Like me

Wednesday, March 13, 2013

மாணவர்கள்-ஈழ விடுதலைக்காக......

ஈழ விடுதலைக்காக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனி ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் தண்டவாளத்தில் அமர்ந்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

1Like · · Promote ·

தமிழ் நாட்டில் மாணவிகளும் ஈழ மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் தீவிரமாக குதிக்கத் தொடங்கி விட்டனர்.இதோ திருச்சி தனலட்சுமி கல்லூரியைச் செந்த மாணவிகளின் ஆர்ப்பாட்ட போராட்டம்!
"வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்த விந்தை மனிதர் தலை குனிவார்களோ" இதனைக் கண்டால்?

காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகளின் போராட்டம்


(Pic:Viji Tamil)

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்
நெல்லை மாணவி....
ஈழத்தில் போன உயிரும் எங்கள் உயிரும் ஒன்றே .மீதம் உள்ள எங்கள் உறவுகளை காப்பாற்றவே இந்த போராட்டம்

நன்றி - புதியதலைமுறை
திருப்பூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள்
திருச்சி அரச சட்ட கல்லூரி மாணவர்கள் காலைவரையற்ற பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்



தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்!
13 03 2013
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(Pic:ஈழ மகான் தமிழ்)

தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்!
13 03 2013
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(Pic:ஈழ மகான் தமிழ்)

எங்களின் தேவை ‘விடுதலை’


மாணவர்கள் கைது…!
 
                    Photo: மாணவர்கள் கைது…!
ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.

தொடர்புக்கு :கதிரவன் 9500836016

கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு-
"எப்படி நடைமுறையில் சாத்தியப்பட முடியாத கோரிக்கையை வைத்துப்போராட முடியும் என்கிறார்கள்.

கிடைப்பதை வாங்கிக் கொள்வதன் பெயர் “பிச்சை”.

போராட்டம் நடத்தி வெல்வதன் பெயர் “விடுதலை”.

எழுத்துப் பிச்சை எடுத்து பிழைத்த கும்பல், போராட்டத்தினைப் பற்றி கட்டுரை, கருத்து, கமெண்ட், பத்திரிக்கைச் செய்தி போடச்சொன்னால் இப்படித்தான் போடுவார்கள்.. உங்களுடைய பிச்சைக்காரப் பிழைப்பைதான் 25 வருடங்களாக பார்த்திருக்கிறோமே....

எங்களின் தேவை ‘விடுதலை’. இதை வெல்லவே போராட்டம்."

 ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.

தொடர்புக்கு :க...திரவன் 9500836016

கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு



Sunday, February 24, 2013

யானையின் தமிழ்ப்பெயர்கள்

                 வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் ! 

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி
 
 
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

பதில் சொல்லுங்கள்...

                        விடுதலைப்புலிகள் ஒரு தீவீர்தவாதிகள் என்று சொல்பவர்களே ஒரு நிமிடம் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் .அதன் பிறகு நாமும் ஏற்றுக் கொள்கிறோம் விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் 
என்று .!

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் அதிகார பூர்வமாக தரைப்படை கடல்ப்படை, வான்படை என முப்படைகளையும் தனக்கு சொந்தமாக கொண்டிருக்கின்றது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் அதற்க்கென்று  தனியான காவல்த்துறை  நீதிமன்றம், வங்கி மற்றும் பல உள்கட்டமைப்பு தளங்களை கொண்டு இருக்கின்றது..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் முப்பாதயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை தனது விடுதலைப் போராட்டத்தில் இழந்திருக்கின்றது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் இதுவரை பெயர் சூட்டி மரபு ரீதியான தாக்குதல்களை நடத்தி இருக்கின்றது ..?(விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள தொடர் நடவடிக்கை 1-4,  தவளை நடவடிக்கை என்று பல மரபு ரீதியான சமர்களை பெயர் சூட்டி நடத்தி இருக்கின்றது)

எந்த ஒரு தனி தீவீரவாத இயக்கத்தை எதிர்த்து முப்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து போர் புரிந்துள்ளன ..?

எந்த ஒரு தீவீரத இயக்கத்தை, அது ஒரு இனத்தின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ளபட்டு உலக அரங்கில் பேச்சு வார்த்தை மேடைக்கு அழைக்க பட்டுள்ளது ..?(விடுதலைப்புலிகள்  இதுவரை திம்பு, ஒஸ்லோ, நோர்வே என பல பேச்சுவார்த்தை மேடைகளில்  தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தோடு கலந்து கொண்டிருக்கிறது.)

எந்த ஒரு தீவீரவாத இயக்கம், தனக்கென்று அரசியல்துறை, பொருண்மியதுறை, நீதித்துறை, சுங்க இலகாதுறை, கல்வித்துறை, மருவத்துரை என்று பல உள்கட்டமைப்பு அமைப்புகளை தோற்றுவித்து அதனை திறம்பட நிர்வாகித்துள்ளது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கத்துக்கு உலக முழுவதும் பரந்துபட்ட அளவில் செல்வாக்கு இருக்கின்றது ..? 

எந்த ஒரு தீவீரவாத இயக்கத்துக்கு சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கின்றது.
(சமூக வலைத்தளங்களில் உள்ள தமிழர்களின் முகப்பு படம் பெரும்பான்மையாக புலிகள் தொடர்பாகவே உள்ளதுஅவர்களின் இடுகைகளும் பெரும்பாலும் ஈழம் சார்ந்ததாகவே உள்ளன  )


இன்னும் சில கேள்விகள் ......

விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் என்று நீங்கள் சொன்னால்...

மும்பையில் கோட்டலில் தாக்குதல் நடத்தி அப்பாவி உயிர்களை கொன்று குவிதவர்களுக்கு உங்கள் மொழியில் என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள்...?

அண்மையில் ஆந்திராவில் நடத்தபட்ட வெடிகுண்டு தாக்குதல்களுடன் சம்பத்தப்படவர்களுக்கு என்ன பெயர்...?

பாகிஸ்தானில் பள்ளி சிறுமி மலால வை  கொல்ல முயன்றவர்களுக்கு உங்கள் பாசையில் என்ன பெயர்

எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் இத்தனை இலட்சம் உயிர்களை கொன்று குவித்த ராஜபக்சவுக்கும் அவனது படைகளுக்கு என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள்...?

அப்படிப்பட்டவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து, மேலும் ஆயுதம், பயிற்ச்சி என வழங்குபவர்களுக்கு என்ன பெயர் .?

-ஈழ மைந்தன்-
 
விடுதலைப்புலிகள் ஒரு தீவீர்தவாதிகள் என்று சொல்பவர்களே ஒரு நிமிடம் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் .அதன் பிறகு நாமும் ஏற்றுக் கொள்கிறோம் விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள்  என்று .!

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் அதிகார பூர்வமாக தரைப்படை கடல்ப்படை, வான்படை என முப்படைகளையும் தனக்கு சொந்தமாக கொண்டிருக்கின்றது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் அதற்க்கென்று தனியான காவல்த்துறை நீதிமன்றம், வங்கி மற்றும் பல உள்கட்டமைப்பு தளங்களை கொண்டு இருக்கின்றது..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் முப்பாதயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை தனது விடுதலைப் போராட்டத்தில் இழந்திருக்கின்றது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் இதுவரை பெயர் சூட்டி மரபு ரீதியான தாக்குதல்களை நடத்தி இருக்கின்றது ..?(விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள தொடர் நடவடிக்கை 1-4, தவளை நடவடிக்கை என்று பல மரபு ரீதியான சமர்களை பெயர் சூட்டி நடத்தி இருக்கின்றது)

எந்த ஒரு தனி தீவீரவாத இயக்கத்தை எதிர்த்து முப்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து போர் புரிந்துள்ளன ..?

எந்த ஒரு தீவீரத இயக்கத்தை, அது ஒரு இனத்தின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ளபட்டு உலக அரங்கில் பேச்சு வார்த்தை மேடைக்கு அழைக்க பட்டுள்ளது ..?(விடுதலைப்புலிகள் இதுவரை திம்பு, ஒஸ்லோ, நோர்வே என பல பேச்சுவார்த்தை மேடைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தோடு கலந்து கொண்டிருக்கிறது.)

எந்த ஒரு தீவீரவாத இயக்கம், தனக்கென்று அரசியல்துறை, பொருண்மியதுறை, நீதித்துறை, சுங்க இலகாதுறை, கல்வித்துறை, மருவத்துரை என்று பல உள்கட்டமைப்பு அமைப்புகளை தோற்றுவித்து அதனை திறம்பட நிர்வாகித்துள்ளது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கத்துக்கு உலக முழுவதும் பரந்துபட்ட அளவில் செல்வாக்கு இருக்கின்றது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கத்துக்கு சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கின்றது.(சமூக வலைத்தளங்களில் உள்ள தமிழர்களின் முகப்பு படம் பெரும்பான்மையாக புலிகள் தொடர்பாகவே உள்ளதுஅவர்களின் இடுகைகளும் பெரும்பாலும் ஈழம் சார்ந்ததாகவே உள்ளன )


இன்னும் சில கேள்விகள் ......

விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் என்று நீங்கள் சொன்னால்...

மும்பையில் கோட்டலில் தாக்குதல் நடத்தி அப்பாவி உயிர்களை கொன்று குவிதவர்களுக்கு உங்கள் மொழியில் என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள்...?

அண்மையில் ஆந்திராவில் நடத்தபட்ட வெடிகுண்டு தாக்குதல்களுடன் சம்பத்தப்படவர்களுக்கு என்ன பெயர்...?

பாகிஸ்தானில் பள்ளி சிறுமி மலாவை கொல்ல முயன்றவர்களுக்கு உங்கள் பாசையில் என்ன பெயர்

எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் இத்தனை இலட்சம் உயிர்களை கொன்று குவித்த ராஜபக்சவுக்கும் அவனது படைகளுக்கு என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள்...?

அப்படிப்பட்டவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து, மேலும் ஆயுதம், பயிற்ச்சி என வழங்குபவர்களுக்கு என்ன பெயர் .?

-ஈழ மைந்தன்-

இன்னும் தீராத சந்தேகம் - வீரப்பன்

                         
 
இன்னும் தீராத சந்தேகம்...

வீரப்பன் கடத்தியதாக சொல்லப்படும் 100க்கு மேற்ப்பட்ட யானை தந்தங்களும், 400 டன் சந்தன மரங்களும்.. கடத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும், அதை வாங்கிய ஒருவரை கூடவா இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதில் சமந்தமுடைய ஒரு சில அரசியல்வாதிகள் தான் உண்மை வெளிவந்தால் நாமும் மாட்டக்கூடும் என்று பயந்து அவரை கொன்றுவிட்டனர்..

400 டன் சந்தன மரங்களை கோடிக்கணக்கில் விற்று தான் அவர் காட்டில் ஏழையை போல் வாழ்ந்தாரா.. சற்று சிந்தித்து பாருங்கள்.. அத்தனை கோடிகளும் எங்கே போயிற்று.. வீரப்பன் சுவிஸ் பேங்க்'லய போட்டு வைப்பார்..

தூக்கில் போட துடிக்கும் இந்திய அரசே.. அவர் விற்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டிவிட்டால், நானும் உங்களுக்கு துணை நிற்கிறேன்..
வீரப்பன் வரலாறு - வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலையும் ஓசூரையும் சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா???
 
ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா? சந்தன வீரப்பன் என்று அழைக்கப்பட்ட முனுசாமி வீரப்பன் இறந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.

வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், அமர்ந்திருக்கிறார்கள்.

வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும், வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக, கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உள்ளார்கள் இந்த ஊடக விபச்சாரர்கள்....!

வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, ஒன்பது ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?

வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !

வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஒன்பது ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார். 17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

வீரம் என்பது என்ன தெரியுமா? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….

வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?!!!!!!!!

