Like me

Saturday, February 18, 2012

"தாராசுரம்"

                                      

கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப் படிகள் "

இரண்டு நாட்களுக்கு முன் இசைத் தூண்களை பற்றி செய்தி வெளியிட்டிருந்தததற்கு தமிழகத்தில் "சப்தஸ்வரங்களை " எழுப்பும் கட்டிடக்கலையே இல்லை என ஒரு நண்பர் கருத்து கூறி இருந்தார் அவருக்காக, இந்த "தாராசுரம்" கோயிலில் உள்ள "இசைப் படிகள் " பற்றிய செய்தியை தருகிறேன்.இந்த கோயிலை கட்டியவர் " ராஜா ராஜா சோழன் மகன் ராஜேந்திர சோழன். கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழிகிய கோயில் வந்து விடும் " .ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும்
!!ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும் !!. இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது, அதனால் இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.
 


                                                                                              நன்றி Sasi Dharan



No comments:

Post a Comment