Like me

Sunday, March 4, 2012

துப்பாக்கி முனையில்




துப்பாக்கி உளி
உடல் சிதைப்பு
உயிர் பிரிப்பு
பிணச்சிலை பிறப்பு

மென்மை உடலின்
இரத்தமே வண்ணம்
கத்தி தூரிகை
களமெங்கும் சிவப்போவியம்

சிங்களனின் மங்கள இசை
தமிழனின் மரண ஓலம்
கொலையினில் கலை
சிங்களனும் கலைஞனோ!
ஈழம் தமிழ்ப்போர்க்களம்
சிங்கள கலைக்களமோ!

" என் இறுதி குருதியும்
வழிந்தோடுகிறது
என்னுறுதி எனைவிட்டு
ஓடவில்லை!
என் இறுதி அணுவும்
இறக்கக்கூடும்
என் கொள்கை
இறவாமலிருக்க!
ஆசை அறுத்த புத்தன் முன்னே
உயிரை அறுக்கிறாய்!
காகித பூவைப்போல
கற்பை பறிக்கிறாய்!
மண்மீது யாம்கொண்ட
உண்மைக்காதலை அழிக்கிறாய் !
இவைசெய்து களியாடிதாம்
மனிதநென்பதை மறக்கிறாய்!
நான் இறக்குமுன்னே இதைக்கேள் !
களத்தில் இரத்தம் விதைத்துவிட்டோம்
உடல் சிதைத்தினும் தினையாய் வளர்வோம்!
உயிர் அறுப்பினும் நெல்லாய் முளைவோம்!
அதையுண்ணும் உன்னுடலில் சதையாய் இருப்போம்!
இங்கே தமிழழிக்கும் உன் தலைக்கனம்
உன் உடல் அழிக்குமோ!
தமிழை பிரிக்க உன்னுயிர் பிரிக்குமோ!
உன்னினைவின் மறைவுவரை மறவாதே!
நீ எம்மையழிப்பினும்
நீரே அழிந்தினும்
தமிழ் அழியாது!"
என தமிழ்வீரன்
உரைத்து இறக்கிறான்
இரத்தமாய் விதைகிறான்!
எங்கள் இயலாமையை
தொலைக்காட்சிகளில்
ஒளிபரப்பி மீண்டும்
மீண்டும் எங்களை
காய காயப்படுத்தாதீர்கள்.....
ஏற்க்கனவே முள்வேலிக்குள்
தான் இருக்கிறோம்......
காயம் இன்னும்
ஆறவில்லை
வலியோடுதான் இருக்கிறோம்.......
இன்னும் துப்பாக்கி முனையில்
பாதுகாப்பாய் இருக்கிறோம்.......


முள்ளுக் கம்பிக்குள்ளே.........


முள்ளுக் கம்பிக்குள்ளே
முடங்கிப் போகிறோம்!

துப்பாக்கி முனைகளுக்குள்
துவண்டு கிடக்கிறோம்!

ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் அழகான
குழந்தைகளின் படங்கள்!பிறப்பு-இறப்பு திகதிகளோடு!

நிவாரண அரிசிக்காய்
நிறையில் நிற்கிறோம்!

ஊரடங்குச் சட்டத்தால்
அடக்கப் படுகிறோம்!

சிறைச்சாலை நாற்சுவருக்குள்
நசிங்கிப் போகிறோம்!

ஆயுத முனையில் சகோதரிகளின்
கற்புக்கள் களவாடப் படுகின்றது!

தூக்கம் என்பது நாங்கள்
தொலைத்தவைகளில் ஒன்று!

துக்கம் என்பது நாங்கள்
உழைத்தவைகளில் ஒன்று!

எங்கள் வீட்டுக்குள் போக
அந்நியனின் அனுமத்திதேவை!

சொத்துகள் பற்றின கவலையில்லை
சொந்தங்கள் பறிபோன கவலையே!

யாருக்கு யார் அறுதல் சொல்வது
கண்ணீரால்தான் பேசுகிறோம்!

கல்லூரி வாசலில் காவலரண்-இப்போ
யார்கேட்டது? இப்போது யாருகேட்பது?

விதவைக் கோலத்தில் தோழி-அதில்
காணாமல்போன என் நண்பன்-அவள் கணவன்!

மீண்டும் அதே வகுப்பறையில்-அங்கே
ஒருசில கதிரைகள் வெற்றிடமாக! நிரந்தரமாக!!!!

வகுப்பறைக் கதிரைகளில் நண்பர் பெயர்கள் அன்று!
வரும்வழிக் கல்லறையில் அதே பெயர்கள் இன்று!!

வரவு டாப்பில் எனக்கு முன்னே அழைக்கும் நண்பன் பெயருமில்லை!
இரண்டுமுறை அழைத்தும் என்பெயர் எனக்கு விளங்கவுமில்லை!

மாற்றுத் துணிக்காய்
மணித்தியாலங்கள்காத்திருக்கும் ஒரு தாய்!
மாற்றுத் துணி கொடியில் ஈரமாய்!
அவள் கண்ணும் ஈரமாய்!

திருமண அழைப்பிதழ் வருவதில்லை!
அதிக விதவைகள் எப்படி திருமணத்தில்?

நேற்று-மொட்டு அவிழ்ந்த ஈழத்துப் பூக்களும்
நைற்று-சப்பாத்துக் கால்களுக்குள் சகதியாகிறது!

இரண்டு நெருங்கிய நண்பர்களின் பெற்றோர் சந்திக்கின்றனர்!
நான்கு கண்களிலும் கண்ணீர்! வார்த்தைகள் இல்லை-அங்கே
ஆண்டு துவசப் ''பத்திரிகைகள்'' பரிமாறப் படுகின்றன!

சுற்றுலா வரும் சிங்களவன்
சுகம்தேடி அலைகின்றான் எம் மண்ணில்!

அங்காங்கே அனாதையில்லங்கள்
அதிலிருந்து வந்தவனில் நானுமொருவன்!

விசாரணைக்காய் அழைத்துச் செலப்பட்டவர்கள்
வீதியோரங்களில் மீட்கப்பட்டனர்- பிணமாக!

துன்பங்கள் தொடகிறது எம் தாய் மண்ணில்!
இன்பங்கள் இனிவருமா எம் தமிழ் மண்ணில்?

                                                        யாழ்சங்கர் கவிதைகள்

தளராத போராளி!

                                                     

தளராத போராளி! சண்முகம் ......

1992-ம் ஆண்டு வாச்சாத்தி மலைக் கிராமத்தில், காவல் துறையும் வனத் துறையும் செய்த பாலியல் வன்முறையில், 18 பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர்களில் சண்முகம் முக்கியமானவர். வாச்சாத்தி மக்கள் சார்பாக வழக்குத் தொடுத்து, 19 ஆண்டுகள் இடைவிடாத சட்டப் போராட்டம் நடத்தி குற்றம்சாட்டப்பட்ட 216 பேருக்கும் தண்டனை வாங்கி தந்தவர் .....

--ஆனந்த விகடன்

தீர்ப்பு வெளிவந்த அன்று....பாதிக்கப்பட்ட சகோதரிகள் இவரது கரங்களை பற்றி ஆனந்த கண்ணீர் விட்ட காட்சி...கல்நெஞ்சையும் கரைய வைக்கும்.....

தமிழகம் தலைவணங்குகிறது சண்முகம்......

கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு...இவரெல்லாம் இருகுரதுனாலதான் இன்னும் மழை பெய்யுது..........

பகுத்தறிவை மறந்து சொல்கிறோம்...ஆம் சண்முகம் உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் மழை பொழியுது வானம்

ம.பொ.சி

                                       

   தோழர்களே, இந்தியாவிடமும் அண்டை மாநிலங்களிதிடமும் இருந்து தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கபடும் இந்த வேலையில்......அருமையான இந்த தலைவரை தெரிந்து கொள்வது இன்றைய அவசியம்....

ம.பொ.சி ( சிவஞானம் ) -- அவரது பெருமைகள்....

அன்றைய கால கட்டத்திலேயே ...இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க போராடினார்

**சென்னை மீது ஆந்திரர் உரிமை கொண்டாடியதை எதிர்த்துப் போராடி, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முழக்கம் செய்து, தலைநகரைக் காத்தார்.

** தமிழக வடக்கெல்லைக் கிளர்ச்சியைத் தொடங்கி, திருத்தணியை ஆந்திரத்திடம் இருந்து பெற்றதில் இவர் பங்கு அளப்பரியது.... அந்த போராட்டத்தில், 1953இல் தணிகையில் ஆறு வாரக் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

**மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கி 1956இல் தமிழ் மாநிலம் அமையச் செய்தார்.

**தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் ( தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் னெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார்
 

தமிழர்களின் பாரம்பரிய மாதம்


     தமிழர்களே நாம் பெருமையுடன் மார்தட்டி கொள்ள ....அழகியதொரு வாய்ப்பை கனடா நாட்டு அரசும் அதன் மக்களும் நமக்கு வழங்கி இருக்கிறார்கள்......

ஆம்....கனடா நாட்டின் மிக முக்கிய நகரமான டொரோண்டோ நகரம்,,,,சனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக அதிகாரபூர்வமாக அறிவித்து கௌரவித்து இருக்கிறது.......

தமிழர்களின் சார்பாக கனடா நாட்டு மக்களுக்கு இதயனம் கனிந்த நன்றிகள்......

-------------------இணைந்த கரங்கள்(FACEBOOK)


நெஞ்சு பொறுக்கவில்லை........

              


              சிராவயல் மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டு) ....அலங்காநல்லூருக்கு போட்டியாக சிராவயல் ஜல்லிக்கட்டு இருக்கும் என்பார்கள்....மேற்கே அலங்காநல்லூர் என்றால் கிழக்கே சிராவயல் என்பார்கள்......அந்த அளவுக்கு பிரசித்தி பெற்றது.....

அந்த சிராவயல் கூட்டத்தையும்....திமிறி வரும் காளையையும் பார்பதற்க்கே கண்கோடி வேண்டும்......வரலாற்று சிறப்பு மிக்க அந்த சிராவயல் ஜல்லிகட்டை....விலங்கு பாதுகாப்பு என கட்டுபாடுகளை விதித்து இந்த முறை சிதைத்து கலை இழந்து போக செய்து இருக்கிறார்கள் இன எதிரிகள் ......

நெஞ்சு பொறுக்கவில்லை........

ஒரு முறை சீமான் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது...ஒரு இனத்தை அழிக்க அணுகுண்டு வீச தேவை இல்லை......அதன் கலாசார அடையாளங்களை மெதுவாக நாசபடுதினால் போதும்...அந்த இனம் தானாகவே அழிந்து விடும்.....

இப்பொழுது அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.....நாமும் கையறு நிலையில்...வந்தேறிகளிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு நிர்கதியாய் நிற்கிறோம்............

விலங்கு துன்புறுத்தல் பேசும் அறிவாளிகளே .......

**மாட்டை வைத்து உழவு செய்யும்போது...மாட்டிற்கு வலிக்காமல் இனிக்கவா செய்கிறது ?? அதனால் விவசாயத்தை நிறுத்தி விடலாமா ??
**கேரளாவிற்கு அடிமாடாய் லாரியில் போகும்போது எங்கு போனது உங்கள் விலங்கு பாசம் ??
**கர்நாடகத்தில் விழாவின்போது மத சடங்காக ..மாட்டை தீயில் நடக்க செய்கிறார்களே அப்பொழுது எங்கு போனது உங்கள் விலங்கு பாசம் ??
**சல்மான்கான் மானை சுட்டரே ஞாபகம் இருகிறதா ???? அந்த வழக்கு என்ன ஆனது ?????? தீர்ப்பு சொல்லியாச்சா ???????????

**ஆந்திரத்தில் அமைச்சர் நடத்திய விருந்தில் மயில் கரி பரிமாறப்பட்டதாக வழக்கு நடந்ததே....அதுவும் தேசிய பறவை..அந்த வழக்கு என்ன ஆனது ????? தீர்ப்பு சொல்லியாச்சா ???????????

இந்த கேள்விகளுகேலாம் பதில் தராது..எங்கள் பாரம்பரியத்தின் மீது மட்டும் கை வைப்பது ஏன்????

ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு....

தமிழனின் உயிரை பறித்தீர்....உரிமையை பறித்தீர்...ஆட்சி அதிகாரத்தை பறித்தீர்...மூளையை மலுங்கடிதீர்....

இப்பொழுது தமிழனின் பாரம்பரியத்தில் கை வைக்குரீர்...

ஜல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு.....இன்று நேற்று அல்ல...காலம் காலமாக தொன்று தொட்டு நடத்த படும் விளையாட்டு......இதுவும் தமிழர்களின் அடையாளத்தை ஒழிக்க நடக்கும் மறைமுக நிகழ்வே....

ஈழம் - ஓவிய சாட்சியம்


பதிவு

ஒளிப்படத்தில் பதிவானது இருண்டிருந்ததைப் பார்த்தாளோ அவள்?.



களம்

.பதுங்கி இருப்போமே
தவிர ஒதுங்கி இருக்க மாட்டோம்.


- காசி ஆனந்தன்

                        

கடமை

முதுமை ஒரு தடையல்ல..


- காசி ஆனந்தன்
திடம்
புயல்

வீராங்கனைகள்
நெற்றியில் முத்தமிட்டு
குருதிப்புயலில்
விடுதலையின் கொடி !

- இன்குலாப்
வஞ்சினம்

கொலை செய்கிறவனை

சாகடிப்பது கொலையல்ல


- காசி ஆனந்தன்
                      
சந்திப்பு

சமமாய் நின்றே சந்தித்தோம் –
சமரையும் சாவையும்.


- காசி ஆனந்தன்
காலம்

மானுடம் தனது விடுதலை வெளியை
மரண முற்றுகையில் மீட்கிற காலம்.

- காசி ஆனந்தன்
துரோகம்

துல்லியம் காட்டும்
தொலைநோக்கியில்
தெரியாமல் போனவை-
முதுகுக்குப் பின் நின்ற
துரோக முகங்கள் !.


-இன்குலாப்
பாய்ச்சல்

ஒரே நேரத்தில்
மண் விடுதலையும்
பெண் விடுதலையும்.


- காசி ஆனந்தன்
                     
கனல்

தோளில் போராட்டமும்
கண்களில் விடுதலையுமாய்…


- காசிஆனந்தன் .
ஆணை

கீழே போடுவதற்காக
நாங்கள் துப்பாக்கி ஏந்தவில்லை.

- காசி ஆனந்தன்
காத்திருப்பு

காத்திருக்கிறோம்
காலத்திற்காகவும்
ஈழத்துக்காகவும்
- காசிஆனந்தன்
பதுங்கு குழி

மண் துளைத்து இறங்கும்
மரணத்தின் வெடிமுழக்கத்தை
தாங்குமோ?
தாலாட்டில் இனிததரிந்த
இளஞ்செவிப்பறைகள்!
- கவிஞர் இன்குலாப்
உடைப்பு

ஒரு காலத்தில்
அகப்பை பிடித்த கை


- கவிஞர் காசிஆனந்தன்
வேர்

என் கைகளில்
துப்பாக்கி தந்தவன்
எதிரி.


- கவிஞர் காசிஆனந்தன்
காவல்

துப்பாக்கி என்னை பாதுகாத்தது.
நான் துப்பாக்கியை பாதுகாத்தேன்..


- கவிஞர் காசிஆனந்தன்
                       
சிறகு

தாய்க்கோழி விரித்த சிறகாய் இருந்தது
தோளில் சுமந்த எறிகணைகள் !
- கவிஞர் இன்குலாப்

இயக்கம்

தொடர்பில் இருக்கிறோம்
தொடர்ந்து…


கவிஞர்.காசிஆனந்தன்.
                   
மண்

என் தோழர்களின்
பிணங்கள் விழுந்த மண்.


கவிஞர்.காசி ஆனந்தன்
                  
தேவை

போருக்கான தேவை
இருக்கும் வரை
போரும் இருக்கும்.

கவிஞர்.காசி ஆனந்தன்
உண்மை


நாங்கள் சாகடிக்கப்படுவது
பயங்கரவாதிகள்
என்பதால் அல்ல
தமிழர்கள் என்பதால்.

- கவிஞர் காசிஆனந்தன்
                                                                                                 நன்றி தமிழீழம் எனது தாய்நாடு(FACEBOOK)

ஈழம் - புகைப்பட சாட்சியம்






















                                                                                                                       நன்றி தமிழீழம் எனது தாய்நாடு(FACEBOOK)