
ஒரு பேராசிரியர் உலகெங்கும் தான் பணி நிமித்தம் செல்லும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளில் சிங்கள மாணவர்கள் சிறீலங்கா தேசிய கொடியையும் தமிழ் மாணவர்கள் புலிக்கொடியையும் ஏற்றுவதை பல தடவை அவதானித்திருக்கிறேன் என்றார். சில பல்கலைக்கழக மட்டங்களில் இதை தடுப்பதற்கு முன்பு சில முயற்சிகள் எடுக்கப்படடதாகவும் தமிழ் மாணவர்களின் தொடர் போராட்டத்தினால் அது தவிhக்கப்பட்டுவ...ிட்டதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து "இங்கு மிகப்பெரிய உண்மை ஒன்று மறைந்துள்ளதை பலர் கவனிக்க தவறிவிட்டனர். அதாவது இதனூடாக இலங்கையில் இரு தேசங்கள் என்ற நிலையை உலக பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்துள்ளதுதான் அது. இது ஒரு முக்கியமான விடயம். அடிப்படையில் இலங்கைத்தீவு இரண்டாக உடைந்துவிட்டதையே இது சுட்டுகிறது. இனி எந்த காரணத்தைக் கொண்டும் அதை ஒட்ட முடியாது. தமிழ் மாணவர்கள் இனி சிறீலங்கா கொடியை ஏற்றுவதை கற்பனையில்கூட நினைத்து பார்க்க முடியாது. தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் நீங்கள் வேறு நாங்கள் வேறு என்ற உளவியலால் பின்னப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் கொள்கையளவில் தமிழீழம் உருவாகிவிட்டது. அங்கீகாரம் ஒன்றுதான் மிகுதியாக இருக்கிறது. இரத்தகக்களரியை தவிர்க்க அதை அங்கீகரிப்பதுதான் ஒரே வழி. அது விரைவில் சாத்தியப்படும் என்றே நினைக்கிறேன்" என்றார்.
No comments:
Post a Comment