Like me

Saturday, March 24, 2012

வேற்றுக்கிரக வாசிகள்?

                          

1947 இல் பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகள்? - FBI வெளியிட்டுள்ள புதிய படங்கள் !
seithi: Monday, 11 April 2011 18:00


1947 இல் ஆம் ஆண்டு பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகளின் (Aliens) புகைப்படத்தை (?) FBI தற்போது வெளியிட்டுள்ளது. 1000 ற்கும் மேற்பட்ட தனது பழைய கோப்புக்களை, ஆன்லைனில் நேரடியாக பதிவு செய்யும் நடவடிக்கையின் போதே, FBI இத்தகவலை வெளியிட்டுள்ளது. நியூ மெக்ஸிகோ நகரில் மூன்று வேற்றுகிரக வாசிகளின் சடலங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், மிகவும் இரகசியமான முறையில், ஆராயப்பட்ட இச்சடலங்கள் தொடர்பில் வெளியில் தகவல்களை வெளியில் கூறக்கூடாது, என FBI அப்போது கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஸ்பெஷல் ஏஜெண்டான Guy Hottel எனும் நபர், 1950ம் ஆண்டு வாஷிங்டனிலிருந்து, FBI டைரக்டருக்கு அனுப்பிய குறிப்பு ஒன்றில், இவ்வேற்றுக்கிரக வாசிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளார். அவருடைய குறிப்பு மேலும் தெரிவிக்கையில் மூன்று வேற்றுக்கிரக வாசிகளின் சடலங்கள் நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூன்றும் மனித உடலங்களை ஒத்ததாக காணப்பட்டதுடன், 3 அடி உயரம் கொண்டவையாக இவை இருந்துள்ளன. உலோகத்திலான ஆடை அணிந்துள்ளன. ஆடை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
            
                       
             அமெரிக்க இராணுவத்தினரின் விமானப்படையினர் இதனை கண்டுபிடித்துள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் FBI யிடம் இதற்கான விசாரணை வந்ததை அடுத்து, இவ்விடயம் வெளியில் தெரியாமல் போயுள்ளது. பத்திரிகைகளில் செய்திகள் வந்த போதும் யாரும் நம்பவில்லை. இந்நிலையில், குறித்த வேற்றுக்கிரக வாசிகளின் சடலங்களை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யும் போது படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்களையும் FBI வெளியிட்டுள்ளது.
                     
                               
 

No comments:

Post a Comment