Like me

Sunday, March 4, 2012

தமிழரைக் கைவிடும் இந்தியா..


                                மீண்டும் தமிழரைக் கைவிடும் இந்தியா...


                       ஐநா நெருக்கடியிலிருந்து இலங்கையைக் காக்க முடிவு!



                                       
இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது - தமிழக முதல்வரும் கோரிக்கை வைத்தார் .#மிக்க நன்றி முதல்வருக்கு !!கடிதத்துடன் நிறுத்தாமல் தமிழக பிரதிநிதியாக அமைச்சர்களை அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுகிறோம் 
.

சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி இத்தனை காலமாகத் தமிழினம் வடித்து வரும் இரத்தக் கண்ணீர் இன்னும் உலக சமூகத்தின் மனசாட்சியைத் தொடவில்லை என்பது எமக்கு ஆழ்ந்த கவலையைத் தருகிறது. உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும் பொழுதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த பொழுதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும் பொழுதும் குரலெழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம், ஈழத் தமிழர்களின் பேரவலத்தைக் கண்டும் மௌனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது. உண்மைகளை மூடி மறைத்து, பொய்களைப் புனைந்து ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டு வரும் நுட்பமான பரப்புரைகளால் சர்வதேசச் சமூகம் ஏமாற்றப்பட்டு வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த பல சகாப்தங்களாகத் தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளும், அட்டுழியங்களும் அத்தாட்சிப் பத்திரங்களோடும், புள்ளி விவரச் சான்றுகளோடும் சர்வதேச உலகிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஈழத் தமிழர்கள் மீது இனவழிப்புப் பரிணாமத்தில் ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது என்பதை உலக மனித உரிமை நிறுவனங்கள் எடுத்துக்கூறி வந்திருக்கின்றன.


தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன்,



                                                                     1998 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையிலிருந்து 

No comments:

Post a Comment