Like me

Sunday, April 22, 2012

இந்திய இனவெறி

                 
தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் இந்திப்படத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்போம்.

அடிமைப்பட்டு கிடந்த தமிழினத்தை கேட்கநாதியற்று கிடந்த போது சிங்கள இனவெறி அரசபடைகளும் காடையர்களும் கொன்று குவித்து சொத்துக்களை சூறையாடிய கொலைவெறியாட்டம் போட்டு நிற்கையில் அந்த கொலைவெறிப் பேய்களிடம் இருந்து தமிழினத்தை மீட்டெடுக்கும் உண்ணத நோக்கத்திற்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
முகவர் (ஏஜென்ட்) விநோத் என்ற உளவுப்படம் இந்தியில் தயாராகியுள்ளது. இதில் முக்கிய வேடமேற்று றோ உளவுத்துறையின் உயரதிகாரியாக இந்தி நடிகர் சயிப் அலி கான் நடித்துள்ளார்.

கடைசியாக எல்லாப் புலிகளும் செத்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன். நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்....? எனக் கூறி புலிவீரனாக சித்தரித்துள்ள நபரை இந்திய உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் சயிப் அலி கான் விரட்டிவிரட்டி அடிப்பதாக ஒருகாட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவிற்கு எதிராக பாரிய சதிநடவடிக்கையில் புலிகள் ஈடுபடுவதை இந்திய உளவுத்துறை தடுப்பது போன்ற கதையினை அடிப்படையாக கொண்டே இந்த முகவர் வினோத் என்ற இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இந்திய பாதுகாப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலானவர்கள் என்பதை இந்திய மக்களின் மனங்களில் விதைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கும்.

அமெரிக்க உளவுப்படத்தில் ரசியாவைச் சேர்ந்தவர்களால் அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொள்ள முயற்சிக்கப்படும் பாரிய சதியை அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரியாக நடிப்பவர் முறியடித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவது போன்ற கதைகளே அடிப்படையாக இருக்கும். அவ்வாறே இந்தியாவிற்கு எதிரான சக்தியாக விடுதலைப்புலிகளை சித்ததிரிக்க முற்பட்டுள்ளார்கள்.

கண்டிப்பாக இதற்கு பின்னால் இந்திய உளவுத்துறையின் தூண்டுதல் இருக்கும்.

இதனை கண்டித்து இந்தப்படம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வெளியிடாதவாறு எதிர்ப்புக்களை காட்டவேண்டும். தமிழர்களே விழித்தெழுங்கள். தமிழனை சீண்டியவன் செத்தான் என்பதை நிரூபிப்போம்.

தமிழ் மக்களுக்கு எதிரான இந்த திரைப்படத்தை தடுப்பது தொடர்பாக அல்லது அதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்களை நீக்குவதற்கு ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்று தமிழக ஈழதேசம் குழுவினர் சட்ட நிபுணர்களை நாடியுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment