Like me

Saturday, February 18, 2012

No Space, Leave the Place.


USEFUL MESSAGE: 
Very important msg for grls in dressing room do it first. Boys please tell to your sister's & lover & ur girl frnds.:

Just conduct this simple test: Place the tip of your fingernail against the reflective surface and if there is a GAP between your fingernail and the image of the nail, then it is GENUINE mirror. However, if your fingernail DIRECTLY TOUCHES the image of your nail, then BEWARE! IT IS A 2-WAY MIRROR!

"No Space, Leave the Place." So remember, every time you see a mirror, do the "fingernail test." It doesn't cost you anything.

REMEMBER. No Space, Leave the Place.

முதல்வர் காமராசர்

                             
               தானே புயல் கடலூர் மாவட்டத்தை நிர்முலமாக்கியிருக்கிறதே, அதுபோல தியாகச்சுடர் காமராசர் ஆட்சி காலத்திலும் தமிழ்நாட்டில் புயல் வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போனது. சிதைந்து போன ராமநாதபுரத்தில் நிவாரண பணிகளை பார்வையிட முதல்வர் காமராசர் ராமநாதபுரத்தின் பிரதான சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார். சாலையின் இருபுறமும் எங்கும் வெள்ளக் காடுகளாக இருக்கும் காட்சியை காமராசர் பார்த்துக்கொண்டே வருகிறார். அப்போது பிரதான சாலையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சிறு கிராமம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை காண்கிறார் காமராசர். அந்த கிராமத்தை பற்றி விசாரித்து, என்னென்ன மீட்பு பணிகளை செய்திருக்கிறீர்கள் என்று அதிகாரிகளிடத்தில் கேட்கும் போது, அதிகாரிகளிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. உடனே காரை நிறுத்தி, வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு வெள்ளத்தில் நடக்க ஆரம்பித்து விட்டார். அதிகாரிகள் காமராசர் பின்னால் ஓடுகிறார்கள். அது ஒரு சின்ன கிராமம், அந்த கிராமத்தின் மக்கள் மேடான பகுதிகளில் உட்கார்ந்து இருக்கிறார்கள். முதல்வர் காமராசர் அவர்களை கண்டதும் அந்த கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர். காமராசருக்கு அதற்கு பிறகுதான் தெரிகிறது, அங்கே அதிகாரிகள் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவே இல்லை. அதிகாரிகளை கடிந்து கொண்ட காமராசர், உடனே அந்த கிராம மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் போன்றவற்றை வரவழைத்து, அங்கேயே சமைத்து அந்த கிராம மக்களோடு சேர்ந்து ஒரு வேளை உணவருந்தி விட்டு, எல்லா உதவிகளையும் செய்வதாக கூறி அந்த கிராமத்தை கடந்து சென்றார் பெருந்தலைவர் காமராசர். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கொலைவெறி வருகிறதா தோழர்களே 

என்னத்த சொல்ல... ஜெய்ஹிந்த்.!

தமிழ்

The raw fact.

                                               

ஒரு கனம் சிந்தித்து பாருங்கள் !!!


ரொம்ப நாளா இந்த பிரச்சனை நடக்குது ..

மரங்களை வெட்டுங்கள்!!


                                               மரங்களை வெட்டுங்கள்!!



உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.



மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம் 

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக சொல்லுங்கள்.
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

" காவிரிப்பூம்பட்டினம் "

                       
" காவிரிப்பூம்பட்டினம் " - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! .

கலை,இலக்கியம்,வீரம்,கொடை,பண்பாடு,நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம் ! . ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம்,இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் ! !.

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்".பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம் ! !. காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது .
இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள்,இலங்கை,பர்மா,மாலத்தீவு,வியட்நாம்,கம்போடிய,இந்தோனேசியா,வங்காள தேசம்,சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான் ! ! !. இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது ! !.

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய பிரதான ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்" .இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது ! . இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது ! ! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் ! !. பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி" , இரவில் நடப்பது "அல்லங்காடி" ! !.

மருவுர்பாக்கம் :
ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது ! .இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் ! . இந்த ஊரை சுற்றி மீனவர்கள்,தறி நெய்பவர்கள்,பட்டு வியாபாரிகள்,மீன்,கறி வியாபாரிகள்,பானை,தானியங்கள்.நகை,வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் ! .

பட்டினப்பாக்கம் :
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள்,மருத்துவர்,ஜோதிடர்,ராணுவம்,அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் ! !
இங்கு ஐந்து மன்றங்கள் இருந்துள்ளது
(௧) வெள்ளிடை மன்றம் (௨) எலாஞ்சி மன்றம் (௩) நெடுங்கல் மன்றம் (௪) பூதச்சதுக்கம் மட்டும் (௫) பாவை மன்றம்

இந்த ஊரில் இருந்த தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை (௨) உய்யணம் (௩) சன்பதிவனம் (௪) உறவனம் மற்றும் (௫) காவிரிவனம் போன்ற தோட்டங்கள் இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியது ! !.

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது.அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர் ! ! . நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது ! !.

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு .சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது .

"மணிமேகலை" நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது " வருடா வருடம் தவறாமல் " இந்திர விழா " கொண்டாடும் சோழ மன்னன் ,அந்த ஆண்டு கொண்டாடதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது .

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் " சிலப்பதிகார அருங்காட்சியகம் " ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டுள்ளது ! . இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகள், வெளி வர வாய்ப்புள்ளது ! ! . தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்.அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை .தேடல் தொடரும்...!! 

மரத்த வெட்டினா ?

          

               மரத்த வெட்டினா , இப்படி தான் நாளைக்கு அவனுங்களும் கெடக்கனுன்னு தெரியாத ,மனசாட்சி இல்லாத மடையர்கள் ...! —

உலககோப்பை


            கீழே நீங்கள் பார்ப்பது, ஏதோ பள்ளிகளுக்கிடையே நடந்த போட்டியில் வென்றவர்களின் படம் அல்ல, இந்தியாவிற்கு கபடி போட்டியில் உலககோப்பை பெற்றுத்தந்து நம் நாட்டை தலை நிமிர செய்தவர்களின் அவலமான நிலையே இது..போட்டி முடிந்ததும் அவர்கள் செல்வதற்கு வாகனம் கூட செய்து தரப்படாததால் , " ஷேர் ஆட்டோ " வில் அவலமாக செல்லும் காட்சி.

.

தமிழின் பெருமைகள்

                                   
தமிழின் பெருமைகள்

இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே. - போதையனார்

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்

பெற்றால் தான் பிள்ளையா ?

                         
                  பெற்றால் தான் பிள்ளையா ? என்பதை இந்த பசு உணர்ந்ததை, மனிதன் எப்போது                                                         உணரப்போகிறான் ? 

வினா?

                 

"நீ உன் தந்தைக்கு எத்தனையாவது பிள்ளை?" என்னும் வினாவை ஆங்கிலத்தில் உங்களால் ஒரே வாக்கியத்தில் கூற இயலுமா ?

பெருமைப்பட்டுகொள்ளுங்கள் உங்கள் மொழி ஆங்கிலத்தை விட எந்த விதத்திலும் சளைத்தது இல்லை என்பதை.

இயற்கை

            
                           இயற்கையை நேசித்தால் இந்த எறும்பும் அழகுதான்.

3500 வருட பழமை வாய்ந்த மரம்

 
               நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் உள்ள மாமரத்தை பற்றி கூறினால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வீர்கள் , இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது , இது 3500 வருட பழமை வாய்ந்த மரம் , இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மரத்தின் நாளா புறங்களில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடிய கனிகளை இந்த மரம் தருகிறது !!!! நம் மாநிலத்தில் உள்ள இந்த சிறப்பை , மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள் !!!

அறியாத அணை...

   

ஓரிடத்தில் ஊற்றெடுத்து...
ஓரிடத்தில் கலக்கிறாய்..
அங்கு ஓர் அணை போட்டார்..
அனைவரின் தாகம் தீர்க்க..
அரசியல் தந்திரத்தால்..
அப்பாவி மக்கள் சிக்க...
ஆளுக்கொரு பக்கமாய் ....
ஆர்ப்பரித்து நிற்கின்றோம்...
அண்டி வந்தோரை ...
அடித்து விரட்டுகின்றோம்...
அணை.. காக்க..
அன்பிழந்தோம்..அறிவிழந்தோம்...
வேற்றுமையில் ஒற்றுமையில்லை..
சக மனிதரிடையே சகோதரத்துவமில்லை...
ஆபத்து வருவதை...
அறியாத அணை...
ஆற்று நீரை....
கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது..
அனைவரும் பங்கிட்டுக்கொள்ள...!
-காயத்ரி பாலாஜி
                                     நன்றி Sasi Dharan

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயம்

                                          

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது !! அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் ! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் ! .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது !!. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை ,ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை ! இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும்,கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம் !தேடல் தொடரும்...
 


                                                                                                          நன்றி Sasi Dharan

"தாராசுரம்"

                                      

கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப் படிகள் "

இரண்டு நாட்களுக்கு முன் இசைத் தூண்களை பற்றி செய்தி வெளியிட்டிருந்தததற்கு தமிழகத்தில் "சப்தஸ்வரங்களை " எழுப்பும் கட்டிடக்கலையே இல்லை என ஒரு நண்பர் கருத்து கூறி இருந்தார் அவருக்காக, இந்த "தாராசுரம்" கோயிலில் உள்ள "இசைப் படிகள் " பற்றிய செய்தியை தருகிறேன்.இந்த கோயிலை கட்டியவர் " ராஜா ராஜா சோழன் மகன் ராஜேந்திர சோழன். கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழிகிய கோயில் வந்து விடும் " .ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும்
!!ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும் !!. இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது, அதனால் இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.
 


                                                                                              நன்றி Sasi Dharan



ஜனநாயகம் என்ற ஆலமரம்

                           
உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !
ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !. சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? தமக்கு பிடித்த கிராம நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! . கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் " நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!. பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது.. இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள்,பல்லவர்கள்,சம்புவர்யர்கள்,விஜய நகர அரசர்கள்,நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!. இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?..தேடல் தொடரும்...  

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்

                          
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் !! நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!தேடல் தொடரும்..! - நன்றி Sasi Dharan