ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னனின் நினைவு நிகழ்வு!
கண்டியை தனது இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்த ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னனான கண்ணுச்சாமியின் 181ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு தமிழகம் வேலூரில் இடம்பெற்றுள்ளது.
சிங்களவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு 10.02.1815 அன்று பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் மன்னன் கண்ணுச்சாமி 30.01.1832 அன்று தமிழகம் வேலூர் சிறையில் சுகவீனமுற்று சாவடைந்தார்.
இவ் ஈழத்தமிழ் மன்னனின் 181ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வேலூரில் அமைந்திருக்கும் அவரது நினைவாலயத்தில் கடந்த 30.01.2012 அன்று அவரது உறவினர்களால் நினைவுகூரப்பட்டது.
1739ஆம் ஆண்டிலிருந்து கண்டி இராசதானியை ஆட்சி செய்த நான்கு தமிழ் மன்னர்களில் கடைசி மன்னனாக விளங்கிய கண்ணுச்சாமி அவர்கள் மதுரை நாயக்க வம்சத்தின் தமிழ்வழித் தோன்றல்களில் ஒருவர் ஆவார்.
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய வன்னி மன்னன் பண்டாரவன்னியனுடனும், தமிழகத்தைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டப்பொம்மனுடனும் இவர் நல்லுறவைப் பேணி வந்தமைக்கான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.
சிறீவிக்கிரம ராஜசிங்கன் என்ற முடிப்பெயருடன் கண்டியை ஆட்சிசெய்த இத் தமிழ் மன்னனின் கொடியை 1945ஆம் ஆண்டு தமது தேசிய கொடியாக வரித்துக் கொண்ட சிங்கள அதிகார வர்க்கம், 1951ஆம் ஆண்டு அக்கொடியின் நான்கு முனைகளிலும் காணப்பட்ட கூர்முனைகளுக்குப் பதிலாக பௌத்த மேலாதிக்கத்தை நிலைப்படுத்தும் அரசமர இலைகளைப் பொறித்துக் கொண்டது.
இம்மன்னனினதும், இவரது மூதாதையர்களினதும் ஆட்சியில் கண்டி இராசதானியின் அதிகாரபூர்வ மொழியாகத் தமிழ் மொழி விளங்கியிருந்தது.
ஈழத்தீவிற்கு இன்று சிங்களம் ஏகபோக உரிமை கோருகின்ற பொழுதும், மேலைத்தேய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தேறும் வரை ஈழத்தீவை – சிங்களப் பிரதேசங்கள் உட்பட – ஆட்சி செய்தவர்களாக தமிழர்களே திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.