இதையெல்லாம் இந்த ஊடக விபச்சாரர்கள் ஊதி பெரிதாக்கி தமிழனை காலம் காலமாகவே முட்டாளாக்கி கொண்டிருகிறது... நீதிவான்கள், சிந்தனைவாதிகள் அனைவரும் ஊடகம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டும் உண்மையை உலகிற்கு உணர்த்த... இந்த பொய் பிரச்சாரத்தை மெய்பிக்கும் வகையில் இப்போது வெளிடப்பட்ட வனயூத்தம் என்ற திரைப்படத்திலும் வில்லனாக சித்தரித்தும், ஆளுங்கட்சிக்கு சோப்பும் போடப்பட்டுள்ளது என்பது இந்த கயவர்கள் எதுவரை ஊடுருவி உள்ளார்கள் என்பது சிந்திக்க வேண்டும்....

நம்மை பொறுத்தவரை நாட்டில் உள்ள எவ்வளவோ கொலை, கொள்ளை, கடத்தல்காரர்களை விட வீரப்பன் மோசமானவர் அல்ல, சொல்ல போனால் நமது தமிழ்நாட்டின் எல்லை சாமியாக விளங்கினார் அவர்...
 - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

Saturday, February 23, 2013

தமிழன் சாதித்த சிற்பக்கலை - திருக்குறுங்குடி, திருநெல்வேலி

 
 
 
யானையின் தும்பிக்கையும், கால்களும் கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கைகளின் இரண்டு கால்களும் ஆடைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் போது கிடைக்கும் கனத்தை கச்சிதமாக பொருத்தியாகிவிட்டது,

தும்பிக்கையை தந்த படி நின்றுகொண்டிருக்கும் அந்த பெண், அந்த நிலையில் நிற்க முடியாது என்பதற்காக இன்னொரு பெண்ணை தாங்கியபடி நிற்கிறாள்.

யானையின் கண்ணிற்கு பெண்ணின் மார்பு , காது வளைவிற்கு ஒருவரை ஒருவர் தாங்கி ந...ிற்கும் கைகள் !.

யானையின் கழுத்துப் பகுதி வளைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் கால் நீட்டி உட்கார்ந்த நிலையில் இருக்கிறார், கால் நீட்டி இருப்பதால், குறுக்கில் இருக்கும் பெண்ணின் மீது தடுத்து, ஆடை சற்று விலகி அது யானையின் தந்தமாகிவிடுகின்றது !

யானையின் வாய் திறந்த நிலையில் இருப்பதை போன்று காட்ட ஒரே ஒரு பாதம் அந்த இடத்தில் கொடுத்தாகிவிட்டது.

கால் மடக்கி தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் பெண்,யானை நடந்து முன்னேறி செல்கின்றது என்பதையும் அழகாக காட்டுகிறது.

அதன் வால் பகுதி ஒரு மங்கையின் கால் பகுதி .

அடடா என்ன ஒரு கற்பனை திறன் இருந்திருக்க வேண்டும்!!!

இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி

சிற்பியின் முழு அற்பணிப்பு - ஆயிரம் கால் மண்டபம் மதுரை

                    


      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.
 


      தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும்,திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்கவேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .

இப்படிக்கு என்றும் அன்புடன்
Ramesh Muthaiyan (ரமேஷ் மு)
                                       From Facebook..........


சங்க கால முருகன் கோவில்

               Photo: தமிழர்களின் தொன்று தொட்ட நாகரிக வளர்ச்சிக்கு மற்றுமொரு சான்று!

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், பழைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். 

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. திரிஷா யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு ஆழிப்பேரலையால்(சுனாமி) உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. 

இந்த சங்க கால கட்டிடம் ஆழிப்பேரலையால்(சுனாமி) அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு ஆழிப்பேரலையால்(சுனாமி) அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது. கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்:-) 

நன்றி : சசிதரன் & நேச மித்ரன்


எதை எதையோ SHARE பண்ணுறீங்க, இதையும் கொஞ்சம் SHARE பண்ணுங்களேன்!

தமிழர்களின் தொன்று தொட்ட நாகரிக வளர்ச்சிக்கு மற்றுமொரு சான்று!

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், பழைய பெயர் திருவிழிச்சில். இங்...கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

     எப்போதோ வந்த ஒரு ஆழிப்பேரலையால்(சுனாமி) உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் ஆழிப்பேரலையால்(சுனாமி) அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு ஆழிப்பேரலையால்(சுனாமி) அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது. கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்:-)


நன்றி : சசிதரன் & நேச மித்ரன்

Wednesday, December 19, 2012

Keyboard Shorcuts (Microsoft Windows)

            
More than 100 Keyboard Shortcuts must Read...!


Keyboard Shorcuts (Microsoft Windows)


1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)


Dialog Box - Keyboard Shortcuts


1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
25. NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)
26. LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)
27. RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)
Shortcut Keys for Character Map
After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:
1. RIGHT ARROW (Move to the rightor to the beginning of the next line)
2. LEFT ARROW (Move to the left orto the end of the previous line)
3. UP ARROW (Move up one row)
4. DOWN ARROW (Move down one row)
5. PAGE UP (Move up one screen at a time)
6. PAGE DOWN (Move down one screen at a time)
7. HOME (Move to the beginning of the line)
8. END (Move to the end of the line)
9. CTRL+HOME (Move to the first character)
10. CTRL+END (Move to the last character)
11. SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected)
Microsoft Management Console (MMC)


Main Window Keyboard Shortcuts


1. CTRL+O (Open a saved console)
2. CTRL+N (Open a new console)
3. CTRL+S (Save the open console)
4. CTRL+M (Add or remove a console item)
5. CTRL+W (Open a new window)
6. F5 key (Update the content of all console windows)
7. ALT+SPACEBAR (Display the MMC window menu)
8. ALT+F4 (Close the console)
9. ALT+A (Display the Action menu)
10. ALT+V (Display the View menu)
11. ALT+F (Display the File menu)
12. ALT+O (Display the Favorites menu)

MMC Console Window Keyboard Shortcuts
1. CTRL+P (Print the current page or active pane)
2. ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)
3. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
4. F1 key (Open the Help topic, if any, for the selected item)
5. F5 key (Update the content of all console windows)
6. CTRL+F10 (Maximize the active console window)
7. CTRL+F5 (Restore the active console window)
8. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)


Remote Desktop Connection Navigation


1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts


1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )

Monday, December 17, 2012

ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க.


ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.டிசம்பர் 16,2012, ஞாயிறு:இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.
 
  சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன.மே17 இயக்கத்தின் உமர் அவ்ர்கள் பேசுகையில், மே 15, 2009 அன்று இலங்கையில் இனப்படுகொலை நடக்கப்போகிறது என இனப்படுகொலை தடுப்பு அதிகாரி ஃபிரன்சிஸ் டெங் அளித்த அறிக்கை புறக்கணிக்கப்படுகிறது. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்(OCHA-Office for the Coordination of Humanitarian Affairs) அதிகாரி ஜான் ஹோம்ஸ் அபயக் குரல் எழுப்பி தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சலை படிக்காமலே அழித்து விடுவேன் எனக் கூறினார். பான் கி மூனின் உதவியாளர் மிச்செல் மோண்டாஸ், போரில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் எனக் கேட்ட்தற்கு உடல்களை எண்ணுவது எங்கள் பணியல்ல என்று கூறினார். போரில் நடக்கும் படுகொலைகளை தடுக்க, போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய இலங்கைக்கான ஐ.நாவின் உயர் அதிகாரி விஜய் நம்பியார் தட்ப வெப்பம் சரியில்லாத்தால் போகவில்லை என கூறினார். ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீற்ல்களை தடுக்க பக்கத்து நாட்டு அதிகாரிகளை நியமிப்பதில்லை என்பதை மீறி பான் கி மூன் இந்தியரான விஜய் நம்பியாரை இலங்கையில் நியமித்தார். இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என மனித உரிமைகள் அவையின் நவி பிள்ளை உள்ளிட்டோர் கூறியபோது அதை தடுத்தவர்கள் பான் கி மூன், விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோம்ஸ்.போரின் இறுதிக் காலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடாமல் விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோம்ஸ் தடுத்தனர் என்பன போன்ற விவரங்களை அளித்தார்.மதிமுக தொழிற்சங்க தலைவர் அந்திரிதாஸ் பேசுகையில், இந்தியாவிற்கும் ஈழப் படுகொலையில் இனப்படுகொலையில் சமபங்கு இருக்கிறதெனவும், இந்திய அரசு தான் முதல் குற்றவாளி என்றும், வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐ.நாவும் தமிழினப் படுகொலையை கூட்டு சேர்ந்து நடத்தியது என்றும் கூறினார்.திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசிகுமரன் பேசுகையில், ஐ.நா வை நாமெல்லாம் பிரச்சினைகளை தீர்த்துவைக்கக் கூடிய இடமாக பார்த்து வந்தோம். ஆனால் இப்போது ஐ.நாவே பிரச்சினைக்குரிய இடமாக நிற்கிறது. நாம் அனைவரும் நமக்கான தீர்வை நோக்கிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் பேசியபோது "கருணாநிதி மட்டும் தான் மிகப்பெரிய துரோகி என்று நினைத்தோம், ஆனால் இப்போது தான் தெரிகிறது பான் கி மூனும் மிகப்பெரிய துரோகி என்று.மேலும் இறுதிக்கட்ட நாட்களில் நடந்த போரின் போது இரவு ஏழு மணிக்கு சிங்கள அரசால் தொடங்கிய வான்வழி தாக்குதல் விடியற்காலை வரை தொடர்ந்தது. விடிந்த பின்பு அங்குள்ள நிலையினை பார்த்த பல பெண்கள் மயங்கி விழுந்தனர். காரணம் இரவு முழுவதும் நடந்த தாக்குதல்களால் குண்டடிப்பட்டு குழந்தைகளில் உடல் உறுப்புகள் சிதறி மரங்களின் கிளைகளில் தொங்கியது. இந்த நிகழ்வுகள் ஐ.நா அதிகாரிகளுக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் ஐ.நா அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார் .தமிழ்த்தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் உரையாற்றுகையில், ஐ.நா வின் கட்டமைப்பு மற்றும் வரையறைகள் பற்றியும், பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தேசிய இனங்களின் வரலாறுகள் பற்றியும், ஐ.நா வை எதிர்த்து போராடும் போதுதான் நம் கோரிக்கைகள் முன்நகர்த்தப்படும் என்றும் பேசினார். காலத்திற்கேற்ப ஈழத்திற்கான போராட்ட முறைகள் மாற வேண்டும் என்று கூறினார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தீரன் பேசுகையில், தமிழீழ விடுதலையின் அவசியம் குறித்தும், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம் என்றும், இந்தியா முழுதும் உள்ள தலைவர்களுக்கு ஈழத்தை பற்றிய செய்திகளை கொண்டு சேர்ப்பதும் முக்கியம் என்றும் கூறினார். ஐ.நா சபைக்கு சென்று திமுக மனு கொடுத்தது ஏமாற்று வேலை என்றும் கூறினார்.தமிழ்த்தேச பொதுவுடைமைக் கட்சியின் அருணபாரதி பேசுகையில்,இந்திய அரசு ஒரு நாளும் தமிழர்களுக்காக உதவ முன்வராது. ஆகவே விடுதலைக்காகப் போராடும் அனைத்து தேசிய இன்ங்களும் ஒன்று சேர்ந்து நான்காம் உலக நாடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார். தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் அதியமான் பேசுகையில், தமிழீழத்திற்கு ஆதரவாக இருக்கும் திமுக, அதிமுக தவிர்த்த அனைத்து ஆதரவு சக்திகளும் இணைத்து ஒரு அணியை அமைத்து தமிழீழத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில், ஐ.நாவினுடைய இனப்படுகொலை தடுப்பு அமைப்பு செயல்படவில்லை. மனித உரிமை அமைப்புகள் இயங்கவில்லை. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் ஏமாற்றுவேலைகள் மட்டுமே நடந்தன. சர்வதேச விதிகள் எவற்றையும் ஐ.நா இலங்கையில் பின்பற்றவில்லை. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து வெளியிடாமல் ஐ.நா மறைத்து வந்துள்ளது. தொடர்ந்து தமிழர்களுக்கான நீதியை இலங்கை அரசுடன் சேர்ந்து ஐ.நா அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஐ.நா வளாகத்தில் நீதி கேட்டு தீக்குளித்த முருகதாசன் நினைவு நாளையொட்டி பிப்ரவரி 13 ம் தேதி ஐ.நாவை முற்றுகையிடும் மிகப் பெரிய போராட்ட்த்தை உலகம் முழுமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும் என்று கூறினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், அனைத்து தமிழ் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு ஐ.நா அதிகாரிகளை விசாரிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பு நட்த்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.இலங்கை இனப்படுகொலை பற்றிய புகைப்பட கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த்து

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!
இலங்கை கடற்படை அட்டூழியம்! ஒரு மாதத்தில் 5வது சம்பவம்

                        இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்! இலங்கை கடற்படை அட்டூழியம்! ஒரு மாதத்தில் 5வது சம்பவம்


தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபடியே வந்து சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
அவர்களிடம் இருந்த மீன்பிடி சாதனங்கள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்களையும் பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து 650க்கும் அதிகமான விசைப்படகுகளில் நேற்று அதிகாலை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ஒரு சிலர் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இரவு 8 மணியளவில், இரு பெரிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்த அவர்கள், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.

படகுகளில் இருந்த மீனவர்களை பிளாஸ்டிக் பைப், பலகைகளால் சரமாரியாக தாக்கினர். கற்களால் படகுகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

படகில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போட் பலகைகள் மற்றும் மீன் பிடி வலைகளை வெட்டி நாசப்படுத்தி, கடலில் தூக்கி வீசினர். ‘

இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டுத் தள்ளிவிடுவோம் என எச்சரித்து விரட்டியடித்தனர்.

இதனால், மிகக்குறைந்த மீன்பாடுடன் மீனவர்கள் இன்றுகாலை கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர்கள் சகாயம், ராஜ் ஆகியோரின் படகுகள் உள்பட இருபதுக்கும் அதிகமான படகுகள் சேதமடைந்தன. இந்தப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டன.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது இராமேஸ்வரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் குறித்து மீனவர்கள் மாரிநம்பு (30), ஆரோக்கியம் (29), சந்தியா (29) கூறுகையில்,

‘‘இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பெரிய கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை சுற்றிவளைத்து தாக்கி காயப்படுத்தினர். வலைகளை வெட்டி நாசப்படுத்தியதுடன், எங்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், செல்போன் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.

இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டு விடுவோம் என மிரட்டி விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதால், இனிவரும் நாட்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது என்றனர்.

ஒரு மாதத்தில் 5வது சம்பவம்

பாக் ஜலசந்தி கடற்பகுதியில், இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது சம்பவம்.

இந்த தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

விசைப்படகு மீனவர்களுக்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

முப்பதுக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தத் தாக்குதல்களில், இலங்கை கடற்படையினர் இருமுறை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியிருக்கின்றனர்.
தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம்...
மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபடியே வந்து சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
அவர்களிடம் இருந்த மீன்பிடி சாதனங்கள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்களையும் பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து 650க்கும் அதிகமான விசைப்படகுகளில் நேற்று அதிகாலை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ஒரு சிலர் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இரவு 8 மணியளவில், இரு பெரிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்த அவர்கள், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.

படகுகளில் இருந்த மீனவர்களை பிளாஸ்டிக் பைப், பலகைகளால் சரமாரியாக தாக்கினர். கற்களால் படகுகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

படகில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போட் பலகைகள் மற்றும் மீன் பிடி வலைகளை வெட்டி நாசப்படுத்தி, கடலில் தூக்கி வீசினர். ‘

இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டுத் தள்ளிவிடுவோம் என எச்சரித்து விரட்டியடித்தனர்.

இதனால், மிகக்குறைந்த மீன்பாடுடன் மீனவர்கள் இன்றுகாலை கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர்கள் சகாயம், ராஜ் ஆகியோரின் படகுகள் உள்பட இருபதுக்கும் அதிகமான படகுகள் சேதமடைந்தன. இந்தப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டன.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது இராமேஸ்வரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் குறித்து மீனவர்கள் மாரிநம்பு (30), ஆரோக்கியம் (29), சந்தியா (29) கூறுகையில்,

‘‘இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பெரிய கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை சுற்றிவளைத்து தாக்கி காயப்படுத்தினர். வலைகளை வெட்டி நாசப்படுத்தியதுடன், எங்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், செல்போன் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.

இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டு விடுவோம் என மிரட்டி விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதால், இனிவரும் நாட்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது என்றனர்.

ஒரு மாதத்தில் 5வது சம்பவம்

பாக் ஜலசந்தி கடற்பகுதியில், இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது சம்பவம்.

இந்த தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

விசைப்படகு மீனவர்களுக்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

முப்பதுக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தத் தாக்குதல்களில், இலங்கை கடற்படையினர் இருமுறை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியிருக்கின்றனர்.

'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு' திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள்.


                                                                                                                     
                                                                                                      ஈழ மகான் தமிழ்
                  
                 

'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு' திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள்.


சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த்
தேசியப் பணியினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் திறம்படச் செய்து வந்த
...
திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களை நாம் இழந்து விட்டோம்.

திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மிக நீண்டகாலமாக அவுஸ்ரேலியாவில்
வாழ்ந்துவந்த போதிலும் தனது தாய்மண் மீதான தீராப்பற்றின் காரணமாக 2002ஆம் ஆண்டில்
இருந்து தமிழீழ விடுதலைப் பயணத்தில் தானும் சேர்ந்து கொண்டு உறுதி தளராத ஒரு தேசப்
பணியாளனாகத் திகழ்ந்தார்.

கிருஸ்ணமூர்த்தி ஆசிரியர் விடுதலைப் போராட்டம் பற்றியும் அதற்கான அவசியம் பற்றியும்
நன்குணர்ந்தவர். தாயகத்தில் இளந்தலைமுறையினரை அறிவுமிக்க நாட்டின் சிற்பிகளாக உருவாக்குமாறு தேசம் அவரிடம் கேட்டதற்கமைய அப்பணியினை ஏற்றுப் புதிய அணுகுமுறையுடன் ஆங்கிலமும் கணிதமும் கற்றுக்கொடுத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியரும் நல்ல விளையாட்டு வீரனும் ஆவார். அதனால் வெறும் வகுப்பறைப் போதனை முறைகளை மட்டும் பயன்படுத்துவதோடு நின்றுவிடாது விளையாட்டுத்திடலிலும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் கற்றுக் கொடுத்தார். அத்தோடு தேசத்திற்குத் தேவை ஏற்படும் போதெல்லாம் புலம்பெயர் விடுதலைத் தளத்திலும் தனக்கான அரசியற் கடமைகளை ஒரு கணமும் பின்னிற்காது முழுமூச்சுடன் செய்துவந்தார்.

கொடிய நோயினால் உடல் தளர்ந்து கண் மூடும் வேளையிலும் தமிழீழக் கனவுடனேயே அவர்
எம்மை விட்டுச்சென்றுள்ளார். திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவு தேசியப்
பணியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவாற் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும்
அவுஸ்திரேலியா வாழ் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்பேசும் மக்களோடு இணைந்து
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்த்தேசியப் பணியில் அயராது உழைத்து வந்த திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி
அவர்களுக்கு 'நாட்டுப்பற்றாளர்' என மதிப்பளிப்பதில் நாம் பெருமைகொள்கின்றோம்.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'