மின்சாரம் என்றால் என்ன என்பது வேறு விஷயம்.
அந்த மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகிறது? எந்தெந்த வழிகளில் உற்பத்தியாகிறது என்பதை வைத்தே நாம் இப்போது பேசப் போகிறோம்.

இப்படியாக தான் மின்சாரம் செய்ய முடிகிறது மனிதனால்.
இதை விட்டால் வேறு வழிகள் எதுவுமே இல்லை. இந்த ஒரே வழி தான் உள்ளது.
காந்தங்களுக்கு இடையில் ஒரு காயிலை வைத்து அசைத்தாலோ, சுற்றினாலோ, அதன் இரு முனைகளில் மின்சாரம் உருவாகிறது. எவ்வளவு சிறிய காந்தமோ, எவ்வளவு சிறிய காயிலோ, எவ்வளவு பெரிய காந்தமோ, அது எவ்வளவு பெரிய காயிலோ, அதற்கேற்றவாறு குறைவாகவும், அதிகமாகவும், மின்சாரம் உருவாகிறது. இதை தவிர வேறு வழிகளில் மின்சாரம் செய்ய முடியவில்லை. அப்படியானால் அந்த நடுவில் இருக்கிற காயிலை எப்படி சுற்றுவது? யார் சுற்றுவது என்பது தான் பிரச்சினை.
அந்த காயிலை சுற்றியும் மின்சாரம் பெறலாம் அல்லது காந்த்ததையும் சுற்றி மின்சாரம் பெறலாம். சுற்றவைப்பதற்கு காற்றாலையை, நீர்நிலைகளை, கடல் அலைகளை , எரிபொருட்களை பயன்படுத்தி தீங்குகளை குறைத்து மின்சாரம் பெறலாம், இந்த அணுஉலை திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் பின்னால் நம் சந்ததிகளுக்கு இயற்கையை விட்டுசெல்வோம்.
No comments:
Post a Comment