Like me

Thursday, February 23, 2012

காதலிப்பது

                                      

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மனித வாழ்வின் பேரத்தியாயங்களில் ஒன்று. இந்தக்
காலப்பகுதியில் ஏற்படும் தவிப்புக்களும் தடுமாற்றங்களும் ஒரு மனித உயிரியின் வாழ்வின்
கடைசி அத்தியாயம் வரை ஊடுருவிச்சென்று தாக்கும் வல்லமைமிக்கவையாகவிருக்கின்றன.
மனித வாழ்வின் மூலமே - ஆதாரமே இதுதானோ என்று சந்தேகம் கொள்ளுமளவிற்கு
பெரும்பாலானவர்களின் வாழ்வைப் இது புரட்டிப்போட்டிருக்கிறது. காதல் தந்த வெற்றிகள்
... மட்டுமல்ல தோல்விகளும் அது தரும் வலிகளும் கூட அனுபவிப்பதற்குச் சுகமானவை. மனித
வாழ்வின் தவிர்க்க முடியாத விபத்தாக அது இருக்கிறது. அதுதான் இப்பூவுலகில் மொழிகள்
எல்லைகள் கடந்து படைப்பின் மையமாகவும் கலாசிருஸ்டிப்பின் மூலமாகவும் அது
இருக்கிறது

No comments:

Post a Comment