Like me

Sunday, September 16, 2012

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)

                                 

மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன்

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் ந
ாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்துவைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

கடலை நன்கு புரிந்து கொண்டவர்கள் நம் முன்னோர்களே...

  




தாமிரபரணி முன்பு தூத்துக்குடி அருகில் கடலில் கலந்தது; இப்போது, காயல்பட்டினம் அருகே சென்று கலக்கின்றது. காவிரி ஆறு, முன்பு சென்னைக்கு அருகில் பழவேற்காடு வரையிலும் வந்ததாகச் சொல்லுவார்கள். இப்போது, பூம்புகார் அருகே போய் விட்டது. வைகை ஆற்றில், கடலில் இருந்து உள்வாங்கி வந்த தண்ணீர் மானாமதுரை வரையிலும் அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது. மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே, இராமநாதபுரம் மன்னர், அந்த ஆறு கடலில்
 கலப்பதைத் தடுத்து விட்டார்.



கடலை நன்கு புரிந்து கொண்டவர்கள் நம் முன்னோர்களே.



ஆற்றுக் கழிமுகங்களை முறையாகப் பயன்படுத்துகின்ற முறையான தொழில்நுட்பம் தமிழர்களிடம் மட்டுமே இருந்திருக்கின்றது. கடல் தண்ணீர் பொங்கிப் பெருகும்போது, அது ஆறுகளின் வழியாக நிலத்துக்கு உள்ளே வரும். அப்படி அது எப்போது பொங்கும் என்பதைக் கணித்து, அந்தவேளையில் கப்பல்களை உள்நாட்டுப் பகுதிகளுக்குக்கொண்டு வந்து, பொருள்களை இறக்கி விட்டு, மீண்டும் கடலுக்குத் திரும்பிச்சென்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கடலில் மேல் அலைகள், அதாவது ஆண் அலைகள் வரும்போது, பாய்மரத்தை மடிக்காமலேயே துடுப்பு வலிக்காமலேயே உள்ளே வந்து, பொருள்களை இறக்கி விட்டு, அடுத்த அலையில் வெளியே சென்று விடுவார்கள்.



சென்னை பெசன்ட் நகர் இராஜா அண்ணாமலை புரத்தில், கடற்கரையிலேயே இந்த அமைப்பு இருக்கின்றது. அங்கே உள்ளே புகும் தண்ணீர், பட்டினப்பாக்கம் வழியாக, வெளியேறிப் போய் விடும். அதைக்கூடப்புரிந்து கொள்ளாமல், அந்த இடத்தையும் மணல் போட்டு நிரப்பி, இப்போது, அங்கேயும் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இதுபோல, தமிழகத்தில் 17 இடங்கள் ஆய்வில் கண்டு அறியப்பட்டு உள்ளன. இன்றைக்கும் சென்னையைக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது, அடையாறு, கூவம், கொற்றலையாறுகள் தாம். அந்த ஆறுகளின் வழியாக உள்ளே வருகின்ற தண்ணீர், பாலாறு வரையிலும் போய்த் திரும்பும். அதனால்தான், அந்த வழியில் பல இடங்களில், ‘அலையாத்தி அம்மன், கடல் அணைத்த அம்மன், கடல் அணைத்த பெருமாள்’ என பல தெய்வங்களை உருவாக்கி வைத்து இருக்கின்றார்கள். நமது நிலங்களைப் பாதுகாத்த இயற்கையைப் புரிந்து கொள்ளாமல், இப்படி சாமிகளாக ஆக்கி விட்டார்கள்.



சுனாமியின்போது, கன்னியாகுமரியில், கடல் 200 மீட்டர்கள் வரையிலும் உள்வாங்கி இருக்கின்றது. அந்தக் காலத்தில் ஆறுகள் கடலோடு கலப்பது குறித்து, மக்களுக்கு மரபு சார்ந்த சிந்தனைகள் இருந்தன. இப்போது இல்லை. என்னுடைய ஆய்வுகளில், நான் மக்களோடு கலந்து, அவர்களோடு வாழ்ந்து , தரவுகளைச் சேகரித்து இருக்கின்றேன். அன்று கயிறுகளை வைத்து ஆழம் பார்த்தார்கள். இன்றைக்கு, ரேடார் மிஷன்களைக் கொண்டு ஆழம் பார்க்கின்றார்கள்.



நெல் விவசாயம், இரும்பின்பயன்பாடுகளைக் கண்டு அறிந்தவர்கள் தமிழர்களே. ஆதிச்சநல்லூர் இரும்பு நாகரிகம், 3500 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இரும்பு நாகரிகத்தையும், வேளாண்மையையும் , கூ ட் ட ம் கூட்டமாக உலகம் முழுமையும் சென்றார்கள். பருத்தி நாகரிகத்தை, மெக்சிகோ வரையிலும் கொண்டு சென்றார்கள். எனவே, இவர்கள் வெறுமனே மீன் பிடிக்க மட்டுமே கடலைப் பயன்படுத்த வில்லை. ‘கடலோடிகள்’ என்ற பெயரை நாம் பயன்படுத்தி வந்து இருந்தால், நமது பெருமை நிலை நிறுத்தப்பட்டு இருக்கும். மாறாகஇவர்கள், ‘மீனவர்கள்’, ‘கட்டுமரக்காரர்கள்’ என்ற அளவிலேயே சுருக்கப்பட்டு விட்டார்கள்.



பொதுவாக, இந்தியப் பெருங்கடல் பற்றிப் புரிந்து கொள்ளாமல், தமிழர்களுடைய வரலாறு முழுமை பெறாது. கடலுக்கு உள்ளே நகரங்கள் மூழ்கியதுபோல, கடலுக்கு அருகாமையில் உள்ள மணலுக்கு உள்ளேயும் பல நகரங்கள் புதையுண்டு கிடக்கின்றன. குறிப்பாக, இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரையில் பல நகரங்கள் புதைந்து கிடக்கின்றன. ‘அத்தியூத்து’ என்ற இடம், எட்டு மீட்டர், பத்து மீட்டர் ஆழத்தில் புதைந்து உள்ளது. அதேபோல, சாயர்புரம் தேரியிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்திலும் உள்ளன. எனவே, கடற்கரைகளையும் ஆய்வு செய்தால் தான், தமிழருடைய நாகரிகத்தின் தொன்மையை நிறுவ முடியும்.



தமிழர்கள் ஒரேயடியாக இடம் பெயர்ந்து விட வில்லை. இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்று இருக்கின்றார்கள். அதனால், சீனாவுக்குள் இருக்கின்ற தமிழரை, தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களாகவே சீனர்கள் பார்க்கின்றார்கள். அதேபோல, ஆஸ்திரேலியாவுக்குப் போன தமிழர்களை, இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்களாகவே பார்க்கின்றார்கள். இது கூட வரலாற்றில் புரிந்து கொள்ள முடியாத வரலாற்று விந்தைகள். அண்மையில் கூட, ஈழத்தமிழர்கள் அகதிகளாகக் கப்பலில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பிடிபட்டார்கள் என்று படித்தோம். அதுவும், பழைய வரலாற்றின் தொடர்ச்சி தான்.



உணர்ச்சிகரமாக முழங்குகிறோம், உலகில் 83 மொழிகளில், தமிழின் தாக்கம் இருக்கின்றது என்று. அவை அங்கே எப்படிப் போனது? யார் கொண்டு சென்றார்கள்? எந்தெந்த முறைகளில் கொண்டு போனார்கள்? என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். கடல்சார் மேலாண்மையில் தமிழகம் உலக அளவில் சிறப்பு இடம் பெற்று இருக்கின்றது. கொரியா, ஜப்பானிலும் கூட, இந்தத் துறையில் தமிழர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். மீனவர்கள் என்றால், ஏதோ லுங்கி கட்டிக் கொண்டு திரிகிறார்கள், குடிக்கிறார்கள் என்று மட்டும் கருதக்கூடாது. அவர்கள் கடல் சார் சூழல் இயல் அறிந்தவர்கள்.





கடல் ஆராய்ச்சியாளர் திரு.பாலு அவர்கள் தாயகத்தில் திரு. அருணகிரி அவர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து...........

400 நாள்களாகத் தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்

   



      இந்திய ஏகாதிபத்தியத்தின் தலையில் இடிவிழுந்ததைப் போல், கூடங்குளம் மக்கள் போராட்டம் இந்திய அரசைத் தாக்கிக் கலங்க வைத்துள்ளது. மக்களின் போர்க்குணமும் ஆற்றலும் எல்லையற்றது என்பதை 400 நாள்களாகத் தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் மெய்ப்பித்துள்ளது.

          அலைகடலைப் போராட்டக் களமாக மாற்றியுள்ள அவர்களின் கண்டுபிடிப்பையும் ஆற்றலையும் என் னென்று சொல்வது? ஆயுதப் போராளிகள் காட்டுக்குள்
 தலைமறைவாவது போல், ஆயுதமற்ற அறவழிப் போராளிகள் கடலுக்குள் தலைமறைவான உத்தியை என்னென்று சொல்வது? சிக்கலின் உண்மைத் தன் மையை மக்கள் புரிந்துக் கொண்டு போராடப் புறப்பட்டு விட்டால், அவர்களுக்குக் கடலும் பிளந்து வழி சமைத் துக் கொடுக்குமோ!

          தலைவர்கள் மக்களுக்கு வழிகாட்டுவதும், மக்கள், தலைவர்களுக்கு வழிகாட்டுவதும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் வேதியியல் மாற்றங்களாகும். அவை அங்கு நடக்கின்றன.பூதங்களாக வளர்ந்து கிடக்கும் பெரும் கட்சித் தலைவர்களை அந்த எளிய மனிதர்கள் புயலாக வீசி அலைக்கழிக்கிறார்கள். அவர்கள் நாற்காலியை இலட்சியமாக்கிக் கொள்ளவில்லை. மனிதகுலத்தை அழிக்கும் அணு உலைத் திட்டங்களை அழித்து மக்களைக் காப்பதே அவர் களின் இலட்சியம்!

          வெடித்தாலும், வெடிக்காவிட்டாலும் அணு உலை ஆபத்தானது என்பதைப் புரியவைப்பது அவ்வளவு எளிதல்ல. அமெரிக்க நாட்டில் நடந்த மூன்றுமைல் தீவு அணு உலை விபத்தும், சோவியத் ஒன்றியத்தின் செர்னோபில் அணு உலை வெடிப்பும், கற்றுத்தந்த பாடத்தை விட, அண்மையில் சப்பானில் நடந்த புகுசிமா அணு உலை வெடிப்பு அதிகம் கற்றுத்தந்துள்ளது. அதனால், 1988லிருந்து நடந்து வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம். கடந்த ஓர் ஆண்டுக்கு முன் புதிய வேகத்தையும் வீச்சையும் பெற்றது. இப்புத்தெழுச்சியின் நாயகர்களாக சு.ப.உதய குமார், புட்பராயன் போன்றோர் உள்ளனர்.

          அமெரிக்கா, இரசியா, சப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் மண்ணில் புதிய அணு உலை களை நிறுவுவதை நிறுத்திக்கொண்டு அயல் நாடுகளில் விற்றுக் கொள்ளையடிப்பதற்காகவே அவற்றை உற்பத்தி செய்கின்றன. அந்நாடுகளில் ஏகபோகமாய் பெருத்துவிட்ட மூலதனம், மரணம் வாணிகம் செய்ய மற்ற நாடுகளை நாடுகின்றன. இந்திய ஏகாதிபத்தியம் சொந்த நாட்டிலேயே மரண வாணிகம் செய்கிறது.

          அதிலும் தமிழினத்தைப் பகை இன மாகக் கருதிப் பழிவாங்கும் பாரத மாதா, கூடங்குளத்தை கொலைக்களமாய் மாற்றிடப் போர் புரிகிறாள். இப்பொழுது நிறுவப்பட்டுள்ள இரண்டு உலைகள் மட்டு மல்ல, இன்னும் ஆறேழு அணு உலை களை அங்கு நிறுவிட திட்டம் வைத்துள்ளார்கள். அழிவு நேர்ந் தால் தமிழினம் அழியட்டும்; ஆதாயம் கிடைத்தால் மின்சாரம் அயல் இனத்தாருக்குப் பயன்படட்டும் என்பதே இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் திட்டம்.

          ஒரே ஆண்டில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள நாட்டிற்கும் கூடங்குளத்திலிருந்து மின்சாரம் அனுப்ப இந்தியா கடலுக் கடியில் கம்பி வடங்களைப் பதித்துக் கொண்டிருக்கிறது.

          தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்கு என்றாலும் கூட அணு உலை மின்சாரத்தை நாம் ஏற்க கூடாது. அது மனிதகுல அழிவுத் தொழில் நுட்பம் சார்ந்தது. ஆனால் தமிழி னம் அழிந்தால் அழியட்டும்; அந்த அழிவின் மூலம் கிடைக்கும் ஆதா யம் தனக்கும் வேண்டும், தனது மரண வணிகத்திற்கும் வேண்டும் என்று இந்தியா சூது செய்வதை இன்னும் புரிந்துக் கொள்ளாத ஏமாளித் தமிழர்கள் இனி புரிந்துக் கொள்ள வேண்டும்.

          அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியம் விதித்துள்ள, பாதுகாப்பு நிபந்தனைகளைக் கூட நிறை வேற்றாத இந்திய அரசு, அந் நிபந் தனைகளை நிறைவேற்றும் வரை கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பத் தடை கோரி ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற தமிழர் அமைப்பு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத் தது. சென்னை உயர்நீதிமன்றம் அவ் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

          சென்னை உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தபின், கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப தலைப்பட்டார் கள். எரிபொருள் என்பதென்ன? விறகா, பெட்ரோலியமா? இல்லை. இன்றைய அறிவியலால் கட்டுப் படுத்த முடியாத பேரழிவுக் கதிர்வீச்சு களை கொண்ட அணுப்பொருள். அந்த அணுப் பொருள்களை – யுரேனியத்தை – டன் கணக்கில் உலைக்குள் நிரப்பி வெடிக்கச் செய்வது!. அந்த அணு உலைக் குள் ஊழிக்கால காந்தப் பொருள் களின் மோதல்களும், பெருவெடிப்புகளும், கலகமும், சிதறல்களும், பல்லா யிரம் டிகிரி வெப்பக் கதிர் வீச்சுகளும் நடக்கும்.அந்தவெப்பதைக் கொண்டு மின்சாரம் தயாரிப் பார்கள். மயிரிழையில் நூறில் ஒரு பங்கு அளவுக்குக் கசிவு ஏற்பட்டால் அதோ கதி! முதலில் முப்பது கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் மனிதர்களும் உயிரினங்களும் அழிக்கப்படுவர்.

          அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியம் விதித்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைக்கூட முழுமையாக செய்யாமல், அது விதித்துள்ள முன் சோதனைகளை செய்துப் பார்க் காமல் அணு உலையில் எரி பொருள் நிரப்பாதீர் என்ற கோரிக் கையைக் கூட ஏற்கவில்லை. தமிழர் களின் உயிரைத் துச்சமாகக் கருதிச் செயல்படும் அதிகார வர்க்கத்தைக் கண்டித்தும், அணு உலையை மூட வலியுறுத்தியும் தோழர் சு.ப.உதய குமார் தலைமையில் இடிந்தகரையி லிருந்து உழைக்கும் மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளையோர், முதியோர் என அனை வரும் கூடங்குளம் அணு உலையை முற்றுகையிட 09.09.2012 அன்று பல்லாயிரக்கணக்கில் புறப்பட்டனர்.

          அதே வேளை கூடங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்திலும் மக்களை ஆதரித்து கடை அடைப்பு, மக்களின் அணி வகுப்பு புறப்பட்டது. அது ஓர் அரியக் காட்சி! மெய்யான மக்கள் எழுச்சி! ஆயுதங்களற்ற போர்க் கோலம்! அவர்களைத் தடுத்து தளைப்படுத்த அனைத்துச்சாலைகளிலும் துணை இராணுவப் படையினர், ஆயுதந் தாங்கிய தமிழகக் காவல்துறை யினர்,மக்கள் மீது தண்ணீரை துப்பாக்கி குண்டுகளாய் பொழிய வச்சுரா வாகனங்கள்; கண்ணீர்ப் புகை குண்டுகளை நிரப்பி வைத் துள்ள துப்பாக்கிகள் இவற்றுக்கும் மேலே அவர்களின் கைகளில் சுழலும் தடிகள்!

          கொடுமையான நெருக்கடிகள் வரும்போது புதுமையான தீர்வுகள் உருவாகின்றன. காவல் படையினர் எதிர்பார்க்காத வகையில் கடலோ ரமாக மக்கள் அணி வகுத்துச் சென்று கூடங்குளம் அணு உலை யை நெருங்கிவிட்டனர். இன்னும் சிறிது தொலைவு நடந்தால், மனித குல கல்லறைப் போல் கட்டப் பட்டுள்ள அந்த அணு உலையை எட்டிப்பிடித்து விடமுடியும். மக்க ளின் உற்சாகம் கரை புரண்ட வெள்ள மானது. கடைசி நேரத்தில் விழித்துக் கொண்ட காவல் படையினர் ஓடி வந்து மறித்தனர்; தடுத்தனர். அப்படியே அமர்ந்துக் கொண்டு முழக்கங்கள் எழுப்பினர் மக்கள். “இழுத்துமூடு, இழுத்துமூடு கூடங் குளம் அணு உலையை இழுத்து மூடு” என்ற ஆவேச முழக்கம் அந்தக் காட்டு வெளியில், கடலலை ஓசையுடன் போட்டிப் போட்டு மேலெ ழுந்தது.

          திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், அம்மக்கள் வெள்ளத்தின் முன் தோன்றி கலைந்து செல்ல வேண்டு கோள் விடுத்தார்; காவலதிகாரிகள் வேண்டுகோள் வைத்தனர். வேண்டு கோள்கள் பின்னர் கட்டளைகளாக மாறின.10.09.2012 அன்று அதிகார வர்க்கத்தின் பாசாங்குகள் மறைந்தன. நயமான சொற்களுக் குள் மறைக்கப்பட்டிருந்த நயவஞ் சகம் வெளிப்பட்டது.

          தடிகள் தாக்கின; கண்ணீர்ப் புகைகுண்டுகள் புகை கக்கின; கையில் ஆயுதமில்லாத மக்கள்! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! தங்களைத் தடி கொண்டு தாக்கிய காவல்படையினர் மீது கடல் மணலை வாரி இரைத்தனர். மகளிர் மணலை இரைத்த போது “மண்ணாய்ப் போக”என்று சாபம் கொடுத்தது போல் இருந்தது. காய்ந்து கிடந்த செடிகளை – மிலாறுகளை எடுத்துக் கொண்டு வீசினர் இளைஞர்கள். காவல் படையினர் மக்கள் மீது கல் எறிந்தனர். இளைஞர்கள் கற்களை திரும்பி எறிந்தனர். பின்வாங்கிக் கொண்டே வந்த மக்கள் கடலுக்குள் இறங்கிவிட்டனர்.

          கடலோர மக்களுக்கு – அதிலும் குறிப்பாக மீனவர்களுக்கு கடல் தாய்வீடு போல! காவல் படையினர் திகைத்து நின்றனர். கடலுக்குள் இறங்க அஞ்சினர். கழுத்தளவு நீரில் நின்றுக்கொண்டு முழக்கமிட்டனர் மக்கள். “இழுத்துமூடு இழுத்துமூடு கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு”.

          “எங்கே உதயகுமார், எங்கே புஷ்பராயன்”என்று காவல் படை யினர் தேடினர். அவ்விருவரையும் கடல் காட்டிற்குள் படகில் அழைத்துச் சென்றுவிட்டனர் இளைஞர்கள்!

          மக்களைக் காவல்துறையினர் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந் தனர். காவல் படையினரின் அட்டூழி யங்களை அறிந்த சுற்று வட்டார மக்கள் அங்கங்கே சாலை மறியல் செய்தனர். மணப்பாடு கிராமத்தில் மறியல் செய்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் தமிழக காவல் துறையினர். அத்துப்பாக்கிச் சூட்டிற் குப் பலியானார் அந்தோணி ஜான்!

          கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் மீது தமிழக அரசும் இந்தியஅரசும் கட்ட விழ்த்து விட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான கொலை வெறியாட்டத்தைக் கண்டித்து அன்று மாலையே தமிழக மெங்கும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. சாலை மறியல்கள் ஆர்ப்பாட்டங்கள் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தன; தொடர்கின்றன. அணு உலை களைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கட்சிகள், இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள் இப்போதும் இப்போராட்டங்களை நடத்துகின்றன. அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

          வடநாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகளும் கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு போராட்ட மக்களுக்கு ஆதரவளித்து செயல் புரிகின்றன. இது மிகப் பெரிய ஆறுதலாக உள்ளது. அன்னா அசாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் இடிந்த கரைக்கே வந்து அம்மக்களை சந்தித்து ஆதரவு நல்கினார். அருந்ததிராய் காவல் படையினரின் காட்டி மிராண்டித் தனத்தைக் கண்டித்தார். போபால் நச்சு வளியால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினர் கூடங்குளம் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
மண்ணின் மக்கள் எதிர்ப்பை படை வலிமையால் அடக்கி விட்டு கூடங்குளத்தில் அணு உலையைச் செயல்படுத்தலாம் என்ற இந்திய அரசின் ஆதிக்க மனப்பான்மை ஓர் ஏகாதிபத்திய மனப்பான்மையாகும். பிரித்தானிய ஆட்சியாளர்கள் ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் மீது ஏவிய அடக்க முறையை இப்போது தமிழக மக்கள் மீது ஏவுகிறது இந்திய ஏகாதி பத்தியம்.

          கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழ்நாட்டு தேவைகளுக்காக அல்ல. இந்திய ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சேர்ந்துள்ள பன்னாட்டு முதலாளிகளின் நிறுவனங்களுக் காக! இலங்கைக்காக! மற்றப் பல மாநிலங்களுக்காக! இது ஓர் ஏகாதி பத்திய உற்பத்தி முறைதான். ஏகாதிபத்திய உற்பத்தி முறைக்குத் தடை கூறுவதை இந்தியாவால் சகித் துக் கொள்ள முடியவில்லை. “கால் நக்கி வாழ வேண்டிய காலனி நாட்டுத் தமிழர்கள் நம்மை எதிர்ப்பதா” என்று இந்திய ஆளும் வர்க்கம் ஆத்திரப்படுகிறது.

          பிரித்தானிய ஆட்சிக்குக் கட்டுப் பட்டுக் குற்றேவல் புரிந்து கொற்றம் நடத்திய சிற்றரசுகளும், சமீன்களும் அந்தக் காலத்தில் இருந்தன அல்லவா. அவை ஆங்கிலேயே ஆட்சி யாளர்களுக்காக சொந்த மக்களை அடித்துத் துன்புறுத்தி அடக்கி வைத் தன. அதே சிற்றரசுதான் தமிழக அரசு. இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏவலுக்கேற்ப, சொந்த மக்களை அடித்தும், சுட்டும் அடக்கி வைக்க முயல்கிறது கூடங்குளம் அணு உலைக்காக!

          தமிழகத்தில் காங்கிரசுக் கட்சி சிறுத்துப் போயிருக்கலாம். அதன் அனைத்திந்தியசெல்வாக்கு சுருங்கி வரலாம். ஆனால் இந்திய விடு தலைப் போராட்டக் காலத்திலும், அதன் விடுதலைக்கு பின்னும் ஏறத்தாழ 100 ஆண்டுகாலம் இந்தியாவிற்குத் தலைமை தாங்கி வந்த காங்கிரசின் அரசியல், பொரு ளியல் கொள்கைகளின் தாக்கம் எல்லாத் தேர்தல் கட்சிகளையும் தொற்று நோய் போல் பீடித்துக் கொண்டது. விடுதலைக்குப் பின் இந்தியா வழங்கிய சில வாய்ப்புகள் அரசியல் கொள்ளைக்கு வாசல் திறந்துவிட்டது. எனவே அவ்வாய்ப்புகள் இந்தியாவை அண்டிப் பிழைக்கும் மனப்பான்மையை தேர்தல் கட்சிகளிடம் வளர்த்து விட்டன. இந்திய ஏகாதிபத்தியத்திற்கு அடியாள் வேலை செய்வதை அரசக் கடமையாக மாநில அரசுகள் கைக் கொண்டன.

          காங்கிரசுக்கு பல பிரிவுகள் இருக்கின்றன. தாழ்த்தப்பட்டோர் பிரிவு, சிறும்பான்மையினர் பிரிவு, மகளிர் பிரிவு, சேவா தள பிரிவு என அவை பல வகைப்படும். அவை போலவே காங்கிரசுக்கு அரசியல் பிரிவுகளும் பல இருக்கின்றன. காங்கிரசின் இடது சாரி பிரிவுகள் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள்; காங்கிர சின் வலது சாரிப் பிரிவு பா.ச.க. காங்கிரசின் திராவிடப் பிரிவுகள் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள். காலப் போக்கில் காங்கிரசின் ”தமிழ்த் தேசியப் பிரிவும்” உருவாகலாம்.

          மேலே சுட்டப்பட்ட கட்சிகள் அனைத்தும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை ஆதரிக்கின்றன. ஏன்? காங்கிரசுடன் நேர் முரண் கொண்ட அரசியல், பொருளியல், இனவியல் கொள்கை எதுவும் இக் கட்சிகளுக்கு இல்லை. இவை அனைத்தும் உலகமயப் பொருளி யலை ஆதரிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங் களை எதிர்த்த வங்காள மக்களை மேற்கு வங்க சி.பி.எம். அரசு சுட்டுக்கொன்றது அண்மைக் கால நிகழ்வாகும். அதே பாணியில், கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் மக்களைத் தாக்குகிறது செயலலிதா அரசு. ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டது.

          நிகரமைச் (சோசலிச) சமூக அமைப்பைக் கட்டி எழுப்பப் பெருந் தொழில் நிறுவனங்களும், மையப் படுத்தப்பட்ட உற்பத்தியும் வழங்க லும் தேவை என்று தொடக்க காலத் தில் லெனின் கருதினார். அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து தமது கருத்தை சரிசெய்து கொள் ளும் வாய்ப்பை வரலாறு அவருக்கு வழங்கவில்லை. ஆட்சிப் பொறுப் பேற்று, உள் நாட்டு எதிர்ப்புரட்சி களை ஒடுக்கி அமைதியாக நிர் வாகம் செய்யும் சூழல் உருவான போது அவர் நோய்வாய்ப் பட்டு, அதன்பிறகு காலமாகிவிட்டார்.

          மிகவும் மையப்படுத்தப்பட்ட உற்பத்திமுறையும், அதே போல் மிகவும் மையப்படுத்தப்பட்ட வழங் கல் முறையும் எந்திரக்கதியில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த தைப் பின்நாளில் கண்ட சேகு வேரா, “இது அதிகார வர்க்கத்தைத் தான் வளர்க்கும். முன் மாதிரியான மனிதனை உருவாக்காது” என்றார்.

          அதே போல் தான் அங்கு ஆனது. உற்பத்தியும் வழங்கலும் மையப்படுத்தப்பட்டது போல் அதி காரமும் மையப்படுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் அசைக்க முடியாத வலுவான அதிகார மையம் உருவானது. ஆளும் கம்யூனிஸ்டு கட்சி அதிகார வர்க்கத்தின் இரும்பு பிடிக்குள் சிக்கிக் கிடந்தது. அதனால் அந்நாட்டு மக்களும் மேலிடத்தின் முடிவுகளுக்கும், கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு அவற்றை நிறைவேற்றி வைக்கும் மனித எந்திரங்கள் ஆக்கப்பட்டனர். மிகவும் மையப் படுத்தப்பட்ட உற்பத்தி – வழங்கல் அமைப்பு (Highly Centralized Production and Supply System) ஏக போக முதலாளியத்திற்கு உரியது. பரவலாக்கப்பட்ட உற்பத்தியும் பகிர்ந் தளிக்கும் முறையும் தான் (De – Cen tralized Production and Distribution System) மக்கள் சார்ந்ததாக இருக்கும். நிகரமையை நோக்கி சமூகத்தை முன்னேற்றுவதாக அமையும்.

          கூடங்குளத்தில் எட்டு அணு உலைகள் தொடங்கத் திட்டம் வைத்துள்ளனர். எட்டு அணு உலைகளில் உற்பத்தியாகும் மின் சாரத்தை இந்தியாவின் எட்டுத் திசைகளுக்கும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளார்கள். இது தான் ஏகாதிபத்திய – காலனிய உற்பத்தி முறை. பொருளுற்பத்தியில் மையக் குவியல் இருந்தால் அதுமைய அதிகாரக் குவியலுக்கு இட்டுச் செல்லுமே அன்றி மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக் காது. பொருளுற்பத்தி முறைக்கும் அரசின் அதிகார முறைக்கும் இடையே எப்போதும் ஒரே தன்மை யான உறவு இருக்கும். மையப்படுத்தப்பட்ட பெருவிகித உற்பத்தி முறை (Centralized Mass Production) அதிகாரக் குவியலை மட்டுமின்றி சூழல் கேடுகளைப் பெருமளவில் உண்டாக்கும்.

          கூடங்குளம் அணு உலைகள் கடலில் வெளியேற்றும் மிக உயர்ந்த வெப்பநிலை நீர் கடல் வாழ் உயிரினங்களை அழிக்கும். மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும். சாதாரண காலத்தில் அவற்றின் கதிர்வீச்சு பல்வேறு நோய்களை வாழும் மனிதர்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் உண்டாக்கும். விபத்து ஏற்பட்டு அணு உலை வெடித்தால் மனிதப் பேரழிவு தான்!

          மனிதகுல வளர்ச்சிக்கு மின்சார தேவை அதிகமாக இருக்கிறதே, அதற்கு என்ன செய்வது என்று வினா எழுப்பப்படுகிறது. அந்தந்த வட்டாரத்தில்,அதனதன் தேவைக்கு, அங்கங்கே உள்ள வாய்ப்புகளுக் கேற்ப சிறு அளவில் சூரிய வெப்பம், காற்றாலை, கடலலை, கரும்புச் சக்கை போன்றவற்றால் மின்சார உற்பத்தி செய்யலாம். நீர் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இடைக்காலத்திற்கு சிறிய அளவில் அனல் மின் சாரமும் உற்பத்தி செய்யலாம். பெரிய பெரிய நிறுவனங்கள், பெரிய கூட்டு குடியிருப்புகள் தங்கள் தேவைக்கு தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்று விதி வகுக்கலாம்.

