Like me

Saturday, April 28, 2012

பனை மரம்

                                   




                                                  






பனை மரத்தின் மருத்துவ குணங்கள்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடா அது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆறும்.

                                           

        

உலகளாவிய ரீதியில் எடுத்து பார்க்கின்றபோது மிக செழிப்பான மற்றும் தொடர்பான இலக்கிய பாரம்பரியம் இலங்கைக்கு சொந்தமாக இருப்பதை காணலாம். கிறிஸ்தவ காலகட்டம் ஆரம்பத்திற்கு முன்னிருந்தே இது தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை எமக்கு காணலாம். கிறிஸ்தவ ஆண்டுகளால் பார்க்கின்ற போது 20 நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக தாள இனத்தை சேர்ந்த (பனை மரம்) பனை ஓலைகள் மீது எழுத்தெழுதும் பாரம்பரியம் ஒரு கலையாக தமிழர் மத்தியில் நிலவியிருப்பதை காணலாம்.

பனை ஓலைகள் மீது எழுத்தெழுதும் கலையினுள் ஒருவிதமான பாரம்பரிய தொழில்நுட்ப விதிமுறை நிலவி இருந்துள்ளதோடு அவற்றில் கலாசார ரீதியிலான முக்கியத்துவமும் உள்ளடங்கி உள்ளது. புராதன சமுதாயத்தினுள் சமயம், கலாசாரம், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலை மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவையுடன் ஒன்றுசேர்ந்த ஒரு சாம்பிரதாயம் பனை ஓலை ஏடுகள் எழுதுவதில் உள்ளடங்கி இருந்தது. ஆகையால் இது சராசரி எழுத்து கலைக்கு அப்பாலான அகலமாக பரந்துப் போயுள்ள எழுத்து கலாசாரமாக எண்ணலாம். எமது பாட்டன் முப்பாட்டன்களால் ஆயிரக் கணக்கான ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்வுகள் மற்றும் அதனால் பெற்றுக்கொண்டுள்ள மனுவங்களை அடிப்படையாகக் கொண்ட விலை மதிக்க இயலாத மகத்தான ஒரு அறிவுத் தொகை இப் பனை ஓலை ஏடுகளில் உட்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பௌத்த சமயம், வரலாறு, பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம், விலங்குகள் மருத்துவ விஞ்ஞானம், பழைமை தொழில்நுட்பம், சோதிட விஞ்ஞானம், தாருகை விஞ்ஞனம், பூத விஞ்ஞானம், மொழிகள் மற்றும் இலக்கியம் போன்ற விடயங்கள் போன்றே சமூக மற்றும் பொருளாதார நிலைகள் பற்றிய தகவல் பெரும்பாலும் இப் பனை ஓலை ஏடுகளில் உள்ளடங்கி இருக்கின்றது.


                                              
நிகழ் காலத்தில் ஏற்பட்டிருக்கும் பலதரப்பட்ட சுற்றாடல் காரணங்களாலும் மனித செயற்படுகளின் காரணமாகவும் இப் பெருமதி வாய்ந்த ஆவணங்கள் சழிவுற்றும் அபாயத்திறகு முகங்கொண்டுள்ளது. இத்துடன் தெடர்பான பாரம்பரிய தொழில்நுட்பம் கலாசார ரீதியிலான செயற்பாடுகள் மிக நெறுங்கிய எதிர்காலத்தில் இவை முழுமையாகவே அழிந்துப் போகலாம். பழங் காலத்தில் எழுதப்பட்டுள்ள பல மில்லியன் கணக்கான ஏடுகளில் இருந்து இன்று எஞ்சி இருப்பது சுமார் ஒரு மில்லியன் ஏடுகள் மத்திரமே. புராதனக் காலத்தில் இருந்து பாதுகாத்து வரப்பட்ட பனை ஓலை ஏடுகளின் அதிகமானவற்றை தற்போது அரும் பொருட்கள் என்ற பெருமதியில் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுளள்தோடு அவைகள் அவர்களது சொத்துக்களாக மாற்றமடைந்துள்ளது. இதுப் போலவே ஈர கசிவு, கறையன் மற்றும் எலிகள் பேன்ற உயிரினங்களாலும் மனிதனின் கவனயீனத்தினால் இன்னுமொரு தொகை அழிந்துபோயுள்ளது. இந் நிலையின் கீழ் பனை ஓலை ஏடுகள் எழுதும் மற்றும் பாதுகாக்கும் பாரம்பரிய தொழில்நுட்பத்தை இக் காலத்து சமுதாயத்தினுள் பிரபலப்படுத்தல் கண்டிப்பான தேவையாக அமைந்துள்ளது. அதனை மூலங்கள் அடிப்படையில் பூரணப்படுத்தல் தொடர்பாக மீண்டும் கருத்தில் கொண்டு பார்க்க தேவையாக உள்ளது.

             

இவ் அமைப்பினுள் பனை ஓலை ஏடுகள் எழுதலுடன் இணைந்திருக்கும் தொழில்நுட்பத்தை நிகழ்கால சமுதாயத்திற்கு பெற்றுக் கொடுத்தல், புராதன பனை ஓலை ஏடுகளை பாதுகாத்தல் மற்றும் நிகழ் காலத்து தேசிய அபிவிருத்தி செயற்பாட்டினுள் அதனை பயன்படுத்தல் எனும் விடயங்கள் உட்பட்டதாக ஒரு கருத்திட்டத்தை ஏற்பாடு செய்வது இக் காலத்திற்கு மிக பொருத்தமானதாக அமையும்



ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்

பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
“தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்” என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பனையின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். ஆனால் நூறு ஆண்டுகள் வரை பனை உயிருடன் இருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரத்தில் நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும்.
பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். தினமும் காலை எழுந்தவுடன் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் குணமடையும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். கோடை காலத்தில் பதநீரும் நுங்கும் கலந்து பருக உடலுக்கு குளுமை தரும்.

ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்

பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும். தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது. பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும். பனம்பழம் மலத்தை இறுக்கிவிடும்.

உடலைத் தேற்றும் பனங்கிழங்கு

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும்.

பனை மரத்தின் பாகங்கள்

பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். பனங்காயில் பிரஷ், கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது.






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:23, 2 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி - தட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment