Like me

Friday, July 20, 2012

எம்.ஆர்.ராதா


                                          


விகடனில் இடம்பெற்ற எம்.ஆர்.ராதா 25!

சினிமாவில், சீர்திருத்தக்காரர். நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்ப தன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க் கப்பலான 'எம்டன்' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால், அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய!

அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப் போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப் பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!

சின்ன வயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம். 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக்கொடுத்தவர் ஜெகநாதய்யர்தான்' என்பார்!

ராதா நடித்த முதல் படம் 'ராஜசேகரன்' (1937). கடைசிப் படம் 'பஞ்சாமிர்தம்' (1979). சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

'உலகப் பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்' என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டு வதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட் களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன!

ப்ளைமௌத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப்பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒருநாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன்படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போகமுடியும்?" என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது, செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை. அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். 'நேற்று பேடி கள் விட்டுச்சென்ற சாமான்கள்' என்று அதில் எழுதி வைப்பார்!

எம்.ஜி.ஆரை 'ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா' என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச்

சட்டம் கொண்டுவந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பனியனோடு சபை வளாகத்துக்குப் போய்விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!

என்.எஸ்.கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்ப்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, 'நண்பன் கையால் சாகக்கொடுத்து வைத்திருக்கணும்' என்று என்.எஸ்.கே. சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. "நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியைவெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?" என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!

நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார். அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒருநாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னர் தெரிய வந்தது!

'அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில கப்பல் விடுறான்... நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', 'ஊருக்கு ஒரு லீடர்... அவனவனுக்கு ஒரு கொள்கை.. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்... நான்சென்ஸ்'-இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!

ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். 'கீமாயணம்' என்று நாடகம் போட்டார். ராமன் வேடத் தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். 'மனம் புண்படுபவர்கள் யாரும் வர வேண்டாம்' என்று விளம்பரம் கொடுத்தார்!

'நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?' என்று கேட்டபோது, 'எதிர்ப்பில்தான். மக்கள் எதை விரும்புகிறார்களோ...அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம்' என்றார்!

ராதாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எவ் வளவு நீளமான வசனங் களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறுசிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில் வெளிவந்தன. 'அண்ணாவின் அவசரம்', 'ராமாயணமா? கீமாயணமா?' என்ற இரண்டும் அதிக சர்ச்சையைக் கிளப்பியவை!

ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள். 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!

மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை 'கலைஞர் கருணாநிதி' என்று அழைத்துப் பட்டம் கொடுத்தவர். 'நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்' என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!

"திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்" என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா. 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங் காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!

தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். "போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா' என்பார். மாண வர்கள் சினிமா பார்க்கக் கூடாது என்பது அவரது அழுத்தமான கருத்து!

விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும்தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். 'ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால ஏத்துக்கிறேன்' என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!

'மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை' என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!

'சுட்டாள்... சுட்டான்... சுட்டேன்' என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என்.ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர். சுட்டான், நான் சுட்டேன்... என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது!

"தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம். 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்" என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்
 

காமராசர் பற்றி தந்தை பெரியார்

                                


முகமூடி

                     


நமக்கான முகமூடியை நாமே தேர்ந்தெடுக்கிறோம். 
அதை விலக்க நினைக்கும் போது அதுவே முகமாக மாறிவிடுகிறது. 

முகத்தைப் பிய்க்கும் தைரியம் எவருக்கும் வருவதில்லை. 
முடிவில், உண்மை முகம் என்ற ஒன்றே இல்லை!!

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லி

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.


                                   
புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
Thank you : Udhai Kumar

"உன் வேலைய பாரு

Karthik Balajee Laksham


"உன் வேலைய பாரு.உன் வேலைய மட்டும் பாரு.எதுக்கு அடுத்தவங்களுக்காக உன் நேரத்த வீணாக்குற".
-தினமும் ஒரு தடவையாவது எனக்கு என் நண்பர்கள் சொல்லும் அறிவுரை .
.கண்ணுக்கு முன் ஒருவர் நோயாளியிடம் லஞ்சம் வாங்குறார்.சும்மா வர முடியுமா ? சண்டை போடுவேன்.இல்லேன்னா புகார் கொடுப்பேன்…நானா தேடித் போய் எந்த பிரச்சனையிலயும் நுழைய மாட்டேன்.என் முன்னாடி அதுவா அடக்கும். தினம் ஒரு பிரச்சனை .பல முறை புகார் கொடுத்ததினால் எனது மேல் அதிகாரிகள் என்னை Trouble makerனு சொல்வார்களாம்

1) எங்க ஊரு நெய்வேலி டவுன்ஷிப் : வீடுகள் அனைத்தும் அரசாங்கத்துடையது. NLC பணியாளர் ஒரு வீட்டில் சில மாதம்,அல்லது சில வருடம் மட்டுமே தற்காலிகமா வசிக்கும் சூழ்நிலை. மா,பலா,தென்னை என எங்கள் வீட்டில் நிறைய மரங்கள்.எல்லாமே எங்களுக்கு முன் வசித்தவர் பயிர் செய்தது.இப்பொழுது அவர் கேரளாவில் வசிக்கிறார்.நானும் ஆசை ஆசையா ரெண்டு தென்னம் பிள்ளை நட்டு வெச்சிருக்கேன்.பாத்து பாத்து தண்ணி விட்டு,உரம் போட்டு ,அது வளரத பார்க்கவே சந்தோஷமா இருக்கும்.அடுத்த வருடம் தான் தென்னை காய்க்கும்.ஆனா அதற்க்குள் நாங்க வீட்டை காலி செய்தாக வேண்டும்.அப்பா பணி ஓய்வு பெறுகிறார்.நான் வளர்த்த தென்னை கொடுக்கும் தேங்காய்களை,வேற யாரோ ஒருவர் பறித்துக் கொள்வார்.ஒருவர் பயிர் செய்ததை அடுத்தவர் அனுபவிப்பார். ஆனாலும் எல்லாரும் அவரவர் வீட்டில் மாங்கன்று,தென்னம் பிள்ளை நட்டுக் கொண்டே இருப்பர்.மரம், காடு பராமரிப்பதில் (Afforestation) எங்க ஊர் ஆசிய அளவில் பல விருதுகள் வாங்கி உள்ளது .பழம் காய்கிறதோ இல்லையோ ,நாம அதை அனுபவிக்க முடியுதோ இல்லையோ - நாம செய்ய வேண்டியத அனுபவிச்சு செஞ்சிடனும். எங்க ஊர் சொல்லிக் கொடுத்த பாடம்.

2) நேற்று(18/7/12) நடந்த சம்பவம் :"எனக்கு மந்திரிய தெரியும். எனக்கு தான் முதல்ல சிகிச்சை செய்யனும்" னு ஒருவர் இருதய சிகிச்சை மருத்துவரிடம் சண்டை போட்டுள்ளார். "வரிசையில் வாங்க"னு சொன்னதுக்கு, அந்த நோயாளியும்,கூட வந்தவங்களும் மருத்துவரை ரத்தக்காயம் ஏற்ப்படும் அளவிற்கு பலமா அடித்து விட்டு, "பையில துப்பாக்கி.இருக்கு சுட்டுடுவேன்"னு மிரட்டியுள்ளார்..காவலாளிகள் யாரும் உதவிக்கு வரவில்லை.இது முதல் முறை இல்லை.பெண் மருத்துவர்களிடம் வம்பு செய்வது,குடித்து விட்டு மற்றவர்களை அடிப்பதுனு நிறைய சம்பவங்கள். பல வருடங்களா நோயாளிகளுக்கும் பல சிரமங்கள்.பல முறை புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை .இதுக்கு முடிவு கட்டணும்.நாளை OPD பணிக்கு செல்வதில்லை.அவசர சிகிச்சை,அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெரும் னு இரவு 12 மணி அளவில் முடிவெடுக்கப்பட்டது..
( நான் AIIMS மருத்துவர் சங்க (RDA ) தேர்தலில் போட்டியிட்டு , மருத்துவர்களுக்கு பிரதிநிதியாக உள்ளேன்.)

