Like me

Sunday, July 22, 2012

‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு."- காமராஜர்

                    





     இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...


“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....





நன்றி - ஏகலைவன். பா

SAVE GIRLS " SAY NO ABORTION"

         

"பகுத்தறிவு பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதினாலே"






 

























"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது"

படத்தில் சிறுவர்களுடன் இருப்பவர்கள்
Dinesh Kumar
Seelan Eelamainthan

18-05-2012 அன்று கோவையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விடியற்காலையில் சென்னையில் இருந்து தோழர்களுடன் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன், மதியம் சுமார் 12.30 மணி இருக்கும், ஈரோடில் வண்டி நின்றதும் படத்தில் இருக்கும் இரு சிறுவர்களும் அவரது தந்தையும் வண்டியில் ஏறினார்கள், அச்சிறுவர்களுடன் ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது, கசப்பானது, இனிமையானதும் கூட

இரு சிறுவர்களையும் மடியில் அமர்த்தி பொழுது போக்கி கொண்டிருந்தோம், அவர்கள் கோவையில் உள்ள SBOA பள்ளியில் படிக்கிறார்கள், பிறந்தது ஈரோடாக இருந்தாலும் வாழ்வது எல்லாம் கோவையில்தான் என கூறினார்கள், நாங்கள் கேள்வி கேட்க அவர்கள் சொல்லிய பதில் மூலம் எந்த அளவுக்கு அவர்களிடம் நம் சமூகம் திணிக்கிறது என நீங்கள் புரிந்து கொள்ளலாம்

.
.
.
.

கேள்வி:உங்கள் பெயர் என்ன?
பதில்: விஷாந்த், நிஷாந்த்

கேள்வி: உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்
பதில் : விஜய், சூர்யா, ஆர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு

கே: ஏன் விஜய் புடிக்கும், அஜித்த பிடிக்காதா?
ப: அஜித்துக்கு நடிக்க தெரியாது, விஜய்க்கு நடிக்க தெரியும்

கே: இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரு?
ப: காந்திஜி, நேருஜி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி

கே: நேதாஜி, பகத்சிங் யாருன்னு தெரியுமா?
ப: தெரியாது

கே: IPL பாக்குறீங்களா??
ப: ஆமா

கே: IPL ல எத்தனை டீம் இருக்கு? யாரு முதல்ல இருக்குறது?
ப: 9 டீம்ஸ், முதல்ல இருக்குறது டெல்லி டீம்

.
.
.
.

(பின்னர் அலைபேசியில் இருக்கும் புகைப்படத்தை காட்டி இவர்களை யாரென்று தெரியுமா என கேட்டோம்)

புகைப்படம்: "பிரபாகரன்" (ராணுவ உடையில்)
பதில்: இவர் ஒரு மிலிட்டரி மேன்

புகைப்படம்: "பெரியார்" (அவர்கள் பிறந்தது ஈரோடு என்பதால் ஆர்வமோடு இருந்தோம்)
பதில்: இந்த சாமியார எங்கயோ பாத்து இருக்கேன்

புகைப்படம்: "அன்னை தெரசா"
பதில்: போதி தர்மர்

.
.
.
.

கே: உங்க பள்ளிகூடத்துல இங்கிலீஷ் தவிர வேற என்ன மொழி சொல்லி கொடுக்குராங்க?
ப: இந்தி, சமஸ்கிருதம், மேத்ஸ், சைன்ஸ்

(இவர்களுக்கு மொழிக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் சொல்லாமலேயே கல்வி முறை இருப்பதை கவனிக்கலாம்)

கே: தமிழ் சொல்லி கொடுக்குறது இல்லையா?
ப: அதுவும் ஒரு சப்ஜெக்ட் இருக்கு, அத படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு

(அவர் அப்பா விடம் கேட்டோம், "நீங்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்களா?" என்று, அவர் "ஆம்" என்று கூறி தலை குனிந்தார்)
.
.
.
.

#இவர்கள் மீது சிறு வயதிலேயே இவர்களின் வரலாறை மறைத்து நஞ்சை புகுத்துகிரார்கள் என்பதை கவனிக்கலாம், இப்போது இருக்கும் பாடத்திட்டங்கள் மூலமாக போதையை திணித்து கேள்வி கேட்கும் சிந்தனையை அழிப்பதை பார்க்கலாம், அடுத்த தலைமுறை??????


இவர்களுக்கு கேள்வி கேட்கும் முறையை சொல்லி கொடுக்க வேண்டும் என நல்லதிற்க்காக மூளை சலவை செய்தோம், எதற்கெடுத்தாலும் அவர்கள் பதில் "டீச்சர்" இப்படித்தான் சொல்லி கொடுத்தாங்க என்றே வந்தது,

விதைப்பை நாங்கள் ஆரம்பித்து வைத்தோம் பின்னர அந்த சிறுவர்களுக்குள்ளேயே விவாதித்து நல்ல முடிவுக்கு வந்தது ஆச்சர்யம் தான், இறுதியில் அச்சிறுவர்கள் "டீச்சர் தப்பு தப்பா சொல்லி கொடுக்குறாங்க, அவங்களை நான் கேள்வி கேட்டே கவனிச்சிக்கிறேன்" என்ற முடிவுக்கு வந்தனர், அவர்கள் நடத்திய ஒரு விவாதத்தைதான் படமாக போட்டுள்ளேன், போராளிகளை பற்றியும், நாம் எப்படி அடிமையாக இருக்கிறோம் என்பதை பற்றியும், நம் நிலையையும் விதைத்தோம், போகும் போது போராளிக்கான அடையாளமான கையை உயர்த்தி காட்டுதலை வினாடிக்கு ஒரு முறை திரும்பி திரும்பி எங்களிடம் காட்டியது திருப்தியை தந்தது.. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது


இவர்களுக்கு படித்து விட்டு மற்றவர்களிடம் அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்று தான் மற்ற மொழிகள் திணிக்கபடுகிறது, தொழில் தொடங்க வேண்டும் என்ற முறையை யாரும் சொல்லி கொடுப்பதும் இல்லை, அப்படி செய்தால் இவர்கள் முன்னேறி விடுவார்களே!!!

!
!
!

"பகுத்தறிவு பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதினாலே"

மாய உருவம்

                                    




பல வார இதழ்கள் அரசியல்வாதிகளுக்கே கூஜா தூக்கி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன, ஆனால் அதில் சில விதி விலக்கு வார இதழ்களும் உண்டு,cமக்களிடம் செய்திகளை சேர்ப்பதில் மற்ற வார இதழை காட்டிலும் நம்பகத்தன்மை வாய்ந்தது

முதலாளித்துவத்தை பின்பற்றும் அரசாங்கம் எப்பொழுதும் தன்னை எதிர்ப்பவர்கள் மீது ஒரு போலி உருவத்தை கொடுக்கும், அதாவது அவர்களை தீவிரவாதிகள், கொள்ளையர்கள், என ஒரு மாய தோற்றத்தை கொடுக்கும், அதனையும் கேள்வி கேட்க்காத மக்கள் நம்பிவிடுவார்கள், அந்த மாய தோற்றத்தை மக்களிடம் தோலுரித்து காட்டும் வேலையைத்தான் நடுநிலையான பத்திரிக்கைகள் செய்கின்றன

சமீபத்தில் மாவோயிஸ்ட்டுகளின் நிலைமையையும், அவர்கள் மீது அரசாங்கம் போர்த்தியுள்ள ஒரு மாய தோற்றத்தையும் "குமுதம் ரிப்போர்ட்டர்" தோலுரித்து காட்டியது வரவேற்கதக்கதே , ஆனால் கடந்த வாரம் வெளியான இதே வார இதழில் வீரப்பனை "சந்தன கடத்தல்" என்ற அடை மொழியுடன் கட்டுரை தீட்டி உள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது, இவர்களும் சாதாரண மக்களை போல அரசாங்கம் கொடுத்த மாய உருவத்தைதான் பயன்படுத்துகிறார்கள் என்பது, இதுவும் ஒரு தினமலராகவோ, நக்கீரனாகவோ வந்துவிடுமோ என்ற சந்தேகத்தை தருகிறது


அவர் உண்மையாகவே சந்தனைத்தை கடத்தியதாக இருந்தாலும், அவருக்கு இந்தபட்டம் தேவை இல்லாதது, தாய் நாட்டை கொள்ளை அடிக்கும் சிலருக்கு அவர் தடையாக இருந்ததால்
அவரை கொல்வதற்காக அவர் மீது போர்த்திய உருவம் தான் "சந்தன கடத்தல்", இவர் செய்த மற்ற நல்ல செயல்களை வைத்து பட்டம் கொடுக்க தவறிய பத்திரிக்கைகள், இந்த பட்டத்தை எடுத்து கொள்வது ஏன்??

கொள்ளிடம் ஆற்று மணல் கொள்ளையன் கே.என்.நேரு..
டான்சி ஊழல ஜெயலலிதா..
போபர் கொள்ளையன் ராஜீவ் காந்தி,
காமன் வெல்த் கொள்ளைக்காரி சோனியா,
அலைகற்றை கொள்ளைக்காரன் கருணாநிதி

என்று இவர்களுக்கும் பட்டம் போடும் பட்சத்தில் உங்களை நடுநிலை என பாராட்டலாம், உங்களின் சிந்தனைக்கும் எதை சொன்னாலும் நம்பும் பாமர மக்களின் சிந்தனைக்கும் வித்தியாசம் கிடையாது, உண்மையாக கொள்ளை அடிப்பவர்களுக்கு "அமைச்சர்" பட்டம், கொள்ளை அடித்தவரிடம் இருந்து பாதுகாத்தவருக்கு "கடத்தல்" பட்டமா?

ஜெயலலிதாவை "முதல்வர ஜெயலலிதா" என்று சொல்லியும், வீரப்பனை "சந்தன கடத்தல் வீரப்பன்" என்று போட்டுத்தான் மக்களிடம் அடையாளபடுத்த வேண்டும் என்பதற்கு அவசியமில்லை, நேரடியாக பெயரை மட்டும் சொன்னாலே அனைவருக்கும் இவர்களை தெரியும்
வீரப்பனை கொல்வதில் முக்கிய பங்காற்றியவர்கள் விஜய குமார் உள்ளிட்ட பெரும்பாலான காவலர்கள் மலையாளிகளே, அந்த காவலர்களுக்கு இடம் வரவில்லை என்று வக்காலத்து வாங்குகிறது இந்த கட்டுரை, திடீரென மலையாளிகளின் மேல் குமுதம் பாசம் காட்ட காரணம் என்ன?? 

தர்ம பிரபுவே !!!!!





தர்ம பிரபுவே !!!!!
சிங் வம்சாவளியில் வந்த சிங்கமே !!!!!
நிதி அமைச்சர் பொறுப்பு வகித்த நீதிமானே !!!!!
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கர்ணனே !!!!!
நம் நாட்டையே அடகுவைத்து அற்பனித்தவரே!!!!
நீ வாழ்க !!!!!
நின் கொடை வாழ்க !!!!!
நின் ரெயின்கோட் வாழ்க!!!!