
இல்லாத இந்தியாவில் ஏழைகள் யாருமில்லை ?
சிற்றூரில் நாள் ஒன்றுக்கும் 22 ருபாய் கூலி பெற்றால் அவர்கள் ஏழைகள் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது .
நகரத்தில் நாள் ஒன்றுக்கு 29 ருபாய் கூலி பெற்றால் அவர்கள் ஏழைகள் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது .
இந்திய அரசு கணக்குப்படி இந்தியாவில் ஏழைகள் இல்லை .என்பது புலனாகிறது .
இந்தியாவில் ஒரு முறை சிறு நீர் கழிப்பதற்கு ஒரு முறைக்கு மூன்று ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது .
கழிவறை செல்வதற்கு ஒரு முறைக்கு ஐந்து ருபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது .
இந்தியாவில் கழிவறை இல்லாமல் 40 கோடி மக்கள் உள்ளனர் .இதுவும் இந்தியாவின் கணக்கெடுப்பு .
இங்குள்ள மக்கள் மலம் கழிப்பதற்கும், சிறு நீர் கழிப்பதற்கு மட்டுமே இவர்கள் சொன்ன தொகை போதாது .
கோடியில் புரளும் இவர்கள் ,கோடியில் கோடியை கொள்ளையடிக்கும் இவர்களுக்கு மக்களின் வறுமை எங்கே தெரிய போகிறது .
தெனாலி ராமன் கதைதான் நினைவிற்கு வருகிறது. தன்னிடம் எலுமிச்சை பழ அளவு தங்கம் இருக்கிறது என்றவுடன் அரசனிடம் இந்த நாட்டு மக்கள் எல்லோரும் வளமையாக வாழ்கிறார்கள் ஒவ்வொருவரிடமும் எலுமிச்சை பழ அளவு தங்கம் இருக்கிறது என்று கூறியது போல கொள்ளையடிக்கும் இந்த தெரு நாய்கள் கணக்கிட்டால் அப்படிதான் இருக்கும் .
இல்லாத இந்தியாவில் இந்தியத்தை தேடும் தமிழர்களே இனி மேலாவது உணருங்கள் இந்தியன் சொன்னால் கோவணம் கூட மிஞ்சாது .திராவிடம் என்று சொன்னால் அதுவும் மிஞ்சாது .தமிழர்கள் என்று சொல்லி பார் உன் வளமையை அறிந்து பார்
No comments:
Post a Comment