          சமூக வளர்ச்சிப் பற்றி முதலாளிய சிந்தனையாளர்களின் – பொருளியல்வல்லுநர்களின் கருந்து நிலை, மக்கள் சமூகம் சார்ந்த தன்று; தனிநபர் முன்னேற்றம் சார்ந்தது. பெரும் முதலாளிகளும், பெரும் வணிகர்களும், பெரும் பணக்காரர்களும் மேலும் வளரும் போது அவர்களைச் சார்ந்து தொழில் புரியும், அலுவல்பார்க்கும் சமுதாயத் தனி நபர்களும் அவர்களுக்குரிய விகிதத்தில் வளர்வார்கள் என்பதே மேற்படி வல்லுநர்களின் கருத்தியல்.இவர்கள் கூறும் வளர்ச்சி என்பதன் உண்மையான பொருள் வளர்ச்சி (Development) அன்று; பெருக்கம் (Growth) ஆகும். பெருக் கம் என்பது செங்குத்தானது (Vertical). வளர்ச்சி என்பது சமூகம் தழுவிய கிடை நிலையானது. (Horizo ntal)

          ஏற்கெனவே வசதிபடைத்த பெரும் தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் செங்குத்தான முறையில் பெருக்கம் அடைவதன் மூலம், சமூகத்தில் நடுத்தரப் பிரிவு ஓரளவு வளர்ச்சி அடையும், உழைக்கும் மக்கள் ஓரளவு வாங்கும் சக்தியை வளர்த்துக் கொள்வர் என்பதுதான் முதலாளிய வல்லுநர்கள் முன்வைக்கும் வளர்ச்சிக் கோட்பாடு. ஆனால் அவர்கள் சொல்வது போல் நடுத்தரப் பிரிவு மக்களும் உழைக்கும் மக்களும் வளர்வதில்லை. நடுத்தரப் பிரிவில் ஓர் உயர் நடுத்தரப்பிரிவு உண்டாகி அது மட்டுமே கூடுதல் வசதிகளைப் பெருகிறது. பெரும் பான்மை நடுத்தர மக்களும், உழைக்கும் மக்களும் வாழ்க்கைப் புயலில் அன்றாடம் அல்லாடுகிறார்கள்.

நாம் முன்வைக்கும் சமூகம் முழுமைக்குமான கிடைநிலை வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பரவலாக்கப்பட்ட உற்பத்தி முறையும், பரவலாக்கப்பட்ட வழங்கல் முறையுமே ஒத்திசைவானவையாகும்.

          முதலாளியக் கட்சிகளும், அவற்றைப் போலவே சிந்திக்கப் பழகிவிட்ட இடது சாரிக்கட்சிகளும் மிகவும் மையப்படுத்தப்பட்ட தொழில் உற்பத்தி முறையையும் வழங்கல் முறையையும் முன்வைக்கின்றன. காந்தியத்துடன் நமக்கு வேறு சில முரண்பாடுகள் இருப்பினும் அது முன்வைக்கும் பரவலாக்கப்பட்ட அதிகாரம், பரவலாக்கப்பட்ட உற்பத்தி முறை, வழங்கல் முறை ஆகியவை நமக்கு இசைவானவை.

          இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய சிந்தனைகள் வளர்ந்துள்ள காலம் இது. 19ஆம் நூற்றாண்டிலேயே கார்ல் மார்க்சு இது பற்றிக் கூர்த்த மதியுடனும் தொலை நோக்குப் பார்வையுடனும் கூறியவை நம்மை வியக்கவைக்கின்றன. ’மூலதனம்’ நூலில் 3வது பாகத்தில் மார்க்சு பின் வருமாறு எழுதுகிறார்.

          “உயர் வடிவ சமூகப் பொருளியல் அமைப்பு என்ற நிலையிலிருந்து நோக்கினால், சகமனிதனை ஒரு மனிதன் தனது உடைமை ஆக்குவது எவ்வளவு முட்டாள் தனமோ அதுபோல் முட்டாள் தனமானது தான் இப்புவியின் மீது ஒரு தனிமனிதன் உரிமைக்கோருவதும். ஒரு முழுச்சமூகமோ அல்லது ஒரு தேசமோ அல்லது ஒரு காலத்தில் நிலவும் சமூகங்கள் அனைத்தும் இணைந்தோ கூட அவர்கள் தங்களை இப்புவியின் உடைமையாளர்கள் என்று கூறிக் கொள்ள முடியாது. அவர்கள் இந்தப் பூமியின் துய்ப்பாளர்கள், பயனாளிகள்; அவ்வளவுதான்! ஒரு நல்ல குடும்பத்தின் தலைவன் போல் அவர்கள் நடந்துக் கொள்ள வேண்டும். இப்போது உள்ளதைவிட உயர் நிலையில் இந்தப் பூமியை அடுத்தத் தலை முறை யிடம் கையளிக்க வேண்டும்” (Capital – 3rd Volume – page 911)

          ஜெர்மன் சோசலிஸ்டுகள் கோதாத் திட்டம் (Gotha Programme) என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி இருந்தார்கள். அது பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டார் கார்ல் மார்க்சு அந்த கோதாத் திட்டத்தில் ”உழைப்புதான் எல்லாச் செல்வத்தின் ஊற்றுக் கண்ணாகும்” என்று குறிப்பிட்டிருந்தனர். அக்கருத்தை மறுத்து பேசினார் மார்க்ஸ். “உழைப்பு இயற்கையைச் சார்ந்துள்ளது. எல்லாச் செல்வத்தின் ஊற்றுக்கண்ணும் உழைப்பு மட்டுமே ஆகாது. பொருளாயதச் செல்வங்கள் அனைத்திற்கும் அதே அளவு இயற்கையும் ஊற்றுக்கண் ஆகும். என்றார்”. (Critique On Gotha Programme p.8) குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” என்ற நூலில் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்.


          “மனிதன் தனது (உடல் உறுப்பு) மாற்றங்களால் தனது குறிக்கோளுக்கு இயற்கையை ஊழியம் புரியச் செய்கிறான். அதற்கு எசமானன் ஆகிறான். மனிதர்களுக்கும் இதர விலங்குகள் அனைத்திற்கும் இடையே உள்ள இறுதியான, சாரமான வேறுபாடு இதுவே. இந்த வேறுபாட்டை நிகழ்த்துவது உழைப்பே என்பதை மீண்டும் ஒருமுறை கூற வேண்டும்.


          இருந்த போதிலும் இயற்கையின் மீது நடந்த மானிட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையே. ஆயினும் இரண்டாவது, மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்ப்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்து விடுகின்றன.” (தமிழ்) பக்கம் 19, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)


          இயற்கையை வெல்வதல்ல அதனோடு இணக்கம் காண்பதே நல்வாழ்விற்கான வழி. இயற்கையை வெல்வதாக நினைத்து வரை முறையின்றிச் செயல்பட்டால் அது நம்மை பழிவாங்கிவிடும் என்கிறார்.


          தமிழர்கள் பழங்காலத்தில் இயற்கையை பேணிப்பாதுகாப்பதில் முழு அக்கறை காட்டினார்கள். நிலம் அது சார்ந்த இயற்கைச் சூழல் ஆகியவற்றோடு பொருந்தக்கூடிய வாழ்வே வேண்டும் என்ற கருத்தில் ஐந்திணைகளாக நிலத்தைப் பிரித்தனர். அது அதற்கும் உரிய தாவரங்கள், தொழில்முறை, வாழ்வியல் பண்புகள் என்று வகுத்தனர். நிலமும் காலமும் முதற்பொருள் என்றனர் (தொல்காப்பியம்).

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் / தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்ற வள்ளுவன் மனிதர்களை மட்டுமின்றி பலவகை உயிரினங்களை பாதுகாப்பதே அறம் என்றார்.


          அதிகாரப் பரவல், வட்டார தேவைகளை நிறைவு செய்யும் பரவலாக்கப்பட்ட சிறிய அளவிலான உற்பத்தி மற்றும் வழங்கல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் அறிவியலை பயன்படுத்தும் வரம்பு, இயற்கையை சேதப்படுத்தாமல் அதை மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கையளித்தல், பகுத்துண்டு பல்லுயிர் காத்தல் போன்ற கோட்பாடுகள் அனைத்தும் தமிழ்த் தேசியத்திற்குரியவை.மையத்தில் அதிகாரங்களை குவித்தல், மையப்படுத்தப்பட்ட பெருந்தொழிலகள், சுற்றுச்சூழல் கேடுறும் வகையில் அமையும் மிகை நுகர்வுப் பண்பு போன்றவை ஏகபோக முதலாளிய – ஏகாதிபத்தியத்திற்கு உரியவை.

          இந்தப் புரிதல்களுடன் மற்றெவரையும்விடத் தமிழ்த் தேசியர்கள் கூடுதலாக கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும். உலகெங்கும் உள்ள அணு உலைகளை மூடிட வலியுறுத்த வேண்டும்.

நமது முழக்கங்கள்:

1. இந்திய அரசே கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு
2. தமிழக அரசே, கூடங்குளம் – இடிந்தகரை பகுதிகளிலிருந்து காவல் படையினரைத் திரும்பப் பெறு
3. துப்பாக்கிச் சூடு, தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு
4. காவல்துறை அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமை.
5. தோழர்.சு.ப.உதயகுமார் உள்ளிட்டோர் மீது உள்ள வழக்குகளைத் திரும்பப் பெறு

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 செப்டம்பர் 15-30 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் பெ.மணியரசன் இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

கூடங்குளம் : போலீசின் வெறியாட்டம் !

கூடங்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசு நடத்தியுள்ள ரவுடித்தனங்கள் வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களிடம் நேரில் விசாரித்தறிந்தவற்றை மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் விவரிக்கிறார்.

                    


"கூடன்குளம் ஆரம்பிக்கும்போதே போராடியிருக்கலாமே”





                              


`இவ்வளவு செலவு பண்ணி கட்டினப்பிறகு எதிர்க்குறதுக்குப்பதிலா ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்க வேண்டியது தானே..’’ என்று என்ன கையப்பிடிச்சு இழுத்தியா.. ரேஞ்சுக்கு திரும்ப திரும்ப பேசும் அணு உலை ஆதரவாளர்களுக்காக இந்த படங்கள்..

 வெளிஉலகம் தெரியாத அறிவுசீவிகள் ``கூடன்குளம் ஆரம்பிக்கும்போதே போராடியிருக்கலாமே” என்று கேட்கிறார்கள்.. ராஜிவ்காந்தி அடிக்கல் நாட்டுவதற்கு வந்து மதுரையோடு திரும்பி போனதும்.. கன்னியாகுமரியில் 1989ல் நடந்த துப்பாக்கிச் சூடும் அவர்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை..மக்கள் போராட்டங்களை பகிருங்கள்..


உதயகுமார், புஷ்பராயன், மை.பா. அண்டன் கோமஸ், ஒய்.டேவிட் 

இன்னும் பலர் களப் போராட்டத்தில்...........
                      


                      

                            
                      
                       
                       
                       









        

பொருட் செலவும் உயிர் பலியும் ஒன்றாகி விடாது நாங்கள் பணம் செலவு செய்து ஒரு கல்லறை கட்டிவிட்டோம் தயவு செய்து நீங்க வந்து அந்த கல்லறையில் படுத்து கொள்ளுங்கள் என்று சொன்னால் செய்வீர்களா ?

பொருட் செலவும் உயிர் பலியும் ஒன்றாகி விடாது நாங்கள் பணம் செலவு செய்து ஒரு கல்லறை கட்டிவிட்டோம் தயவு செய்து நீங்க வந்து அந்த கல்லறையில் படுத்து கொள்ளுங்கள் என்று சொன்னால் செய்வீர்களா 


                              


`இவ்வளவு செலவு பண்ணி கட்டினப்பிறகு எதிர்க்குறதுக்குப்பதிலா ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்க வேண்டியது தானே..’’ என்று என்ன கையப்பிடிச்சு இழுத்தியா.. ரேஞ்சுக்கு திரும்ப திரும்ப பேசும் அணு உலை ஆதரவாளர்களுக்காக இந்த படங்கள்..


// வெளிஉலகம் தெரியாத அறிவுசீவிகள் ``கூடன்குளம் ஆரம்பிக்கும்போதே போராடியிருக்கலாமே” என்று கேட்கிறார்கள்.. ராஜிவ்காந்தி அடிக்கல் நாட்டுவதற்கு வந்து மதுரையோடு திரும்பி போனதும்.. கன்ன
ியாகுமரியில் 1989ல் நடந்த துப்பாக்கிச் சூடும் அவர்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை..மக்கள் போராட்டங்களை பகிருங்கள்..

உதயகுமார், புஷ்பராயன், மை.பா. அண்டன் கோமஸ், ஒய்.டேவிட் 

இன்னும் பலர் களப் போராட்டத்தில்...........
                      


                      

                            
                     
                       
                       
                       









        

போபால் விஷவாயு விபத்தில் செத்துப் போன நீதி...!


போபால் விஷவாயு விபத்தில் செத்துப் போன நீதி...!



                                 
   டிசம்பர் 2, 1984 போபாலில், மக்கள் இரவு உணவருந்திவிட்டு, எதிர்காலக் கனவுகளுடன் உறங்கச் சென்றார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தங்களுக்கு நேரப்போகும் பேராபத்தால் மீளா உறக்கத்தில் ஆழப்போகிறோம் என நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. நல்லிரவுக்கு அருகாமையில் கடுமையான இருமல் மற்றும் கண் எரிச்சல் எற்பட்டதும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அடித்துக்கொண்டு வெளி
யே
றினர். ஊரே அலறியடித்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஓடுவதைக் கண்டு மக்கள் திகைத்தனர். ஓர் விஷவாயு அருகிலிருந்த யூனியன் கார்பைடு கம்பெனியிலிருந்து கொல்ல வந்தது. பொழுது விடிந்தபோது விஷவாயு 5,000 உயிர்களைப் பலிகொண்டிருந்தது. அக்கொடிய வாயுவின் பெயர் மெதில் அய்சோ சயனைடு.

உலகின் மிகப் மோசமான தொழிற்சாலை விபத்தென உலகம் அலறியது. மொத்தத்தில் 25,000 பேர் இறந்தனர். இலட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சரிசெய்ய முடியாத அளவிற்கு சுற்றுசூழல் நாசம் செய்யப்பட்டது. விபத்திற்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும், இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு கோரி பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதிமன்றங்கள் தங்களுக்கு விரைவில் நீதி வழங்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் ஏற்பட்டது. நீதித்துறை இவ்வழக்கை மிகவும் தாமதமாக நடத்தியது. இறுதியில் 178 சாட்சிகளுடன் 30,000 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கில் 26 ஆண்டுகள் காத்திருக்கும்படி செய்தார் நீதிபதி மோகன் திவாரி.

சூன் 7 அன்று அளித்திருக்கும் தீர்ப்பு பேரதிர்ச்சியை உண்டு பணர்ணிவிட்டது. கொடிய குற்றங்களுக்கு குறைந்த தண்டனைகள் வழங்கியது மக்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. 25,000 மக்களைக் கொன்றவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. நம்முடைய ஊர்களில் உணர்ச்சி வசப்பட்டு செய்யப்படும் கொலைக்கு கூட ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் தங்களின் இலாபவெறியால், அலட்சியத்தால் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்ற நிறுவன முதலாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை. ஏனெனில் மக்களைவிட பன்னாட்டு முதலாளிகளும், பணக்காரர்களும் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பது உறுதியாகிறது. இதில் தண்டனை பெற்றவர்களுக்கு உடனே பிணை கிடைத்ததால் அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்பதிலிருந்து, இந்நாட்டில் நீதி, நியாயம் என்ற ஏதாவது இருக்கிறதா என நம்மை கேள்வி கேட்க வைக்கிறது.
போபால் பேரழிவினைப் பற்றி சரியான புரிதல் எற்பட நாம் அந்நிறுவனத்தைப் பற்றியும், அதன் செயல்படும் தன்மை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் துணை அமைப்பான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட், 1969-இல் போபாலில் 67 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை தொடங்கியது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் செயற்கை உரங்களைத் தயாரித்து விவசாய விளை நிலங்களை, மலடான நிலைக்கு மாற்றிய நிறுவனங்களில் இது முக்கியமானது. 1979-இலிருந்து மிகவும் நச்சுத்தன்மையுடைய வாயுவான மெதில் அய்சோ சயனைடைத் தயாரித்தது. பல தொழில்நுட்பக் கோளாறுகள் அத்தொழிற்சாலையில் இருந்தாகப் பலர் கூறியும், அந்நிறுவனம் அதைக் கண்டுகொள்ளவில்லை. 1983 மார்ச் 4-இல் அதாவது அக்கொடிய சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு சமூக அமைப்பு தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்று அந்நிறுவனத்தின் செயல் மேலாளர் முகுந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ஏப்ரல் 28-இல் அவர் அனைத்து பாதுகாப்பும் போதுமானதாக உள்ளதென பதில் தந்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டே அக்கொடிய விபத்து நடைபெற்றது.

அக்கோர தினத்தன்று, 610 என்ற எண் கொண்ட தொட்டியில் மட்டும் அளவுக்கு அதிகமாக 40 டன் மெதில் அய்சோ சயனைடு வைக்கப்பட்டு இருந்தது. இந்த சயனைடின் கொதிநிலை 31.1 டிகிரி. எனவே, இதை குளிர் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். இந்த வேதிப்பொருளுக்கு மணம், நிறம் கிடையாது. எனவே, இது பரவினால் தரியவும் வாய்ப்பில்லை. அவ்வாயு வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால், போபாலில் இந்த அளவு 11 டிகிரிக்கு பதிலாக 20 டிகிரிகளாக வைக்கப்பட்டிருந்தது. அவ்வாயு கசிந்து அன்று வீசிய பலமான காற்றினால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அவ்வாயு புகுந்தது. முதலில் கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலை மட்டுமே உணரமுடிந்தது. முதலில் யாரோ மிளகாய் மூட்டையை எரிக்கிறார்கள் என்றே மக்கள் நினைத்துள்ளனர். அதற்குள் தன் கொடிய வேலையை அவ்வாயு செய்யத் தெடங்கியது. பொழுது புலர்வதற்குள் மக்கள் குடியிருப்பை சுடுகாடாக மாற்றிச் சென்றது. போபால் பேரழிவின் அடையாளமாக இன்று கருதப்படும் அந்த கண்கள் பொங்கிய நிலையில் புதையுண்ட குழந்தையின் பெயர் இரகு ராய்.

விபத்தின் தாக்கம் அதோடு நின்றுவிடவில்லை. அடுத்த ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விஷவாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனடியாகக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், 21 குழந்தைகள் குறையுடன் பிறந்ததாகவும், 27 குழந்தைகள் இறந்தே பிறந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஆலையானது, விபத்து ஏற்பட்ட பிறகு அரசால் மூடப்பட்டது. 1994-இல் நடத்தப்பட்ட பொது ஆய்வின்போது, 44,000 கிலோ நச்சு தாரும், 35,000 கிலோ அல்பா நெப்தாலுமர், திறந்த வெளியில் டிரம்மிலும், கோனிப்பையிலும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் போட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 18,000 டன் நச்சுக்கழிவுகள் அங்கிருக்கும் விஷகுளத்தின் அடியில் புதையுண்டுள்ளது. 23,000 டன் வேதிப்பொருட்கள் தரையில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அத்தொழிற்சாலை தொடங்கி நாற்பது ஆண்டுகளாக அவை மழையால் பெரும்பகுதி மண்ணிலும், நிலத்தடி நீரிலும் கலந்து தொடர்ந்து இன்றும் மக்களுக்குக் கெடுதலை எற்படுத்தி வருகின்றது.
மத்திய அரசு 2006 அக்டோபர் 26-இல் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த உறுதிமொழி அறிக்கையில் மொத்தம் 5,58,125 பேர் விஷவாயு விபத்தின் மூலம் காயம்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் 92.5% அதாவது 5,16,406 பேர் மிகவும் சிறிய காயம்பட்டதாகத் தரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்புகளும், குடல் பாதிப்புகளும் சிறு காயங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் கொடுமையானது. 38,478 பேர் (6.8%) தற்காலிக அரை-இயலாமைக்கு ஆளாயினர் என்றும், வெறும் 0.7 சதவீதத்தினர், அதாவது 3,241 பேர் மட்டுமே முழு இயலாமைக்கு ஆளாயினர் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதிப்புகளின் அளவைக் குறைத்துக் கூறுமாறு மருத்துவர்களை அரசு கடுமையாக அழுத்தம் கொடுத்தாக, போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

போபால் பேரழிவின்போது அதன் தலைமை இயக்குநர் ஆண்டர்சன் டிசம்பர் 7 அன்று கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் நேர் நிற்பேன் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு பின்னர்தான் 25,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டான். அன்றைய போபால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அரசுக் காரில் ஆண்டர்சனை தப்புவிக்க விமானம் நிலையம் வரை சென்று வழியனுப்பினர். இதை ஒரு பிரான்சு ஊடகம் படம் எடுத்த பிறகே வெளியுலகத்திற்குத் தரிய வந்தது. பின்னர் ஆண்டர்சன் சகல அரசு மரியாதையுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றான். அப்பொழுதே இந்தியாவை ஆண்ட காங்கிரசு அரசு, கொலைகாரன் ஆண்டர்சனுக்கு உற்ற துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தது. எதிர்கட்சிகளும் எதிப்பதுபோல் மக்களிடம் பாசாங்கு செய்துகொண்டே பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாவலனாகவே இருக்க விரும்புகின்றன. இப்போது வீரவேசம் போடும் பா.ஜ.க. தன் ஆட்சிக்காலத்தில் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வந்து தண்டனை வாங்கித்தர விரும்பவில்லை. எனவே அவர்கள் ஆண்டர்சனுடைய வழக்கறிஞர் சார்ந்திருக்கும் சட்டக்குழுமத்தின் மற்றொரு வழக்கறிஞரிடம் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வரமுடியுமா என வல்லுனர் கருத்து கேட்டது. அதற்கு அந்த வழக்கறிஞர் முடியாது என கருத்து கூறியவுடன் ஆண்டர்சன் வழக்கைத் தூக்கி குப்பையில் வீசியது பா.ஜ.க.
மக்களிடம் போபால் பிரச்சனை பெரிய அளவில் வெடித்த பின்பு இப்பொழுது அனைத்து அரசியல் கட்சிகளும் ஆண்டர்சனை இந்தியா கொணர்டுவந்து தண்டிக்க வேண்டுமென முழக்கம் போடுகின்றனர். இது சரியானதுதான். ஆனால் இந்த விசயத்தில் எந்தக் கட்சிகளும் மனச்சாட்சியுடன் செயல்படவில்லை. ஏற்கனவே ஆண்டர்சனுக்கு 90 வயது ஆகிவிட்டது. அமெரிக்கா இன்னும் அவனை அனுப்பமாட்டேன் என அடாவடி செய்கிறது. அப்படியே இந்திய மக்களின் கோபத்தின் காரணமாக கொண்டுவந்தாலும் வழக்கு விசாரணை என்ற பெயரில் காலந்தள்ளி அவனாகவே வாழ்க்கை இன்பங்களை அனுபவித்துவிட்டு இறந்தபிறகு வழக்கை முடித்துக் கொள்வது தான் இந்த அரசியல் கட்சிகளின் திட்டம்.

