Like me

Thursday, February 23, 2012

உனக்காகத் தானே .....

                
உனக்காகத் தானே என் உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யார் என்ன சொன்னால் அன்பே உன்னோடு நானும் வருவேன்
ஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறுமுறை மறுமுறை நீ சிரித்தால் என் ஜ...ென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே வளர்ப்பென்றும் அழியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே கண்ணாடி மறக்காதடி
மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே மரணங்கள் வந்தாலும் வரமல்லவா
ஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறுமுறை மறுமுறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

நாமிருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே நினைவென்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே நிஜமென்றும் அழியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர்சொல்லும் பொழுதல்லவா
என்மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீயின்றி என் வாழ்க்கை பழுதல்லவா
ஒருமுறை ஒருமுறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறுமுறை மறுமுறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம்
தீரும்....

காதலிப்பது

                                      

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மனித வாழ்வின் பேரத்தியாயங்களில் ஒன்று. இந்தக்
காலப்பகுதியில் ஏற்படும் தவிப்புக்களும் தடுமாற்றங்களும் ஒரு மனித உயிரியின் வாழ்வின்
கடைசி அத்தியாயம் வரை ஊடுருவிச்சென்று தாக்கும் வல்லமைமிக்கவையாகவிருக்கின்றன.
மனித வாழ்வின் மூலமே - ஆதாரமே இதுதானோ என்று சந்தேகம் கொள்ளுமளவிற்கு
பெரும்பாலானவர்களின் வாழ்வைப் இது புரட்டிப்போட்டிருக்கிறது. காதல் தந்த வெற்றிகள்
... மட்டுமல்ல தோல்விகளும் அது தரும் வலிகளும் கூட அனுபவிப்பதற்குச் சுகமானவை. மனித
வாழ்வின் தவிர்க்க முடியாத விபத்தாக அது இருக்கிறது. அதுதான் இப்பூவுலகில் மொழிகள்
எல்லைகள் கடந்து படைப்பின் மையமாகவும் கலாசிருஸ்டிப்பின் மூலமாகவும் அது
இருக்கிறது

யோர்க் பல்கலைக்கழக பல்கலாச்சார நிகழ்வு

               நாற்பது நாட்டு தேசிய கொடிகளுடன் தமிழீழ தேசியகொடியும் ஏற்றப்பட்டு நடைபெற்ற யோர்க் பல்கலைக்கழக பல்கலாச்சார நிகழ்வு
                         

யோர்க் பல்கலைக்கழக பல்கலாச்சார நிகழ்வில் தமிழீழ மாணவர்கள்

இலங்கையில் இரு தேசங்கள்

                                  
 ஒரு பேராசிரியர் உலகெங்கும் தான் பணி நிமித்தம் செல்லும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளில் சிங்கள மாணவர்கள் சிறீலங்கா தேசிய கொடியையும் தமிழ் மாணவர்கள் புலிக்கொடியையும் ஏற்றுவதை பல தடவை அவதானித்திருக்கிறேன் என்றார். சில பல்கலைக்கழக மட்டங்களில் இதை தடுப்பதற்கு முன்பு சில முயற்சிகள் எடுக்கப்படடதாகவும் தமிழ் மாணவர்களின் தொடர் போராட்டத்தினால் அது தவிhக்கப்பட்டுவ...ிட்டதாகவும் குறிப்பிட்டார்.

         தொடர்ந்து "இங்கு மிகப்பெரிய உண்மை ஒன்று மறைந்துள்ளதை பலர் கவனிக்க தவறிவிட்டனர். அதாவது இதனூடாக இலங்கையில் இரு தேசங்கள் என்ற நிலையை உலக பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்துள்ளதுதான் அது. இது ஒரு முக்கியமான விடயம். அடிப்படையில் இலங்கைத்தீவு இரண்டாக உடைந்துவிட்டதையே இது சுட்டுகிறது. இனி எந்த காரணத்தைக் கொண்டும் அதை ஒட்ட முடியாது. தமிழ் மாணவர்கள் இனி சிறீலங்கா கொடியை ஏற்றுவதை கற்பனையில்கூட நினைத்து பார்க்க முடியாது. தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் நீங்கள் வேறு நாங்கள் வேறு என்ற உளவியலால் பின்னப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் கொள்கையளவில் தமிழீழம் உருவாகிவிட்டது. அங்கீகாரம் ஒன்றுதான் மிகுதியாக இருக்கிறது. இரத்தகக்களரியை தவிர்க்க அதை அங்கீகரிப்பதுதான் ஒரே வழி. அது விரைவில் சாத்தியப்படும் என்றே நினைக்கிறேன்" என்றார்.