Like me

Sunday, October 28, 2012

இவர்களை நம்பியா இருக்கிறோம்?


  


பனி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலை தெறிக்க ஓடினார்கள். ஓட ஓட விழுந்தார்கள். மூச்சடைத்து, கை - கால்கள் வெட்டி வெட்டி இழுக்க விழுந்து செத்தார்கள். காலையில் பார்த்தபோது கொத்துக் கொத்தாகப் பிணங்கள். பல நூற்றுக்கணக்கான பறவைகள், கால்நடைகள், மனிதர்கள்... அரசாங் கத்தின் துரோகத்தாலும் முதலாளிகளின் லாப வெறியாலும் ஒரு நகரம் உருக்குலையத் தொடங் கியது. போபால்... உலகின் மோசமான தொழில் வேட்டைக் கொலைக் களம்!

போபால் பேரழிவுக்குப் பிந்தைய இந்த 28 ஆண்டுகளில், போபால் துயரத்தைக் கடந்து நாம் எவ்வளவோ தூரம் வந்திருக்கலாம். ஆனால், 'யூனியன் கார்பைடு நிறுவனம்’ பறித்த உயிர்களின் ஆன்மாக்கள் இந்தியாவின் மனசாட்சியைத் தொடந்து உலுக்கிக்கொண்டே இருக்கின்றன. 5,925 மரணங்கள், 4,902 நிரந்தர ஊனமுற்றோர், 5,63,352 பேர் பாதிப்பு, பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தை ஆகிய கொடூரங்களை எல்லாம் தாண்டி, இன்னமும் விஷத் தைக் குடித்துக்கொண்டு இருக்கும் போபால் மக்களை இந்தியா எப்படி வேடிக்கை பார்க்கிறது என்று கேட் கின்றன அந்த ஆன்மாக்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மேற்கொண்ட ஆய்வு, போபாலில் 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்ட இடத்தைச் சுற்றி மூன்று கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகி இருப்பதை உறுதி செய்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் மேற் கொண்ட பரிசோதனையோ, 'ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் 2,400 மடங்கு வரை ரசாயனக் காரணிகள் அடங்கிய தண்ணீரைக் குடிக்கிறார்கள் போபால்வாசிகள்’ என்கிறது. ''இங்கு 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்டபோது, அது பூச்சிக்கொல்லியை உருவாக் கியது. அது மூடப்பட்ட பிறகு, புற்றுநோயாளி களையும் சிறுநீரக நோயாளிகளையும் உருவாக் கிக்கொண்டு இருக்கிறது'' என்கிறார்கள் போபால்வாசிகள். காரணம், ஆலையைச் சுற்றி பரவியிருக்கும் 350 டன் நச்சுக் கழிவுகள்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று இந்திய அரசுக்குத் தெரியவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த உச்ச நீதிமன்றம், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தக் கழிவுகளை அகற்ற இறுதிக் கெடு விதித்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கழிவுகளை அகற்றும் வழி தெரியாததால், 25 கோடி நிதி ஒதுக்கி, ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு

நிறுவனத்திடம் (ஜி.ஐ.எஸ்.) இந்தப் பணியை ஒப்படைத்தது இந்திய அரசு. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை ஆகிய காரணங்களைக் காட்டி கடந்த வாரம் இந்தப் பணியில் இருந்து பின்வாங்கிவிட்டது அந்த நிறுவனம். இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது இந்திய அரசு. நம்முடைய லட்சணம் இதுதான்.

போபால் பேரழிவுக்குக் காரணமாக இருந்தது ஆலையில் இருந்து வெளிப்பட்ட 'மெத்தில் ஐசோசயனேட்’. குளிர் நிலையில் பராமரிக்கப்பட வேண்டிய ரசாயனம் இது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், குளிர் சாதனங்களை இயக்குவதை ஆலை நிர்வாகம் நிறுத்தியதால் ஏற்பட்ட வெப்ப நிலை உயர்வாலேயே 'மெத்தில் ஐசோசயனேட்’ வெடித்து வெளியேறியது. 'மெத்தில் ஐசோசயனேட்’ ரசாயனத்தை எதிர்கொள்ள எளிய பாதுகாப்பு முறை ஒன்று உண்டு. மூக்கையும் வாயையும் ஈரத் துணியால் மூடிக்கொண்டு வாயு பரவும் திசைக்கு எதிர் திசையில் மெள்ள முன்னேறுவது. ஆனால், இந்த எளிய முன்னெச்சரிக்கைப் பயிற்சியைக்கூட ஆலையைச் சுற்றி உள்ள மக்களுக்கு ஆலை நிர்வாகமோ, அரசோ கொடுக்கவில்லை. இந்த அழிவுக்கு முன்பே ஆலையில் ஏராளமான விபத்துகள் நடந்தன; அவற்றை அரசு வழக்கம்போல் மூடி மறைத்தது. அழிவு நடந்த அடுத்த சில வாரங்களில் ஏராளமான மருத்துவக் குழுக் களைக் கண்துடைப்பாக அரசு அழைத்துச் சென்றபோது, அப்படி ஒரு சூழலை எதிர்கொண்ட பழக்கம் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் முன் செய்வதறியாமல் நின்றார்கள் மருத்துவர்கள். 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சூழல்கள் எல்லாம் இந்தியாவில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன?

வளர்ச்சியின் பெயரால் கொஞ்சமும் அறி முகம் இல்லாத எவ்வளவோ அபாயகரமான தொழில்நுட்பங்களுடன் இயங்கும் நிறுவனங் களை நாட்டில் அனுமதித்துக்கொண்டு இருக்கிறோம். ஆண்டுக்கு 2 லட்சம் டன் அபாயகரமான வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதி ஆகின்றன. தவிர, உள்நாட்டிலும் உற்பத்தியாகின்றன அணுக் கழிவுகள் உட்பட. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறே கடக்கிறோம்.

யாரை நம்பி?

இப்படி ஒரு படுகொலையின் பிரதான குற்றவாளியான வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்கவிட்டு, ஏனைய உள்ளூர் குற்றவாளிகளுக்கு 25 ஆண்டுகளுக்குப் பின் வெறும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வாங்கிக் கொடுத்த அரசை நம்பி. ஒரு தொழிற்சாலை விபத்து எவ்வளவு மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கான எல்லா அனுபவங்களையும் 'யூனியன் கார்பைடு’ நிறுவனத்திடம் இருந்து பெற்ற பின்னும் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமான வகையில், அணு சக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றிய அரசை நம்பி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் நியாயமான இழப்பீட்டுக்காகப் போராடும் மக்களுக்கு, குடிக்கக்கூட பாதுகாப்பான தண்ணீரை வழங்காத அரசை நம்பி!

மார்க்ஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது: ''வரலாறு திரும்பவும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது, முதல் முறை விபத்தாக, மறுமுறை கேலிக்கூத்தாக!''

சமஸ்

விகடன்

"கூடங்குளமோ…குருவிக் குளமோ" - தா.பாண்டியனின் பேச்சுக்கு கண்டனம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் 10.10.12 ஆனந்த விகடன் இதழுக்களித்த பேட்டியில் கூடங்குளம் போராட்டம் குறித்தும், போராட்ட தலைவர்கள் குறித்தும், ஏனைய மக்கள் போராட்டம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு மூத்த அரசியல்வாதி பொதுவுடைமைச் சிந்தனையுடைய ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு உதிர்த்திருக்கும் இப்பொறுப்பற்ற சொற்கள் மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. மக்கள் போராட்டம் குறித்தும், கூடங்குளம் அணு உலை குறித்த அவரது கருத்தும், போராட்டத்தலைவர் குறித்த அவரது ஏளனமான வார்த்தைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

                                


”கூடங்குளமோ…குருவிக் குளமோ…அணு மின் நிலையங்கள் வேண்டும். இப்போது போராடும் பாதிரியார்கள் ஜப்பானில் குண்டு போடும்போது என்ன செய்தார்கள்?” என்று கேட்கிறார். மற்றொரு பதிலில் ”……. பாதிரியார்களுக்கு மின்சாரத்தைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு மின்சாரம்தான் முக்கியம்!” என்கிறார். மக்களை குழி தோண்டி புதைத்து விட்டு யாருக்காக அந்த மின்சாரம் என்று தா.பாண்டியன் அவர்கள் விளக்க வேண்டும்.

