Like me

Sunday, July 15, 2012

வலிக்குதடி....

தனிமையில் அழுவது கூட
வலிக்கவில்லை எனக்கு - ஆனால்
வலிக்குதடி....
பிறர் முன் சிரிப்பது போல்
நான் நடிப்பது......

                            
 TAMIL SAHA  

                                                            

எத்தனை முறை 
ஏமாந்திருப்பேன் 
ஆனாலும், 
ஏன் என் மனது 
உன்னையே எதிர்பார்க்கிறது? 

எத்தனை முறை
கண்ணீர் சிந்திருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் கண்கள்
உன்னைக் காணவே
காத்திருக்கிறது?

எத்தனை முறை
காயம் பட்டிருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் இதயம்
உனக்காகவே
துடித்துக்
கொண்டிருக்கிறது?

எத்தனை முறை
வேதனை பட்டிருப்பேன்
ஆனாலும்,
ஏன் நான் உனக்காகவே
ஏங்கித் தவிக்கிறேன்?



உன்னில் நான் கொண்ட காதல்
உலகிற்கு புரியாது
உனக்கும் தெரியாது..♥ ♥

நான் கொண்ட காதலும்
ஊமை கண்ட கனவும்
உண்மையில் ஒன்றுதான்..♥ ♥

உருவமில்லா என் காதலுக்கு
உயிர் கொடுத்தவள் நீதான்..♥ ♥
                             TAMIL SAHA  
                                                            

No comments:

Post a Comment