Like me

Sunday, April 22, 2012

காதலே .........

  


  
  

  

  

                            

          

  

      


     

    

              

                                     


                                     

             

                  

                

             

                

                       

                                                             

  

                                                                  

              


புராதன இந்து தலமான திருக்கேதீஸ்வர வளாகத்திற்கு அண்மையாக அடாவடியாக குந்தியிருக்கும் புத்தர்

                                    
புராதன இந்து தலமான திருக்கேதீஸ்வர வளாகத்திற்கு அண்மையாக அடாவடியாக குந்தியிருக்கும் புத்தர் இவர்தான்.

இந்தப்பணம் யாருடையது?

                                             
கிந்திய நாட்டு அதிபர் பிரதீபா பாட்டீல்
வெளி நாடுகள் சுற்றுலா செல்ல உள்ளார்.
இந்த சுற்றுலவுக்கு -205 கோடி கிந்தியப்பணம்.!

இந்தப்பணம் யாருடையது தெரியுமா..?
உங்களுடையது தான்.!!

எப்படி.?
இன்றய விலைவாசிகள் எப்படி ஏறியது..?
அதற்கு வரி விலக்குகள் அதற்காக சாட்டுக்கள்..?

இது தான் சுகந்திரமான சுதந்திர அரசியல் சுற்றுலாக்கள்.!
கேட்பார் அற்ற முடவர்களாக்கப்பட்ட கிந்திய நாட்டு மக்கள்.!

வாழ்க பாரதம்.

தமிழின பெண்மையின் வீரம்

                    
இந்த ஆயுதத்தை இயக்குவது ஒரு ஆபார விதமான சக்தி வேண்டும்.
முக்கியமாக பதட்டமற்ற நிலையும் நேர்த்தியும் அதிகம் தேவை.
குறிப்பிடும் படியாக இந்த ஆயுதத்தை இயக்கும் போது உதறல் அதிகம் இருக்கின்றது.
அதனால் மண்ணில் நிலை நிறுத்தி காப்பரண்களை பயன் படுத்தி இயக்கினால் குறிக்கப்பட்ட இடத்திற்கு ரவை சென்றடையும்.

அதே போன்று சர மாரி வெடி என்று நாம் போற்றும் தொடர் ரவைகளால் தாக்கும் போது இலக்கு அதிகளவு தவறலாம்.
அத்துடன் வீ்ண் விரையமாகும் என்பதால் அப்படி தாக்குவது அதிகளவு குறைவு..
ஆனால் எதிரிக்கு பயத்தை உருவாக்கி விடுவதால் தொடர் ரவைகளை ஏவுவதுண்டு.
இதை இயக்கும் போராளிக்கு உண்மையிலே உற்சாகத்தை உண்டு பண்ணி முன்னேற துணிவான நிலைக்குத்தள்ளப்படுவதால் வெற்றிக்கு மன வலிமையான வழி வகுக்கின்றது.

இந்த ஆயுதம் தோழில் சுமக்கு அளவுக்கு மிகுந்த கனமானது.
ஆனால் வெகு சுலபமாக சுமக்க முடியாது.
இதற்கு இரவைகளை சுமக்க ஒருவர் ஆயுதத்தை சுமக்க ஒருவர் என இரண்டு பேரை நிர்ணயம் செய்வதுண்டு.

காரணம் அத்தனையும் இரும்பிலான பார அளவு அதிக நிறை கொண்டது.
இதனால் தோழ் வலிகளால் சிவந்து மரத்துப்போகும் நிலை உருவாகும்.!

இப்படியான துப்பாக்கியான இந்த கலிபர்கள்-50 இருந்து 90 வரை உள்ளது அதையும் தாண்டி இருக்கலாம் நாம் அறியவில்லை.
எனினும் இதைக் குறிப்பிடும் வகையில் கனரக ஆயுதங்களில் ஒன்று என்று வகைப்படுத்துகின்றது.

இந்த ஆயுத பராமரிப்பு மிகக் கடினம்.

ஒரு இயந்திரத்தை நாம் எப்படி பழுதுகள் வராது திருத்துனர் கவனம் செய்கின்றாரோ
அப்படி திருத்தும் சாவிகளைப்பயன்படுத்திக்கொள்ள அனைவரும் கற்க வேண்டும்.
இந்த சாவிகள் போர்களத்தில் தேவைப்படுவதால் எங்கு சென்றாலும் கொண்டு செல்ல வேண்டிய நிலையாக உள்ளது.

பொதுவாக பெண் போராளிகள் சுமப்பது கடினம்.
ஆனால் தமிழீழத்துப்போராளிகள் இதை இயக்குவதிலும் குறி தவறாது தாக்கியும் சுமப்பதில் வல்லவர்கள் என்பது உலக வல்லாதிக்கம் அறிந்ததுடன் தமிழின பெண்மையின் வீர வரலாற்றுப்பெருமையாகும்.!!!

            





தமிழினம் எதிர் பார்க்க முடியாத ஒரு தமிழினத்தின் தாய்க்கு கிடைத்த வீர மகள்கள்.
இதை முடக்கிவிடத்தான் உல வல்லாதிக்க அரக்கத்தனம் எழுந்தன..
பாரதி எதிர்பார்த்த பெண்கள் தமிழீழத்தில் முழுமையாக இந்தக்காலத்தில் காண முடிந்தது.
இதை எந்த இனமும் மறுக்க முடியாதவை.!

திராவிடம் ஒரு மாயை...திராவிட பூசாண்டி ஒழியாமல் தமிழர் விடுதலை இல்லை

                                   


அப்பாவி தமிழ் மக்களை அழித்த சிங்களவனோடு கைகுலுக்கி ஒன்றாக விருந்து சாப்பிட்டிட்டு வந்து தமிழ் நாட்டில் வாழும் அரசியல் வாதிகள் எல்லாம் தியாகிகள் தமிழினத்தின் விடுதலைக்காக போராடும் செந்தமிழன் சீமானை போன்ற சாதாரண மனிதர்கள் எல்லாம் துரோகிகளா சொல்லுங்கடா...

தமிழன் போர்வையில் பேசும்  திராவிடனே செந்தமிழன் சீமானை பற்றி பேச உனக்கு இல்ல எவனுக்கும் உரிமை இல்லை...

திராவிடம் என்பது மொழியோ, அல்லது இனமோ கிடையாது அது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு தமிழ் மக்கள் மனதில் ஊட்டப்படும் ஒரு மாயை...

இதை தமிழர்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்... தமிழன் போர்வையில் பேசும் திராவிடன் அல்ல...
                                         

திராவிட பூசாண்டி ஒழிக்காமல் தமிழ் இனத்தின் விடுதலை இல்லை.

திராவிடம் ஆரியத்துக்கு..... எதிராய் வந்தது என்றால் ?

திராவிடம் இந்தியா ..........தேசியத்துக்கு எதிராய் வந்தது என்றால் ?

இந்த திராவிட கட்சிகள் ..........தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்க இல்லையா?

மத்தியில் கூட்டாட்சி........... மாநிலத்தில் சுயாட்சி என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்க ........பட்ட இந்த திராவிட கட்சிகள்

அதனை மறந்து அதனை தூக்கி போட்டு தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க இல்லையா ?

நேருவின் மகனே வா.

தமிழகத்துக்கு நல்ல ஆட்சி தா ........என்று முழங்கியவர்கள் யார் ?

ஆரியத்துக்கு எதிராய் தன்........... திராவிடம் வந்தது என்றால் தமிழன் என்று சொன்னால்.............. பார்பனியர் வந்து விடுவார்கள் என்றால் நாம் தமிழர் கட்சி தொடங்கி .............இரண்டு வருடங்கள் முடிகின்றது இதுவரை எந்த........... பார்பனியரும் இனைய முன் வர இல்லை ஏன்?

நமக்கு கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் தான் எதிரியே........ தவிர வேற யாரும் இல்லை.

3 வீதா ஆரியம் என்ற ...... பூசாண்டி கட்டி 30 வீதா திரவிடத்தினை தமிழ் நாட்டில் ஏற்றியதுதான் திராவிடம்

திராவிட பூசாண்டி ஒழியாமல் தமிழர் விடுதலை இல்லை

பெரியார் இடம் ஊடகவியாளர்!!!

கருணா நிதி மத்திய சென்னையில்........ திரை கதை வசனம் எழுதி கொண்டு இருந்த .........மாறனை தேர்தலில் நிறுத்தினார்

அபோது தமிழ் நாட்டில்.......... கிந்தி மொழி எதிர்ப்பு போரட்டம் தமிழ் நாடு எங்கும் பத்தி எரிந்து கொண்டு இருந்தது .

தேர்தலில் மாறன் வென்றார்

ஊடகவியாளர் பெரியார்........ இடம் சென்று கேட்டார்கள் மாறனின் வெற்றி தொடர்பில்.

பெரியார் சொன்னார்

தமிழ் மக்கள் கிந்தி மொழியில்...... இருந்த வெறுப்பையும் தமிழ் மொழியில் இருந்த .......பற்றினையும் காட்டுகின்றது என்று

இன்று அதே ..........மத்திய சென்னையில் ........மாறனின் சகோதரர் தயாநிதி மாறனை.......... நிறுத்தினார் கருணா நிதி

கருணா நிதியிடம் .........ஊடகவியாளர் கேட்டார்கள் உங்கள் கட்சியில் பல முத்த உறுபினார்கள்............... இருக்கும் போது இவரை ஏன் நிறுதினிர்கள் ..............என்று கேட்ட போது

கருணா நிதி சொன்னார் .............அவருக்கு கிந்தி மொழி நல்ல தெரியும் வட இந்தியா தலைவர்களுடன் ..........பேச வசதியை இருக்கும் என்று சொன்னார் கருணாநிதி .

கிந்தி மொழிக்கு எதிராய் உயிர் நீத்த தமிழன் என்ன பையித்தியகாரனா ???


-சீமான் -

தமிழினத்தை காப்பாற்ற முடியாத திராவிட கட்சிகள் இருந்து என்ன பலன்? சீமான்

                                                              
தமிழினத்தை காப்பாற்ற முடியாத திராவிட கட்சிகள் இருந்து என்ன பலன்? சீமான் ,
‘’தமிழ்நாட்டில் இத்தனை திராவிடக்கட்சிகள் இருந்தும் இலங்கையில் தமிழினம் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே, ஏன்? ஏனென்றால் பதவியை தக்க வைத்துக் கொள்ள காட்டிய அக்கறை இனத்தை காப்பதில் காட்ட மறுத்ததே காரணம். திராவிடக்கட்சிகள் ஆண்டதுபோதும், தமிழர்களாகிய நாம் மாண்டதும் போதும். உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். எம் தமிழினத்தை விட்டுவிடுங்கள்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தேசிய கட்சிகள் என்று கூறிக்கொண்ட கட்சிகள் அனைத்திற்கும் சாவு மணி அடித்துவிட்டது. தேசிய கட்சிகளை மக்கள் இதற்கு மேலும் நம்பத்தயாராக இல்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தேசிய கட்சிகள் அரசியல் முடிவுக்கு வந்தால்தான் நமது நாட்டில் உண்மையான கூட்டாட்சி மத்தியிலும், மாநில தன்னாட்சியும் மலரும். அதுவரை கூட்டாட்சியும் பிறக்காது. தன்னாட்சியும் மலராது’’என்று பேசினார்.

ஆந்திராவின் காட்டுப்பகுதியில் செயற்பட்டு வரும் இலங்கை ஆயுதக்குழு?!

                                      

ஆந்திராவின் காட்டுப்பகுதியில் செயற்பட்டு வரும் இலங்கை ஆயுதக்குழு?!

ஆந்திராவின் மேற்கு பகுதி காடுகளில் செயற்பட்டு வரும் மாவோயிஸ் குழுக்களுடன் இணைந்து சிறிய இலங்கை குழுவொன்றும் செயற்பட்டு வருவதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் சிக்கமகூலர், உடுப்பி, ஷிமோகா மற்றும் தக்ஷின கன்னடம் ஆகிய பகுதிகளில் 25-30 மாவோயிஸ்டுக்களுடன் இணைந்து இலங்கை குழுவொன்றை செயற்பட்டு வருவதை தாம் அறிந்துள்ளதாக கர்நாடகா சட்ட சபையில் ஆர்.அசோக் கூறியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அண்மையில் நக்சலைட்டுக்கள் கைப்பற்றிய மாவோயிஸ்டுக்களின் ஆயுதங்களை அடுத்து இலங்கை சந்தேகநபர்கள் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாக கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் எம்பி அஷ்வத் நாரயணன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அசோக் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடகா உள்துறை அமைச்சர் அசோக் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக சிலுவை சுமந்து புதுச்சேரித்தமிழர் நடைபயணம்!

                                             


இலங்கைத் தமிழர்களுக்காக சிலுவை சுமந்து புதுச்சேரித்தமிழர் நடைபயணம்!

இலங்கைத் தமிழர்களுக்காக காலில் சங்கிலி கட்டிக் கொண்டு, சிலுவை சுமந்தபடி நடைபயணம் மேற்கொண்ட ஒருவர் புதுச்சேரியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், இலங்கையில் வாழும் தமிழர்களை தமிழராக மட்டும் பார்க்காமல், மனிதர்களாகவும் பார்க்க வேண்டும், இலங்கை தமிழர்கள் படும் துயரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், நேற்று காலை நூதன போராட்டம் நடத்தினார்.

சிலுவை போன்ற மரக் கட்டையை ஏந்தி, கைமற்றும் கால்களைச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு, கடற்கரை காந்தி சிலை அருகிலிருந்து,நேற்று காலை நடைபயணத்தைத் ஆரம்பித்தார். வழக்கமாக கோரிக்கை மனுக்களை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கொடுப்பதைத் தான் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் ரவீந்திரன், இலங்கைத் தமிழர்களுக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை, புதுச்சேரியில் முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டுள்ள மறைந்த தலைவர்களின் சிலைகள் முன் மனுவை வைத்தபடி (ஒட்டிவிட்டு) சென்றார்.

காந்தி சிலையிடம் மனு அளித்து விட்டு புறப்பட்ட ரவீந்திரன், நேரு, அண்ணா, ராஜிவ், இந்திரா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலை இருக்கும் பகுதிக்குச் சென்று, அங்கு மனுவை சமர்ப்பித்து விட்டுச் சென்றார்.

இதுபற்றி ரவீந்திரனிடம் கேட்ட போது, "நாட்டில் உள்ள பல தலைவர்கள் பிரச்னைகளை காதில் வாங்காமல் சிலையாய் நிற்கின்றனர். இதனால், தற்போது சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.

காதலிக்க கற்று கொள்!!








காதலிக்க கற்று கொள்!!

காதலே உன்னதம்
காதலே பரிபூரணம்
காதலே நேசிப்பின் "நிலாவரை"
ஆதலால் மானுடனே!
காதல் செய்வாய்.
காதலிப்பதென்று முடிவெடுத்து விட்டாயானால்'
யாரை காதலிக்கலாம்?
எதிர்ப்பாலார் மீதான காதலெல்லாம்
இங்கு காமம் கலந்தே விற்பனையாகிறது.
தோலில் சுருக்கம் விழுந்தவுடனேயே
அதிகமான "காதல்கள்"
அஸ்தனமனமாகி விடுகின்றன
தெருநாயும் காதலித்தே கலவி செய்கிறது.
இதில் தெய்வீகம் இருப்பதென்பதெல்லாம்
சுத்தப் பம்மாத்து.
வேறேதைக் காதலிக்கலாம்?
அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுகொள்.
பெற்றதாய் சுமந்து பத்துமாதம்
நிலம் சுமப்பதோ நீண்டகாலம்.
அன்னை மடியிலிருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில் தானே.
இறுதியில் புதைந்ததோ
அல்லது எரிந்ததோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில் தானே.
நிலமிழந்துபோனால் பலமிழந்துபோகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்.
ஆதலால் மானுடனே!
தாய் நிலத்தை காதலிக்க கற்றுகொள்..

இலங்கையின் போர்குற்றங்கள் பற்றி இந்தியாவை பேச வைத்த பெண் நிருபருக்கு விருது

                                    

இலங்கையின் போர்குற்றங்கள் பற்றி இந்தியாவை பேச வைத்த பெண் நிருபருக்கு விருது

இந்தியாவின் துணிச்சல் மிக்க பெண் ஊடகவியலாளர் விருதை பெற்றுக்கொண்ட பிரியம்வதா பஞ்சாபிகேசன் அவர்களுக்கும் , அவரது துணிச்சலை உலகறிய வைத்த "ஹெட்லைன்ஸ் டுடே: தொலைக்காட்சிக்கும் அனைத்துலக தமிழ் மையம் உலகத் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்,நண்பர்களே நீங்களும் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வது சிறந்தது ,

மேலும் அறிந்து கொள்ள 
http://www.newsalai.com/2012/03/blog-post_3610.html

கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கேள்வி

                                                              

ஈழத்தில் நடந்த சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கேள்வி

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! 

ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றி யுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி.

'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடியவர் யார் என்பதை நிலைநிறுத்துவதற்காக விடுதலைப் போராளிகள் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு ஒற்றுமையைக் கெடுத்துக் கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். போராளிகள் மாத்திரமல்ல போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் மற்றும் பக்கத்து நாட்டுத் தலைவர்களுக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பும் செல்வாக்கும் உள்ள அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பத்மநாபா குழுவைச் சேர்ந்த 10 பேர் சென்னையில் ஒரே நாளில் கொல்லப்பட்டதையும் அறிவீர்கள். சகோதர யுத்தம் வேண்டாம் என்று நான் பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கொண்டும்கூட யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை’ என்று கூறி இருக்கிறார் கருணாநிதி.

2012-ம் ஆண்டில் இவ்வாறு புலம்புகிறவர், 1990-ம் ஆண்டு மே 8-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் என்ன கூறினார்? இது, சட்டமன்றப் பதிவேட்டில் பதிவாகி உள்ளது. தேச விரோத நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபடுவதாக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, 'மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பிளவு ஏற்படுத்த 'ரா’ உளவுத்துறை தொடர்ந்து செயல்படுகிறது. இலங்கையில் உள்ள பல்வேறு போராளிக் குழுக்களிடையே பிளவும் மோதலும் ஏற்பட்டதற்கு 'ரா’ உளவுத்துறையே காரணம்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இவ்வாறு, சகோதரச் சண்டைக்கு 'ரா’ உளவுத் துறையே காரணம் என்று சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டியவர், இப்போது மத்திய அரசின் கூட்டாளியாக இருப்பதால் 'ரா’ உளவுத்துறையைப் பற்றி எதுவும் பேசாமல் போராளிகள் மீது பழியைச் சுமத்த முற்படுகிறார்.

அது மட்டும் அல்ல... 1984-ம் ஆண்டில் அனைத்துப் போராளி இயக்கங்களையும் ஒற்றுமைப் படுத்துவதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். எடுத்துக்கொண்ட முயற்சியைத் திட்டமிட்டுச் சீர்குலைத்தது யார்? 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழீழ விடுதலை அமைப்புகளை ஒன்றுபடுத்துவதற்காக அந்த அமைப்பின் தலைவர்களை, குறிப்பிட்ட நாளில் தம்மைச் சந்திக்குமாறு முதல்வர் எம்.ஜி.ஆர். பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தமிழ்நாட்டு நாளிதழ்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆனால், இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினமே தி.மு.க. தலைவர் கருணாநிதி குறுக்குச்சால் ஓட்டினார். போராளிகளை சந்திக்க வருமாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட தினத்துக்கு முந்தைய தினம் தம்மைச் சந்திக்குமாறு ஈழ விடுதலை அமைப்புகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதுவும் பத்திரிகைகளில் பரபரப்புடன் வெளியானது.

உண்மையிலேயே, போராளி இயக்கங்களை ஒன்று படுத்த வேண்டும் என இவர் நினைத்து இருந்தால், இதற்கு முன்பே இத்தகைய அழைப்பை விடுத்திருக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்த பிறகு, ஏட்டிக்குப் போட்டியாக இவர் ஓர் அழைப்பு விடுவதின் உள்நோக்கம் என்ன? ஒற்றுமையைச் சீர்குலைப்பதே என்பது வெள்ளிடை மலையாகும்.
கருணாநிதி விடுத்த அழைப்பை விடுதலைப் புலிகளும், பிளாட் இயக்கமும் ஏற்கவில்லை. ஏனென்றால், முதலில் அழைப்பு விடுத்தவர் எம்.ஜி.ஆர்.தான். கருணாநிதி அதற்குப் போட்டியாக இதைச் செய்கிறார் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தது. எனவே, அவர்கள் செல்லவில்லை. மற்ற இயக்கங்கள் கருணாநிதியின் அழைப்பை ஏற்றுச் சென்றன. இதன் விளைவாக, முதலமைச்சர் மேற்கொள்ள இருந்த ஒற்றுமைக்கான முயற்சி திட்டமிட்டுச் சீர்குலைக்கப்பட்டது.

