Like me

Saturday, April 28, 2012

இந்திய அரசாங்கத்துக்கு மக்கள் முக்கியம் இல்லை; தனிமம் நிறைந்த மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பெருமுதலாளிகள் போடும் பிச்சைதான் முக்கியம்.


யார் இந்த மாவோ போராளிகள்? எதற்காக இந்த போராட்டம்? இவர்களுக்கு என்ன பலம் இருக்கிறது 


"மண்ணை குடைந்து வெட்டி எடுக்கும் தங்கம் யாருக்கு? 
மலையை குடைந்து வெட்டி எடுக்கும் தாது யாருக்கு? 
இந்த மண்ணோடு வாழ்வோம்! மண் இல்லை என்றால் சாவோம்! "

- " பச்சை வேட்டை" பாடல்

இரண்டு வருடம் முன், மத்திய அரசு கூறியது: "நீங்கள் ஒரு நாள் ஆயுதங்களை கீழே போட்டால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்" , அதற்கு மாவோயிஸ்டுகள் கூறிய பதில் : "நாங்கள் ஒரு வாரம் ஆயுதங்களை கீழே போட தயார்; நீங்கள் ஒரு வாரம் ஆயுதங்களை கீழே போட தயாரா?" மத்திய அரசு மௌனம் சாதித்தது. ஏனென்றால், மத்திய அரசின் குரல்வளையை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரு முதலாளிகள்,தண்டகாரண்யா மலையை குடைந்து எடுக்கும் தனிமங்கள் மூலமாக வரப்போகும் கொள்ளை லாபத்தை விரைவில் காண பேராவலுடன் இருக்கின்றார்கள். 


இந்திய அரசாங்கத்துக்கு மக்கள் முக்கியம் இல்லை; தனிமம் நிறைந்த மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பெருமுதலாளிகள் போடும் பிச்சைதான் முக்கியம். அதை எதிர்த்து நிற்கும் மாவோயிஸ்ட், பழங்குடியினர் என்றென்றும் அரசின் எதிரியே! தண்டகாரண்யா மலை, காடுகளை அழித்து சுரங்கம் தோண்ட ரவுடிகளையும், ரத்தம்குடிப்பவரையும், காவல்துறையையும், இராணுவத்தையும் அனுப்பி அங்குள்ள பழங்குடியினரை அப்புறப்படுத்த எத்த்னை லட்சம் இராணுவ வீரனின் உயிரை கொடுக்கவும், பழங்குடியினர், மாவோயிஸ்டுகள் உயிரை வாங்கவும் அரசு தயாராக இருக்கின்றது. பழங்குடியினரின் இருப்பிடத்தை, அராஜகமாக தட்டிப்பறிக்கும் இந்திய அரசு, இந்திய இராணுவம், உலக முதலாளிகள் பழங்குடியினரின் எதிரிகளே!


இந்திய அரசு தண்டகாரண்யா பகுதியில் காடு மலைகளை அழித்து சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியினரில் வீடுகளுக்கு தீ வைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி முகாம்களுக்கு அனுப்ப ஆரம்பிக்கும்வரை, அந்த பகுதியில் வெறும் 5,000 முதல் 10,000 மாவோயிஸ்டுகள்தான் இருந்தார்கள். இந்திய அரசின் இராணுவ கொடுங்கோளர்களை , அட்டகாசங்களை பார்த்தபிறகு, பழங்குடியினர் தானாகவே முன்வந்து பலர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தனர்.

இப்போது மாவோயிஸ்ட் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்திய இராணுவம் நுழைய முடியாத அந்த காடுகளுக்கும் அவர்கள் விவசாயம் செய்கின்றார்கள்; சிறுவர்கள் கல்வி கற்கின்றார்கள்; நடனம், பாட்டு என்ற கலைக்குழு இயங்குகின்றது; அடிப்படை தேவையிலான மருத்துவ வசதி கிடைக்கின்றது; இவற்றோடு ஒவ்வொரு நொடியும் இந்திய இராணுவத்தை எதிர்க்கும் துணிவுகொண்ட படை வீரர்கள் பயிற்சி பெறுகின்றார்கள்.

சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஒரு மனிதகுல போராட்டத்தை பற்றி உயர்வாக எழுத தோன்றவில்லையென்றாலும் பரவாயில்லை; போராட்டங்களை கொச்சை படுத்தாமல் இருந்தால் நல்லது. அவர்கள் எப்படி, போராடும் மக்கள் "எந்த வழியில் போராட வேண்டும்" என்று வகுப்பெடுக்கும் அன்பர்கள், போராட்ட களத்தை ஒருமுறையேனும் சென்றுபார்த்து உணர்ந்து எழுதினால், வாசகர்களாகிய எங்களுக்கு தெளிவான உண்மை புரியும். பசப்பல் வார்த்தைகள் போட்டு எதையோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதும் சிலரை வரலாறு தோண்டி எடுத்து தூக்கில்போடும்.

"மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வருவது நல்லது" என்று எழுதும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்... "இந்திய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தும், இந்திய இராணுவத்தை மக்கள் மத்தியில் இருந்து திரும்ப பெறுவது பற்றி வலியுறுத்தி எழுதும் துணிவு ஏன் பெறவில்லை?" 

ஊடகங்கள் திட்டமிட்டே மாவோயிஸ்டுகள் மீதான வெறுப்பை மக்கள் மனதில் வளர்த்து வருவது இயல்பானது. அவைகளுக்கு பண முதலாளியின் எச்சில் சோற்றின்மீது அலாதி பிரியம். ஆனால், சமூக ஆர்வலர்கள், பேச்சாளர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று தன்னை பறைசாற்றிக்கொள்பவர்கள் கூட "ஒரு இந்திய நில, இன அழிப்பை" கண்டும் காணாமல் இருப்பது வேதனை. அப்படியே எழுதினாலும் அரசின் பக்கம் சற்று தேன் தொட்டு எழுதுவது எதனாலோ? "மாவோயிஸ்டுகள் கோரிக்கை நியாயமானது; ஆனால், அவர்கள் ஆயுத பாதை ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை.



தன் வீட்டை கொளுத்தி, தாயை மிதித்து, தந்தையை கொலை செய்து, தங்கையை வன்புணர்ச்சி செய்து, தன்னை ஒன்றும் செய்யாமல் மறந்து விட்டு செல்லும் மனித மிருகங்கள் சென்ற பிறகு, ஓ வென்று கதறி அழுது, உற்றார் உறவினர் முன் சோகம் காட்டி, பின்னொரு நாளில் "கலர்புல் எதிர்கால வாழ்க்கை" கனவு காணும் நடுத்தர, மேல்தட்டு மக்கள் இல்லை பழங்குடியினர்."உயிர் போனாலும் பரவாயில்லை என்று வில்லேந்தி, ஆய்தமேந்தி, போராடும் உணர்வாளர்கள்.

நிலத்தடி நீரை பாக்கெட் போட்டு விற்றாலும், பாட்டிலில் விற்றாலும், நஞ்சுப்பொருள் கலந்து "பெப்சி, கோக்" ஆக விற்றாலும், ஏன் குழாய் வழியாக அளந்து விற்றாலும், காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நம் போன்று மானமற்றவர்கள் இல்லை அவர்கள். "இது எங்கள் தண்ணீர், நதி, குளம்" என்று உரக்கக்கூறும் சாதாரண மனிதர்கள்;

டிவி சீரியலிலும், சினிமாவிலும் மயக்கம் கொண்டு கதாநாயகன், கதாநாயகி கனவு கண்டு வாழ்க்கையை வீணக்கும் வீணர்கள் இல்லை இவர்கள்; மலையின், காட்டின் அழகை ரசிக்கும் பிள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகள் அவர்கள். இப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்த மனிதநேயத்தை காத்து நிற்கும் மக்களை உயர்வாக எழும் "பேனா மை" இல்லையா எழுத்தாளர்களிடம்.

ஆளும் கட்சி எம் எல் ஏ வை கடத்தியபோது மத்திய அரசின் பிரதிநிதிகள் கூற்று : "நமக்கு ஒரு எம். எல். ஏ வின் உயிர் முக்கியமில்லை; ஆனால், மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் தோழர்கள் விடுதலை முக்கியம்; ஆகையால், இந்த "டீல் ஈக்வல் " இல்லை. " என்று வெளிப்படையாக ஊடகங்களில் சொல்லியது. மாவோயிஸ்டுகள் மக்கள் நீதிமன்றம் மூலமாக விசாரித்து அவரை நிபந்தனையோடு விடுதலை செய்தது. இப்படிப்பட்ட அரசின் அலட்சியபோக்கை கண்டிக்கும் எழுத்து ஏன் எழுத்தாளர்களுக்கு வரவில்லை?

இப்போது மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த அதிகாரியின் விடுதலையை ஆதரிக்கும் தமிழர்கள், அவர் உயிர் காக்க ஆர்பாட்டமோ, போராட்டமோ நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள். ஊடகங்கள் அவரின் வீட்டையும், ஊரையும், உறவையும் சுற்றி வந்து உணர்வலையை தூண்ட முயற்சிக்கின்றது. சாதாரண மக்களுக்கு ஒன்று தெரியவில்லை, "அந்த அதிகாரி உயிர் மத்திய அரசின் கையில் அல்லது மாவோயிஸ்டுகளின் மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கின்றது" என்பது. உண்மையறிந்த பத்திரிக்கையாளர்கள், பேச்சாளர்கள் நாக்கு என்ன வறண்டுவிட்டதா, மாவோயிஸ்டுகளின் நேர்மை பற்றி பேசும் போது.

கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த அதிகாரியின் விடுதலையை ஆதரிக்கும் தமிழர்கள், "இந்திய அரசால் வீடு கொளுத்தப்பட்டு, ஊர் உறவின்றி காட்டில் திரியும் பழங்குடியினர்" விடுதலையையும் சேர்த்தே ஆதரிக்க வேண்டும். இந்த இரண்டு விடுதலையும் பெரும்பாலான இந்திய மக்கள் ஆதரிக்காதவரை, இந்திய அரசு அசைந்து கொடுக்காது; கடத்தப்படும் தனிமனிதர்களுக்கு ஆதரவாக பேசுவதில் சுகம் காணும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் தெரிந்து கொள்க! "நீங்கள் மறைமுகமாக வாசகர் மனதில், ஒரு மக்கள் போராட்டத்தை எதிர்க்கும் நஞ்சை விதைக்கின்றீர்கள்!" 

சமூக அவலங்களை சந்து பொந்திலெல்லாம் நுழைந்து செய்தி திரட்டி எழுதும் கடமை பத்திரிக்கையாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து, எழுதினால் உண்மை நிலையை எழுத வேண்டும்; அல்லது எழுதாமல் ஒதுங்கிவிடவேண்டும். அரைகுறையான தகவல்களை வாசகர்களாகிய எங்களை குழப்புகின்றது. என்பதை புரிந்து எழுதுங்கள்! "நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றார்கள்" - மாவோ

நன்றி : ஆனந்தி 

பனை ஓலை ஏடுகள்




பனை மரம்

                                   




                                                  






பனை மரத்தின் மருத்துவ குணங்கள்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடா அது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆறும்.

                                           

        

உலகளாவிய ரீதியில் எடுத்து பார்க்கின்றபோது மிக செழிப்பான மற்றும் தொடர்பான இலக்கிய பாரம்பரியம் இலங்கைக்கு சொந்தமாக இருப்பதை காணலாம். கிறிஸ்தவ காலகட்டம் ஆரம்பத்திற்கு முன்னிருந்தே இது தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை எமக்கு காணலாம். கிறிஸ்தவ ஆண்டுகளால் பார்க்கின்ற போது 20 நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக தாள இனத்தை சேர்ந்த (பனை மரம்) பனை ஓலைகள் மீது எழுத்தெழுதும் பாரம்பரியம் ஒரு கலையாக தமிழர் மத்தியில் நிலவியிருப்பதை காணலாம்.

பனை ஓலைகள் மீது எழுத்தெழுதும் கலையினுள் ஒருவிதமான பாரம்பரிய தொழில்நுட்ப விதிமுறை நிலவி இருந்துள்ளதோடு அவற்றில் கலாசார ரீதியிலான முக்கியத்துவமும் உள்ளடங்கி உள்ளது. புராதன சமுதாயத்தினுள் சமயம், கலாசாரம், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலை மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவையுடன் ஒன்றுசேர்ந்த ஒரு சாம்பிரதாயம் பனை ஓலை ஏடுகள் எழுதுவதில் உள்ளடங்கி இருந்தது. ஆகையால் இது சராசரி எழுத்து கலைக்கு அப்பாலான அகலமாக பரந்துப் போயுள்ள எழுத்து கலாசாரமாக எண்ணலாம். எமது பாட்டன் முப்பாட்டன்களால் ஆயிரக் கணக்கான ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்வுகள் மற்றும் அதனால் பெற்றுக்கொண்டுள்ள மனுவங்களை அடிப்படையாகக் கொண்ட விலை மதிக்க இயலாத மகத்தான ஒரு அறிவுத் தொகை இப் பனை ஓலை ஏடுகளில் உட்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பௌத்த சமயம், வரலாறு, பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம், விலங்குகள் மருத்துவ விஞ்ஞானம், பழைமை தொழில்நுட்பம், சோதிட விஞ்ஞானம், தாருகை விஞ்ஞனம், பூத விஞ்ஞானம், மொழிகள் மற்றும் இலக்கியம் போன்ற விடயங்கள் போன்றே சமூக மற்றும் பொருளாதார நிலைகள் பற்றிய தகவல் பெரும்பாலும் இப் பனை ஓலை ஏடுகளில் உள்ளடங்கி இருக்கின்றது.


                                              
நிகழ் காலத்தில் ஏற்பட்டிருக்கும் பலதரப்பட்ட சுற்றாடல் காரணங்களாலும் மனித செயற்படுகளின் காரணமாகவும் இப் பெருமதி வாய்ந்த ஆவணங்கள் சழிவுற்றும் அபாயத்திறகு முகங்கொண்டுள்ளது. இத்துடன் தெடர்பான பாரம்பரிய தொழில்நுட்பம் கலாசார ரீதியிலான செயற்பாடுகள் மிக நெறுங்கிய எதிர்காலத்தில் இவை முழுமையாகவே அழிந்துப் போகலாம். பழங் காலத்தில் எழுதப்பட்டுள்ள பல மில்லியன் கணக்கான ஏடுகளில் இருந்து இன்று எஞ்சி இருப்பது சுமார் ஒரு மில்லியன் ஏடுகள் மத்திரமே. புராதனக் காலத்தில் இருந்து பாதுகாத்து வரப்பட்ட பனை ஓலை ஏடுகளின் அதிகமானவற்றை தற்போது அரும் பொருட்கள் என்ற பெருமதியில் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுளள்தோடு அவைகள் அவர்களது சொத்துக்களாக மாற்றமடைந்துள்ளது. இதுப் போலவே ஈர கசிவு, கறையன் மற்றும் எலிகள் பேன்ற உயிரினங்களாலும் மனிதனின் கவனயீனத்தினால் இன்னுமொரு தொகை அழிந்துபோயுள்ளது. இந் நிலையின் கீழ் பனை ஓலை ஏடுகள் எழுதும் மற்றும் பாதுகாக்கும் பாரம்பரிய தொழில்நுட்பத்தை இக் காலத்து சமுதாயத்தினுள் பிரபலப்படுத்தல் கண்டிப்பான தேவையாக அமைந்துள்ளது. அதனை மூலங்கள் அடிப்படையில் பூரணப்படுத்தல் தொடர்பாக மீண்டும் கருத்தில் கொண்டு பார்க்க தேவையாக உள்ளது.

