Like me

Tuesday, March 6, 2012

ஏன் இப்படி

                                         

ஏன் இப்படி அப்பாவி விவசாயிகளை கடுப்பேத்துரிங்க டாக்டர் மன்மோகன் சிங் ஜி ..!

மறுபடியும், பணக்கார ஜவுளி முதலாளிகளுக்கு பல்லாக்கும்... ஏழை விவசாயிகளுக்கு பாடையும் கட்டத் தயாராகிவிட்டது மத்திய அரசு. ஆம், வழக்கம்போல பருத்தி ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவு போட்டுள்ளது மத்திய அரசு.
இந்த ஆண்டு இந்தியாவில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்கிறது. இந்தியாவின் ஜவுளி உற்பத்திக்கு தேவையானதைவிடவும் கூடுதலாகவே விளைந்துள்ளது. இந்த நிலையிலும், அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவிக்க வேண்டும் என்கிற ஆசையோடு, மத்திய அரசை நிர்ப்பந்தித்து, பருத்தி ஏற்றுமதிக்கு தடை செய்ய வைத்துவிட்டனர் ஜவுளி ஆலை முதலாளிகள்!

'கடந்த ஆண்டும் இப்படி தடை விதித்ததால் பருத்தி விவசாயிகள் பாடு திண்டாட்டமாகிப் போனது. ஏகப்பட்ட நஷ்டம் அடைந்தனர் விவசாயிகள். மறுபடியும் தடை விதித்து அவர்களுடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறது மத்திய அரசு. பணக்கார முதலாளிகள் வாழ்க்கையை வளமாக்க, ஏழை விவசாயிகளை வதைப்பது அநியாயம். இப்படியொரு முடிவை எடுக்கும் முன்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்Õ என்றெல்லாம் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் சீறித் தள்ளியிருக்கிறார் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.

இப்படி விவசாயிகளுடைய வயிற்றில் அடிக்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்குக்குத்தான் சமீபத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளனர்.

'இந்தியா விவசாயிகளை சீக்கிரம் ஒழித்துக் கட்டிவிட்டு, மொத்த விவசாயத்தையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும். அதுதான் நமக்கு சரிப்பட்டு வரும்' என்று நீண்டகாலமாகவே காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்த நாட்டின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு சரியாக நிறைவேற்றுவதற்காகத்தான் டாக்டர் பட்டம் கொடுத்திருப்பார்களோ?
-ஜூனியர் கோவணாண்டி
Courtesy: Pasumai Vikatan

ஐ.நா. விடம் நீதி கேட்டு...........

                                                              walk for justice 2012 Geneva 5th March




                                   







மாபெரும் மக்கள் எழுச்சியின் அடையாளமாய் மாறிய ஐ.நா. முன்றலின் முருகதாசன் திடல்..!

தமிழீழ உறவுகளின் துயர்துடைக்கக் கோரி, ஐ.நா. விடம் நீதி கேட்டு நடைபெற்ற நடைப்பயணத்தின் முடிவிடமான ஜெனீவா நகரின் முருகதாசன் திடல், நேற்று (05.03.2012) மாலை தமிழீழ உறவுகளின் எழுச்சி அடையாளமாய்ப் பொங்கிப் பிரவாகித்தது. ஐரோப்பாவின் பலநாடுகளிலிருந்தும் திரண்டு வந்த தமிழீழஉறவுகள், தமது ஆதரவுக்கரங்களின் அடையாளத்தோடு, ஐ. நா முன்றலைப் பேரணியாய் வந்தடைந்து, தமது நியாயக்கோரிக்கைகளை ஐ.நா விடம் முன்வைத்தனர். எழுச்சி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்களும் இணைந்து பொதுச்சுடரை ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை சுவிஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப்பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து; நெதர்லாந்து நீதிமன்றில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கெதிராக வாதாடி வெற்றியைப்பெற்றுத்தந்த வழக்குரைஞர் அவர்களின் சிறப்புரை நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் சிறப்புப்பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அவர், மக்கள் எப்போதும் அவர்களுடன் இணைந்துநின்று போராடுவதில், எந்த நாட்டினது அரசாங்கமும் இனிமேல் குற்றம்காண முடியாதென்றும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களின் செயற்பாடுகள், பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்லன என்பதை, ஐரோப்பிய நீதிமன்றங்கள் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ளும் காலம் கனிந்துவிட்டதென்றும் கூறி உரையை நிறைவு செய்கையில், தமிழீழ உறவுகள் தமது மகிழ்வை வெளிப்படுத்தும் வகையில் தேசியக்கொடியை உயர்த்திப்பிடித்தபடி ஆரவாரம் செய்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது.

தொடர்ந்து உரையாற்றிய பிரான்ஸ் நாட்டின் கட்சி உறுப்பினர்கள், மற்றும் பிரமுகர்கள் ஆகியோரின் கருத்தும் தமிழீழ மக்களின் எழுச்சிக்கு உறுதிதரும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நடைப்பயணத்தை மேற்கொண்ட உறவுகளின் உரையின் ஒவ்வொரு அங்கமும், தேசியக்கொடியின் அவசியம் பற்றியும், தமிழீழப் போராட்ட வரலாற்றின் உண்மை பற்றியும் சிறப்பாக வெளிக்கொணரும் வகையில் அமைந்திருந்தது. பிரித்தானிய நாட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்ட திரு.பரமேஸ்வரன் அவர்கள், ´´ஐ.நா. கட்டிடத்திடம் நான் உரிமை பற்றிப் பேசப்போகிறேன்´´ என்ற வகையில் ஆற்றிய உரை, இனிமேல் எமக்கு நீதி கேட்பதற்கு இம்மண்ணில் எவரும் இல்லை என்பதை எடுத்துரைத்தது.

எழுச்சி நிகழ்வாக, யேர்மனியக் கலைபண்பாட்டுக் கழக நடனக்குழுவினரின் நடன நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஐ.நா விடம் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து அம்சக்கோரிக்கைகளின் உறுதி மொழியுடன், நிகழ்வு 17.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

எழுச்சிப் பேரணியில் அனைத்து நிகழ்வுகளையும், மீண்டும் எழுச்சியுடன் செயற்பட ஆரம்பித்திருக்கும் TTN தமிழ்ஒளி ஒளிபரப்புக்கூடம் நேரடி அஞ்சல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

~ tigerzLand Media
walk for justice 2012 Geneva 5th March மாபெரும் மக்கள் எழுச்சியின் அடையாளமாய் மாறிய ஐ.நா. முன்றலின் முருகதாசன் திடல்..! தமிழீழ உறவுகளின் துயர்துடைக்கக் கோரி, ஐ.நா. விடம் நீதி கேட்டு நடைபெற்ற நடைப்பயணத்தின் முடிவிடமான ஜெனீவா நகரின் முருகதாசன் திடல், நேற்று (05.03.2012) மாலை தமிழீழ உறவுகளின் எழுச்சி அடையாளமாய்ப் பொங்கிப் பிரவாகித்தது. ஐரோப்பாவின் பலநாடுகளிலிருந்தும் திரண்டு வந்த தமிழீழஉறவுகள், தமது ஆதரவுக்கரங்களின் அடையாளத்தோடு, ஐ. நா முன்றலைப் பேரணியாய் வந்தடைந்து, தமது நியாயக்கோரிக்கைகளை ஐ.நா விடம் முன்வைத்தனர். எழுச்சி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்களும் இணைந்து பொதுச்சுடரை ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை சுவிஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப்பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து; நெதர்லாந்து நீதிமன்றில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கெதிராக வாதாடி வெற்றியைப்பெற்றுத்தந்த வழக்குரைஞர் அவர்களின் சிறப்புரை நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் சிறப்புப்பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அவர், மக்கள் எப்போதும் அவர்களுடன் இணைந்துநின்று போராடுவதில், எந்த நாட்டினது அரசாங்கமும் இனிமேல் குற்றம்காண முடியாதென்றும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களின் செயற்பாடுகள், பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்லன என்பதை, ஐரோப்பிய நீதிமன்றங்கள் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ளும் காலம் கனிந்துவிட்டதென்றும் கூறி உரையை நிறைவு செய்கையில், தமிழீழ உறவுகள் தமது மகிழ்வை வெளிப்படுத்தும் வகையில் தேசியக்கொடியை உயர்த்திப்பிடித்தபடி ஆரவாரம் செய்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது. தொடர்ந்து உரையாற்றிய பிரான்ஸ் நாட்டின் கட்சி உறுப்பினர்கள், மற்றும் பிரமுகர்கள் ஆகியோரின் கருத்தும் தமிழீழ மக்களின் எழுச்சிக்கு உறுதிதரும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நடைப்பயணத்தை மேற்கொண்ட உறவுகளின் உரையின் ஒவ்வொரு அங்கமும், தேசியக்கொடியின் அவசியம் பற்றியும், தமிழீழப் போராட்ட வரலாற்றின் உண்மை பற்றியும் சிறப்பாக வெளிக்கொணரும் வகையில் அமைந்திருந்தது. பிரித்தானிய நாட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்ட திரு.பரமேஸ்வரன் அவர்கள், ´´ஐ.நா. கட்டிடத்திடம் நான் உரிமை பற்றிப் பேசப்போகிறேன்´´ என்ற வகையில் ஆற்றிய உரை, இனிமேல் எமக்கு நீதி கேட்பதற்கு இம்மண்ணில் எவரும் இல்லை என்பதை எடுத்துரைத்தது. எழுச்சி நிகழ்வாக, யேர்மனியக் கலைபண்பாட்டுக் கழக நடனக்குழுவினரின் நடன நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஐ.நா விடம் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து அம்சக்கோரிக்கைகளின் உறுதி மொழியுடன், நிகழ்வு 17.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது. எழுச்சிப் பேரணியில் அனைத்து நிகழ்வுகளையும், மீண்டும் எழுச்சியுடன் செயற்பட ஆரம்பித்திருக்கும் TTN தமிழ்ஒளி ஒளிபரப்புக்கூடம் நேரடி அஞ்சல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக எல்லை பாதுகாவலர்

