Like me

Monday, December 17, 2012

ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க.


ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.டிசம்பர் 16,2012, ஞாயிறு:இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.
 
  சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன.மே17 இயக்கத்தின் உமர் அவ்ர்கள் பேசுகையில், மே 15, 2009 அன்று இலங்கையில் இனப்படுகொலை நடக்கப்போகிறது என இனப்படுகொலை தடுப்பு அதிகாரி ஃபிரன்சிஸ் டெங் அளித்த அறிக்கை புறக்கணிக்கப்படுகிறது. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்(OCHA-Office for the Coordination of Humanitarian Affairs) அதிகாரி ஜான் ஹோம்ஸ் அபயக் குரல் எழுப்பி தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சலை படிக்காமலே அழித்து விடுவேன் எனக் கூறினார். பான் கி மூனின் உதவியாளர் மிச்செல் மோண்டாஸ், போரில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் எனக் கேட்ட்தற்கு உடல்களை எண்ணுவது எங்கள் பணியல்ல என்று கூறினார். போரில் நடக்கும் படுகொலைகளை தடுக்க, போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய இலங்கைக்கான ஐ.நாவின் உயர் அதிகாரி விஜய் நம்பியார் தட்ப வெப்பம் சரியில்லாத்தால் போகவில்லை என கூறினார். ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீற்ல்களை தடுக்க பக்கத்து நாட்டு அதிகாரிகளை நியமிப்பதில்லை என்பதை மீறி பான் கி மூன் இந்தியரான விஜய் நம்பியாரை இலங்கையில் நியமித்தார். இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என மனித உரிமைகள் அவையின் நவி பிள்ளை உள்ளிட்டோர் கூறியபோது அதை தடுத்தவர்கள் பான் கி மூன், விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோம்ஸ்.போரின் இறுதிக் காலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடாமல் விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோம்ஸ் தடுத்தனர் என்பன போன்ற விவரங்களை அளித்தார்.மதிமுக தொழிற்சங்க தலைவர் அந்திரிதாஸ் பேசுகையில், இந்தியாவிற்கும் ஈழப் படுகொலையில் இனப்படுகொலையில் சமபங்கு இருக்கிறதெனவும், இந்திய அரசு தான் முதல் குற்றவாளி என்றும், வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐ.நாவும் தமிழினப் படுகொலையை கூட்டு சேர்ந்து நடத்தியது என்றும் கூறினார்.திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசிகுமரன் பேசுகையில், ஐ.நா வை நாமெல்லாம் பிரச்சினைகளை தீர்த்துவைக்கக் கூடிய இடமாக பார்த்து வந்தோம். ஆனால் இப்போது ஐ.நாவே பிரச்சினைக்குரிய இடமாக நிற்கிறது. நாம் அனைவரும் நமக்கான தீர்வை நோக்கிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் பேசியபோது "கருணாநிதி மட்டும் தான் மிகப்பெரிய துரோகி என்று நினைத்தோம், ஆனால் இப்போது தான் தெரிகிறது பான் கி மூனும் மிகப்பெரிய துரோகி என்று.மேலும் இறுதிக்கட்ட நாட்களில் நடந்த போரின் போது இரவு ஏழு மணிக்கு சிங்கள அரசால் தொடங்கிய வான்வழி தாக்குதல் விடியற்காலை வரை தொடர்ந்தது. விடிந்த பின்பு அங்குள்ள நிலையினை பார்த்த பல பெண்கள் மயங்கி விழுந்தனர். காரணம் இரவு முழுவதும் நடந்த தாக்குதல்களால் குண்டடிப்பட்டு குழந்தைகளில் உடல் உறுப்புகள் சிதறி மரங்களின் கிளைகளில் தொங்கியது. இந்த நிகழ்வுகள் ஐ.நா அதிகாரிகளுக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் ஐ.நா அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார் .தமிழ்த்தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் உரையாற்றுகையில், ஐ.நா வின் கட்டமைப்பு மற்றும் வரையறைகள் பற்றியும், பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தேசிய இனங்களின் வரலாறுகள் பற்றியும், ஐ.நா வை எதிர்த்து போராடும் போதுதான் நம் கோரிக்கைகள் முன்நகர்த்தப்படும் என்றும் பேசினார். காலத்திற்கேற்ப ஈழத்திற்கான போராட்ட முறைகள் மாற வேண்டும் என்று கூறினார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தீரன் பேசுகையில், தமிழீழ விடுதலையின் அவசியம் குறித்தும், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம் என்றும், இந்தியா முழுதும் உள்ள தலைவர்களுக்கு ஈழத்தை பற்றிய செய்திகளை கொண்டு சேர்ப்பதும் முக்கியம் என்றும் கூறினார். ஐ.நா சபைக்கு சென்று திமுக மனு கொடுத்தது ஏமாற்று வேலை என்றும் கூறினார்.தமிழ்த்தேச பொதுவுடைமைக் கட்சியின் அருணபாரதி பேசுகையில்,இந்திய அரசு ஒரு நாளும் தமிழர்களுக்காக உதவ முன்வராது. ஆகவே விடுதலைக்காகப் போராடும் அனைத்து தேசிய இன்ங்களும் ஒன்று சேர்ந்து நான்காம் உலக நாடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார். தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் அதியமான் பேசுகையில், தமிழீழத்திற்கு ஆதரவாக இருக்கும் திமுக, அதிமுக தவிர்த்த அனைத்து ஆதரவு சக்திகளும் இணைத்து ஒரு அணியை அமைத்து தமிழீழத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில், ஐ.நாவினுடைய இனப்படுகொலை தடுப்பு அமைப்பு செயல்படவில்லை. மனித உரிமை அமைப்புகள் இயங்கவில்லை. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் ஏமாற்றுவேலைகள் மட்டுமே நடந்தன. சர்வதேச விதிகள் எவற்றையும் ஐ.நா இலங்கையில் பின்பற்றவில்லை. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து வெளியிடாமல் ஐ.நா மறைத்து வந்துள்ளது. தொடர்ந்து தமிழர்களுக்கான நீதியை இலங்கை அரசுடன் சேர்ந்து ஐ.நா அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஐ.நா வளாகத்தில் நீதி கேட்டு தீக்குளித்த முருகதாசன் நினைவு நாளையொட்டி பிப்ரவரி 13 ம் தேதி ஐ.நாவை முற்றுகையிடும் மிகப் பெரிய போராட்ட்த்தை உலகம் முழுமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும் என்று கூறினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், அனைத்து தமிழ் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு ஐ.நா அதிகாரிகளை விசாரிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பு நட்த்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.இலங்கை இனப்படுகொலை பற்றிய புகைப்பட கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த்து

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!
இலங்கை கடற்படை அட்டூழியம்! ஒரு மாதத்தில் 5வது சம்பவம்

                        இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்! இலங்கை கடற்படை அட்டூழியம்! ஒரு மாதத்தில் 5வது சம்பவம்


தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபடியே வந்து சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
அவர்களிடம் இருந்த மீன்பிடி சாதனங்கள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்களையும் பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து 650க்கும் அதிகமான விசைப்படகுகளில் நேற்று அதிகாலை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ஒரு சிலர் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இரவு 8 மணியளவில், இரு பெரிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்த அவர்கள், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.

படகுகளில் இருந்த மீனவர்களை பிளாஸ்டிக் பைப், பலகைகளால் சரமாரியாக தாக்கினர். கற்களால் படகுகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

படகில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போட் பலகைகள் மற்றும் மீன் பிடி வலைகளை வெட்டி நாசப்படுத்தி, கடலில் தூக்கி வீசினர். ‘

இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டுத் தள்ளிவிடுவோம் என எச்சரித்து விரட்டியடித்தனர்.

இதனால், மிகக்குறைந்த மீன்பாடுடன் மீனவர்கள் இன்றுகாலை கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர்கள் சகாயம், ராஜ் ஆகியோரின் படகுகள் உள்பட இருபதுக்கும் அதிகமான படகுகள் சேதமடைந்தன. இந்தப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டன.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது இராமேஸ்வரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் குறித்து மீனவர்கள் மாரிநம்பு (30), ஆரோக்கியம் (29), சந்தியா (29) கூறுகையில்,

‘‘இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பெரிய கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை சுற்றிவளைத்து தாக்கி காயப்படுத்தினர். வலைகளை வெட்டி நாசப்படுத்தியதுடன், எங்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், செல்போன் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.

இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டு விடுவோம் என மிரட்டி விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதால், இனிவரும் நாட்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது என்றனர்.

ஒரு மாதத்தில் 5வது சம்பவம்

பாக் ஜலசந்தி கடற்பகுதியில், இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது சம்பவம்.

இந்த தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

விசைப்படகு மீனவர்களுக்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

முப்பதுக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தத் தாக்குதல்களில், இலங்கை கடற்படையினர் இருமுறை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியிருக்கின்றனர்.
தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம்...
மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபடியே வந்து சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
அவர்களிடம் இருந்த மீன்பிடி சாதனங்கள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்களையும் பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து 650க்கும் அதிகமான விசைப்படகுகளில் நேற்று அதிகாலை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ஒரு சிலர் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இரவு 8 மணியளவில், இரு பெரிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்த அவர்கள், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.

படகுகளில் இருந்த மீனவர்களை பிளாஸ்டிக் பைப், பலகைகளால் சரமாரியாக தாக்கினர். கற்களால் படகுகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

படகில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போட் பலகைகள் மற்றும் மீன் பிடி வலைகளை வெட்டி நாசப்படுத்தி, கடலில் தூக்கி வீசினர். ‘

இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டுத் தள்ளிவிடுவோம் என எச்சரித்து விரட்டியடித்தனர்.

இதனால், மிகக்குறைந்த மீன்பாடுடன் மீனவர்கள் இன்றுகாலை கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர்கள் சகாயம், ராஜ் ஆகியோரின் படகுகள் உள்பட இருபதுக்கும் அதிகமான படகுகள் சேதமடைந்தன. இந்தப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டன.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது இராமேஸ்வரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் குறித்து மீனவர்கள் மாரிநம்பு (30), ஆரோக்கியம் (29), சந்தியா (29) கூறுகையில்,

‘‘இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பெரிய கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை சுற்றிவளைத்து தாக்கி காயப்படுத்தினர். வலைகளை வெட்டி நாசப்படுத்தியதுடன், எங்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், செல்போன் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.

இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டு விடுவோம் என மிரட்டி விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதால், இனிவரும் நாட்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது என்றனர்.

ஒரு மாதத்தில் 5வது சம்பவம்

பாக் ஜலசந்தி கடற்பகுதியில், இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது சம்பவம்.

இந்த தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

விசைப்படகு மீனவர்களுக்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

முப்பதுக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தத் தாக்குதல்களில், இலங்கை கடற்படையினர் இருமுறை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியிருக்கின்றனர்.

'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு' திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள்.


                                                                                                                     
                                                                                                      ஈழ மகான் தமிழ்
                  
                 

'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு' திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள்.


சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த்
தேசியப் பணியினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் திறம்படச் செய்து வந்த
...
திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களை நாம் இழந்து விட்டோம்.

திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மிக நீண்டகாலமாக அவுஸ்ரேலியாவில்
வாழ்ந்துவந்த போதிலும் தனது தாய்மண் மீதான தீராப்பற்றின் காரணமாக 2002ஆம் ஆண்டில்
இருந்து தமிழீழ விடுதலைப் பயணத்தில் தானும் சேர்ந்து கொண்டு உறுதி தளராத ஒரு தேசப்
பணியாளனாகத் திகழ்ந்தார்.

கிருஸ்ணமூர்த்தி ஆசிரியர் விடுதலைப் போராட்டம் பற்றியும் அதற்கான அவசியம் பற்றியும்
நன்குணர்ந்தவர். தாயகத்தில் இளந்தலைமுறையினரை அறிவுமிக்க நாட்டின் சிற்பிகளாக உருவாக்குமாறு தேசம் அவரிடம் கேட்டதற்கமைய அப்பணியினை ஏற்றுப் புதிய அணுகுமுறையுடன் ஆங்கிலமும் கணிதமும் கற்றுக்கொடுத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியரும் நல்ல விளையாட்டு வீரனும் ஆவார். அதனால் வெறும் வகுப்பறைப் போதனை முறைகளை மட்டும் பயன்படுத்துவதோடு நின்றுவிடாது விளையாட்டுத்திடலிலும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் கற்றுக் கொடுத்தார். அத்தோடு தேசத்திற்குத் தேவை ஏற்படும் போதெல்லாம் புலம்பெயர் விடுதலைத் தளத்திலும் தனக்கான அரசியற் கடமைகளை ஒரு கணமும் பின்னிற்காது முழுமூச்சுடன் செய்துவந்தார்.

கொடிய நோயினால் உடல் தளர்ந்து கண் மூடும் வேளையிலும் தமிழீழக் கனவுடனேயே அவர்
எம்மை விட்டுச்சென்றுள்ளார். திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவு தேசியப்
பணியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவாற் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும்
அவுஸ்திரேலியா வாழ் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்பேசும் மக்களோடு இணைந்து
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்த்தேசியப் பணியில் அயராது உழைத்து வந்த திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி
அவர்களுக்கு 'நாட்டுப்பற்றாளர்' என மதிப்பளிப்பதில் நாம் பெருமைகொள்கின்றோம்.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'


இலங்கையின் போர்க்குற்றத்தை உலகம் புறக்கணிப்பது ஏன்?!– கனேடிய எழுத்தாளர் எலிஸபெத் ஹக்

                     
 
இலங்கையின் போர்க்குற்றத்தை உலகம் புறக்கணிப்பது ஏன்?!– கனேடிய எழுத்தாளர் எலிஸபெத் ஹக் கேள்வி


இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை. இவ்வாறு கனடிய எழுத்தாளர் எலிஸபெத் ஹக் (Elizabeth Haq) தனது மன ஆதங்கத்தை கனேடிய நஷனல் போஸ்ட் ஊடகத்தில் பதிவு செய்தள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகள் ...
என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது உண்மையில் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது.