ஏறத்தாழ 40 வருட கடும் உழைப்பைச் செலுத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, குழந்தைகளைக் கூட வறுமைக்கு இரையாக்கி, மக்களின் பொது எதிரி யார், அவர்கள் எவ்வகையில் மக்களைச் சுரண்டுவார்கள் என்பதை விஞ்ஞானபூர்வமாக விளக்கிய பேராசான் காரல் மார்க்சைப் படித்த ஒருவர் அணு சக்தியில் மின்சாரம் தயாரிப்பதை ஆதரித்து பேசுவதும், மக்களது போராட்டங்களைக் கொச்சை படுத்திப் பேசுவதும் வியப்பளிக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. அதை விடக் கொடுமை “போராடினால் எல்லாம் கிடைத்துவிடுமா” என்று கேட்டிருக்கிறார். “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்று காரல் மார்க்ஸ் எதற்கு சொன்னார், கூடிக் கும்மாளம் போடவா. ஒன்று கூடி உங்கள் உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்பதற்காகத் தானே. கூடங்குள இயக்கத்தை கும்பமேளாவோடு தொடர்பு படுத்தி அங்கும் மக்கள் கூடுகிறார்கள் என்ற பதிலின் மூலம் தனது கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு கும்பமேளாதான் என்கிற அவரது கருத்தை நமக்கு உணர்த்துகிறது.

மக்கள் போராட்டம் குறித்து, கூடங்குளம் போராட்டக்காரர்கள் குறித்து தா. பாண்டியன் பகிர்ந்துள்ள கருத்துக்களை, அதில் வெளிப்படும் மத வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு அவரது மக்கள் விரோதப் போக்கை கண்டிப்பதோடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசெஸ் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு
கொற்றவை
மாசெஸ் அமைப்பு.
சென்னை.

நகல் 1 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மாநிலத் தலைமை அலுவலகம்
நகல் 2 இந்தியக் கம்யூனிஸ் கட்சி – மாநில நிர்வாகக் குழு.
நகல் 3 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மைய்ய நிர்வாக் குழு.

மேற்சொன்ன அறிக்கையில் கையெழுத்திட விரும்புவோர் உங்களின் பெயர்களை இங்கு பதிவு செய்யவும். இவ்வறிக்கை நாளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். முகப்புத்தகத்தில் நிறைய தோழர்கள்,எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் தஙக்ள் ஆதரவுகளைத் தெரிவித்துள்ளனர்.

முதலாவது தமிழீழ காவிய நாயகின் 25ம் ஆண்டு நினைவு வணக்கம்



                                   


   10.10.1987 ‘அன்று யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்கட்கும், அதே சம்பவத்தில் வீரச்சாவடைந்த 2ம் லெப். கஸ்தூரி, வீர வேங்கை ரஞ்சனி, வீரவேங்கை தயா ஆகியோருக்கும் எமது வீரவணக்கங்களைச் செலுத்துகின்றோம்.
தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 25 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.

பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.

நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.

புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. தமிழ்த் தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது.

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.

மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.

எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள். அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.

மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.

எலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.

உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.

சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.

தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.

அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம். 
இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள். 
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

உலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.

எகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா! தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில். அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.

ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள். தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள். தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.

2ஆம் லெப். மாலதி 25 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

மானம் கெட்ட நாட்டை நம்பி மாணிக்கங்களை இழந்தோம்



                            


கண்ணுவ முனிவரின் கைப்பாவையாம்
சகுந்தலை காமம் மேலிட
கிழவன் துஷ்யந்தனைக்
திருமணம் செய்யமுன் புணர்ந்து
பெற்ற மகன் பரதன் ஆண்டபூமி
என்பதால் பாரததேசம் எனப்
பெயர் பெற்ற மானம் கெட்ட நாட்டின்
அமைதிப்படையை நம்பி
நெஞ்சும் மிக்க வீரன்
குமரப்பாவை இழந்தோம்

வந்த மருமகளை சபை நடுவில்
வைத்துத் துகிலுரிந்த
பாவியர் ஆண்ட
மானம் கெட்ட நாட்டின்
அமைதி உடன்படிக்கையை நம்பி
தீரத்திலகம் புலேந்திரனை இழந்தோம்

ஜீயாசுதீன் காஜி என்றொரு இசுலாமியன்
வெள்ளையர் ஆட்சிக்குப் பயந்து
தன் பெயரை கந்தககார் நேரு
என மாற்றிக் கொண்டான்
அந்த வழிவந்த அயோக்கியன்
ராஜீவ் என்பவனின் பேச்சை நம்பி
அருமைப் போராளி அபுதுல்லாவை
அநியாயமாய் பலிகொடுத்தோம்

மவுண்ட் பேட்டனின்
மனைவியின் கள்ளக்காதலனாய்
கருதப்படுக் காமுகன் நேரு
சரோஜினி நாயுடுவையும்
விட்டுவைத்தவனல்லன்
அவன் பேரனாம் ராஜீவிடம்
படைக்கலன்களை ஒப்படைத்து
வீரப் போராளி ரகுவை இழந்தோம்

தமிழ்க் காங்கிரசுத் தலைவன்
பொன்னம்பலத்தையும்
தோட்டத் தொழிலாளர் காங்கிரசுத்
தலைவன் தொண்டமானையும்
ஒன்றுபடாமல் தடுத்துப் பிரித்த
பேரினவாதப் பேய் நேருவின்
பேரனாம் ராஜீவின் பேச்சை நம்பி
நற்றமிழ் வீரன் நளனைப் பலி கொடுத்தோம்

சாந்திநிகேதன் பலகலைக் கழகத்தில்
ஜேர்மானிய விரிவுரையாளன் அறையில்
தனியய் இருக்கையில் பிடிபட்டு
ரவீந்திரநாத் பெருந்தகையால்
விரட்டியடிக்கப்பட்ட சிறுக்கி
இந்திரா காந்தியின் பொறுக்கி
மகனாம் ராஜீவின் உறுதி மொழியை நம்பி
பச்சைத் தமிழ் வீரன் பழனியை இழந்தோம்

மைமுனா பேகம் எனத் தன்பெயரை மாற்றி
சொந்தத் தாயின் நெருங்கிய நண்பனான
பெரோஸ் கான என்னும் இஸ்லாமியனை
இலண்டனில் நிக்காஹ் செய்த இந்திரா
இந்திரா கான் என்றால்
இந்திய அரசியலில் பிழைக்க
முடியாதென்பதால்
காந்தியின் புகழைத் திருட
காந்தியின் பெயரைக் குடும்பப் பெயராக்கிய
இந்திரா காந்தியின் மகன் தான் ராஜீவ்
அவனைத் தூயவன் என நம்பி
மின்னலடி வீரன் மிரேசை இழந்தோம்

இலண்டனில் திருட்டு மகிழூர்தியை வாங்கி
சிக்கலில் மாட்டி சஞ்சீவ் என்னும் பெயரை
சஞ்சய் ஆக மாற்றித் தப்பிய அயோக்கியனின்
உடன் பிறப்பு ராஜீவ் கான்
அவனுக்குத் தெரியுமா விடுதலைபற்றி
அவனை நம்பி வீரன் ரெஜினோல்டைப்
பலி கொடுத்தோம்
பிரித்தானியக் கேம்பிரிட்ஜ் நகரில்
தனியார் பள்ளியில்படித்துவிட்டு
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகப் பட்டதாரி
எனப் பொய்யுரைத்து மாட்டியவள் மட்டுமல்ல
மாஃபியா கொள்ளைக் கும்பலுக்கு பெயர் போன
நகரின் நாஜிப்படையாளின் மகளும் ஆகிய சோனியாவை
தன் பெயரை ரொபோர்ட்டோ என மாற்றி
கைப்பிடித்த கயவன் ராஜிவிற்குத்
தெரியுமா தமிழர் துயர்
அவனை நம்பி தானைப் போராளி
தவக்குமாரை இழந்தோம்

போபஸ் ஊழலில் பல பில்லியன் டொலர்கள் சுருட்டி
சுவிஸ்வங்கியில் போட்ட திருடனுக்குத்
புரியுமா தியாகி திலீபா தமிழர் சுதந்திர வேட்கை
அந்தத் திருடனுக்குத் தெரியுமா
தமிழர் சுந்தந்திர வேட்கை
நம்ப வைத்துக் கழுத்தறுக்கும்
நாயை நம்பியதால் அன்பழகன் அநியாயமாய்ப் போனான்தந்தை வழித் தனயனாக
சுன்னத்து செய்து கொண்டு
இந்து முகமூடி பூண்ட
கயவனுக்குத் தெரியுமா
விடுதலை வேங்கைகள் தியாகம்
அவனை நம்பி கரனும் மாவீரனாகினான்

குள்ள நரி ஜேஆரிடம் ஏமாந்த
அரசியல் கற்றுக் குட்டி
எம் துயர் தீர்ப்பான் என நம்பி
தியாகி ஆனந்தக் குமாரை
அநியாயமாய்ப் பலி கொடுத்தோம்அன்று எம்மை அழித்தது இந்தியா
இன்று எம்மை அழிக்கிறது இந்தியா
என்றும் எம்மை அழிக்கும் இந்தியா
பலியாகிப் போன பன்னிரு வேங்கைகளே
உம் தியாகத்தால் இந்த உண்மையை
என்றும் எம்மவர்க்கு உணர்த்திடுவீர்

பிற் குறிப்பு
கவிதையில் உள்ள தகவல்கள் K. N. Rao எழுதிய nehru gandhi dynasty என்ற நூலில் இருந்தும் Katherine Frank எழுதிய “The Life of Indira Nehru Gandhi” என்ற நூலில் இருந்தும் மேலும் பல இணையத் தளங்களில் இருந்தும் பெறப்பட்டவை.

வேல் தர்மா

veltharma.blogspot

என்னவாயிற்று நதிநீர் வாரியச் சட்டம்? - பழ. நெடுமாறன்



                                   
பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் பிறப்பித்த ஆணையைச் செயற்படுத்தாத கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிடவேண்டும் என்றும் அந்த நீரைக் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதற்கு எதிராக "பந்த்', போராட்டம் நடத்தப்போவதாகக் கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் கூட்டி அதில் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையை ஏற்க மறுப்பதாக கர்நாடக முதலமைச்சர் பகிரங்கமாக அறிவித்து ஆணையக் கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். பிரதமரின் ஆணையை மீறியதோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தையும் கர்நாடக முதலமைச்சர் அவமதித்துள்ளார்.

ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பினையும் இறுதித் தீர்ப்பினையும் கர்நாடகம் ஏற்க மறுத்துவிட்டது. தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்தை மதியாதப் போக்கில் கர்நாடகம் நடந்து வருகிறது. அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாததின் விளைவாகவே தமிழகக் காவிரிப் பாசன விவசாயிகள் பெரும் இழப்புக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

கடந்த 1968-ம் ஆண்டிலிருந்து 44 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் கர்நாடக அரசினாலும் மத்திய அரசினாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பிரதமர்களான இந்திரா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு அநீதி இழைத்து ஓரவஞ்சனையுடன் நடந்து கொண்டனர். காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளை மதிக்கவோ தமிழகத்திற்குத் தண்ணீர் தரவோ கர்நாடகம் மறுத்தபோது பிரதமர்களாக இருந்தவர்கள் அரசியல் சட்டப்படி தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல் செயலற்றுப் போனார்கள் அல்லது புறக்கணித்தார்கள்.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு பிரதமரின் ஆணைப்படி நடக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலைமை இருப்பது வெட்கக்கேடானதாகும். நாட்டின் பிரதமருக்கு உள்ள மரியாதையைப் பார்த்து உலகம் நகைக்கும் நிலை இருப்பது அப்பதவிக்கே அவமானகரமானதாகும்.

1968 ஆம் ஆண்டு காவிரி நீர்ப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. மத்திய பாசனத் துறை அமைச்சர் கே.எல். ராவ் முயற்சியிலும் தலைமையிலும் தொடர்ந்து கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகியவற்றின் முதலமைச்சர்கள் பலமுறை பேச்சு நடத்தினார்கள். இந்தப் பேச்சுகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை. 1970 ஆம் ஆண்டில் பேச்சு பயனளிக்கும் என்ற நம்பிக்கையை மத்திய பாசன அமைச்சர் இழந்துவிட்டார் என்றாலும் நடுவர் குழுவினை அமைக்க இந்திய அரசு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஹேமாவதி, கபினி திட்டங்களின் கட்டுமானப் பணிகளைக் கர்நாடகம் தொடங்கிவிட்டது.

வேறுவழியில்லாத நிலைமையில் 1971 ஆம் ஆண்டில் இந்திய அரசையும் கர்நாடக அரசையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்திய அரசு நடுவர் மன் றத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் வழக்காகும். இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் வாக்குமூலத்தில், சட்டப்படி இனியும் பேச்சுகளால் பயனில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தால்தான் நடுவர் மன்றம் அமைக்க முடியும் என்று கூறியது.

1972 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராவிடம் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி இப்பிரச்னை குறித்துப் பேசினார். வழக்கைத் திரும்பப்பெற்றால் பேச்சுகளை மீண்டும் நடத்தித் தீர்வு காண உதவுவதாக இந்திரா அளித்த வாக்குறுதியை நம்பி, வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது. அதே ஆண்டில் மே மாத இறுதியில் மூன்று மாநில முதலமைச்சர்கள் கூடிப் பேசியதன் விளைவாக, "காவிரி உண்மை அறியும் குழு' ஒன்று அமைக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு கடைசியில் தில்லியில் 3 மாநில முதலமைச்சர்களும் இந்தியப் பாசன அமைச்சரும் "காவிரி உண்மை அறியும் குழு'வின் அறிக்கையை ஆராய்ந்தார்கள். அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் சரியானவை என்று மூன்று மாநிலங்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

1974 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் தில்லியில் கூடிய மூன்று மாநில முதல்வர்களும் "காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு' ஏற்படுத்தும் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இந்த அமைப்பை நிறுவ வேண்டிய மத்திய அரசு அவ்வாறு செய்யாமல், தானே தீர்வுகாண முயன்றதால் பேச்சுகள் பயனற்றுப்போயின. 1971 ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த தமிழக அரசு 1990-ம் ஆண்டு வரையில் கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய தவறைச் செய்தது. பேச்சு வார்த்தை நடைபெறும்போது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. கர்நாடகம் திட்டமிட்டுப் பேச்சுவார்த்தையை 19 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டே சென்றது.

1990 ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மீண்டும் முறையீடு செய்தது. அப்போது கர்நாடக முதலமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில் முன்னாள் முதலமைச்சர்களான குண்டுராவ், இராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை ஆகியோர் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுசேர்ந்து தில்லிக்குச் சென்று பிரதமர் வி.பி.சிங்கைச் சந்தித்து நடுவர் மன்றத்தை அமைக்கக்கூடாது என்று வற்புறுத்தினார்கள். கர்நாடகத்தின் இந்த நெருக்குதலை பிரதமர் வி.பி.சிங்கினால் மீறமுடியவில்லை.

பன் மாநில நதிநீர் பிரச்னைச் சட்டத்தின் 4-1 பிரிவின்படி நடுவர் மன்றத்தை அமைப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. ஆனால், பிரதமர் வி.பி.சிங் அவ்வாறு செய்யாமல் உச்ச நீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அவ்வாறே நடந்துகொள்ளத் தீர்மானித்தார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இதைத் தெரிவித்தார். அதன் பின் உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி நடுவர் மன்றம் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. கர்நாடக அரசு இந்த ஆணையை ஏற்க மறுத்தது. அத்துடன் அது நிற்கவில்லை. 1991 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி "காவிரிப் பாசனச் சட்டம்' என்ற பெயரில் ஓர் அவசரச் சட்டத்தை கர்நாடக அரசு பிறப்பித்தது. நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையைச் செயலற்றதாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த அவசரச் சட்டம் சகல நியாயங்களுக்கும் எதிரா னது என்பதைத் தமிழகம் இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டி முறையிட்டது. இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரம் அளிக்காமல் மத்திய அரசே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இச்சட்டத்தை அனுப்பி அவர் அதை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பினார். உச்ச நீதிமன்றம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. இத்தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் கெஜட்டில் பிரசுரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மட்டுமல்ல, நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பினையும் கெஜட்டில் பிரசுரிக்க மத்திய அரசு வேண்டுமென்றே தயங்கியது. மத்திய அரசு நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் கெஜட்டில் பதிப்பித்தால்தான் இந்தத் தாவாவில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதை ஏற்று நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், இந்திய அரசு அவ்வாறு செய்யாததின் விளைவாக இந்தத் தீர்ப்புகள் யாரையும் கட்டுப்படுத்தும் வலிமையற்றுக் கிடக்கின்றன.

மத்திய அரசிடம் தமிழக அரசு பல தடவை முறையிட்டபோதும் எந்தப் பயனும் இல்லை. எனவே தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 1993 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி உண்ணா நோன்பை மேற்கொண்டார். 4 நாட்கள் அவர் மேற்கொண்ட உண்ணாநோன்பின் எதிரொலி டில்லியைச் செயல்படவைத்தது. அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் மத்திய பாசனத் துறை அமைச்சரான வி.சி. சுக்லாவை அனுப்பி, தமிழக முதலமைச்சருடன் பேச்சு நடத்தி இறுதியாகக் காவிரிப் பிரச்னை சம்பந்தமாக இரண்டு குழுக்களை அமைக்கப் போவதாக அறிவித்தார். காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் கண்காணிக்க ஒரு குழுவையும் அதை நடைமுறைப்படுத்த மற்றொரு குழுவையும் நியமிக்கப்போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இந்த அறிவிப்பை ஏற்று கர்நாடகம் காவிரியில் நீரைத் திறந்துவிடவேண்டும் என்று ஆணையிடுமாறு நடுவர் மன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அதை நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டு டிசம்பர் 19 ஆம் தேதி கீழ்க்கண்ட ஆணையைப் பிறப்பித்தது. உடனடியாக தமிழ்நாட்டுக்கு 11 டிஎம்.சி. தண்ணீரை அளிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், இந்த ஆணையை மதிக்க கர்நாடகம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக ஆவன செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு ஆணை பிறப்பித்தது. இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், நடுவர் மன்றம் கூறியபடி 11 டி.எம்.சி. தண்ணீருக்குப் பதில் 6 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட ஆணையிட்டார். மறுபடியும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்தது.

2007 ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், இந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மத்திய அரசும் இந்தத் தீர்ப்பை தனது கெஜட்டில் பதிப்பிக்கவில்லை. எனவே அது செயல்படாத தீர்ப்பாகவே இன்னமும் இருந்து வருகிறது.

பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றபோது பிரதமரும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் அடங்கிய குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவிற்கு உதவியாக சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களையும், மத்திய நீர்ப்பாசனத்துறை செயலாளரையும் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் அதிகாரமற்ற குழுக்களாகும். எனவே இத்தகைய குழுக்களினால் எத்தகைய நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.

சட்டப்படி மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு முன்வரவில்லை. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நதிநீர் வாரியச் சட்டத்தைப் பயன்படுத்தி காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்தத் தீர்ப்புகளைக் கர்நாடகம் மதிக்கவில்லை என தமிழகம் மத்திய அரசிடம் புகார் செய்தவுடன் மேலே கண்ட சட்டத்தின் 41 பிரிவின்படி "காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை' மத்திய அரசு அமைத்து அதை தனது கெஜட்டிலும் பதிப்பித்திருக்க வேண்டும். இச்சட்டத்தில் இந்த அமைப்பின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படக் கூடியவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றி விரிவாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இச்சட்டத்தின் 221 (சி) பிரிவில் சொல்லப்பட்டுள்ளபடி அதிகார அமைப்பின் ஆலோசனையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏதாவது மீறினால் வாரியம் உடனடியாக ஒரு நடுவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன் நியமிக்கும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் இவ்வாறு நியமிக்கப்படலாம். இந்த நடுவரின் தீர்ப்பே இறுதியானது. பிரச்னையில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் இத்தீர்ப்புக் கட்டுப்படுத்தும் உடனடியாக இத்தீர்ப்பை ஏற்றுச் செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நீங்காத கடமையாகும்.

இச்சட்டத்தில் இவ்வளவு தெளிவாக எல்லாம் சொல்லப்பட்டிருந்தும் நதிநீர் வாரியச் சட்டத்தை 1956 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மத்திய அரசு பயன்படுத்தவேயில்லை என்பதும் இது செயலற்றச் சட்டமாக இன்றுவரை கிடக்கிறது என்பதும் மிகமிக வருந்தத்தக்கதாகும்.

1974 ஆம் ஆண்டிலேயே காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை ஏற்படுத்த கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களும் ஒப்புக்கொண்டன. ஆனால், கடந்த 38 ஆண்டுகளாக அதை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகாவது இந்த அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கு மாநிலங்களுக்கிடையே மோதலை அதிகமாக்குவதோடு இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றம் போன்ற உயர் அமைப்புகளையும் யாரும் மதிக்காத நிலையை ஏற்படுத்திவிடும் என்பதையும் இறுதியில் தேச ஒருமைப்பாடு என்பது சிதறுண்டு போகும் என்பதையும் மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

http://dinamani.com/

தமிழகத் தமிழர்களை விடவும் இந்தியாவிற்கு மகிந்த முக்கியமானவரா?



                         
இந்தியாவிலுள்ள சாஞ்சியில் நிறுவப்படவுள்ள ஒரு பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதற்காக சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அழைத்து இந்திய மத்திய அரசும், அதற்குத் துணையான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் பலத்த அடியை வாங்கியுள்ளன. பல்கலைக்கழகம் அமைக்கப்படும் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்ற மகிந்தவிற்கு அந்த மாநிலத்தின் எல்லைவரை படை திரட்டிச்சென்று எதிர்த்துவிட்டு வந்திருக்கின்றார் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ. வைகோ அவர்களுடன் மிகவும் நீண்ட பயணம் செய்த ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள், சுமார் 40 மணி நேரங்களுக்கு மேலாக வீதியில் இருந்து தங்களது எதிர்புப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள்.

