Like me

Saturday, September 15, 2012

அணுவுலையில் உள்ள எரிகலன்கள் பல இடங்களில் வெல்டிங்............

                                    



        கவனமாக படிக்கவும். மத்திய, மாநில் அரசாங்கங்கள் கூடங்குளம் அணுவுலையில் உள்ள எரிகலன்கள் பல இடங்களில் வெல்டிங் செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளன. மக்களின் பாதுகாப்பு என்பது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசுகளின் எதேசசாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. இதை முறியடிக்காவிட்டால் நமக்கான பாதுகாப்பான இடம் சவப்பெட்டி தான் .....

" நீங்கள் கைதாகக் கூடாது, கைது ஆகவே கூடாது, உங்களை நாங்கள் பாதுகாப்போம், உங்களுக்காக எங்கள் உயிரை கொடுப்போம் "


               

உதயகுமார் என்னவோ தலைமறைவாகிவிட்ட தீவிரவாதி போல, அவரை தேடுகிறோம் என்று காவல்த்துறை மக்களை அராஜகம் செய்துக் கொண்டு இருந்த வேளையில், நேற்று மாலை கைதாகும் விருப்பமாய், இடிந்தகரை உண்ணாவிரத பந்தலுக்கு அவர் வந்தார். அவருடன் கைதாவதாக இருந்த சகாக்களும் வந்தார்கள். வந்தவர் தான் கைதாக இருப்பதாக அறிவித்ததுதான் தாமதம் ! கூடியிருந்த ஒட்டு மொத்த மக்களும் கதறி அழுது அவரது காலில் விழுந்து, ' நீங்கள் கைதாகக் கூடாத
ு, கைது ஆகவே கூடாது, உங்களை நாங்கள் பாதுகாப்போம், உங்களுக்காக எங்கள் உயிரை கொடுப்போம் " என்று சொல்லியவாறே, மேற்கொண்டு அவரை பேச விடமால் அப்படியே குண்டுக் கட்டாக தூக்கி கொண்டு சென்ற காட்சி இதுவரை தமிழகம் காணாதது. காண்பவர் கருத்தில் எல்லாம் ஒட்ட வேண்டிய ஒரு காட்சி !

ஒருதலைவன் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி இருக்க வேண்டும் ? அவன் மக்களை எவ்வாறு நேசிக்க வேண்டும் ? மக்கள் அவனை எவ்வாறு நேசிக்க வேண்டும் ? இதற்கெல்லாம் ஒரு உதாரண காட்சியாய் விளங்கிய அக்காட்சி... எவனவன் எல்லாம் தன்னை தலைவன் என்று இதுகாறும் சொல்லிக் கொண்டு திரிகிறானோ, அவனெல்லாம் நாணப்பட்டு நான்று கொண்டு சாக வேண்டிய காட்சி !

ஒரு தலைவன் என்று தன்னை வரித்துக் கொள்கிறவன் 14 வயதில் கொடி பிடித்து தெருவில் இறங்கி கோஷம் போட வேண்டிய அவசியமில்லை. 56 ' லே போட்ட தீர்மானத்தை திரும்பவும் 2012 லே போட வேண்டிய அவசியமில்லை ஒரு தலைவன் என்று சொல்லிக் கொள்கிறவன் சினிமாவில் நடித்து வேற வசனம் பேசி, துப்பாக்கி குண்டுகள் தீர கண்டவனையும் சுட்டுத் தள்ள வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு சினிமாவிலும் கதாநாயகியாக நடித்து சிற்றாடை கட்டி குலுக்கு நடனம் ஆட வேண்டிய அவசியமில்லை.

ஒரு தலைவன் என்பவன் எளியவனாய், இதயசுத்தி உடையவனாய், ஒரு இரண்டு வருட காலம் மக்கள் மத்தியில் புழங்கி அவர்களின் இன்பதுன்பத்தில் பங்கு எடுத்தாலே போதும். மக்களுக்கான பிரச்சினையை மக்களை கொண்டே நடத்த தெரிந்தால் போதும். சிக்கன் பிரியாணியும், குவார்டடரும் தேடி தர வேண்டியதில்லை. வெறும்வயிறு காய, ஒரு பந்தலிற் கீழ் அவர்களை அமர்த்தி அவர்களுக்கு அறிவு நிறைத்தால் போதும். ஒரு தலைவன் உருவாகி விடலாம். அப்படியொரு ஒரு தலைவனை தமிழகம் நேற்று கண்டது. மக்கள் தலைவனை தமிழர்கள் கண்டுக் கொண்டார்கள்.

என்ன ஒரு தலைவன் ! எங்கள் தமிழ்த்தாய் அவ்வபோது உத்தம புதல்வர்களை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறாளே, எங்கள் இதயகுமாரன் பிரபாகரனுக்கு பின்னாலேயே எங்கள் உதயகுமாரனை அடையாளம் காட்டி இருக்கிறாளே ! தமிழ் மக்களே, இவரை நம் கையில் ஏந்தி கொள்ள மாட்டோமோ ! டாடா சுமோவில் வந்து இறங்கி தள்ளுமுள்ளு செய்பவன் எல்லாம் தலைவனா ? இந்த புழுதி மண்ணில் தன கால் தோய நடந்து வரும் இவன் தலைவனா ? வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துக் கொண்டு குண்டுத் துளைக்காத மேடையில் நின்று கொண்டு சுதந்திரம் பற்றி பேசுபவன் தலைவனா ? மக்களே என் பாதுகாப்பு வாடை காற்றில் வந்து நின்று மக்களை குசலம் விசாரிப்பவன் தலைவனா ?

விசாரித்து அறியுங்கள் மக்களே, தலைவன் யார் ? தறுதலைகள் யார் ? என்று !

கடல் கப்பலையும் தாங்கும் ,அதே கடல் கப்பலையும் கவிழ்க்கும்....................



          நாள்தோறும் இயற்கையோடு வீரமாக போர் புரியும் மக்கள் , தங்கள் இயல்பு நிலையைத் தாண்டி , கடந்த ஓராண்டாக அமைதி வழியில் அறப்போர் புரிந்தனர். உண்ணாநிலை, மத்திய , மாநில அரசுடன், அமைச்சர்களுடன் , வல்லுனர்களுடன் அமைதி வழியில் , அறிவியல் முறையில், அறிவு சார்ந்த பேச்சு வார்த்தை , முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பு , மனுக்கள் அளித்தல், சட்டத்திற்கு உட்பட்டு , அரசு அனுமதியுடன் போராட்டங்கள் , குழந்தைகள் மண்டியிட்டு கெஞ்சுதல் , நீதி மன்றத்தில் வழக்காடுதல் என்று பல்வேறு அறவழி முறைகளையும் பொறுமையோடு போராட்டத் தலைமைக்கு கட்டுப்பட்டு போராடி வந்தனர். உலகத்தின் பார்வையை தங்களது அணுகுமுறைகளினால், தங்களின் அறிவியல் பூர்வமான வாதங்களால் தங்கள் பக்கம் ஈர்த்தனர். ஆனால் ,நடைமுறையிலோ , இலஞ்சம் ,கையூட்டு , சுரண்டல் , கொள்ளை போன்ற குற்றங்களுக்கு ஆளான கறைபடிந்த அரசுகள் , அரசியல்வாதிகள் , மக்களின் குரலை மதிக்கத் தவறினர். இந்த அரசியல் கட்டமைப்பில் , உழைக்கும் மக்களுக்கு இனியும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை என்று உணர்ந்த மக்கள் , கடைசியாக வீதிக்கு வந்து தங்களையே ஆயுத
மாக்கி , நிராயுதபாணிகளாக வீதிக்கு வந்து நியாயம் கேட்டு போராட துணிந்து விட்டார்கள். உலக மக்களே ! மத்திய , மாநில அரசுகளே !

           மனசாட்சியுள்ள அரசியல் வாதிகளே, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் இந்த கடைசி கட்ட, அமைதிப் போராட்டத்தில் எது நடந்தாலும் , நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் தான் பொறுப்பு ! இன்னொரு சிவகாசியின் அவல நிலைமை இனி தமிழக மக்களுக்கு வேண்டாம்! இன்னொரு பரமக்குடியும் நமக்கு வேண்டாம் ! அணுசக்தித் துறையின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் ! இப்படிப்பட்ட ஒரு துறை , இந்திய மக்களுக்கு இனியும் வேண்டாம் ! மனசாட்சியுள்ள இதயங்களை இறுதியாக தட்டுகிறோம்! எங்களின் கூக்குரல் உங்கள் காதுகளில் விழுகிறதா?


 வருமுன் காப்போம் ! அணு ஆயுதம் இல்லா தமிழகம் படைப்போம்.!
 வாருங்கள் ! எங்களோடு கைகோர்க்க !!
 
எங்கள் போராட்டத்தின் நியாயங்கள்
 உலகத்தின் காதுகளில்/செவிப்பறையில் அறையப்படட்டும் ! 


      அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டு , நோயுற்று, துன்பப்பட்டு , தினமும் நொந்து சாவதை விட , போராடிச் சாவதே மேல் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். போராடி மண்ணையும் , கடலையும் , மக்களையும் காப்போம் என்று சூளுரை செய்து விட்டனர்.அரசுகளே ! நீங்கள் செய்ய வேண்டிய பணியை மக்கள் செய்ய துணிந்து விட்டார்கள் . மக்களின் குரலை கேட்க ,கிழே இறங்கி வாருங்கள் . அப்படி கீழிறங்கி வருவதனால் , நீங்கள் தோற்றுப்போக மாட்டீர்கள் .
          கடைசியாக ......... மக்களை அச்சுறுத்த வேண்டாம் ! மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் ! மணல் மூடைகள் என்ன , இரும்புத் தடுப்புகள் என்ன ! உங்களின் கனரக வாகனங்கள் என்ன ? கண்ணீர் புகை குண்டுகள் என்ன ? தோட்டாக்கள் என்ன ? துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்ற நிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள் ! உள்ளதை உள்ளபடியே சொல்லுகிறேன் !

இனி உங்கள் முடிவில் ... உங்கள் கைகளில் .... 
உங்கள் அதிகாரத்தில் ..... நீலக்கடல் தாய் நீதி கேட்டு பொங்கப் போகிறாள் ...
கடல் கப்பலையும் தாங்கும் ,அதே கடல் கப்பலையும் கவிழ்க்கும்....................

ஐயா உதயக்குமார் அவர்கள் கரங்கள் வலுச்சேர்கப்பட வேண்டும்.

                         






”அன்பற்ற அறிவியல் பேரழிவின் ஊற்றுக்கண்”

                                                                         ----மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.


உலகில் உள்ள அனைத்து அரசுகளுமே அடக்குமுறை அரசுகளே...!

இந்தியா ஒரு மக்கள் நல அரசு (Welfare State)என்று நம் அரசியலமைச் சட்டத்தின் முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச்சொல் எத்தனை பொய்யானது என்பதை சுதந்திர இந்தியாவின் மக்களாட்சி அரசுகள் தொடர்ந்து எளியமக்கள் மீது நிகழ்த்தும் வன்முறை அடக்குமுறைகள் கண்முன்னே நிறுவிவருகின்றன.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து அறவழியில் போராடிக்கொண்டு,நேற்று காலையில் அமைதியாக கடற்கரையில் குழுமி திறந்தவெளியில் இரவுமுழுதும் அமர்ந்திருந்த இந்த எளியமக்களின் மீது அடித்து கடலுக்குள் விரட்டும் வன்முறையை ஏவும் இந்த ஆட்சியாளர்களை அந்நிய முதலாளிகளின் ரொட்டித்துண்டுகளுக்கு வாலாட்டும் நாய்கள் என்பதன்றி ; இவர்களை இந்தியப் பெருநாட்டின் பிரதமர் என்றும் தமிழக முதல்வர் என்றும் எப்படி அழைப்பது.

"அணுக்கழிவுகளை கையாளும் தொழிநுட்பமோ,எதிபாராத விபத்துகளின் அணுக்கதிர்வீச்சை மட்டுபடுத்தும் திறனோ,இயற்கையை விஞ்சும் கட்டுமானத்தை அமைக்கும் நுட்பங்களோ இன்றைய மனித அறிவிடம் இல்லாத நிலையில் இந்த பயன்பாட்டு அணுக்கரு அறிவியல் (Applied Atomic Science) ஒரு குறைத்தொழில்நுட்பம்.குறைபாடுடையவறின் பயன்பாடு என்றும் அளிப்பது பேரழிவே."

மக்களின் இந்தக் கருத்தியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனற்ற இவர்கள்,சாதி,மதம்,அப்துல்கலாம்,அடையார் புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா,வெளிநாட்டுப்பணம்,அரசாணை, நீதிமன்ற தீர்ப்பு என அனைத்திலும் மக்களிடம் அறத்தின் முன் தோற்றுப்போனதின் உச்சபட்ச வெறி இன்று மக்கள் மீது ஏவப்பட்ட இந்த வன்முறை. இந்த வன்முறை மூலம் ஜெயலலிதாவும்,மன்மோகனும் தங்களின் தோல்வியை உலகிற்று பறைசாற்றியிருக்கிறார்கள்.

மேற்குவங்கத்தின் நந்திகிராமில் டாடா கார் தொழிற்சாலைக்கு விளைநிலங்கள் பறிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் அடக்குமுறையை ஏவிய மார்க்சிய அரசு தனது 25 ஆண்டுகால ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டதை ஜெயலலிதாவும்,மன்மோகனும் நன்கு அறிந்திருபார்கள்.

ஃபுக்சிமா பேரழிவிற்குப் பிறகு கூடங்குளம் மக்களின் இந்த அணு உலைகளுக்கு எதிரான அறப்போரின் எழுச்சி இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு அரசுகளையும் பயன்பாட்டு அணுக்கரு அறிவியல் சார்ந்த தங்களின் எரிசக்திகொள்கையை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது உண்மை.

ஓர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இன்றைய வன்முறை இந்தியாவின் அனைத்து ஊடகங்களின் வழியகாவும் நேரடியாக காட்டப்பட்டதின் விளைவு,பல்வேறு தன்னார்வ மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.இன்று டெல்லியில் அணு உலைகளுக்கெதிரான மக்கள் இயக்கத்தினரும்,சென்னையிலும் கோவையிலும் சட்டக்கல்லூரி மாணவர்களும்,நந்தனம் கலைகல்லூரி மாணவர்களும் சாலைமறியலில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இந்த வன்முறை மூலம் ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பது போராடும் மக்கள் திருப்பித்தாக்கும் சமநிலைக்குழைவு.களத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் நண்பர்கள் அனைவரும் எந்தநிலையிலும் அறவழியை கைவிடாத சமநிலையை காக்க உதவிடுங்கள்.

பெரியார் முன்னெடுத்த மொழிப்போராட்டத்திற்குப் பிறகு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அரசியல் விழிப்பும் அற்று சாய்ந்து கிடந்த தமிழக குடிமைச் சமூகத்தின் (Civil Society)ஒரு பகுதியை கருத்தியல் ரீதியான அறப்போராட்டத்திற்கு கொண்டுவந்து வழிநடத்தும் அணு உலைகளுக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா உதயக்குமார் அவர்கள் பராட்டப்பட வேண்டியவர்.அவரது கரங்கள் வலுச்சேர்கப்படவேண்டும்.

நமது நாட்டின் மண்,நீர்,காற்று,உயிர்களின் தலைமுறைகள் என அனைத்தையும் காக்க போராடும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு தொடர்ந்து குரல்கொடுப்போம்.

அவர்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்.

அணு உலைத் தொழில்நுட்பத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா?

‎1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.

2. சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா?

இல்லை. சூரிய ஒளியின் ஆற்றல் மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் பலகைகள் (Panels) சிறிய அளவில் மின்சாரத்தை உருவாக்கின்றன. அதன் மூலம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும். அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.

3. கூடங்குளம் அணு உலையின் தொழில் நுட்பம் என்ன?

கூடங்குளம் அணு உலை இரசிய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது சுமார் 2000 oC வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 oC -ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது அது வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன், புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கத்திலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கான்கிரீட் சுவர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.

4. அணு உலைத் தொழிற்நுட்பத்தின் நன்மை மின்சாரம். அதனால் தீமைகள் உண்டா? அவை யாவை?

கண்டிப்பாகத் தீமைகள் உண்டு. அவை முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.
இரண்டாவது - கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே சப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்.
மூன்றாவது - விபத்துக்கள். மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது. அணு உலையின் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும். நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும்.
நான்காவது - சுற்றுப்புற சீர்கேடு. அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.
ஐந்தாவது - பாதுகாப்பு. ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது. தீவிரவாதிகளாலோ அல்லது எதிரி நாட்டினராலோ தாக்கப்படும் அபாயம் உள்ளது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அவ்வாறு தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். மேலும் பாதுகாப்புக் கருதி அப்பகுதி ராணுவமயமாக ஆக்கப்படுவதால் பொது மக்கள் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் இடர்ப்பட நேரிடும்.

5. தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க அணு மின்சாரம் அவசியம் தானே?

கண்டிப்பாக இல்லை. முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும். (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்)
பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில் 65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும். அத்துடன் மிகச் சிறு அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும். மீதி 35 விழுக்காட்டை மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.
மாநிலங்கள் தாங்கள் சொந்தமாக நடத்தும் மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைக்கு மேல் மிகுதியாக உள்ள போது அவற்றை வெளியே விற்று லாபம் ஈட்டிக் கொள்ளலாம். இவ்வாறு 1992 வரை தமிழ்நாட்டின் மிகுதி மின்சாரத்தில் வருடத்திற்கு 3,500 கோடி ரூபாய் லாபம் கிடைத்துவந்தது.
ஆனால் 1992-ல் இந்திய நடுவண் அரசு (மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், மாண்டேக் சிங் அலுவாலியா நிதித் துறைச் செயலாளராகவும் இருந்த போது) மாநில அரசின் மின் திட்டத்திற்கான அனுமதிகளை முடக்கியது. ஆனால் தனியார் மின் ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது. அந்த தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில அரசுகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி நிர்ப்பந்தித்தது. மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து கொடுக்கும் மின்சாரத்தின் அளவையும் குறைத்தது.
எடுத்துக்காட்டாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எண்ணூர் மின் உற்பத்தித் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வீடியோகானுக்குத் தாரைவார்க்கப்பட்டது. நெய்வேலியில் ST-CMS என்ற அமெரிக்க தனியார் தயாரிக்கும் மின்சாரத்தை யூனிட் ரூ.3.70-க்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அருகிலுள்ள என்.எல்.சி-யில் மின்சாரம் யூனிட் விலை 1.72 காசு. இதன் மூலம் பெரும் நட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
மேலும் தன் பங்குக்கு தமிழ்நாடு அரசும் பொது மக்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை போர்டு, குண்டாய், கணிணி (ஐடி) நிறுவனங்கள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் திருப்பிவிட்டன. பொது மக்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் முதலாளிகளுக்கு தடையற்ற மலிவான மின்சாரம் தருகின்றனா. வீடுகளுக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்தும் அரசு தனியார் (ஐடி) நிறுவனங்களுக்கு 2 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கிறது. மேலும் வீட்டிற்கு யூனிட் ரூ.3.50-க்கு விற்பனை செய்யும் மின் வாரியம் ஐ.டி நிறுவனங்களுக்கு ரூ.2.50-க்குத் தான் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தை இந்த நிறுவனங்கள் தான் உபயோகிக்கின்றன.
நெய்வேலியிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிற்குத் தரும் மின்சாரத்திலிருந்து தலா ஆயிரம் மெகாவாட்டை நமக்குத் தந்தாலே போதும். தமிழகத்தின் பற்றாக்குறை வெறும் 2,600 மெகாவாட்டுகள் மட்டுமே. மின் உற்பத்தியின் படி உபரி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மின்சாரம் இப்படி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் நாம் மின்வெட்டுப் பிரச்சினையில் மாட்டித் தவிக்கிறோம். நமக்கு அணு மின்சாரம் தேவையே இல்லை.

6. இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறீர்கள். ஆனால் எட்டு மணி நேர மின் வெட்டால் அவதிப்படுவது மக்கள் தானே. இப்போது கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரம் நமக்குக் கிடைத்தால் இந்த மின் தடைப் பிரச்சினை குறையுமே?

கூடங்குளம் அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனே 1,000 மெகாவாட் தான். இரண்டாவது அணு உலை செயல்படத் துவங்கிய பின்னரே இன்னொரு ஆயிரம் மெகாவாட் கிடைக்கும். இதுவரை இந்தியாவின் அணு உலைகள் 100 விழுக்காடு உற்பத்தித் திறனை எட்டியதில்லை. அணு உலைகளின் உற்பத்தித் திறன் 50 விழுக்காட்டுக்குக் கீழ்தான். ஒரு வேளை 1,000 மெகாவாட் உற்பத்தி ஆவதாக எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 280 மெகாவாட் மட்டுமே. இதில் மின் கடத்தல் பகிர்மானத்தில் இழப்பு (transmission) 30 விழுக்காடு போக 190 மெகாவாட்கள் மட்டுமே கிடைக்கும். அதிலும் தொழிற்சாலைகளுக்குப் போக வீட்டுக்கு வந்து சேருவது சொற்பமே. வெறும் 190 மெகாவாட்டிற்காக அணு உலை என்னும் பேராபத்தை வரவேற்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமம். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 3% மட்டுமே. கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்பது காங்கிரசின் வழக்கமான மாய்மாலம்.

7. நீங்களோ அணு உலைகள் பேராபத்து என்கிறீர்கள். ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை?

அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை. அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் விபத்து ஏற்படாது, இந்த அணு உலை பாதுகாப்பானது என்பதை வாய்மொழியாகச் சொல்கிறார்களே தவிர, அவை அறிவியல் பூர்வமாக இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.

8. உண்மையில் உறுதி செய்யப்படவில்லையா? ஆனால் மத்திய அரசின் வல்லுநர் குழு பாதுகாப்பை உறுதி செய்ததே?

பாதுகாப்பு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை. மத்திய அரசின் வல்லுநர் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் அறிக்கையின்படி, அது பாதுகாப்பானது என்ற முடிவை எடுத்ததேயொழிய, எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் மத்திய அரசுக்கும், கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கும் ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொண்டார்கள்.

9. அப்படியானால் எந்த முறைகளில் அணு உலையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்?

முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

10. இந்த மூன்றுமே கூடங்குளம் அணு உலையில் பின்பற்றப்படவில்லை என்கிறீர்களா?

ஆமாம். நிச்சயமாக.
முதலில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய புவியியல் ஆய்வுகளே அணு உலை நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் இந்த இடம் அணு உலைக்கு ஒரு சதவீதம் கூட ஏற்ற இடமல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும். மாறாக எரிமலைப் பாறைகள் மீது இந்த அணு உலையை அமைத்துவிட்டு இப்போது பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்!

11. என்ன இது? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாகக் கூறுகிறீர்கள்!

ஆமாம். அதிர்ச்சியடைய வேண்டாம். பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் தரை அப்படி இல்லை. அங்கு இருப்பவை ஒழுங்கற்ற எரிமலைப் பிதுக்கப்பாறைகள்.

12. எரிமலைப் பாறைகளா?

ஆமாம்! கூடங்குளம் அணு உலைக்கு அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த உண்மை அவர்களுக்குத் தெரிந்தது. எனவே காங்கிரீட்டைக் கொட்டி அதன் மேல் அடித்தளத்தை அமைத்தனர்.
மேலும் பூ மியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கூடங்குளம் அருகிலுள்ள பகுதிகளில் வெறும் 110 மீட்டர்கள் தான் புவியோடு தடிமன் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

13. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

பூ மியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.

14. இது தவிர வேறென்ன குறைபாடுகள் உள்ளன?

இரண்டாவதாக இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம் போன்றவை உருவாகும் வாய்ப்பு குறித்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால் கூடங்குளத்திலிருந்து வெறும் 90 கி.மி. தொலைவில் மன்னார் வளைகுடாவில் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) இருப்பதை முன்னரே கண்டுபிடித்திருக்கலாம்.
மேலும் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் வண்டல் குவியல்கள் இரண்டு பெரிய அளவில் உள்ளன. இவற்றின் பெயர் கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள். இதோடு இந்திராணி நிலப்பிளவு என்னும் நீளமான நிலப்பிளவும் கடலுக்கடியில் காணப்படுகிறது. இதன் மூலம் கடலுக்கடியில் பூகம்பமும், அதனால் பெரும் சுனாமி அலைகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளாகள் நிறுவியிருக்கிறார்கள்.
இதுபோக அவ்வப்போது கடல் அரிப்பு, கடல் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகளும் கன்னியாகுமரிக் கடலோரத்தில் நடந்துள்ளது. இவையும் அணு உலையைப் பாதிக்கும் மிக முதன்மையான காரணிகளாகும்.
ஒரு சிறு திருத்தம். திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானி அல்ல. அவர் வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி. அவருக்கு நிலவியல் (geology), கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது. மேலும் அவர் அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா. பூகம்பம் வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத் தந்திருக்கிறார்கள். வந்த பின்னர் தான் வந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.

16. அப்படியானால் அப்துல்கலாம் சமூக அக்கறையுடன் செயல்படவில்லை என்கிறீர்களா?

நிச்சயமாக. அணுகுண்டு வெடித்து அதைப் பார்த்து பரவசப்படும் ஒரு மனிதர், எவ்வளவு பெரிய அறிவாளியாக, விஞ்ஞானியாக இருந்தாலும் அவர் மக்கள் விரோதியே.
இந்தியா நல்லரசாக இருப்பதைவிட அதை வல்லரசாக ஆக்குவதற்காக கனவு கண்டவர் அப்துல்கலாம். அணு உலையைத் திறப்பதற்காக உடனடியாக ஓடோடி வந்து பார்வையிட்டு, அது பாதுகாப்பானது என்று கருத்துச் சொன்ன அவர், சொந்த ஊரான இராமேசுவரம் மீனவர்கள் காக்கை குருவியைப் போல சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா?
சிங்கள அரசின் கலை நிகழ்வுக்கு நடிகை அசின், பாடகர் மனோ முதலானவர்கள் சென்றதற்கே உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் கண்டித்தனர். இலங்கை அரசை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புறக்கணியுங்கள் என்று தமிழக முதல்வர் தீர்மானமே நிறைவேற்றியுள்ளார். ஆனால் கொழும்பில் நடைபெற்ற சிங்கள அரசு விழாவில் அப்துல்கலாம் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நடிகை அசின் செய்தால் தவறு. அப்துல்கலாம் செய்தால் சரியா?
இலங்கையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட போது மறந்தும் ஒரு வார்த்தை கண்டிக்காத அப்துல்கலாம், கொழும்பு அரசு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தது என்ன நியாயம்? இதுதான் அவரது இன உணர்வு, மனித நேயம். அவர் உண்மை பேசுவார் என்று இனிமேலும் எப்படி நம்புவது?

17. சரி! புவியியல் ரீதியாக கூடங்குளம் இடம் தவறான தேர்வு என்கிறீர்கள். ஆனாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

முதலில் இந்த அணு உலை ஆந்திராவில் நாகார்சுனசாகரில் தான் அமைவதாக இருந்தது. ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் கர்நாடகாவில் கைக்கா என்ற இடத்தை முடிவு செய்தனர் . இதற்கு கர்நாடக அரசும் ஒப்புக்கொள்ளவில்லை. பின் கேரளாவில் பூதகான்கெட்டு என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கடைசியில் தமிழ்நாட்டுக்குத் தள்ளிவிடப்பட்டது.

18. ஆக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்கிறீர்களா?

ஆமாம். தமிழர்கள்தானே எந்த பாதிப்பு வந்தாலும் பொறுமையாக இருக்கும் இளித்தவாயர்கள்.
ஆனால் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் சமபங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும். தமிழகத்திற்கு பாலாறை, காவிரியை, முல்லைபெரியாறு நீரைக் கொடுக்க மறுக்கும் அந்த மாநிலங்களுக்கும் இங்கிருந்து மின்சாரம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இதைவிடப் பெரிய கொடுமை. இலங்கையின் கொழும்பு நகரத்திற்கு மின்சாரம் கொடுப்பதற்காக கடலுக்கடியில் மின் கேபிள்கள் போடப்பட்டு தயாராக உள்ளன. சிங்கள சகோதரர்களுக்கு எத்தனை மெகாவாட் கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

19. சரி! இந்த அணு உலைத் தொழில்நுட்பத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா?

நிறைய உள்ளன. இந்த வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசியாவின் தொழில்நுட்பம் நிறைய குறைபாடுகளைக் கொண்டது. இதை நாம் சொல்லவில்லை. சப்பானில் புகுசிமா அணு உலை வெடித்தற்குப் பின் இரசிய அதிபர் தம் நாட்டு விஞ்ஞானிகளிடம் இரசிய அணு உலைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்த ஆணையிட்டார். அதன்படி ஆய்வு செய்த இரசிய விஞ்ஞானிகள் இந்த வி.வி.இ.ஆர் 1000 அணு உலைத் தொழிற்நுட்பம் குறித்த 31 குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தமட்டில் குளிர்விக்கும் தொழிற்நுட்பம் மிகவும் பலவீனமாக உள்ளது. கடல் நீரை உப்பகற்றி நன்னீராக்கி குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு உப்பகற்றும் இயந்திரங்கள் இசுரேல் நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலம் தருவிக்கப்பட்டவை. இதைத் தவிர வேறு எந்த நீராதாரமும் இல்லை.
1989ம் ஆண்டு இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு எந்தக் காரணங்களைக் கொண்டும் அணு உலைகளைக் குளிர்விக்க ஒரே ஒரு நீராதாரத்தை மட்டும் நம்பியிருக்கக்கூடாதென்று வலியுறுத்திய போதும், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை.
ஒரு வேளை உப்பகற்றும் தொழிற்நுட்பத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் இசுரேல் நாட்டிலிருந்து தான் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவேண்டும். அணுஉலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீர் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இந்த நீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்கவேண்டும் என இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்திய போதும் கூட அங்கு வெறும் 1.2 கோடி லிட்டர் நீர் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது அணு உலை நிர்வாகத்தின் அசிரத்தையைக் காட்டுகிறது.
சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வரும் காலங்களில் கூட உலையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அப்துல்கலாம் போன்றவர்கள் திரும்பத்திரும்பச் சொன்னாலும் கூட ஒரு உண்மையை அவர்கள் தாங்களே ஒப்புக் கொண்டுள்ளனர். பேரிடர் காலங்களில் சமாளிக்கத் தேவையான ஜெனரேட்டர் முதலான உபகரணங்கள் கடல்மட்டத்திலிருந்து வெறும் 13 மீட்டர் உயரத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே சுனாமி அலைகள் 13 மீட்டருக்குமேல் உயரமாக வந்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.
அதுபோன்று 5.2 ரிக்டர் வரையிலும் வரும் பூகம்பத்தால் பாதிப்பு இல்லை என்று சொல்கின்றனர். சமீபத்தில் குஜராத்தில் வந்த பூகம்பத்தின் அளவு 8 ரிக்டர். அப்படி கூடங்குளத்தில் ஏற்பட்டால் என்ன விளைவு என்பதையும் கூற மறுக்கின்றனர்.

20. கூடங்குளம் அணு உலை பற்றி இவ்வளவு குறைபாடுகள் சொல்கிறீர்கள். இவற்றை அரசாங்கத்திடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவித்தால் அவர்களே இத்திட்டத்தை நிறுத்திவிடமாட்டார்களா?

அதுதான் வேதனையான செய்தி. இந்தக் குறைபாடுகளை இந்திய அணுசக்தித் துறை கண்டு கொள்ளவோ, இது குறித்துப் பேசவோ தயாராக இல்லை. இதற்காக மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு 2002 மே 20ல் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வாதத்தை மறுக்க முடியாத தலைமை நீதிபதி பி.என். கிர்பால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தாம் தலையிட முடியாதென்றும், மக்கள் சார்பின் வழக்குத் தொடர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மார்க்கண்டனுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும் அபராதமும் விதித்தார். இதுதான் அரசின், நீதிமன்றங்களின் நிலைப்பாடு.

21. விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது என்கிறார்களே?

விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.
விபத்து ஏற்பட்டால் கூடங்குளத்திலிருந்து குறைந்த பட்சம் 140கி.மீட்டருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. மொத்தத்தில் தென்தமிழகம் மக்கள் குடியிருக்க இயலாத நஞ்சுக்காடாகிவிடும்.
கூடங்குளம் மக்கள் போராடுவது தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமில்லை. நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.

22. ஆனால் உலகெங்கும் அணு உலைகள் பாதுகாப்பாகத்தானே இயங்கி வருகின்றன. விபத்துகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லையே?
யார் சொன்னது? இரசியாவில் 1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது.
மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின.
சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை இரசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார்.
ஆனால் இந்த விபத்து நடந்த மறு ஆண்டுதான் அதாவது 1987ல்தான் இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க இரசியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது.
சமீபத்தில் சப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

23. ஒன்றிரண்டு விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக அணுஉலைகளே வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மற்ற நாடுகளில் அணு உலைகள் இயங்கத்தானே செய்கின்றன?

மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை.
எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை.
சப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன.
செர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது. ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன.

24. மற்ற நாடுகளை விடுங்கள். இந்தியாவில் உள்ள அணு உலைகள் நன்றாகத்தானே உள்ளன. குறிப்பாக கல்பாக்கம் அணுஉலை நன்கு செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?

கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபா 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. 1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள் இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள்.
அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் .
1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய்.

மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ?


  • மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ? வேறு என்ன காரணம் ? தீர்வு என்ன ? ஓய்வு பெற்ற மின் பொறியாளர் திரு சா . காந்தி அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மின் வெட்டுக்கான காரணத்தை மற்றும் தீர்வு திட்டத்தை பற்றி விளக்குகிறார் . கேள்வி பதிலாக தொகுக்கப் பட்டுள்ளது.
     1. கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப்பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? துறைரீதியாக இதனைப் பட்டியலிட முடியுமா?
    தொடர்ச்சியாகவே இடைவெளி சுமார் 2500 மெகா வாட்டாக இருந்து கொண்டிருக்கிறது . இரவு நேரங்களில் மின் தேவை குறைவு. ஆனால் இப்பொழுது இரவில் கூட தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. இரவு நேரங்களில் உள்ள இந்தப் பற்றாக்குறை பெரும்பாலும் விவசாயத்துறையைப ் பாதிப்பதாக உள்ளது. தொழில்துறைக்கு பொதுவாக 30% பற்றாக்குறை உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து அறிவிப்பில்லாத மின்வெட்டு தனியார் மின் நிலையங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு ள்ளது. உற்பத்தித் திறன் இருந்தும் குறிப்பாக நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
    . 2. யார் அந்த நான்கு நிறுவனங்கள்? எதற்கு இந்த உற்பத்தி நிறுத்தம்? பிள்ளைப் பெருமாநல்லூர் (பி.பி.என் 330 மெகாவாட்) * ஜி.எம்.ஆர் வாசவி (196 மெகாவாட்) * மதுரை பவர் (106 மெகாவாட்) * சாமல்பட்டி (105.6 மெகாவாட்) மொத்தம் 737.6 மெகாவாட். மின்வாரியத்தில் இருந்து தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகைக்காகவே இந்த உற்பத்தி நிறுத்தம். இந்த நிலுவை தொகைகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட தமிழக மக்களைப் பிணை வைத்து மின்வாரியத்தை இக்கட்டிற்குத் தள்ளியிருக்கிறா ர்கள். இதில் கொடுமை என்னவென்றால் பிபிஎன் நிறுவனம் மின் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் இந்த நேரத்திலும் மின் வாரியம் தினமும் இந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் தந்தாக வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனம் அப்போல்லோ மருத்துவமனை முதலாளிகளுக்கு சொந்தமானது.

     3. மின் உற்பத்தி தொடர்ச்சியாகக் குறைந்து இருப்பதற்கான காரணம் என்ன? நடுவன் அரசின் மின்சாரக் கொள்கையே இதற்குக் காரணம். 1992 ஆண்டிற்குப் பிறகு எதிர்கால மின் உற்பத்தி அனைத்தையும் தனியார் மட்டுமே மேற்கொள்ளலாம் என்பது தான் அது. அனைத்து மின் வாரியங்களின் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மறுக்கப்பட்டன. அதன் விளைவையே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம ். 

    4.தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்க்கு பாதகமாகவும் நடந்து கொண்டதற்கான எடுத்துக்காட்டு களைக் கூறமுடியுமா? ஏராளமாகக் கூறமுடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியாருக்கும் மின்வாரியத்துக் கும் இடையிலான வழக்குகளில் தனியாருக்கு சாதகமாகவே ஒருதலைப்பட்சமாக ஆணையம் தீர்ப்பு வழங்கிவந்துள்ளத ு. இந்த வழக்குகளில்
    பெரும்பாலானவை நூறு கோடி ரூபாயிக்கு மேல் வாரியத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவை. மிகக் குறிப்பாக, ஜி.எம்.ஆர் வாசவிக்கு வழங்கப்பட்ட 484 கோடி ரூபாய்க்கு தீர்ப்பு, பிபிஎன் 189 கோடி ரூபாய் கேட்ட வழக்கில் 1050 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கச்சொல்லி வழங்கிய தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்துக ின்றன. இவை இரண்டும் உயர்நீதிமன்றத்த ின் தடையையும் மீறி சுய ஆர்வத்தின் அடிப்படையில் ஆணையம் வழங்கிய தீர்ப்புகளே. ஆணையத்தின் மீது எங்கள் அமைப்பு கடந்த ஜூலையில் ஒரு ஊழல் புகார் மனுவை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது . பிரச்சனையை அறிந்து மக்கள்தான் ஆணையத்தின் போக்குகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

     5. தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க கூடங்குளம் அணுமின் திட்டத்தால் மட்டுமே முடியும் என்ற கருத்து சமீப காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்து சரிதானா? பைத்தியக்காரத்தனமானது.கூடங்குளத்தில்
    இருந்து நமக்கு கிடைக்கவிருப்பது 462 மெகாவாட்தான். இன்று நான்கு தனியார் மின் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது மூலமாக 737 மெகாவாட் இழப்பை ஏற்படுத்தியுள்ளர்கள். 2010ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டிய
    2700 மெகாவாட் மின்வாரிய உற்பத்தி நிலையங்களை நான்கு தனியார் மின் நிறுவனங்கள் கொண்டுவந்த செயற்கையான கடன் தொல்லையின் காரணமாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தமிழக மக்களைப் பிணைக்கதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை எதிர்க்காமல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனமானது.

     6. தடையற்ற மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் சாத்தியம்தானா? சாத்தியம்தான். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரச் சட்டத்தில் (2003) பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதாவது, மீண்டும் மாநில அரசிடம் மின்சாரத் துறை ஒப்படைக்க வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் முழுமையாக நீக்கப்படவேண்டும். 

    7. தமிழ்நாட்டின் மின்சார பிரச்சனையைத் தீர்க்க வழிதான் என்ன? திட்டமிடப்பட்டுள்ள அனைத்து மின்வாரிய உற்பத்தி நிலையங்களும் திட்டமிட்ட
    காலத்திற்குள்ளே செயல்பாட்டுக்கு க் கொண்டுவருவது தான் இதற்கான வழி.
     நன்றி: திரு. சா. காந்தி ஓய்வுபெற்ற மின் பொறியாளர்
    தலைவர் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள்

பட்டாசு வெடிச்சதுக்கே FIRE SERVICE இல்லாத நாடே...........

     

பட்டாசு வெடிச்சதுக்கே FIRE SERVICE இல்லாத நாடே..
.
.
.
.
.
.
.
எம் மக்களுக்கு கூடங்குளம் அணுஉலை ஒரு கேடே.

நமக்கு மின்சாரம் வேண்டும்...! ஆனால் மக்களை அழித்து சுடுகாட்டில் விளக்குகள் எரியவேண்டாம்...!


                      





கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்..!



கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களையும், உதயகுமார் உள்ளிட்ட வழி நடத்தும் மக்கள் போராளிகளையும் தேசத் துரோகிகளாகவும், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்தடைக்கு இவர்கள் தான் காரணம் எனவும், இவர்களை சுட்டுக் கொன்று விட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும், அதன் பிறகு கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்டு தமிழகமே மின்வெட்டு
இருளிலிருந்து மீண்டுவிடும் என்பது போலவும் ஒரு "மூட நம்பிக்கை" நிலவிக் கொண்டிருக்கிறது.


அனைவரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கும், கூடங்குளம் போராட்டங்களுக்கு துளியும் தொடர்பு இல்லை. இது இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிறிதும் பெரிதுமாக நடைபெற்று வரும் ஒரு நெடிய போராட்டமாகும். கடந்த ஒரு வருடமாக இப்போராட்டம் மக்கள் எழுச்சிமிகு தொடர் போராட்டமாக மாறியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்...?



வாழ்வுரிமை

கூடங்குளம் அணு உலையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குள் 35 ஆயிரம் மக்களும், 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஒரு லட்சம் மக்களும் வாழ்கிறார்கள். அம்மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் என்பது தென்தமிழகம், கேரளா மற்றும் அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வசிக்கும் ஊருக்கு அருகில் அணுஉலை அமைக்கப்பட்டால், அதன் ஆபத்துகளை அறிந்தபிறகு அதை நாம் அனுமதிப்போமா...? எதிர்ப்போமா....? என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.



