Like me

Wednesday, September 26, 2012

அணு உலை ஆதரவாளர்களிடம் சில கேள்விகள்...

அணு உலை ஆதரவாளர்களிடம் சில கேள்விகள்...
1)அணு உலை விபத்தை கார் விபத்துடன் ஒப்பிடலாமா? 

2)25 ஆண்டு கால போராட்டத்தை நாம் ஏன் தெரிந்து கொள்ள வில்லை?

 3)அணுசக்தி துறை ஏன் ரகசியம் காக்கிறது? 

4)அணுக்கழிவுகள் எத்தனை ஆண்டுகள் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்? 

5)மின்சாரம் தயாரிக்க மாற்று வழிகளை ஏன் அரசு ஊக்குவிக்கவில்லை? 

6)உலகின் அபாய உலைகள் இந்தியாவில்தான் உள்ளதா? 

7)ஜாதுகோடா மக்கள் சபிக்கப்பட்டவர்
களா? 

8)வளர்ந்த நாடுகள் ஏன் அணு உலைகளை மூடி வருகிறது? 

9)செர்நோபில்-போபால் ஏன் நம் பாட புத்தகங்களில் இல்லை? 

10)கதிரியக்கத்துடனான மீனை உண்ணலாமா? 

11)இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவைதானா? 

12)நாடெங்கிலும் ஏன் மக்கள் அணு உலையை எதிர்த்து போராடுகிறார்கள், 

13)இந்திய ஊடகங்கள் ஏன் நம்மை குழப்புகின்றன? 

14)மூன்றாம் உலக நாடுகளில் ஏன் அதிக அளவு அணு உலைகள் நிறுவப்படுகிறது...?

'சமூக செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ ்ணனின்
“கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற நூலில்...

கூடங்குளம் போராட்டம் : பெண் போராளிகளின் சிறை அனுபவம்

Balaganesan Narayanan
கூடங்குளம் போராட்டம் : பெண் போராளிகளின் சிறை அனுபவம்

அணுஉலையை எதிர்க்கும் மக்களை தாக்கிய போலீசு காட்டட்சியை கண்டித்தும், அதை ஏவிவிட்ட பாசிச ஜெ, ஸ்ரீரங்கத்தில் அன்னதானம் செய்ய வந்த போது கறுப்புக்கொடி காட்டியதாலும் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டு மகளிர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அங்குள்ள பெண் காவலர்களின் அணுகுமுறையோ ஊரறிந்த விசயம். “ஏய் இங்க வா, போ
, நீ நேற்றுவந்த ‘கேசுதான’ போய் அந்த சிறப்பு கைதி தங்கும் பகுதியில் உள்ள புல்லை புடுங்கு” என்று வயதில் பெரியவர், சிறியவர் என்றில்லாமல் அதிகாரத்தை திமிராக வெளிப்படுத்துவார்கள்.

கடந்த நவம்பர் 2011-ல் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஜெவை போல் வேசமிட்டதால் ஏற்கனவே சிறைசென்றோம். அப்பொழுது அங்கு உணவு சரியாக சமைத்து பரிமாறாமல், ஆடுமாடுகளுக்கு கொடுப்பதை போன்று நடத்தியதைக் கண்டித்தும் இதர அடக்குமுறைகளை எதிர்த்தும் ஜனநாயக முறைப்படி போராடியிருக்கிறோம். அதை நினைவுபடுத்திய உடன் இம்முறை “ஏம்மா மறுபடியும் வந்துட்டீங்களா? வெளியில் சும்மாவே இருக்கமாட்டீங்களா?” என்ற கேட்டுவிட்டு மரியாதையுடன் நடந்து கொண்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட நாள் இரவு குழந்தைகள் இளமாறன், சிந்தனை, அஜிதா மூவரும் புதிய இடம, கொசுக்கடி, துர்நாற்றம் தாங்க முடியாமல் அழுது கொண்டும் தோழர்கள் அவர்களை சமதானப்படுத்தியபடியும் இருந்தனர்.

ரோந்து வந்த பெண்காவலர் “ஏய்! என்ன சத்தம் ரொம்ப பெரிசா போட்டுகிட்டு இருக்க தூங்கமாட்டியா? உனக்கு என்ன மற்றவங்க தூங்குறது தெரியலயா? புரியாது” என்று சீறினார்.

நாங்கள் “மொதல்ல மரியாதையா பேசுங்க எங்களுக்கு தூக்கம் வந்தால் தூங்கறோம் குழந்தைகள் தூங்காம பெரியவங்க எப்படி தூங்க முடியும்” என்று கேட்டதற்கு “என்ன எதிர்த்து பேசுற யாருகிட்ட பேசுற தெரியாதா?. நான் என்ன செய்வேன் தெரியுமா?” என்றவர், எங்கள் செல்லுக்கு மட்டும் ‘கரண்ட்’ சப்ளையை நிறுத்தி விட்டு சென்றார்.

உடனே நாங்கள் அனைவரும் விடாமல் செல்லின் கம்பி ஜன்னலை தட்டு வைத்து ஓசையை எழுப்பி “ஏங்க எங்க செல்லுக்கு மின்சாரம் வரல, எல்லா ரூமிலும் லைட்டும் ஃபேனும் ஓடுது எங்களுக்கு ஏன் நிப்பாட்டினீங்க, ஏம்மா இப்போ கரண்ட் இந்த ரூமுக்கு வருமா? வராதா?” என்று சத்தம் போட்டு இரவில் நடத்திய போராட்டம் மூலம் மீண்டும் 3 நிமிடத்திற்கு பின் சுவிட்ச் ஆன் செய்தார். கரண்ட்டை பெறும் வழி போராட்டம தான் என்பதை மற்ற சிறை கைதிகளும் அனுபவமாக பெற்றனர்.

உடல்நிலை சரியில்லாததால் தோழர் கல்பனா சாப்பிடவில்லை, மற்ற சிலரும் சாப்பாடு நன்றாகயில்லாததால் கொஞ்சமாகவே எடுத்துக் கொண்டு மீதியை குப்பையில் கொட்டிவிட்டனர். அதற்கு அங்கிருந்த பெண் காவலர் “ஏய் ஏங்கே போற ? அதை அள்ளு, அள்ளுகிறாயா இல்லையா?” என மிரட்டினார். தோழர் இந்துமதி அதெல்லாம் முடியாது என்றவுடன் “என்ன நீ ரொம்ப எகிர்ற, எடு லத்திய” என்றார். தோழர் உடனே “எங்கே நீ லத்திய எடுத்து ஒரு அடி மேல வை அப்புறம் நீ இங்க இருப்பியான்னு பார்க்கலாம்” என்றார்.

நிறைய பெண் போலீசார் உடனே அங்கே குவிந்து விட்டனர். தோழரின் பேச்சு பெண் வார்டன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு வந்த பெண் போலீசு ஒருவர் “என்ன ? ரொம்ப வாய் பேசுறீங்க” என்றார். உடனே நாங்கள் “ஆமாம், மக்கள் உரிமைக்காக போராடி சிறைக்குள் வந்துள்ளோம். எங்களை அவமரியாதையாக நடத்தினால் ஏற்றுகொள்ள முடியாது. எங்களை மட்டுமல்ல பிற சிறையாளர்களையும் மரியாதைக் குறைவாக நடத்துவதை அனுமதிக்க மாட்டோம்.” என்று விடாப்பிடியாக பேசியதும் கொஞ்சம் அடக்கி வாசித்தனர்.

“இவுங்க புதுசா வந்தவங்க உங்களை பற்றி எதுவும் தெரியாது. இனிமே உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் என்னிடம் சொல்லுங்க” என்றார் சாந்தி என்ற வார்டன். இவர் சென்ற முறை சிறை சென்ற போது நமது போராட்டத்தால் மூக்கறுப்பட்டு நம்மிடம் பொறுமையாக நடந்து கொள்ள துவங்கியுள்ளார்.

அடுத்து பெண்கள் சிறை மருத்துவர் அகம்பாவம் அடக்கியது. தோழர் நிவேதாவுக்கு முதல் நாள் ‘வீசிங்’ பிரச்சனைக்கு சிகிச்சை அளித்தும் சரியாகாத காரணத்தால் அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு மருத்துவரிடம் ‘மூச்சு திணறுகிறது இரவானால் அதிகாமாகிவிடும் ஆகவே இப்போது வந்தோம்’ என்று விளக்கி கூறியும் ‘ஏன் உனக்கு இப்பதான் வர்ற தெரியுதா? நீ முன்னாடியே வர்றமாட்டியா ? எப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் தீடீர்னு வந்துச்சு? என்று ஏக வசனத்தில் ஏசினார்.

உடலுக்கு பிரச்சனை எப்போ வருகிறதோ அப்போதான் வந்து டாக்டரை பார்க்க முடியும். அதான் இப்ப வந்தோம் என்றதற்கு மீண்டும் காலையிலேயே நீ வரவேண்டியதுதானே என்றார். நேற்று காலையில் 9 மணிக்கே வந்து உட்கார்ந்திருந்தோம். 11 மணிவரை இருந்து பார்த்துவிட்டு போனோம், மேலும் உள்ளே கடிகாரம் இல்லை நேரம் பார்த்து வந்து உட்கார, இப்ப தீடீர்னு மூச்சு திணறுது, அதனால்தான் இப்ப வந்தோம் என பேசிய பின்பும் அடாவடியாக பேசிய டாக்டரை பார்த்து எம் தோழர்கள் ‘ டாக்டர்க்கு தானே படிச்சிருக்கிங்க, என் வயது என்ன உங்க வயதென்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறீங்க நான் இவ்வளவு நேரமா ரொம்ப பொறுமையா பேசுறேன், டாக்டர் நோயாளிகளிடம் பொறுமையா பேசனும்னுகூட உங்களுக்கு சொல்லித் தரவில்லையா? மொதல்ல மரியாதைய கத்துக்கிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வாங்கன்னு சொல்லிட்டு சிகிச்சை எடுக்காமல் சிறைக்கு திரும்பினோம்.

நாங்கள் பேசியதை கேட்டு அந்த மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்து போனதை காண முடிந்தது. இதுவரை அடிமைகள் சல்யுட் அடித்து கூழைக்கும்பிடு போடுவதை பார்த்தவருக்கு தோழர்கள் அணுகுமுறை அதிர்ச்சியளித்தது.

மருத்துவமனை வாசற்படியை தாண்டுவதற்குள் மருத்துவமனையில் வேலைபார்க்கும் சீட்டு எழுதும் ஆயுள் கைதியான பெண்மணி ‘பவானிய கூப்பிடுங்க’ என்று சத்தமாய் கூப்பிட்டதற்கு, தோழர்கள் ‘மரியாதை கொஞ்சம்கூட தெரியாத இந்த டாக்டர்கிட்ட சிகச்சை எடுப்பது தன்மானம் இடம் கொடுக்கவில்லை நாங்கள் வெளியே போய் சிகச்சை எடுத்துக் கொள்கிறோம்’ என சொல்லிவிட்டு செல்லுக்கு திரும்பிவிட்டோம்.

சென்ற முறை ‘நீங்க என்ன லாடு லபக்குதாஸா உங்களை மரியாதையாக பேச’ என்ற ஜெயமணி என்ற போலிசிடம் ‘ நீங்க மேலதிகாரிகளின் கட்டளைக்கு, மக்களின் வரி பணத்தில் வயிறு வளர்த்து விட்டு மக்களை கேவலமாக பார்க்குற நீங்க , ஜனநாயக பூர்வமா மக்களை பார்க்குற எங்கள பார்த்து மரியாதையா பேச கத்துக்கோங்க’ என்று கூறியதையும், மேலும் உண்ணாவிரதம் இருந்து சிறையில் ஏற்கனவே நாம் நடத்திய போராட்டத்தை நினைவுப்படுத்தி கொண்டு ‘ஏங்க டாக்டர் என்ன சொன்னாங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு சிகிச்சை எடுத்துக்கங்க ‘ என்று செல்லுக்கு எங்கள் பின்னாலேயே ஓடி வந்தார்.

நாங்க தப்பு செய்துவிட்டு ஜெயிலுக்கு வரல, சொத்து குவிப்பு வழக்கு போட்டு வாய்தா மேல வாய்தா வாங்குற ஜெ போல உங்களை அடியாள மாதிரி நாங்க நடத்தல , மரியாதை தெரியாத இந்த டாக்டர் கிட்ட சிகிச்சை எடுக்க எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.

போய் இந்த பதிலை சொன்னதற்கு அங்கு என்ன நடந்ததோ தெரியாது மீண்டும், ஜெயமணி என்ற போலிசு பெண் வந்தார். ஏங்க அப்படி என்னங்க சொல்லிட்டாங்க அதபோய் பெரிசு படுத்தறீங்க அந்த டாக்டரம்மா வீட்டுக்கு போறங்களாம், நாளை ஞாயிற்றுகிழமை வரமாட்டாங்க, திங்கள் கிழமை வரை உங்களுக்கு உடம்பு ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சுன்னா என்ன செய்யறது, அவங்க போய் கூப்பிட்டுகிட்டு வாங்க என்கிறாங்க நீங்க வரமுடியாதுங்கறீங்க நான் உங்க இரண்டு பேருக்கிடையில மாட்டிக்கிட்டு அதுக்கும இதுக்கும் அலையமுடியலீங்க’ என்று அழாத குறையாக கூப்பிட்டார். நாங்க வரமுடியாது, உங்க மேல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லீங்க என்றனுப்பிவிட்டோம்.

டாக்டரம்மா நிலைமை மோசமாவதைக்கண்டு சிறை பொறுப்பாளரான சாந்தி என்ற மேலதிகாரியிடம் போய் இப்படி பிரச்சனையாகிவிட்டது என்றவுடன் அவர் நமக்கு தெரிந்த வளர்மதி என்ற போலீசை அழைத்து நீங்கள் போய் பேசி இந்துமதியிடம் சொல்லி கன்வின்ஸ் பண்ணி அழைத்து வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள சொல் என்று அனுப்பிய பிறகு போய் சிகிச்சை எடுத்து வந்தோம்.

மேலும் உணவில் நெல்,கல்,கருப்பரிசி கிடப்பதையும் உணவு சரியாக கொடுங்கள் என்றும், நம்மை போல் எல்லா பெண்களையும் மரியாதையுடன் நடத்துங்கள் என்றும் எடுத்துரைத்தோம்.

கொசு உற்பத்தி அங்கிருந்துதான் மொத்த திருச்சிக்கே சப்ளை ஆகும் அளவிற்கு மிகவும் அதிகமாக இருந்தது. கைதிகளுக்கு வழங்க வேண்டிய உணவு பொருட்களை கொள்ளையடிக்கும் ஊழல் பெருச்சாளிகளை போல ‘அவர்களுக்கு சற்றும் குறைந்தவர்களல்ல நாங்கள்’ என்ற வகையில் நிறைய பெருச்சாளிகள் இரவில் செல்லுக்குள் வந்து நம் வயிற்றை கலக்கின.

நாங்கள் குழந்தைகளை வைத்து கொண்டு அச்சத்தோடு அன்றிரவை தூங்காமல் கழித்தோம். சென்னை அரசு மருத்துவமனை குழந்தையை பெருச்சாளி கடித்தது நினைவு வந்ததும் மிகவும் பயந்து போனோம். அடுத்த நாளிரவு அவர்கள் கீழே விரிக்க கொடுத்திருந்த வெள்ளை ஜமுக்காளத்தை எட்டாக சுருட்டி வைத்து பெருச்சாளி உள்ளே வராமல் 3 நாட்களும் தடுத்து குழந்தைகளை பாதுகாக்க முயற்சி எடுத்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம்.

மற்ற பெண் கைதிகளின் நிலைமையும் கைக்குழந்தைகளுடனும் எண்ணற்றவர்கள் இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றனர். எங்களைக் கண்டதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், ஜாமின் எடுக்க வழியில்லமால் தவிக்கும் கைதிகள் உட்பட அனைவரையும் சந்தித்து பேசினோம். நாம் நலம் விசாரிக்க “எங்கே இருக்கிறது இங்கேதான் குத்தி குதறி விடுகிறார்களே? அண்ணா பிறந்த நாளுக்காவது விடுவாங்கன்னு பார்த்தா 12,14 வருசமாகியும் விடமாட்டேங்கிறாங்களே” என்று வேதனையுடன் பதில் சொல்கின்றனர்.

நாங்கள் போய் மூன்று அல்லது நான்கு நாட்கள் இருந்துவிட்டு வெளியில் வந்துவிடுவதால் உண்மை நிலைமையை கணிக்க முடியவில்லை, ஆனால் நன்நடத்தையை கொண்டு ஆண்களை விடுதலை செய்வது போல பெண்களை விடுவித்தால் நன்றாக இருக்கும். உங்கள் அமைப்பு இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்றனர் அந்தப் பெண்கள்.

அம்மா என்ற சொல்லுக்கு அருகதையற்ற பாசிச ஜெயாவை மட்டுமல்ல, இன்றைய அரசியல் அமைப்பு முறையை ஒழித்துகட்டி உழைக்கும் மக்களுக்கான அரசமைப்பை உருவாக்கும் நாள்தான் உழைக்கும் மக்கள் அனைவரும் விடுதலை நாள் என்பதை அவர்களுக்கு உணர்த்த முயன்றோம். இடையில் பிணை கிடைத்ததால் அவர்களை விட்டு பிரிந்தோம், மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்.

கூடங்குளம்






26.09.12 இன்று இடிந்தகரையில் ....வைகோ










"408 நாட்களாக இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடக்கிறது. இது போன்ற போராட்டம் உலகின் எந்த பகுதியிலும் இதுவரை நடந்தது இல்லை. மணப்பாட்டில் கடந்த பத்தாம் தேதி காவல்துறை அதிகாரியால் அந்தோணி ஜான் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தோணி ஜானை சுட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


நாசகார அணுஉலைக்கு எதிராக போராடிய இந்த மக்களை கண்காணிக்க கடலோர சிறிய ரக விமானங்கள் வர வேண்டிய அவசியம் என்ன வந்தது ? தாழ்வாக பரந்த விமானத்தின் இறக்கையில் அடிபட்டுத்தான் இடிந்தகரை சகாயம் இறந்து போனார் என்று குற்றம் சாட்டுகிறேன். இடிந்தகரை பாகிஸ்தானில் இருக்கிறதா ? அல்லது சைனாவில் இருக்கிறதா ? மத்திய மாநில அரசுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த வைகோ மிக ஆபத்தானவன். என்னை அரசியலில் அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார்கள். மத யானைகளை போன்றவர்களை அடக்கி பழக்கப்பட்டவன் இந்த வைகோ. முதல்வரை குற்றம் சாட்டுகிறேன், நீங்கள் சொல்லித்தான் மணப்பாட்டில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அந்தோணி ஜானை நீங்கள்தான் கொன்றீர்கள்.


கூடங்குளத்தில் நிலைமை சீரடைந்தவுடன் இந்த பகுதிக்கு 500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் அணுசக்தி தலைவர் ஆர்.கே . சின்கா கூடங்குளம் அணுஉலை அடுத்த ஆண்டுதான் செயல்படும் என்று அறிவிக்கிறார். அப்படிஎன்றால் முதல்வர் அவர்களே உங்களுக்கு எதுவுமே தெரியாதா ? கலைஞர் தூண்டில் விடுகிறார் உதயகுமாரனுக்கு ! கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்த வேண்டும் என்றவர், இப்போது இடிந்தகரை மக்களின் போராட்டம் வெகுசன மக்களின் போராட்டமாக உருப்பெற்று வருவதை அறிந்து, போராட்டக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார் கலைஞர். முதல்வர் ஜெயலலிதாவாக இருக்கட்டும், கலைஞராக இருக்கட்டும். முதலில் அணுஉலை குறித்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சும்மா பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் வேண்டாம்.


இந்த இடிந்தகரை லூர்து அன்னையின் ஆலய பந்தலுக்கு நிறைய கட்சியினர் வருகின்றனர். இங்கே இந்த பந்தலில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். சென்னையில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். டெல்லியில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். உதயகுமாரனுக்கு சொல்வேன். எங்கள் கட்சியின் கொள்கை அணுஉலையை எதிர்ப்பது. அதுபோலவே இந்த பந்தலுக்கு வரும் கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுப்பது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற செயல்களை இனி அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒன்றும் பதவிகளுக்கு அலைய வில்லை. இப்போது கூட இந்த மக்களுக்கு அறிவிக்கிறேன். எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்கமாட்டேன். யாருக்கு வேண்டுமானாலும்ஒட்டுப்போட்டுக்கொள்ளுங்கள். நானும், என் தோழர்களும் இனி கூட்டணி என்று எவர் வாசலிலும் போய் நிற்க மாட்டோம்.


நான் முதன்முறையாக எம்பியாக நியமிக்கப்பட்ட போது, என் மூத்த அக்காவிடம் அறிவுரை வேண்டி நின்றேன். அவர் சொன்னார், நமக்காக யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா , நிராயுதபாணியாக நிற்பவர்கள், வாழ்க்கையின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் என்றார். அதையே இங்கே சொல்வேன், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இந்த மக்களோடு மக்களாக பாடுபடுவேன். நான் இந்த இடிந்தகரை மக்களை சந்திக்கும் போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன். வாளை தீட்டுவதை போல , எனக்கு நானே பட்டை தீட்டிக் கொள்கிறேன்."



26.09.12 இன்று இடிந்தகரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பேச்சு.
 

செயற்கை மின்வெட்டு


வணக்கம் நண்பர்களே, கூடங்குளம் அணுஉலை பற்றிய சில மறந்த உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது அவசியமானது என கருதுகிறேன்

அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரமானது, திரு.உதயகுமார் மற்றும் அவருடன் சேர்ந்து போராடும் போராளிகளாலும் காலத
ாமதமாகிறது என்று இந்திய மத்திய அரசால் உலகிற்கு காட்டபடுகிறது, 
 Photo: வணக்கம் நண்பர்களே, கூடங்குளம் அணுஉலை பற்றிய சில மறந்த உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது அவசியமானது என கருதுகிறேன்

அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரமானது, திரு.உதயகுமார் மற்றும் அவருடன் சேர்ந்து போராடும் போராளிகளாலும் காலதாமதமாகிறது என்று இந்திய மத்திய அரசால் உலகிற்கு காட்டபடுகிறது, ஆனால் ...
உண்மை என்னவெனில், அணுஉலை இயங்க பயன்படும் Compressor இயங்குவதில் பழுதாகி சிக்கல் ஏற்பட்டுள்ளது,

அந்த இயந்திரத்தின் மதிப்பு 1.75 கோடி ரூபாய் ஆகும், ஆகையால் அவற்றை புதிதாக மாற்ற இரசியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அது பிப்பரவரி மாதத்தில்தான் இங்கே வந்தடைய முடியும், இந்த சிக்கலை சரி செய்யாமல் அவர்கள் என்னதான் எரிபொருளை நிரப்பினாலும் பயனளிக்காது, இக்காரணத்தினால் அணுஉலை இயங்காது, பிப்பிரவரி மாதத்திலிருந்து மேலும் இரண்டு மாதங்கள் ஒன்றிணைக்க (Assemble) காலம் எடுத்து கொள்ளும், காங்கிரஸ் தலைமையிலான அரசு திரு.உதய குமார் மீது வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றது.

மேலும் கூடுதலாக, நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவன், இங்கே நாங்கள் 16 முதல் 17 மணி நேரங்கள் வரை மின்சார தடையை பெற்று வருகிறோம், மின்சார வாரியமோ "மின்சார தட்டுப்பாட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது" என பதிலளிக்கின்றனர், ஆனால் நாங்கள் ஆராய்ந்தவரை மின்சார தட்டுபாடு இல்லை, காற்றலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறைந்தபட்சம் இவர்களால் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தடையின்றி சிறப்பாக மின்சாரம் வழங்க முடியும். செயற்கை மின்வெட்டு என்பது வெளிப்படையாக தெரிகிறது

அருகில் உள்ள கேரளாவில் மின்வெட்டு என்பதற்கு அர்த்தமே அவர்களுக்கு தெரியாது, ஆனால் அனைத்து வளமும் அமைந்த தமிழ் நாட்டிற்கு மட்டும் எப்படி மின்வெட்டு வரும்?,

கூடங்குள அணுஉலையை திறப்பதற்க்காகவே, அரசாங்கம் செயற்கை தட்டுபாட்டை காண்பிக்கிறது, மின்சார பற்றாகுறை என அழுத்தமாக நிரூபிக்க முயல்கிறது

நண்பர்களே, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசாங்கத்திடம் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கவும்

Thanks:Agazhvaan GGanesh
Gaudwin Ap
ஆனால் ...
உண்மை என்னவெனில், அணுஉலை இயங்க பயன்படும் Compressor இயங்குவதில் பழுதாகி சிக்கல் ஏற்பட்டுள்ளது,

அந்த இயந்திரத்தின் மதிப்பு 1.75 கோடி ரூபாய் ஆகும், ஆகையால் அவற்றை புதிதாக மாற்ற இரசியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அது பிப்பரவரி மாதத்தில்தான் இங்கே வந்தடைய முடியும், இந்த சிக்கலை சரி செய்யாமல் அவர்கள் என்னதான் எரிபொருளை நிரப்பினாலும் பயனளிக்காது, இக்காரணத்தினால் அணுஉலை இயங்காது, பிப்பிரவரி மாதத்திலிருந்து மேலும் இரண்டு மாதங்கள் ஒன்றிணைக்க (Assemble) காலம் எடுத்து கொள்ளும், காங்கிரஸ் தலைமையிலான அரசு திரு.உதய குமார் மீது வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றது.

மேலும் கூடுதலாக, நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவன், இங்கே நாங்கள் 16 முதல் 17 மணி நேரங்கள் வரை மின்சார தடையை பெற்று வருகிறோம், மின்சார வாரியமோ "மின்சார தட்டுப்பாட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது" என பதிலளிக்கின்றனர், ஆனால் நாங்கள் ஆராய்ந்தவரை மின்சார தட்டுபாடு இல்லை, காற்றலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறைந்தபட்சம் இவர்களால் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தடையின்றி சிறப்பாக மின்சாரம் வழங்க முடியும். செயற்கை மின்வெட்டு என்பது வெளிப்படையாக தெரிகிறது

அருகில் உள்ள கேரளாவில் மின்வெட்டு என்பதற்கு அர்த்தமே அவர்களுக்கு தெரியாது, ஆனால் அனைத்து வளமும் அமைந்த தமிழ் நாட்டிற்கு மட்டும் எப்படி மின்வெட்டு வரும்?,

கூடங்குள அணுஉலையை திறப்பதற்க்காகவே, அரசாங்கம் செயற்கை தட்டுபாட்டை காண்பிக்கிறது, மின்சார பற்றாகுறை என அழுத்தமாக நிரூபிக்க முயல்கிறது

நண்பர்களே, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசாங்கத்திடம் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கவும்

Thanks:Agazhvaan GGanesh
Gaudwin Ap