இதுவரை போபால் விபத்தில் நம் நாட்டின் அரசியல் கட்சிகள் எவ்வாறு நம் நாட்டுக்கும் நம் நாட்டு மக்களுக்கும் பச்சை துரோகம் செய்தனர் என்பதை பற்றி பார்த்தோம். அவர்கள் அதோடு நின்றுவிடுகிறார்களா என்ன? இன்னும் பல வழிகளில் பன்னாட்டு, உள்நாட்டு பணக்காரர்களின் பணப்பைகளை நிறைப்பதற்காக ஏழை மக்களை பலிகடாக்களாக ஆக்குவதற்கு சுயநலங் கொண்ட அரசியல் கட்சிகள் தயாராய் உள்ளன. போபாலைப் போன்று மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கும் சில உதாரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

நம் நாடெங்கிலும் இரசாயனத் தொழிற்சாலைகள் பல ஆயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. அவற்றில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் கடும் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றில் பலவும் முறையான அனுமதி இல்லாமலேயே இயங்கி வருகின்றன. நம் தமிழ்நாட்டில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மாவட்டங்களில் கொடிய நச்சுத்தன்மை ஏற்படுத்தும் நிறுவனங்கள் பல உள்ளன. குறிப்பாக, கடலூரில் சிப்காட் தொழிற் பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளது. தொழிற்பேட்டைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-இல் இங்கு ஆய்வு செய்த மத்திய அரசின் 'நீரி சூழல் நிறுவனம்” இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது என அறிக்கை அளித்தது. நான்கு ஆண்டுகளாக சமுதாய சுற்றுச்சுழல் கண்காணிப்புக் குழு எடுத்த 12 மாதிரி ஆய்வுளில் அங்கு வெளியேறும் 25 வேதிக் கழிவுகளில் 12 கழிவுகள் புற்றுநோயை உண்டாக்குபவை எனத் தரிய வந்துள்ளது. அதேபோல் டால்மியாபுரம் சிமெண்டு ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில் மூளையைப் பாதிக்கும் காரியம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருக்கின்றன.
இதெல்லாம் போதாதென்று அணுக்கழிவுகளால் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வந்துவிட்டது இந்திய அமரிக்க '123' ஒப்பந்தம். இவ்வொப்பந்தப்படி, அமரிக்காவின் அணுசக்தி நிலையங்கள் கட்டும் தனியார் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக இந்தியாவில் பல புதிய அணுசக்தி நிலையங்கள் கட்டத் திட்டமிட்டுள்ளன. மக்களின் நலன்களை துச்சமாக மதிக்கும் அரசுகள், தனியார் பகாசுர நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாயுள்ளது. அணுவிபத்தின்போது அந்நிய நிறுவனங்களுக்கு எந்தப்பரிய பாதிப்பும் ஏற்படாமல் அவர்களைக் காப்பாற்றுவதற்கே 'அணுசக்தி பொறுப்பான்மைச் சட்டம்' என்ற சட்ட மசோதாவைக் கொண்டுவந்து, தங்களின் எஐமான விசுவாசத்தைக் காட்டுகிறது இந்திய அரசு. இச்சட்டப்படி அணுவிபத்து ஏற்படும் போது, இழப்பு எவ்வளவு பரியதாக இருந்தாலும், அணு உலையை இயக்குபவர் ரூ.500 கோடி இழப்பீடு கொடுத்தால் போதும் என கூறப்பட்டுள்ளது. அணு விபத்தின்போது இழப்பீடுக்கான உச்சவரம்பை இந்தியா ரூ.500 கோடி என நிர்ணயம் செய்திருப்பது பைத்தியக்காரத்தனமானது. அமொpக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்தியாவைப் போன்று எந்த உச்சவரம்பையும் வைத்துக்கொள்ளவில்லை. மேலும் இந்த 500 கோடி இழப்பீடு என்பது மிக மிகக் குறைவு. இந்தியச் சட்டத்திற்கு நர்மாறாக, ஜப்பானில் ஒரு சட்டம் உள்ளது. அதன்படி, அணுசக்தி விபத்து ஏற்பட்டால் அதற்குக் காரணமான நிறுவனம் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயம் செய்திருக்கின்றது. அந்தத் தொகை ரூ.130 பில்லியன் கோடி. இது இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ள 'உயர்ந்தபட்ச இழப்பீட்டு தொகையை” விட பல ஆயிரம் மடங்கு அதிகம். அணு விபத்தென்பது காலங்கடந்து பாதிப்புகள் எற்படுத்தும். ஆனால், இச்சட்டப்டி விபத்து ஏற்பட்ட பிறகு 10 ஆண்டுகள் கழித்து எற்படும் எந்த பாதிப்பிற்கும் நிறுவனம் பொறுப்பாகாது (விதி 18). இதன்மூலம் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் மனிதர்களின் இழப்பீடு கோரும் உரிமையைப் பறிக்கிறது இச்சட்டம். இது மிகப் பரிய மனித உரிமை மீறலாகும். தீர்ப்பை எதிர்த்து எந்த இந்திய சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யமுடியாது (விதி 35). பல்வேறு எதிர்ப்புகளால் இச்சட்ட மசோதா இன்று சட்டமாகாமல் இருக்கிறது. ஆனால் மன்மோகன்-சிதம்பரம் கும்பல் இதை எப்படியாவது அடுத்த தர்தலுக்குள் சட்டமாக்கிவிட முயற்சிக்கும்.

போபால் தீர்ப்பைப் பார்த்து விழிப்படைந்து தமிழகத்தில் கூடங்குளம் அணுஉலை பணிக்கு மக்களின் எதிர்ப்புக்குரல் வலுவடைந்துள்ளது. மக்களின் எதிர்ப்பு குரல், தெரு நாடகங்களாகவும், பொதுக் கூட்டங்களாகவும் கிராமந்தோரும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கூடங்குளத்தில், விரிவாக்கமாக 3 புதிய அணு உலைகள் கட்ட அரசு திட்டமிட்டுவருவது மக்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏதாவது விபத்து நடந்தால் பக்கத்திலுள்ள 6 மாவட்டங்களின் மக்களை வெளியேற்றும் அவசரத் திட்டம் பற்றி ஏதும் அம்மாவட்ட ஆட்சியர்கள் கேள்விபட்டதாகக்கூட அறிய முடியவில்லை. இதுதான் இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் மீது வைத்துள்ள பற்று.

போதும் இதுவரை நாம் காத்து வந்த மௌனம். போபால் பேரழிவிலிருந்து நாம் பெற்ற படிப்பினை என்ன? 1984-இல் ஒரு ஆண்டர்சன் மக்களை கொன்றான். இப்போது பல ஆயிரக்கணக்கான ஆண்டர்சன்கள் தம் இலாப வெறிக்காக நம்மைக் கொல்ல அலைந்து கொன்டிருக்கிறார்கள். இது செயல்படுவதற்கான நேரம்.




-செ. இராசேந்திர பிரசாத்,

சென்னைப் பல்கலைக்கழகம்



கருணாநிதி துரோகி, எட்டப்பன் - ஏன் ?

         கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான சில விளக்கங்கள் 
தாரத்தோடு: (இவற்றை படித்துவிட்டு நண்பர்களிடம் பகிருங்கள். திமுக, அதிமுக என்ற இரு உதவாக்கரை கட்சிகளையும் அப்புறப்படுத்துவோம்)




                                                  

1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார்

2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது.

3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது

4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்

5. கருணாநிதி ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’ என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது.

6. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது.. மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணாநிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்

8. தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல் எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.

10. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் . அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

11. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் அடைக்கப்பட்டார்

12. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு. பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது ந்டந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது

15. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.

17. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம் கொண்டுவந்து தடுத்தார்.

18. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை. மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20 சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும், தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று ந்டத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை..

22. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி, மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர் தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

24. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25 சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்ப்ட்டதால் ‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தது

27. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும் மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது

30. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

31. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

32. இது தவிர இது தவிர இவை அனைத்தும் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிர ஊரிலும் பொய் பேசியதை திமுக கண்டிக்கவே இல்லை...

33. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை.

34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.

2009 போர் நடக்கும் வரை ந்டந்த அடக்குமுறைகள் இவை..

போர் நடந்த பிறகு 2009-2011 இரண்டு வருடங்களில் செய்த அயோக்கியதனம் இன்னும் அதிகம்