Like me

Saturday, February 23, 2013

தமிழன் சாதித்த சிற்பக்கலை - திருக்குறுங்குடி, திருநெல்வேலி

 
 
 
யானையின் தும்பிக்கையும், கால்களும் கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கைகளின் இரண்டு கால்களும் ஆடைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் போது கிடைக்கும் கனத்தை கச்சிதமாக பொருத்தியாகிவிட்டது,

தும்பிக்கையை தந்த படி நின்றுகொண்டிருக்கும் அந்த பெண், அந்த நிலையில் நிற்க முடியாது என்பதற்காக இன்னொரு பெண்ணை தாங்கியபடி நிற்கிறாள்.

யானையின் கண்ணிற்கு பெண்ணின் மார்பு , காது வளைவிற்கு ஒருவரை ஒருவர் தாங்கி ந...ிற்கும் கைகள் !.

யானையின் கழுத்துப் பகுதி வளைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் கால் நீட்டி உட்கார்ந்த நிலையில் இருக்கிறார், கால் நீட்டி இருப்பதால், குறுக்கில் இருக்கும் பெண்ணின் மீது தடுத்து, ஆடை சற்று விலகி அது யானையின் தந்தமாகிவிடுகின்றது !

யானையின் வாய் திறந்த நிலையில் இருப்பதை போன்று காட்ட ஒரே ஒரு பாதம் அந்த இடத்தில் கொடுத்தாகிவிட்டது.

கால் மடக்கி தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் பெண்,யானை நடந்து முன்னேறி செல்கின்றது என்பதையும் அழகாக காட்டுகிறது.

அதன் வால் பகுதி ஒரு மங்கையின் கால் பகுதி .

அடடா என்ன ஒரு கற்பனை திறன் இருந்திருக்க வேண்டும்!!!

இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி

சிற்பியின் முழு அற்பணிப்பு - ஆயிரம் கால் மண்டபம் மதுரை

                    


      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.
 


      தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும்,திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்கவேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .

இப்படிக்கு என்றும் அன்புடன்
Ramesh Muthaiyan (ரமேஷ் மு)
                                       From Facebook..........


சங்க கால முருகன் கோவில்

               Photo: தமிழர்களின் தொன்று தொட்ட நாகரிக வளர்ச்சிக்கு மற்றுமொரு சான்று!

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், பழைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். 

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. திரிஷா யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு ஆழிப்பேரலையால்(சுனாமி) உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. 

இந்த சங்க கால கட்டிடம் ஆழிப்பேரலையால்(சுனாமி) அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு ஆழிப்பேரலையால்(சுனாமி) அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது. கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்:-) 

நன்றி : சசிதரன் & நேச மித்ரன்


எதை எதையோ SHARE பண்ணுறீங்க, இதையும் கொஞ்சம் SHARE பண்ணுங்களேன்!

தமிழர்களின் தொன்று தொட்ட நாகரிக வளர்ச்சிக்கு மற்றுமொரு சான்று!

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், பழைய பெயர் திருவிழிச்சில். இங்...கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

     எப்போதோ வந்த ஒரு ஆழிப்பேரலையால்(சுனாமி) உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் ஆழிப்பேரலையால்(சுனாமி) அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு ஆழிப்பேரலையால்(சுனாமி) அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது. கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்:-)


நன்றி : சசிதரன் & நேச மித்ரன்