Like me

Sunday, March 4, 2012

முள்ளிய வாய்க்கால் படுகொலைகள்

                                                 
                                                   இருதயம் பலவினமனோர் பார்க்கவேண்டாம்







முல்லையில் இரத்தம் குடித்தாய்
எல்லையில் துக்கம் கொடுத்தாய்
தொல்லைகள் தேக்கம் அளித்தாய்
பிள்ளைகள் தூக்கம் கெடுத்தாய்
மனம் அழும் வாழ்க்கை தனிலே 
தினம் எழும் கோப அலைகள்
கனமான இதயம் கண்டேன்
விடியாத உதயம் கண்டேன்,
சிரசற்ற சிசுவைக்கண்டேன்
அசைவற்ற பசுவைக்கண்டேன்,
பொன்நகை கொடுத்து உணவு உண்டேன்
புண்னகை இழந்து மனம் வெந்தேன்,
தினம் வெடித்தது நூறு குண்டு,
துடித்தது நம் உறவு தேம்பி ,
சிரித்தது சிங்களம் அங்கே,
கொதித்தது நம் உணர்வு,
அதை அணைத்தது எம் குடும்ப எண்ணம்,
தினம் ஜெபித்தது இறைவன் நாமம்,
துதித்திடா நம் வீரக்கரங்கள்,
இறைவனும் இறந்திருப்பானோ என
இன்றென்னை எண்ண வைக்கும்
இத்தனை பிணக்குவியல்.

                             
Rathina Vel : தமிழனாக பிறந்ததை தவிர இந்த பிஞ்சு செய்த தவறு என்ன? மனம் வேதனை அடைவதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாதவர்கள் ஆகி விட்டோம்
                             
                                  







முத்து குளியல் குளிக்க வேண்டிய முள்ளி
இரத்தக் குளியல் குளித்து விட்டது
சொந்தங்கள் இழந்த நம்மவர்
ஒன்று கூடும் ஒரே நாள்
மே 18 ம் திகதி மாறாத 
இரத்த வடுவாக மாறியது
சிவந்த மண்ணாக மாறியது
அத்தனை உயிரின் மறைவில்
இறைவா நீ உலகில் இருக்கிறாயா?
என்பதே சந்தேகமே??
பால் குடிமறவா பச்சிளம்
பிள்ளையே உனக்கு என்ன தெரியும்
உன்னையுமல்லவா அந்த கொடூரனின்
பசி கொன்று தின்றது.

                              
                              
                                  
                              
                              
    
இறுதி கட்ட போரில் செல் விழுந்து இரு குழந்தைக்கு தாயான அப் பெண்மணிக்கு முழங்கால் அளவு கால் துண்டிக்க பட்டு செயற்கை (மரக்) கால் பொருத்தப்பட்டுள்ளது .


அவரது கணவர் செல் துகள் பட்டு வலது கண் பார்வையை இழந்து விட்டார் .

சிறு குழந்தைகள் உடலிலும் போரின் காயத் தழும்புகள். வறுமையின் கொடுமை அவர்களது வாழ்க்கையில் தெரிகிறது .

போரினும் கொடிய நரக வாழ்க்கையை ஓர் ஆண்டு முகாம் வாழ்க்கையில் அனுபவித்து முடித்து விட்டனர் .

அந் நிலையிலும் அண்ணன் இருக்கிறாரா அண்ணா ? உறுதியாக தெரியவில்லை என்று சொல்லி முடிப்பதற்குள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் .அண்ணன் கண்டிப்பாக இருப்பார்
எங்கட கடவுள் அவர். எங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

ஒரு குடும்பமே போரின் கோர வடுக்களை தாங்கி நிற்கிறது .அந்த வருத்தம் துளிக் கூட அவர்கள் முகத்தில் தெரியவில்லை ஆனால் அவர்கள் மனமோ தலைவரை நினைத்து ஏங்கி தவிக்கிறது .

இறை நம்பிக்கை உள்ளவர்கள் துன்பம் வரும் பொது கல்லாலான கடவுளை நம்புகிறார்கள் .எங்கள் மக்கள் உயிரோடு உள்ள மனித கடவுளை நம்பி வாழ்கிறார்கள் .

       ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பூத்த அற்புத மலர் எங்கள் தேசியத் தலைவர் . எங்கள் தலைவரின் நாட்டில் வாழும் வாய்ப்பை தமிழர் நாட்டில் வஞ்சகத் தலைவர்கள் வாழும் எங்களுக்கு வாய்க்க வில்லைலையே தலைவா .

                              
                              
                              
                              
                              
                                     







         சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் அரசாங்கம் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இன்னமும் உத்தியோகபூர்வமாக தமக்கு கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய ரீதியில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வினையும் சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பிலான கருத்துக்களை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



                         
                         
                        









சிறீலங்கா மீதான விசாரணை நடத்த கனடா வலியுறுத்தவேண்டும்-ராதிகா சிற்சபேசன்
ஆக 4, 2011
Font size:
சிறீலங்காவிற்கு எதிராக போர்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதீக சிற்சபேசன் தெரிவித்துள்ளார்
போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பை கனடா வலியுறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தரப்பினரும் மக்களுக்கு இழைத்த அநீதிகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படக் கூடிய வகையில் பக்கச்சார்பற்றதும் நீதியானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு முனைப்பு காட்ட வேண்டும் எனவும் அதற்கு கனடா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கும் ஆதரவளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்






                                                                             - நன்றி  சிட்டு குருவி(FACE BOOK)



No comments:

Post a Comment