இதைச் செய்த கருணாநிதிதான் இப்போது சாத்தான் வேதம் ஓதுவதுபோல, சகோதரச் சண்டையைப் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!

தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? - ஐ நா

                                                                        


ஐ நாவால் தமிழீழம் தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது.

உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இந்திய இனவெறி

                 
தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் இந்திப்படத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்போம்.

அடிமைப்பட்டு கிடந்த தமிழினத்தை கேட்கநாதியற்று கிடந்த போது சிங்கள இனவெறி அரசபடைகளும் காடையர்களும் கொன்று குவித்து சொத்துக்களை சூறையாடிய கொலைவெறியாட்டம் போட்டு நிற்கையில் அந்த கொலைவெறிப் பேய்களிடம் இருந்து தமிழினத்தை மீட்டெடுக்கும் உண்ணத நோக்கத்திற்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
முகவர் (ஏஜென்ட்) விநோத் என்ற உளவுப்படம் இந்தியில் தயாராகியுள்ளது. இதில் முக்கிய வேடமேற்று றோ உளவுத்துறையின் உயரதிகாரியாக இந்தி நடிகர் சயிப் அலி கான் நடித்துள்ளார்.

கடைசியாக எல்லாப் புலிகளும் செத்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன். நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்....? எனக் கூறி புலிவீரனாக சித்தரித்துள்ள நபரை இந்திய உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் சயிப் அலி கான் விரட்டிவிரட்டி அடிப்பதாக ஒருகாட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவிற்கு எதிராக பாரிய சதிநடவடிக்கையில் புலிகள் ஈடுபடுவதை இந்திய உளவுத்துறை தடுப்பது போன்ற கதையினை அடிப்படையாக கொண்டே இந்த முகவர் வினோத் என்ற இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இந்திய பாதுகாப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலானவர்கள் என்பதை இந்திய மக்களின் மனங்களில் விதைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கும்.

அமெரிக்க உளவுப்படத்தில் ரசியாவைச் சேர்ந்தவர்களால் அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொள்ள முயற்சிக்கப்படும் பாரிய சதியை அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரியாக நடிப்பவர் முறியடித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவது போன்ற கதைகளே அடிப்படையாக இருக்கும். அவ்வாறே இந்தியாவிற்கு எதிரான சக்தியாக விடுதலைப்புலிகளை சித்ததிரிக்க முற்பட்டுள்ளார்கள்.

கண்டிப்பாக இதற்கு பின்னால் இந்திய உளவுத்துறையின் தூண்டுதல் இருக்கும்.

இதனை கண்டித்து இந்தப்படம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வெளியிடாதவாறு எதிர்ப்புக்களை காட்டவேண்டும். தமிழர்களே விழித்தெழுங்கள். தமிழனை சீண்டியவன் செத்தான் என்பதை நிரூபிப்போம்.

தமிழ் மக்களுக்கு எதிரான இந்த திரைப்படத்தை தடுப்பது தொடர்பாக அல்லது அதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்களை நீக்குவதற்கு ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்று தமிழக ஈழதேசம் குழுவினர் சட்ட நிபுணர்களை நாடியுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலுக்கடியில் பூம்புகார்.. ........

             

கடலுக்கடியில் பூம்புகார்..

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
 

பூம்புகார் - தாகம் தனியா அலைகளும்...கடல் திண்ணும் கரைகளும்

                            
பூம்புகார் - தாகம் தனியா அலைகளும்...கடல் திண்ணும் கரைகளும் - இரா.கோமகன்

தமிழ்க கடற்கரை 906 கீ.மீ நீளம் கொண்டது. இந்திய கடற்கரை நீளத்தில் 13 சதவிகிதம். கடற்கரையில் நாட்டின் 25 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர். தமிழக மக்களில் 10 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் மீன்பிடித்தலில் நேரடியக ஈடுபட்டுள்ளனர். தமிழக மக்கள் சிறந்த கடலொடிகள் மட்டுமல்ல கடலின் தன்மையை முழுமையாக அறிந்திருந்தனர். கடல் விஞ்ஞானம் பிடிபட்டிருந்தது. கடல் நீரோட்டம், அலைகள், காற்று, வளி மண்டல மாற்றங்கள், கடற்கரை மண் தன்மை, கலங்கள், கடல்வாழ் உயிரிகள் பற்றிய அறிவு வாய்க்கப்பெற்றவர்களாக வாழ்ந்தனர். இவை நாகை மாவட்ட நெய்தல் மக்களுக்கும் வாய்திருந்தது.