ஜப்பானும், இந்தியாவும்

ஜப்பானில் கடந்த 11.03.2011 அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் "புகுஷிமா அணு உலை" பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு பரவியது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஜப்பானாலேயே இதைத் தடுக்க முடியவில்லை. சுமார் 20 ஆயிரம் ஜப்பானியர்கள் இறந்திருக்கலாம் என்றும், அதை ஜப்பானிய அரசு மறைப்பதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. அணுஉலை கசிவை, விபத்தை ஜப்பான் போன்ற வளர்ந்த - வல்லமை மிக்க நாடுகளாலேயே தடுக்க முடியவில்லை எனில், இந்தியா போன்ற தேசங்களால் என்ன செய்ய முடியும்...? தானே புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு முதலுதவி செய்யவே நமக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது. அணு உலை வெடித்தால், நமது அரசின் மீட்பு நிலை எப்படி இருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



14000 கோடியா...? உயிர்களா...?

14000 கோடிகளை முதலீடு செய்து அணுஉலை கட்டிய பிறகு, இப்போது அதை எதிர்ப்பது நியாயமா..? என சிலர் கேட்கிறார்கள். இந்த அணுஉலை அமைக்கப்பட்ட 1980களில் இதுகுறித்த விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. நம் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போகிறது, நமக்கெல்லாம் வேலைகளும், சலுகைகளும் கிடைக்கப் போகிறது என அரசின் ஏமாற்று பிரச்சாரங்களை அம்மக்கள் நம்பியிருந்தனர்.


இதுகுறித்து உதயகுமார் உள்ளிட்ட பலர் அப்போது எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த போது அதை அம்மக்கள் எதிர்த்தனர். ஜப்பான் - புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகே அப்பகுதி மக்கள் தங்களுக்கு நேரப்போகும் அபாயங்களை உணர்ந்தனர். அதன்பிறகே கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். உதயகுமார், புஷ்பராயன், ஏசுராஜ் போன்ற வழி நடத்தும் போராளிகளே தடுத்தாலும், அம்மக்கள் போராட்டங்களை கைவிடப் போவதில்லை என்பதே உண்மை.


14000 கோடி ரூபாய் வீணாகிறதே... என கவலைப்படும் "நல்லவர்கள் - தேசபக்தர்கள்" ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு ஒரு மணமகனை நிச்சயம் செய்து, திருமணம் ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்படும் என முடிவெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். திருமணம் நெருங்கும் தருணத்தில், மணமகனுக்கு "எய்ட்ஸ் நோய்" இருப்பதாகத் தெரியவருகிறது. அப்போது நிச்சயத்தை காரணம் காட்டி திருமணத்தை நடத்துவீர்களா...? அல்லது ரத்து செய்வீர்களா...? இதற்கு நீங்கள் தரும் பதில் தான் கூடங்குளம் போராட்டக்காரர்களின் கேள்விகளுக்கும் பொருந்தும்.



அணுஉலை மூலம் அதிக மின்சாரம் கிடைக்குமா...?

இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களில் நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் நிலையங்களிலிருந்து 65.10 சதவீதமும், புனல் மின் நிலையங்களிலிருந்து 21.22 சதவீதமும், சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05 சதவீதமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேசமயம், அணுஉலைகளிருந்து மொத்தமே 2.36 சதவீத மின்சாரத்தை மட்டுமே பெறப்படுகிறது.


கூடங்குளத்தில் அணு உலை இயக்கப்பட்டால் மொத்தமாக 15 நிமிடங்களுக்குத் தேவையான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்த உண்மைகளை மத்திய மாநில அரசுகள் மறைக்கின்றன.


மின்சார உற்பத்தியைப் பெருக்க அணுஉலைகளுக்கு பதிலாக கடல் அலை, நதிகள், அருவிகள், காற்றாலை, சூரிய ஒளி ஆகிய இயற்கை துறைகளிலிருந்தும் - தொழில்நுட்பங்களிலிருந்தும் தயாரிக்க முடியும். அதை அரசு ஏன் செய்ய மறுக்கிறது...?

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த நாடுகளான ஜெர்மனி போன்ற பல நாடுகள் கூடங்குளத்தில் இருப்பது போன்ற அணுஉலைகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவும், ஜப்பானும் புதிதாக அணு உலைகளை தங்கள் நாடுகளில் நிறுவ தடை விதித்துவிட்டன.


உலக யுரேனியத்தில் 23 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, தனது நாட்டில் இதுவரை ஒரு அணுஉலையைக் கூட கட்டவில்லை. தற்போது ரஷ்யாவின் துணையோடு கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை என்பது வி.வி.ஐ.ஆர். வகையைச் சார்ந்ததாகும். இந்த வகை அணுஉலைகள் கடற்கரைப் பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்டதில்லை. ரஷ்ய பொறியாளர்களுக்கு இதில் முன் அனுபவமும் இல்லை. அதை விட கவனிக்கத்தக்கது, இந்த வகை அணுஉலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல் முறையாக கடல் நீரைக் கொண்டு பரிசோதிக்க இருக்கின்றன.


நாம் கேட்பது என்னவெனில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் என்ன, பரிசோதனை எலிகளா...? உலகிலேயே இவர்கள்தான் ஊருக்கு இளைத்தவர்களா...?


ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்த பிறகு, ரஷ்ய அணுஉலைகளின் தரத்தை ஆராய ஒரு குழுவை அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அக்குழு, "சக்தி வாய்ந்த புகுஷிமா ஜப்பானிய அணுஉலை விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கான வலிமை ரஷ்ய அணு உலைகளுக்கு இல்லை' என அறிக்கை சமர்ப்பித்து விட்டது.


ரஷ்யாவில் "செர்னோபிலில்' தான் 1986 ஜூன் மாதத்தில் கதிர்வீச்சு வெளியேறி 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதில் 9 முதல் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட நூறு மடங்கு ஆபத்துகளை ஏற்படுத்தியது.


ரஷ்யாவின் துணையோடு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலைகள், புயல், சுனாமி, பூகம்பம் ஏற்படும் வாய்ப்புள்ள புவிக்கோட்டில் அமைந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.



தேசத்துரோகிகள் யார்....?

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுஉலைகள் முதலில் கேரளாவில் தான் அமைக்க திட்டமிடப்பட்டன. கேரள அரசும், மக்களும் விழித்துக் கொண்டதால் அது தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டுள்ளது.

"அணுஉலைகளை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்" என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.
மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் உள்ள சமூகப் பொறுப்புணர்வு தமிழர்களுக்கு இல்லையா...? உதயகுமார் போன்றவர்கள் தேசத்துரோகிகள் என்றால் கேரள, மேற்குவங்க அரசியல் தலைவர்கள் எல்லாம் யார்...?

அமெரிக்கா - ரஷ்யாவின் செல்லப் பிள்ளைகளான மன்மோகன் சிங்கும், மான்டேக் சிங் அலுவாலியாகவும் யார்...? மக்களுக்காகப் போராடும் உண்மையான தலைவர்களை எதிர்கால வரலாறு விளக்கத்தான் போகிறது.

அனைவரும் மதிக்கும் அப்துல் கலாம், கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறாரே...? எனலாம்.

அப்துல் கலாம் ஒரு அரசாங்க பிரதிநிதி. அவர் ஒரு ஏவுகணை விஞ்ஞானி தானே தவிர அணு விஞ்ஞானி அல்ல. அவரை நாமும் மதிக்கிறோம். ஆனால் தினமும் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காகவோ, தீண்டாமையால் அவதிப்படும் தலித்துகளுக்காகவோ, கலவரங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர்களுக்காகவோ என்றைக்காவது ஐயா அப்துல் கலாம் குரல் கொடுத்திருக்கிறாரா..? என்பதையும் கேள்விகளாக முன்வைக்கிறோம்.

காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை வரவேற்றவர்கள் கூட நேதாஜியின் நியாயங்களையும் ஏற்றார்கள் என்பதை "அறிவுஜீவிகள்' புரிந்துகொள்ள வேண்டும்.

அப்துல் கலாம் அவர்கள் இவ்விஷயத்தில் மக்களின் பக்கம் நிற்காமல் அரசு பக்கம் நிற்பது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது.



அணுமின் நிலையங்களின் உண்மை நிலை.

இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட அணுஉலைகள் எதுவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும்தான் செலவுகள் பன்மடங்காகின்றன. இன்னும் பல புதிய அணுஉலைகளைக் கட்டினாலும், 2050ல் கூட அணுஉலைகளின் மூலம் 5 சதவீத மின்தேவையைக் கூட எட்ட முடியாது என்பதே உண்மை.

உண்மையில் அணுஉலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறதா..? அல்லது மின்சாரம் என்ற பெயரில் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகிறதா...? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.



மக்களே...!!! சிந்திப்பீர்...!!!


அணுஉலைகளில் கசிவு என்பது தவிர்க்கவே முடியாததாகும். அவற்றின் கழிவுகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அது சேதமடைந்தால் அணுகுண்டுகளினால் ஏற்படும் பேராபத்தை விட மோசமாக இருக்கும்.

அப்பகுதிகளில் கடல்நீர் பாதிக்கப்பட்டு மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழியும். உணவு, குடிநீர், காற்று மாசுபடும். சுற்றுச்சூழல் கெடும். புற்றுநோய் பரவுவது தவிர்க்க முடியாதது என்றெல்லாம் உலக அனுபவங்கள் கூறுகின்றன. விஞ்ஞானிகளும் எச்சரிக்கிறார்கள்.


1984ல் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் "யூனியன் கார்பைட்' என்ற அமெரிக்க நிறுவனத்தில் விஷவாயு கசிந்ததில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததையும், இன்றுவரை அங்கு குழந்தைகள் ஊனமுற்றும், புற்றுநோயோடும் பிறப்பதையும் பார்க்கும் போது நெஞ்சம் வெடிக்கிறது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடுகள் இல்லை. இந்திய அரசு நம் மக்களை மறந்து விட்டு, அமெரிக்க கம்பெனிக்கு ஆதரவாக இன்று வரை செயல்படுவதைப் பார்த்த பிறகும், நீங்கள் கூடங்குளம் போராட்டத்தை எதிர்த்தால் அது உங்கள் மனசாட்சியைக் கொல்வதாகவே இருக்கும்.


நமக்கு மின்சாரம் வேண்டும்...! ஆனால் மக்களை அழித்து சுடுகாட்டில் விளக்குகள் எரியவேண்டாம்...!



-எம். தமிமுன் அன்சாரி.

வெளியீடு:-மனிதநேய மக்கள் கட்சி.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நாம் கேட்கவேண்டிய கேள்விகள்

                                  Photo: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மக்களாகிய நாம் கேட்கவேண்டிய கேள்விகள் கொஞ்சம்
இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு அவருக்கு பதில்
தெரியுமா என்று அவர்தான் சொல்லவேண்டும். இந்தக்
கேள்விகளை நீங்களும் அவரிடம் கேட்க விரும்பினால்,
இதை செராக்ஸ் எடுத்தோ ஸ்கேன் செய்தோ உங்கள்
கையெழுத்திட்டு
மாண்புமிகு முதலமைச்சர்,
தமிழ்நாடு அரசு,
புனித ஜர்ஜ் கோட்டை, சென்னை -600009 என்ற

முகவரிக்கோ cmcell@tn.gov.in என்ற
முகவரிக்கோ அனுப்புங்கள்.

1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம்
கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும்
2 சதவிகிதம்தான். காரணம் 52
உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும்
மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன்
என்பது உங்களுக்குத் தெரியுமா?

2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200
விபத்துகள் நடந்துள்ளன என்பதும்
ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல்
தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர்
இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால்
57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும்
சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம்
என்று அடையாறு புற்று நோய் நிலையம்
அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர்
சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய்
வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில்
சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத்
தெரியுமா ?

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம்
தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம்
போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன்
சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக்
கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம்
என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத்
தெரியுமா ?

6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில்
இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம்
என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும்
40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட
நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில்
ஐந்து சதவிகித மின்சாரம் கூட
தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட
உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல்
உற்பத்தி செய்வதில்லை என்பதும்
முப்பது வருடத்து கல்பாக்கம் 50
சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும்
உங்களுக்குத் தெரியுமா ?

8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும்
ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும்,
அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில்
40 சதவிகிதமான 400 மெகாவாட்தான்
உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48
மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும்,
மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70
மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280
மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில்
தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும்
கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான்
என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால்
மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட
பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில்
எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித்
துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத்
தெரியுமா ?

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும்
சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில்
சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9
மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக்
கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய
ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல்
குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும்
விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ்
கார்டன், கோபலபுரம் முதல்
பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும்
கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென்
மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும்
என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும்
தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள்
காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும்,
அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும்
தருவது கிடையாது என்பது உங்களுக்குத்
தெரியுமா ?

14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால்
அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும்
வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம்
இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள
முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர்
அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன்
சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

15. தமிழ்நாடு முழுவதும் சுமார்
ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல்
பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட்
மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில்
சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில்
சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல்
இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும்
சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன்
அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள்
குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள்
என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும்
சரியான முடிவு எடுக்காவிட்டால்…..பதில் உங்கள் கையில்.



தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மக்களாகிய நாம் கேட்கவேண்டிய கேள்விகள் கொஞ்சம்
இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியுமா என்று அவர்தான் சொல்லவேண்டும். இந்தக் கேள்விகளை நீங்களும் அவரிடம் கேட்க விரும்பினால், இதை செராக்ஸ் எடுத்தோ ஸ்க
ேன் செய்தோ உங்கள் கையெழுத்திட்டு


மாண்புமிகு முதலமைச்சர்,
தமிழ்நாடு அரசு,
புனித ஜர்ஜ் கோட்டை, சென்னை -600009 என்ற

முகவரிக்கோ cmcell@tn.gov.in என்ற முகவரிக்கோ அனுப்புங்கள்.

1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய  ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல்குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும் சரியான முடிவு எடுக்காவிட்டால்…..

பதில் உங்கள் கையில்.