Like me

Friday, January 6, 2012

கோடீஸ்வரர் நிகழ்ச்சி

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி..... 


முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.

இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்

Facebook

பேஸ்புக்கின் புதிய Timeline தோற்றத்தில் Cover என்ற ஒரு புதிய வசதி உள்ளது. இந்த இடத்தில் நமக்கு தேவையான ஒளிப்படத்தை வைத்து கொள்ளலாம்.

இணையத்தில் ஏராளமான ஒளிப்படங்கள் இருந்தாலும் அனைத்தும் பேஸ்புக் timeline cover ஏற்ற அளவில்(size) இருக்காது. ஆதலால் பேஸ்புக் timeline ஒளிப்படங்கள் வைப்பதற்கென்றே சில பிரத்யோகமான தளங்கள் உள்ளது.

1. 99covers: இந்த தளத்தில் மிகச் சிறந்த bannerகள் உள்ளது.

http://99covers.com/

2. facebookprofilecovers: இந்த தளத்திலும் விதவிதமான அழகான பேஸ்புக் கவர் ஒளிப்படங்கள் உள்ளது.

http://facebookprofilecovers.com/

3. timelinecoverbanner: இங்கு விதவிதமான அழகான பேஸ்புக் பேனர்கள் உள்ளது. இதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மற்றும் இதில் உள்ள bannerகளை உங்கள் விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.

விமானப் படையில் ...................

பிரான்சிடம் ரூ.6,600 கோடியில் 490 அதிநவீன விமான ஏவுகணைகளை வாங்கும் இந்தியா!

Posted Imageஇந்திய விமானப் படையில் உள்ள மிராஜ்-2000 ரக போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 6,600 கோடி செலவில் 490 நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் (Dassault Aviation) நிறுவன தயாரிப்பு தான் மிராஜ்-2000 போர் விமானங்கள். பல ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் பயன்பாட்டில் உள்ள இந்த விமானங்கள் எதிரி நாட்டு விமானங்களை நடுவானில் வழி மறிப்பது, குறைந்த உயரத்தில் பறந்து எதிரிகளின் ரேடார்களில் கண்ணில் படாமல் இலக்கை தாக்குவது, எதிரி நாட்டின் ரேடார்களையே jam செய்து செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட திறன்களைக் கொண்டது.

இந்தியாவிடம் இந்த ரகத்தைச் சேர்ந்த 51 விமானங்கள் உள்ளன. இவை இப்போது ரூ. 10,947 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தோடு இந்த விமானங்களில் நவீன ஏவுகணைகளையும் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ரூ. 6,600 கோடி செலவில் 490 ஏவுகணைகள் பிரான்ஸ் நாட்டின் தேல்ஸ் (Thales) நிறுவனத்திடம் வாங்கப்படவுள்ளன.

இந்த ஏவுகணைகள் எதிரி நாட்டு விமானங்களை விரட்டிச் சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

இந்திய விமானப் படையில் உள்ள மிகச் சிறந்த விமானங்களில் ஒன்றான மிராஜ்-2000 விபத்துகளை அதிகம் சந்திக்காத விமானமாகும்.

இது தவிர சுவிஸ் நாட்டிடம் இருந்து ரூ. 3,000 கோடி செலவில் 75 பிலேடஸ் PC-7 ரக பயிற்சி விமானங்களையும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இப்போது இந்திய விமானப் படையில் உள்ள HPT-32 ரக பயிற்சி விமானங்கள் மிகவும் பழசாகிவிட்டன. இதில் அவ்வப்போது என்ஜின் கோளாறுகள் ஏற்பட்டு பயிற்சியும் பாதிக்கப்பட்டு வருவதால், பிலேடஸ் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு நேற்று அளித்தது.

இந்த விமானங்கள் தவிர ரேடார்களின் கண்ணில் படாமல் தப்பிக்கும் திறன் கொண்ட அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானங்கள் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்புப் பணிகள் 2020ம் ஆண்டில் முடிவடையும். அப்போது சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் 300 விமானங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.