ஒரு செம்படவப்பெண் தன் துணைவன் எப்பொழுது கரைவருவான் கடல் தொழிர்முடித்து என்பதை கடற்கரை மணலில் ஒரு குச்சியை சொருகி அதன் இருகு, இளகு தன்மையை வைத்தே ( due to high tidies, low tides and ocean currents makes the shore sand texture) சொல்லிவிடுவாள். கடல் நீரோட்டதில் அலை ஏற்றதில் கரை அடையும் படி கலம் செலுத்தும் நுட்பம் இருந்தது. மீனவ பெண்களின் கடல் அறிவு அபரமானது.

கடல் ஆமைக்கூட்டம் பல ஆயிரம் கீ.மீ தூரம் வந்து இனப்பெருக்கம் செய்து திரும்பும் அழகான கரைகொண்ட பகுதி தமிழ் நெய்தல் நிலம் குறிப்பாக நாகைமாவட்ட கடற்கரை. கடல் ஆமைகள் கடலின் நீரோட்டத்திற்கு எற்ப நீந்துபவை. நாற்பது நிமிடத்திற்கு ஒரு முறை கடல் மேல் மாட்டம் வந்து நீருள் நீந்தும். ஆமைகளை தொடர்ந்து கலம் செலுத்தி புதிய கடற்கரைகளை கண்டுள்ளனர். அவர்கள் கண்டடைந்த கரைகளில் தமிழ் பெயர்கள் விளங்குவது பற்றிய ஆய்வுகள் தொடருகின்றன.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரை நல்ல களங்கரை கூட, ஆனால் இந்த கடற்கரை தொடர்ந்து அரிப்புக்குள்ளாகிவருகிற்து. முனநீர் பரப்பின்( FORE SHORE) கடல் கிடைமட்டதில் இருக்கும் பள்ளதாக்கில் ( submarine cannyon ) ஆழி நீரோட்டம் நிகழ்துத்தும் பௌதிக வினைகள் இந்த அரிப்புக்கு கரணமாக இருக்ககூடும். இது பற்றிய ஆய்வை அரசு துறைகள் மேற்கொள்ளவேண்டும். புகார் நகரம் அழிந்தது இதனால் தான். தற்பொழுது கூட பூம்புகரின் ஒரு பகுதியான வானகிரியில் ஐந்து ஆண்டுகளில் 70 மீட்டர் அளவிற்கு நிலத்தை கடல் கொண்டு விட்டது.

கரையில் இருந்த மாரியம்மன் ஆலயம் கடலால் விழுங்கப்பட்டுவிட்டது. இந்த புகைபடங்கள் சாட்சி. இந்த மாரியம்மன் கோவில் மகாமண்டபம் அதன் பின் மூன்று தனித்தனி விமானங்கள் கொண்ட மூன்று பெண் தெய்வங்களுக்கான கருவரைகள் கொண்ட கோவிலாக இருந்தது. 2004-ம் ஆண்டு சுனாமிக்கே தப்பிய கோவில் சுற்றுமதில்களை பெற்றிருந்தது.

இக்கோவிலுக்கு வடபுரத்தில் 700 மீட்டர் தொலைவில் காவேரியாற்றின் கழிமுகத்துவாரம் உள்ளது, இக் கடற்கரையில் கடல் நீரோட்டம் ( ocean current ) பெரும்பாலும் வடக்கு நோக்கியே இருக்கிறது, இதனால் மணல் ஓட்டமும் (littoral drift ) வடக்கு நோக்கி நகர்கிறது.

கடற்கிடைமட்ட பள்ளதக்கால் இவை இங்கு அதிகமாக உள்ளது. இதனால் காவேரியாற்றின் கழிமுகம் முடப்பட்டே இருக்கிறது. வாடைகாலத்தில் தெற்கு நோக்கி கடல் ஓட்டம் இருப்பதால் மணல் சேருவது குறைவதால் முகத்துவாரம் திறந்திருக்கும்.

