Like me

Sunday, May 20, 2012

வெட்டரிவா மீசை வைத்து , நெஞ்சு நிறைய வீரம் தைத்து

                               


வெட்டரிவா மீசை வைத்து 
நெஞ்சு நிறைய வீரம் தைத்து 
கண்ணில் நல்ல கனிவு கொண்டு 
வாழ்ந்த எங்கள் மாவீரன் வீரப்பா 
உனை தமிழகம் வஞ்சித்தது ஏனப்பா

நல்லவனுக்கு நல்லவன் நீ
நயவஞ்சகனுக்கு துரோகி நீ
ஏழைகளின் நண்பன் நீ
பணக்காரனுக்கு தீவிரவாதி நீ
அரசியல்வாதியின் கைக்கூலி நீ

மலைவாழ் மாந்தரின் கடவுள் நீ
வன விலங்குகளின் பாதுகாவலன் நீ
சந்தன மரங்களின் சூலாயுதன் நீ
ஆயுதமேந்திய போராளி நீ
கன்னட அரசிற்கு சிம்ம சொப்பனம் நீ

பாசமுள்ள தந்தையும் நீ
காதலுள்ள காதலன் நீ
வீரமுள்ள மறவன் நீ
மானமுள்ள தமிழன் நீ
முப்பத்திநான்கு வருட சரித்திரம் நீ
காலத்தால் அழியாத காவியம் நீ

எழுத்தாக்கம்: நிலாகவி மணியம்

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா