Like me

Sunday, February 19, 2012

கரிகால் சோழன்

                                                             
                                                               கரிகால் சோழன்
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட...ன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்

          புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.




வெண்ணிப்போர்
இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதித் தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

                இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

           கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

 
புராணக்கதைகள்

                      பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.
                                                          
சமயம் இறப்பு

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.

தமிழர் வீரத்திற்கு சான்று பரணி


 
 
 
                                                 தமிழர் வீரத்திற்கு சான்று பரணி

                                மாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்பாடும் ஒரு பாடல் வடிவமே பரணி என தமிழ் இலக்கியத்தால் சிறப்பிக்கப்படுகின்றது.அந்தக் மாபெரும் யுத்தத்தில் பல சேனைகளை அழித்து, எதிரிகளின் பிணக்குவியல்களின் மீது, அவர்களின் பெரும்படையான யானைப்படையில் ஓராயிரம் யானைகளை கொன்ற தலைவன்மீதே இந்த பரணி பாடப்படுவதாக பல இலக்கியங்கள் வகை செய்துள்ளன.

             குறிப்பிட்ட ஒரு யுத்தம் முடிந்ததன் பின்னர், அடுத்துவரும் பரணி நட்சித்திரத்தில் யுத்தம் இடம்பெற்ற இடத்தில் கூடும் பேய்களும், இராட்சத ஜந்துக்களும், போரில் இறந்துபோன உடல்கள், இரத்தங்கள் என்பவற்றை அளவில் பெரிய ஒரு பானையில் இட்டு, இரத்தத்தை தண்ணீராய் விட்டு, போர்த் தெய்வமான காளிக்கு இவற்றையே கூழாக காய்ச்சிப்படைத்து, வெற்றிபெற்ற தலைவன், மன்னன், ஆகியோரின் வீரப்பிரதாபங்களை சொல்லி தாமும் உண்டு மகிழ்வதாகவே இந்த பரணி உள்ளது.

                      இந்தப்பரணி என்பது தமிழில் உள்ள தொன்னூற்று ஆறு பிரபந்த வகைகளில் ஒன்றாகும். பொதுவாக பரணிப்பாடல்கள்
 
                   கடவுள்வாழ்த்து
                   கடை திறப்பு
                   காடு பாடியது
                  கோயில் பாடியது
                  தேவியைப் பாடியது
                  பேய்ப்பாடியது
                  இந்திரசாலம்
                  இராச பாரம்பரியம்
                  பேய் முறைப்பாடு
                  அவதாரம்
                  காளிக்குக் கூளி கூறியது
                  போர் பாடியது
                  களம் பாடியது
                  கூழ் அடுதல்

                                 - ஆகிய பகுதிகளைக்கொண்டிருக்கும். பெரும்பாலும் போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.

செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது கலிங்கத்துப்பரணி. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே இந்த பரணியின் பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று.

          தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. கடவுள் வாழ்த்தில் உமபதி துதி என்று ஆரம்பிக்கும் இந்த

1.புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்தொழில்காட்டப் புவன வாழ்க்கைச்செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளைப்புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்.
ஏனத் தொடங்கும் பரணி கூழ் அவிழ்தல் எனும் பகுதியில் உள்ள பேய்கள் கழிப்பு மிகுதியால் கூத்தாடல், என்ற பகுதியில் வரும்,
வேத நன்னெறி பரக்க வேஅ பயன் வென்ற வெங்கலிக ரக்கவேபூத லம்புகழ்ப ரக்க வேபுவி நிலைக்க வேபுயல்சு ரக்கவே.
எனும் படாலுடன் முற்றுப்பெறுகின்றது.

      அதேபோல தமிழில் உள்ள பரணிப்பாடல்களில் மற்றும் ஒரு பரணியாக அமைந்தது தக்கயாகப்பரணி ஆகும். தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்நூல் தமிழ் நாட்டில் சோழர் ஆட்சி நிலவிய 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நூலின் வழியாக அக்காலச் சைவம் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது. சிவபெருமானுக்காகப் பாடப்பட்ட இந்நூலில், பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது.


                                   சரி…தமிழ் புலவர்கள், மறத்தமிழர்கள் பலர், மதங்கொண்ட யானையினை அடக்குவதும், அதை வதம் செய்வதும் பெரும் வீரத்தின் எடுத்துக்காட்டாகவே கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் யானையினை அடக்கிய வீரர்கள், விராங்கனைகள் பற்றியும், அதன் உச்சமாக பேரில் ஆயிரம் யானைகளை கொன்றவன் என்ற சிறப்புடன் பரணியும் உருவாகியது எனலாம்.

தமிழ் இலங்கியம் யானையை அடக்கிய அரியாத்தையினை கண்டுள்ளது, அயிரம் யானைகளைக்கொன்றவன்மேல் பாடப்படும் பரணியினை கண்டுள்ளது, தமிழனின் குணமே காதலும், விரமும் கலந்த வாழ்வுக்குணமே என சங்கத்துப்புலவர்கள் அடிததுக்கூறியுள்ளனர்.
இந்த வகையில் கீழ்வரும் பாடல்களை கவனித்துப்பாருங்கள்.

"ஈன்று புறந்தருதல் தாயின் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!"
            இந்தப் பாடலில் தாய் பெற்றெடுக்கிறாள். தந்தை அவனை சான்றோன் ஆக்குகிறான். சான்றோன் ஆன அம்மகனுக்கு... என்ன கடன் என்று பொன்முடியார் உரைத்திருக்கிறார்? அறிஞர்கள் அவையில் அறிஞன் என்று பெயர் வாங்க வேண்டும் என்றா? இல்லையே... அந்தத் தாய் பெற்ற பிள்ளையைத்தான் காளை என்று குறிப்பிடுகிறார். அந்தக் காளையின் கடமை ஒளிர்கின்ற வாளைப் பயன்படுத்தி, அரிய போரை நடத்தி அதில் யானையை வீழ்த்தி மீண்டு வருதல் என்பதுதானே சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த புறனாநூற்றுப் பாடல்: சோழனுக்கும் நிகழ்ந்த போர் பற்றி அவைக்களத்தில் பரணர் பாடுகிறார்:

"..... யானையு மம்பொடு துலங்கி விலைக்கும் வினையின்றி படையொழிந்தனவே. விறல்புகல் மாண்ட புரவியெல்லாம் மறத்தகை மைந்தரோடு மாண்டு பட்டனவே. தேர்தர வந்த சான்றோரெல்லாம் தோள் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே."பொருள்: யனைகள் அம்புகளினால் வீழ்த்தப்பட்டு மாண்டு ஒழிந்தன. குதிரைப் படை குதிரைகளெல்லாம் அதில் இருந்த வீரருடன் மாண்டன. தேரில் வந்து போரிட்ட சான்றோர்கள் மொத்தமாக மாய்ந்தனர் என்பதாகும்.


ஆண்டாள் அருளிய “நாச்சியார் திருமொழியில்” இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். திருமால் தன்னை திருமணம் செய்வது போல் தான் கண்ட கனவை கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்துநாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”திருமால் ஆயிரம் யானைகள் புடைசூழ வருகிறார், அக்காட்சியைக் கண்ட மக்கள் யாவரும் பொன்குடங்களை வைத்து, தம் சுற்றுப்புறங்களில் தோரணங்கள் கட்டி வரவேற்பதை தன் கனவில் கண்டதாக தோழியிடம் கூறுவதாகக் கூறப்படுகிறது.
ஆக…பரணியில் மட்டும் இன்றி தமிழ் இலங்கியங்கள் பலவற்றிலும் யானையினை அடக்கவது, யானையினை நேரில் நின்று கொல்வது, இவையே தமிழில் ஆண்மை, வீரம் என போற்றப்படுகின்றது. தமிழ் மறவன்கள் மட்டுமின்றி தமிழ் வீரம் நிறைந்த பெண்ணான அரியாத்தை எனும் வீர மறப்பெண் ஒருவருள் யானையினை அடக்கியுள்ளதாக பதிவுகள் உண்டுஆக…தமிழனின் வீரமும், ஆண்மையும் நேற்று வந்ததல்ல, அது தமிழ் எனும் மொழி தோன்றியபோதே அவனுடன் கலந்து வந்துவிட்டது. தன் பலம் அறியா அனுமன்பொல அவன் இன்று சில தேச எல்லைகளாலும், சில சதிகளாலும், தந்திரங்களாலும் கட்டுப்பட்டிருக்கின்றான். என்றோ ஒருநாள் கங்கை, யவனம், கடாரம் வென்ற சோழன் மீண்டும் வருவது உறுதி

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்

           
                       தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு.இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங...்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.


இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம்.கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள

உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SINGAM PARAI - TAMIZHAR NADU