Like me

Friday, July 20, 2012

"உன் வேலைய பாரு

Karthik Balajee Laksham


"உன் வேலைய பாரு.உன் வேலைய மட்டும் பாரு.எதுக்கு அடுத்தவங்களுக்காக உன் நேரத்த வீணாக்குற".
-தினமும் ஒரு தடவையாவது எனக்கு என் நண்பர்கள் சொல்லும் அறிவுரை .
.கண்ணுக்கு முன் ஒருவர் நோயாளியிடம் லஞ்சம் வாங்குறார்.சும்மா வர முடியுமா ? சண்டை போடுவேன்.இல்லேன்னா புகார் கொடுப்பேன்…நானா தேடித் போய் எந்த பிரச்சனையிலயும் நுழைய மாட்டேன்.என் முன்னாடி அதுவா அடக்கும். தினம் ஒரு பிரச்சனை .பல முறை புகார் கொடுத்ததினால் எனது மேல் அதிகாரிகள் என்னை Trouble makerனு சொல்வார்களாம்

1) எங்க ஊரு நெய்வேலி டவுன்ஷிப் : வீடுகள் அனைத்தும் அரசாங்கத்துடையது. NLC பணியாளர் ஒரு வீட்டில் சில மாதம்,அல்லது சில வருடம் மட்டுமே தற்காலிகமா வசிக்கும் சூழ்நிலை. மா,பலா,தென்னை என எங்கள் வீட்டில் நிறைய மரங்கள்.எல்லாமே எங்களுக்கு முன் வசித்தவர் பயிர் செய்தது.இப்பொழுது அவர் கேரளாவில் வசிக்கிறார்.நானும் ஆசை ஆசையா ரெண்டு தென்னம் பிள்ளை நட்டு வெச்சிருக்கேன்.பாத்து பாத்து தண்ணி விட்டு,உரம் போட்டு ,அது வளரத பார்க்கவே சந்தோஷமா இருக்கும்.அடுத்த வருடம் தான் தென்னை காய்க்கும்.ஆனா அதற்க்குள் நாங்க வீட்டை காலி செய்தாக வேண்டும்.அப்பா பணி ஓய்வு பெறுகிறார்.நான் வளர்த்த தென்னை கொடுக்கும் தேங்காய்களை,வேற யாரோ ஒருவர் பறித்துக் கொள்வார்.ஒருவர் பயிர் செய்ததை அடுத்தவர் அனுபவிப்பார். ஆனாலும் எல்லாரும் அவரவர் வீட்டில் மாங்கன்று,தென்னம் பிள்ளை நட்டுக் கொண்டே இருப்பர்.மரம், காடு பராமரிப்பதில் (Afforestation) எங்க ஊர் ஆசிய அளவில் பல விருதுகள் வாங்கி உள்ளது .பழம் காய்கிறதோ இல்லையோ ,நாம அதை அனுபவிக்க முடியுதோ இல்லையோ - நாம செய்ய வேண்டியத அனுபவிச்சு செஞ்சிடனும். எங்க ஊர் சொல்லிக் கொடுத்த பாடம்.

2) நேற்று(18/7/12) நடந்த சம்பவம் :"எனக்கு மந்திரிய தெரியும். எனக்கு தான் முதல்ல சிகிச்சை செய்யனும்" னு ஒருவர் இருதய சிகிச்சை மருத்துவரிடம் சண்டை போட்டுள்ளார். "வரிசையில் வாங்க"னு சொன்னதுக்கு, அந்த நோயாளியும்,கூட வந்தவங்களும் மருத்துவரை ரத்தக்காயம் ஏற்ப்படும் அளவிற்கு பலமா அடித்து விட்டு, "பையில துப்பாக்கி.இருக்கு சுட்டுடுவேன்"னு மிரட்டியுள்ளார்..காவலாளிகள் யாரும் உதவிக்கு வரவில்லை.இது முதல் முறை இல்லை.பெண் மருத்துவர்களிடம் வம்பு செய்வது,குடித்து விட்டு மற்றவர்களை அடிப்பதுனு நிறைய சம்பவங்கள். பல வருடங்களா நோயாளிகளுக்கும் பல சிரமங்கள்.பல முறை புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை .இதுக்கு முடிவு கட்டணும்.நாளை OPD பணிக்கு செல்வதில்லை.அவசர சிகிச்சை,அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெரும் னு இரவு 12 மணி அளவில் முடிவெடுக்கப்பட்டது..
( நான் AIIMS மருத்துவர் சங்க (RDA ) தேர்தலில் போட்டியிட்டு , மருத்துவர்களுக்கு பிரதிநிதியாக உள்ளேன்.)

3) நாளை (19/7/12) எனக்கு ஒரு முக்கியமான Presentation (Power point மூலம் வகுப்பு எடுக்க வேண்டும் ). தலைப்பு ? இந்தியா தென் ஆப்பிரிக்கா உகாண்டா - மூன்று நாடுகளில் செய்யப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சி-Cost Effectiveness analysis. நாட்டில் ஒரு சுகாதார திட்டம் ஆரம்பிக்கும் முன், 'திட்டம் உபயோகமா இருக்குமா ?செலவு செய்யுற காசுக்கு பலன் கொடுக்குமா?' என்பதை ஆராயும் கட்டுரை .மருத்துவர்களுக்கு இந்த தலைப்பு (health Economics) புதியது..தலை சுற்றும்.ஒன்றுமே புரியாது.'"மக்களுக்கு உண்மை தெரிவிக்கணும்னா இதை படிச்சே ஆகணும்.எனக்கு இந்த தலைப்பு தான் வேணும்' னு வீரவசனம் பேசி ,பிடிவாதமா நானே தேர்ந்தெடுத்த தலைப்பு.படிக்க ஆரம்பித்தேன் .ஒண்ணுமே புரியல. ராட்டினத்துல பத்து சுத்து சுத்தி கீழ இறங்கினதும் நம்ம தலையும் சுத்தும் பாருங்க,அது மாதிரி சுத்துச்சு என் தலை.இத அடுத்தவங்களுக்கு வேற சொல்லிக் கொடுக்கணும்…எனக்கு சங்கு நிச்சயம் னு முடிவு பண்ணிட்டேன்..15 நாட்கள் தயார் பண்ணினேன்.நாளை தான் அந்த நாள் .Judgement Day.

நாளைக்கு வேலை நிறுத்தம்.
வேலை நிறுத்தம் இல்லை என்றால் முக்கியமான Presentation.
எது முக்கியம் ? என்ன செய்ய ?
நண்பர்கள் எப்பொழுதும் போல சொன்னது : "உன் வேலைய மட்டும் பாரு.உனக்கு முக்கியமான வகுப்பு.பெரிய தலை எல்லாரும் வருவாங்க..சொதப்பிடாத..பிரச்சனை ஆகிடும். வெளிய எங்கயும் போகாம,ஒழுங்கா படிக்குற வேலைய மட்டும் பாரு".மனசு கேக்கல
இரவு ,வேலை நிறுத்தத்தை தெரியபடுத்த விடுதியை சுற்றினோம். சாப்பிட கூட மறந்துவிட்டிருந்தேன்.தூங்காமல் presentation வேலையை செய்து முடித்தேன் .

இன்று(19/7/12) காலை பேராசிரியருக்கு தொலைபேசி மூலம் " வேலை நிறுத்தம்.Presentation செய்ய முடியாது சார் "னு தெரியப்படுத்தினேன்.IAS ஆபீசருடன் பேச்சுவார்த்தைக்கு சென்று விட்டேன்.பெரும்பாலான கோரிக்கைகள் நோயாளிகளின் நன்மைக்காகவே தான்.நோயாளிகளுக்காக நானும் சில கருத்துகளை தெரிவிச்சேன் .
யாரும் எதிர்பாராத வகையில் மதியம் 2 மணி அளவில் பேச்சுவார்த்தை வெற்றி .அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (போட்டோவில் உள்ளது ).

"உடனடியா பணிக்கு திரும்புவோம்"னு வாக்குறுதி கொடுத்து இருந்தோம்.
அடுத்த பிரச்சனை? Presentation செய்ய வேண்டுமே . அய்யோ .
பசி மயக்கத்தோட மூச்சுவாங்க department ஓடினேன் .
நான் போட்டிருந்தது அழுக்கு சட்டை பான்ட் ( துணிகளை எங்களது கிராமத்து மருத்துவமனை விடுதியிலேயே வைத்து விட்டு வந்துவிட்டேன் ). Shave செய்யாத முகம், மூன்று வேளை சாப்பிடாததால் பசி மயக்கம்.
பேராசிரியரிடம் "சார் Strike cancel" னு சொன்னதும்,
"எல்லாரும் தயாரா இருக்காங்க .உனக்கு 10 நிமிடம் தருகிறேன்.Presentationஐ ஆரம்பித்து விடு"னு பேராசிரியர் உத்தர விட்டார்.
ரொம்ப கடினமான தலைப்பு.3வேளை சாப்பிடவில்லை தூங்கவில்லை .ஆனால் வேற வழியே இல்லை.
30 பட்டமேற்படிப்பு மருத்துவர்கள்,10 ஆசிரியர்கள் வகுப்பில் இருந்தனர் . யாராவது ஒருத்தர் வாரி விட்டாலும் முடிந்தது என் கதை.
'balajee இன்னைக்கு நீ செத்த டா'னு முடிவு செஞ்சு,வகுப்பை ஆரம்பித்தேன்.

அது என்னமோ தெரியல நான் எப்போ வகுப்பு தொடங்கினாலும் ,என்னை தவிர எல்லாரும் சிரிப்பாங்க.கலகலப்பா இருக்குமாம்.எனக்கு மட்டும் டர் டர்ரா இருக்கும். நிறைய கேள்வி கேட்டாங்க.
ஒரே ஒரு ஆச்சர்யம். எனக்கு விடை தெரிஞ்ச கேள்விய மட்டும் தான் கேட்டாங்க.விளக்கமா புரிய வெச்சேன்.
4.30 மணிக்கு வகுப்பு முடிந்தது..
எங்க HOD,"Heroic Presentation'னு சொன்னார்.
வெளிய வந்ததும் ,மேடம் கூப்பிட்டு "Very good Balajee"னு 2 முறை சொன்னார் .
பேராசிரியர் தனியா கூப்பிட்டு, "ரொம்ப கஷ்டமான தலைப்பு. Well Done "னு பாராட்டி,
"நீ தூங்கி இருக்க மாட்டியே .உன் கண்ணுலையே தெரியுது.போய் தூங்கு"னு அனுப்பி வெச்சார்.
போன உயிர் திரும்ப வந்தது..

இன்று வகுப்பில் என்னை வறுத்தெடுக்க ஆயிரம் காரணம் இருந்தது.ஆனால் பிரச்சனை எதுவுமே நடக்காமல் ,அத்தனையும் எனக்கு சாதகமா அமைந்தது .கனவில் கூட எதிர்பார்க்காத பாராட்டுக்கள்.
இது எப்படி சாத்தியம் ?
ஒன்று மட்டும் உறுதியா சொல்ல முடியும்.
ரொம்ப நாளாக மருத்துவர்களுக்கு நிறைய பிரச்சனைகள்..அதே போல் நோயாளிகளுக்கும் நிறைய சிரமங்கள் .
நோயாளிகளின் நன்மைக்காக குரல் எழுப்பி ,அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததால், யாரோ ஒருவர் இன்று எங்களுக்கு (எனக்கும் சேர்த்து ) ஆசி வழங்கி இருக்கிறார்.
இன்று எதோ ஒரு சக்தி எனக்கு உதவி இருக்கிறது. அது கடவுளோ, இல்லை இயற்கையோ தெரியாது.

"உன் வேலைய பாரு.உன் வேலைய மட்டும் பாரு.எதுக்கு அடுத்தவங்களுக்காக நேரத்த வீணாக்குற.உனக்கு என்ன பயன் ?"-மீண்டும் எனக்கு இந்த அறிவுரை வழங்கப்படலாம்..

எனது பதில் : மரத்த நடுறது என் வேலை...அதை சந்தோஷமா செய்வேன்...
பலன் ? அது தன்னால கிடைக்கும்...



                                

No comments:

Post a Comment