந்துள்ள செயலைக் கேட்டால் மெய்சிலிர்க்கும் ! தமிழர்கள் நாணிக் குனியவேண்டியும் இருக்கும் !

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்த 6 க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பொலிசார் பிற செயல்பாட்டாளர்களோடு இணைந்து மலையேறியுள்ளனர். மலை ஏறுவது என்றால் ஏதோ குடித்துவிட்டு மலையேறினார்கள் என்று நினைக்கவேண்டாம் ! பிரித்தானியாவில் உள்ள அதி உயரமான 3 மலைகளை அவர்கள் ஏறியுள்ளார்கள். ஸ்காட்லான், வேல்ஸ் என்று பல கிராமங்களூடாக அவர்கள் மலையேறும்போது உண்டியல் குலுக்கியுள்ளனர். பல கிராம மக்களும், நகரவாசிகளும் தம்மாலான பணத்தை உண்டியலில் போட்டுள்ளனர். இந்த மலையேறும் பயணம் துஷாவுக்காக நடத்தப்பட்டது. இந்த கவனயீர்ப்பு மலைப் பயணத்தால் சுமார் 180,000 ஆயிரம் பவுண்டுகளை அவர்கள் 2 நாட்களில் சேர்த்துள்ளார்கள். மேலும் பல வெள்ளை இனத்தவர்கள் தமது பங்களிப்பைச் செய்தவண்ணம் உள்ளனர் எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.

ஈழத் தமிழ் பெண்ணான துஷா, பற்றி பல செய்திகளை வாசித்துவிட்டு அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள் தமிழர்கள் ! தமிழ் அமைப்புகள் கூட மிகச் சொற்பமான அளவு உதவிகளையே செய்தது. ஆனால் வெள்ளை இன மக்கள் அதுவும் பொலிசார், இந்த தமிழ் பெண்ணுக்காக மிகவும் ஆபத்தான 3 மலைகளை ஏறிக் கடந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளனர். கடும் குளிர் நிலவும், மற்றும் ஆபத்தான இம் மலைத்தொடரை இவர்கள் நடைபயணம் மூலம் கடந்துள்ளனர். எமக்கு என்ன என்று எல்லாத் தமிழர்களும் ஒதுங்கியிருப்பது ஒரு புறம் இருக்க, யார் மாவீரர் தினத்தை நடத்துவது ? யார் மேடையில் ஏறிப் பேசுவது ? யார் விளையாட்டுப்போட்டிகளை நடத்துவது ? யார் தமிழ் அமைப்புகளை வைத்து நடத்துவது ? என்று தான் தமிழர்கள் இன்னும் தமது காலத்தையும் நேரத்தையும் செலவழித்து யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதேவேளை இலங்கையில் இருக்கும் புலனாய்வு பொலிசாரை எடுத்தால் அவர்களுக்கு வெள்ளைவானில் ஆட்களை கடத்தவே நேரம் சரியாக இருக்கும் ! இந்தியாவில் உள்ள பொலிசாரை எடுத்தால் லங்சம் வாங்கவே நேரம் சரியாக இருக்கும் ! ஆனால் பிரித்தானியப் பொலிசாரைப் பார்த்தீர்களா ? துஷாவின் எதிர்காலம் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவருக்கு கவுன்சில் உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பராமரிக்கும் செலவுகளைக் கூட அவர்கள் இதுவரை சரியாகச் செய்துகொடுக்கவில்லை. இந் நிலையிலேயே பிரித்தானியப் பொலிசார் துஷாவுக்காக இவ்வளவு சிரமங்களைக் கடந்து நிதியை சேமித்து கொடுத்துள்ளனர் !



அதிர்வு இணையம்

திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்!


திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்!- ச.ச.முத்து
                                       

திலீபன் மரணித்து இருபத்தைந்து வருடங்களாகிறது. என்ன கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தானோ அதே கோரிக்கைகளே இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே தொடர்வதுதான் வேடிக்கை.

கோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும்.

ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் இந்திய வல்லாதிக்கமும் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற விருப்பமோ நடவடிக்கையோ எதுவுமே எடுக்காமல் திலீபன் என்ற அந்த அற்புதமானுடன் மெதுமெதுவாக நீருமின்றி சாவதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதே இன்னும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.

இத்தனைக்கும் திலீபன் ஒன்றும் ஈழத்தை பிரித்து தாருங்கள் என்றோ வடக்கு-கிழக்கை தனியான ஒரு தேசமாக அங்கீகரியுங்கள் என்றோ கேட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை.

அவன் சார்ந்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை முன்னிலைப்படுத்தும் எந்தவொரு கோரிக்கைகளும் அவனின் உண்ணாவிரதத்தில் இருந்திருக்கவில்லை.

திலீபனின் கோரிக்கைகள் மிகமிக சாதாரணமானவை. மிகவும் இயல்பானவை. தமிழ் மக்களின் அன்றாடவாழ்வை இயல்புநிலைக்கு திருப்பும்படியே அவனின் கோரிக்கைகள் இருந்திருந்தன. இத்தகைய ஒரு நிலையியே திலீபனின் நினைவுகளை மீட்டும் ஒரு இருபத்தைந்தாவது ஆண்டு வந்துள்ளது.

இதனை போன்றதொரு பொழுதிலேயே திலீபனின் போராட்டமும் நிகழ்த்தப்பட்டது.ஆயுதங்கள் தற்காலிகமாக மௌனமாக்கப்பட்டிருந்த காலமது. ஆயுதங்கள் இல்லாமலேயே சமராட வேண்டி இருந்த நேரமும் அதுவே. அதற்காகவே திலீப வேள்வி தொடங்கியது.

தனித் தமிழீழம், சமஸ்டி, சுயாட்சி போன்ற எந்தவொரு ஆட்சி அதிகார கோரிக்கைகளும் இன்றி மிகவும் இயல்பான கோரிக்கைகளுடனேயே திலீபன் உண்ணாவிரத மேடை ஏறினான். ஒப்பந்த்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்வதற்காக அவன் மானுட வரலாற்றில் அதுவரை காணப்பட்டிராத ஈகத்தை நடாத்தவேண்டி இருந்தது.

தண்ணீரும் அருந்தாமல் இருக்கப்போகும் உண்ணாவிரதம் எத்தகைய வலிகளை தரும் என்பதை தெரிந்துகொண்டே உண்ணாவிரதமேடைக்கு வந்து அமர்ந்தவன் திலீபன்.

1.பயங்கரவாததடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ்கைதிகளும் உ;னடியாகவே விடுதலைசெய்யப்படவேண்டும்.

2.புனர்வாழ்வுதிட்டம் என்ற பெயரில் தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்டமுறையில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

3.வடக்கு-கிழக்கு இடைக்காலஅரசு அமையும்வரை ‘புனர்வாழ்வுதிட்டங்கள்’ என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.

4.வடக்கு-கிழக்கில் புதிதாக சிங்கள காவல் நிலையங்களும், இராணுவ முகாம்களும் அமைப்பது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

5.சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் முகாமிட்டிருக்கும் பாடசாலைகளில் இருந்து உடனடியாக விலகிக்கொள்வதுடன், சிறீலங்காப் படைகளால் தமிழ் கிராமங்களுக்கு அருகில் உள்ள சிங்கள கிராமங்களின் ஊர்காவல் படையினருக்கு வழங்கிய ஆயுங்களை இந்தியா களைய வேண்டும்.

இவையே திலீபனின் கோரிக்கைகள்.

இந்தக் கோரிக்கைகளுக்காகவே ஒரு உன்னதமான இளைஞன் ஒரு சொட்டு தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடிப் போய்விட்டது.

இந்த இருபத்தைந்து வருடங்களில் உலகம் எவ்வளவோ விடயங்களில் மிகமிக முன்னேறிவந்துவிட்டது. தகவல், தொழில்நுட்பம், வாழ்வியல், அறிவியல், ஆற்றல், நாகரீகம் என்று எல்லாவற்றிலும் இந்த இருபத்தைந்து வருடங்களில் பெருத்த பாய்ச்சலும், முன்னகர்வும் கண்டடைந்துள்ளது.

ஆயினும் திலீபனின் கோரிக்கைகள் மட்டும் அப்படியே இன்றுவரை நிறைவேற்றப்படாமலேயே நங்கூரமிட்டு அப்படியே தொடர்வது முழுமானுடத்துக்கே அவலமானது.

இன்றும் பாடசாலைகளிலும், பொது இடங்களில் இராணுவம், இன்றும் இராணுவ முகாம்களுக்காக நிலங்களை அபகரிப்பதும் தொடர்கிறது. இன்றும் பயங்கரவாதத் தடை சட்டத்தின்கீழ் வகைதொகையற்ற கைதுகள், தடுத்து வைப்புகள், இன்றும் புனர்வாழ்வுத் திட்டங்கள் என்ற போர்வையிலும் மீள்குடியேற்றங்கள் என்ற போர்வைக்குள்ளாகவும் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள்...

எல்லாம் இன்றும் அப்படியே அதே அடக்குமுறை வடிவத்துடனுயே தொடர்கிறது. பஞ்ச சீலமும், நான்கு வேதங்களும், தத்துவங்களும், அகிம்சையும் தங்களிடமிருந்தே ஆரம்பித்ததாக கர்வம் கொண்டிருந்த பாரதத்தின் உச்ச அரசில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இதுதான் ‘அகிம்சையின் விஸ்பரூபம்’ என்ற பாடம் சொல்லித் தந்தவன் எங்கள் திலீபன்.

திலீபன் வென்றான்,தோற்றான் என்பது அல்ல முக்கியம்.அவன் தன் காலத்தில் இவைகளை முன்னிறுத்தி தனது உயிரையும் தந்து போராடினான் அதுதான் முக்கியம்.

மிகவும் நுணுக்கமாக கவனித்தால் திலீபனின் போராட்டம் எத்தகைய வரலாற்றுதடையை நீக்கி அந்த நேரத்து போராட்ட நகர்வுக்கு உதவி இருப்பதை பார்க்கலாம்.

விடுதலைப் போராட்டத்தை நசுக்கி எறிவதற்காக ஒப்பந்த போர்வைக்குள் பிராந்திய வல்லாதிக்கமும் பேரினவாதமும் செய்துகொண்ட சதிதிட்டத்தின் உண்மை உருவத்தை முகமூடி கிழித்துக்காட்ட திலீபனின் உண்ணாவிரதம் ஒரு போராட்ட முறையாக இருந்தது.

திலீபன் என்பது என்றும் தொடரும் ஒரு போர்முறையே ஆகும்.அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக மட்டும் அல்லாமல் இன்றும் ஒரு வழிமுறையாகவே தொடரக்கூடியது.

இதுவே திலீபனின் சாகாத ஈகத்தின் தன்மைஆகும்.

உரிமைகளும், விடுதலையும் கிட்டும் வரைக்கும் மானுடம் அனைத்து வழிகளிலும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக தொடர்ந்தும் எதிர்வினையை ஆற்றிக்கொண்டே இருக்கும். இதுவே உயிரினங்களின் வாழ்வுக்கான போராட்டமாகவும் இருந்துவந்து கொண்டிருக்கிறது.

ஒரு வழி அடைக்கப்படும்போது இன்னொரு வழியை தேர்ந்தெடுத்து அதனூடாக தனது உரிமைகளை பெற்றுக்கொள்ள போராடும் ஒரு வழிமுறையையே திலீபன் காட்டிச்சென்றுள்ளான்.

இதோ இன்றும் குளிர் அடர்ந்த தெருக்களில் ஏதோ ஒரு உரிமைக் கோரிக்கையுடன் நடந்து பெருந்தூரங்களை கடக்கிறார்களே எங்கள் உறவுகள் அவர்களில் திலீபனின் போர்முறை படிந்திருக்கிறது.

தாயகத்தில் எழும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், எப்போதோ எழும் ஒற்றை எதிர்ப்பு குரல்களில் எல்லாம் திலீபனின் போர்முறையே தொடர்கிறது.

ஆம்,திலீபன் என்பது வெறும் பெயர் அல்ல. திலீபன் என்பது இடைவெளியின்றித் தொடரும் போர்முறை ஆகும்.

திலீபன்



                                 25 ஆண்டுகளுக்கு முன்பு
பல்லாயிரக் கணக்கான மக்கள்
பரிதவித்துப் பார்த்திருக்க
ஓர் உயிர் தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து
தன் உடலையும், உயிரையும்
துடிக்கத் துடிக்கத் தற்கொடையாக்கியது
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

தொடர்ந்து 12 நாட்கள்
265 மணித்தியாலங்கள்
ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல்
உண்ணா நோன்பினை மேற்கொண்டு
உடல்துடித்து உயிர்விட்டது
ஒரு உத்தம ஆத்மா
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

ஒரு இலட்சிய நெருப்பான
எங்கள் போராட்டத்தின் குறியீடான
எங்கள் விடுதலைப் போராட்டத்தில்
வித்தியாசமான வியக்கத்தக்க
புதுமையான தியாகத்தைப் புரிந்தவன்
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

1987ம் ஆண்டு புரட்டாதித்திங்கள் 26ம் நாளன்று
சாத்வீகப் போராட்டக் களத்திலே
தன் உடலும் உயிரும் துடிதுடிக்க
தன்முன்னே மரணத்தை மண்டியிடவைத்தவன்
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

எங்கள் தெய்வீகத் துறவியே
தியாக தீபம் திலீபனே
நாங்கள் நெக்குருகி நினைவஞ்சலி செலுத்தி
உன் தியாத்தை எண்ணிப்பார்க்கின்றோம்.

திலீபன் நீ யாருக்காக இறந்தாய் ?
தீலீபன் நீ எதற்காக இறந்தாய் ?
எங்கள் மண்ணுக்காக மரித்தவன் நீ
எங்கள் உரிமைக்காக உயிர்துறந்தவன் நீ
எங்கள் சுதந்திரத்திற்காக - உன்
சுவாசத்தை நிறுத்தியவன் நீ
எங்கள் கௌரவத்திற்காக
காலனை அழைத்தவன் நீ.

தான் சித்த மண்ணுக்காக,மக்களுக்காக
ஓர் உயிரினால் ஆகக் கூடச் செய்யமுடிந்த
அதியுயர் தியாகத்தைப் புரிந்தவன்
தன்னைத் தானே விடுதலைக்காய்
கொஞ்சம் கொஞ்சமாய் எரித்துக்கொண்ட
ஒரு இலட்சிய நெருப்பு
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

நாம் உறங்கி விழிப்பதற்காய்
தான் உறங்க மறந்துவிட்டான் - அவன்
தான் உறங்க மறந்ததனால்
அவனை மீழா உறக்கம் அணைத்ததுவே
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

அவன் மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி
அவன் மரணம் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி
அவன் மரணம் தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி
அவன் மரணம் தமிழீழ மக்களை எழுச்சிகொள்ளச் செய்த நிகழ்ச்சி
அவன் மரணம் பாரதநாட்டைத் தலைகுனியவைத்த நிகழ்ச்சி
அவன் மரணம் உலகின் மனச்சாட்சியை ஒருதரம் சீண்டிவிட்ட நிகழ்ச்சி.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்றாய் அன்று
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்றாய் அன்று
மக்கள் புரட்சி எரிமலையாய் வெடித்ததையா இன்று
<சுதந்திர தமிழீழமும் எம் கண்முன்னே தெரிந்ததையா
ஐயகோ என் செய்வோம்
திராவிடம் தலையெடுத்து தனிநாடு கண்டுவிட
ஆரியம் அசைவின்றி அயர்ந்துதான் இருந்திடுமா ?
பிராந்திய நலனென்றும்,©கோள அமைப்பென்றும்
பற்பல கதைகூறி,பகைதேசங்கள் ஒன்றாகி
எம் மண்ணை எரித்ததையா
எம் இனத்தை அழித்ததையா.

விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை என்றாயே - எம்
கண்ணெதிரே அன்று உன் உடல்உயிர் துடித்ததுவே
தத்துவங்களைத் தலைகீழாக்கிய தெய்வீகத் துறவியே - நீ
மிதிக்கப்பட்ட தமிழினத்தின் வேதனையில்
வெடித்து வெளிவந்த தீப்பிழம்பு
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டவனே
அன்று சாவு உன்னிடம் சரணடைந்தது - நீ
காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாத நட்சத்திரம் - உன்
பாதம் பட்டதால் எங்கள் ©மி புனிதம்பெற்றது - நீ
காலத்தால் சாகாத வரலாற்றுப் புரசனாக - நீ
என்றும் உலகெங்கும் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.

யேர்மன் திருமலைச்செல்வன்.

கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்




தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை.

ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி ‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.

சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.

இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.
1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக ‘சயனைட்’ அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.

இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை
விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை

ஈழமறவர் வீரவரலாறு

இந்திய அரசின் மின்சாரப் பொய்கள் !

Prabakar Kappikulam2:35pm Sep 21

முழுமையாக படியுங்கள்... பகிருங்கள்... 

இந்திய அரசின் மின்சாரப் பொய்கள் !
    கூடங்குளத்தில் அணு உலைகளை அகற்ற வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி மாவட்ட மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் ஏதோ கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போராட்டம் அல்ல. இந்திய அரசு எப்பொழுது கூடங்குளத்தில் அணுமின் உலைகளை கட்டுவதற்கு முடிவு செய்ததோ, அன்றிலிருந்தே மக்கள் போராட்டம் தொடங்கிவிட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துகளை மாணவர்களும், பொதுமக்களும் திரட்டினார்கள். இதை 1989 ஆம் அண்டு இந்தியா வர இருந்த அன்றைய சோவியத் கூட்டமைப்பின் அதிபரான மிக்கைல் கோர்பசேவிடம் கையளிக்க முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவரை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை. 1989 மே 1ஆம் நாள் மீனவர்களும், பொதுமக்களும் கன்னியாகுமரியில் அணு உலைக்கு எதிராக அமைதியான முறையில் நடத்திய பேரணியில் காவல்துறை கண்முடித்தனமாகச் சுட்டதில் இக்னாதிசு என்பவர் உயிரிழந்தார். கூடங்குளம் அணு உலையின் ஒப்பந்ததாரரான சோவியத் கூட்டமைப்பு 1991 ஆம் ஆண்டு சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்ததால், 1991 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை மக்கள் போரட்டம் ஓய்ந்து போனது. 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு அணு உலைக் காட்டுமானப் பணி மெல்லத் தொடங்கியது போலவே, மக்கள் போராட்டமும் மெல்லத் தொடங்கி இன்று மூன்று மாவட்ட மக்களில் பெரும்பான்மையானோர் போராட்ட களத்தில் உள்ளார்கள்.

சாதி, மதத்தின் பெயரால் இப்போரட்டத்தைச் சீர்குலைக்க இந்திய அரசு முயன்று பயனளிக்காமல் போனதால், வெளிநாட்டில் இருந்து இவர்களுக்குப் பணம் வருகின்றது என்ற பொய்யைப் பரப்பி, போராடும் மக்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தவும், தமிழக மக்களிடையே குழப்பத்தை உருவாக்கவும் தொடர்ந்து முயல்கின்றது. அரசின் கூற்றின்படி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அந்நாடுகளின் பெயர்களை வெளியிட்டு, அந்நாட்டு தூதரக அதிகாரியை அழைத்து “இந்திய நாட்டு வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவித்ததற்காகக் கடும் கண்டனம் தெரிவிக்க முடியுமா? பின்னர் அந்நாடுகள் அளிக்கும் பதில் திருப்திகரமானதாக இல்லாதபட்சத்தில் அந்நாடுகளுடனான (அது வல்லரசாக இருந்தாலும்) தூதரக உறவுகளையும், பொருளாதார ஒப்பந்தங்களையும் துண்டிக்க இந்தியா ஆயத்தமா?"

ஏனெனில் அரசின் கூற்றின்படி அணு ஆற்றல் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. அப்படியிருக்க இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் நாடுகள் பற்றி இந்திய அரசு ஏன் இன்னும் கள்ள அமைதி காக்கின்றது? எதற்காக இந்தியா தயங்குகின்றது? மற்றுமொரு ஆயுதமாக‌த் தான் "தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடங்குளம் அணு உலை தேவை", "கூடங்குளம் வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும்" என்பது போன்ற பரப்புரைகளைச் செய்து வருகின்றது இந்திய அரசு. அர‌சு கூறும் "த‌மிழ‌க‌ வ‌ள‌ர்ச்சி", "எல்லா வீடுகளுக்கும் த‌டைய‌ற்ற‌ மின்சார‌ம்" என்கிற பரப்புரைக‌ளின் உண்மைத் த‌ன்மையைப் ப‌ற்றிப் பார்ப்ப‌த‌ற்கு முன் சில‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளைப் பார்ப்போம். 

தமிழகத்தின் வளர்ச்சிக்குக் கூடங்குளம் அணு உலை தேவை என்பது முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயலும் செயல். நெய்வேலி அனல் மின் நிலைய உற்பத்தியில் வெறும் 30 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்றது. மீதமுள்ள 70 விழுக்காடு மின்சாரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றது. நெய்வேலியிலிருந்து உற்ப‌த்தியாகும் மின்சார‌த்தை ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளுக்கு கொடுப்ப‌தை நிறுத்தினாலே த‌மிழ‌க‌ம் மின் உற்‌பத்தியில் உப‌ரி மாநில‌மாக‌த் திக‌ழும். இதும‌ட்டும‌ன்றி மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் உள்ள (T&D Loss) தொழில்நுட்ப‌க் குறைபாடு கார‌ண‌மாக‌ மின்சார இழ‌ப்பு ஏற்ப‌டுகின்ற‌து. த‌மிழ‌க‌த்தில் இவ்விழ‌ப்பு 18%. 2010 ஆம் ஆண்டு த‌மிழ‌க‌த்தின் மொத்த‌ மின் உற்ப‌த்தி 10,214 மெகா வாட், இதில் 1,830 மெகா வாட் வீணாகியது. இந்த‌ இழ‌ப்பீட்டை 10 விழுக்காட்டிற்கும் கீழாக‌க் குறைப்பதன் மூலம் கூட‌ங்குள‌ம் அணு உலைத் திட்ட‌த்தில் த‌மிழ‌க‌த்திற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌டும் 405 மெகா வாட் மின்சார‌த்தை விட இரு மடங்கு மின்சாரம் ந‌ம‌க்குக் கிடைக்கும். அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்தது 1,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் சேமிக்க முடியும்.

த‌மிழ‌கத்தின் மின் தேவை ஆண்டிற்கு 9% என்ற அளவில் அதிகரிக்கின்றது. இந்த‌ மின்சார‌த்தை இந்திய அர‌சு காற்றாலை, உயிர்ம எரிபொருள், கதிரவன் ஒளி போன்ற‌ ம‌ர‌புசாரா மின் ஆற்றலில் பெற்றுக்கொள்ள‌லாம். ச‌ரி, த‌மிழ‌க‌ம் த‌ன்னிறைவ‌டைந்த‌ மாநில‌மாக‌ மாறிவிட்ட‌து, இந்தியாவின் மின் ப‌ற்றாக்குறையை யார் தீர்ப்ப‌து என்ற‌ கேள்வி உங்க‌ள் ம‌னதில் எழக்கூடும். இந்தியாவின் மின் ப‌ற்றாக்குறை 10 விழுக்காடு. ஆனால் மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் ஏற்படும் மின் இழ‌ப்பீட்டு 40%. அதாவது 1,80,000 மெகா வாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்தால் 72,000 மெகா வாட் மின்சார‌ம் தொழிற்நுட்ப‌க் குறைபாட்டினால் வீணாகின்ற‌து (இந்தியாவிற்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கும் நாடுகளில் இது 10 விழுக்காட்டிற்கும் கீழ்). இது த‌மிழ‌க‌ம், ம‌காராசுட்டிரா, குச‌ராத், ஆந்திர‌ப் பிர‌தேச‌ம், க‌ர்நாட‌காவில் உற்ப‌த்தியாகும் ஒட்டு மொத்த‌ மின்சார‌த்திற்குச் ச‌ம‌ம். இந்த‌ இழ‌ப்பீட்டை 10 விழுக்காட்டிற்குக் கீழாக‌க் குறைத்த‌ல் மூல‌ம் எந்தவித புதிய மின்திட்டமும் தொடங்காமல் இன்னும் ஐந்து ஆண்டுக‌ள் இந்தியா மின் உற்ப‌த்தியில் த‌ன்னிறைவான‌ நாடாக‌த் திக‌ழும் (இந்தியாவின் ஆண்டு மின்தேவை அதிக‌ரிப்பு 3.6 விழுக்காடு). இந்த இழப்பீட்டை சரி செய்யாமல் புதிய மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது "ஓட்டை வாளியில் நீரைச் சேமிப்பது" போன்றது. எவ்வளவு முயன்றாலும் இந்தியாவினால் மின்பற்றாக்குறையை சரிபடுத்தவே முடியாது. 

இந்தியாவின் வ‌ள‌ர்ச்சிக்கும், ம‌ர‌புசாரா எரி ஆற்றல்க‌ளான‌ காற்றாலையும், கதிரவன் ஒளியும், உயிர்ம எரிபொருளுமே சரியான வழியாகும். ஆண்டின் 365 நாட்களும் கதிரொளி கிடைக்கும் வெப்ப மண்டல நாடான இந்தியா கதிரொளியிலிருந்து எடுக்கும் மின்சாரத்தின் அளவு 1 விழுக்காட்டிற்கும் குறைவு. அதுமட்டுமின்றி சதுர மீட்டரில் ஒரு மணிநேரத்திற்கு 6.6 கிலோ வாட் மின்சாரத்தை கதிரவன் ஒளியிலிருந்து பெறும் திறன் கொண்ட தார்ப் பாலைவனத்தையும், குசராத்தின் வடக்குப் பகுதியையும் (வரைபடம் 1) கொண்ட இந்தியா, தார்ப் பாலைவனத்தில் 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கதிரவன் ஒளி மின் பண்ணையை வைப்பதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3,00,000 மெகாவாட். தார்ப் பாலைவனத்தையும், குசராத்தின் வடக்குப் பகுதியில் கிடைக்கும் கதிரவன் ஒளியையும் முழுமையாகப் பயன்படுத்தி மின்சாரம் எடுத்தால், இந்தியா மின்சாரத் தன்னிறைவு அடைவது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை விற்கவும் இயலும்.

இந்திய அரசின் காற்றாலை மின்னுற்பத்திக் கூட்டமைப்பின் கணிப்பீட்டின்படி இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 65,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யமுடியும் (வரைபடம் 2) – இந்தியாவில் காற்றாலை மின்னுற்பத்திகான வாய்ப்புகளை காட்டுகின்றது ( http://www.inwea.org/ ). ஆனால் இந்தியா 14,500 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கின்றது (இதில் 35 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது), இதுமட்டுமின்றி உயிர்ம எரிபொருளில் இருந்து 21,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும், மேலும் மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துதன் மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.

இதை எல்லாம் விடுத்து பேரழிவு அணு உலைக‌ளை இந்தியா நிறுவ‌த் துடிப்ப‌து ம‌க்க‌ளுக்காகவா? அல்ல‌து இந்திய‌, ப‌ன்னாட்டு பெருமுத‌லாளிக‌ளுக்காக‌வா என்ற‌ கேள்வி எழுகின்ற‌து. ஏனெனில் இந்த‌ அணு மின் உலைக‌ளுக்கான‌ யுரேனிய‌ இற‌க்கும‌திக்கான‌ 1,2,3 ச‌ட்ட‌த்திற்கு இட‌துசாரிக‌ள் ஆத‌ர‌வ‌ளிக்க‌ ம‌றுத்த‌பொழுது ப‌ல இல‌ட்ச‌ங்க‌ள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு கைமாறி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிலைநாட்டப்பட்டு இச்ச‌ட்ட‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து க‌ண்கூடு. இந்தியாவில் கட்டப்படும்‌ புதிய‌ அணு உலைக‌ளுக்கான‌ ஒப்ப‌ந்த‌த் தொகையாக 1,40,000 கோடி ரூபாயை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுக்கின்றது. மேலும் அணு ஆற்றல் துறைக்கு இந்திய‌ அர‌சு ஆண்டிற்கு ப‌ல இல‌ட்ச‌ம் கோடிக‌ளை மானிய‌மாக‌க் கொடுத்து வ‌ருகின்ற‌து. எடுத்துக்காட்டாக கூடங்குளம் அணு உலையைக் கட்டுவதற்கு 7,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என திட்டமிடப்பட்டு 12,000 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக முதலில் கூறப்பட்டது, இதுவே பின்னர் 13,000, 14,000 கோடி ரூபாய் என அதிகரித்துக் கொண்டே உள்ளது. இறுதியாக 20,000 கோடி ரூபாய் வரை இது செல்லக்கூடும். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அணு உலையை மூடுவதற்கு சற்றேறக்குறைய 40,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கொண்டால், இந்த அணுவுலைக்கு மட்டுமே 60,000 கோடி ரூபாய் செலவாகின்றது. இது மட்டுமின்றி அணு உலை செயற்படுவதற்காக ஆகும் செலவு, யுரேனிய எரிபொருளுக்காகும் செலவு, அணு உலைக் கழிவுகளைப் பராமரிக்க ஆகும் செலவு என எல்லாம் இருக்கின்றன. இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் அணு மின்சாரம் மலிவானதுதானா?

மேலும் கூடங்குளத்தில் அணு உலை கட்டக்கூடாது என்று முதலில் இரசியா கூறியுள்ளது. இதற்கான காரணம் அந்த நிலத்தின் கீழே வெற்றுக் குழிகள் உள்ளன, இந்த நிலத்தின் பாறை உறுதியானது அல்ல, நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. கடற்கரையை ஒட்டிக் கட்டப்பட்டுள்ளதால் சுனாமியால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இதை எல்லாம் விட இது போன்ற இயற்கைப் பேரழிவுகளால் மட்டுமல்ல போபாலில் ஏற்பட்டது போல மனிதத் தவறுகளினாலும் அணு உலையில் நேர்ச்சி (விபத்து) ஏற்படக்கூடும். எல்லாவற்றிலும் தான் ஆபத்து உள்ளது எனச் சிலர் கூறுகின்றார்கள், அவர்களுக்கு அணு உலையினால் ஏற்படும் பேரழிவுகள் பற்றித் தெரியவில்லை. அண்மையில் ஏற்பட்ட புகுசிமா விபத்தின் காரணமாக ஏற்பட்டக் கதிர்வீச்சு உலகம் முழுவதும் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.(1) மேலும் அணு உலை விபத்து ஏற்படும்பொழுது பல்லாயிரக்கணக்கில் மக்கள் இறப்பது மட்டுமல்லாமல், இந்தத் தாக்கம் தலைமுறை தலைமுறையாக மக்களை இலட்சக்கணக்கில் கொல்லும். இதுமட்டுமின்றி அணு உலைகள் செயற்படும் பொழுது தொடர்ச்சியாக உமிழும் கதிர்வீச்சினால் அணு உலையைச் சுற்றி வாழும் மக்களுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும், இதனால் அவர்கள் இறக்கக்கூடும், அண்மையில் கல்பாக்கம் அணு உலைக்கு அருகில் குடியிருக்கும் சிலர் இறந்ததற்கு அணு உலையினால் வெளியிடப்பட்ட கதிர்வீச்சே காரணம் என அணு ஆற்றல் துறை ஒப்புக்கொண்டுள்ளது (2). அதுமட்டுமின்றி அணுக் கழிவுகள் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளியிடும்.

இறுதியாக வளர்ச்சி பற்றிய ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 5 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் காணாமல் போயுள்ளது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 விழுக்காடு விவசாய நிலம் காணாமல் போயுள்ளது(3). விவசாயத்திகு மின்சாரம் சரியாக வழங்கப்படாததும் இதற்கு ஒரு காரணமாகும். சிறு, குறு தொழிலகங்களுக்கு பகல் வேலை நேரத்தில் வெறும் மூன்றுமணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது. இதனால் பல தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் இதே நேரத்தில் தமிழகத்தில் ஆண்டிற்கு 9.21% அன்னிய மூலதனம் உள்ளே வந்து கொண்டிருக்கின்றது(4), அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களுக்கு 24 மணிநேரத் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகின்றது. கூடங்குளம் போன்ற திட்டங்களினால் கிடைக்கும் 405 மெகாவாட் மின்சாரம் கூட அவர்களுக்குத் தானே தவிர, தமிழக விவசாயிகளுக்கோ, சிறு தொழிலகங்களுக்கோ, வீடுகளுக்கோ அல்ல.

கூடங்குளம் மக்கள் இந்திய அரசுக்கு எதிராக மட்டுமல்ல பன்னாட்டு நிறுவனங்கள், உலக ஏகாதிபத்தியங்கள் என பல மறைமுக எதிரிகளை எதிர்கொண்டு நம்முடைய இயற்கை வளங்களையும், உரிமைகளையும் பாதுகாக்கப் போராடி வருகின்றார்கள். இந்த நிலையில் முதன்மையாக நாம் செய்ய வேண்டியது, அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களின் கைகளை வலுப்படுத்துவதும், அவர்களுக்கு ஆதரவான குரல்களைத் தொடர்ந்து வெளிபடுத்துவதும் தான்; அத்தோடு மின்னுற்பத்திக்கான ஒரே வழி பேரழிவை ஏற்படுத்தும் அணு உலை தான் என்ற மாயையலிருந்து இந்தியாவையும், தமிழ்நாட்டையும் மீட்டு காற்றாலை, கதிரவன் ஒளி போன்ற அளவில்லாத மரபு சாரா எரிஆற்றல்களின் மூலம் மின்னுற்பத்தி செய்ய நெருக்குதலுக்கு உள்ளாக்குவதும் தான்.

மக்கள் போராட்டம் ஓங்குக !!!

- ப.நற்றமிழன் 
( esan.palani@gmail.com), 
தமிழர்ப் பாதுகாப்பு இயக்கம் (Save Tamils Movement)

Sunday, October 7, 2012

திரும்பி பார்கிறேன்.............! இன்னும் திருந்தாமல்.....! மன்னித்துவிடு.....!

திரும்பி பார்கிறேன் .............!     இன்னும் திருந்தாமல் .....! மன்னித்துவிடு .....!


                                             




ஆம் திரும்பி பார்கிறேன் ...................!

உன்னை தேடி அலைந்த நாட்களை 

உற்சாகமூட்டும்  உன் புன்னகையை 

எனை பார்த்தால் மட்டும் கலவரமடையும் உன் கண்களை 

உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காத அமைதியான உன் முகத்தை 

உயிர் உருகினாலும் உனக்கு நானில்லை என்ற உன் வார்த்தையை 

காத்திரு உன் காதல் வெல்லும் எனும் நண்பனின் வாக்கு மெய்ப்படுமா ?

உண்மைதான் உன் ஆம் எனும் வார்த்தைதான் என் காதலை முழுமைப்படுத்தும்

அது வரை நான் காத்திருப்பேன் ...!  


                                                              
                                      

அணு உலைக் கூடங்கள் அழிவைத் தருவன; அந்த ஆபத்தை தடுக்கவும் முடியாது




அணு உலைக் கூடங்கள் அழிவைத் தருவன; அந்த ஆபத்தை தடுக்கவும் முடியாது என்ற உண்மையை 1979-இல் அமெரிக்க நாட்டில் நடைபெற்ற மூன்றுகல் தீவு அணு உலை விபத்திலிருந்தும், 1986-இல் அன்றைய சோவியத் ரஷ்யாவின் செர்னோஃபில் அணு உலை விபத்தில் இருந்தும், அனைத்துக்கும
் மேலாக கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11-இல் ஜப்பானின் புகுஷிமா அணு உலை கோர விபத்திலிருந்தும் உணர்ந்து கொண்ட உலகத்தின் பல நாடுகள் அணு உலைகளை மூடுவது என்றும், புதிதாக அணு உலைகளை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்து அறிவித்து விட்டன.


ஜப்பான் நாட்டில் இயங்கி வந்த 56 அணு உலைகளில், 55 அணு உலைகள் மூடப்பட்டதோடு, மீதம் இருக்கின்ற உலையையும் மூடுவதாக ஜப்பான் அரசு அறிவித்து விட்டது. ஜப்பான் பிரதமர் இதுபற்றிக் கூறுகையில், இருட்டில் தவித்துத் துன்பப்படுவோமே தவிர, எங்கள் மக்களை அணு உலைக்கு சாகக் கொடுக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். அறிவியலிலும், தொழில் துறையிலும் உலகின் முதல் வரிசை நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபர் அஞ்சலா மிச்சல் 2022-ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து விட்டார். பிரான்ஸ் நாட்டில், அணு உலைகள் மூடுவது குறித்து விரைவில் பொதுஜன வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. உலக நாடுகளுக்கு அணு உலைகளை விநியோகம் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியம் 1979 மூன்றுகல் தீவு விபத்துக்குப் பிறகு, தங்கள் நாட்டில் ஒரு அணு உலைக் கூடத்தைக்கூட அமைக்கவில்லை என்பதை தமிழ் நாட்டு மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


கடுமையான மின்வெட்டு தமிழக மக்களைப் பாதித்துள்ள சூழலில் கூடங்குளம் அணு உலைக்கூடம் இயங்கினால், மின்வெட்டுக்குத் தீர்வு ஏற்படும் என்றும், தேவையான மின்சாரம் கிடைக்கும் என்றும், மோசடியான பித்தலாட்டப் பிரச்சாரத்தை மத்திய, மாநில அரசுகளும், காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகளும் செய்து வருகின்றன. இந்தியாவில் கூடங்குளத்தைச் சேர்க்காமல், மொத்தம் 21 அணு உலைகள் உள்ளன. இவற்றின் மொத்த மின்சார உற்பத்தி, இந்தியாவின் அனைத்து வழிகளிலும் கிடைக்கும் மின்சார உற்பத்தியில், மொத்தம் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக - 2.7 சதவிகிதம் மட்டும் தான் என்பது அதிர்ச்சி தரும் உண்மை ஆகும்.


தி.மு.க. தலைவர் கருணாநிதி, கூடங்குளம் அணு உலைக்கு வக்காலத்து வாங்கியவராக ஜெயலலிதா முதலில் அணு உலையை ஆதரித்து விட்டு, பின்னர் கடற்கரைப் பகுதி மக்களை ஏமாற்ற அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணு உலை செயல்படுவதற்குத் தடங்கலாக இருந்தார் என்று குற்றம் சாட்டுகிறார். அதுமட்டுமல்ல, கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள், தொடக்க காலத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்று அவரது அறியாமையின் காரணத்தினாலோ அல்லது போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்திலோ கூறி வருகிறார்.


1988-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் கூடங்குளம் பெயரைக் குறிப்பிடாமல், இந்திய நாட்டில் ஓர் அணு உலை அமைக்க சோவியத் ரஷ்யாவுடன் தனது அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி அறிவித்த போது, அந்த அணு உலை தென் தமிழ் நாட்டில் கூடங்குளத்தில் தான் நீங்கள் அமைக்கப் போகிறீர்கள். அந்தப் பகுதி வாழ் மக்கள், குறிப்பாக மீனவர்கள் இதனை முன்கூட்டி தெரிந்து கொண்டதால், எக்காரணத்தைக் கொண்டும் அங்கு அணு உலை அமைக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை மனு அனுப்பியதோடு, அந்தப் பகுதியில் பல போராட்டங்களும் நடைபெறுகின்றன. எக்காரணத்தைக் கொண்டும் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது, பெரு விபத்து நேர்ந்து, எங்கள் மக்களும், எங்கள் சந்ததிகளும் அழிந்து போவார்கள் என்று நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசினேன். எனக்கும் இராஜீவ் காந்திக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் நவம்பர் 22-ஆம் தேதி, தினகரன் ஏடு இதனை முக்கியச் செய்தியாகப் பிரசுரித்தது.


கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கிறித்துவ மதத்தின் தூண்டுதலால் மீனவர்கள் போராடுகிறார்கள் என்றும், வெளிநாட்டுப் பணம் கோடி கோடியாகப் போராட்டக் காரர்களுக்கு வருகிறது என்றும், குறிப்பாக அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது மத்திய அமைச்சர்களும்,காங்கிரஸ்கட்சியினரும்அபாண்டமான பழியைச்சுமத்துகிறார்கள். 420 நாட்களாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக தாய்மார்கள் இடிந்தகரையில் துளியளவும் வன்முறை இல்லாது நடத்தி வரும் அறப்போராட்டத்திற்கு நிகரான ஒரு போராட்டம் இந்திய வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி தந்த அறிக்கையில், ஆழிப்பேரலை தாக்கினாலும் கூடங்குளம் அணு உலைக்கு எந்த ஆபத்தும் நேராது என்றும், அணு உலை குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என்றும், எனவே அணு உலைக்கு எதிர்ப்பு தேவையற்றது என்றும் அறிக்கை தந்தார். ஆனால், இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடற்கரை பகுதி மக்களின் கொந்தளிப்பையும், வீரம் நிறைந்த போராட்டத்தையும் கண்டு, மக்கள் அச்சம் தீரும் வரையில் அணு உலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று தனது முன்னைய நிலையை மாற்றிக் கொண்டு அறிவித்தார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன், நிபுணர் குழுக்கள் தந்த அறிக்கைகள் திருப்தியாக இருக்கிறது என்று சொல்லி, அணு உலையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் என்றார். மத்திய, மாநில அரசுகளின் நிபுணர் குழுக்கள் அப்பகுதி மக்களைச்சந்தித்து கருத்து கேட்கவில்லை. போராட்டக் குழுவினரின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. ஆனால், தமிழக அரசின் காவல்துறை, அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை பிரயோகமும் செய்ததில் பலர் படுகாயமுற்றனர். மணப்பாட்டைச் சார்ந்த அந்தோணி ஜான் என்ற மீனவர் தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


அநியாயமான இந்தக் கொலையைச் செய்த காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட வில்லை. அறவழியில்போராடிய இடிந்தகரை மக்களை மிரட்டுவதற்காக இந்திய அரசு விமானப்படையின் சிறிய ரக விமானங்கள் இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்துவதற்காக தாழ்வாகப் பறந்ததால், இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் என்ற மீனவர் கொல்லப்பட்டார். மத்திய அரசுதான் இந்தக்கொலைக்குக் காரணமாகும். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மாநில அரசு மேற்கொள்ள வில்லை. கூடங்குளத்திலும், வைராவிக் கிணற்றிலும் வாழுகிற மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். இங்கு தமிழகக் காவல்துறை மிருகத்தனமாக அடக்குமுறையை ஏவியது. பலர் காயமுற்றனர்; பலர் கைது செய்யப்பட்டனர். 


வைராவிக் கிணற்றில் இந்துக்கள் வழிபடும் பிள்ளையார் சிலையையும் காவல்துறையினர் உடைத்தனர். அந்தப் பகுதியில் உள்ள தாய்மார்கள் இது குறித்து குமுறலோடு அணு உலை கூடவே கூடாது என்று மனம் கொதித்துச் சொல்லுவது ஏடுகளிலும், ஊடகங்களிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது. இவை அனைத்தையும் விட சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால், தமிழகம் மின்வெட்டில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் இனக்கொலை செய்த சிங்கள அரசோடு, இந்தியா 2010-ஆம் ஆண்டு ஜூனில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, இராமேஸ்வரம் - தலைமன்னார் கடலுக்கு அடியில், மின் கம்பிகள் பதிக்கும் வேலைகளை இந்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.


கூடங்குளம் அணு உலையை எதிர்க்கின்ற நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக மீனவ சமுதாயத்துக்கு ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நன்றிக் கடன்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டையும், அங்கு வாழும் மக்களையும் வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்க கூடங்குளம் அணு உலையை இயக்க விடாமல் அகற்ற வேண்டியது தமிழக மக்களின் தலையாயக் கடமையாகும். அடுத்த கட்டத்தில் கல்பாக்கம் அணு உலையையும் மூட வேண்டியது அவசியமாகும். இலட்சக்கணக்கான கோடிகளை ஸ்பெக்ட்ரம் ஊழலிலும், கிரானைட் ஊழலிலும் கொள்ளை அடித்த ஊழல் திமிங்கலங்கள், கூடங்குளம் போராட்டத்தை எதிர்ப்பதையும், கொச்சைப் படுத்துவதையும் தமிழக மக்கள் நடுநிலையோடு எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.


சட்டமன்றத்திற்கு வைர விழாவை முதலமைச்சர் நேரு விளையாட்டரங்கத்தில் நடத்த முற்பட்டுள்ள அக்டோபர் 29-இல் கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி, தமிழக சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், அவர்களுக்குத் தோள் கொடுக்கும் உணர்வுடைய அனைவரும் முற்றுகையிடும் போராட்டத்தை திட்டமிட்டவாறு நடத்தியே தீருவோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளையும், அணு உலை கூடாது என்ற கொள்கையை ஏற்றுள்ள அரசியல் இயக்கத்தினரையும், தமிழகத்தின் எதிர்கால நலனில் அக்கறையுள்ள அனைவரையும், ஜாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து அமைதி வழியில் நடக்கப்போகும் இந்த அறப்போரில் பங்கேற்க தமிழகத்தின் ஊழியனாக இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கிறேன்.



‘தாயகம்’ வைகோ
பொதுச் செயலாளர்,
மதிமுக.


தகவல் :- திரு.மின்னல் முகமது அலி,
நெல்லை மாவட்ட துணைச் செயலாளர்,
மதிமுக

கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி



                              
அனுப்புநர்

மருத்துவர் வி. புகழேந்தி M.B.B.S.,

1/187, முதலியார் தெரு,

சத்ரசு, காஞ்சிபுரம் மாவட்டம் – 603102

பேசி: 8870578769

பெறுநர்

குடியரசின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும்

மதிப்பிற்குரியவர்களே,

பொருள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வரும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி என்னுடைய பணியைத் தடுப்பது பற்றி..

நான் ஒரு மருத்துவராக (M.B.B.S.,) கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் அருகில் உள்ள சத்ரசு கிராமத்தில் 1989ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். மதுரை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பு படித்தபோது தங்கப் பதக்கம் வென்ற மாணவன் நான். கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக மேற்கொண்டு மேல்படிப்புக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் என்னுடைய நண்பர்கள் பலர் அப்போது வேலை செய்து வந்ததால் கல்பாக்கத்துக்குப் பக்கத்தில் உள்ள சத்ரசு என்னும் இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

1989 ஆம் ஆண்டு முதல் 2000ஆவது ஆண்டு வரை அப்பகுதியில் உள்ள தலித்துகளுக்கும் மீனவர்களுக்கும் தொண்டுசெய்வதையே முதல் குறிக்கோளாகக் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். மக்களின் உடல் நலத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்த நான், மக்களுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு மிகக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் புதிய முறைகள் பலவற்றைக் கண்டறிந்து செய்து வந்தேன். இம்முறைகள் பற்றி பல இதழ்களில் நான் எழுதி வந்திருக்கிறேன். இவற்றைப் பற்றிப் புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இவற்றை எல்லாம் அறிந்த உள்ளூர் ஊடகங்களும் தேசிய அளவிலான ஊடகங்களும் பல முறை என்னுடைய நேர்காணல்களை வெளியிட்டிருக்கிறார்கள். முதலுறு வேக உற்பத்தி உலை('Prototype Fast Breeder Reactor')யை இங்கு தொடங்குவதற்கு முன் 2001ஆம் ஆண்டு சூலை 27ஆம் நாள் மக்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனையொட்டி 2001 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஆங்கில இதழான ‘அவுட்லுக்’, எங்கள் பகுதியில் மிகைவிரல் நோய் ('Polydactyl') (கை, கால் ஆகியவற்றில் ஐந்து விரலுக்கும் அதிகமாக விரல்கள் கொண்டிருப்பது) இருப்பது பற்றி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. 

இப்பகுதி மக்களுக்குக் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் படிக்க என்னை இக்கருத்துக்கணிப்பின் முடிவுகள் தூண்டின. அதிலிருந்து கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய முழுவீச்சில் இறங்கினேன். தேசிய அளவிலும் உலக அளவிலும் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அளவுகளை நம்முடைய அணுமின் நிலையமும் கடைபிடிக்க வேண்டும் என்னும் நோக்கில் பல்வேறு கேள்விகளை அணுமின் நிலையப் பொறுப்பாளர்களிடம் எழுப்பினேன். கதிர்வீச்சின் மோசமான விளைவுகளைச் சிந்திக்கும் மக்கள் ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தனர். அவ்வமைப்பின் பெயர் “அணுக் கதிர்வீச்சு பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம்” என்பதாகும். என்னுடைய செயல்பாட்டைப் பாராட்டி அவ்வமைப்பின் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுக்கான அறிவுரையாளராக என்னை அமர்த்தினார்கள். தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அளவுகளை, கல்பாக்கம் அணுமின் நிலையம் கடைபிடிக்கத் தவறியதைக் கண்டித்து இவ்வமைப்பு தான் வருகின்ற திசம்பர் 12ஆம் நாள் போராட்டம் நடத்தவிருக்கிறது. நிறைய அறிவியல் சான்றுகளுடன் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். கடந்த ஒரு மாதமாக இப்போராட்டத்திற்கான வேலைகளை இவ்வமைப்பு செய்து வருகிறது. 

இந்தப் பின்னணியில் தான் கடந்த திசம்பர் ஒன்றாம் நாள் மாலை ஆறு மணிக்குப் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அக்காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவக்குமார் என்பவர் பேசினார். ‘புதுப்பட்டினம் பஞ்சாயத்துத் தலைவர் எனக்கு எதிராக விண்ணப்பம் கொடுத்திருப்பதாகவும் இதற்காகக் காவல் நிலையம் வர முடியுமா’ என்றும் அவர் என்னிடம் கேட்டார். நான் அப்போது என்னுடைய மருத்துவமனையில் வேலையாக இருந்தேன். அதைச் சொல்லி வேலை முடிந்ததும் காவல் நிலையம் வந்து பார்ப்பதாகக் கூறினேன். பின்னர் இரவு 7.30 மணிக்கு அங்கு சென்றேன். என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அதன் பின், காவல் ஆய்வாளர் பஞ்சாயத்துத் தலைவரைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் அங்கு 8.10க்கு வந்தார். முப்பது மணித்துளிகள் விசாரணை நடந்தது. நான் இரவு 8.50க்கு அங்கு இருந்து கிளம்பினேன். 

என் மீதும் திரு. நேரு என்பவர் மீதும் புதுப்பட்டினம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் திரு. கலியபெருமாள் கூறும் குற்றச்சாட்டுகள் எனக் காவல் நிலைய ஆய்வாளர் சொன்னவை இவைதாம்:

நாங்கள் இருவரும் செய்து வரும் அணு உலை எதிர்ப்பு வேலைகளுக்கு உரிய ஒத்துழைப்பைக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவோம் என்று இருவரும் அவரை மிரட்டினோமாம். இந்த மிரட்டலை ஒரு மொட்டைக் கடிதத்தின் மூலம் அவருக்கு அனுப்பினோமாம். அக்கடிதம் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் திரு.நேரு எழுதினாராம். ஏதோ ஒரு தெரியாத கைப்பேசி எண்ணில் இருந்து அவருடைய கைப்பேசிக்குக் கொலை மிரட்டல் குறுஞ்சேதி அனுப்பப்பட்டிருக்கிறதாம். அதுவும் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் யாரோ செய்தது தானாம்! இது மட்டுமன்றி, தெரியாத கைப்பேசி எண்கள் பலவற்றில் இருந்து அவரைத் திட்டிக் குறுஞ்சேதிகள் வருகின்றனவாம். அவை அத்தனையும் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் நடப்பதாக அவர் நம்புகிறாராம். 

இக்குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் காவல் நிலைய ஆய்வாளரிடம் நான் கொடுத்த மறுமொழிகள்:

நான் அணுக்கரு எதிர்ப்பு வேலை எதிலும் ஈடுபடவில்லை. அணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள் பற்றியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றியும் கடந்த இருபதாண்டுகளாக நான் செய்து வந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தாம் எல்லோரிடமும் பகிர்ந்து வருகின்றேன். நான் அணுக்கரு எதிர்ப்பு அமைப்பு எதையும் அமைக்கவில்லை. அப்படிப்பட்ட அமைப்புகளில் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுக்கான அறிவுரையாளராக மட்டுமே இருந்து வருகின்றேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் அண்மையில் என்னுடைய பணிசார்ந்த பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டியது. இதே போல் நாடு முழுவதும் பல இடங்களில் என்னுடைய பட்டறிவைப் பகிர்ந்து வந்திருக்கிறேன். 

பஞ்சாயத்துத் தலைவர் திரு. கலியபெருமாள் அவர்களை நான் பல இடங்களில் சந்தித்திருக்கிறேன்; உள்ளாட்சித் தேர்தலில் அவர் வென்ற அன்றே அவரைப் பாராட்டியும் இருக்கின்றேன். அணுக்கரு கதிர்வீச்சைப் பற்றி எல்லோரிடமும் சொல்வது போல, அவரிடமும் சொல்லியிருக்கின்றேன். நான் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் கூட அவரை என்னுடைய ‘வேலைக்காக’ மிரட்டினேன் என்பது பொருந்தலாம். ஒரு மருத்துவராகப் பணியாற்றும் என்னுடைய வேலை மருத்துவம் பார்ப்பது, படிப்பது, பகிர்வது ஆகியவை தாம்! இதில் நான் அவரை என்னுடைய வேலையில் சேர்ப்பதற்காக மிரட்டினேன் என்பது எப்படிப் பொருந்தும்?