அவர்களை, மகிந்த நின்றிருந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்காத அந்த மாநிலத்தின் காவல்துறை அதிகாரி, அவர்களது போராட்டத்தை பார்த்து நெகிழ்ந்து தலைமைதாங்கிச் சென்ற வைகோ அவர்களுக்கு மாலை மரியாதை செய்து கௌரவத்துடன் திருப்பியனுப்பி வைத்திருக்கின்றார். சட்டத்திற்கு உட்பட்டு அந்த மாநில அதிகாரி அவர்களைத் தடுத்து நிறுத்தியபோதும், தனது மனச்சாட்சிக்கு உடன்பட்டே அவர்களுக்கு மாலை மரியாதை கொடுத்து திருப்பி அனுப்பியிருக்கின்றார். இது அந்த மாநிலத்தின் காவல்துறை அதிகாரிக்கும் மகிந்தவின் வருகையில் உடன்பாடு இருந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கப்போதுமானது.

இந்தியத் தலைவர்கள் வரும்போது இல்லாத அளவிற்கு மகிந்தவின் வருகைக்கு இத்தனை கெடுபிடிகளா என அந்த மாநிலத்தின் மக்கள் கூட கடும் சினம் வெளியிட்டுள்ளார்கள். ‘மகிந்தவின் பயணத்தினால் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராமங்களில் பாதுகாப்புக் கெடுபிடிகள் மிக அதிகமாகக் காணப்பட்டதாக’ ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ செய்தி வெளியிடுகின்றது. போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தது.

போக்குவரத்து ஒருநாள் முன்னதாகவே நிறுத்தப்பட்டு, கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு, போபாலின் புறநகர் கிராமமான சுகிசெவனியா தொடக்கம் சாஞ்சி வரையான கிராமங்களில் இருந்த கிராமவாசிகள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது என அந்த ஊடகம் குற்றம்சாட்டுகின்றது. தனது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, இத்தனை உச்ச பாதுகாப்புக் கொடுத்து அகிம்சையைப் போதித்த புத்தரின் பெயரால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்தின் அடிக்கல்லை ஒரு இனப்படுகொலையாளி என்று குற்றம்சாட்டப்படுபவரைக் கொண்டுவந்து நாட்டவேண்டிய அவசியம் ஏன் இந்தியாவிற்கு ஏற்பட்டது?

அடிக்கல்நாட்ட இனப்படுகொலையாளி மகிந்தவைத்தான் அழைக்கவேண்டும் என்ற அவசியம் இந்தியாவிற்கு கிடையாது. பௌத்த நெறியைச் சரியான வழியில், தீவிரமாகப் பின்பற்றுகின்ற இந்தியாவின் விருப்பத்திற்குரிய தலாய் லாமா உட்பட எத்தனையோ தலைவர்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களை எல்லாம் தவிர்த்து மகிந்தவை அழைத்து இந்தியா ஏன் கௌரவிக்க முனைந்து அவமானப்படுகின்றது?

இந்திய மத்திய அரசைத் தீர்மானிக்கக்கூடியளவிற்கு பலம்பொருந்திய தமிழக மாநில கட்சிகள். அந்தக் கட்சிகள் அனைத்துமே சிறீலங்காவிற்கு ஆதரவான நடவடிக்கைகளை புறக்கணிக்க முயல்கின்றன. தமிழக ஆளும் கட்சி சிங்கள இராணுவத்திற்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. சிங்கள விளையாட்டு வீரர்களையும் தமது மாநிலத்தில் பயிற்சி அளிக்க மறுத்து திருப்பியனுப்புகின்றது. இனப்படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கும் தாக்கல் செய்கின்றது.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அனைத்துக் கட்சிகளும் இவற்றை வலியுறுத்துகின்றன. தமிழக மக்களும் அதனையேதான் விரும்புகின்றார்கள். இல்லாதுபோனால் சிறீலங்காவில் இருந்து சென்ற யாத்திரிகர்கள் குழு மீது தமது கோபத்தை, எதிர்ப்பை அவர்கள் வெளிக்காட்டியிருக்கமாட்டார்கள். ஆனால் தனது நாட்டின் ஒரு மாநில மக்களினதும் கட்சிகளினதும் எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, மகிந்தவிற்குச் செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டியதன் அவசியம் இந்திய மத்திய அரசுக்கு ஏன் ஏற்படுகின்றது?

தமிழக மாநிலக் கட்சிகளினதும், மக்களினதும் எதிர்ப்பையும் விட்டுவிடுவோம். இந்தியா செங்கம்பளம் விரித்து வரவேற்கும் சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் இந்தியாவிற்கு ஆதரவாக அல்லது சார்பாக என்றுமே செயற்பட்டதில்லையே. கடந்தகால வங்தேசப் போர், சீனப் போர்களை விட்டுவிடுவோம். தற்போதும்கூட இந்தியாவிற்கு பாதகமான கள நிலைமைகளையே இலங்கைத் தீவில் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்தும் களமாக இலங்கைத் தீவை பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு அண்மையில் கூட பல ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் சிங்கள தேசத்தை இந்தியா அரவணைத்துச் செல்லவேண்டிய அவலம் எதற்காக?

‘சின்னச் சின்ன சம்பவங்களுக்காக சிறீலங்காவுடனான நட்புறவு வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகின்றார். சின்னப் பொறிதான் பெரிய தீயை உண்டாக்குகின்றது என்பது மன்மோகன் சிங்கிற்கு புரியதா என்ன? ஈழத் தமிழர்களை விட்டுவிடுங்கள், தமிழகத் தமிழர்களை விடவும், அங்குள்ள கட்சிகளை விடவும் மகிந்த இந்தியாவிற்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவாரா என்ன?

ஆசிரியர் தலையங்கம்
நன்றி : ஈழமுரசு

வடக்கு கிழக்கு படைக்குவிப்பு! சர்ச்சைக்குரிய புள்ளி விபரங்கள்!



         
விடுதலைப் புலிகளுக்கு ௭திரான போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் செறிவு தொடர்பான சர்ச்சை அவ்வப்போது வெடித்துக் கொண்டேயிருக்கிறது. அதுவும் கடந்த ஒரு ஆண்டில் இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது ௭ன்று சொல்லாம்.

போர் முடிவுக்கு வந்து மூன்றேகால் ஆண்டுகளாகி விட்டன. இந்தநிலையில், ௭தற்காக அங்கு பெருந்தொகைப் படையினரைக் குவித்து வைத்திருக்க வேண்டும் ௭ன்ற கேள்வி உள்நாட்டில் மட்டும் ௭ழவில்லை. இலங்கைத்தீவின் ௭ல்லைகளையும் தாண்டி, சர்வதேச அளவிலும் அது ௭திரொலித்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் கொழும்பு வந்த, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக், வடக்கில் நிலை கொண்டுள்ள படைகளைக் குறைக்க வேண்டும் ௭ன்றும், சிவில் நிர்வாகத்தில் அவர்களின் தலையீடுகளை இல்லாதொழிக்க வேண்டும் ௭ன்றும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அரசாங்கம் இதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை ௭ன்றே கூற வேண்டும்.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் அளவுக்கதிகமான படையினரைக் குவித்து வைத்துள்ள அரசாங்கம், அதற்கான நியாயங்களைக் கூறத் தவறவும் இல்லை. ‘௭ங்கெங்கு படையினரை நிறுத்தி வைக்க வேண்டும் ௭ன்று யாரும் ௭மக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை, நாம் ௭ங்கேயும் நிறுத்தி வைப்போம், ஏனென்றால் இது ௭மது நாடு, நாம் ஒன்றும் வெளிநாடுகளில் ௭மது படைகளை நிறுத்தி வைக்கவில்லை’ ௭ன்றளவில் தான் அரசின் பதில் உள்ளது.

சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு, ஜனாதிபதியைச் சந்தித்த போது வடக்கில் இருந்து படைகளைக் குறைக்க வலியுறுத்தியது. அதற்கு அவர், ‘அப்படியானால் வடக்கில் இருந்து அகற்றப்படும் படையினரை ௭ங்கே கொண்டு போய் நிறுத்துவது? இந்தியாவுக்கா அனுப்பமுடியும்?’ ௭ன்று கேட்டு அவர்களின் வாயை அடைத்திருந்தார்.

இப்படியாக அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் இந்த விவகாரம் குறித்து, கடந்தவாரம் இந்தியாவின் ‘இந்து‘ நாளேட்டில் நிருபமா சுப்ரமணியன் ஒரு கட்டுரையை ௭ழுதியிருந்தார். அதில் இலங்கை இராணுவத்தின் மொத்தமுள்ள 19 டிவிஷன்களில் 16 டிவிஷன்கள் வடக்கு, கிழக்கிலேயே நிலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு டிவிஷனில் 7000 தொடக்கம் 8000 வரையான படையினர் இருப்பர் ௭ன்ற கணக்கில் பார்த்தால், மொத்தம் 85,000 படையினர் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருப்பர் ௭ன்றும் அவர் கூறியிருந்தார். இலங்கை இராணுவத்தின் உள்ளக அறிக்கை ஆவணம் ஒன்றின் அடிப்படையிலானதே அந்த கணிப்பு. ஆனால் இதனை இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறுத்துள்ளார்.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 35 வீதத்தையும் கடற்பரப்பில் 65 வீதத்தையும் கொண்டுள்ள வடக்கு, கிழக்கில் வெறும் 40 வீதத்துக்கும் குறைவான படையினரே நிலைகொண்டுள்ளதாக அவர் பதிலளித்துள்ளார். உண்மை நிலை இந்த இரண்டு தகவல்களையும் விட வித்தியாசமானது.

இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேல் வடக்கு, கிழக்கிலேயே நிலைகொண்டுள்ளது ௭ன்பதே உண்மை நிலை.

போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் 27 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருந்ததாகவும், தற்போது அங்கு வெறும் 15ஆயிரம் படையினரே நிலைகொண்டுள்ளதாகவும் அரசாங்கம் அடிக்கடி கூறுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து அகற்றப்பட்ட படையினர் ௭ங்கே கொண்டு போய் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர் ௭ன்று அது கூறவில்லை.

அதுபோலவே, வடக்கில் இருந்து கடந்த மூன்றாண்டுகளில் 28 பற்றாலியன்களை தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறியிருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ. வடக்கில் இருந்த இராணுவ பற்றாலியன் களில் கணிசமானவை கிழக்குப் பகுதிக்கே அனுப்பப்பட்டனவே தவிர, தெற்கிற்கு அல்ல.

௭வ்வாறாயினும், இலங்கை இராணுவத்தின் பெரும்பாலான படைத் தலைமையகங்களும், டிவிஷன்களும் வடக்கு,கிழக்கையே மைப்படுத்தியுள்ளன.

யாழ்.படைத் தலைமையகத்தின் கீழ் 51, 52, 55 ஆகிய மூன்று டிவிஷன்கள் உள்ளன.

கிளிநொச்சி படைத் தலைமையகத்தின் கீழ் 57, 65 ,66 ஆகிய மூன்று டிவிஷன்கள் இருக்கின்றன.

முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் கீழ் 59, 64, 68 ௭ன மூன்று டிவிஷன்கள் உள்ளன.

வன்னிப் படைத் தலைமையகத்தின் கீழ் 21, 54, 56, 61, 62 ௭ன ஐந்து டிவிஷன்கள் செயற்படுகின்றன.

கிழக்குப் படைத் தலைமையகத்தின் கீழ் 22, 23 மற்றும் அண்மையில் வடக்கில் இருந்து மாற்றப்பட்ட அதிரடிப்படை– 3 ௭ன அழைக்கப்படும்– அரைநிலை டிவிஷனான 63 ஆவது டிவிஷனும் உள்ளது.

இந்த வகையிலேயே, 16 டிவிஷன்கள் மற்றும் ஒரு அதிரடிப்படையே வடக்கு கிழக்கில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் டிவிஷன்களான 53 மற்றும் 58 டிவிஷன்களும் வடக்கில் தான் நிலை கொண்டுள்ளன.

அவற்றை ‘இந்து‘வில் வெளியான கட்டுரை கணக்கில் சேர்க்கவில்லை. இவையே மிக முக்கியமானவை முழுப்பலம் கொண்டவை.

இவற்றையும் சேர்த்துப் பார்த்தால் மொத்தம் 19 டிவிஷன்கள் வடக்கு, கிழக்கில், அதாவது நாட்டின் 35 வீத நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ளன. தெற்கிலோ அதாவது நாட்டின் 65 வீத நிலப்பரப்பில் 11 12 மற்றும் 14 ௭ன மொத்தம் 3 டிவிஷன்கள் மட்டும் தான் உள்ளன.

13 ஆவது இலக்கம் அதிர்ஷ்டமற்றது ௭ன்பதால், அதை விலக்கி 14 ஆவது டிவிஷன் அண்மையில் உருவாக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் இலங்கை இராணுவத்தில் உள்ள மொத்தம் 22 டிவிஷன்களில் 19 டிவிஷன்கள் வடக்கு, கிழக்கில் தான் நிலைகொண்டுள்ளன.

இந்தவகையில் வடக்கு,கிழக்கில் மொத்தம் 85 வீதமான படையினர் நிலை கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ௭வ்வாறாயினும் ஏனைய தேவைகளுக்காக மாற்றப்பட்ட படையினர் ஒதுக்கு நிலையில் உள்ளோர் மற்றும் வழுக்களைத் தவிர்த்துப் பார்த்தால் கூட, 70 வீதத்துக்கும் குறையாத படையினர் வடக்கு,கிழக்கில் நிலை கொண்டிருப்பது உறுதியானது.

ஆனால் இராணுவப் பேச்சாளரோ வெறும் 40 வீதத்துக்கும் குறைவான படையினரே உள்ளதாக கணக்கு காட்டுகிறார். ஆனால் அவரால் படையினரின் ௭ண்ணிக்கை தொடர்பான சரியான கணக்கை கூற முடியவில்லை.

இப்போது போர் இல்லை, உளவு பார்க்கவும் யாருமில்லை, ஆனாலும் அரசாங்கம் இராணுவம் தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை வெளியிடத் தயாராக இல்லை. காரணம் அது சர்வதேச கவனிப்பை பெற்றுவிடும் கண்டனங்களை உருவாக்கி விடும் ௭ன்ற அச்சம் தான்.

இராணுவம் மட்டுமன்றி கடற்படை விமானப்படையும் கூட கணிசமான படையினரை வடக்கு,கிழக்கில் தான் நிறுத்தி வைத்துள்ளன.

இப்போது வடக்கு கிழக்கிற்கு தமது பயிற்சி முகாம்களையும் கூட படையினர் மாற்றி வருகின்றனர்.