3) நாளை (19/7/12) எனக்கு ஒரு முக்கியமான Presentation (Power point மூலம் வகுப்பு எடுக்க வேண்டும் ). தலைப்பு ? இந்தியா தென் ஆப்பிரிக்கா உகாண்டா - மூன்று நாடுகளில் செய்யப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சி-Cost Effectiveness analysis. நாட்டில் ஒரு சுகாதார திட்டம் ஆரம்பிக்கும் முன், 'திட்டம் உபயோகமா இருக்குமா ?செலவு செய்யுற காசுக்கு பலன் கொடுக்குமா?' என்பதை ஆராயும் கட்டுரை .மருத்துவர்களுக்கு இந்த தலைப்பு (health Economics) புதியது..தலை சுற்றும்.ஒன்றுமே புரியாது.'"மக்களுக்கு உண்மை தெரிவிக்கணும்னா இதை படிச்சே ஆகணும்.எனக்கு இந்த தலைப்பு தான் வேணும்' னு வீரவசனம் பேசி ,பிடிவாதமா நானே தேர்ந்தெடுத்த தலைப்பு.படிக்க ஆரம்பித்தேன் .ஒண்ணுமே புரியல. ராட்டினத்துல பத்து சுத்து சுத்தி கீழ இறங்கினதும் நம்ம தலையும் சுத்தும் பாருங்க,அது மாதிரி சுத்துச்சு என் தலை.இத அடுத்தவங்களுக்கு வேற சொல்லிக் கொடுக்கணும்…எனக்கு சங்கு நிச்சயம் னு முடிவு பண்ணிட்டேன்..15 நாட்கள் தயார் பண்ணினேன்.நாளை தான் அந்த நாள் .Judgement Day.

நாளைக்கு வேலை நிறுத்தம்.
வேலை நிறுத்தம் இல்லை என்றால் முக்கியமான Presentation.
எது முக்கியம் ? என்ன செய்ய ?
நண்பர்கள் எப்பொழுதும் போல சொன்னது : "உன் வேலைய மட்டும் பாரு.உனக்கு முக்கியமான வகுப்பு.பெரிய தலை எல்லாரும் வருவாங்க..சொதப்பிடாத..பிரச்சனை ஆகிடும். வெளிய எங்கயும் போகாம,ஒழுங்கா படிக்குற வேலைய மட்டும் பாரு".மனசு கேக்கல
இரவு ,வேலை நிறுத்தத்தை தெரியபடுத்த விடுதியை சுற்றினோம். சாப்பிட கூட மறந்துவிட்டிருந்தேன்.தூங்காமல் presentation வேலையை செய்து முடித்தேன் .

இன்று(19/7/12) காலை பேராசிரியருக்கு தொலைபேசி மூலம் " வேலை நிறுத்தம்.Presentation செய்ய முடியாது சார் "னு தெரியப்படுத்தினேன்.IAS ஆபீசருடன் பேச்சுவார்த்தைக்கு சென்று விட்டேன்.பெரும்பாலான கோரிக்கைகள் நோயாளிகளின் நன்மைக்காகவே தான்.நோயாளிகளுக்காக நானும் சில கருத்துகளை தெரிவிச்சேன் .
யாரும் எதிர்பாராத வகையில் மதியம் 2 மணி அளவில் பேச்சுவார்த்தை வெற்றி .அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (போட்டோவில் உள்ளது ).