இருந்தாலும் நீங்கள் அக்கேள்வியை என்னிடம் கேட்பதால், நான் திரு. கலியபெருமாளை அணுக்கரு எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு எந்தச் சூழலிலும் மிரட்டவில்லை என உறுதியாகத் தெரிவிக்கிறேன். 

கொலை மிரட்டல் விடுக்கும் மொட்டைக் கடிதங்களுக்கும் எனக்கும் எத்தொடர்பும் இல்லை. திரு.நேரு என்பவரை எனக்குத் தெரியும். ஆனால் நானும் அவரும் இணைந்து பணியாற்றியதே இல்லை. என்னுடைய வழிகாட்டுதலில்தான் திரு.நேரு இக்கடிதத்தை எழுதினார் என்பது வடிகட்டிய பொய்யாகும். 

இப்படி என்னுடைய மறுமொழியை முடித்ததும் காவல் நிலைய ஆய்வாளர், தாம் முதல் தகவல் அறிக்கையைப் பதியவில்லை என என்னிடம் கூறினார். “நீங்கள் அழைக்கும் போதெல்லாம் நான் விசாரணைக்காகக் காவல் நிலையம் வருவேன். அப்படி வரவில்லை என்றால் என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை” என்று எழுதித் தருமாறு கேட்டார். அவர் இப்படிச் சொன்னதும், ‘இப்படிக் காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருந்தால் என்னுடைய தினசரி வேலை என்னாவது? இது என்னுடைய மருத்துவத் தொழிலைப் பாதிக்கும் என்றும் பல மைல் தொலைவில் இருந்து என்னைப் பார்க்க வரும் ஏழைமக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்றும் என்னுடைய நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனாலும் எழுத்தில் தரச் சொல்லி அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். கடைசியில் ‘நல்ல சமாரியனாக’ ‘அவர் விசாரணைக்குக் கூப்பிடும்போதெல்லாம் காவல் நிலையம் வருவதாக’ எழுதிக் கொடுத்தேன். 

இப்படி எழுதிக் கொடுத்தது தான் மிச்சம்! “டாக்டர்! உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் செய்யும் வேலைக்கு நான் நினைத்தால் உங்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கம்பி எண்ண வைக்க முடியும். ‘போலீசு என்கவுன்டர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கவனமாக இருங்கள்!” என்று மிரட்டும் குரலில் சொன்னார்.

இதைக் கேட்டு நான் அரண்டு போனேன். இருந்தாலும் என்னுடைய மருத்துவப் பணியையும் சமூகப் பணியையும் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்னும் உறுதி எனக்கு இருந்தது. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அளவீடுகள் பற்றிய உண்மை நிலையை அண்மைக்காலமாக நான் வெளியே சொல்லி வருகிறேன். இக்கருத்துகளால் அணுமின் நிலையப் பொறுப்பாளர்கள் கேள்விக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, ஆய்வாளரின் இந்த மிரட்டலுக்குப் பின்னால் அணுமின் நிலையப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள் என்னும் வலுவான ஐயம் எனக்கு இருக்கிறது. கல்பாக்கம் அணுமின் நிலையப் பாதுகாப்பு அளவீடுகள் தொடர்பாக நான் ஒரு புத்தகம் வெளியிடப் போகும் செய்தி அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். எனவே காவல்துறை மூலம் என்னை மிரட்டுவதன் மூலம் ‘உண்மைகள் மறைந்து போகும்; கல்பாக்கம் அணு மின் நிலையம் சுற்றுச்சூழல் கதிரியக்கச் சார் பாதுகாப்பானது எனக் காட்டிக்கொள்ளலாம்’ என அவர்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன். அணுமின் நிலையப் பொறுப்பாளர்களிடம் நான் பல முறை விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். பல முறை அவர்களைச் சந்தித்து நான் திரட்டிய தரவுகளை அவர்களிடம் நான் பகிர்ந்திருக்கிறேன். ஆனாலும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக என்னுடைய கேள்விகளில் ஒன்றுக்குக் கூட அவர்கள் விடையளித்ததே இல்லை. எனவே அவர்கள் தாம் என்னுடைய வேலைகளை முடக்க மறைமுகமாக, இப்படி இறங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். 

இப்படிப்பட்ட சூழலில், குடியரசின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்ட நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் குரல் கொடுக்க வேண்டுகிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

மருத்துவர் புகழேந்தி,

புதுப்பட்டினம்

காஞ்சிபுரம் மாவட்டம்

2011 திசம்பர் இரண்டாம் நாள்.
 

ஃபுகுஷிமா: நவீன விஞ்ஞானத்தின் தலைக்குனிவு

           


கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி, ஜப்பானின் வரலாற்றை மாற்றி எழுதியது. தொஹுகுவில் ஏற்பட்ட சுனாமியும் நிலநடுக்கமும் உலகின் மிகப் பெரும் அணு உலை விபத்தை ஃபுகுஷிமாவில் நிகழ்த்திக் காட்டியது. அணு உலையின் பல கருவிகள் செயலிழந்தன. கணக்கிட முடியாத அளவு கதிர்வீச்சு இந்த வளிமண்டலத்தில் பரவியது.

ஜெனரேட்டர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை தண்ணீரில் மூழ்கியது. மின்சாரம் முற
்றிலும் தடைப்பட்டது. குளிர்விக்கும் திரவம் வழிந்தோடியதால் உலையின் மையம் முற்றாக உருகியது. இந்த விபத்தைக் குளிர்விக்கும் திரவம் தீர்ந்த (LOCA-Loss of Coolant Accident) என்கிறார்கள்.

ஜப்பானின் இந்த அணு வளாகத்தில் இருந்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலட்க்ரிக் வடிவமைப்பில் உருவான 6 அணு உலைகள். இந்த விபத்து நடந்தபோது உலை 4ல் எந்த எரிபொருளும் இல்லை, 5-6ல் பராமரிப்புக்காக உலை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வந்த சுனாமி வெறும் 15 மீட்டர் உயரம் கொண்டது. அதுவே அந்தப் பகுதியை முற்றாக நாசம் செய்தது. மின்சாரத்தைத் தொகுத்து எடுத்துச் செல்லும் இணைப்புகள் அறுந்து விழுந்தன. இந்த விபத் தின் சம்பவங்களைப் பார்த்தால் அதில் ஒரு தவறு பல தவறுகளை ஏற்படுத்தி அதைக் கட்டுப்படுத்த முடியாத அளவு அபாயகரமான தாக மாற்றியது. அதாவது தவறுகளின் தொகுப்பு அல்லது ஒரு மரத்தின் கிளைகளைப் போல கிளைக்கும் தவறுகள் (Fault Trees)

சில நொடிகளில் கதிரியக்கம் 30 கி.மீ. தொலைவுக்குச் சென்றது. அங்கிருந்த பணியாளர்கள் பலர் இறந்தனர், பலருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் அரசின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் அந்த அபாய தருணத்திலும் ஃபுகுஷிமா உலைக்குள் சென்று வேலை செய்தனர். கதிரியக்கத்தின் அபாய அளவுகளை வைத்து அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. உலை தொடர்ந்து பெரும் ஜுவாலைகளுடன் வெடித்தது. கதிரியக்கத்தின் அளவு வரலாறு காணாததாக மேலெழும்பியது. உலையைச் சுற்றியுள்ள 20 கி.மீ. தூரத்தில் இருந்த மக்கள் அவர்களின் உடமைகளை விட்டு வெளியேறினர். அவர்களின் வீட்டில் இருந்த உணவில் எல்லாம் கதிரியக்கம் தாக்கியிருந்தது. டோக்கியோ நகரத்தில் குழாய்களில் வரும் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவித்தது. குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பெற்றோர்கள் தவித்தனர். ஃபுகுஷிமாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்த நெல் வயல்களில், கதிரியக்கத்தால் தண்ணீரின் வழியே நெல் மணிக்குள் மாசுபட்டது. ஃபுகுஷிமா பகுதியில் விளையும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்தது அரசு.

செர்நோபில் அளவுக்குக் கதிரியக்கம் வெளிப்பட்டதால் இதனை Level 7 விபத்து என உலக அணுசக்திக் கழகம் அறிவித்தது. ஜப்பான் அரசு இந்த விபத்தை முறையாக கையாளவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த உலையை இழுத்து மூடுவது என ஜப்பானின் தலைமைச் செயலர் யுகோய் எடாநோ அறிவித்தார். ஜப்பானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் எப்படியாவது உலையை இயக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்த விபத்தின் சேதாரங்களை மதிப்பிடவே பல ஆண்டுகளாகும். இந்த விபத்தால் 30 கி.மீ. சுற்றளவில் மனிதர்கள் இனி வசிக்க இயலாது. அவர்களை முதலில் மாற்று இடங்களில் குடியமர்த்த வேண்டும். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களின் நீண்ட கால சிகிச்சைக்குத் திட்டங்கள் போடப்பட வேண்டும். 50 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரத் திட்டங்கள் பற்றி பெரும் திட்டங்கள் போட வேண்டும். ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனே உலையை தொடங்க வேண்டும் என்கிற குரல் எதை உணர்த்துகிறது...

