எனது பிள்ளையும்
அவனது நன்பர்களுமாய் சேர்ந்து
நட்டு வைத்த விதைகளை
முளைவிடும் முன்னமே
இவர்கள் கிளறியெறிந்து விட்டார்கள்.
பூக்களெதுவும் பூக்காதபடி
எனது பிள்ளையின் காணி எரியூட்டப்பட்டிருக்கிறது.
வெளிச்சங்களெதையும் எரியவிட முடியாதபடி
அங்கு பச்சை இருட்டுக்கள் காவலிருக்கின்றன.
எந்த உறுதிகளையும்
கைகளில் வைத்திருக்காதவர்கள்
எனது பிள்ளையின் காணியை பார்க்கவிடாமல்
என்னை தடுக்கிறார்கள்.
அங்கே
எனது பிள்ளையும் அவனது நன்பர்களும்
பசியுடன் படுத்திருக்கிறார்கள்.
அவர்களுக்காய்
குடிப்பதற்கு நீர் கொண்டு போகவும்
சாப்பிடுவதற்கு பலகாரம் கொண்டு போகவும்
இம்முறையும் முடியாமல் போயிற்று
இந்த முதுமை விழுந்த தாயாலே.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது அப்பாவி மக்களைக் கொன்று குவித்து மனித உரிமையை ராணுவம் மீறியதாக ஐ.நா. குழு குற்றம் சுமத்தியது. இதுபற்றி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனுக்குப் பரிந்துரை செய்துள்ளது என்றாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அறிவித்துள்ளது
ஹிட்லரைக் கொடியவனாகக் கூறும் சர்வதேச நாடுகள் அவனைப்போலவே இனப்படுகொலை புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ் மக்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவது ஏன்?
சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்தாலும், ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மனித உரிமை என்ன ஆவது?ஐ.நா.வின் மீதுள்ள உலக மக்களின் நம்பிக்கை தகர்ந்து போகலாமா
.
.
.
.
இதற்கு இந்திய நாடும் விதிவிலக்கல்ல
No comments:
Post a Comment