             

இவ் அமைப்பினுள் பனை ஓலை ஏடுகள் எழுதலுடன் இணைந்திருக்கும் தொழில்நுட்பத்தை நிகழ்கால சமுதாயத்திற்கு பெற்றுக் கொடுத்தல், புராதன பனை ஓலை ஏடுகளை பாதுகாத்தல் மற்றும் நிகழ் காலத்து தேசிய அபிவிருத்தி செயற்பாட்டினுள் அதனை பயன்படுத்தல் எனும் விடயங்கள் உட்பட்டதாக ஒரு கருத்திட்டத்தை ஏற்பாடு செய்வது இக் காலத்திற்கு மிக பொருத்தமானதாக அமையும்



ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்

பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
“தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்” என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பனையின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். ஆனால் நூறு ஆண்டுகள் வரை பனை உயிருடன் இருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரத்தில் நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும்.
பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். தினமும் காலை எழுந்தவுடன் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் குணமடையும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். கோடை காலத்தில் பதநீரும் நுங்கும் கலந்து பருக உடலுக்கு குளுமை தரும்.

ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்

பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும். தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது. பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும். பனம்பழம் மலத்தை இறுக்கிவிடும்.

உடலைத் தேற்றும் பனங்கிழங்கு

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும்.

பனை மரத்தின் பாகங்கள்

பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். பனங்காயில் பிரஷ், கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:23, 2 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி - தட்ஸ்தமிழ்

Adichchanallur, An Iron Age Urn Burial Site-ஆதிச்சநல்லூர்


Excavations - Adichchanallur
Adichchanallur, An Iron Age Urn Burial Site
Adichchanallur (8° 37’ 47.6" N; 77° 52’ 34.9"E) is located on the right bank of the Tambraparani River, in the Tuticorin District of Tamil Nadu. The extensive urn burial site at Adichchanallur in Tuticorin District (formerly Tirunelveli) was first discovered by Dr. Jagor of Berlin Museum in 1876. A. Rea excavated a good number of urns during 1910s and discovered gold diadems with parallels from Mycenae; bronze objects notably lids with exquisite finials depicting many animal forms, iron objects besides thousands of potsherds. The excavation was resumed during 2003-04 and 2004-05. More than 160 urns within the area of 600 square meters have been exposed.


General View of the Excavatede Trenches with urn burials in Situ, Adichchanallur


The burials have been classified into three phases, viz., Phase I, II and III. Phase I contains predominantly primary burials, while in Phases II & III, both primary and secondary burials are found.




General View of the Excavated Trenches with urn burials in Situ, Adichchanallur


The skeletal remains inside the urns are invariably placed in crouched position. No orientation seems to have been followed. There are two examples of double burial. A potsherd with appliqué narrative scene is an important find. It depicts a slim and tall woman standing near by plantain tree. An egret is shown sitting on the tree and holding a fish. A deer and alligator are also depicted near the woman. Good number of graffiti on pottery has been discovered.



Contents of an Urn burial: Remains of bones and burial goods in situ, Adichchanallur


Pottery types include black and red ware, red ware and black ware. The dominant shapes include bowls, dishes, vases etc. Some of the pots are painted in white. Iron implements like arrowheads, spearheads and axe are found, but eroded and badly preserved. Few copper ornaments have also been found. Husk and cloth impression has been found on one of the Iron sword. A potter’s kiln was also exposed in the habitational site.



Contents of an Urn burial: Remains of bones and burial goods in situ, Adichchanallur





Contents of an Urn burial: Remains of rice husk, Adichchanallur

3,800-year-old Indian skeletons throw light on evolution


A team of members led by Superintendent Archaeologist of Archaeological Survey of India (ASI), Chennai Circle, T Satyamurthy, has recently unearthed nearly 169 clay urns containing human skeletons, dating back to around 3,800 years, which form part of the Adichanallur's pre-historic civilisation.
     "The world's largest three-tier pre-historic cemetery is found along the coast of Tuticorin at Tirunelveli district in Tamil Nadu. Unfortunately, the pre-historic settlements remained in the dark for past many centuries before being discovered by a German scholar in 1866," says Dr Pathmanathan Raghavan, a bio-anthropologist working at the Australian National University at Canberra. "I had a chance meeting with Professor Satyamurthy and a team of experts was formed to study various aspects including the skeletal biology and anatomy, genetic traits, bone pathology, altered skeletal mechanism, burial customs, traditions, ancient malnutrition and other matters relating to other bio-cultural significance," Dr Raghavan said.
     Dr Raghavan also says "These pre-historic members show many abnormalities or altered skeletal features, which had influenced the bio-mechanical processes of the population. Interestingly, by and large the recovered reconstructed skeletons through mechanical as well as software methods have exhibited tall statures contradictory to the old hypothesis on the short pre-historic Indians. The lower jaws show mandibular prognathism (outward projection). In many cases the third lower molar is poorly developed or absent. On average, the mandible angle is almost 90 degrees than over 100 degrees in modern humans," added Raghavan.
     Throwing more light on the recovered skeletons, he says the teeth are average in size and depth of the mandible is shallow "which indicates the intake of refined food during the Adichanallur civilisation. Prominent cheekbones and the projected frontal head bones indicate the influence of the genetic transmission of Southern Mongoloid (Mongolia) in the form of a genetic drift, indicating a probable sea trade between east coast of south India and South East Asia," he says.
     Referring to the skull of one of the skeletons recovered, he says, "It shows fascinating pathologically abnormal features, very thick skull bones and what looks like a third eye socket but what actually may have been a tumour". Raghavan, whose research areas include skeletal biology focusing on cranial architecture, geographic and ethnic variations among the fossil and recent populations of the Indian sub-continent, says he is now trying to extract the DNA of the skull to further study its "pathological abnormality which has created a third eye socket. Despite its abnormality, this male human went on to live beyond 60 years of age".
     Coming back to the study on recovered skeletons, he says the team will conduct detailed study based on ancient burial patterns such as primary and secondary burial traditions and their similarities with the other pre-historic cultures which had existed during the same period. "This will focus on the pre-historic transitional stages of the funeral customs," Raghavan says and adds the team is also trying to decode the hidden messages of Adichanallur as certain scripts have been found from the site where the skeletons were discovered.
Source: The Times of India (1 January 2006)


ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

                                                                                                                                                                                                



ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
எஸ். இராமச்சந்திரன்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் திருவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன் குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஆதிச்சநல்லூர் என்ற பெயர் எப்போது எப்படி ஏற்பட்டதென உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆயினும், இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப்பெயர் உடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழித்தேரி எள்ளுவிளையிலுள்ள கி.பி. 1639ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் மடத்து அச்சம்பாடு தேவபிச்சை நாடார் தோட்டத்திலுள்ள கி.பி. 1645ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஆகியவற்றில் ‘ஆதிச்ச நாடாவான்' என்ற பட்டப் பெயர் கொண்டோர் இடம்பெறுகின்றனர். குறிப்பாக, மடத்து அச்சம்பாடு கல்வெட்டின்மூலம் அச்சன்பாடு என்ற அவ்வூரைத் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலுக்கு மானியமாகக் கொடுத்தோருள் ஆதிச்ச நாடாவார்களும் அடங்குவர் எனத் தெரியவருகிறது. எனவே அவர்களுடைய பெயர்த் தொடர்பு இவ்வூருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு.

முதலில் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என்ற பெயர் பற்றி நான் ஆய்ந்து அறிந்த செய்தியைக் கூறிவிடுகிறேன். இப்பறம்பு 114 ஏக்கர் பரப்புள்ள, சீனிக் கல் பாறைகள் (Quartzite) நிரம்பிய மேட்டுநிலம் ஆகும் இப்பறம்பு அமைந்துள்ள இடத்தைத் தொட்டடுத்து ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என வழங்கப்படுகிறது. இப்பறம்பில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாகப் புதைக்கப்பட்டிருப்பதால் தாழிக்காடு என்றும் கூறப்படுவதுண்டு. இங்கு தாழிகளில் அடக்கம் செய்யப்பட்ட மனிதர்களின் வாழ்விடமாக இருந்த பேரூர் எது என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

ஆதிச்சநல்லூர் மிகச் சிறிய ஊர். நெல்லை - திருச்செந்தூர் ரயில்ப் பாதையில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. ஆதிச்சநல்லூர்ப் பறம்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே மிகப் பிரபலமாகிவிட்டதால் இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கலாம். (இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டபோது நிகழ்ந்த ஒரு சாதாரண நிகழ்வு இப்போது வேடிக்கையான செயல்பாடாக எஞ்சித் தொடர்கிறது. அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.) ஆனால் ஆதிச்சநல்லூர் என்பது வெள்ளூர் கஸ்பா என்ற வருவாய்க் கிராமத்தின் பிடாகையாகக் கருதப்பட்டு வெள்ளூர் ஆதிச்சநல்லூர் என்றே அடங்கல் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. வெள்ளூர் என்ற ஊர் கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குரிய சுசீந்திரம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது1. எனவே அவ்வூர் மிகப் பழமையான ஊரென்பது தெரியவருகிறது. 18-19ஆம் நூற்றாண்டுகளில் 'வெள்ளூர்க் கவிராயர் குடும்பம்' என்று பெயர் பெற்ற ஒரு புலவர் குடும்பத்தவரும் அக்குடும்ப வாரிசுகளும் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர். மேலும், வெள்ளூரிலுள்ள பெருமாள் கோயில் திடலில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு - சிவப்புப் பானையோடுகள் என்னால் சேகரிக்கப்பட்டன2. எனவே, ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் அடக்கமாகியிருக்கிற மனிதர்கள், வெள்ளூரில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம்.

1906ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்ட அலெக்சாண்டர் ரீ, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி என்ற ஊரே, இத்தாழிக்காட்டு முன்னாள் மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போது ஆதிச்சநல்லூர்ப் பறம்புக்கும் கொங்கராயக் குறிச்சிகுமிடையே மேற்கு - கிழக்காக ஓடுகிற தாமிரபரணி, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதிருப்பதைவிட வடக்கில் 2 கி.மீ. தொலைவில் கொங்கராயக் குறிச்சிக்கு வடக்கே ஓடியிருக்கலாம் என்று அலெக்சாண்டர் ரீ கருதியுள்ளார். இவ்வாறு ஆற்றின் போக்கு மாறியது - மாற்றப்பட்டது - பற்றி இப்பகுதியில் ஒரு கதை வழங்குகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாமிரபரணி வெள்ளத்தால் திருவைகுண்டம் ஊரும், கைலாசநாதர், கள்ளப்பிரான் கோவில்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவந்தன என்றும், செழுவனூர் வேளாளர் பொன்னப் பிள்ளை என்பவரின் முன்முயற்சியால் ஆற்றின் போக்கு மாற்றப்பட்டது என்றும், அவருடைய உதவிக்குக் கைமாறாக திருவைகுண்டத்தில் கோட்டையொன்று உருவாக்கப்பட்டு அக்கோட்டைப் பகுதியில் அவரது வர்க்கத்தார் குடியேற்றப்பட்டுக் 'கோட்டைப் பிள்ளைமார்' என அழைக்கப்படலாயினர் என்றும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில் ஆதிச்சநல்லூர்க்கு அருகில் பொன்னன் குறிச்சி என்ற ஊர் உருவாக்கப்பட்டதென்றும் அக்கதையில் கூறப்படுகின்றன. அக்கதையில் இடம்பெறும் பொன்னப் பிள்ளையைப் பற்றித் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1441ஆம் ஆண்டுக்குரிய வீரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதென்றும், “செழுவனூர்ப் பிறவிக்கு நல்லான் பொன்னப் பிள்ளை” என்பது அவருடைய முழுமையான பெயரென்றும் முனைவர் கமலா கணேஷ், திருவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமார் பற்றிய தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.3

கொங்கராயக் குறிச்சி, பழமையான ஊரே. அவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கட்டுமானம் ஒன்றினைத் தாம் கண்டதாக ரீ குறிப்பிட்டுள்ளார். அவ்வூரில் உள்ள விநாயகர் கோயில் வாயில் நிலையில் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டு என்னால் கண்டறியப்பட்டன.4 அக்கல்வெட்டுகளின் மூலம், கொங்கராயக் குறிச்சியின் பழம்பெயர் ‘முதுகோனூர்' என்பதும், அக்கல்வெட்டுகள் ‘முன்றுறை வீரர் ஜினாலயம்' என்ற சமணப் பள்ளிக்குரியவை என்றும் தெரியவருகின்றன. சமண சமயம் பின்பற்றுவாரின்றி மறைந்துபோன பின்னர், இக்கல்வெட்டுகள் மட்டும் விநாயகர் கோயிலின் நிலைக்காலில் பொருத்தப்பட்டுவிட்டன எனத் தெரிகிறது. முன்றுறை வீரர் ஜினாலயத்தின் இறைவன் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. சற்றொப்ப 40 ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் ஒரு சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் இருந்ததாகவும், இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஒருமுறை இப்பகுதிக்கு வருகைதந்தபோது இப்பறம்பையும் இங்கிருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பார்வையிட்டுள்ளாரென்றும் இப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. அச்சிற்பமே கொங்கராயக் குறிச்சியிலிருந்த ஜைனப் பள்ளியின் தீர்த்தங்கரர் சிற்பம் போலும். அச்சிற்பம் இப்போது எங்கு உள்ளதெனத் தெரியவில்லை.

ஆங்கிலேய அரசு, மதராஸ் அரசாணை 867 - நாள்: 13.08. 1876 மூலம் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு பற்றிய ஒரு குறிப்பினைப் பதிவு செய்தது. அந்த ஆணையில் அரசு செயற்பொறியாளர் ஜே.டி. கிரான்ற் என்பவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி, தூத்துக்குடிக்கு மேற்கே புதுக்கோட்டை என்ற ஊரையடுத்து அமைந்துள்ள நல்லமலை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதையுண்ட நிலையில் காணப்படுவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் என்ற மானிடவியலாளர் ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் அகழாய்வு செய்து, ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களை பெர்லின் நகருக்கு எடுத்துச் சென்றார். (அவை Volkar Kunde அருங்காட்சியத்தில் உள்ளன.) இதனையடுத்து 1903-1904ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொல்லியலாளர் லூயி லாப்பெக்யூ அகழாய்வு மேற்கொண்டு, கிடைத்த அரும்பொருள்களை பாரிஸ் நகர அருங்காட்சியகத்திற்குக் கொண்டுசென்றார். இதே காலகட்டத்தில் அலெக்சாண்டர் ரீ அகழாய்வு மேற்கொண்டு, 1906ஆம் ஆண்டில் அகழாய்வு அறிக்கை வெளியிட்டார். இந்த அகழாய்வின்போது கிடைத்த அரும்பொருள்களுள் பெரும்பாலானவை சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டன. பொன்னாலான கழுத்தணி போன்ற ஓரிரு அரும்பொருள்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் மனைவியால் எடுத்துச் செல்லப்பட்டன. பழங்கலைப் பொருள்கள் பதிவுச் சட்டமோ, அகழாய்வு குறித்த திட்டவட்டமான வரையறைகளோ இல்லாமலிருந்த நிலை இத்தகைய நிகழ்வுகளுக்குத் துணைக் காரணங்களெனில், இந்நாடே தமது உடைமை எனக் கருதிய ஆங்கிலேயர்களின் ஆதிக்க மனப்பான்மையே முதன்மையான காரணம்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரும்பொருள்கள் பற்றிய ரீ அவர்களின் அறிக்கை, வரலாற்று ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திற்று. குறிப்பாக இங்கிருந்து கிடைத்த மனித மண்டையோடுகள், உடற்கூறு அடிப்படையிலான மானிடவியல் ஆய்வு மேற்கொள்வோருக்குச் சுவையான ஊகங்களைத் தூண்டுகிற பொருள்களாயின. அரும்பொருள்களுள் மட்கலன்களின் வகைப்பாடுகள், பிற பழமையான பண்பாட்டு அகழ்விடங்களில் கண்டறியப்பட்ட மட்கலன்களின் வகைகளுடன் ஒப்பிடப்பட்டுக் குடிப்பெயர்வுகள் பற்றிய ஊகங்களுக்கு வித்திட்டன. ஆனால் தமிழறிஞர்கள் இத்தகைய ஆய்வுகளையோ ஊகங்களையோ அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. சாத்தான்குளம் இராகவன் போன்ற இதழாளர்கள் ஆதிச்சநல்லூர் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதி இவ்வூரைப் பிரபலப்படுத்தினர் என்ற அளவில்தான் தமிழறிஞர்கள், தமிழக வரலாற்றறிஞர்களின் முயற்சி நின்று போயிற்று.

2003-2004ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் தியாக. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை அகழாய்வில் கிடைத்த அரும்பொருள்களை உலோகவியல், மானிடவியல் முதலிய துறை சார்ந்த வல்லுநர்களின் சோதனைக்கு ஆட்படுத்திச் சில முடிபுகளை அறிவித்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இரண்டு: 1) உலோகங்களின் அறிமுகம், குறிப்பாக இரும்பின் அறிமுகம் கி.மு. 1000 ஆவது ஆண்டுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. கி.மு. 1500 அளவில் இருக்கலாம். 2) மண்டையோட்டு ஆய்வின் அடிப்படையில் கூறுவதானால், இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மனிதர்கள் முன்னிலை நிக்ராய்டு, முன்னிலை ஆஸ்திரலாய்டு, மங்கோலாய்டு, இந்தோ ஐரோப்பிய (காகசாய்டு) இனங்களின் கலப்புக் கூறுகள் உடையோர். திராவிட இனம் என நம்பப்படும் மத்தியதரைக் கடற்பகுதி இனக்கூறுகள் மிகக் குறைவான அளவிலேயே (ஐந்து விழுக்காடு) உள்ளன.

மண்டையோடுகளை ஆராய்ந்து மேற்குறித்த முடிவினை வெளியிட்டவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. பத்மநாதன் இராகவன். உலோகங்களின் பயன்பாட்டுக்கான கால வரையறையை நிர்ணயித்தலில் தியாக. சத்தியமூர்த்தி அவர்களுக்கு, கடல் சார் தொழில்நுட்பவியலுக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute of Ocean Technology) சென்னைக் கிளையைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சசிசேகரன் உதவி புரிந்துள்ளார்.

தற்சமயம், இந்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத் துறை - தென் மண்டலக் கண்காணிப்புத் தொல்லியலாளர் திருமதி. சத்தியபாமா பத்ரிநாத் தலைமையிலான குழுவினரால் அகழாய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது.

ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வின் வரலாற்றைப் படிக்கும்போதே ஓர் உண்மை விளங்கியிருக்கும். தமிழ்ச் சமூக வரலாற்றின் முதன்மையான ஆவணங்களாகக் கருதத்தக்க சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும், பாண்டிய நாட்டின் மிகப் பழமையான வரலாற்று நிகழ்வுகளைப் புராண வடிவில் கூறுகிற திருவிளையாடற் புராணம் போன்ற இடைக்கால இலக்கியங்களையும் ஆதிச்சநல்லூர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட விடயங்களுடன் தொடர்புபடுத்தி ஆழமாக ஆராயப்படவில்லை. சங்க இலக்கியங்களிலும் மணிமேகலையிலும் தாழிகளைப் பற்றி வருகிற குறிப்புகளைப் பட்டியலிடுவது மட்டுமே நடைபெற்றுள்ளது.

சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம்.

ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.

‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8

விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.

அரசர்களின் மனையை - அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்' என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர் என்ற வரலாற்று உண்மையைப் பாண்டிய மன்னர்களின் முத்துபடு துறைமுகமாக இருந்த கொற்கை மூதூரின் வரலாற்றுடன் இணைத்து ஆராய்ந்தால்தான் தமிழக வரலாற்றின் தொடக்கப்பகுதி துலக்கமுறும். அத்தகைய ஆய்வில் தொல்லியல் அறிஞர்களும், தமிழறிஞர்களும் இணைந்து ஈடுபடவேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.

(ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் பற்றிய ஒரு வேடிக்கையான செய்தி: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு ரயில் பாதை போடப்பட்டபோது, ஆழ்வார் திருநகரியிலிருந்த சடகோபாச்சாரியார் வைணவ மடத்துக்குரிய துண்டு நிலமொன்றின் ஊடாக ரயில் பாதை போடநேர்ந்தது. அம்மடத்தின் அதிபர், நிலத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு, அந்நிலத்துக்கு வருட வாடகையாக நான்கணா கொடுப்பதாகத் தீர்மானித்தது. வைணவ மடாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார். நான்கணா ஆண்டு வாடகை, நானறிந்தவரை 2000ஆம் ஆண்டு வரை கொடுக்கப்பட்டு வந்தது. தற்போதும் தென்னக ரயில்வே சார்பில் 25 பைசா கொடுக்கப்பட்டு வருகிறதா எனத் தெரியவில்லை.)

அடிக்குறிப்புகள்:

1. “திருவழுதி வளநாட்டுத் திருவெள்ளூரில் சேனாவரையன் தத்தன் அந்தரி” - கோ மாறஞ்சடையனின் சுசீந்திரம் கல்வெட்டு (Travancore Archaeological Series Vol. III, no. 27.)
2. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக நான் பணிபுரிந்தபோது 6. 10. 1995 அன்று கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தது.
3. South Indian Inscriptions, Vol. V, no.736, quoted in “Boundary walls: Caste and women in a Tamil community”, Dr. Kamala Ganesh, South Asia Books, 1993.
4. 7 .03. 1999 அன்று கள ஆய்வில் கண்டறிந்த கல்வெட்டுகள்.
5. அகநானூறு
6. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், ‘‘நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப'' என்ற நூற்பாவுக்கான நச்சினார்க்கினியர் உரை.
7. ”Arguments for the Aryan origin of South Indian Megaliths”, Asko Parpola, Published by the State Dept. of Archaeology, Tamilnadu, 1970.
8. கமலை ஞானப்பிரகாசரின் ‘சாதிநூல்', பதிப்பாசிரியர்கள்: சந்திரசேகர நாட்டார், சண்முக கிராமணி, மயிலை, 1870. (உ.வே.சா. நூலகத்தில் அச்சுப்பிரதி உள்ளது.)

(நன்றி: தமிழினி, ஏப்ரல் 2009.)

sr@sishri.org

செர்னோபில் அணு உலை வெடித்த தினம் - 26.04.1986..

                                   

வஞ்சித்த செர்னோபில் ... செர்னோபில் அணு உலை வெடித்த தினம் - 26.04.1986..

அலெக்சாண்டர் யுவ்செங்கோ - இவர் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் வெடித்துச் சிதறிய செர்னோபில் அணுஉலையில் நான்காவது பிரிவில் பணியாற்றியவர். அங்கு அந்த இரவில் பணியாற்றியவர்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் சிலரில் இவரும் ஒருவர். கடும் தீக்காயமடந்த இவரைக் காப்பாற்ற பலமுறை அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றுவரை கதிர்வீச்சின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட உடல்நலக்கேட்டுடனேயே அவர் வாழ்ந்துவருகிறார். 2004ஆம் ஆண்டு டிஸ்கவரி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான ஒரு ஆவணப்படத்தில்தான் அவர் முதன்முதலாக தனது மௌனம் கலந்து பேசியுள்ளார். அந்த இரவில் என்ன நடந்தது என்பது குறித்து நியூ சயின்டிஸ்ட் இதழுக்காக மைக்கேல் பாண்ட்-டிடம் அவர் பேசியவை இவை.

பொறியியலில் அணுஉலைகள் குறித்து சிறப்புப் பாடத்தைப் பயின்ற அலெக்சாண்டர் யுவ்செங்கோ விபத்தின் போது பொறியியல் பிரிவின் முதுநிலை பொறியாளராக இருந்தார். அப்போது அவருக்கு வயது 24. ஒரு பாதுகாப்பு பரிசோதனையின்போதுதான் இந்த விபத்து நடைபெற்றது. பல வேகக் கட்டுப்பாட்டுக் கோல்கள் வெளியே எடுக்கப்பட்டு, பின்னர் உலையை நிறுத்துவதற்காக அவசரமாக உள்ளே செலுத்தப்பட்டபோது அதன் முனையிலிருந்த கிராஃபட்டானது அணுக்கரு உலையின் வேகத்தை அதிகப்படுத்த- அதன் விளைவாக பேரளவில் உலையில் வெடிப்பு ஏற்பட்டது. இப்போது அலெக்சாண்டர் தனது மனைவி நடாஷாவுடனும் மகன் கிரில் உடனும் மாஸ்கோவில் வாழ்ந்து வருகிறார்.

நீங்கள் எப்படி செர்னோபில் அணுஉலைக்கு வேலைக்குச் சென்றீர்கள்?

அதை நான் தேர்ந்தெடுத்தேன். அது சோவியத் ஒன்றியத்திலிருந்த மிகச்சிறந்த அணுமின் நிலையங்களில் ஒன்றாகும். அந்நகரம் வாழ்வதற்கு சிறந்தவொன்று. அதோடு, நான் படித்துக்கொண்டிருந்தபோது பயிற்சிக்காக அங்குதான் சென்றேன். அங்கு நல்ல ஊதியம் கிடக்கும். அந்நாட்களில் அணுமின்நிலையப் பொறியாளர் பணி என்பது மரியாதைக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றோ இரசிய மக்கள் வணிகராகவோ அல்லது வழக்கறிஞராகவோ தான் இருக்க விரும்புகிறார்கள்.

செர்னோபில் உலை வெடித்த அந்த இரவில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

அன்று நான் இரவுப்பணியில் இருந்தேன். நான் பணிக்கு வந்தபோது அன்று மேற்கொள்ளப்படுவதாக இருந்த பாதுகாப்பு சோதனை அன்று மாலைவரையிலும் மேற்கொள்ளப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அந்த உலை ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. எனவே, அதன் குளிர்தன்மை எப்படியிருக்கிறது என்பதை மேற்பார்வையிட வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதான பணியாகும். எனவே, அன்று இரவு எனக்கு பெருமளவில் வேலை இருக்காது என்று நினைத்தேன்.

என்ன நடந்தது?

என்னுடன் பணிபுரிபவர்களில் ஒருவர் கொஞ்சம் 'பெயின்ட்' கேட்டார். அதோடு படிப்பதற்குச் சில ஆவணங்களையும் கேட்டார். நான் அவருடன் பேசிக்கொண்டு எனது அலுவலகத்தில் இருந்தேன்.

அந்த உலை வெடித்த சத்தத்தை கேட்டதும் நீங்கள் என்ன செய்தீர்கள்?

முதலில் நான் வெடிப்பு எதனையும் கேட்கவில்லை. மெத்தென்ற ஒலியையும் ஒரு குலுக்கலையும் உணர்ந்தேன். அதன்பின் இரண்டு அல்ல மூன்று விநாடிகளின் பின்னர் வெடிப்பு ஒலி கேட்டது. எனது அலுவலகக் கதவுகள் உடைந்து வீசப்பட்டன. அச்சூழல் ஒரு பழைய கட்டிடம் இடிந்து விழும்போது புகைமண்டலமும் தூசியும் பறப்பதுபோல இருந்தது. ஆனால், கூடவே பெருமளவு நீராவியும் இருந்தது. மிகுந்த ஈரப்பதமும் நிறைய தூசியும் கொண்ட காற்று மிக வேகமாக வீசியது. நிறைய குலுங்கியது, நிறைய பொருட்கள் கீழே விழுந்தன. விளக்குகள் அணந்தன. முதலில் நாங்கள் பாகாப்பாக இருக்க ஒரு இடத்தைத் தேடவேண்டியிருந்தது. நாங்கள் வெளியே செல்வதற்கான வராந்தாவை நோக்கிச் சென்றோம். மிகவும் தாழ்ந்த கூரையுள்ள சிறிய பாதை அது. நாங்கள் அங்கே சென்றபோது நாங்கள் மட்டும்தான் நின்று கொண்டிருந்தோம். எங்களைச் சுற்றிலும் எல்லாமே விழுந்துகிடந்தன.

அது என்னவாக இருக்கும் என்று நினைத்தீர்கள்?

மெத்தென்ற ஒலி கேட்டபோது மிகக் கனமான ஏதோவொரு பொருள் கீழே விழுகிறது என்று நினைத்தேன். அதன் பின்னர் எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒருவேளை ஏதோ போர் தொடங்கி விட்டதோ என்று நினைத்தேன்.

உலை வெடித்துவிட்டது என்று நினைத்தீர்களா?

உலைக்கு அப்படியேதும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அது நடப்பதற்கு முன்பு எந்தவொரு நடுக்கமோ, சத்தமோ அல்லது ஏதும் சிக்கல்கள் இருப்பதான வேறெந்த முன் அறிகுறிகளுமோ இல்லை. எங்களுக்கு பல்வேறு அவசரகால நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. நாங்கள் பொறியாளர்கள். எனவே, உலை என்ன செய்யும் அல்லது செய்யாது, என்னவிதமான தவறு நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும். நெருப்பு போன்ற பிறவற்றை எதிர்கொள்ள எங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தகைய சூழல் குறித்து எங்களுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை. பாதுகாப்பு அளவீடுகள் குறித்து நாங்கள் நம்பகத்தன்மை கொண்டிருந்தோம். அவசரகால பொத்தானை மட்டும் அழுத்தினால் போதும் கட்டுப்பாட்டுக் கோல்கள் உலையினுள் செலுத்தப்படும். அன்று இரவுப்பணியில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த எனது நண்பன் லியோனிட் டாப்டுனோவ் அதைச் செய்திருப்பான். ஆனால், அது வேலை செய்யவில்லை. மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள், ஆனால் பாகாப்பு ஏற்பாடுகள் அதனை ஈடுசெய்துவிடும் என்று நாங்கள் நம்பினோம். எங்கள் பணிக்கான வழிகாட்டிக் கையேட்டில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதனை நாங்கள் நம்பினோம்.

வெடிப்பு நிகழ்ந்தபின்ன என்ன செய்தீர்கள்?

நான் எனது அலுவலகத்திற்கு திரும்பச் சென்று, நான்காவது உலையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று அறிய முயன்றேன். ஆனால், இணைப்பு கிடக்கவில்லை. திடீரென்று மூன்றாவது உலையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக ஸ்ட்ரெச்சரை எடுத்து வருமாறு ஆணையிடப்பட்டேன். நான் அதனைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே, வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே பணியாற்றிக் கொண்டிருந்த நண்பனைக் கண்டேன். என்னால் அவனை அடையாளம் காண இயலவில்லை.

அவனது உடைகள் கரி படிந்தும், அவனது முகம் கொதிநீர் பட்டு அடையாளந்தெரியாத அளவில் சிதைந்தும் இருந்தது. அவனது குரலைக் கொண்டுதான் நான் அவனை அடையாளம் கண்டேன். அவன் உடனடியாக என்னை வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்குச் செல்லுமாறும் அங்கே நிறையபேர் காயம்பட்டுக் கிடப்பதாகவும் தெரிவித்தான். அவனை வேறுசிலர் பாதுகாத்துக் கொண்டிருந்ததால் நான் கைவிளக்கை எடுத்துக் கொண்டு பெரிய குளிரூட்டும் தொட்டிக்கு அருகே பணியாற்றிக் கொண்டிருந்த பிறரைத் தேடி ஓடினேன்.

அங்கே என்ன கண்டீர்கள்?

நான் மனிதர்களைத் தேடி ஓடிய இடத்தில் யாரையும் காண இயலவில்ல. அப்பகுதியே சேறாகக் காணப்பட்டது. நான் தேடிச்சென்றவர் மறுபுறம் தவழ்ந்து செல்ல முயற்சிப்பதைக் கண்டேன். அவர் மிகக் நனந்து, அழுக்கடைந்து, மிகக் கடுமையான கொதிநீர் காயத்துடன் காணப்பட்டார். அவர் எழுந்தார். ஆனால், கடும் அதிர்ச்சியால் நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் வெடிப்பு நடந்த இடத்திற்குச் செல்லுமாறு கைகாட்டி கூறினார். அங்கேதான் எனது நண்பனான வலேரா கொடம்சுக் இருந்தான். ஆனால், அவர் கைகாட்டிய பகுதியில் வெற்றிடம்தான் இருந்தது.

அதன்பின் என்ன நடந்தது?

அப்போது செர்னோபிலின் துணை முதன்மைப் பொறியாளரான அனயோலி டெத்லோவ்-வால் நான்காவது கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்ட யூரி டிரிகப்பை நான் கண்டேன். அவசரகால உயர் அழுத்த குளிரூட்டும் நீரை அப்பகுதிக்குத் திறந்துவிடுமாறு அவர் பணிக்கப்பட்டிருந்தார். அவரால் மட்டுமே தனியாக அதனைச் செய்ய இயலாது என்பதை உணர்ந்த நான் உதவிக்கு ஆட்கள அழைத்து வருமாறு எனது நண்பர்களிடம் கூறிவிட்டு, டிரிகப்புடன் தண்ணீரைத் திறந்துவிடச் சென்றேன்.

அதை வெற்றிகரமாகச் செய்தீர்களா?

நாங்கள் குழாய்க்கு அருகில் செல்ல இயலவில்லை. அந்த வராந்தாவிலிருந்த குளிர்நீர் கலன்கள் உலைக்கு அருகே இருந்தன. அவற்றுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. சுவர்கள் உடந்து கிடந்ததால் முதல் வாசலில் செல்ல இயலவில்லை. எனவே, இரு தளங்கள் கீழே இறங்கி அடுத்த கதவு வழியாக செல்ல முயன்றோம். அங்கே எங்கள் முட்டளவு தண்ணீர் தேங்கியிருந்தது. நாங்கள் கதவைத் திறக்க முடியவில்லை. ஆனால், குறுக்கே இருந்த ஒரு ஓட்டை வழியே இடிபாடுகளைப் பார்க்க முடிந்தது. மிகப் பெரிய தண்ணீர் தொட்டிகள் உடந்து சிதறிக்கிடந்தன. ஒரு கதவும் ஒரு சுவரும் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தது. நாங்கள் திறந்த வெளியையே கண்டோம்.

உண்மையாகவா?

அங்கு நடந்தது என்ன என்பதைத் தெளிவாக அறிவதற்காக நாங்கள் வெளியே நடந்தோம். அங்கே நாங்கள் கண்டது எங்களை திகிலடையச் செய்வதாக இருந்தது. அங்கே எல்லாமே அழிக்கப்பட்டு கிடந்தன. குளிரூட்டும் அமைப்பின் அடையாளமே இல்லாமல் போய்விட்டது. உலையின் வலதுப்புறம் இருந்த அறை முற்றிலும் தகர்ந்துபோய்விட்டன. இடப்புறமோ குழாய்கள் எல்லாம் தொங்கிக் கொண்டிருந்தன. அப்போதுதான் நிச்சயமாக கோடெம்சுக் இறந்து போயிருப்பான் என்று நான் உணர்ந்தேன். அவன் பணியாற்றிக் கொண்டிருந்த இடம் இடிந்துகிடந்தது. பெரிய சுழலிகள் இன்னமும் நின்று கொண்டிருந்தன, ஆனால் அவற்றைச் சுற்றிலும் அனைத்தும் தகர்ந்து போய்கிடந்தன. அவன் நிச்சயம் அதற்குள் புதைக்கப்பட்டிருப்பான்.

நான் நின்ற இடத்திலிருந்து பார்க்கும்போது உலையின் மையப்பகுதியில் இருந்து ஒளிக்கற்றைகள் வெளியே வீசப்படுவதைக் கண்டேன். கதிர்வீச்சு காற்றில் கலந்ததால் ஏற்பட்ட அந்த ஒளிவீச்சைப் பார்ப்பதற்கு லேசர் ஒளிக்கதிர் போல் தெரிந்தது. அது வெளிர் நீல நிறத்துடனும் மிக அழகாகவும் காட்சியளித்த. நான் பல நொடிகள் அதனைப் பார்த்தவாறு நின்றேன். அங்கு எங்கு நோக்கினாலும் வெளியேறிக் கொண்டிருக்கும் காமா கதிர்வீச்சுக்கும் மற்றும் நியூட்ரான்களுக்கும் இடையே அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தால் நான் கொல்லப்படுவேன் என்பதை உணரவே சில நிமிடங்களாயின. ஆனால் டிரெகுப் வெளியே செல்லும் வாயிலை நோக்கி என்னைப் பிடித்து இழுத்துச் சென்றான். அவன் என்னைவிட வயதானவனாகவும் அனுபவமிக்கவனாகவும் இருந்தான்.

அதன்பின் என்ன செய்தீர்கள்?

நாங்கள் நான்காம் எண் கட்டுப்பாட்டு அறையை நோக்கி சென்றோம். ஆனால், உலையிருக்கும் பகுதிக்குச் சென்று உலையின் கட்டுப்பாட்டுக் கோல்களை கைகளாலாவது இயக்குமாறு டெத்லோவால் அனுப்பப்பட்ட 3 பேரை வழியிலேயே சந்தித்தோம். டிரெகுப் நாங்கள் கண்ட காட்சியைப் பற்றி அறிக்கை செய்வதற்காக கட்டுப்பாட்டு அறையை நோக்கித் திரும்பி ஓடினான். நான் அந்த மூவருடனும் உதவி செய்வதற்காகச் சென்றேன். நான் அவர்களிடம் அவர்களுக்கு இடைப்பட்ட கட்டளை முட்டாள்தனமானது என்றும், ஏனென்றால், அங்கே உலை இருந்த இடமே இல்லை என்றும் அங்கே கட்டுப்பாட்டுக் கோல்கள் இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்றும் கூறினேன். ஆனால், அவர்களோ நான் கீழ்மட்டத்திலிருந்தே அதனைப் பார்த்ததாகவும் அவர்கள் மேலேயிருந்து அதனைப் பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

அங்கே செல்வது எவ்வளவு ஆபத்தானது என்று நீங்கள் உணர்ந்தீர்களா?

ஆம். நாங்கள் உணர்ந்தோம்.

நீங்கள் உலையிருந்த இடத்திற்குச் சென்றபோது என்ன நடந்தது?

நாங்கள் ஒரு முனையைப் பிடித்து தொங்கியபடி ஏறினோம். ஆனால் அங்கே சிறிய இடமே இருந்தது. ஏனென்றால் நான் ஏற்கனவே அந்த தளத்தில் ஏறி கதவைத் திறக்க முயன்றிருந்தேன். அவர்கள் என்னிடமிருந்து கைவிளக்கை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள். அவர்கள் அங்கே என்ன உணர்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக நான் அவர்களின் குரலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு எரிமலை வாய் போலத் தோன்றியது. தம்மால் அங்கே ஏதும் செய்ய இயலாது என்று சொல்லியவாறு அவர்கள் வெளியே வந்தார்கள்.

அந்த 3 பேருக்கும் என்ன நடந்தது?

அவர்கள் மூவரும் அதன்பின் விரைவிலேயே இறந்து விட்டார்கள். அந்த சுவரும் கதவும்தான் உண்மையில் எனது உயிரைக் காத்தன. நான் அந்தக் கதவைத் திறந்திருந்தால் மிக அதிகபட்ச கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருப்பேன். நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். அங்கே நாங்கள் செய்வதற்கு ஏதும் இல்லை. அது மிக மோசமான உணர்வாக இருந்தது.

எப்போது உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக நீங்கள் உணர்ந்தீர்கள்?

காலை 3 மணிவாக்கில்- அதாவது, வெடிப்பு நடந்ததன் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர்.

நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

நான் மிகச் சோர்வடைந்தேன். கதிர்வீச்சு பாதிப்பின் முதல் அறிகுறிகளில் ஒன்றாக வாந்தி எடுத்தேன். ஆனால், அதை உடனடியாக உணராமல் உணவில் ஏதும் கோளாறோ என்றே சிந்தித்தேன். வெடிப்பு நிகழ்ந்த அரைமணி நேரத்திற்கு பின்னர் கையில் டோசிமீட்டர் வைத்திருந்த ஒருவரை சந்தித்தேன். அவர் உடலை முழுமையாக மூடியிருந்தார். எனவே, அது யாரென்று அடையாளம் தெரியவில்லை. நான் அவரிடம் அளவு எவ்வளவு என்று கேட்டேன். அவர் அம்மானியைக் காட்டினார். அதன் முள் அளவையின் முடிவுப்பகுதியைத் தொட்டிருந்தது. அது மிக அச்சமூட்டும் நேரமாக இருந்தது. அப்போது நாங்கள் எவ்வளவு கதிரடி வாங்கியிருந்தோம் என்று சொல்வது இயலாதவொன்று. ஆனால், அது மிக அதிகபட்ச அளவு என்பது மட்டும் உண்மை. நான் மிகவும் சோர்வடந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளானதால் காலை 5 மணிக்கு உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன். அன்று மாலையே மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று நினைத்தீர்களா?

ஒருவர் பின் ஒருவராக பிறர் எவ்வாறு சாகிறார்கள் என்பதை அங்கே படுக்கையில் படுத்தபடி கேட்டுக் கொண்டிருப்பதுதான் மிகத்துயரமான நிமிடங்கள். எனது முறை எப்போது வருமோ என்று நான் நினைக்கொண்டிருந்தேன். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், எனவே எனக்கு எந்தவொரு வழிபாட்டுப் பாடலும் தெரியாது. ஆனால், மறுநாள் காலை நான் உயிருடனிருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாள் மாலையும் நான் பிரார்த்தனை செய்தேன்.

அவர்கள் உங்களை எப்படி நடத்தினார்கள்?

அது மிகத் தீவிரமான, விரைவான சிகிச்சை முறையாகும். அதனைச் சமாளிக்க மிகுந்த வலு வேண்டும். எனக்கு தொடர்ச்சியாக இரத்தமும் பிளாஸ்மாவும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த. சில மாதங்கள் நான் பிறருடைய இரத்தத்திலேயே வாழ்ந்தேன். அதன்பின் கதிரடி வாங்கிய இடங்களில் புண்கள் ஏற்படலாயின. எனக்கு நிறைய தீக்காயங்கள் ஏற்பட்டன. இரு மாதங்களின் பின்னர் அவை மறையத் தொடங்கிய பின்னர்தான் பிழப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பின்னர் எனது உடல் தானாகவே செயல்படத் தொடங்கியது. அதன்பின் எனக்கு இரத்தம் செலுத்தப்படத் தேவையில்லாது போயிற்று. என்றாலும் எனக்கு தொடர்ச்சியாக மயக்க மருந்து குழாய் மூலம் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. நான் மிகவும் உடல் மெலிந்து இறந்து கொண்டிருக்கும் மனிதனைப் போல காணப்படுவதாக எனது மனைவி நடாஷா கூறினாள். நான் மிக மெதுவாகவும் மெல்லிய குரலிலும் பேசுவதாகவும் கூறினாள். ஆனால், நான் குழப்பமில்லாது, தெளிவான மனநிலையுடன் இருந்தேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

என்ன புரிந்துகொண்டீர்கள்?

எனக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படுவதாக உணர்ந்தேன். அதோடு நான் இயற்கையாகவே உறுதியும் உடல்நலமும் மிக்கவன். அப்போது 24 வயது இளைஞனாக இருந்தேன்.

இப்போதும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

எனக்கு இப்போதும் தொடர்ச்சியாக தோல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னமும் சீழ் புண்கள் ஏற்படுகின்றன.

இரசிய மக்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?

நான் அதைப்பற்றி பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். நான் அதைப்பற்றி மக்கள் அறிந்துகொள்வதை விரும்பவில்லை. எனக்கு இரண்டு பதக்கங்கள் அளிக்கப்பட்டன. அன்று இரவு நான் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி ஒன்றும் அதன் 10 ஆண்டுகளின் பின்னர் மற்றொன்றும் அளிக்கப்பட்டது. நான் யாரென்று எனது அண்டை வீட்டாருக்குத் தெரியாது. அதோடு ஒரு களங்கம் சேர்ந்திருக்கிறது.

நீங்கள் செர்னோபிலுக்குத் திரும்பச் சென்றீர்களா?

ஒருமுறை, டிசம்பர் 2000ல் அந்த உலை மூடப்பட்டபோது நான் சிறப்பு அழைப்பாளராக அழக்கப்பட்டிருந்தேன். நான் மூன்றாவது உலை கட்டிடத்தை சுற்றிப் பார்த்ததில் அது வெடித்துச் சிதறிய நான்காவது உலையின் அப்பட்டமான நகலாக இருப்பதைக் கண்டேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அந்த உலைக்கு மேல் ஏறியபோது எனது கால்கள் தள்ளாடின.

அசுரன்அசுரன் - நன்றி. கீற்று வலைத்தளம்
http://en.wikipedia.org/wiki/Chernobyl_disaster

ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி...

   


ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி...

கொழும்பு: முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவி்ததுள்ளார்.

ஜெயசூரியாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் குருநாகல் பகுதியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000க்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.

அவர் கொடுத்த தைரியத்தில் தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.

ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

மண் மலடானால்................

                                 


இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்!...

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம்

விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை

தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

இராசேந்திர சோழன்

                

இராசேந்திர சோழன்:






சோழர்களின்புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.


              தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது.

கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன் இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்கு தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிகரையும் வென்றான்.

இணை அரசனாக நிர்வகித்தல் இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.

முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும் இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030:

Pictureநாட்டின் பரப்பும் அமைப்பும் தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராஜராஜன், இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.

இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்திரன் தன் நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும் கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராஜேந்திரனுடைய இராணுவ சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கிறது.

படையெடுப்பு தொடக்க காலம் சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது
 —