இந்த உலகிற்கு 15,000 அணு உலை ஆண்டுகள் (Reactor years of Experience) அனுபவம் உள்ளதாக உலக அணு விஞ்ஞானிகள் மார்தட்டிக் கொள்கிறார்கள். உலக அணு உலைகளில் 5 தான் இப்படி உருகிய நிலைக்குச் சென்றுள்ளன. அதனால் இந்த விகிதங்களில் பார்த்தால் 8 ஆண்டுகளுக்கு ஒரு விபத்துதான் நடக்க சாத்தியம் உள்ளது என்று அவர்கள் இப்பொழுதும் வாதிடுகிறார்கள். நம் எண்ணம், அந்த 8 வருடங்களுக்கு ஓர் உலை வெடிப்பு கூட ஏன் நிகழ வேண்டும் என்பதுதான். இந்த விபத்துகளில் இருந்து நாம் எந்தப் பாடமும் கற்க இயலாது. ஏனெனில் இந்த 5 பெரும் விபத்துகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றவை. எல்லாம் வேறு வேறு விதங்களில் விபத்துக் குள்ளாகியுள்ளது. பழைய விபத்துகளைத் தடுத்து விட்டோம், நம்பிக்கை கொள்ளுங்கள் என்கிறீர்கள். சுனாமி என்ற வார்த்தையை நாங்கள் 2004ல்தான் கேள்விப்பட்டோம்.

அணுசக்தித் துறையின் ஆவணங்களில் அதற்கு முன்னர் இந்த வார்த்தையை நீங்கள் எங்கும் காண இயலாது. அப்படி இருக்கும்பொழுது உங்கள் வடி கட்டிய பொய்களாக நிகழும் பேரபாயத்தை எதிர்கொள்ளப் போவது நீங்கள் அல்ல, இந்த மக்கள். ஆகையால் ஜப்பான் மக்கள் கைகளில் உள்ள கீகர் கருவியின் (Geiger Counters) அளவுகளைப் பார்த்துவிட்டு உண்மையை இப்பொழுதாவது பேசுங்கள். மனம் திறந்து பேசுங்கள்.

-முத்துக்கிருஷ்ணன்

கல்பாக்கம், தாராப்பூர்:அபாயத்தின் ஓசைகள்


கல்பாக்கம், தாராப்பூர்:அபாயத்தின் ஓசைகள்

கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985ல் இரு 220 MW அணு உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர இயங்கவில்லை. அதனால் சில காலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன் திறன் 170 MW ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது.

                                 

அணு உலை தொடங்கியது முதல் கடலில் கொட்டப்படும் அதன் கழிவுகளால் அந்தப் பகுதியில் தொடர் பிரச்சினைகள் ஆரம்பமானது. இரண்டு உலைகளின் கழிவுகள் அந்தப் பகுதியின் கடல் வெப்பத்தை 8 டிகிரி அதிகரித்தது. இதனால் மீன் வளம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நாம் உண்ணக்கூடிய மீன்வகைகளான ராட்டு, சிங்க ராட்டு, நண்டு வகைகள் அழிந்து, நட்சத்திர மீன்களைப் போன்ற வகைகள் பெருகின. மீனவர்கள் கடலுக்குள் இருக்கும்போது அவர்களின் மீது தெறிக்கும் கடல்நீரால் உடல் முழுதும் அரிப்புகளும் வெடிப்புகளும் மிகக் கொடிய அளவில் உண்டாகிறது. இவை அணு உலைக் கழிவுகளின் விளைவுகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மருத்துவர் புகழேந்தி சுகாதாரம் , உடல்நலம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு கதிரியக்கத்தின் பாதிப்புகளுக்கு எப்படி உலையைச் சுற்றியுள்ள மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை. அடிப்படை தரவுகள்& ஆய்வுகளுடன் நிறுவுகிறது. ஆனால் அவரது வாதங்களை, ஆய்வுகளை கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் எப்பொழுதுமே அலட்சியப்படுத்தியே வந்துள்ளது. கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மட்டும் 30,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தாராப்பூரில் அணு உலை தொடங்கியபோது அந்தக் கிராமத்தில் மொத்தம் 700 மீன்பிடிப் படகுகள் இருந்தன, இன்று 40 ஆண்டுகள் கழித்து அங்கு வெறும் 20 படகுகள்தான் உள்ளது. மீன்பிடி முற்றாக அழிந்து விட்டதால் அவர்கள் தினக்கூலிகளாக இடம்பெயர்ந்து வேறு தொழில் நோக்கிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும் அங்கு உள்ள தானே நதிக்கிளையில் நிகழ்ந்துள்ள பாதிப்புகள் பற்றியும், அங்குள்ள மீன்களில் உள்ள கதிரியக்கம் பற்றியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மிகவும் விபரமான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றும் அங்குள்ள மீன்களில் கதிரியக்கம் இருப்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது என்றும் கூறினார். ஆனால் கதிரியக்கத்தின் அளவைப் பொதுநலன் கருதி வெளியிட நீதிமன்றம் மறுத்தது.

அங்குள்ள அணு உலைக் குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 224 பேர் கடந்த 10 ஆண்டுகளாக கடும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள். விபத்துகள் இங்கு நடப்பது மிக சகஜமானது. ஆனால் வழக்கம் போல் அது ரகசிய காப்பின்கீழ் உடனே மூடி மறைக்கப் படும்.

2004 சுனாமியின் பொழுதும் கல்பாக்கத்தில் பல ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்தன. அணு உலையின் சுற்றுச்சுவர் அடித்துச் செல்லப்பட்டது. சுனாமி தாக்கியதில் அங்கு இருக்கும் தொலைபேசி மையம் வெள்ளத்தில் மூழ்கி மொத்த தொலைத்தொடர்பும் ஸ்தம்பித்தது. டிசம்பர் 26, 2004 அன்று மின்சாரம் இன்றி, தண்ணீர் இன்றி, தொலைத்தொடர்புகள் இன்றி ஒரு துண்டிக்கப்பட்ட நிலமாக அது காட்சியளித்தது. அங்கிருந்த உயரமான கிரேனில் அமர்ந்து அதனை இயக்குபவர்தான் சுனாமி அலையைக் கண்டு எச்சரிக்கை செய்துள்ளார். உடன் அந்தப் பகுதியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும் 65 முதல் 80 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

பெரும் விபத்து ஏதும் நடைபெறவில்லை என்று கூறும் நிர்வாகம், உடனே இந்திய ராணுவத்தின் ஏராளமான பெட்டாலியன்களை ஏன் குவித்தது? அந்தக் காலகட்டத்தில் ஊடகங்கள், ஆய்வாளர்கள் என யார் கேள்வி எழுப்பினாலும் நிர்வாகத்திடம் ஒரே பதில்தான் இருந்தது. எல்லாம் சுபமே!!

1999 மார்ச் 26 அன்று 40 டன்கள் எடையுடைய கனநீர் கொட்டி விட்டது, இதனைப் பல தொழிலாளர்கள் ஒரு வார காலம் சுத்திகரிப்பு செய்தனர். அதில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி சில காலத்தில் உயிர் இழந்தார். 2000 ஜனவரி 24 அன்று மீண்டும் பெரும் கதிரியக்கம் வெளிப்பட்டது, அதனை இந்திய விஞ்ஞானிகளால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஆகையால் வெளிநாட்டில் இருந்து நிபுணர்கள் கல்பாக்கம் நோக்கி விரைந்தனர்.

மீன்பிடி குறைந்து கடலுக்குச் சென்றால் பல உடல் உபாதைகளை எதிர்கொள்வதால் மெல்ல மீன்பிடித்தலைக் கைவிட்டு வருகிறார்கள் சத்ரஸ் மக்கள். வேலை ஏதும் இல்லாததால் அணு உலையின் கதிரியக்க கழிவுகளால் தினமும் செத்துக் கரை ஒதுங்கும் மீன்களை 3 நாட்கள் வெயிலில் உலர்த்தி அதனைக் கருவாடாக மாற்றி சென்னைக்கு அனுப்புகிறார்கள். இந்தக் கருவாட்டை DAE, AERB, NPCIL அலுவல கங்களில் உள்ள கேன்டீன்களில் அதிகாரிகள், ஆய்வாளர்களுக்குக் கட்டாய உண வாக மாற்ற அப்துல் கலாம் அவர்கள் ஏற்பாடு செய்தால் அது மக்களின் அச்சத்தைப் போக்க அற்புதமான வழிமுறை யாக இருக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, அணு சக்தித் துறை BHAVNI என்னும் 500 MW மாதிரி வேக ஈனுலையை (prototype fast breeder reactor) கட்டி வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மட்டும் 60 லட்சம் பேர் வசிக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் 60 லட்சம் பேர் வசிக்கக் கூடிய இடத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அணு உலைகளைக் கட்டியதில்லை. - முத்துக்கிருஷ்ணன்