Like me

Sunday, March 4, 2012

அணுஉலை

                            


           கூடங்குளம் அணு உலைக்காக தமிழர்கள் போராடினால் அவர்கள் மதத்தின் பெயரால் கிருத்துவர் என இனம் காணப்பட்டு அவர்கள் அமெரிக்காவின் உளவாளிகள் என்று குற்றம் சாட்டப் படுகிறார்கள் .

இசுலாமியர்கள் போராடினால் அவர்கள் பாகிஸ்தானிடம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள். குற்றம் சாட்டப் படுகிறார்கள் .

தமிழர்கள் போராடினால் தேச துரோகிகள் குற்றம் சாட்டப் படுகிறார்கள் .ஒட்டு மொத்த தமிழர்களையும் உளவாளிகள், தீவிவாதிகள், தேசத் துரோகிகள் என கூறும் இந்தியா, இங்கு அணு உலையை துவங்க துடிப்பது ஏன்?

ஒன்னரை லட்சம் மக்களை கொல்லும் போதும் அமைதியாக இருந்தார்கள் . முல்லை பெரியாறு அணையை உடைப்பேன் என்றாலும் உண்ணா நிலை அறப்போர், என்று தங்களை வருத்தி கொண்டு போராடுகிறார்கள்.

       சிங்களவர் களிடமிருந்து உங்களை காப்பாற்ற முடியாது நீங்கள் தமிழ் மீனவர்கள் என்று கூறினாலும் இல்லை நாங்கள் இந்தியர்கள் என்கிறார்கள். நீங்கள் இந்தியர் இல்லை தமிழர் என்றாலும் இல்லை நாங்கள் திராவிடர்கள் என்கிறார்கள்.

இவர்களை போல முட்டாள்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்பதால் இங்கே அணு உலையை துவக்க இருக்கிறார்களோ ??

No comments:

Post a Comment