இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!
இலங்கை கடற்படை அட்டூழியம்! ஒரு மாதத்தில் 5வது சம்பவம்

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம்...

மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபடியே வந்து சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
அவர்களிடம் இருந்த மீன்பிடி சாதனங்கள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்களையும் பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து 650க்கும் அதிகமான விசைப்படகுகளில் நேற்று அதிகாலை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ஒரு சிலர் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இரவு 8 மணியளவில், இரு பெரிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்த அவர்கள், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.
படகுகளில் இருந்த மீனவர்களை பிளாஸ்டிக் பைப், பலகைகளால் சரமாரியாக தாக்கினர். கற்களால் படகுகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
படகில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போட் பலகைகள் மற்றும் மீன் பிடி வலைகளை வெட்டி நாசப்படுத்தி, கடலில் தூக்கி வீசினர். ‘
இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டுத் தள்ளிவிடுவோம் என எச்சரித்து விரட்டியடித்தனர்.
இதனால், மிகக்குறைந்த மீன்பாடுடன் மீனவர்கள் இன்றுகாலை கரை திரும்பினர்.
இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவர்கள் சகாயம், ராஜ் ஆகியோரின் படகுகள் உள்பட இருபதுக்கும் அதிகமான படகுகள் சேதமடைந்தன. இந்தப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டன.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது இராமேஸ்வரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் குறித்து மீனவர்கள் மாரிநம்பு (30), ஆரோக்கியம் (29), சந்தியா (29) கூறுகையில்,
‘‘இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பெரிய கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை சுற்றிவளைத்து தாக்கி காயப்படுத்தினர். வலைகளை வெட்டி நாசப்படுத்தியதுடன், எங்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், செல்போன் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.
இனி இந்தப்பக்கம் வந்தால், சுட்டு விடுவோம் என மிரட்டி விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதால், இனிவரும் நாட்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது என்றனர்.
ஒரு மாதத்தில் 5வது சம்பவம்
பாக் ஜலசந்தி கடற்பகுதியில், இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது சம்பவம்.
இந்த தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன.
விசைப்படகு மீனவர்களுக்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.
முப்பதுக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்தத் தாக்குதல்களில், இலங்கை கடற்படையினர் இருமுறை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியிருக்கின்றனர்.

No comments:
Post a Comment