Like me

Tuesday, January 3, 2012

விஞ்ஞான ரகசியம்!


நெற்றியில் பொட்டு வைப்பதன் விஞ்ஞான ரகசியம்!

பழையவர்கள் பொட்டு வைக்க சொன்ன காரணம் சரியான முறையில் கடத்தப்படவில்லை. இடையில் வந்தவர்கள் குங்குமத்தை ஒரு திருமண அடையாளப் பொருளாகத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் பொட்டு என்பது ஒரு முக்கியமான பொருளாகும். அதிலும் குங்குமம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் வசியம் பற்றி அறிந்திருப்பீர்கள். இதை மேற்கத்தியவர்கள் HYPNOTISM என்று அழைக்கிறார்கள். மனதை ஒரு முகப்படுத்தக் கூடிய ஒருவரால் இது சாத்தியப்படும்என்பது எல்லோருக்கும்தெரியும்.
சரி நெற்றிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் பார்ப்போமா? எமது கண்ணில் பெறப்படும் ஒளி சமிஞ்யை நரம்பின் மூலம் (OPTIC NERVES)  மூளைக்கு அனுப்பப்படும்.  வலக்கண்ணினுடைய சமிஞ்யை இடப்பக்க மூளையும், இடக்கண்ணினுடைய சமிஞ்யை வலப்பக்க மூளையும் பெற்றுக் கொள்ளும் இந்த நரம்புகள் சந்திக்கும் இடம் தான் முக்கியமான இடமாகும் இதை ஆங்கிலத்தில் (OPTIC CHAISMA)  என்று அழைப்பார்கள். இது சரியாக நெற்றிப் பொட்டுக்கு நேரே தான் இருக்கிறது.
எம்மூர் சந்திகளில் யாராவது விடுகாலிகள் நின்றால் குமருகள் போக  முடியாதது போல் தான் இந்த சந்தியில் ஏதாவது தடங்கல் வந்தால் பார்வை அம்பெல் தான். குறிப்பாக சொல்வதானால் இதற்கு மேல் தான் கபச்சுரப்பி இருக்கிறது. இதில் ஒரு சிறு வீக்கம் வந்தாலும் கண் பார்வையில் வித்தியாசம் தெரியும். நெற்றிப் பொட்டு என்பது ஒரு முக்கியமான இடம். ஒரு கராத்தே வீரரை கேட்டுப்பாருங்கள் ஒருவருக்கு நெற்றிப் பொட்டில் ஏற்படும் தாக்கத்தால் எவ்வளவு நிலை குலைவு ஏற்படும்.