நிச்சயமாக, இது இந்த யுத்தமானது அண்மைக் காலங்களில் உலகம் சாட்சியாகவுள்ள மிகப் பயங்கரமான குருதி தோய்ந்த ஒரு யுத்தமாக காணப்படுகிறது. ஆனால் சிறிலங்காவுக்கு வெளியிலுள்ள எவரும் இது தொடர்பில் தமது கவனத்தைச் செலுத்தவில்லை.

இரு தரப்புகளுக்குமிடையில் ஏற்பட்ட இந்த யுத்தம் தொடரப்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் அதாவது 1980களில் விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டில் தீவிரம் பெற்ற இந்த யுத்தத்தின் விளைவாக மிகப் பெரிய இனப்படுகொலை ஒன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் ஐக்கிய நாடுகள் சபை இதில் எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை. அண்மையில் ஐ.நா வெளியிட்ட இதன் உள்ளக அறிக்கையில், ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கையில் மோதல் இடம்பெற்ற வேளையில் ஐ.நா அங்கு செயற்படாதது மிகப் பெரிய தவறு என சுட்டிக்காட்டியிருந்தார்.

பி.பி.சி ஊடக சேவையின் முன்னாள் செய்தியாளரான பிரான்செஸ் ஹரிசன் அண்மையில் தான் எழுதி வெளியிட்ட ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற நூலில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மிக விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இந்த யுத்தத்திலிருந்து உயிர் மீண்டவர்களின் மனதை உருக்கும் உண்மைச் சம்பவங்கள் ‘ஐக்கிய நாடுகள் சபை கவனிக்கத் தவறிய யுத்தம்’ என்ற உபதலைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

9/11 ற்குப் பின்னான உலகில் இலங்கை அரசாங்கமானது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் புலிகளை அழிப்பதில் தீவிரம் காட்டியதுடன், புலிகளை இலகுவில் அழிப்பதற்கான கருவியாக பயங்கரவாதத்தை தனது கையில் எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் இது மேலும் இலங்கையிலுள்ள சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஆழமான கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஹரிசன் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யுத்தத்தை முன்னெடுப்பதில் இலங்கை இராணுவம், ஐ.நா உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, சீனா, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவியையும் பெற்றுக்கொண்டது. 2008 காலப்பகுதியில் இலங்கைக்கு சீனா அதிக ஆயுதங்களை விற்பனை செய்ததாக ஹரிசன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மிக ஒடுங்கிய சதுப்பு நிலப்பகுதியில் அகப்பட்டுத் தவித்த மக்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இறுதிக் கட்டத் தாக்குதலில் 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது 70,000 வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற ஹரிசனின் நூலில் யுத்தத்திலிருந்து மீண்ட 10 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதகுரு, அருட்சகோதரி, புலி உறுப்பினர் ஒருவரின் தாய் போன்ற உப தலைப்புக்களில் இந்தக் கதைகளை பதிவு செய்துள்ள ஹரிசன் இதன் மூலம் இவர்களின் அனுபவங்களை மேலும் வலிதாக்கியுள்ளார்.

இந்தக் கதைகள் உண்மையானவையாகவும், கண்டிப்பானதாகவும் உள்ளபோதிலும், வாசிக்கின்றவர்களின் மனங்களை உருவகவைக்கின்றன. குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டமை, அரசாங்க படைத்தரப்பின் சோதனைச் சாவடிகளில் பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாதுகாப்பு வலயங்களில் அமைக்கப்பட்ட வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றை ஹரிசன் தனது நூலில் ஆதரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.


இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது அதன் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பில் கல்விமான்களும் சட்டவாளர்களும் ஆழமாக விவாதிக்க வேண்டும் என அண்மையில் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் ஒரு சமூகத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக அழிப்பது இனப்படுகொலையா என என்னிடம் வினவினால் அதற்கு நான் ஆம் எனப் பதிலளிப்பேன்” என றியேர்சன் பல்கலைக்கழகத்தில் கோட்பாடு மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியர் அபர்ணா சுந்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடிப்படை மக்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இது இங்கு கேள்விக்குறியாக உள்ளது. இங்கு தேர்தல்கள் நீதியற்ற முறையில் நடாத்தப்படுகின்றன. அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு இங்கு காணப்படவில்லை. இங்கு அடக்குமுறை நிலவுகிறது” எனவும் சுந்தர் தெரிவித்துள்ளார்.

உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை.

இலங்கையில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளாது புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் எச்சரிக்கை விடுத்திருந்தமை இலங்கை தொடர்பில் உலகம் தனது கவனத்தை திருப்பியதற்கான ஆரம்பமாக உள்ளது.

இதேபோன்று இலங்கையில் இடம்பெற்ற குருதி தோய்ந்த யுத்தம் தொடர்பாக ஏனைய உலக நாடுகள் கேள்வி கேட்க முன்வரவேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.