Like me

Sunday, January 8, 2012

பிரான்ஸில் ...................

         


தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள்

                 
                  பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த தபால் முத்திரையும்,தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.


                                              
                    எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.


நன்றி் - http://tamilmakkalkural.blogspot.com

                           




சித்தர்கள்

சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்..


                                                   கொங்கணவர்           -       திருப்பதி,
                                                   போகர்                          -       பழநி, 
                                                   திருமூலர்                   - சிதம்பரம், 
                                                   பாம்பாடம் சித்தர் - விருத்தாச்சலம், 
                                                   இடைக்காட்டுச்சித்தர் - திருவண்ணாமலை,
                                                   சச்சிதானந்த சுவாமி - வள்ளிமலை, 
                                                   கோரக்கர்               -    போரூர்,
                                                    நந்தீசர்                    -   காசி, 
                                                   குதம்பை சித்தர்  - மாயவரம்
                                                   கமலமுனிவர்    - திருவாரூர், 
                                                   வான்மீகர்             - எட்டக்குடி, 
                                                   கட்டமுனிவர்    -  ஸ்ரீரங்கம், 
                                                   மச்சமுனிவர்     - அழகர்கோவில், 
                                                    ராமதேவர்          - மதுரை, 
                                                    கந்தாநத்தித்தேவர் - வைத்தீஸ்வரன் கோயில், 
                                                    தன்வந்திரி       - ராமேஸ்வரம்,
                                                    பதஞ்சலி முனிவர் - திருவனந்தபுரம்
                                                   கும்பமுனிவர் - சப்தகிரி.


கேரள அரசின் பொய் பிரச்சாரம்

முல்லைப் பெரியாறு விவகாரம்-கேரள அரசு பொய் பிரச்சாரம் அம்பலம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் பொய் பிரச்சாரம் அம்பலம் ஆகியுள்ளது.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் முல்லைப் பெரியாறு உடையும் நிலையில் இருப்பதாக மக்கள மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர். அணை உடைந்தால் 5 மாவட்டஙகளைச் சேர்ந்த 50 லட்சம் மக்கள் அரபிக்கடலில் கலந்து விடுவார்கள் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் கூறும் கருத்து பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் வருவாய்த் துறை ஆய்வு அறிக்கை முடிவு வெளியாகியுள்ளது. கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அணை உடைந்தால் அரசு சார்பில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

அதற்கு கேரள அரசு சார்பில் தாக்கல் செயயப்பட்ட பதில் மனுவில், அணை உடைந்தால் அதன கரையில் உள்ள 450 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கும். எனவே அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி விடுவோம் என கூறியிருந்தது. தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புக்காக 3 துணை தாசில்தார்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள் குழு குமுளி, பெரியாறு, மஞ்சமலை, உப்புதரை ஐயப்பன் கோவில் பகுதிகளின் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் அணை உடைந்தால் 32,503 பேர் மட்டுமே பாதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள அரசின் பொய் அம்பலமாகியுள்ளது.


ஹிந்தி ராஜ்யத்தின் பிரதமர்

DEC 05: ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், எமர்சன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று அவர்கள் 5 நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் பட்டினியால் உள்ளனர்.
                                                          

சிந்திக்கவும்: குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே மறந்தே போச்சி. ராஜபக்சே வீட்டில் வேலை செய்துகொண்டே இந்திய ராணுவவீரன் ஒருவன் இப்படி நினைத்து பார்கிறான். நமது சிங்கள அண்ணன் தம்பிகளால் தமிழக மீனவர்கள் தினம் தினம் சாகிறார்கள். ராஜபக்சே மாதிரி ஒரு பிரதமர் நமக்கு தேவை.


சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர். அதனால்தான் நாம் ராஜபக்சேவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறோம். இனி சிங்களவர்கள் நமது நாட்டின் குடிமக்கள். வருங்காலத்தில் இந்தியாவில் இருக்கும் பிரச்சனிகளை தீர்க்க ராஜபக்சேவை பிரதமர் ஆக்கிவிடலாம்.

என்மனதில் உதித்த இந்த நல்ல யோசனையை ஹிந்தி ஜனாதிபதியிடம் சொல்லி மெடல் வாங்கி கொள்ள வேண்டும். ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். தமிழர்கள் என்கிற இனத்திற்கும் நமது வடஇந்திய மற்றைய இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே இவர்களை தொடர்ந்து நமக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும். அவர்கள் தனி நாடு கேட்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை அடக்க ராஜபக்சேவை ஹிந்தி ராஜ்யத்தின் பிரதமராக்குவதை தவிர வேறு வழியில்லை நமக்கு என்று எண்ணி பெருமிதம் கொண்டான்.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.