Like me

Saturday, August 3, 2013

டைனோசர் முட்டைகள்

          அரியலூர் மாவட்டம் அருகே செந்துறை என்ற கிராமத்தில் காவிரி நதியின் படுகையில் சுமார் 2 கிமீ., பரப்பளவு கொண்ட பகுதியில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கபட்டது.

இது தான் இந்தியாவிலே பெரிய அளவிலான டைனோசர் முட்டை கண்டுபிடிப்பாகும். கால்பந்து அளவுக்கு பெரிய முட்டைகளாக இருக்கும் இவை சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது.
                                             
இந்த முட்டைகள் மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள். இதில் சைவமான சௌரபோட்ஸ் நீண்ட கழுத்தை கொண்டு, அதிக உயரமாக வளர கூடியவை. 

இதே பகுதியில் 1843ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் 32 பெட்டிகள் நிறைய வித்தியாசமான கற்களை(முட்டைகள்) அகழ்ந்தெடுத்தார்.

சனி நீராடு


"சனி நீராடு" என்று ஔவையார் சொல்லியிருக்குறார் என்று நினைச்சு இன்று சனிக்கிழமை நீராடி விட்டு வந்தால்...."சனி நீராடு" என்பதன் அர்த்தம் சனிக்கிழமை தலைக்கு குளிப்பது என்பது இல்லையாம்...

                             

சரி அதன் பொருள் என்ன என்று சற்று விளக்கமாக பார்ப்போமா....?

" சனி நீராடு " என்னும் ஆத்திசூடிப் பாடலுக்கு இதுவரை " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என்பதும் , " குளிர்ந்த நீரில் குளி ' என்பதும் பொருள்களாகக் கூறப்பட்டு வந்தன.ஆனால்
பரிமேலழகர் " சனி " என்னும் சொல்லுக்குக் " காரி " என்று பொருள் கொள்கிறார். காரி என்றால் விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு " வைகறையில் நீராடு " என்று உரை எழுதியுள்ளார்.

ஆகவே இனிமேல் எல்லோரும் அதிகாலையில் நீராடுங்க..