|
Sunday, April 1, 2012
"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவுப் பேரிணைவு"
அனைத்துலக விசாரணைக்கான அறைகூவல்

சனல்- 4வின் புதிய ஆவணப்படம்
17 03 12
ஐ. நா மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகள், காலத்தின் தேவையை உணர்ந்து தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் தேவையை வற்புறுத்துமாறு அறைகூவல் விடுகின்றோம்.
இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையிலும் இன்றைய தேவை அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம் குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:
பிரித்தானிய நாட்டின் சனல்- 4 தொலைக் காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் -தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' எனும் ஆவணப்படத் தொடரினை> நாம் அனைவரும் ஆழ்ந்த துயரத்துடனும் கோபத்துடனுமேயே பார்வையிட்டோம்.
நான்கு சம்பவங்களை மட்டும் குறிப்பாகக் காட்டும் இந்தக் காணொளியில், காட்டப்படுபவை யாவும் போரின் இறுதிக் கட்டங்களில் சிறீலங்கா இழைத்துள்ள போர்க்குற்றங்களில் ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும். இவ் ஆவணப்படத்தினைவிட பிற ஆதாரங்களையும் நாம் இந்தவேளையில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
ஐ. நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அடிகள் அவர்களின் அறிக்கை என்பனவும், அண்மைக் காலங்களில் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி வந்தவர்கள் கொடுத்துள்ள வாக்கு மூலங்கள் என்பனவும் இதனுடன் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
மன்னார் ஆயர் அவர்கள் தனது வாக்கு மூலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த 146,679 மக்களுக்கு நடந்த கதி என்ன வென்று தெரியாத நிலை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளதும் ஒரு முக்கியமான விடயமாகும். இவை யாவும் போரின் போது நிகழ்ந்த கொடுமைகளையும் குற்றங்களையும் உணர்த்தி நிற்கின்றன.
சிறீலங்காவின் இராணுவ அரசியல் தலைமைப்பீடம் முன்வைத்து வரும் கொடூரமும் கபடமும் மிக்க ஏமாற்றுக் கருத்துக்களும் கேவலமான முயற்சிகளும் மானுடத்தை வெட்கப்படுத்துவன. அதன் மதிகூர்மையை அவமதிப்பன.
இரு ஐ.நா அதிகாரிகள் கொடுத்ததையொத்த நேரடி சாட்சியங்கள் மூலம், யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்த தமிழ் மக்கள் மீது குறி வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி சிறீலங்கா அரசாங்கத்தின் கட்டளை அதிகார மட்டம் நன்கறிந்திருந்தது என்பது மிகத் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் மிக உயர்ந்த அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் இவ்வகையான போர்க்குற்றங்களில் நன்கு தெரிந்து கொண்டுதான் ஈடுபட்டார்களென்பது, இப்போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணை வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் கோரிக்கையை மேலும் வலியுறுத்தி நிற்கின்றது. இதனையே ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
சனல் 4 ஆவணப்படம் பல்வேறு விடயங்கள் உள்ளடங்கலாக பின்வருவனவற்றை வலியுறுத்தி நிற்கின்றது:
(1) திட்டமிட்ட முறையில் நிகழ்ந்துள்ள கொலைகள், சிறீலங்கா அரச இராணுவ அதிகார பீடத்தின் அதி உயர் மட்டத்தில் உள்ளவர்களது ஈடுபாட்டினைச் சுட்டி நிற்கின்றன.
(2) ஷெல் தாக்குதல்கள் பற்றி சிறீலங்காவின பாதுகாப்பு அமைச்சரும் இராணுவத் தளபதியும் நேரடியாக அறிந்திருந்தார்கள் (பேராசிரியர் வில்லியம் சாப்ஸின் பகுப்பாய்வின்படி இவர்கள் குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப் படவேண்டியவர்களாவர்).
(3) யுத்த சூனியப் பிரதேசங்கள் மீது நடாத்தப் பட்ட ஷெல் தாக்குதல்களுக்கு சிறீலங்கா அரசின் அதிஉயர் மட்டத் தலைவர்கள் அனுமதி வழங்கியிருந்தார்கள்.
(4) கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்கள் ஆடைகள் களையப்பட்ட பின் கொலைசெய்யப்பட வேண்டும் எனும் கொள்கைக்கு, கட்டளை அதிகாரிகள் நேரடிப் பொறுப்பானவர்களாக இருந்துள்ளார்கள்.
(5) சிறீலங்கா அரசாங்கம் தீவிரமாக மறுத்து வந்துள்ள போதிலும் யுத்த வெற்றியை இராணுவம் கொண்டாடும் காட்சியில் அவர்கள் கனரக ஆயுதங்களை இயக்கியது உண்மையாக்கப்பட்டுள்ளது.
(6) பரந்த அளவிலான பாலியல் வன்செயல்களும், கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உடலங்கள் மனிதாபிமானம் அற்ற முறையில் சிதைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும், இவை அங்கொன்று
இங்கொன்றாக நிகழ்ந்தவை அல்ல எனவும், எதிரியாகக் கருதப்பட்டவர்கள் சிதைத்து அழிக்கப்பட வேண்டுமென்ற கொள்கை தீர்க்கமான வகையில் திட்டமி;டப்பட்டதென்பதும் நிறுவப்பட்டுள்ளது.
ஐ.நா சபை வன்னி மக்கள்தொகை தொடர்பாக வெளியிட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில், சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் போர்ப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த மக்களின் தொகையை மிகவும் குறைத்துக் காட்டியதோடு, அப்பகுதி மக்களுக்கு உணவு மருந்துப் பொருட்களை திட்டவட்டமாக மறுத்திருந்தது என்பது இவ்விவரணப் படத்தின் மூலம் மிகத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
இவ்வகை நடவடிக்கைகள் யாவும் சிறீலங்கா அரசின் அதிஉயர் மட்டத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டன என்பதையும் ஆவணப்படம் வலியுறுத்துகின்றது.
இவ்வாறு திட்டமிட்ட முறையில், அடிப்படைத் தேவைகளான உணவு மருந்துப் பொருட்களை மறுக்கும் செயலானது 1948 ஐ.நாவின் இன அழிப்பு பற்றிய பிரகடனத்தின் விதி 2 (உ) யின் கீழ் அடங்குகிறது.
அதாவது, 'ஒரு குழுமத்தை முற்றாகவோ அதன் ஒரு பகுதியையோ வேண்டுமென்றே அழிக்கும் நோக்குடன் இயங்குவது இன அழிப்பாகும்' என இந்த விதி கூறுகின்றது. இது தொடர்பாக ருவாண்டா நாட்டுக்கான அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் வெளியிட்ட கருத்தான 'ஒரு குற்றத்தின் உள் நோக்கமும் அதன் தன்மையும், அக்குற்றம் இழைக்கப்பட்ட பொதுச் சூழலைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படலாம்' என்பது இங்கு நோக்கப்பட வேண்டியது.
எனவே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடுயாதெனில், இடம்பெறவிருக்கும் அனைத்துலக விசாரணையானது போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுடன் மட்டும் நின்று விடாது இன அழிப்பையும் உள்ளடக்க வேண்டும் என்பதேயாகும்.
சிறீலங்கா தீவில் இயங்கி வரும் அரசியல் இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு இக் காட்டுமிராண்டித் தனமான குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின் பங்களிப்புடனேயே இக்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்பதை இக்காணொளி மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.
எனவே, இந்தக் குற்றகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தவர்களும், அதில் ஈடுபட்டவர்களும் இக்குற்றங்களை விசாரணை செய்து, அதற்குரிய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவார்கள் எனக் கருதுவது மிகவும் போலியானதோர் அணுகுமுறை என்பதே எமது நிலைப்பாடாகும். இவ் ஆவணப்படமும் இதே கருத்தையே முன் வைக்கின்றது.
அதாவது, எந்த ஒரு இராணுவத் தலைப்பீடம் இத்தகைய குற்றங்களை அனுமதித்தும் அதில் ஈடுபட்டும் வந்ததோ, அதே இராணுவத் தலைமைப் பீடத்தால் இப்பொழுது நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதி மன்றம் உண்மையை வெளிக்கொண்டு வந்து, நீதியை நிலைநாட்டும் என்பதும் தவறானதென ஆவணப்படம் கூறுகின்றது.
அத்துடன், போரின் இறுதிக் கட்டங்களில் நிகழ்ந்தவை பற்றிய 'படிப்பினைக்கும் நல்லிணக்கதுக்குமான ஆணைக் குழுவின்' கண்டுபிடிப்புக்கள் விடயங்களை மூடி மறைப்பதற்கானதோர் நாடகமே எனவும் ஆவணப்படம் கூறுகின்றது.
ஏற்கெனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டது போல போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்ததாக 'படிப்பினைக்கும் நல்லிணக்கதுக்குமான ஆணனைக் குழு'வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை ஏற்றுக் கொண்டால், சிறீலங்கா அரச இராணுவத் தலைமைப் பீடங்கள் தாம் இழைத்த குற்றங்களிலிருந்து, அதாவது ஐ.நா நிபுணர் குழுவினாலும் 'சனல் 4' காணொளி மூலமும் முன் வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அது வழிசமைத்து விடும்.
இவ்விடத்தில் இன்னும் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய மிக முக்கிய தன்மை யாதெனில், இக்குற்றங்களை விசாரணை செய்வதற்கான அரசியல் மனோபலம் சிறீலங்கா அரசாங்கத்திடம் இல்லை என்பதே யதார்த்தமாகும்.
கென்யா நாட்டில் நடந்தது போல, உள்நாட்டில் இத்தகைய குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தக்கூடிய
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் அவர்கள் 'சிறீ லங்காவின் தலைவர்கள் பொய் உரைப்பவர்கள்' எனத் தயக்கமெதுவுமின்றி ராஜதந்திர மரபுகளை மீறிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளது இவ்விடத்தில் நோக்கத் தக்கது.
சனல் 4 ஆவணப்படம்; முடிவில் கூறியுள்ளதுபோன்று தமிழ்ப் பொதுமக்களுக்கான நீதி கேள்விக்குள்ளாக்கப் படுவது மட்டுமன்றி, ஐநாவின் நற்பெயரும் ஏற்புடைமையும் இவ்விடத்தில் கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது இங்கு வலியுறுத்தப்பட வேண்டியதாகும்.
எனவே ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகள் காலத்தின் தேவையை உணர்ந்து தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் தேவையை வற்புறுத்துமாறு அறைகூவல் விடுகின்றோம். இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையிலும் இன்றைய தேவை அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏழைகள் யாருமில்லை ?

இல்லாத இந்தியாவில் ஏழைகள் யாருமில்லை ?
சிற்றூரில் நாள் ஒன்றுக்கும் 22 ருபாய் கூலி பெற்றால் அவர்கள் ஏழைகள் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது .
நகரத்தில் நாள் ஒன்றுக்கு 29 ருபாய் கூலி பெற்றால் அவர்கள் ஏழைகள் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது .
இந்திய அரசு கணக்குப்படி இந்தியாவில் ஏழைகள் இல்லை .என்பது புலனாகிறது .
இந்தியாவில் ஒரு முறை சிறு நீர் கழிப்பதற்கு ஒரு முறைக்கு மூன்று ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது .
கழிவறை செல்வதற்கு ஒரு முறைக்கு ஐந்து ருபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது .
இந்தியாவில் கழிவறை இல்லாமல் 40 கோடி மக்கள் உள்ளனர் .இதுவும் இந்தியாவின் கணக்கெடுப்பு .
இங்குள்ள மக்கள் மலம் கழிப்பதற்கும், சிறு நீர் கழிப்பதற்கு மட்டுமே இவர்கள் சொன்ன தொகை போதாது .
கோடியில் புரளும் இவர்கள் ,கோடியில் கோடியை கொள்ளையடிக்கும் இவர்களுக்கு மக்களின் வறுமை எங்கே தெரிய போகிறது .
தெனாலி ராமன் கதைதான் நினைவிற்கு வருகிறது. தன்னிடம் எலுமிச்சை பழ அளவு தங்கம் இருக்கிறது என்றவுடன் அரசனிடம் இந்த நாட்டு மக்கள் எல்லோரும் வளமையாக வாழ்கிறார்கள் ஒவ்வொருவரிடமும் எலுமிச்சை பழ அளவு தங்கம் இருக்கிறது என்று கூறியது போல கொள்ளையடிக்கும் இந்த தெரு நாய்கள் கணக்கிட்டால் அப்படிதான் இருக்கும் .
இல்லாத இந்தியாவில் இந்தியத்தை தேடும் தமிழர்களே இனி மேலாவது உணருங்கள் இந்தியன் சொன்னால் கோவணம் கூட மிஞ்சாது .திராவிடம் என்று சொன்னால் அதுவும் மிஞ்சாது .தமிழர்கள் என்று சொல்லி பார் உன் வளமையை அறிந்து பார்
முள்ளிவாய்க்காலை மறைத்த கூகுள் ஏர்த்!

முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தை மறைத்த கூகுள் ஏத்!
கூகுள் தேடுபொறி, கூகுள் ஏத் எனப்படும் அதி நவீன சட்டலைட்டைப் பயன்படுத்தி பூமியின் எப்பாகத்தையும் பார்க்கும் தொழில் நுட்ப்ப புரட்சியை ஏற்படுத்தியது யாவரும்அறிந்ததே. நிலப்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக பார்ப்பது போல, கூகுள் ஏத் எனப்படும் சட்டலைட் மூலம் நாம் உலகின் எப்பாகத்தையும் பார்க்க முடியும்.
உதாரணமாக லண்டனில் வசிப்பவர் ஒருவர் இலங்கைக்கு மேலே சென்று, அங்கிருந்து யாழ்ப்பானத்தைப் பார்த்து, அதிலும் நல்லூர் கோவிலை துல்லியமாகப் பார்க்க முடியும். அதுமட்டும் அல்ல மட்டும் அல்ல வெளிவீதியையும் பார்க்க முடியும். சிரியாவில் நடைபெற்ற அரச அடக்குமுறை, பலஸ்தீனத்தின் மேல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று, சம்பவம் நடந்த இடங்களை ஊடகவியலாளர்களும், அதிகாரிகளும், மற்றும் பொதுமக்களும் பார்க்க கூகுள் ஏத் உதவியாக இருக்கும்.
2004ம் ஆண்டு இலங்கையை சுணாமி தாக்கியவேளை, கடல் நீர் எவ்வாறு நாட்டிற்குள் உட் புகுந்தது என்பதனை கூகுள் ஏத் தான் முதன் முறையாகத் துல்லியமாக எடுத்து உலகிற்கு காட்டியது. பொதுவாக கூகுள் ஏத் எனப்படும் பொறிமுறை பாவிக்கும் சட்டலைட் சுமார், 2 வாரங்கள் அல்லது 1 வாரத்துக்கு ஒருமுறையாவது உலகின் பல்வேறு பகுதிகளைப் படமெடுத்து அதனை சேமித்து வருகிறது.
ஆகக் கூடச் சொல்லப்போனால் 1 மாதத்திற்கு ஒரு தடவையாவது அது எல்லா இடங்களையும் படம் எடுத்து சேமிப்பது வழக்கம். பழைய படங்களை நாம் எமது கணணியில் சேமித்தால், பின்னர் கூகுள் ஏத் தரும் புதிய படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே நடந்திருக்கும் மாற்றங்களை நாம் அவதானிக்க முடியும். இது உலகின் நகரப் பகுதிகள் காடுகள், வீதிகள், கட்டிடங்கள் என ஒன்றையும் விட்டுவைக்காமல் அப்படியே படம் எடுத்து சேமித்து வைக்கிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் அதன் கழுகு போன்ற (கமரா) கண்ணில் எந்த ஒரு பகுதியும் தப்பிக்க முடியாது.
ஆனால் 2009ம் ஆண்டு ஏப்பிரல், மே, மற்றும் ஜூன் என 3 மாதங்களாக, முள்ளிவாய்க்காலை, கூகுள் ஏத் படம் எடுக்கவில்லை. குறிப்பாக உலகில் உள்ள பல தமிழர்கள் கூகுள் ஏத் சட்டலைட்டை பாவித்து முள்ளிவாய்க்காலைப் பார்த்துள்ளனர். ஆனால் அங்கே சேமித்து வைக்கப்பட்டிருந்த படங்கள் பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு சென்ற பின்னரும், அவர்கள் அங்கே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தது மட்டுமல்லாது, இறுதியாக அங்கிருந்து அவர்கள் அகன்று சென்றது கூட கூகுள் ஏத்தில் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்டு மக்களுக்கு அது காட்டப்படவில்லையா ? இல்லை பதிவே செய்யப்படவில்லையா என்பதே தற்போது எழுந்துள்ள பெருங்கேள்வி ஆகும்.
2009ம் ஆண்டு உலகளாவியரீதியாக தமிழர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டனர். நடக்கும் யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேசத்திடம் வேண்டி நின்றனர். பிரித்தானியா ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு பிரேரணை ஒன்றைக் கொண்டுசென்றது. இதனை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ரத்துச் செய்தது. மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்திகள் உலகளாவியரீதியில் பரவலாக அடிபட்டபோதிலும் கூகுள் ஏத் ஏன் அப்பகுதியை படம் எடுக்கவில்லை ? அப்படிப் படம் எடுத்திருந்தால் முள்ளிவாய்க்காலில் மக்கள் அமைத்திருந்த கூடாரங்கள், அங்கே விழுந்து வெடித்த ஷெல்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் துல்லியமாகப் படமாக பெற்றிருக்க முடியும். ஆனால் அதனை ஏன் கூகுள் ஏத் செய்யவில்லை ?
இலங்கை அரசுடன் இவர்கள் ஏதாவது ஒப்பந்தம் போட்டார்களா ? என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளதாக அமெரிக்க ஆங்கில நாளேடு ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலைப் படம் எடுத்துவிட்டு, அதனை சேமித்துவைத்து தற்போது எடுக்கப்பட்ட படம்போல கூகுள் ஏன் காட்டிவந்தது என்பது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதற்கு கூகுள் நிறுவனம் பதில் சொல்லியாகவேண்டும் என அந்த ஆங்கில ஊடகம் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது.
முன்பு ஏமாந்தோம். இப்போது என்ன செய்யப் போகிறோம்?
மீண்டும் பெரிய கோடு போட ஆயத்தமாகும் கருணாநிதி

2009-ம் ஆண்டு போருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பெரும் உண்ணா நிலை போராட்டம் நடத்தத் தொடங்கியவுடன்,தனது மவுசு போய்விடுமே? எனக் கருதிய கருணாநிதி சின்னக்கோட்டிற்கு பக்கத்தில் பெரிய கோடு போடும் விதமாக தமிழகம் தழுவிய மனிதச் சங்கிலி போராட்டம் என்று ஒன்றை நடத்தினார். பின்னர் அந்தர் பல்டி அடித்து பல துரோகங்களை நிகழ்த்தினார்.
இப்போது தமிழகம் முழுதும் புதிய தமிழ் தேசிய அமைப்புக்கள் பல எழுச்சிபெற்று தமிழ் தேசிய மற்றும் ஈழ விடுதலைக்கான பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஈழப் பிரச்சினையும் உலகளாவியதாக மாறி வெற்றிப்படிகளைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இவ்வேளையானது தமிழ் தேசியம் புதிய எழுச்சியை பெற்று உலக அளவிலான் அங்கீகாரத்தையும் வென்று வரும் வேளையாக உள்ளது.
தமிழகத்தின் ஈழ விடுதலை செயல்பாடுகளில் பல புதிய சிறிய தமிழ் தேசிய அமைப்புக்களும், திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளான நாம் தமிழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் (பெயரில் திராவிடம் இருந்தாலும் செயலில் அப்படியில்லாத) ம.தி.மு.க. என பலதரப் பட்ட பாத்திரங்கள் களமாடுகின்றன. இந்தப் புதிய போக்கு கருணாநிதியைப் பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது போலும்.
1980-களில் தன் மவுசு ஈழப் பிரச்சினையில் கொஞ்சம் அதிகம் இருந்தாலும் அது எம்.ஜி.ஆரால் ஓரங்கட்டப் பட்டது. இருந்தாலும் அன்று கருணாநிதியை தமிழர்கள் நம்பினார்கள். ஆனால் இன்றைய நிலை தலை கீழாக உள்ளது. அவரது துரோகங்கள் அம்பலப்பட்டு, அவரது அரசியலும் பெரும் ஊழல் அரசியலாக மாறி நிற்பதால் தமிழகத் தமிழர்களும் கருணாநிதியை நம்ப வில்லை. உலகத் தமிழர்களும் கருணாநிதிக்கு இனி தங்களிடம் வேலையில்லை என்றே நினைக்கிறார்கள். ஈழத் தமிழர்களோ அவரை காறித் துப்புவார்கள்.
இந்த தலைகீழ் மாற்றம் நேர்ந்து விட்ட நிலையில் மீண்டும் தன் மவுசை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை கருணாநிதிக்கு இருக்கிறது. எனவே 2009-ல் செய்ததைப் போல சின்னக்கோட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை போட ஆயத்தமாகி விட்டார். தற்போது களமாடும் பல தமிழ்தேசிய அமைப்புக்களை ஓரங்கட்டுவதற்காக ஒரு பெரிய கோடு போடப்பட்டே ஆக வேண்டும். இல்லையேல் கருணாநிதியின் பெயர் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும்.
எனவே ஒரு பெரிய கோட்டை கண்டு பிடித்திருக்கிறார். அது ஏதும் புதியதான பெரிய கோடு இல்லை. 1980-களில் தமிழகத்தில் உருப் பெற்ற ‘டெசோ’வாகும். அன்று ஈழ விடுதலைப் போராளி அமைப்புக்களை ஒன்று திரட்டியதாகச் சொல்லிக்கொண்டு கருணா போட்ட நாடகம்தான் டெசோ. அதன்மூலம் ஈழ விடுதலை என்னவோ தனது வழியில் செல்வதாகக் காட்டிகொள்ள நினைத்தார் கருணாநிதி. ஆனால் இவையெல்லாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று விடுதலைப் புலிகள் முதன்மைக் களத்தில் இல்லாத நிலையில் மீண்டும் ‘டெசோ’வை உயிர்ப்பிக்கப் போகிறாராம் கருணாநிதி.
யானை வருமுன்னே மணியோசைக் கேட்பது போல கருணாநிதி செய்ய விரும்புவதை முன்னதாகவே வீரமணி அறிவிப்பது வழக்கம். அண்மையில் கூட ஐ.நா. தீர்மானத்தையொட்டி தி.மு.க. வானது காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று தி.மு.க.வின் நிலைப்பாட்டை முதலில் கூறியவர் வீரமணிதான். அதுபோல் இப்போதும் வீரமணி கூறி விட்டார்.
இது தொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 முறை முதலமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் இருக்கக் கூடிய கருணாநிதி தனிஈழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருப்பது மிகச் சரியான - இக்கால கட்டத்திற்கு அவசியமான கருத்தும்.
எனவே தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து டெசோவை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாகூட ஒரு கட்டத்தில் தனிஈழம்தான் தீர்வு என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் நம்மைப் பிரிக்கும் வேறு சில கருத்துக்களைத் திணிக்காமல் தனிஈழம்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிரந்தரத் தீர்வு என்பதில் ஒன்றுபடும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, மீண்டும் டெசோவின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது” எனக் கூறியிருக்கிறார்.
தனி ஈழம்தான் ஒரே தீர்வாம். போர் முடிவுற்ற நாட்களில் தமிழர்கள் சிங்களர்களோடு இணங்கி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதியின் செல்லப் பிராணியான பெரும் பேராசிரியர் அன்பழகன் பிதற்றியதை யாரும் மறக்க வில்லை. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் அதிகார்ப்பூர்வ நாளேடான ‘முரசொலி’யில் ஈழத் தமிழர்களை ‘சிங்களத் தமிழர்கள்’ என்று குறிப்பிட்டு செய்திகளும் விளம்பரங்களும் வெளியாயின. இவை யாவற்றையும் மிஞ்சும் விதத்தில் தற்போது இலங்கை அரசு தலைவர் பிரபாகரன் ‘இறந்ததாக’க் கூறி அவரது வீட்டிற்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்ததை தி.மு.க.வின் சன் தொலைக்காட்சி மிக ஆர்வமாக திரும்ப திரும்பக் காட்டி தனது ராஜ(பக்சே) விசுவாசத்தை வெளிப்படுத்தியது.
இப்போது தனி ஈழம்தான் ஒரே தீர்வாம். ‘டெசோ’வை மீண்டும் தொடங்க வேண்டுமாம். மீண்டும் தனது அரசியலுக்கு ஈழ விடுதலையை பலியிட ஆயத்தாமாகிறார் கருணா.
முன்பு ஏமாந்தோம். இப்போது என்ன செய்யப் போகிறோம்?
யார் இந்த எஸ்.பி.உதயகுமார்?
யார் இந்த எஸ்.பி.உதயகுமார்?

இந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, எத்தியோப்பியாவில் ஆறு வருடங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு, அமெரிக்காவின் நாடர் டேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
இவரின் தந்தை அரசியலில் ஆர்வம்கொண்டவர். இவரின் தாய் சமூகப் பணியாளராக இருந்தவர். அந்த உந்துதலினால், அரசியலுக்காகவும் மக்களுக்கான அறிவியலைக் கொண்டுசெல்லவும் பல விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.
இவர் அணுசக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய மணல் போன்ற கனிமங்களில் இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் தாக்கியது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழை வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது!
களப்பணியில் மட்டும் இன்றி, இவரை அணு சக்திக்கு எதிராக எழுதவும் ஊக்கம் தந்த பேராசிரியர் எபினேசர் பால்ராஜும் புற்றுநோயால் இறந்தார். எனவே, 'புற்றுநோய் கல்வி’ என்கிற புத்தகத்தை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுப.உதயகுமாரன்.
'தி கூடங்குளம் ஹேண்ட் புக்’, 'கான்ஃப்ரன்டேஷன்ஸ் ஆஃப் டிசாஸ்டர்’, 'கிரீன் பாலிட்டிக்ஸ் இன் இண்டியா’ ஆகிய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். 'அசுரச் சிந்தனைகள்’ நூலின் தொகுப்பாசிரியர். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் பல்வேறு இதழ்களில் அணு சக்திக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். சமாதானம் மற்றும் சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும் கல்விச் சாலை ஒன்றினை மனைவியுடன் இணைந்து நாகர்கோவிலில் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் சமூகப் பணி என்கிற தளத்தில் முன்னோடியாக இருப்பவர்களில் ஒருவரான ஒய்.டேவிட் தலைமையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அணுசக்திக்கு எதிரான இயக்கங்களை ஒன்று திரட்டி 2009-ல், 'அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராக இருந்து, சுற்றுச்சூழலுக்காகவும் சக மனித நலனுக்காகவும் போராடி வருகிறார் நம் உதயகுமாரன்!

ஜப்பானின் புகுஷிமா அணு உலை வெடி விபத்து நிகழ்ந்து ஓராண்டு
ஜப்பானின் புகுஷிமா அணு உலை வெடி விபத்து நிகழ்ந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் தற்போதும் கதிர்வீச்சின் தாக்கம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகுஷிமா அணுமின் நிலையத்தின் 2ஆவது அணு உலையை சிறிய கேமிரா, கதிர்வீச்சை கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை அடங்கிய கருவி மூலம் ஆய்வு செய்தபோது இந்த விவரம் தெரியவந்துள்ளது. மேலும் அணு உலை மிகவும் சிதிலமடைந்திருப்பதாகவும், உயிரைக் கொல்லும் அளவைவிட 10 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். கதிர்வீச்சு நிறைந்த இந்த அணு உலையை செயலிழக்கச்செய்ய 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என கூறிய ஜப்பான் அதிகாரிகள், நிலைமையை சீர்செய்ய ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர். இதேபோன்று அணுஉலையை குளிர்விக்க போதிய அளவில் தண்ணீர் இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