ஆனால் தற்பொழுது நிழந்திருப்பது இந்த கோவில் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. கோவில் இருந்த இடத்தில் அதன் விமானத்தின் கூடு மட்டும் இடிந்த நிலையில் கடலால் இழுத்து செல்லப்படவில்லை கட்டுமானதின் தொழினுட்பதிரணை நாம் வியக்ககூடும் எதிர்வரும் பேராபத்தை உணரானமல், கூடவே அனல் மின்நிலையங்கள் அமையபோவதாக தகவல் உண்டு. கடற்கரை அருகில் கப்பலை நிறுத்தி அங்கிருந்து குழாய் முலம் நிலக்கரியை இறக்குமதி செய்யும் இயற்கையான வனப்பை இக்கடற்கரை பெற்றிருப்பதே அனல் மின் நிலையநிறுவனக் கவர்ச்சிக்கு காரணம்.

கோவில் இருந்த இடம் தாண்டி கடல் எல்லை 15 மீட்டருக்கு வந்துவிட்டது. அனல் மின்நிலையம் வரக்கூடாது என்ற மக்கள் போராட்டத்தில் பிளவுண்ட குழுக்கிடையான மோதல் துப்பாக்கி சூடு வரை சென்றது அதிகார சதுராட்டத்தின் கதை. இழக்கப்போவது நெய்தல் நிலம் மட்டுமல்ல வாழ்வும் தான்.
நகராத்தார்கள் ( செட்டிமார்) எல்லா சூழல்கள் பாற்றி நல்ல விழிப்புணர்வு பெற்றவர்களவே இருக்கின்றனர்.புறதின் அனுபவதொகுப்பாக இருந்ததினால் ஆழிநிர் கொள்ளா இடம் தேடி புலம் பெயர்ந்துள்ளனர். இங்கு வாழும் மீனவர் தங்களை மீன்செட்டி என்று அழைத்துகொள்கின்றனர். இந்த சமூகத்துக்குள்ளே தான் இவர்களின் கொள்வினை கொடுப்பினை நிகழ்கிற்து. இவர்கள் புலம் பெயராமல் இருந்தவர்களும் தன் குழுவுடன் இணையமுடியாத மலெஷிய செட்டிமார் வகையறவும் என கவிஞ்ர் அறிவுமதி கூறுவார். நெய்தல் சுழலால் மீன் பிடிக்க தள்ளப்பட்டிருக்கலாம்.

தமிழர்களுக்கிடையில் பிரிவினையை தூண்ட............

                               

தமிழர்களுக்கிடையில் பிரிவினையை தூண்ட ஒட்டுக்குழு டக்ளஸ் நேரடியாக களமிறக்கம்- பூங்குழலி

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து எச்சரிக்கும் வகையில் மே மாத‌ம் 5 ஆயிரம் மீனவர்களுடன் இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கடலில் வைத்து ஒரு எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் பிரிவினையை தூண்டிவிட சிறீலங்காவினால் தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முதற்கட்ட நடவடிக்கையினை நேற்று யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்புடன் ஆரம்பித்துள்ளார்.

சிறீதர் திரையரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் மேற்குறித்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

அதாவது, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்தியத் தமிழர்களுக்கு எச்சரிக்கும் வகையில் அடுத்த மாதமளவில் சுமார் 5 ஆயிரம் மீனவர்களுடன் இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கடலில் வைத்து ஒரு எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1000 படகுகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் இதற்கு நானே தலைமை தாங்குவேன் எனவும் டக்ளஸ் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய அரசாங்கத்திற்குப் பல தடவைகள் மீனவர் பிரச்சனை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் யாழ்.வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடமும், மகஜர் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்திய அரசாங்கத்திற்கு தந்தியொன்று நான் அனுப்பவுள்ளேன். அதனையும் அரசாங்கம் நிராகரித்தால் இராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பேன் என ஒட்டுக்குழு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராமேஸ்வரத்தில் தைரியம் இருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்தி பார்க்கட்டும் என்று தமிழக மீனவர்கள் எச்சரிக்கை ‌விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழர்களை தமிழர்களுடன் மோதவிடும் சூழ்ச்சியை தற்போது சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ஆயுதமாக கையில் எடுத்திருப்பது வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த நகர்வுகளை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.