"உடனடியா பணிக்கு திரும்புவோம்"னு வாக்குறுதி கொடுத்து இருந்தோம்.
அடுத்த பிரச்சனை? Presentation செய்ய வேண்டுமே . அய்யோ .
பசி மயக்கத்தோட மூச்சுவாங்க department ஓடினேன் .
நான் போட்டிருந்தது அழுக்கு சட்டை பான்ட் ( துணிகளை எங்களது கிராமத்து மருத்துவமனை விடுதியிலேயே வைத்து விட்டு வந்துவிட்டேன் ). Shave செய்யாத முகம், மூன்று வேளை சாப்பிடாததால் பசி மயக்கம்.
பேராசிரியரிடம் "சார் Strike cancel" னு சொன்னதும்,
"எல்லாரும் தயாரா இருக்காங்க .உனக்கு 10 நிமிடம் தருகிறேன்.Presentationஐ ஆரம்பித்து விடு"னு பேராசிரியர் உத்தர விட்டார்.
ரொம்ப கடினமான தலைப்பு.3வேளை சாப்பிடவில்லை தூங்கவில்லை .ஆனால் வேற வழியே இல்லை.
30 பட்டமேற்படிப்பு மருத்துவர்கள்,10 ஆசிரியர்கள் வகுப்பில் இருந்தனர் . யாராவது ஒருத்தர் வாரி விட்டாலும் முடிந்தது என் கதை.
'balajee இன்னைக்கு நீ செத்த டா'னு முடிவு செஞ்சு,வகுப்பை ஆரம்பித்தேன்.

அது என்னமோ தெரியல நான் எப்போ வகுப்பு தொடங்கினாலும் ,என்னை தவிர எல்லாரும் சிரிப்பாங்க.கலகலப்பா இருக்குமாம்.எனக்கு மட்டும் டர் டர்ரா இருக்கும். நிறைய கேள்வி கேட்டாங்க.
ஒரே ஒரு ஆச்சர்யம். எனக்கு விடை தெரிஞ்ச கேள்விய மட்டும் தான் கேட்டாங்க.விளக்கமா புரிய வெச்சேன்.
4.30 மணிக்கு வகுப்பு முடிந்தது..
எங்க HOD,"Heroic Presentation'னு சொன்னார்.
வெளிய வந்ததும் ,மேடம் கூப்பிட்டு "Very good Balajee"னு 2 முறை சொன்னார் .
பேராசிரியர் தனியா கூப்பிட்டு, "ரொம்ப கஷ்டமான தலைப்பு. Well Done "னு பாராட்டி,
"நீ தூங்கி இருக்க மாட்டியே .உன் கண்ணுலையே தெரியுது.போய் தூங்கு"னு அனுப்பி வெச்சார்.
போன உயிர் திரும்ப வந்தது..

இன்று வகுப்பில் என்னை வறுத்தெடுக்க ஆயிரம் காரணம் இருந்தது.ஆனால் பிரச்சனை எதுவுமே நடக்காமல் ,அத்தனையும் எனக்கு சாதகமா அமைந்தது .கனவில் கூட எதிர்பார்க்காத பாராட்டுக்கள்.
இது எப்படி சாத்தியம் ?
ஒன்று மட்டும் உறுதியா சொல்ல முடியும்.
ரொம்ப நாளாக மருத்துவர்களுக்கு நிறைய பிரச்சனைகள்..அதே போல் நோயாளிகளுக்கும் நிறைய சிரமங்கள் .
நோயாளிகளின் நன்மைக்காக குரல் எழுப்பி ,அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததால், யாரோ ஒருவர் இன்று எங்களுக்கு (எனக்கும் சேர்த்து ) ஆசி வழங்கி இருக்கிறார்.
இன்று எதோ ஒரு சக்தி எனக்கு உதவி இருக்கிறது. அது கடவுளோ, இல்லை இயற்கையோ தெரியாது.

"உன் வேலைய பாரு.உன் வேலைய மட்டும் பாரு.எதுக்கு அடுத்தவங்களுக்காக நேரத்த வீணாக்குற.உனக்கு என்ன பயன் ?"-மீண்டும் எனக்கு இந்த அறிவுரை வழங்கப்படலாம்..

எனது பதில் : மரத்த நடுறது என் வேலை...அதை சந்தோஷமா செய்வேன்...
பலன் ? அது தன்னால கிடைக்கும்...



                                

டெசோ - நாடக மேடையில் மு க


 





                                     

யாரடா வீரபாண்டிய கட்டபொம்மன் . . ?





                                       





யாரடா வீரபாண்டிய கட்டபொம்மன் . . ?


கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுத்துவதே
ஒரு வரலாற்று பிழையாகும் .

மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை .

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளத் தளைப்பட்ட பொது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன . இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும் .

தமிழர்களே..! "இந்த வடுக வந்தேறியா சுதந்திர போர் வீரன் .தமிழர்களே நமது வரலாற்றை நாம் ஆய்ந்து தெளியாமல் அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாது".

மாமன்னர் பூலித்தேவன் ஒரு மறவன் என்பதாலேயே திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறார்கள்.
 

"பெருந்தலைவர்"


                                        



                                                   "பெருந்தலைவர்"

என, அன்பாக அழைக்கப் படும் காமராஜரை பற்றி நினைக்கும் போது, நான் புகைப்படக் கலைஞர் என்ற ரீதியில், அவருடன் பழகியிருந்தாலும், ஏதோ அவர், எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற பாச உணர்வு தான் மேலோங்கி நின்றது. எங்கள் பகுதியில், பெட்டிக்கடை வைத்திருக் கும் நண்பர் ஒருவர், எந்த அரசியல் கட்சியிலும் இல்லாதவர்; ஆனால், காமராஜரின் அபிமானி. என்னிடம், "தலைவரோடு சேர்ந்து, ஒரு போட்டோ எடுக்க வேண்டும்...' என்று தன் ஆசையை அடிக்கடி சொல்வார்.
காமராஜர் மதுரை வந்திருந்த நேரம், நான் அந்த நண்பரை அழைத்து, தலைவர் வழக்கமாக தங்கும் ரயில் நிலைய மாடிக்கு சென்றேன். அறைக்குள் நான் நுழைந்ததும், தோளில் தொங்கும் கேமரா பேக்குடன் என்னை பார்த்த காமராஜர், "வா... வா... என்ன பொட்டியை (@கமராவை) தூக்கிட்டு வந்திருக்கே... இன்னிக்கு ஒண்ணும் நிகழ்ச்சி இல்லியே...' என்றார்.
"இல்லீங்க... உங்கள் அபிமானி ஒருவர், உங்களோடு போட்டோ எடுக்கணும்ன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காரு. அவரை அழைத்து வந்துள்ளேன். கூப் பிடட்டுமா?' என்று கேட்டேன்.
"உனக்கு வேற வேலை இல்லே... அதெல்லாம், அந்த சினிமாக்காரங்க கிட்டே தான் வச்சுக்கணும். என்னை ஏன் தொந்தரவு பண்றே...' என்று கேட்டார். எனக்கு சங்கடமாக போய் விட்டது. சிறிது நேர அமைதிக்குப் பின், அவரே மீண்டும், "சரி சரி... நீ கூட்டிட்டு வந்த ஆள் எங்கே?' என்றார். நான் உடனே கதவை திறந்து, வெளியே நின்றிருந்த அந்த நண்பரை உள்ளே அழைத்தேன். அவரும் வந்தவுடன், காமராஜருக்கு வணக்கம் சொல்லியவாறு, ஒரு ஓரத்தில் நின்று கொண்டார்.
காமராஜர் குழந்தைத்தனமாக, "அது சரி... நான் எங்கே நிக்கணும்ன்னு சொல்லு...' என்றார். நான் சொன்ன இடத்தில் நின்று, போட்டோவுக்கு ஒத்துழைத்தார். துவக்கத்தில் மறுத்தாலும், கடைசியில் வந்தவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைப்பது, காமராஜரின் தனி பண்பு. சிறிது நேரத்தில் வெளியே சலசலப்பு. என்னவென்று விசாரித்ததில், நரிக்குறவர்கள் சிலர், காமராஜரை சந்திக்க வேண்டும் என வெளியே இருந்த கட்சிக்காரர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட காமராஜர், அறைக்கு வெளியே வந்து அவர்களிடம் என்னவென்று விசாரித்தார்.
காமராஜரை பார்த்ததும் குஷியான குறவர்கள், "சாமியோவ்... நீங்க நல்லா இருக்கணும், உங்க கையை காமிங்க. எதிர்காலம் பற்றிய குறி சொல்றோம்...' என, "காச்மூச்' என்று, அவர்கள் பாணியில் பேசினர். காமராஜரும் சிரித்தவாறு. "குறியெல்லாம் ஒண்ணும் வேணாம். அதை தெரிஞ்சு என்ன ஆகப் போகுது...' என்று மறுத்து விட்டார். பிறகு அருகிலிருந்த என்னை பார்த்த குறவர்கள், "சாமி... எங்களை தலைவரோடு சேர்த்து போட்டோ எடுங்க...' என்றனர். நான் தயங்கியபடி சும்மா நிற்பதை பார்த்த காமராஜர், "ஏம்பா... இவங்களையும், ஒரு போட்டோ எடு. அவங்களுக்கும் ஆசை இருக்காதா?' என்றவாறு, அவர்களுக்கு நடுவில் நின்று போட்டோ எடுத்து, அவர்களை வழி அனுப்பினார். இப்படி ஒவ்வொரு நேரத்திலும், அனைவரிடமும் பாசத்துடன் பழகுவதை காண முடிந்தது.
இப்படி அனைவரையும் மகிழ்ச்சியுடன் அனுப்பிய காமராஜர், அரசியலில் கடைசி காலத்தில் மனம் வருந்தும் அளவுக்கு, டில்லி அரசியல் மூலம் பல சம்பவங்கள் அரங்கேறின. அரசியலில் இந்திராவும், காமராஜரும் கிட்டத்தட்ட எதிரிகள் போல் ஆகி விட்டனர். கன்னியாகுமரி ரயில் நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு, பிரதமர் இந்திரா வந்திருந்தார். தொகுதி எம்.பி., என்ற முறையில், காமராஜரும் கலந்து கொண்டார். இந்திராவும், காமராஜரும் நீண்ட இடைவெளிக்குப் பின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், அனைவரும் ஆவலுடன் காணப்பட்டனர். பத்திரிகைக்காக படம் எடுக்க, நானும் கன்னியாகுமரி சென்றிருந்தேன்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த, அத்தனை போட்டோகிராபர்களும் காமராஜர், இந்திராவை சேர்த்து படம் எடுக்க ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், மேடையில் இடது ஓரம் கடைசி நாற்காலி, காமராஜருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகையால், நடுவில் அமர்ந்திருந்த இந்திராவுடன் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
விழா இறுதியில், நாட்டுப்பண் முடிந்தவுடன், பிரதமர் இந்திரா மேடையிலிருந்து கூட்டத்தை நோக்கி கை அசைத்தவாறு, இடது பக்க ஓரம் வந்தார். ஒரே பரபரப்பு... ஏனெனில், எப்படியும் இடது பக்க ஓரம் வரும் போது, காமராஜரை சந்தித்தே ஆக வேண்டும். அப்போது, இருவரையும் சேர்த்து படம் எடுக்க தயார் நிலையில் நாங்கள் இருந்தோம். அப்போது தான் எதிர்பாராத திருப்பம் நடந்தது.
காமராஜர் இருக்கும் பக்கம் போய்க் கொண்டிருந்த பிரதமர் இந்திராவிடம், விரைந்து சென்ற கருணாநிதி, தன் அருகில் உள்ள மதுரை முத்துவை காண்பித்து, "மேடம் இவர் தான் மதுரை முத்து. சேர்மன்மதுரை...' என்று ஆங்கிலத்தில் கூறி, சம்பந்தமில்லாமல் அறிமுகப்படுத்தினார். அவரும் வணக்கம் செலுத்தினார். அவ்வளவு தான்! உடனே கருணாநிதி கையை வலது பக்கம் நீட்டி, கீழே இறங்கும் வழியை காண்பித்தார். இந்திராவும், வலதுபக்க படி வழியே கீழே இறங்கி புறப்பட்டார். காமராஜர் மேடையில் இருந்து அசையாமல் பார்த்துக் கொண்டிருக்க, அனைத்து புகைப்படக் கலைஞர்களும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று!
"தந்திரமாக செயல்பட்டு, இந்திரா, காமராஜர் சந்திப்பை கருணாநிதி தடுத்து விட்டாரே...' என, அங்கே இருந்த மூத்த பத்திரிகையாளர்கள் பேசியதை கேட்க முடிந்தது.
***



- மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்

நீதான் தலைவன் !

                             


                                            வாழ்வை உனதாக்கு
                                            நெஞ்சை நிமிர்த்து
                                            உலகை மாற்று
                                            நீதான் தலைவன் !
 

திமுக ஆட்சியின் உண்மை முகம்

 கடலூர் இனியவன்'s status.





திமுக தமிழீழ படுகொலை நடந்தபோது செய்த அடக்குமுறைகளில் இருந்து சிறு புள்ளியை உங்களுக்கு அளிக்கிறேன்...

1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று

சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கியதன் காரணம் என்ன?....

2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியதன் அவசியம்

என்ன?... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டதேன்?...

3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்த காரணங்கள் ஏன

4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக எங்களது தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக

புதுக்கோட்டை சிறையில் அடைத்த காரணம் என்ன...

5. உங்கள் ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’

என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க

தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை

சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது.

வேண்டுமானால் அச்சக தோழர்களை சந்தித்து உண்மை அறிந்து கொள்ள திமுக நண்பர்கள்

முயற்சி எடுக்கலாம். இதை பல இடங்களில் சொல்லியும் திமுக நண்பர்கள் பதில் சொல்லாமல்

சென்றதை கவனித்து இருக்கிறேன்..

6. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து

வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது..

மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணா நிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய்

வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்

8. தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல்

எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர்

திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை

உடைத்தது திமுக அரசு.

10. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் .

அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

11. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு

தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய்

வழக்கில் அடைக்கப்பட்டார்

12. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச்

செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல்

நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு.

பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணா

நிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது ந்டந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம்

கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட படம் என்னிடம் இருக்கிறது. தேவையெனில் பதிவேற்றம் செய்கிறேன்.

15. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால்

கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு

முடிக்கப்பட்டது.

17. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம்

கொண்டுவந்து தடுத்தார்.

18. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு

வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த

தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே

நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை.

மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20 சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும்,

தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த

அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று

ந்டத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர்

பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை.. கீற்று ரமேஸ் பலமுறை சென்னை காவல்துறை

தலைமை அலுவலகத்தில் 8 மணி நேரம் அலைந்ததை நான் நேரில் கண்டு இருக்கிறேன். ( நாங்கள்

எங்களது போராட்ட அனுமதிக்காக அலைந்து கொண்டிருக்கும் சுழல் இருக்கும். நிகழ்வின் முதல் நாள்

வரை அனுமதி பற்றிய விவரங்கள் கிடைக்காது)

22. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி,

மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர்

தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும்,

அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

24. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25 சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்ப்ட்டதால்

‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து

பொய் வழக்கில் சிறையில் அடைத்தது

27. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று

முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும்

மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது

30. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

31. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

32. இது தவிர இது தவிர இவை அனைத்தும் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிர ஊரிலும் பொய் பேசியதை திமுக கண்டிக்கவே இல்லை...

33. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை. --க. அருணபாரதி, த.தே.பொ.க.34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.--க. அருணபாரதி,த.தே.பொ.க. இன்றைக்கு, முன்னெச்சரிக்கை கைது செய்யக் கூடாது என மனு போடுகின்ற தி.மு.க. நிர்வாகிகள், தாம் ஆட்சியிலிருந்த போது, அவர்களது தில்லி கூட்டாளிகள் தமிழகம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு சொறிந்து விடுவதற்காக ஈழஅகதிகளை முகாமிற்கு சென்று எத்தனை முறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என்பதை நாமறிவோம்..!--க. அருணபாரதி , த.தே.பொ.க.

மிக குறைந்த அளவிலேயே நடந்த அடக்குமுறைகளை இங்கு பதிந்து இருக்கிறேன். தமிழகத்தின் பிற பகுதிகளில் வேறென்ன நிகழ்ந்தது என்பது முழுமையாக பதிவு செய்யப்படவில்லை... அதையும் செய்தால் திமுக ஆட்சியின் உண்மை முகம் அனைவருக்கும் தெரியும்