அணு உலையால் தமிழ் இனத்திற்கு மரணம் !!!
அணு உலையால் தமிழ் இனத்திற்கு மரணம் !!!
கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிப்பது அல்ல முக்கிய வேலை. இங்கே அணு ஆயுதங்களுக்கான யுரேனியம் தயாரிக்கப் போகிறார்கள். வல்லரசாக வேண்டும் என்கிற உத்வேகத்தில் ஆயதப் போட்டியில் இறங்கப் போகிறார்கள். மிக ஆபத்தான ஆராய்சிகளை (அணுகுண்டு ) செய்வதற்கு கூடங்குளம் பயன் பட போகிறது . மற்ற படி மின்சாரம் என்பது இந்த ஆராய்ச்சியின் உபரியாகவே உற்பத்தி செய்யப்படும்.
...
அணு உலை செயல் படும் பொழுது இயல்பாக ஏற்படும் கதிர்வீச்சினால் சுற்றி யுள்ள கிராம மக்கள் தொண்டை வீக்கம், நாக்கு வீக்கம், நரம்பு கோளாறு போன்றவைகளால் பாதிக்கப் படுவர். ஆண்களின் விந்தணு சுரப்பி பாதிக்கப்பட்டு ஆண்மையின்மை ஏற்படும்
.பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டு மலட்டு தன்மை ஏற்படும் .
புற்று நோய் உட்பட பல்வேறு விதமான உயிர்கொல்லி நோய்கள் ஏற்படும் . புற்று நோய் என்றால் உங்களுக்கே தெரியும். அதிகப்படியான வலியும், நோவும், வேதனையும் பொருளாதார செலவையும், ஏற்படுத்தி குடும்பத்துள் ஏனைய உறுப்பினர்களிடம் மன உளைச்சலையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று. ஒரு முறை வந்து விட்டால் பரம்பரை நோயாக மாறி அவர்கள் வாரிசுகளுக்கு கடத்தப்படுகிற நோய் இது.
மரபணு பாதிக்கப்படுவதால் பிறக்கும் குழந்தைகள் உடல் குறைப்பாட்டுடன் பிறக்கும் .
விவசாய உற்பத்தி பொருட்கள் உடனடி நஞ்சாக நாட்பட்ட விஷயமாக மாறும் . வயல்வெளிகள், நெற்கதிர்கள், காய்கறிகள், மரங்கள், செடி கொடிகள் காய் கனிகள், அனைத்தும் நஞ்சாகும். கடல் வாழ் உயிரினங்கள் வாழு நிலை பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். கடல் வாழ் உயினங்களை உண்பவர்களும் பாதிக்கப்படுவர்.
அணு உலை இயங்க துவங்கி 40 ஆண்டுகளுக்குள் ஏற்படக் கூடிய பாதிப்புகள் இவை .
வழி வழியாக நமது வழித் தோன்றல்கள் அனைவரும் உடல் குறைப்பட்டுடன் கூடிய பாதிப்பிற்கு உள்ளாவார்கள் .
அணு உலை எந்த வித சிக்கலும் இல்லாமல் இயங்கினாலே இப்படி !
வெடித்து விட்டாலோ, அல்லது கசிவு ஏற்பட்டு விட்டாலோ, உடனடியாக சுற்றியுள்ள பல லட்ச மக்கள் மூன்று நிமிடங்களுக்குள் மரணமடைவர். மற்றவர்கள் கண், காது, தொடை மண்டலம், நரம்பு மண்டலம் பாதிப்புக்கு உள்ளாகி உடல் ஊனமடைவர். மீள முடியாத அளவுக்கு நடை பிணமாவர். திருமணம் முடிக்க தகுதி அற்றவராவர். சுற்றி வெளி அடித்து அங்கேயே இருத்தப்படுவர். மற்ற மனித சமுதாயத்திடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவர். உலக நாடுகள் பாவப்படுத்தபட்ட சமுதாயமாகப் பார்த்து, அவ்வப்போது வந்து பிச்சை இடுவர். இது தான் இன்று ஜப்பானில் நடப்பது.
நமக்கும் தேவையா இது? மின்சாரம் தேவைதான். மின்சாரம் தயாரிக்க ஆயிரம் வழியிருக்கிறது. அதை விடுத்து அணுஉலை மூலம் தான் மின்சாரம் தேவை என்பது .... சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால், தாயைக் கூட்டிக் கொடுத்து, மனைவியை கூட்டிக் கொடுத்து, பெற்ற மகளைக் கூட்டிக் கொடுத்து சம்பாதிப்பது போன்றது .
எந்த ஒரு விஷ்யத்துக்காகவும் இதுவரை ஒன்று கூடி கூட்டம் போடாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அணுவுலையை ஆதரிக்க ஒன்று கூடுகிறார்கள் என்றால், இவர்களுக்கு இன்றைய அரசியல் சம்பாத்தியம் இதில் தான். இவர்கள் மக்களிடம் தோற்றுப் போனார்கள். பதவிகள் போய் விட்டன. சம்பாதனை எப்படி... வரும்படி போய் விட்டதே ... ஆகவே இப்போது அணுவுலையை ஆதரிப்பதன் மூலம் பணம் பண்ணுகிறார்கள்.
பாதுகாப்பான அணுவுலை என்கிறார்கள். இதுவரை தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கடலில் கொல்லப்பட்ட போது என செய்தார்கள். ? இன்று வரை அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதை போய் டெல்லியில் தட்டிக் கேட்க வக்கு இல்லை இவர்களுக்கு .. டெல்லி சொல்வதை மட்டும் இங்கே வந்து சொல்கிறார்கள். டெல்லி அணுவுலையை ஆதரிக்க சொல்கிறது. அதை இங்கே செய்கிறார்கள்.
மத்திய மின்சாரத் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு காங்கிரஸ் அரசு மின்சாரம் இதுவரை வழங்கவில்லை. அதை வழங்கினாலே பெருமளவு பிரச்சினை சரியாகும். தானே' புயல் வந்து இரண்டாம் மாதமாகிறது. இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. அங்கே மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவியாய் தவிக்கிறார்கள். இவற்றையெல்லாம் எடுத்து செய்யாத மத்திய அரசு அணுவுலை விஷயத்தில் மட்டும் விடாப்பிடியாக இருப்பதன் காரணம் என்ன?
இந்தியாவில் இத்தனை அனுவுலைகளை நிறுவுவது என்று பன்னாட்டு முதலைகளுடன் ஒப்பந்தம் போட்டு காசு வாங்கி விட்டார்கள். அதை எப்படியாவது நிறைவேற்ற வில்லையென்றால் அந்த முதலாளி கொடுத்தப் பணத்தை திரும்பக் கேட்பான். எனவே கமிஷன் காங்கிரஸ் அரசு இத்தனை துடிதுடிக்கிறது. இதில் மக்கள் நலன் எங்கே வந்தது.?
இன்று மின்சாரம் வந்து விட்டால் வியாபாரங்கள் நடக்கும், காசு வரும், வசதி வரும், வீடு வரும், மாடு வரும். ஆனால் தீராத நோய் வந்து விட்டால் ஈட்டிய காசையெல்லாம் கொட்டிக் கொடுத்ததும் தீராத நோயும், சந்ததி தாண்டி செல்லும் அணுகதி வியாதிகளும் வந்து விட்டால் என்ன செய்வீர்?
சிந்திக்க வேண்டும்.... இந்த இடத்தில் ...
கூடங்குளம் அணுமின் நிலையம் விஷயத்தில் இளங்கோவன்
ஈரோடு: ""ஹிலாரியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து, ரஷ்யாவிடம் கமிஷன் எதிர்பார்ப்பதால் தான், கூடங்குளம் அணுமின் நிலையம் விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அமைதி காக்கிறார்,'' என, இளங்கோவன் பேசினார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு, சம்பத் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:
மின்வெட்டு என்பது, 1967க்கு பின்தான் நடக்கிறது. ஊர...ெல்லாம் குடும்பம் வைத்திருப்பவருக்கு ஆட்சியைக் கொடுத்தோம். அப்போது, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. குடும்பமே இல்லாதவருக்கு ஆதரவளித்தோம். எட்டு மணி நேரம், 10 மணி நேரம் மின்தடையாகிவிட்டது. அவர்களுக்கும், இவர்களுக்கும் மாறி மாறி ஜால்ரா தட்டியதால் தான் நமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நமக்கு, அவர்கள் ஜால்ரா தட்டும் காலம் விரைவில் ஏற்படும்.சென்னையில் போயஸ் கார்டன் தவிர மற்ற இடங்களிலெல்லாம் மின்தடை ஏற்படுகிறது. படிக்கவே மின்சாரமில்லை; தேர்வு எழுத எதற்கு ஜெனரேட்டர்? மிக்ஸியும், கிரைண்டரும் கொடுத்து என்ன பயன்?
ஈரோட்டில் மட்டும், 18 ஆயிரம் தொழில் நிறுவனங்கள், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் மின்தடையால் பாதித்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரையும் கணக்கிட்டால், ஆறு லட்சம் பேர் பாதிக்கின்றனர். தமிழகம் முழுமைக்கும் எடுத்தால், பல கோடி பேர் வாழ்க்கையை இழந்துள்ளனர்.தேர்தலின்போது, "மூன்று மாதத்தில் மின்தடையில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்' என்றார் ஜெயலலிதா. முதல்வராக பதவியேற்றதும், மத்திய அரசிடம், "கூடங்குளம் அணு மின் நிலையத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.
அதற்குள், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், முதல்வரை சந்தித்து பேசியதும், கூடங்குளத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஹிலாரியுடன் ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தை அவர் வெளியிட வேண்டும். உதயகுமார் மீது, 152 வழக்குகள் இருந்தும், அவரை கைது செய்யவில்லை. கூடங்குளத்தை திறக்க கோரி போராட்டம் நடத்திய யுவராஜாவை கைது செய்கின்றனர்.
கூடங்குளம் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கிய ரஷ்யா, 10 சதவீத கமிஷனை வழங்கியிருந்தால், முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார். நான் பேசிய இவ்விரு கருத்துக்காக அரசு என்மீது வழக்குத்தொடுத்தால், அதை சந்திக்கத் தயார்.கல்பாக்கத்தில் பல ஆண்டாக செயல்படும் அணுமின் நிலையத்தை, சுனாமி, புயல் என பலவும் தாக்கி உள்ளது. எந்த சேதமும் அடையவில்லை. அது இரண்டு மடங்கு பாதுகாப்பானது என்றால், கூடங்குளம் ஏழு மடங்கு பாதுகாப்பு கொண்டது. அதை உணர்ந்து, உடன் செயல்படுத்தினால், நமக்கு பற்றாக்குறையான, 2,500 மெகாவாட் மின்சாரத்தை அங்கிருந்து பெறலாம். மின்வெட்டில்லா மாநிலத்தை உருவாக்கலாம்.இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.
அப்படியானால் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் மன்மோகன் அரசு காசு வாங்கிக் கொண்டு தான் கூடங்குளத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் அனுவுலைகளை நிறுவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒப்புக் கொள்கிறாரா?

உதயகுமார் தனது குடும்பத்தின் சொத்து விவரங்களை புதன்கிழமை வெளியிட்டார்.
திருநெல்வேலி, மார்ச் 7:
கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் தனது குடும்பத்தின் சொத்து விவரங்களை புதன்கிழமை வெளியிட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒருங்கிணைப்பாளராக எஸ்.பி. உதயகுமார் செயல்படுகிறார்.
போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பல்வேறு தொண்டு நிறுவனங்களில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சோதனை நடத்தினர். சில தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுகளைப் போராட்டக் குழுவினர் மறுத்து வருகின்றனர். எந்த வெளிநாட்டில் இருந்தும் நிதியுதவி வரவில்லை. மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், மக்கள் அளிக்கும் நன்கொடை மூலம்தான் போராட்டம் நடைபெறுவதாக போராட்டக் குழ...ுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.பி. உதயகுமார் தனது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை புதன்கிழமை வெளியிட்டார். விவரம்:
வருமானம்: விவசாய நிலம் மூலம் கிடைத்த வருமானம், உதயகுமார், அவரது மனைவி மீரா ஆகியோர் கருத்தரங்குகளில் பேசியது, ஆசிரியர் பணியாற்றியது, ஆராய்ச்சி மற்றும் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியது ஆகியவை மூலம் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே தந்தை வழியில் வந்த 5 சென்ட் நிலம். தாய் வழியில் வந்த 7.5 சென்ட், திருப்பதிசாரத்தில் உள்ள 14 சென்ட் நன்செய் நிலம்.
விலைக்கு வாங்கிய நிலங்கள்:
26.3.94: 10 சென்ட் நிலம்-நாகர்கோவில் அருகேயுள்ள கிராமத்தில்.
21.12.94 முதல் 30.3.2000 வரை: 3.76 ஏக்கர், நீண்டகரை கிராமத்தில்.
1.7.98 முதல் 23.3.99 வரை: 8.435 ஏக்கர் நிலம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில்.
9.9.05: 7.5 சென்ட் நிலம், வீடு, நாகர்கோவிலில்.
2.5.08: 91 சென்ட் நிலம், அழகியபாண்டியபுரத்தில்.
நாகர்கோவிலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதயகுமார் பெயரில் ரூ. 4953.84, இடலாக்குடியில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 1703.05.
நாகர்கோவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அவரது மனைவி மீரா பெயரில் ரூ. 1380.72, இடலாக்குடி தனியார் வங்கியில் ரூ. 309.
கோட்டாரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 2,331 பணம் கையிருப்பில் உள்ளது.
உதயகுமாரின் சாக்கர் அறக்கட்டளை பெயரில் கோட்டாறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் ரூ. 5716.07, சாக்கர் மெட்ரிக் பள்ளி பெயரில் மீனாட்சிபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் ரூ. 12,632.
உதயகுமாரின் தந்தை பெயரில் ரூ. 714.19, தாய் பெயரில் ரூ. 35,566.26 பணம் வங்கிக் கணக்கில் கையிருப்பில் உள்ளது.
கடன்கள்: உதயகுமார்,அவரது மனைவி பெயரில் வங்கிகளில் ரூ. 5.97 லட்சம் நகைக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், வங்கி டெபாசிட்டில் ரூ. 50 ஆயிரம் கடன் பெறப்பட்டுள்ளது.
கூடங்குளம் போராட்டத்துக்காக பெறப்படும் நிதி-செலவுகள் குறித்த விவரங்களை இடிந்தகரையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு கவனிக்கிறது.
எனவே, நான் எந்த நிதியையும் பெறவும் இல்லை, அதைக் கையாளவும் இல்லை. அதை நிரூபிக்கவே சொத்து விவரங்களை வெளியிடுகிறேன் என்றார் அவர்.
" அணு உலைக்காதலன் நாராயனசாமியே இதேபோல் உனது சொத்து கணக்கை வெளியிட வேண்டும் .
விவரத்தை அறிவிப்பார்களா?"

அணுஉலைகளின் தோற்றம் என்பதே அழிவுக்கானதுதான்
யாரைக் கொல்ல.....?
அண்மையில் ஜப்பானில் புகுஷிமாவில் நிகழ்ந்த அணுவிபத்து, ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்து உலகெங்கும் அணுஉலைகளை மூடுவது குறித்த அறிவிப்புகள் மற்றும் விவாதங்களை

அணுஉலைகள் மேற்கத்திய எல்லையை கடந்து இந்திய எல்லையை தொட்டவுடன், எப்படி புதிய பாதுகாப்பு பரிமாணம் பெற்றுவிடுகிறது என்பது தான் புரியாத புதிராகவுள்ளது. அந்தப் புதிரின் விடைதெரிந்த கூடங்குளம் மக்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அணுஉலைகளின் தோற்றம் என்பதே அழிவுக்கானதுதான்
இப்போது அணுஉலை விபத்தால் பாதிப்புக்குள்ளான ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் ஹிரோசிமா,நாகசாகியில் அமெரிக்கா போட்ட அணு குண்டுகளால் அழிக்கப்பட்ட நாடு. இந்த படுகொலைகளின் பின்னர்தான் அணுதொழில் நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதை உலகம் அறிந்துகொண்டது. இதன் பின்னர்தான் அணுசக்தியை ஆக்க பணிகளுக்கு பயன்படுத்துவது என்ற முகாந்திரத்தில் அணுகுண்டு செய்வதற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்துகொண்டு, கொசுறுவாக மின்சாரம் தயாரிப்பதாக மக்களிடையே கூறிவருகின்றனர்.
இதுவரையிலும் வெடிகுண்டுகளைத் தயாரித்து வந்த மாண்சான்டோ என்கிற நிறுவனம், இரண்டாம் உலக போருக்கு பின்னார், விலை போகாத தனது சரக்கை விவசாய இடுபொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறது. மனிதன் வேதனையில் வெளியிடும் கண்ணீர் முதல் குழந்தைகள் குடிக்கும் தாய்பால் வரை அனைத்தையும் விற்று காசாக்கும் முதலாளித்துவத்தில் அணுப் பொருள் தேக்கத்தை மட்டும் அனுமதிப்பார்களா என்ன?
உலக மேலாதிக்க போட்டியில் அன்றைய மேல்நிலை வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தன்னுடைய அணு தொழிட்நுட்பத்தை இந்தியாவுக்கு தந்து சில அணுஉலைகள் கட்ட ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தம் போட்டதற்கு பின்னர்தான் செர்னோபில் அணுஉலை விபத்து ஏற்பட்டது. இந்த அணுஉலை விபத்தால் ரஷ்யா மட்டுமல்ல அண்டை நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த பாதிப்புகளின் விளைவுகள் தலைமுறைத் தலைமுறையாக தொடரப்போகிறது.அதே ரஷ்ய தொழிட்நுட்பத்தில் கட்டிவரும் கூடங்குளம் அணுஉலை மட்டும் மிகவும் பாதுகாப்பானது என்று இந்திய ஆட்சியாளர்கள் எப்படி சாதிக்கிறார்கள்.?
உலக மேலாதிக்க போட்டியில் இருந்து தற்காலிகமாக ரஷ்யா என்கிற வல்லரசு விலகி விட , உலகின் தற்போதைய ஒரே தாதாவான அமெரிக்கா இந்தியாவை தனது நம்பகமான அடிமையாக தேர்வு செய்துள்ளது. உலகில் எங்கும் விலை போகாத தனது அணுஉலைகளை விசுவாசமான இந்திய அடிமையின் தலையில் கட்டி, இந்த அணுஉலைகளால் உருவாகும் அணுகுண்டுகள் மூலம் மற்ற ஆசிய நாடுகளை மிரட்டி, ஆசிய சந்தையை தனது அடிமையின் மூலம் கட்டுப்படுத்த 123 ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளது.
எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூசும் முதல் ஆளாக, தானே இருக்க வேண்டும் என்று ஒபாமாவை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற மன்மோகன், போபாலில் உங்களின் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் உயிரிழந்தவர்களுக்கு சில ஆயிரமே தந்ததைப் போன்று, இந்த அணு உலையால் அணுவிபத்து ஏற்பட்டு, எத்தனை ஆயிரம் உயிர்கள் போனாலும், சில ஆயிரம் ரூபாய்களை தந்துவிடலாம் என, அணுவிபத்து காப்பீட்டு மசோதா நிறைவேற்ற முற்பட்டு விசுவாசமாக வாலாட்டியது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறியீட்டு எண் 10 சதம் எட்டினால், நாட்டில் பாலாறும்,தேனாறும் ஓடும் என்று ஆரவாரமாக அறிவித்து, அதற்கு தடையாய் மின்சாரம் இருக்கக் கூடாது என அணுமின் மற்றும் அனல் மின்நிலையங்களை கட்ட முனைகிறார்கள். ஆனால் நாட்டில் நாள் ஒன்றுக்கு மக்கள் வெறுமனே 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் வெளியிடும் இதே அரசு தான், முன்னேற்றம் என்பதை முதலாளிகளின் முன்னேற்றம் என்பதை சொல்லாமல் விட்டு விடுகிறார்கள். இதை தமது வாழ்நிலையில் உணர்ந்த மக்கள், விலைவாசி உயர்வால் தினம் தினம் சாகும் தங்களை தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடிதொழிலையும் அணுகழிவுகளை கடலில் கலக்கவிட்டு, பாழ்படுத்தி அணுக்கதிர் வீச்சால் நோயாளிகளாகவும்,அணு உலை விபத்தால் தங்களை முழு பிணமாகவும் ஆக்க நினைக்கும் அரசின் சதிக்கு எதிராகத்தான் கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

போராட்ட குழு நண்பர்கள் அணு உலையின் தீமைகளை மக்களிடம் எடுத்து சொல்லி,ஆதரவு திரட்டி,கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடக்கோரும் கோரிக்கையினை முன்வைத்து போராடி இருக்கிறார்கள். ஆனால் இது மட்டுமே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வாய்பில்லை என்பதை மேதா பட்கர்,ஐரோம் சர்மிளா போன்றவர்களின் போராட்டங்களின் மூலம் படிப்பினையை பெற்று, இந்த அணுஉலை அமைப்பதன் நோக்கத்தை மக்களிடம் விளக்கி, ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு கொள்ளி வைக்கும் விதமாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களை நோக்கியும், பன்னாநாட்டு நிறுவனங்களை நோக்கியும் அணிவகுக்க செய்வதன் மூலம், இந்த போராட்டத்தினை இறுதி வெற்றியை நோக்கி முன்னேற செய்ய முடியும்.
இந்த அணுஉலைகளினால் உருவாகும் அணுகுண்டு இந்தியா எனும் அடியாளின் பலத்தை உயர்த்தி, ஆசிய நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை விரிவுப் படுத்தத்தான் என்ற உண்மையை படித்த சில அறிஞர் பெருமக்கள் வேண்டுமானால் மறுக்கலாம், ஆனால் அனுதினமும் மின்வெட்டு தினசரி உணவுக்காக அல்லல்படும் உழைக்கும் மக்கள் இதை மறுக்க மாட்டார்கள். இதை புரட்சிகர ஜனநாயக சக்திகள் புரிந்து கொண்டு, இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம்,பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களின் கொள்ளையால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் பசி பட்டினிக்கு காரணமான கார்ப்பரேட் முதலாளித்துவத்தை விரட்டியடித்து, நமது மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க,ஒரு வாய்ப்பாகவும், அங்கு கடைசிவரை கொண்ட நோக்கத்தில் வெற்றியடைய போராடும் பண்புடைய,புரட்சிகர,ஜனநாயக் சக்திகள் இல்லாத வெற்றிடத்தையும் இட்டு நிரப்ப முடியும்!
மின்சாரம் என்றால் என்ன ?
மின்சாரம் என்றால் என்ன என்பது வேறு விஷயம்.
அந்த மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகிறது? எந்தெந்த வழிகளில் உற்பத்தியாகிறது என்பதை வைத்தே நாம் இப்போது பேசப் போகிறோம்.

இப்படியாக தான் மின்சாரம் செய்ய முடிகிறது மனிதனால்.
இதை விட்டால் வேறு வழிகள் எதுவுமே இல்லை. இந்த ஒரே வழி தான் உள்ளது.
காந்தங்களுக்கு இடையில் ஒரு காயிலை வைத்து அசைத்தாலோ, சுற்றினாலோ, அதன் இரு முனைகளில் மின்சாரம் உருவாகிறது. எவ்வளவு சிறிய காந்தமோ, எவ்வளவு சிறிய காயிலோ, எவ்வளவு பெரிய காந்தமோ, அது எவ்வளவு பெரிய காயிலோ, அதற்கேற்றவாறு குறைவாகவும், அதிகமாகவும், மின்சாரம் உருவாகிறது. இதை தவிர வேறு வழிகளில் மின்சாரம் செய்ய முடியவில்லை. அப்படியானால் அந்த நடுவில் இருக்கிற காயிலை எப்படி சுற்றுவது? யார் சுற்றுவது என்பது தான் பிரச்சினை.
அந்த காயிலை சுற்றியும் மின்சாரம் பெறலாம் அல்லது காந்த்ததையும் சுற்றி மின்சாரம் பெறலாம். சுற்றவைப்பதற்கு காற்றாலையை, நீர்நிலைகளை, கடல் அலைகளை , எரிபொருட்களை பயன்படுத்தி தீங்குகளை குறைத்து மின்சாரம் பெறலாம், இந்த அணுஉலை திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் பின்னால் நம் சந்ததிகளுக்கு இயற்கையை விட்டுசெல்வோம்.
விடாது கருப்பு போல அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை.

அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை.
கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரஷியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர்.
கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள்.
மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
விடாது கருப்பு போல நம் வாழ் நாள் மட்டும் இல்லாமல் நம் சந்ததியினரின் வாழ் நாள் முழுதும் அழிய வேணுமா?
யோசியுங்கள் தமிழர்களே
Taiwan Protest against nuclear power plant

Taiwan Protest
More than 3,000 Taiwanese people demonstrate against the ongoing construction of the fourth nuclear power plant on the island, Sunday, March 20, 2011, in Taipei, Taiwan. The rally came as Taiwanese were alarmed by neighbor Japan's scramble for control over an ongoing nuclear reactor crisis triggered by a 9.0-magnitude earthquake more than a week ago. Despite the crisis, Taiwanese President Ma Ying-jeou has said the construction of the new nuclear power plant will continue. Taiwan is prone to earthquakes like Japan, and a 7.6-magnitude earthquake in central part of the island in 1999 killed more than 2,300 people. (AP Photo/Chiang Ying-ying) AP

மத்திய அரசு விளக்குமா ?

கூடங்குளம் போராட்டக்காரர்களின் மேல் () துரோக வழக்கு ()தேசத்துக்கு எதிரான சதி செய்தல், () அதற்காக ஒரு இடத்தில் பதுங்கி இருத்தல் என்பது மாதிரியான வழக்கு போட்டு இருக்கிறார்கள். சாத்வீகமான போராட்டத்தை நடத்திய சாதாரண மக்களின் மீது இம்மாதிரியான வழக்குகளையும் போட முடியும் என்கிஓர இம்மாதிரியான நிலைமை நாளைக்கு எந்த மக்களும் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவே முடியாது என்கிற சர்வாதிகாரத் தனத்துக்கு நாட்டை இட்டு செல்லும்.
ஒரு மின்சார உற்பத்தி நிலையத்தை எதிர்த்ததற்கு இப்படியான வழக்கா ? இப்போது புதிதாக சொல்லுகிறார்கள் , இந்த போராட்டம் தேச பாதுகாப்புக்கு எதிரானது என்று? அப்படியானால் கூடங்குளத்தில் இவர்கள் தயாரிக்கப் போவது மின்சாரமா இல்லை அணுகுண்டா ? மத்திய அரசு விளக்குமா ?
Infant Heartly
மிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் பெரும்பாலானவை பணம் கொடுத்து, பல்வேறு தகாத காரியங்களைச் செய்வதால் வெற்றி பெறுவதாக அறிவிக்கப் படுகின்றன.
அவ்வாறு நடைபெறாத போராட்டமாக இருந்தாலும், இரண்டு மணி நேரமோ, அல்லது மூன்று மணி நேரமோ, போராட்டத்தை நடத்தி அதை முடித்து விட்டு அறிக்கை விடும் போராட்டங்களையே தமிழக அரசியல் கட்சிகள் நடத்தி வந்துள்ளன.
இடதுசாரிக் கட்சிகள் கூட, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவதற்கு தயாராக இல்லை. ஒரு மணி நேர ஆர்ப்பாட்டமோ, அல்லது, இரண்டு மணி நேர தர்ணாவோ நடத்தினால், போதும் என்ற மனநிலைக்கு அக்கட்சிகளின் தொண்டர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.
இந்நிலையில், ஏழு மாதங்களாக தொடர்ந்து ஒரு போராட்டத்தை நடத்தி, அந்தப் போராட்டத்தை காவல்துறையின் உதவியோடு முறியடிக்க அரசு திட்டமிட்ட நிலையில், அதைக் கண்டு அஞ்சாது, தொடர்ந்து போராட்டம் நடத்தி, இறுமாப்போடு திரிந்து தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வைத்து, இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்று, இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும், அன்புத் தோழர் உதயக்குமார் மற்றும், அவரோடு இருக்கும் அத்துணை தோழர்களுக்கும் சவுக்கின் வாழ்த்துக்கள்.

பசுமை நடை-அ . முத்துக்கிருஷ்ணன்
Muthu Krishnan (Albums):

June 26, 2011:
Today our Green Walk's third edition to Aritaapati was a very green experience, Thru one of the finest landscapes of Madurai around 80 people made the event a great success. The villagers gave us an enthusiastic suppourt to conduct this walk. We also had a good amount of treking thru the rocks. Chidlren and Women also participated in good numbers. Archeologits Santhalingam and Professor Dharmarajan provided very worthy insights. We all visited the mining activity site where they had broken down the walls of a small dam and also some temples were razed down by the Minig Mafia. We have assured of full support in making an affidavit which vud incorporate the history of this place.
கல்வெட்டுகள் மீது கரியால பல கிறுக்கள்......... பிராமி கல்வெட்டுகள் குறித்து இப்பொழுது தான் அந்த கிராமத்தினருக்கு ஒரு சிறிய புரிதலே ஏற்பட்டுள்ளது
ஒரு சமண படுகை அப்படியே மாட்டு கொட்டமாக மாற்றப்பட்டுள்ளது..
முத்துக்கிருஷ்ணன்.திரு.சாந
Subscribe to:
Posts (Atom)