                                   

                                         இப்போது இவர் உயிருடன் இருந்திருந்தால் !!!
தமிழக எல்லை பாதுகாவலர் போல்., அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் ?

2009 இல் ஈழத்தில் நடந்த போரை நிறுத்தியிருப்பார் , இப்போது மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலையும் செய்திருப்பார்...
தமிழ் நாட்டிற்கு இன்று நிறைய வீரப்பன்கள் தேவைப்படுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்


ஆபத்து ஒன்றுமில்லை ! கூடங்குளம்………?

                                Photo: அணுஉலை...!உயிருக்கு உலை...!
ஆபத்து ஒன்றுமில்லை !
அன்னைப் பால் இல்லையின்னு,
அன்னப்பால் தேடுகின்ற ,,,,,,,,,,,மக்களுக்கு,
அணுப் பாலைத் தருகின்றார் ?
அள்ளி அள்ளிக் குடித்திடுங்கள் !
அந்தக் கூடங்குளம்……………………..நிறைய,
அணுசக்தி ! பாலன்றோ ?,,,,,,,,,,,,,,,,,,,,
ஆபத்து ஒன்றுமில்லை !
வெண்நுரை தள்ளி,
அலை வீசி வருகின்ற, கடலிடையே ?
செங்கதிர் போல ,,,,,,ஒளி வீசி,
கருவாடு,மீனோடு,,,,,,,,,,,,
பனம் பழத்து வாசமுடன்,,,,,,,,
விடியல் வரும் ? என்றிருந்தோம் !
கதிர் வீசி வரும் ?
வாசமில்லா ? ……………………..
அணுக் கதிர்தான், வீசி வரும் !
வந்தால்,,,,,,,,,,,,,,,,,,?
ஆபத்து ஒன்றுமில்லை !
முடிந்தால்,,,,,,,,,
முப்பது காத தூரம் ,,,,,?
ஒடி விடுங்கள் !
ஆபத்து ஒன்றுமில்லை,,,,
ஒத்திகை, தான், நடக்கிறது !
முடியாதவர்கள் ? ஒட,,,,,,
முடியாதவர்கள் ?,,,,,
நாங்கள்,
சொல்லும் வரைக்கும்,,,,,
முகம், பொத்தி,,,,,,,,,,,,,,,,,?
மூக்கு, பொத்தி,,,,,,,,,,,,,,,,,?
வாய் வழியே , சுவாசித்து,,,,,,
கதவடைத்துக் காத்திருங்கள் ?
வாசமில்லா,
அணுக்கதிர் தான், வீசுகிறது ?
ஆபத்து ,,,,ஒன்றுமில்லை ?
எங்களின்,
குடிசைகளுக்கு,,,,,,
கதவில்லை ! என்போர்களே ?
வெள்ளைத்துணியில்,,,,,,,,,,,
உடல் முழுதும்,
போர்த்தியபடி,,,இருங்கள் !
ஆபத்து ஒன்றுமில்லை ?
அலை கடலோரம்,
அணுக்கதிர்தான், வீசுகிறது !
அடுத்தென்ன ?
செய்வதென,,,,,,,,,,,,?-பதிலுக்காக,,,
டில்லிக்குக் கேட்டிருக்கிறோம் ?
அதுவரை,
அயோடின் மாத்திரை,
சாப்பிடுங்கள் ! -தண்ணீர்
குடிக்காதீர்கள் !
நாங்கள் ,
சொல்லும் வரைக் காத்திருங்கள் ?
அய்யா !
சாமிகளா !,,,,,,,,,,,,,,,,
ஆபத்து ஒன்றுமில்லைன்னு சொல்லுற,
சாமிங்க(லா)ளா,,,,,,,,,,,,,
நீங்களெல்லாம்,,,,,,,,
எங்கே ?
அய்யா ! இருக்கிறீர்கள் ?
பயப்படாதேயுங்கள் ?
தமிழர்களே !
