திரும்பி பார்கிறேன் .............! இன்னும் திருந்தாமல் .....! மன்னித்துவிடு .....!

ஆம் திரும்பி பார்கிறேன் ...................!
உன்னை தேடி அலைந்த நாட்களை
உற்சாகமூட்டும் உன் புன்னகையை
எனை பார்த்தால் மட்டும் கலவரமடையும் உன் கண்களை
உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காத அமைதியான உன் முகத்தை
உயிர் உருகினாலும் உனக்கு நானில்லை என்ற உன் வார்த்தையை
காத்திரு உன் காதல் வெல்லும் எனும் நண்பனின் வாக்கு மெய்ப்படுமா ?
உண்மைதான் உன் ஆம் எனும் வார்த்தைதான் என் காதலை முழுமைப்படுத்தும்
அது வரை நான் காத்திருப்பேன் ...!
No comments:
Post a Comment