இலங்கைப் படையினரின் மொத்த ௭ண்ணிக்கையில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் வடக்கையே மையப்படுத்தி நிலை கொண்டுள்ளனர்.

ஆனால் நாட்டின் மொத்த சனத்தொகையில் வடக்கு கிழக்கு வெறும் 12 வீத பங்களிப்பையே கொண்டுள்ளது.

இந்தநிலையில், நாட்டின் மொத்த படையினரில் 70 வீதம் வரையிலானோர், நாட்டின் வெறும் 12 வீதமான மக்களைக் கண்காணிப்பதையோ அல்லது அவர்கள் மத்தியில் இருப்பதையோ ஒரு அசௌகரியமாகவே கருதுவார்கள் ௭ன்பதில் சந்தேக மில்லை.

அதேவேளை, படையினரின் இந்த ௭ண்ணிக்கையானது, ஒரு தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டிய அளவை விட அதிகமானது ௭ன்று கேணல் ஹரிகரன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் இந்த கணிப்புத்தான் உள்ளது. இந்தப் படைக்குவிப்புக்கு அரசாங்கம் ௭ன்ன காரணத்தைக் கூறினாலும் அதன் நியாயத்தன்மை சர்வதேசத்துக்கு ௭டுபட வாய்ப்பில்லை.

ஏனென்றால் ௭ந்தக் கணக்குகளுக்கும் அப்பால் இது மிகைப்பட்டதொன்று.

சுபத்ரா

ஈழத்து அகதியாய் நான்...



                                            


நாளை நான் உயிரோடு
இருப்பேனா ஈழத்தில்
நண்பனின் இறந்தவிட்டில்
இன்று நான்

*

அம்மா அங்கே
அம்மாக்காக அகதியாய்
இங்கே நான்

*

காணாமல் போனால்
கண்டுபிடித்து தருவார்கள்
பிணமாக

*

தினமும் இறப்பவர்களின்
பட்டியலில் சேரதவர்கள்
சுனாமியால் இறந்த
ஈழத்தமிழர்கள்

*

வகுப்பறையில் மகள்
படிக்காட்டியும் உயிரோடு
திரும்ப வேண்டும்
சாமியறையில் தாய்

*

நான் இறந்தால் கொள்ளிவைக்க
வந்துவிடாதே நான் பெற்றதில்
உன்னை மட்டும்தான் காப்பாற்ற
முடிந்தது

*

அம்மாவோடு ஆசையாய் பேச
தொலைபேசி எடுத்தால் அம்மா
கவலையாய் பேசுவதை கேக்கவே
நேரம் முடிந்துடும்

*

என் தாயை நான் பார்த்தே
இருபது வருசமாச்சு எப்படி
சொல்லிக் கொடுப்பேன்
என் பிள்ளைக்கு என் தாய்
எப்பிடி இருப்பா இன்று என்று

*

எப்ப அம்மா சொந்தா ஊருக்கு
போவோம் பொறு போவோம்
இருபது வருசமா இதைத்தானே
அம்மா சொல்கிறாய்

*

தலைமுறைக்காகவே சம்மதிக்கிறாள்
திருமணத்துக்கு நாளை விதவை
ஆகலாம் என்று தெரிந்தும்

*

சமாதானம் என்றால்
என்ன அப்பா
சண்டைக்கான ஒத்திகை
மகனே

கவிஞர்:பரணி

குல்தீப் நய்யார் - என்னுடைய ஜன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன




     மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்... பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல் கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்... இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் 'ஸ்கூப்’கள் இவை. சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தவரிடம் பேட்டிக்கு நேரம் கேட்டபோது இரவு 9 மணிக்கு வரச் சொன்னார். ஓபராய் ஹோட்டலின் அறையில் 'பிரிட்டிஷ் இந்தியா’வில் துவங்கி 'ராகுல் இந்தியா’ வரை பேசி முடித்து, அவருக்கு நான் 'குட் நைட்’ சொன்னபோது அதிகாலை 3.50 மணி. 

''91 வயதில் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறீர்கள். இன்றும் 'விஷயம் அறிந்த' பத்திரிகையாளராகவே இருப்பதன் ரகசியம் என்ன?''

''என்னுடைய ஜன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. தொடர்புகளையும் நட்பையும் பெரிதும் மதித்துக் கொண்டாடுகிறேன். பகலில் இரண்டு மணி நேரமும் இரவில் மூன்று மணி நேரமும் மட்டுமே தூங்குகிறேன். நாளன்றுக்குச் சாதாரணமாக 27 செய்தித்தாள்கள் படிக்கிறேன். வார இதழ்களும் இன்ன பிற புத்தகங்களும் கணக்கில் வராதவை. முதுமை சுமை குறைக்க வாரத்தில் மூன்று நாட்கள் ஆயில் மசாஜ். மீதி நாட்கள் யோகா. முடிந்தவரை என் துன்பங்களையும் சோகங்களையும் சிந்திக்க மறுக்கிறேன். இதன் பெயர் ரகசியமா? தெரியவில்லை.''


''70 ஆண்டு ஊடகத் துறைப் பணியில் உங்களை மிக அதிகமாகப் பாதித்த அசைன்மென்ட் எது?''
                 

''மகாத்மா காந்தியின் படுகொலை. 'காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்ற டிரங்கால் தகவல் கேட்டு 'பிர்லா’ ஹவுஸ் நோக்கி ஓடினேன். பிர்லா ஹவுஸில் கூடியிருந்த ம‌க்களின் அழுகை ஓலங் களையும் கண்ணீரையும் ஆங்காங்கே ஈரம்கூடக் காயாமல் சிதறிக்கிடந்த பாபுஜியின் ரத்தத்தையும் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.''

''உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?''

''ரஷ்யாவின் புரட்சி எழுத்தாளர் டால்ஸ்டாய். அவருடைய 'வார் அண்ட் பீஸ்’ எனக்கு மிகப் பிடித்த நாவல்.''

''இந்தியாவின் அனைத்துப் பிரதமர்களோடும் பழகியவர் என்ற முறையில் சொல்லுங்கள்... இதுவரையிலான இந்தியப் பிரதமர்களில் சிறந்தவர் யார்... மோசமானவர் யார்?''

''சிறந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு. மோசமான பிரதமர் அவருடைய மகள் இந்திரா காந்தி. தன் வளர்ச்சிக்கு உதவிய லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் போன்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களைக்கூட அவர் ஒழுங்காக நடத்தவில்லை. எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தி செய்த அட்டூழியங்களை எவராலும் மறக்க முடியாது!''


''காமராஜருடன் உங்களுக்கு நல்ல நெருக்கம் இருந்தது அல்லவா?''

''ஆமாம். காமராஜர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். பிரதமர் பதவி பல முறை அவரைத் தேடி வந்தபோதும் மறுத்தவர் அவர். எத்தனை பெரிய தியாகம்? லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு, காங்கிரஸின் மூத்த தலைவர்களுடன் பேசி இந்திரா காந்தியைப் பிரதமர்ஆக்கியவர் காமராஜர். ஆனால், இந்திரா பிறப்பித்த 'எமர்ஜென்ஸி’ காமராஜரை வெகுவாகப் பாதித்தது. நான் எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்துவிட்டு காமராஜரைச் சந்திக்க சென்னைக்கு வந்தேன். அப்போது இந்திரா காந்தியைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுத்த தவறான முடிவுக்காக மிகவும் வருத்தப்பட்டு என் எதிரிலேயே நான்கு முறை தலையில் அடித்துக்கொண்டார். அந்தக் குற்ற உணர்வுதான் அவர் உயிரைச் சீக்கிரமே பறித்துக்கொண்டது.''

'' 'இந்தியா ஜனநாயகரீதியாகத் தோல்வி அடைந்துவிட்டது!’, 'ஜனநாயகம் என்பது மெஜாரிட்டியின் சர்வாதிகாரம்’ - சமீப கால‌மாக மிக அதிகமாக அடிபடும் வாதங்கள் இவை. பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர் என்ற முறையில், இந்த வாதங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

(நீண்ட மௌனத்துக்குப் பிறகு...) ''இந்தியாவில் சமீபமாக அரங்கேறும் அத்துமீறல்கள், ஊழல், வன்முறை, மக்கள் விரோத அரசியல் ஆகியவையே அந்த வாதங்களின் பிறப்பிடம். இவற்றை எல்லாம் பொய் என மறுக்க முடியாது. இரோம் ஷர்மிளாவின் 12 ஆண்டு அஹிம்சைப் போராட்டம், கவனத்தில்கொள்ள மறுக்கப்படும் கிழக்கு இந்தியாவின் ஓலம், காஷ்மீரில் அரங்கேறும் கண்மூடித்தனமான வன்முறை, தெலுங்கானா, ஜெய்தாப்பூர், இப்போது கூடங்குளம் என ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டம், 65 ஆண்டுகளாக இன்னமும் முன்னேற்றம் காணாத தலித்துகளின் வாழ்க்கைத் தரம், பழங்குடியின மக்களின் விசும்பல்... இவை எல்லாமே இந்திய ஜனநாயகத்தின் காலரைப் பிடிப்பவைதான். பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் காலகட்டம், தற்போதைய இந்தியா ஆகிய மூன்று காலகட்டத்திலும் வாழ்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... எனக்கு இன்னமும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்றைய தலைமுறை தலையெடுக்கும் காலத்தில் இந்த நிலை மாறலாம்!''

''இந்திய ஜனநாயகத்துக்குச் சவாலான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?''

''பசி. இன்றைய இந்தியாவில் அரங்கேறும் அத்தனை பயங்கரங்களுக்கும் பின்னணியில் பட்டினியோடு தூங்கப்போகிறவனின் பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட வற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினைவாதங்கள் இந்தியா முழுக்கத் தலைவிரித்தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டுவிடும். இன்னொரு முக்கியக் காரணம், இந்து தாலிபான் செயல்பாடுகள். அதுதான் மகாத்மா காந்தியையே பழிவாங்கியது. திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான்களால் உருவாக் கப்பட்டவைதானே. சமீப காலமாகத் திரைக்குப் பின்னால் தென்படும் இந்து தாலிபான் அரசியல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிடும்!''

''ஊடகங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?'

''மோசமாக... மிக மோசமாக... மிகமிக மோசமாக இருக்கிறது. உண்மை, நேர்மை, நடுநிலைமை என்பதெல்லாம் கேள்விக்குறி ஆகிவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவது, பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளைப் பிரசுரிப்பது என மோசமான திசையில் ஊடகங்கள் பயணிக்கின்றன. அதுவும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் சொந்தமாக மீடியா ஹவுஸ் வைத்திருப்பதால், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அல்லது தங்களைப் பற்றிய என்ன பிம்பம் பரவ வேண்டும் என்று நினைக்கிறார் களோ... அவற்றை எல்லாம் செய்தி ஆக்குகிறார்கள். அதுவும் மின்னணுச் சாதனங்களின் வருகை... ஊடக உலகுக்கு ஏற்பட்ட சோதனை என்றே சொல்லலாம். பரபரப்புக்காகத் தவறான செய்திகளையும் திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட செய்தி களையும் வெளியிடுகிறார்கள். அதில் துளியும் உண்மை இருக்காது. மொத்தத்தில் இன்றைய மீடியா, மக்கள் வெறுக்கும் ஒன்றாக மாறி வருகிறது.''

''இப்போதைய இந்திய முதல்வர்களில் உங்கள் பார்வையில் சிறந்தவர் யார்?''

''பீகார் முதல்வர் நித்திஷ் குமார். மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பீகாரைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மெள்ள மெள்ள முன்னேற்றி வருகிறார். சாதிய அரசியல், மோசமான நிர்வாகம், ஊழல், மதப் பிரச்னை போன்ற சமூக விரோதச் சாயல்கள் அவரிடம் இல்லை. அதனால் ஓட்டு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டும் நித்திஷ் வளர்ந்துவருகிறார்.''

''ராகுல் காந்தி - நரேந்திர மோடி... இந்தியப் பிரதமர் போட்டி இவர்களிடையேதான் இருக்குமா?''

''இருவருமே மோசம். சோனியா காந்தியின் மகன் என்பதாலேயே, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். மற்றபடி அவருக்கு பிரதமர் ஆவதற்கான எந்தத் தகுதியும் இல்லை. இந்து - முஸ்லிம் கலவரத்தால் என் பிறந்த ஊரான சியால்கோட்டை (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது)விட்டு வெளியேறியபோது 'இனி இந்தியாவில் மதத்தின் பெயரால் எந்த உயிரும் போகக் கூடாது’ என வேண்டிக்கொண்டே இந்தியாவுக்குள் நுழைந்தேன். ஆனால், நரேந்திர மோடி குஜராத்தில் அரங்கேற்றிய கொடூரத்தைப் பார்த்துவிட்டு என் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிந்தது. தூக்கம் வராமல் மூன்று மாதங்கள் தூக்க மாத்திரை போட்டுத் தூங்கினேன். அவரா இந்தியத் திருநாட்டின் பிரதமர்? நெவர்!''

''நேரு குடும்பம் சரியான திசையில்தான் பயணிக்கிறதா?''

''ஆம். மிகச் சரியாகவே அழிவின் பாதையில் பயணிக்கிறது. அதை சோனியா நன்றாக வழிநடத்திச் செல்கிறார்.''

''தமிழக அரசியலைக் கவனிக்கிறீர்களா? கருணாநிதி, ஜெயலலிதா யார் உங்கள் சாய்ஸ்?''

''இருவருமே இல்லை. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவர் மட்டுமே ஆட்சி செய்கிறார்கள். மூன்றாம் சக்தி இல்லாததால் மக்களும் வேறு வழியின்றி மாற்றி மாற்றி வாக்களிக்கிறார்கள். இப்போதைக்கு என் சாய்ஸ் தமிழகத்தின் மூன்றாம் நபருக்கு. அதனை தேசிய அரசியல் அறிந்த வைகோ போன்றவர்கள் முன்னெடுக்க லாம்.''

''கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத் தைக் கவனிக்கிறீர்களா?'' 

''கூடங்குளம் மக்களின் போராட்டம் மெய்சிலிர்க்கவைக்கிறது. இதில் இடதுசாரிகளின் நிலைப்பாடு ஆச்சர்யமாக இருக்கிறது. உலகின் பல நாடுகள் எதிர்க்கும் அணு உலையை அடம்பிடித்து இந்தியா அமைப்பது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம். அணு உலைகுறித்த அச்சத்தினால் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய அச்சத்தைக் களைய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அரச பயங்கரவாதத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றன. தனிப்பட்ட முறையில் அணு உலை மீது எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. சூரிய சக்தியையும் காற்றாலையையும் முறையாகப் பயன்படுத்தினாலே, போதிய மின்சாரம் கிடைக்கும்.''

''2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?''

'' 'இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன. ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்?’ என 'சேனல் 4’ என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 'நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது’ என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும். போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராஜபக்ஷே அரசு. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, 'இலங்கை எங்கள் நட்பு நாடு’ என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை. இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பேலன்ஸ் செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்!''


நன்றி விகடன்