அச்சமில்லை ! அச்சமில்லை !
வாசமில்லா,
அணுக்கதிர்தான், வீசுகிறது !
ஆபத்தும், ஒன்றுமில்லை !
நாங்களா ?
விமானத்தில்,,,,,,,,,,,,,
பதினாறாயிரம், அடிகளுக்கு மேல்,
எங்கள், மனைவிமார்களுடன் தான்,
பறந்து கொண்டிருக்கிறோம் !
உங்களுக்காகத்தான் ?
வாசமில்லா,
அணுக்கதிர்தான், வீசுகிறது ?
ஆபத்து ஒன்றுமில்லை !
அணுக் கதிர் வீச்சில்
முன் அனுபவம், இல்லாததால்,,,,
அனுபவம்,
உள்ளவர்களைத் தேடி…………….!
போபாலிலும்,,,,,,,,
நாங்கள்,
இதைத் தானே ?
சொன்னோம் !செய்தோம் !
ஆபத்து ஒன்றுமில்லை !
இந்தியத்
திரு நாட்டின், பிரதமரா ?,,,,
அவர், !
எப்போதப்பா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,?
இந்தியாவில், ,,,இருந்தார் ?
அணுக் கதிர்தான், வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
இந்தியத்
திருநாட்டின், முதல் குடிமகனா ?
அவர், !
இமாச்சல பனிமலை வீட்டில்,,,,,,,,,,,,!
அணுக்கதிர்தான், வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
ஆளுங்கட்சியின்,
தலைவர்,தலைவிகள் ?
அவர்கள் ?
அவர்களின், நாட்டில்,,,,,,,,,,,,,,,,?
அணுக்கதிர்தான், வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
அப்படியானால்,,,?
நாங்கள் ?
என்போரே !
ஆபத்து ஒன்றுமில்லை !
உச்சி மீது, வானிடிந்து,
வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை ! அச்சமில்லை ! என்று,
பாடிய , பாரதி நாட்டுத் தமிழர்களே ?
அணு உலை பாதுகாப்பாகத்தானிருக்கிறது !
ஒத்திகை தான், நடக்கிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
கூடங்குளத்திலுள்ளோர் ! மட்டுமல்ல ….!
பாரதி நாட்டுத் தமிழர்கள்,,,,,,
அத்தனை பேருக்கும்,
கூண்டோடு ! கைலாசம் ?
அவ்வளவுதான் !
அணுக்கதிர்தான், வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
’’தானே ‘’
புயலுக்கே,,,
மிச்சமில்லை எனத்
தடுமாறி விட்டதே ?
தமிழ்நாடு ! என்கிறீரா ?
அச்சமில்லை ! அச்சமில்லை !
அது !
தானே , வந்தது ?
ஆனால்,
அந்நியத்தான், துணையோடு,
அணுக்கதிரை,,,,
நாங்களே ?
கொண்டு தருகிறோம் !
ஆதலினால்,,,,,,,,,,,,,,,,,,,
அச்சமில்லை ! அச்சமில்லை !
ஆபத்து ஒன்றுமில்லை !
கூண்டோடு !
கைலாசம் ! மட்டுந் தானா ?
வைகுந்தம்,,,,,, பரலோகம்,,,,, !
எப்போது ? என்போரே !
காத்திருங்கள் ?
மீண்டும்,
இரண்டாவது !
மூன்றாவது ! வருகிறது !
ஆதலினால்,,,,,,,,,,,,,,,,,,,,
அச்சமில்லை ! அச்சமில்லை !
வாசமில்லா,
அணுக்கதிர் தான் , வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !