வரலாற்றையே மாற்றிய ஒரு பேருந்து நிகழ்வு !
பெண்ணுக்கும், கரு நிறத்திற்கும் மதிப்பில்லாத காலம் அப்போது . வெள்ளையர்கள் ஏறி விட்டால், இருக்கையில் அமர்ந்துள்ள கறுப்பர்கள் அவர்களுக்கு எழுந்து இடம் தரவேண்டும்
. 1955களில் அமெரிக்காவில் இது நடந்தது.
ஒரு வெள்ளையர் பேருந்தில் ஏறியவுடன், கறுப்பர்கள் எழுந்துவிட்டனர். ஒர பெண் மட்டும் எழ மறுத்தார். “நீ எழ மறுத்தால், போலீசைக் கூப்பிடுவேன்” என்றார், ஓட்டுநர். “தாராளமாக செய்யுங்கள்” என்றார் அந்தப் பெண். போலீஸ் வந்தது. அந்தப் பெண்ணைக் கைது செய்தது.
உரிமைக்குக் குரல் கொடுத்த அந்தப் பெண்ணின் பெயர் தான் ரோசாபார்க்ஸ்.
இச்செய்தி கருப்பர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்த ,நீதி கிடைக்கும் வரை மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென புறக்கணிப்பு போராட்டத்தை நிகழ்த்தினர் .
நிறைய மிரட்டல்களுக்கு மத்தியின் ரோசா தொடர்ந்து பொறுமையாக போராடியதால் சிவில் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. சிவில் உரிமைகளின் தாய் என அழைக்கப்படுகிறார்.
"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது" என்பது கருப்பினத்தவர்களின் கூற்று.
ஒருவர் நினைத்தால் சரித்திரத்தை மாற்றலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்.

No comments:
Post a Comment