Like me

Tuesday, January 3, 2012

அமைதி, சமாதானம், அன்பு

பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் அரிய சாதனைகள் செய்து உலக அளவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார்கள். அந்த வரிசையில் அம்பத்தூர் அன்னை வைலட் கலைக்கல்லூரியும், சேத்துப்பட்டு அரிமா சங்கமும் இணைந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் உலகிலேயே நீளமான பூ மாலை கோர்க்க முடிவு செய்தனர்.
இந்த சாதனை நிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. தொழில் அதிபர் என்.ஆர். தனபாலன், தலைமை தாங்கினார். மொத்தம் 2 டன் கேந்தி பூக்கள் கொண்டு வரப்பட்டது. 80 பேர் அதனை மாலையாக கோர்த்தனர்.

பின்னர் நேரு ஸ்டேடியத்தை சுற்றிலும் 6 சுற்றுகளாக பூ மாலையை வைத்திருந்தனர். காலை 9 மணிக்கு பூ மாலை கட்டும் பணி தொடங்கியது. 3 மணி நேரத்தில் கட்டி முடித்தனர். உலக அளவில் இதற்கு முன்பு அமெரிக்காவில் 3 கி.மீ. நீள பூ மாலை கட்டபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் மத தலைவர்கள் எஸ்ரா சற்குணம், மகாநமோ தியோரா, மாதாஜி யத்தீஸ்வரி, குமாரபிரியா, ஜியானி பிரதிபால்சிங், எஸ்.எம். இதயதுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி என்.ஆர். தனபாலன் கூறும்போது, உலகம் முழுவதும் குண்டுவெடிப்புகள், கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களால் ரத்த பூமி ஆகி கொண்டு இருக்கிறது. இதை தடுத்து அமைதி, சமாதானம், அன்பு ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment